என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "drinking water issue"
- முழுநேரம் தண்ணீர் கிடைக்க விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு வருகிறது.
- புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைப்பது குறித்து ஆய்வு.
சென்னை:
சட்ட சபையில் வினாக்கள் விடைகள் நேரத்தில், தி.நகர் பஸ் நிலையம் அருகே உள்ள முத்துரங்கன் சாலை பகுதியில் மேல்நிலை நீர் தேக்க தொட்டி அமைக்கப்படுமா எனவும் தியாகராய நகர் தொகுதியில் உள்ள ஏழு வார்டுகளில் குடிநீரில் கழிவுநீர் கலக்கும் பிரச்சனை இருப்பதாகவும், எனவே புதிய சேம்பர்கள் அமைத்து சீரமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் ஜெ.கருணாநிதி எம்.எல்.ஏ. (தி.மு.க.) கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்து பேசிய நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு கூறும்போது:-
தியாகராய நகரில் குடிநீர் கட்டமைப்பை மேம்படுத்த ஒடிசா நிறுவனத்துடன் ஆலோசித்து 24 மணி நேரமும் முழுநேரம் தண்ணீர் கிடைக்க விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு வருகிறது.
முத்துரங்கன் சாலை பகுதியில் புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைப்பது குறித்து ஆய்வு மேற்கொண்டு உடனே கட்டிக்கொடுக்கபடும். வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் குடிநீர் வழங்கல் வாரியத்திற்கு இந்தாண்டு ரூ.900 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் நடைபெற்று வருகிறது.
தியாகராயநகர் தொகுதியில் குடிநீரில் கழிவுநீர் கலப்பது குறித்து ஓரிரு நாட்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு சுத்தமான குடிநீரை மக்களுக்கு விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
முன்னதாக ஜெ. கருணா நிதி பேசுகையில், தி. நகர் கண்ணம்மா பேட்டை பகுதியில் நீண்ட காலமாக குடிநீர் பிரச்சினை இருக்கிறது. லாரி மூலம் தான் சப்ளை ஆகிறது.
இந்த இடம் கடைசி பாயிண்ட். வள்ளுவர் கோட்டத்தில் இருந்து தண்ணீர் வரும்போது இங்கு குறைந்து விடுகிறது. எனவே மேல்நிலை நீர்த் தேக்க தொட்டி அமைக்க வேண்டும் என்றார். அத்துடன் தொகுதி முழுவதும் பம்பிங் ஸ்டேசன் சரிவர இயங்காததால் குடிநீரில் கழிவுநீர் கலப்பதாகவும் தெரிவித்தார்.
ஜெ/கருணாநிதி கூறிய இரு பிரச்சினைகளையும் உடனே நிறைவேற்றித் தருவதாக அமைச்சர் கே.என். நேரு அறிவித்தார்.
- குருமூர்த்திநாயக்கன்பட்டியில் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டது.
- அதிகாரிகள் 10 தினங்க ளுக்குள் தாமிரபரணி குடிநீர் குடிக்க கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக அவரிடம் தெரிவித்தனர்.
விருதுநகர்
காந்தி ஜெயந்தியை யொட்டி விருதுநகர் யூனியன் குருமூர்த்தி நாயக்கன்பட்டியில் கிராம சபை கூட்டம் தலைவர் முத்துலட்சுமி தலைமையில் நடைபெற்றது. துணை தலைவர் வரதராஜ், பஞ்சாயத்து உறுப்பினர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் மாணிக்கம் தாகூர் எம்.பி. கலந்து கொண்டு மக்களின் குறைகளை கேட்டறிந்தார்.
கிராம மக்கள் தங்கள் கிராமத்திற்கு தாமிரபரணி குடிநீர் வினியோகம் இல்லை என்று கூறியதுடன் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்பட வில்லை என்றும் புகார் கூறினர்.
மாணிக்கம் தாகூர் எம்.பி. இது குறித்து குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு பேசி பிரச்சினைக்கு தீர்வு காண வலியுறுத்தினார். குடிநீர்வடிகால் வாரிய அதிகாரிகள் 10 தினங்க ளுக்குள் தாமிரபரணி குடிநீர் குடிக்க கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக அவரிடம் தெரிவித்தனர்.
