என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "discharge"
- பரிசோதனைக்கு பிறகு மருத்துவர்கள் பரிந்துரையை அடுத்து ஓமந்தூரார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லபட்டார்.
- இ.சி.ஜி., எக்கோ, எக்ஸ்ரே போன்ற பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டன.
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சிறையில் உள்ளார்.
இந்த வழக்கு தொடர்பாக, புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளதாக தகவல் வௌியானது.
இதையடுத்து, செந்தில் பாலாஜி சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இதைதொடர்ந்து, செந்தில் பாலாஜியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
பரிசோதனைக்கு பிறகு மருத்துவர்கள் பரிந்துரையை அடுத்து ஓமந்தூரார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லபட்டார்.
ஏற்கனவே அவர் இருதய அறுவைச் சிகிச்சை செய்து கொண்டவர் என்பதால் அது தொடர்பான மருத்துவ பரிசோதனைகளை டாக்டர்கள் மேற்கொண்டனர். இ.சி.ஜி., எக்கோ, எக்ஸ்ரே போன்ற பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டன.
இதில் செந்தில் பாலாஜியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். பரிசோதனைகள் அனைத்தும் முடிந்த பிறகு அவரது டிஸ்சார்ஜ் பற்றி முடிவு செய்யப்படும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில் 2 நாள் சிகிச்சைக்கு பிறகு இன்று மாலை செந்தில் பாலாஜியின் உடல்நிலை சீரானதை தொடர்ந்து மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். மீண்டும் அவர் புழல் சிறைக்கு அழைத்து செல்லப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
- ஜெருசலேமில் உள்ள ஹடாசா மருத்துவ மையத்தில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
- =பிரதமரின் உடல்நிலை சீராக உள்ளது.
இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிற்கு மேற்கொள்ளப்பட்ட குடலிறக்க அறுவை சிகிச்சையைத் தொடர்ந்து நாளை பிற்பகல் வீடு திரும்புவார் என மருத்துவர்களின் ஆலோசனையை மேற்கோள் காட்டி பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், "பிரதமரின் உடல்நிலை சீராக உள்ளது. அவர் மருத்துவமனையில் இருந்து தனது அன்றாட பணியை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்" என குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக, ஜெருசலேமில் உள்ள ஹடாசா மருத்துவ மையம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்," இன்று பிரதமர் நெதன்யாகுவிற்கு வெற்றிகரமாக குடலிறக்க அறுவை சிகிச்சைக்கு மேற்கொள்ளப்பட்டாகவும், பின்னர், நெதன்யாகு சுயநினைவுடன் இருப்பதாகவும், குடும்பத்துடன் உரையாடி வருவதாகவும், அவர் குணமடைந்து வருகிறார்" என குறிப்பிட்டுள்ளது.
- இந்நிலையில்,ஜக்கி வாசுதேவ் தற்போது பூரண குணமடைந்து உள்ளார்.
- இதையொட்டி இன்று மாலையில் மருத்துவமனையில் இருந்து ஜக்கி வாசுதேவ் டிஸ்சார்ஜ் ஆனார்.அவர் நலமுடன் காரில் ஏறி புறப்பட்டார்
கோவை 'ஈஷா' யோகா மையத்தின் நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ். கடந்த சில நாட்களுக்கு முன் இவர் கடும் ஒற்றைத் தலைவலியால் அவதிப்பட்டு வந்தார். இதையடுத்து சிடி ஸ்கேன் எடுத்து பார்த்தபோது, அவரது மூளையில், ரத்த கசிவு இருப்பது கண்டறியப்பட்டது.
