என் மலர்
நீங்கள் தேடியது "electric attack"
- அனிதா வீட்டில் ஈரக்கையால் செல்போனுக்கு சார்ஜ் போட்ட போது அவரை மின்சாரம் தாக்கியது.
- மின்சாரம் தாக்கி சிறுமி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக எண்ணூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை எர்ணாவூரில் முகுந்தன் என்பவரின் மகள் அனிதா (14) வீட்டில் ஈரக்கையால் செல்போனுக்கு சார்ஜ் போட்ட போது அவரை மின்சாரம் தாக்கியது.
இதையடுத்து அனிதாவை சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்ற நிலையில் அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மின்சாரம் தாக்கி சிறுமி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக எண்ணூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வேலாயுதத்தின் அலறல் சத்தம் கேட்டு வீட்டில் வேலை செய்து கொண்டிருந்த நபர்கள் அவரை மீட்க முயற்சித்தனர்.
- காயமடைந்த மாரியப்பனுக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நெல்லை:
நெல்லை கொக்கிரகுளம் பகுதியை சேர்ந்தவர் கஜேந்திரன். இவர் தனது வீட்டின் முன் பகுதியில் கழிவறை புனரமைப்பு பணியை மேற்கொண்டு வருகிறார். கழிவறை சுவற்றின் அருகே மின்சாதன மீட்டர் பெட்டி இருந்துள்ளது.
இந்த நிலையில் புனரமைப்பு பணிக்காக அந்த மீட்டரின் கீழ் பகுதியில் உள்ள பொருட்களை கஜேந்திரன் மகன் வேலாயுதம்(வயது 30) என்பவர் எடுக்க சென்றுள்ளார். அப்போது திடீரென மீட்டரில் இருந்து மின்கசிவு ஏற்பட்டு வேலாயுதம் உடலில் மின்சாரம் பாய்ந்தது. இதனால் வேலாயுதம் அலறி துடித்தார்.
வேலாயுதத்தின் அலறல் சத்தம் கேட்டு வீட்டில் வேலை செய்து கொண்டிருந்த நபர்கள் அவரை மீட்க முயற்சித்தனர். அப்போது மாரியப்பன் என்ற தொழிலாளியை மின்சாரம் தாக்கியதில் அவர் தூக்கி வீசப்பட்டார். இதைக்கண்ட கஜேந்திரன் வீட்டில் கால்நடை பராமரிப்பாளராக வேலை பார்க்கும் ரவி என்பவர் அங்கு ஓடி வந்து வேலாயுதத்தை காப்பாற்ற முயற்சித்த போது அவர் மீதும் மின்சாரம் தாக்கி தூக்கி வீசியது.
உடனடியாக அக்கம் பக்கத்தினர் மின் வயர்களை அறுத்து விட்டனர். தொடர்ந்து, மின்சாரம் தாக்கியதில் படுகாயம் அடைந்த வேலாயுதம் மற்றும் ரவியை உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்நிலையில் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே சிகிச்சை பலனின்றி இருவரும் உயிர் இழந்தனர்.
காயமடைந்த மாரியப்பனுக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உயிரிழந்த வேலாயுதம் ஆக்கி விளையாட்டு வீரர் ஆவார். இவர் விளையாட்டு ஒதுக்கீட்டில் வேலைக்கு சேரும் முயற்சியில் சென்னையில் தங்கி அதற்கான பணிகளில் ஈடுபட்டு வந்துள்ளார்.
உயிரிழந்த மற்றொரு நபரான ரவிக்கு திருமணம் ஆகி 3 குழந்தைகள் உள்ளனர். ரவியின் கடைசி மகள் பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதுவதற்கு இன்று பள்ளி சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் தொடர்பாக பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மின்சாரம் தாக்கியதில் பூசாரி வெங்கட்ரமணா, மணமகளின் பெற்றோர், உறவினர்கள் உள்ளிட்ட 12 பேர் படுகாயம் அடைந்தனர்.
- சிகிச்சை பெற்று வருபவர்களில் 2 பேரும் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், ரணஸ்தலம் அடுத்த அல்லி வலசையை சேர்ந்தவர் லஷ்மி. இவரது மகனுக்கு அங்குள்ள திருமண மண்டபத்தில் நேற்று முன்தினம் இரவு திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தன. திருமண விழாவில் மணமக்களின் உறவினர்கள், நண்பர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
நேற்று காலை முகூர்த்தம் என்பதால் மணமக்கள் புத்தாடைகளுடன் மாலைகள் அணிந்து வந்து மணமேடையில் அமர்ந்தனர்.
