என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "driver killed"
சேலம்:
சேலம் அயோத்தி யாப்பட்டணம் ஏரிக்காடு பகுதியைச் சேர்ந்தவர் வரதராஜன் (64). இவர் தனியார் சுற்றுலா பஸ்சில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று இவர் மேட்டுப்பட்டி டோல் கேட் அருகே மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு ராமேஸ்வரம் கோவில் சென்று விட்டு சேலம் வந்தார். மீண்டும் மோட்டார் சைக்கிளை எடுப்பதற்காக டோல்கேட்டில் இறங்கி சாலையை கடக்கும் போது அந்த வழியாக வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் வரதராஜன் மீது மோதியது. இந்த விபத்தில் தூக்கி வீசபட்ட வரதராஜன் தலையில் அடிப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அவரது மகன் ரவி கொடுத்த புகாரின் பேரில் காரிப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ராஜபாளையத்தில் ஆட்டோ கவிழ்ந்து டிரைவர் பலியானார்.
- மோசமான சாலையால் இந்த விபரீத சம்பவம் நடந்துள்ளது.
ராஜபாளையம்
சிவகாசி காக்கிவாடன்பட்டியை சேர்ந்தவர் தளவாய்பாண்டியன் (வயது45), ஆட்டோ டிரைவர். இவர் காக்கிவாடன்பட்டியில் இருந்து சவாரி ஏற்றி கொண்டு ராஜபாளையம் ரெயில் நிலையத்திற்கு வந்தார். பின்னர் அங்கிருந்து மீண்டும் ஊருக்கு புறப்பட்டார்.
அப்போது எதிர்பாராத விதமாக சாலையில் இருந்த பள்ளத்தில் ஆட்டோ ஏறி இறங்கிய போது நிலை தடுமாறி கவிழ்ந்தது. இதில் ஆட்டோவுக்குள் சிக்கிய தளவாய் பாண்டியன் காயமடைந்து பேச்சு மூச்சின்றி கிடந்தார்.
அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்ட தாக தெரிவித்தனர். இதுகுறித்து தளவாய் பாண்டியன் மகன் முரளி மனோஜ் ராஜபாளையம் தெற்கு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இன்ஸ்பெக்டர் சார்லஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
ராஜபாளையம் முழுவதும் பல்வேறு பணிகளுக்காக சாலைகள் தோண்டப்பட்டு சரியாக மூடப்படாமலும், செப்பனிடபடாமலும் குண்டும் குழியுமாக கிடக்கின்றன. இதனால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது. எனவே சாலை களை விரைவாக சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த 10 நாட்களாக ராஜபாளையம் பகுதியில் தொடர்ச்சியாக மழை பெய்து வந்ததால் சாலைகளில் புதிய பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. மழைநீர் தேங்கி இருப்பதால் வாகன ஓட்டிகளுக்கு பள்ளங்கள் தெரிவதில்லை. இதனால் விபத்தில் சிக்குகின்றனர். தொடர் விபத்துக்களையும், உயிர் பலிகளையும் தடுக்க முறையான வடிகால் வசதியுடன் சாலைகளை விரைவாக சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- சேலம் மாமாங்கம் டால்மியா இறக்கத்தில் லாரி ஒன்று நேற்று இரவு நின்று கொண்டு இருந்தது.
- அந்த வழியாக பின்னால் வந்த மினிவேன் அந்த லாரி மீது பயங்கரமாக மோதியது.
சேலம்:
சேலம் மாமாங்கம் டால்மியா இறக்கத்தில் லாரி ஒன்று நேற்று இரவு நின்று கொண்டு இருந்தது.
அப்போது அந்த வழியாக நள்ளிரவு வந்த மற்றொரு லாரி நின்ற லாரியின் வலது புறம் உரசி சாலையின் நடுவில் தடுப்பு சுவரில் மோதி நின்றது.
இதையடுத்து அந்த வழியாக பின்னால் வந்த மினிவேன் அந்த லாரி மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த சூரமங்கலம் போலீசார் மீட்டு பணியில் ஈடுபட்டனர்.
டிரைவர் பலி
இந்த விபத்தில் மினி வேனை ஓட்டி வந்த டிரைவர் மேச்சேரி காக்காச்சி வளவை சேர்த்த பச்சமுத்து மகன் மணி (வயது 28) சம்பவ இடத்திலேயே பரிதமாக இறந்தார். அந்த வேனில் வந்த டவர் அமைக்கும் வேலைக்கு சென்ற மேச்சேரி பகுதியை சேர்ந்த செந்தில், தங்கராசு, ரவி ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அவர்களை போலீசார் மீட்டு குரங்குசாவடியில் உள்ள தனியார் ஆஸ் பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
சிகிச்சை
அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வேன் டிரைவர் மணி உடலை பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விபத்தால் நள்ளிரவு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்துக்குள்ளான லாரிகளை அப்புறப்படுத்தி போலீசார் போக்குவரத்தை சரி செய்தனர்.
