என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Died"

    • பாகூர் அருகே தென்பெண்ணை ஆற்றில் மூழ்கி டிரைவர் பலியானார்.
    • ராஜா சம்பவத்தன்று வெளியே சென்று வருவதாக தனது தாய் அஞ்சலை தேவியிடம் கூறிச்சென்றார்.

    புதுச்சேரி:

    பாகூர் அருகே தென்பெண்ணை ஆற்றில் மூழ்கி டிரைவர் பலியானார்.

    பாகூர் அருகே தமிழகப் பகுதியான செம்மண்டலம் எஸ்.என்.சாவடி கெடிலம் ரோட்டுப்பகுதியை சேர்ந்தவர் அஞ்சமுத்து. இவரது மூத்த மகன் ராஜா (வயது 39) டிரைவர் வேலை செய்து வந்தார். திருமணமாகாத இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்தது. மேலும் ராஜா வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டு இருந்தார். இதற்காக மருந்து மாத்திரை சாப்பிட்டு வந்தார்.

    ராஜா சம்பவத்தன்று வெளியே சென்று வருவதாக தனது தாய் அஞ்சலை தேவியிடம் கூறிச்சென்றார்.

    ஆனால் அதன் பிறகு அவர் வீடு திரும்ப வில்லை.

    இந்த நிலையில் ராஜா பாகூர் அருகே சோரியாங்கு ப்பம் தென்பெண்ணை ஆற்றில் மூழ்கி இறந்து கிடந்தார்.

    குடிபோதையில் ஆற்றில் இறங்கிய போதோ அல்லது ஆற்றில் கால் கழுவும் போது வலிப்பு ஏற்பட்டதால் அவர் ஆற்றில் மூழ்கி இறந்து இருக்கலாம் என கூறப்படுகிறது.

    இது குறித்து அவரது சகோதரர் ராஜவேல் கொடுத்த புகாரின் பேரில் பாகூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • மனைவியை பிரிந்து வாழ்ந்த கொத்தனார் அளவுக்கு அதிகமாக மது குடித்து இறந்தார்.
    • இவரது மனைவி ஜெயலட்சுமி. இவர்களுக்கு கவுதம் (15) என்ற மகன் உள்ளார்.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தோப்புபட்டி தெருவை சேர்ந்தவர் பாண்டியராஜ் (வயது 42), கொத்தனார். இவரது மனைவி ஜெயலட்சுமி. இவர்களுக்கு கவுதம் (15) என்ற மகன் உள்ளார்.

    இந்த நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஜெயலட்சுமி கணவரை பிரிந்து மாசிலாபுரம் என்ற இடத்தில் வசித்து வருகிறார். அவர்கள் கடந்த 2 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வந்தனர்.

    இதற்கிடையே கோவையில் கட்டிடவேலைக்கு சென்று வந்த பாண்டியராஜ், தீபாவளியை முன்னிட்டு சொந்த ஊருக்கு வந்தார். அதன் பின்னர் அவர் கோவைக்கு செல்லாமல் கடந்த 3 நாட்களாக அதிக அளவில் மது குடித்து வந்தார். இதனை கண்ட அவரது தந்தை சண்முகவேல் கண்டித்தார்.

    நேற்று வீடு திரும்பாத பாண்டியராஜ், ராஜபாளையம்-தென்காசி சாலையில் உள்ள கொண்டனேரி கண்மாய் அருகில் உள்ள பெரியார் சிலை பின்புறம் மது குடித்து மயங்கி கிடப்பதாக தகவல் கிடைத்தது.இதைத்தொடர்ந்து உறவினர்கள் அவரை மீட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுபற்றிய புகாரின்பேரில் ராஜபாளையம் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • லாரி மோதி சிறுமி பலியானார்
    • சாலையை கடக்க முயன்ற போது நடந்த சம்பவம்

    புதுக்கோட்டை

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள சத்திரப்பட்டி கிரமத்தை சேர்ந்தவர் பாலு மகள் காயத்ரி (வயது13). இவர் தனது வீட்டிலிருந்து எதிரே உள்ள புதுக்கோட்டை அறந்தாங்கி சாலையை கடக்க முயன்றார். அப்போது புதுக்கோட்டையில் இருந்து அறந்தாங்கி நோக்கி வந்த டிப்பர் லாரி இவர் மீது மோதியது. இதில் சம்பவத்தில் உடல் துண்டாகி காயத்ரி உயிரிழந்தார்.இதனைப் பார்த்து அதிர்ச்சி மற்றும் ஆத்திரமடைந்த சிறுமியின் உறவினர்கள் புதுக்கோட்டை அறந்தாங்கி சாலையில் மரங்களை போட்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். தகவல் அறிந்து உடனடியாக அங்கு வந்த வல்லத்திராகோட்டை போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை சமரசம் செய்தனர். லாரி ஓட்டுனரான நல்லபுடையான்பட்டியை சேர்ந்த தங்கராசு என்பவரை போலீசார் காவல் நிலையம் அழைத்துச் சென்று வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • திருக்கனூர் அருகே டிரைவர் மயங்கி விழுந்து இறந்து போனார்.
    • இந்தநிலையில் ஆனந்த் அங்குள்ள தண்ணீர்தொட்டி அருகே செல்போனில் பேசிக்கொண்டிருந்தார்.