இதைத் தொடர்ந்து டெல்லியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில், ஜக்கி வாசுதேவ் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.அவருக்கு கடந்த 17- ந்தேதி மூளை பகுதியில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
கடந்த 10 நாட்களாக மருத்துவமனை கண்காணிப்பு சிகிச்சையில் இருந்தார். ஜக்கி வாசுதேவ் நலமுடன் இருப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு ஈஷா அறக்கட்டளை சார்பில் அதிகாரபூர்வமாக அறிவித்து வீடியோ ஒன்றும் வெளியானது.அதில் சத்குருவின் உடல்நிலை முன்னேற்றம் எதிர்பார்த்ததை விட சிறப்பாக உள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில்,ஜக்கி வாசுதேவ் தற்போது பூரண குணமடைந்து உள்ளார்.இதையொட்டி இன்று மாலையில் புதுடெல்லியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து ஜக்கி வாசுதேவ் டிஸ்சார்ஜ் ஆனார்.அவர் நலமுடன் நடந்து சென்று காரில் ஏறி புறப்பட்டார்
அப்போலோ மருத்துவமனையின் இணை நிர்வாக இயக்குனர் டாக்டர் சங்கீதாரெட்டி சத்குருவை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
ஈஷா அறக்கட்டளை சார்பில் வெளியிட்ட அறிக்கையில் 'சத்குருவிற்கு சிறப்பான சிகிச்சை அளித்த டாக்டர் வினித் சூரி, டாக்டர் பிரணவ் குமார், டாக்டர் சுதீர், டாக்டர் எஸ். சாட்டர்ஜீ மற்றும் அப்போலோ மருத்துவமனையின் ஒட்டு மொத்த குழுவிற்கும் ஈஷா அறக்கட்டளை மனமார்ந்த நன்றி தெரிவித்துக் கொள்கிறது". என்று கூறி உள்ளது.
- ஆபத்தான அறுவை சிகிச்சைக்கு பிறகு எதிர்பார்த்ததை விட உடல் நலனில் முன்னேற்றம்.
- சத்குருவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் குழுவுக்கு ஈஷா நன்றி.
கோவை ஈஷா மையத்தின் நிறுவனரான சத்குரு கடந்த சில நாட்களாக கடுமையான தலைவலியால் அவதிப்பட்டு வந்தார்.
மகா சிவராத்திரி மற்றும் பிற கூட்டங்களில் கலந்துக் கொண்ட சத்குரு, கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமயைில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு சத்குருவுக்கு மூளையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தொடர்ந்து, சத்குரு மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்து வந்தார்.
ஆபத்தான அறுவை சிகிச்சைக்கு பிறகு எதிர்பார்த்ததை விட உடல் நலனில் முன்னேற்றம் ஏற்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில், 10 நாட்கள் சிகிச்சைக்கு பிறகு, சத்குரு இன்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.
சத்குருவை நேரில் சந்தித்த தனியார் மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் டாக்டர் சங்கீதா ரெட்டி நலம் விசாரித்தார்.
சத்குருவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் குழுவுக்கு ஈஷா அறக்கட்டளை நன்றி தெரிவித்தது.
- டெல்லியில் உள்ள சர் கங்காராம் மருத்துவமனையில் அனுமதி.
- பாரத் ஜோடோ நியாய யாத்திரையில் தன்னால் பங்கேற்க முடியவில்லை.
காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வதேரா, நீர்ச்சத்து குறைபாடு மற்றும் வயிற்று தொற்று காரணமாக டெல்லியில் உள்ள சர் கங்காராம் மருத்துவமனையில் கடந்த சில நாட்களுக்கு முன் அனுமதிக்கப்பட்டார்.
இந்த நிலையில் இன்று மருத்துவ சிகிச்சை முடிந்த பிறகு பிரியங்கா காந்தி 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்ட தகவல் உறுதியானது.
கடந்த சில நாட்களுக்கு முன் உடல்நலக்குறைவு காரணமாக உத்தரபிரதேசத்தில் நடைபெறும் பாரத் ஜோடோ நியாய யாத்திரையில் தன்னால் பங்கேற்க முடியவில்லை.
துரதிர்ஷ்டவசமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளேன். நான் குணமடைந்தவுடன் அங்கு வருவேன். உ.பி.யில் மக்கள், எனது நண்பர்கள் அனைவருக்கும் நியாய யாத்திரை வெற்றி பெற வாழ்த்துக்கள் என்று பிரியங்கா காந்தி 'எக்ஸ்' இணைய தளத்தில் பிரியங்காகாந்தி பதிவிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- பெங்களூருவில் உள்ள நாராயணா ஹெல்த் சிட்டியில் அனுமதிக்கப்பட்டார்.
- சிகிச்சையில் அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது.
சென்னை:
தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி நேற்று சேலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
இதனையடுத்து கிருஷ்ணகிரியில் நடைபெறும் விழாவிற்காக தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் வழியாக செல்லும்போது, அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
இதையடுத்து பெங்களூருவில் உள்ள நாராயணா ஹெல்த் சிட்டியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அளிக்கப்படும் சிகிச்சையில் அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது.
அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு வயிற்றின் மேல்பகுதியில் வலி ஏற்பட்ட நிலையில் அவருக்கு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்தது.
திரவங்கள் மற்றும் வலி நிவாரணிகள் மூலம் சிகிச்சை வழங்கப்பட்டது.