சங்ககிரி:
பெங்களூர் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் மகேந்திரன் (38). லாரி டிரைவர். இவர் நேற்று முன்தினம் இரவு பெங்களூர் கூடல் கேட்டில் உள்ள ஒரு கூரியர் நிறுவனத்தில் இருந்து லோடு ஏற்றிக்கொண்டு கோவையை நோக்கி சென்று கொண்டிருந்தார்.
இவருடன் லோடுமேனாக திண்டுக்கல்லை சேர்ந்த கிருஷ்ணன் (36) என்பவரும் உடன் சென்றுள்ளார். அதிகாலை 5 மணிக்கு சங்ககிரி அடுத்து வீராச்சிபாளையம் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது மகேந்திரன் ஓட்டிச் சென்ற லாரி முன்னால் சென்று கொண்டிருந்த மற்றொரு லாரியின் பின்பக்கத்தில் பலமாக மோதி விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் மகேந்திரன் ஓட்டிச் சென்ற லாரியின் முன் பகுதி முற்றிலும் சிதைந்து போனது. இதில் மகேந்திரன், கிருஷ்ணன் ஆகிய இருவரும் பலத்த காயமடைந்தனர். இதனை அடுத்து அருகில் இருந்தவர்கள் உடனடியாக இருவரையும் மீட்டு சங்ககிரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதில் மகேந்திரன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கிருஷ்ணன் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து சங்ககிரி சப்-இன்ஸ்பெக்டர் உதயகுமார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த பட்டணம் கிராமத்தைச் சேர்ந்தவர் மகேந்திரன் 35, இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் டிரைவராக பணிபுரிந்து வந்தார்.இவர் பட்டணத்தில் இருந்து வெண்மணி ஆத்தூ ரில் உள்ள அவரது உறவி னர் வீட்டுக்கு சென்று விட்டு தனது இரு சக்கர வாக னத்தில் மீண்டும் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்பொழுது சென்னையில் இருந்து செஞ்சி வந்த மினி லாரி இவர் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் மகேந்திரன் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். தகவல் அறிந்த அவரது உறவினர்கள் விபத்து ஏற்படுத்திய மினி வேனை அடித்து நொறுக்கினர்.அதன் டிரைவர் தப்பி ஓடிவிட்டார்.மேலும் அங்கு வந்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் மகேந்திரனை பரிசோதித்து அவர் இறந்து விட்டதாக கூறி அங்கிருந்து சென்று விட்டனர். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் மற்றும் மகேந்திரன் உறவினர்கள் திண்டிவனம் -திருவண்ணா மலை சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
வெகு நேரம் ஆகியும் தனியார் ஆம்புலன்ஸ் மற்றும் போலீசார் வராததால் மகேந்திரன் உடலை ரோட்டில் ஓரமாக வைத்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த சாலை மறியலால் திருவண்ணாமலை -திண்டிவனம் சாலையில் ஒரு மணி நேரத்துக்கு மேலாக கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது .சம்பவ இடத்திற்கு தகவல் அறிந்த வந்த ரோசனை இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் மகேந்திரன் உடலை மீட்டு தனியார் ஆம்புலன்சில் அனுப்பி வைத்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை கலைத்தனர்.மறியல் காரணமாக சுமார் 2 கிலோ மீட்டருக்கு மேலாக வாகனங்கள் இருபுறமும் அணிவகுத்து நின்றது . இதுகுறித்து யோசனை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் மினி வேனின் முன்பக்க டயர் வெடித்து விபத்துக் குள்ளானது ெதரிய வந்தது.
- ரமேஷ் தனியார் கம்பெனியில் கடந்த 8 மாதமாக டிரைவராக பணிபுரிந்து வந்தார்.
- மின்கம்பி மீது பட்டு மின்சாரம் பாய்ந்து டிரைவர் ரமேஷ் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலே உடல் கருகி இறந்தார்.
கள்ளக்குறிச்சி:
சேலம் மாவட்டம் ஏழுமலைகவுன்டர்பட்டி பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 36) டிரைவர். இவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை குருபீடபுரம் கூந்தலூர் பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் கடந்த 8 மாதமாக டிரைவராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் நேற்று கொட்டையூர் பகுதியில் உள்ள கல்குவாரியில் கற்களை டிப்பர் லாரியில் ஏற்றிகொண்டு மீண்டும் கம்பெனிக்கு வந்தார்.