    புதுச்சேரி:

    திருக்கனூர் அருகே டிரைவர் மயங்கி விழுந்து இறந்து போனார்.

    திருக்கனூர் அருகே சந்தை புதுக்குப்பம் இந்திரா நகரை சேர்ந்தவர் ஆனந்த் (வயது35). டிரைவர் வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணம் ஆகவில்லை. ஆனந்த்துக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்தது.

    இந்தநிலையில் ஆனந்த் அங்குள்ள தண்ணீர்தொட்டி அருகே செல்போனில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது திடீரென ஆனந்த் மயங்கி சாய்ந்தார். உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு காரில் வானூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பல னின்றி ஆனந்த் பரிதாபமாக இறந்து போனார்.

    இதுகுறித்து அவரது உறவினர் ராஜேந்திரன் கொடுத்த புகாரின் பேரில் காட்டேரிக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • முத்திரையர்பாளை யத்தில் காவலாளி மயங்கி விழுந்து இறந்து போனார்.
    • உடனே அக்கம் பக்கத்தினர் உதவியுடன் ஆம்புலன்சை வரவழைத்து பாகுபலியை ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    புதுச்சேரி:

    முத்திரையர்பாளையத்தில் காவலாளி மயங்கி விழுந்து இறந்து போனார்.

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி கொசப்பாளையத்தை சேர்ந்தவர் பாகுபலி (வயது60). இவர் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் ஊழியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.

    இவர் புதுவை முத்திரையர்பாளையம் காந்தி திருநல்லூர் கணபதி நகரில் தங்கி அங்குள்ள ஒரு நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.

    இந்த நிலையில் பணிமுடிந்து பாகுபலி தான் தங்கியிருந்த அறையில் தூங்கினார். பாகுபலியுடன் தங்கியிருந்த கலியபெருமாள் என்பவர் பார்த்த போது பாகுபலி மயங்கி கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே அக்கம் பக்கத்தினர் உதவியுடன் ஆம்புலன்சை வரவழைத்து பாகுபலியை ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே பாகுபலி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து அவரது மகன் தர்மராஜ் கொடுத்த புகாரின் பேரில் மேட்டுப்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • சம்பவத்தன்று சிறுவன் தனது வீட்டில் இருந்த பெயிண்ட் அடிக்க பயன்படுத்தும் தின்னரை எடுத்து குடித்துவிட்டு மயங்கி கிடந்தான்.
    • சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்த நிலையில் அவன் பரிதாபமாக இறந்தான்.

    திசையன்விளை:

    நெல்லை மாவட்டம் உவரி பகுதியில் அரசு பள்ளி ஒன்றில் 13 வயது சிறுவன் ஒருவன் 8-ம் வகுப்பு படித்து வந்தான். இவன் சரிவர பள்ளிக்கு செல்லாமல் இருந்து வந்துள்ளான்.

    சம்பவத்தன்று அவன் தனது வீட்டில் இருந்த பெயிண்ட் அடிக்க பயன்படுத்தும் தின்னரை எடுத்து குடித்துவிட்டு மயங்கி கிடந்தான். உடனே அவனை சாத்தான்குளத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்த நிலையில் நேற்றிரவு அவன் பரிதாபமாக இறந்தான்.

    இதுதொடர்பாக உவரி போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுவன் தின்னரை தண்ணீர் என நினைத்து தவறுத லாக எடுத்து குடித்தானா? அல்லது தற்கொலை செய்யும் நோக்கத்தில் குடித்தானா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • காரில் இருந்த 4 பேரும் பலத்த காயம் அடைந்தனர்.
    • கோபிச்செட்டிப்பாளையத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    அவினாசி :

    ஈரோடு மாவட்டம் நம்பியூர் பகுதியை சேர்ந்தவர் ராமலிங்கம். இவர் அவினாசியில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு மனைவி, தாய் மற்றும் குழந்தையுடன் வந்தார். இரவு தங்கிவிட்டு இன்று காலை காரில் சொந்த ஊருக்கு புறப்பட்டார்.