இதில் அவர் ஓரளவு குணமடைந்தார். இந்நிலையில் இன்று அவர் ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழியிடம் உடல் நலம் விசாரித்தார். அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை விவரங்கள் குறித்தும் கேட்டறிந்தார்.
- தீ விபத்தில் பாதிக்கப்பட்ட வீடுகளை நேரில் பார்வையிட்டார்.
- அரிசி, காய்கறிகள், வேட்டி, புடவை போன்றவற்றை வழங்கினார்.
சீர்காழி:
கொள்ளிடம் ஒன்றியம், மாதானம் ஊராட்சியில் செருகுடி தியாகராஜன், ஆராயி , பாஸ்கரன் ஆகியோர்களின் வீடு மின்கசிவு காரணமாக முழுவதும் தீபற்றி எரிந்து அனைத்து பொருட்களும் சேதம் அடைந்துவிட்டது.
தகவல் அறிந்த கொள்ளிடம் கிழக்கு ஒன்றிய அறிமுக செயலாளர் நற்குணன் , தீப்பற்றி எரிந்த வீடுகளை நேரில் பார்வையிட்டு பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ5000 பணமும், ஒன்றிய குழு உறுப்பினர் தமிழரசி ரூ.2000 பணமும் நிவாரண பொருட்களாக அரிசி, காய்கறிகள், வேட்டி, புடவை, பாய் போன்றவைகள் வழங்கினார்கள்.
உடன் மாவட்ட மீனவர் அணி செயலாளர் நாகரத்தினம் பொறுப்பாளர்கள் சொக்கலிங்கம்,பாஸ்கரன், பூவராகவன், ஒன்றிய இளைஞரணி தலைவர் உத்திர.ராஜேஷ், பங்கேற்றார்.
- கடந்த 13-ந் தேதி மெத்தனால் கலந்த சாராயம் குடித்த 60 பேர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.
- நேற்று முன்தினம் வரை 22 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.
விக்கிரவாண்டி:
கள்ளச்சாராயம் குடித்த மேலும் 9 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள எக்கியார் குப்பம் கிராமத்தில் கடந்த 13-ந் தேதி மெத்தனால் கலந்த சாராயம் குடித்த 60 பேர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.
இதில்ஒரு பெண் உள்பட 14 பேர் பலியானார்கள். 12 பேர் தீவிர சிகிச்சை பிரிவிலும், 34 பேர் பொது வார்டுகளிலும் சிகிச்சை பெற்று வந்தனர்.
இவர்களில் நேற்று முன்தினம் வரை 22 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இந்நிலையில் எக்கியார் குப்பம் பாலு, மரியதாஸ், விநாயகம், ராமு, மணிமாறன், தேசிங்கு, ராஜ துரை, சிவா, ஆறுமுகம் ஆகிய 9 பேர் நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.
இவர்களை தாசில்தார் ஆதிசக்தி சிவக்குமரி மன்னன், தனி தாசில்தார் இளங்கோவன், மருத்துவக் கல்லூரி டீன் கீதாஞ்சலி, கண்காணிப்பாளர் அறிவழகன், உண்டு உறைவிட டாக்டர் ரவிக்குமார், துணை முதல்வர் யோகாம்பாள், துணை உண்டு உறைவிட டாக்டர் வெங்கடேசன் மற்றும் டாக்டர்கள் மருத்துவ ஆலோசனை வழங்கினார்கள்.
தற்போது முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் 2 பேரும், பொது வார்டில் 13 பேர் என 15 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
- கொள்ளிடம் ஆற்றில் படுகை உள்ளே உள்ள 4 கிராமங்களில் வெள்ளநீர் முழுவதுமாக சூழ்ந்துள்ளது.
- கிராம மக்கள் தங்கள் உடமைகள் மற்றும் கால்நடைகளுடன் வெளியேறி வருகின்றனர்.
சீர்காழி:
கர்நாடகா மாநிலம் மற்றும் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் வெள்ள நீர் அணையின் பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் வெள்ள நீர் முழுவதுமாக கொள்ளிடம் ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது.
கொள்ளிடம் ஆற்று திறக்கப்பட்டுள்ள வெள்ள நீரானது மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த கொள்ளிடம் ஆற்றின் வழியே சென்று பழையாறு அருகே கடலில் கலந்து வருகிறது.