அப்போது டிப்பர் லாரியின் பின்பக்க டோர் சரியாக மூட வில்லை. இதனால் டிப்பர் லாரியின் பின்புற கதவை தூக்கும்போது மேலே சென்ற மின்கம்பி மீது பட்டு மின்சாரம் பாய்ந்து டிரைவர் ரமேஷ் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலே உடல் கருகி இறந்தார். இதை பார்த்த அருகில் இருந்தவர்கள் இதுகுறித்து எடைக்கல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ரமேஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வரதராஜன் (53). ஆட்டோ டிரைவர். தற்போது கரூர் - நாமக்கல் பைபாஸ் சாலையில் உள்ள என்.கே நகரில் வசித்து வந்தார்.
- நாமக்கல் நோக்கி சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பரமத்தி அருகே உள்ள பில்லூர் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் வரதராஜன் (53). ஆட்டோ டிரைவர். தற்போது கரூர் - நாமக்கல் பைபாஸ் சாலையில் உள்ள என்.கே நகரில் வசித்து வந்தார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு அருகே உள்ள ஒரு பெட்ரோல் பங்கிற்கு செல்ல கரூர்- நாமக்கல் பைபாஸ் சாலையில் வந்தார். அப்போது பரமத்தியில் இருந்து நாமக்கல் நோக்கி சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் வரதராஜன் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடினார். இதை பார்த்த அவ்வழியாக வந்தவர்கள் அவரை காப்பாற்றி கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து பரமத்தி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- விருதுநகர் அருகே ஆட்டோ கவிழ்ந்து டிரைவர் பலியானார்.
- இந்த விபத்து குறித்து ஆமத்தூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்
விருதுநகர் அருகே உள்ள ஆமத்தூர் இந்திரா காலனியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது31). இவர் சொந்தமாக ஆட்டோ வைத்து ஓட்டி வந்தார். நேற்று காருசேரிக்கு சவாரி சென்று விட்டு விருதுநகர்-சிவகாசி ரோட்டில் வந்து கொண்டிருந்தார்.
மத்தியசேனை பகுதியில் வந்த போது ரோட்டின் குறுக்கே மூதாட்டி ஒருவர் வந்துவிட்டார். அவர் மீது மோதாமல் இருப்பதற்காக ஆட்டோவை திருப்பினார்.அப்போது நடுரோட்டில் கவிழ்ந்து ஆட்டோ விபத்துக் குள்ளானது. டிரைவர் செந்தில்குமார் ஆட்டோவின் அடியில் சிக்கிக் கொண்டார்.
இதில் படுகாயமடைந்த அவரை, அந்த பகுதி வழியாக வந்தவர்கள் மீட்டு விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே செந்தில்குமார் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து ஆமத்தூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அய்யனார் கிராமப்புற பகுதிகளில் தங்கி நெல் அறுவடை எந்திரத்தை இயக்கி வந்தார்.
- அய்யனாரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்கள்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உருமன்குளத்தை சேர்ந்தவர் முருகையன் மகன் அய்யனார் (வயது 20). நெல் அறுவடை எந்திர டிரைவர். இவர் புதுவை மாநில கிராமப்புற பகுதிகளில் தங்கி நெல் அறுவடை எந்திரத்தை இயக்கி வந்தார். வாரம் ஒருமுறை செஞ்சி அருகே உள்ள வீட்டிற்கு சென்று பெற்றோரை பார்த்து விட்டு பணிக்கு திரும்பிவிடுவார். அதன்படி நேற்று மாலை புதுவையில் இருந்து மோட்டார் சைக்கிளில் செஞ்சிக்கு சென்றார்.
புதுவை - திண்டிவனம் 4 வழிச் சாலையில் அருவாப்பாக்கம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற போது, சாலையில் இருந்த பள்ளத்தில் விழுந்தார். இதில் படுகாயமடைந்த அய்யனாரை அவ்வழியே சென்றவர்கள் மீட்டு திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். மேல் சிகிச்சைக்காக அங்கிருந்து புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அய்யனாரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்கள். இது தொடர்பான புகாரின் பேரில் கிளியனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுரளி தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- முஹம்மது பாஷா விருத்தாச்சலம் சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார்.
- ஆட்டோ சாலையின் இடது புறத்தில் கவிழ்த்து விபத்து ஏற்பட்டது .