அப்போது பூசாரி வெங்கட்ரமண ரெட்டி மைக்கேல் மந்திரங்களை ஓதிக்கொண்டு இருந்தார். 10 நிமிடத்தில் மணமகன் மணமகள் கழுத்தில் தாலி கட்ட இருந்தார்.
இந்த நிலையில் பூசாரி வைத்திருந்த மைக்கில் திடீரென மின்சாரம் பாய்ந்தது. அப்போது பூசாரி மைக்கை தூக்கி வீசினார்.
மைக் அருகில் இருந்த சீதம்மா என்பவரை மின்சாரம் தாக்கியது. அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
மின்சாரம் தாக்கியதில் பூசாரி வெங்கட்ரமணா, மணமகளின் பெற்றோர், உறவினர்கள் உள்ளிட்ட 12 பேர் படுகாயம் அடைந்தனர்.
படுகாயம் அடைந்தவர்களை மீட்டு ஆட்டோ மூலம் அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
சிகிச்சை பெற்று வருபவர்களில் 2 பேரும் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
இறந்த பெண் உடலை போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிறிது நேரத்தில் திருமணம் நடைபெற இருந்த நிலையில் மின்சாரம் தாக்கி பெண் உயிரிழந்த சம்பவம் திருமண மண்டபத்தில் சோகத்தை ஏற்படுத்தியது.
- சிறுமியை மீட்ட பெற்றோர் ஆவடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
- சிறுமியை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர்.
ஆவடி:
திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் மின்சாரம் பாய்ந்து, 5 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆவடியில் நந்தவன மேட்டூர் நேதாஜி தெருவை சேர்ந்த தம்பதி கவுதம்-பிரியா. இவர்களது மகள் ரூபாவதி (5), வீட்டில் இருந்த குளிர்சாதன பெட்டியை திறந்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்து, சிறுமி மயங்கி விழுந்தார்.
உடனடியாக சிறுமியை மீட்ட பெற்றோர் ஆவடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். சிறுமியை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர்.
மின்சாரம் தாக்கி சிறுமி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக ஆவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஸ்டீல் கைப்பிடியை பொருத்தும் பணியில் காகிதப்பட்டறையைச் சேர்ந்த 2 இளைஞர்கள் ஈடுபட்டிருந்தனர்.
- மின்சாரம் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே இளைஞர்கள் உயிரிழந்தனர்.
வேலூர் மாவட்டம் மேல்வல்லம் பகுதியில் புதிய வீட்டின் மொட்டை மாடியில் சீலிங் வேலை நடந்து கொண்டிருந்தது. ஸ்டீல் கைப்பிடியை பொருத்தும் பணியில் காகிதப்பட்டறையைச் சேர்ந்த 2 இளைஞர்கள் ஈடுபட்டிருந்தனர்.
கைப்பிடியை பொருத்தும் பணியின்போது அவர்களுக்கு மின்சாரம் தாக்கியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர்கள் உயிரிழந்தனர்.
ஸ்டீல் கம்பி எதிரே உள்ள மின்கம்பியில் உரசியதில் அவர்கள் மீது மின்சாரம் பாய்ந்துள்ளது. இதில் முகேஷ் (24), சதீஷ் (24) பலியாகினர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கொளத்தூர் பூம்புகார் நகரில் உள்ள தியாகராஜன் என்பவரது கடையில் எலக்ட்ரிக்கல் வேலை செய்து வந்தார்.
- மாதவனை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
கொளத்தூர்:
சென்னை புழல், கிருஷ்ணா நகர் முதல் தெருவை சேர்ந்தவர் மாதவன் (42). எலக்ட்ரிக்கல் வேலை செய்து வந்தார். நேற்று காலை 11 மணிக்கு கொளத்தூர் பூம்புகார் நகரில் உள்ள தியாகராஜன் என்பவரது கடையில் எலக்ட்ரிக்கல் வேலை செய்து வந்தார். அப்போது மின்சாரம் தாக்கி மாதவன் மயங்கி விழுந்தார்.