    சேவூர் பகுதியில் கார் சென்று கொண்டிருந்தபோது சாலிக்காட்டுப்பாளையம் அருகே சக்திநகரில் ஒரு பெண் வாக்கிங் சென்று கொண்டிருந்தார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார் அந்த பெண்ணின் மீது மோதி அவரை இழுத்துக் கொண்டே போய் ரோட்டில் இருந்த மின்கம்பத்தில் மோதியது. இதில் காரில் இருந்த 4 பேரும் பலத்த காயம் அடைந்தனர். காரில் சிக்கிய பெண்ணும் சம்பவ இடத்திலேயே பலியானார். பலத்த காயம் அடைந்த 4 பேரும் கோபி ச்செட்டி ப்பாளையத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து சேவூர் போலீசார் மேற்கொண்ட விசா ரணையில் வாக்கிங் சென்று விபத்தில் சிக்கி பலியான பெண் சேவூரை சேர்ந்த ராதாகிருஷ்ணன் மனைவி சாந்தாமணி என்பது தெரிய வந்துள்ளது. விபத்து குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  

    • குடும்ப கட்டுப்பாடு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட பெண் பரிதாபமாக இறந்தார்.
    • ஆரம்ப சுகாதார நிலையத்தில்

    கரூர்

    கரூர் மாவட்டம், வெள்ளியணை அருகே உள்ள மருதம்பட்டி காலனியை சேர்ந்தவர் முகேஷ்குமார் (வயது 27). கொத்தனார். இவருக்கு திருமணமாகி ஜோதி (27) என்ற மனைவியும், சிவானி (5), ரிதன்யா ஸ்ரீ (2) என 2 பெண் குழந்தைகளும் உள்ளனர். இந்தநிலையில் ஜோதிக்கு குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்வதற்காக உப்பிடமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    நேற்று காலை ஜோதிக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்காக மயக்க ஊசி செலுத்தும் மருத்துவர் மயக்க ஊசி செலுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் சிறிது நேரத்தில் மயக்கமடைந்த ஜோதி முற்றிலும் சுயநினைவை இழந்ததாக தெரிகிறது. இதனையடுத்து அவருக்கு அறுவை சிகிச்சை செய்யாமல் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே ஜோதி இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

    கணவர் முகேஷ்குமார் தனது மனைவியின் இறப்பிற்கு காரணமானவர்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி வெள்ளியணை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வில்லியனூரில் மதுக்கடையில் உறவினருடன் மது குடித்த கட்டிட தொழிலாளி திடீரென மயங்கி விழுந்து இறந்து போனார். வில்லியனூர் கோபாலன் கடை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பரமசிவம்(வயது39). கட்டிட தொழிலாளி.
    • பின்னர் பரமசிவமும், சத்திய மூர்த்தியும் வில்லிய னூர்- கூடப்பாக்கம் ரோட்டில் உள்ள ஒரு தனியார் மதுக்கடையில் அமர்ந்து மது குடித்துக்கொண்டிருந்தனர்.

    புதுச்சேரி:

    வில்லியனூரில் மதுக்கடையில் உறவினருடன் மது குடித்த கட்டிட தொழிலாளி திடீரென மயங்கி விழுந்து இறந்து போனார்.

    வில்லியனூர் கோபாலன் கடை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பரமசிவம்(வயது39). கட்டிட தொழிலாளி. இவருக்கு அருள்மொழி என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

    வேலை இல்லாத நாட்களில் பரமசிவம் மது அருந்துவது வழக்கம். இந்த நிலையில் பரமசிவம் உறவினர் சத்திய மூர்த்தி என்பவருடன் மது குடிக்க செல்வதாக தனது மனைவி அருள்மொழியிடம் கூறி சென்றார்.

    பின்னர் பரமசிவமும், சத்திய மூர்த்தியும் வில்லிய னூர்- கூடப்பாக்கம் ரோட்டில் உள்ள ஒரு தனியார் மதுக்கடையில் அமர்ந்து மது குடித்துக்கொண்டிருந்தனர்.

    அப்போது திடீரென பரமசிவம் மயங்கி சாய்ந்தார். உடனே அவரை உறவினர் சத்தியமூர்த்தி மற்றும் அங்கு மது குடித்து கொண்டிருந்த கலிவரதன், ராமச்சந்திரன் மற்றும் மாதவன் ஆகியோர் மீட்டு அகரத்தில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சிறிது நேரத்தில் பரமசிவம் பரிதாபமாக இறந்து போனார்.

    இதுகுறித்து அவரது மனைவி அருள்மொழி கொடுத்த புகாரின் பேரில் வில்லியனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சென்னை அண்ணா நகரை சேர்ந்தவர் ரங்கராஜ். இவரது மனைவி அஞ்சுகம், இவர்களது மகன் ராஜி(36). கடந்த சில ஆண்டுகளாக ராஜி மனநலம் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்த நிலையில் கடந்த 40 நாட்களுக்கு முன்பு அஞ்சுகம் தனது மகனை ராஜியுடன் வில்லியனூர் ஆச்சாரியாபுரத்தில் தனது தங்கை வீட்டில் தங்கி இருந்து வந்தார்.