இரண்டு லட்சம் கன அடிக்கு மேல் வெள்ள நீர் சென்று வரும் நிலையில் கொள்ளிடம் ஆற்றின் படுகை உள்ளே அமைந்துள்ள திட்டு கிராமங்களான நாதல்படுகை, முதலைமேடு திட்டு, வெள்ளைமணல், கோரை திட்டு உள்ளிட்ட 4 கிராமங்களில் வெள்ள நீர் முழுவதுமாக சூழ்ந்துள்ளது
இதனால் அப்பகுதியில் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளநீர் சூழ்ந்த தால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
திட்டு கிராமங்களுக்கு செல்லும் சாலைகள் முழுவதும் வெள்ள நீரால் துண்டிக்கப்பட்டுள்ள நிலையில் கிராமங்களில் தாழ்வான பகுதியில் உள்ள மக்கள் தங்கள் உடமைகள் மற்றும் கால்நடைகளுடன் மேடான பகுதிக்கு தொடர்ந்து வெளியேறி வருகின்றனர்.
கிராமங்களில் இருந்து வெளியேறிய மக்களுக்கு கரைகளில் முகாம்கள் அமைக்கப்பட்டு உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது.
மூன்றாவது நாளாக இன்றும் வெள்ளப்பெருக்கு குறையாததால் அன்றாட தேவைக்காக பொதுமக்கள் மற்றும் பள்ளி கல்லூரி செல்லும் மாணவர்கள் படகுகளின் மூலமாகவே வெளியேறி வருகின்றனர்.
- கொள்ளிடம் கூட்டு குடிநீர் குழாய்கள் மூலம் வேதாரண்யம் வரை தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது.
- 5 மீட்டர் உயரத்திற்கு தண்ணீர் பீச்சியடித்து வெளியேறி வருகிறது.
திருவாரூர்:
திருவாரூர் அருகே கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் குழாய் நேற்று உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாக ஆற்றில் கலந்து வருவது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டம் வாயிலாக திருவாரூர் வழியாக நாகை மாவட்டம் வேதாரண்யம் வரை குழாய்கள் மூலம் குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது.
இந்நிலையில் கொரடா ச்சேரி அருகே அம்மையப்பன் என்ற இடத்தில் சாலை ஓரத்தில், கொள்ளிடம் கூட்டு குடிநீரின் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, 5 மீட்டர் உயரத்திற்கு தண்ணீர் பீச்சியடித்து வெளியேறி வருகிறது.
இதனால் ஆயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாகி அருகிலுள்ள ஓடம்போக்கி ஆற்றில் கலந்து வருகிறது.
இதை பார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு குழாயை உடைப்பு குறித்து தகவல் தெரிவித்துள்ளனர்.
உடைப்பு உடனடியாக சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- நள்ளிரவில் மின்கசிவு ஏற்பட்டு குடிசைவீடு தீப்பிடித்து எரிந்தது.
- தீ மளமளவென கூரை முழுவதும் பரவியதால் வீட்டில் வைத்திருந்த பணம், துணிகள் பொருள்கள் எரிந்து சாம்பலானது.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை அருகே அகர கீரங்குடி ஊராட்சி உடையார் தெருவைச் சேர்ந்தவர் கிருபாகரன் என்பவருக்கு சொந்தமான குடிசை வீடு நள்ளிரவில் மின்கசிவு ஏற்பட்டு தீப்பிடித்து எரிந்தது.
தூங்கிக்கொண்டிருந்த கிருபாகரன் குடும்பத்தினர் அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்தனர்.
அக்கம்பக்கத்தில் உள்ள வர்கள் தீயை அணைக்க முயற்சி செய்தனர்.
தீ மளமளவென எரிந்து கூரை முழுவதும் எரிந்ததால் உயிர்சேதம் தவிர்த்து, வீட்டில் வைத்திருந்த பணம், துணிகள் பொருள்கள் எரிந்து சாம்பலானது.
இத்தகவலை அறிந்த மயிலாடுதுறை தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து தீயை அணைத்தனர்.
மயிலாடுதுறை வருவாய் ஆய்வாளர் முத்துசாமி, தாசில்தார் சார்பாக அரசு வழங்கும் முதல் கட்ட நிவாரணமாக ரூ. 5 ஆயிரமும் அரிசி, பாய், போர்வை, மண்ணை வழங்கினர். ஊராட்சி மன்ற தலைவர் கயல்விழி சரவணன் பாதிக்கப்பட்ட குடும்பத்தாருக்கு வீட்டுப் பொருட்கள் வழங்கி ஆறுதல் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்