அவரை தியாகராஜன் ஆட்டோவில் அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் மாதவன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து கொளத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உப்பிலியபுரம் ஊராட்சி ஒன்றியம் ஆர்.புதுப்பட்டி கவுண்டர் தெருவைச்சேர்ந்தவர் ரவிச்சந்திரன் ( வயது 45) விவசாயி. இவருக்கு சம்பூர்ணம் என்ற மனைவியும், விக்னேஷ் வயது 23 என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் ரவிச்சந்திரன் நேற்று தீபாவளியன்று அதிகாலையில் புதுப்பட்டி- ஒக்கரைக்கிடையே அமைந்துள்ள தனது தோட்டத்திற்கு சென்றார்.
அப்போது மோட்டார் பம்புக்கு செல்லும் வயரில் உள்ள மின்கசிவு தெரியாமல் வயரை மிதித்ததில் அவர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்ததும் உப்பிலியபுரம் சப்-இன்ஸ்பெக்டர் சாந்தகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்துசென்று ரவிச்சந்திரன் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து உப்பிலியபுரம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
திருச்செந்தூர் அருகே உள்ள ஆலந்தலையை சேர்ந்த ஞானமுத்து மனைவி பஞ்சவர்ணம் (வயது35). இவருக்கு சொந்தமாக 10 மாடுகள் உள்ளன. இந்த மாடுகளை காலையில் மேய்ச்சலுக்கு விட்டால் மாலையில் அவைகள் வீடு திரும்பி விடுமாம்.
இந்நிலையில் கடந்த 6-ந் தேதி மேய்ச்சலுக்கு சென்ற மாடுகளில் 2 மாடுகள் மாலையில் வீடு திரும்பவில்லையாம். இதையடுத்து மறுநாள் ஆலந்தலை காட்டுப் பகுதியில் தேடி பார்த்தபோது இரண்டு மாடுகள் இறந்து கிடந்தது. இதன் அருகில் மின்கம்பி அறுந்து கிடந்துள்ளது. இதனால் மின்சாரம் தாக்கி இரண்டு மாடுகள் இறந்தது தெரியவந்தது.
இது குறித்து பஞ்சவர்ணம் திருச்செந்தூர் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம் கஜா புயலால் பெரிய அளவிலான பாதிப்பை சந்தித்துள்ளது. பல்வேறு இடங்களில் மரங்கள், மின் கம்பங்கள் முறிந்து விழுந்தன. இதனால் மின்சாரமின்றி பொதுமக்கள் தவித்தனர்.
மின் கம்பங்கள் சீரமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது. தற்போது மாவட்டம் முழுவதும் 95 சதவீதம் அளவுக்கு சீரமைப்பு பணிகள் முடிந்துள்ளது. மீதமுள்ள சில பகுதிகளில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் மின் சீரமைப்பு பணியின்போது மின்சார ஊழியர்கள் விபத்தில் சிக்கினர். இதில் ஒருவர் பலியானார். மேலும் ஆங்காங்கே அறுந்து கிடந்த மின்கம்பிகளாலும் விபத்துக்கள் ஏற்பட்டு வந்த நிலையில் இன்று காலை 2 பேர் மின்சாரம் பாய்ந்து பலியாகினர்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அரையப்பட்டியை சேர்ந்த முத்துச்சாமி மனைவி சுசீலா (வயது 50). அதே பகுதியை சேர்ந்த கருப்பையா மகன் சக்தி (25). இவர்கள் இருவரும் இன்று காலை அப்பகுதியில் உள்ள கிணற்றில் தண்ணீர் எடுப்பதற்காக நடந்து சென்றனர். அப்போது வழியில் புயலால் சேதமான மின் வயர்கள் அறுந்து கிடந்தன.
அந்த வயர்கள் அப்புறப்படுத்தப்படாமல் அங்கேயே கடந்த 25 நாட்களாக கிடந்தது. மின் சப்ளை இல்லாததால் அந்த மின்வயர்களை பொதுமக்கள் அப்புறப்படுத்தி அந்த வழியாக சென்று வந்தனர்.