மேலும் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் உள்ள குறைபாடுகளையும் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என எம்.பி. உறுதி அளித்தார். கிராம மக்களிடம் மனுக்களை பெற்றுக் கொண்ட எம்.பி. இதுகுறித்து பரிசீலித்து தேவையான நடவ டிக்கைகளை மேற்கொள்வதாக தெரி வித்தார். முன்னதாக கிராம சபை கூட்டத்திற்கு வருகை தந்த மாணிக்கம் தாகூர் எம்.பி.க்கு கிராம மக்கள் வரவேற்பு அளித்தனர். இந்தநிகழ்ச்சியில் காங்கிரஸ் நிர்வாகிகள் வக்கீல் சீனிவாசன், சிவகுருநாதன், வைரவ சாமி, வக்கீல் சரவணன், செய்தி தொடர்பாளர் மீனாட்சி சுந்தரம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
- இதனால் அங்கு கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
மதுரை
மதுரை மாந கராட்சியின் 9-வது வார்டான உத்தங்குடி சாலை அம்பேத்கார் நகர் மறறும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக குடிநீர் சரியாக விநியோகம் செய்ய வில்லை.
இதனால் அப்பகுதி பெண்கள் மற்றும் பொது மக்கள் குடிநீருக்காக அலையும் நிலை ஏற்பட்டுள்ளது. ஒரு குடம் தண்ணீருக்கு நீண்ட தூரம் செல்லும் சூழல் ஏற்பட்டது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரியிடம் அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதை கண்டித்தும் குடிநீர் பிரச்சினை தீர்க்க வலியுறுத்தியும் இன்று காலை உத்தங்குடி மெயின் ரோட்டில் பெண்கள் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சு வார்த்தை நடத்தி குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என உறுதி கூறினர். இதையடுத்து மறியல் கைவிடப்பட்டது.
- கமுதி யூனியனில் குடிநீர் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்.
- யூனியன் சேர்மன் தமிழ்செல்வி போஸ் தலைமையில் கவுன்சிலர் கூட்டம் நடந்தது.
பசும்பொன்
கமுதி யூனியன் கவுன்சில் கூட்டம் யூனியன் சேர்மன் தமிழ்செல்வி போஸ் தலைமையில் நடந்தது. ஆணையாளர் மணி மேகலை, கூடுதல் வட்டார வளர்ச்சி அலுவலர் சங்கர பாண்டியன், துணை சேர்மன் சித்ராதேவி அய்யனார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மேலாளர் ராமச்சந்திரன் அனைவரையும் வரவேற்றார். கூட்டத்தில் கவுன்சிலர்களிடையே நடந்த விவாதம் வருமாறு:-
தமிழ் செல்வி போஸ் (சேர்மன்): குடிநீர் பிரச்சினைக்கு உடனடியாக நடவடிக்கை எடுத்து தீர்வு காண வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பெண் கவுன்சிலர்கள் தங்களின் கோரிக்கைகளை துணிச்சலுடன் தெரிவிக்க லாம். முக்கிய கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்.
அன்பரசு (பேரையூர்): பேரையூர் கண்மாய்கரை பஸ் நிறுத்தத்தில் நிழற் குடை அமைக்க வேண்டும். தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் பணிபுரிபவர்களுக்கு அரசு அறிவித்துள்ள ரூ.294 வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மணிமேகலை (ஆணையாளர்): 100 நாள் வேலை திட்டத்தில அரசு விதிமுறைப்படி வழங்குகிறோம்.
அன்பரசு (பேரையூர்): வேளாண்மை காலங்களில் 100 நாள் வேலை திட்டத்தால் விவசாய பணிகள் பாதிக்கப்படுகிறது.
தமிழ் செல்வி போஸ் (சேர்மன்):- 2.5 ஏக்கரில் நெல் விவசாயம் செய்தேன் களை எடுக்க முடியவில்லை.மணிமேகலை (ஆணை யாளர்):- 100 நாள் வேலை பணியாளர்களை வேளாண்மை பணிக்கு பயன்படுத்த ஆலோ சிக்கப்பட்டு வருகிறது. பாக்கு வெட்டி குடிநீர் திட்டபணிக்கு டெண்டர் விடப்பட்டுள்ளன. விரைவில் குடிநீர் சப்ளை தொடங்கும். பல்வேறு குடிநீர் திட்டபணிகள் நடைமுறைபடுத்தப்பட்டு வருவதால் விரைவில் குடிநீரில் தன்னிறைவு பெறுவோம்
இவ்வாறு விவாதம் நடந்தது.