கடலூர்:
கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அண்ணா நகர் பகுதியை சேர்ந்த காசிம் பாஷா மகன் முஹம்மது பாஷா( வயது 24) ஆட்டோ டிரைவர். இவர் தனது ஆட்டோவில் விருத்தாசலத்தில் இருந்து கண்டப்பக்குறிச்சிக்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு, விருத்தாச்சலம் சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார். ஏ. சித்தூர் கிராமத்திலுள்ள மின்சார வாரிய அலுவலகம் அருகே சென்ற போது நிலை தடுமாறி ஆட்டோ சாலையின் இடது புறத்தில் கவிழ்த்து விபத்து ஏற்பட்டது .
இதில் ஆட்டோவில் பயணம் செய்த கண்டபங்குறிச்சி கிராமத்தை சேர்ந்த தனலட்சுமி அவரது மகன் பிரவீன் ஆகிய இருவரும் லேசான காயத்துடன் உயிர் தப்பினார்கள் ஆனால் ஆட்டோவை ஓட்டி சென்ற டிரைவர் முஹம்மது பாஷா உடல் , தலை,முகம் ஆகிய பகுதிகளில் பலத்த அடிபட்டவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் வேப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியிலேயே முஹம்மது பாஷா இறந்து விட்டதாக கூறினார்கள் . அதனை தொடர்ந்து அங்கு சென்ற போலீசார் முஹம்மது பாஷா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விருதா ச்சலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வேப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை செய்து வருகின்றனர்.
- டிரெய்லர் லாரியில் இருந்த இரும்பு தகடு சரிந்து பஸ் டிரைவர் மீது விழுந்தது.
- சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கள்ளக்குறிச்சி:
சென்னையில் கமுதிக்கு 46 பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசு விரைவு சொகுசு பஸ் நேற்று இரவு புறப்பட்டது. இந்த பஸ்சினை திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகேயுள்ள என்குன்றத்தைச் சேர்ந்த பிரபாகரன் (வயது 54) என்பவர் ஓட்டி வந்தார். இந்த பஸ் இன்று அதிகாலை 4 மணியளவில் உளுந்தூர்பேட்டைக்கு வந்தது. உளுந்தூர்பேட்டை அடுத்த ஆசனூரில் உள்ள சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அரசு விரைவு சொகுசு பஸ் சென்ற போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், முன்னாள் சென்ற டிரெய்லர் லாரியின் பின்புறம் மோதியது. டிரெய்லர் லாரியில் இருந்த இரும்பு தகடு சரிந்து பஸ் டிரைவர் மீது விழுந்தது.
இதில் டிரைவர் பிரபாகரன் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார். தகவல் அறிந்த எடக்கல் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். உடல் நசுங்கி இறந்து கிடந்த டிரைவரை மீட்க தீயணைப்பு துறையினரை வரவழைத்தனர். அவர்கள் சுமார் ஒரு மணி நேரம் போராடி டிரைவரின் உடலை பஸ்சிலிருந்து மீட்டனர். தொடர்ந்து டிரைவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்தி ரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும், பஸ்சில் பயணம் செய்த பயணிகள் 5-க்கும் மேற்ப ட்டோருக்கு லேசான காய ங்களுடன் உயிர் தப்பினர். இவர்களுக்கு உளுந்தூ ர்பேட்டை அரசு ஆஸ்ப த்தி ரியில் முத லுதவி சிகி ச்சை அளி க்கப்ப ட்டது. தொடர்ந்து மாற்றுப் பஸ் வரவழை க்கப்பட்டு பயணிகள் அனுப்பி வைக்க ப்ப ட்டனர். இந்த விபத்தால் உளுந்தூ ர்பேட்டை சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 2 மணி நேரம் பக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகிறது. 3 வயதில் ஒரு மகள் உள்ளார்.
- ஒரு லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்தானது.
சத்தியமங்கலம்,
ஈரோடு மாவட்டம் கடம்பூர் சுஜில்கரையை சேர்ந்தவர் மாதன். இவரது மகன் பட்டான் (33). டிரைவர். இவரது மனைவி ரம்யா.
இவர்களுக்கு திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகிறது. 3 வயதில் ஒரு மகள் உள்ளார். தற்போது இவர்கள் சத்தியமங்கலம் கொழிஞ்சனூர் பகுதியில் வசித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் நேற்று பட்டான் சத்தியமங்கலத்தில் உள்ள ஒரு மளிகை கடைக்கு சென்று விட்டு வருவதாக கூறி விட்டு தனது மோட்டார் சைக்கிளில் சென்றார்.
அப்போது கெஞ்சனூர் பிரிவு பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க் அருகே சென்று கொண்டு இருந்த போது ரோட்டில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ஒரு லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்தானது. இதில் கீழே விழுந்த பட்டானுக்கு படுகாயம் ஏற்பட்டது.
இதையடுத்து அவரை பட்டானை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அப்போது பட்டானை பரிசோதனை செய்த டாக்டர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்