    இந்தநிலையில் ராஜி தனது தாயிடம் தண்ணீர் கேட்டார். இதையடுத்து அஞ்சுகம் தனது மகனுக்கு தண்ணீர் எடுத்து வந்து கொடுத்தார். தண்ணீர் கொடுத்து விட்டு ராஜி தூங்க செல்வதாக கூறினார். பின்னர் சிறிது நேரம் கழித்து டிபன் காப்பிட ராஜியை எழுப்பிய போது அவர் அசைவற்று கிடப்பதை கண்டு அஞ்சுகம் அதிர்ச்சியடைந்தார். ராஜி தண்ணீர் குடித்த சிறிது நேரத்தில் இறந்திருப்பது தெரியவந்தது.

    இதையடுத்து அஞ்சுகம் தனது மகன் சாவு குறித்து மங்கலம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • வில்லியனூரில் கட்டிட காண்டிராக்டர் மயங்கி விழுந்து இறந்து போனார்.
    • ஒரு மாதமாக கவுரி பெங்களூரில் வசிக்கும் தனது மகள் வீட்டில் இருந்து வருகிறார்.

    புதுச்சேரி:

    வில்லியனூரில் கட்டிட காண்டிராக்டர் மயங்கி விழுந்து இறந்து போனார்.

    வில்லியனூர் தில்லை நகரை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது65). கட்டிட காண்டிராக்டர். இவருக்கு கவுரி என்ற மனைவியும், கார்த்திகேயன் என்ற மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

    இருவருக்கும் திருமணமாகி விட்டது. கார்த்திகேயனும் கட்டிட காண்டிராக்டராக தொழில் செய்து வருகிறார்.

    செல்வராஜ் தனது மனைவி கவுரியுடன் வீட்டின் கீழ்தளத்திலும், வீட்டின் மாடியில் கார்த்திகேயன் தனது மனைவி மற்றும் மகனுடன் வசித்து வருகிறார்கள்.

    இதற்கிடையே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு செல்வராஜூக்கு இருத நோய் சம்பந்தமாக அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.

    ஒரு மாதமாக கவுரி பெங்களூரில் வசிக்கும் தனது மகள் வீட்டில் இருந்து வருகிறார். செல்வராஜிக்கு அவரது மகன் கார்த்திகேயன் உணவு கொடுத்து கவனித்து வந்தார்.

    இந்த நிலையில் வழக்கம் போல் செல்வராஜ் சாப்பிட்டு விட்டு படுக்கை அறைக்கு சென்றார். கார்த்திகேயன் தந்தையை பார்க்க சென்ற போது அங்கு செல்வராஜ் நெற்றியில் அடிப்பட்டு மயங்கிய நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    பின்னர் தனது உறவினர்கள் உதவியுடன் தந்தையை சிகிச்சைக்காக வில்லியனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே செல்வராஜ் இறந்து விட்டதாக தெரிவித்தனர். திடீர் நெஞ்சுவலியால் செல்வராஜ் இறந்ததாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து அவரது மகன் கார்த்திகேயன் கொடுத்த புகாரின் பேரில் வில்லியனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • மயங்கி விழுந்த ஊழியர் உயிரிழந்தார்
    • பணிபுரிந்து கொண்டிருந்த போது சம்பவம்

    கரூர்:

    சேலம் மாவட்டம், சின்ன திருப்பதி கலிங்கா சாலையை சேர்ந்த நடேசன் மகன் ரமேஷ் குமார் (வயது 42) இவர், கரூர் ஆண்டாங்கோவிலில் உள்ள, தனியார் கம்ப்யூட்டர் நிறு வனத்தில் வேலை செய்து வந்தார். இந்நிலையில் ரமேஷ் குமார், தான் வேலை செய்து வந்த நிறுவ னத்தில் திடீரென மயங்கி விழுந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு, கரூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். ரமேஷ் குமாரின் மனைவி ஜெனிக் பிரேம் குமாரி கொடுத்த புகாரின் படி, கரூர் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • லாரி மோதி வாலிபர் பலியானார்.
    • சாலையில் சென்று கொண்டிருந்தார்.

    பெரம்பலூர்

    திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் தாலுகா சீதேவிமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 30). இவர் டாஸ்மாக் கடையில் லோடுமேனாக பணியாற்றி வந்தார். நேற்று மாலை செட்டிகுளம் டாஸ்மாக் கடையில் லோடு இறக்குவதற்காக சிறுவயலூர்-குரூர் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த லாரியில் மோதி சம்பவ இடத்திலே மணிகண்டன் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த பாடாலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்."

    ×