பல்லடம்:
பல்லடம் அருகே உள்ள பூமலூர் ஊராட்சியில் உள்ளது நடுவேலம்பாளையம் கிராமம். இங்கு 700-க்கு மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு அத்திக்கடவு குடிநீர் குழாய் முலமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த 15 நாட்களாக குடிநீர் சரியாக வரவில்லை.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தனர். ஆனால் அவர்கள் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் இன்று காலை 9 மணி அளவில் நடுவேலம் பாளையம்-பல்லடம் ரோட்டில் காலிக் குடங்களுடன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த தகவல் அறிந்ததும் மங்கலம் போலீசார் மற்றும் பூமலூர் ஊராட்சி நிர்வாகத்தினர் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட மறுத்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அரை மணி நேரமாக நடைபெறும் இந்த போராட்டத்தால் அந்த வழியாக வந்த வாகனங்கள் மாற்று வழியில் திருப்பி விடப்பட்டன. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் லட்சுமிபுரம் 7-ம் தெருவில் சுமார் 200-க்கும் மேற்பட்ட வீடுகளில் பொதுமக்கள் வசித்துவருகின்றனர். இந்த பகுதியில் கடந்த 18 நாட்களுக்கு முன்பு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பின்னர் 18 நாட்கள் ஆகியும் குடிநீர் வழங்காததால் சீரான குடிநீர் வழங்க வலியுறுத்தி அப்பகுதி மக்கள் சங்கரன்கோவில் - ராஜபாளையம் சாலையில் உள்ள வாட்டர் டேங்கை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இது குறித்து தகவலறிந்து அந்த பகுதிக்கு வந்த சங்கரன்கோவில் டவுன் இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் நகராட்சி அலுவலர்கள், முற்றுகையில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள் கூறும்போது, சங்கரன்கோவிலில் சில பகுதிகளுக்கு மட்டும் குடிநீர் வினியோகம் ஒழுங்காக செய்யப்படுகிறது. மற்ற பகுதி மக்களை நகராட்சி அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை. மேலும் மக்களுக்கு தண்ணீர் இல்லாத சமயத்தில் வாட்டர் டேங்கில் இருந்து சில குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் அடிக்கடி டேங்கர் வாகனம் மூலம் குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. எனவே இது குறித்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
இதையடுத்து அவர்களுடன் பேசிய இன்ஸ்பெக்டர் கண்ணன் இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். பொதுமக்களின் திடீர் முற்றுகையால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
வடமதுரை:
அய்யலூர் அருகே மோர்பட்டி, கோப்பம்பட்டியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் மூலமும், ஆழ்குழாய் கிணறு அமைத்து மேல் நிலை தொட்டியில் தேக்கியும் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது வறட்சியின் தாக்கம் அதிகரித்துள்ளதால் குடிநீர் சீராக வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதனால் தொடர்ந்து குடிநீர் இன்றி பொதுமக்கள் தவித்து வந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு வடமதுரை யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகள் அவர்களை சமரசம் செய்தனர்.
தற்போது மோர்பட்டி - சித்துவார்பட்டி சாலையில் பணிகள் நடைபெற்று வருகிறது. பணியின் போது குடிநீர் குழாயை உடைத்ததால் கோப்பம்பட்டி பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட வில்லை.
இது குறித்து பல முறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் காலிக்குடங்களுடன் போராட்டத்தில் ஈடுபட தயாரானார்கள். சம்பவம் குறித்து அறிந்ததும் அதிகாரிகள் விரைந்து வந்து கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். டாக்டர் பரமசிவம் எம்.எல்.ஏ.வுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரரிடம் பேசி குடிநீர் குழாயை விரைவில் சீரமைக்கப்படும் என உறுதியளித்ததால் அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்