அதுபோல் இன்று காலை சுசீலாவும், சக்தியும் மின் வயர்களை அப்புறப்படுத்த முயன்றபோது திடீரென அவர்கள் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இதைப்பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இதுகுறித்த தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு ஆலங்குடி போலீசார் சென்று விசாரணை நடத்தினர். அறுந்து கிடந்த மின் வயர்களில் மின்சாரம் பாய்ந்தது எப்படி என்று தெரியவில்லை. அங்கு ஒரு சில பகுதியில் மின் சீரமைப்பு பணிகள் முடிவுற்று மின் சப்ளை செய்யப்பட்டுள்ளது. அதன் மூலம் அறுந்து கிடந்த மின் வயர்களில் மின்சாரம் பாய்ந்திருக்கும் என தெரிகிறது. இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
சம்பவ இடத்திற்கு மின்வாரிய அதிகாரிகள் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும் இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் இருக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் திரண்டு கோரிக்கை விடுத்தனர். #Electricattack
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அருகே உள்ள மேல்மாயில் பகுதியை சேர்ந்தவர் தமிழ்வாணன் இவரது மனைவி புவனா (வயது 40). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
புவனா இன்று காலை வீட்டில் உள்ள துணிகளை துவைத்து வீட்டின் மேற்கூரையின் மீது காயபோட்டுள்ளார். அப்போது அருகே சென்று கொண்டிருந்த மின் கம்பி மீது தவறுதலாக கைபட்டு மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.
கே.வி.குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு குடியாத்தம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மற்றொரு சம்பவம்...
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த முன்னூர் மங்கலத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 65). நேற்று இரவு அப்பகுதியில் பலத்த மழை பெய்தது. அப்போது வீட்டில் தூங்கி கொண்டிருந்த ராஜேந்திரன் இயற்கை உபாதைக்காக வெளியே வந்தார். அங்கு அறுந்து கிடந்த மின்கம்பியை தவறுதலாக மிதித்து விட்டார். இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து புதுப்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேகமலை வன உயிரின சரணாலய பகுதிக்கு உட்பட்டது வெண்ணியாறு, இந்த பகுதி வழியாக சுருளியாறு மின் உற்பத்தி நிலையத்தில் இருந்து திருநெல்வேலி மாவட்ட மின்பகிர்மான வட்டத்துக்கு உயர்மின் அழுத்த கம்பிகள் செல்கின்றன. வனப்பகுதியில் வனத்துறையினர் ரோந்து சென்றனர். அப்போது 9 வயது மதிக்கத்தக்க பெண் யானை உடல் கருகிய நிலையில் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இது குறித்து சரணாலய உதவி வனப்பாதுகாவலர் குகனேஷ், கம்பம் கிழக்கு வனச்சரகர் துரை தினேஷ், கால்நடை மருத்துவர் செல்வம் மற்றும் ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு சென்றனர்.
யானையின் உடலை பிரேத பரிசோதனை செய்தனர். இதில் பெண் யானை மின் கம்பியை துதிக்கையால் தட்டியபோது மின்சாரம் பாய்ந்து இறந்தது தெரிய வந்தது. இறந்த யானைக்கு 9 வயது இருக்கும் என கால்நடை டாக்டர்கள் தெரிவித்தனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு பெண் யானை தனது 6 மாத குட்டியுடன் இதே இடத்தில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. வனப்பகுதியில் யானைகள் மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பது தொடர்கதையாகி வருகிறது. எனவே சரணாலயத்தினர் மின் கம்பி வடங்களை உயர்த்தி செல்லும் வகையில் மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வன ஆர்வலர்கள் தெரிவித்தனர்.
இது குறித்து வனத்துறையினர் கூறுகையில், பெரும்பாலான மின்சார கம்பி வடங்கள் வன விலங்குகள் நடமாடும் பகுதியில் இல்லை. உணவு மற்றும் தண்ணீருக்காக இடம் பெயரும் போது இது போன்ற விபத்துகள் நடக்கின்றன. எனினும் இதனை தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள மேலஒலக்கூர் கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள் (வயது 70), விவசாயி. இவரது மனைவி முனியம்மாள் (60).
கணவன்-மனைவி இருவரும் தங்களுக்கு சொந்தமான விவசாய நிலத்துக்கு சென்றனர். அங்குள்ள மோட்டார் கொட்டகையில் மின் விளக்கை போடுவதற்காக பெருமாள் சுவிட்சை அழுத்தினார்.
அப்போது அவரது உடலில் மின்சாரம் பாய்ந்தது. அவர் கூச்சலிட்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு மனைவி முனியம்மாளும் அங்கு ஓடிவந்து கணவரை காப்பாற்ற முயன்றார். அப்போது அவரது உடலிலும் மின்சாரம் பாய்ந்தது. சிறிது நேரத்தில் கணவன்- மனைவி இருவரும் பரிதாபமாக இறந்தனர்.
இது பற்றி தகவல் அறிந்த செஞ்சி சப்-இன்ஸ்பெக்டர் அசோகன் மற்றும் போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செஞ்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.