என் மலர்
நீங்கள் தேடியது "Employee"
- திருச்சி மாவட்டம் பூவலூர் கிராமத்தை சேர்ந்தவர் சமயகண்ணன். இவரது மகன் ராஜேஷ்.
- இன்று அதிகாலையில் வேலை பார்த்துக்கொண்டிருந்தபோது அவர் திடீரென மயங்கி விழுந்தார்.
நெல்லை:
திருச்சி மாவட்டம் பூவலூர் கிராமத்தை சேர்ந்தவர் சமயகண்ணன். இவரது மகன் ராஜேஷ்(வயது 33).
மயங்கி விழுந்தார்
இவர் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் தனியார் நிறுவனத்தின் சார்பில் நடைபெறும் கட்டுமான பணியில் ஈடுபட்டு இருந்தார்.இதற்காக கூடங்குளம் அருகே பரமேஸ்வரபுரத்தில் தனது சக நண்பர்களுடன் அவர் தங்கியிருந்து பணிபுரிந்து வந்தார்.
ஒப்பந்த பணியாளரான ராஜேஷ் நேற்று இரவு பணிக்கு சென்றுள்ளார். இன்று அதிகாலையில் வேலை பார்த்துக்கொண்டி ருந்தபோது அவர் திடீரென மயங்கி விழுந்தார்.
சாவு
உடனே அங்கு பணியில் இருந்தவர்கள் ராஜேசை மீட்டு ராதாபுரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுதொடர்பாக கூடங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்த ராஜேஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
- வாழ்க்கையில் விரக்தி அடைந்து தங்கியிருந்த வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- இவர் தனது குடும்பத்தை விட்டு பிரிந்து தனியாக வாழ்ந்துவந்தார்.
அவினாசி :
அவினாசியை அடுத்து பச்சாம்பாளையத்தை சேர்ந்த ராஜா(வயது 50) என்பவர் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். இவர் தனது குடும்பத்தை விட்டு பிரிந்து தனியாக வாழ்ந்துவந்தார். இந்த நிலையில் வாழ்க்கையில் விரக்தி அடைந்த இவர் தான் தங்கியிருந்த வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின் பேரில் அவினாசி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- லாரி மோதி தனியார் நிறுவன ஊழியர் பலியானார்.
- ரேசன் அரிசி மூடைகளை ஏற்றி வந்த லாரி எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
மதுரை
மதுரை முனிச்சாலை சி.எம்.ஆர். ரோட்டை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 35). தனியார் நிதி நிறு வனத்தில் பணியாற்றி வந்த இவர் தினமும் மோட்டார் சைக்கிளில் வேலைக்கு செல்வது வழக்கம். அதன்படி இன்று காலை நாகராஜ் மோட்டார் சைக்கிளில் வேலைக்கு புறப்பட்டார்.
கூடல்நகர் மேம்பாலத்தில் சென்றபோது அந்த வழியாக ரேசன் அரிசி மூடைகளை ஏற்றி வந்த லாரி எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. லாரியின் முன்பக்கம் நாகராஜ் தலை மோதியது. இதில் அவர் மண்டை உடைந்து சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார்.
விபத்து குறித்து தகவல் அறிந்த மாநகர போக்கு வரத்து போலீசார் சம்பவ இடம் வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோத னைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை சோலையழகு புரம் மகாலட்சுமி கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜாமுகமது (46). இவர் சுப்பிரமணியபுரம் ராஜா தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்குள்ள பள்ளி அருகே சென்றபோது அந்த வழியாக வந்த கார் ராஜாமுகமது மீது மோதியது.
இதில் படுகாயம் அடைந்த அவர் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி இறந்தார். விபத்து குறித்து போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கார் டிரைவர் அருள்தாஸ்புரத்தை சேர்ந்த சுந்தரபாண்டியன் (31) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அரசு பெண் ஊழியரிடம் நகை பறித்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
- அவர் வைத்திருந்த கைப்பையில் ¼ பவுன் தங்க கடிகாரம், செல்போன், ஆதார், பான் கார்டுகள், ரூ.1500 ரொக்கம் ஆகியவை இருந்தன.
மதுரை
மதுரை அய்யர் பங்களா ஸ்ரீநகரை சேர்ந்தவர் ராஜேஸ்வரி (வயது66). பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். சம்பவத்தன்று ராஜேஸ்வரி வெளியே சென்ற போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் அவர் வைத்திருந்த கைப்பையை பறித்து சென்றனர். அதில் ¼ பவுன் தங்க கடிகாரம், செல்போன், ஆதார், பான் கார்டுகள், ரூ.1500 ரொக்கம் ஆகியவை இருந்தன. இதுகுறித்து தல்லாகுளம் போலீசில் புகார் செய்யப்பட்டது.
உதவி கமிஷனர் ஜெகன்நாதன், போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் ஆகியோர் சம்பவம் நடந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. காமிரா பதிவுகளை ஆய்வு செய்தனர். இதில் வழிப்பறியில் ஈடுபட்டது கேசவசாமி தெருவை சேர்ந்த துரைபாண்டி மகன் விஜி என்ற சுப்பு (24), அவரது நண்பர் வேலூர் மாவட்டம் கோணவட்டத்தை சேர்ந்த முதார்சீர் (38) என தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
- மண்டபம் அருகே பெட்ரோல் பங்க் ஊழியரிடம் ரூ.5 லட்சம் பறித்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
- இதுகுறித்த புகாரின் பேரில் மண்டபம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் வெளிப்பட்டணம் பகுதியை சோ்ந்தவர் புவனேஸ்வரா் (வயது 39). மண்டபம் அருகே சமத்துவபுரம் பகுதியில் உள்ள தனியாா் பெட்ரோல் விற்பனை நிலையத்தில் வேலை பாா்த்து வருகிறாா்.
இந்த நிலையில் புவனேஸ்வரா் அங்கு பெட்ரோல் விற்பனையான ரூ.4.89 லட்சத்தை எடுத்துக் கொண்டு ராமநாதபுரத்தில் உள்ள வங்கியில் செலுத்த மண்டபம் அருகே வளையா்வாடி பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தாா்.
அப்போது, இரு சக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்து வந்த அடை யாளம் தெரியாத 2 நபா்கள் அவரிடமிருந்த பணப் பையை பறிக்க முயன்றனா். புவனேஸ்வரா் சப்தம் போட்டதையடுத்து அங்கிருந்தவா்கள் ஓடி வந்தனா். இதையடுத்து அந்த நபா்கள் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனா்.
இதுகுறித்த புகாரின் பேரில் மண்டபம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். வழிப்பறியில் ஈடுபட்ட அந்த பகுதியை சோ்ந்த சஞ்சய் (23), விக்ரம் (23) ஆகிய 2 பேரையும் கைது செய்தனா்.
- ஆஸ்பத்திரி பெண் ஊழியர் உள்பட 4 பேர் மாயமானார்கள்.
- விருதுநகர் மேற்கு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
விருதுநகர்
திருச்சுழி அருகே உள்ள மறவர் பெருங்குடியை சேர்ந்தவர் அருண்குமார். இவரது சகோதரி ராதா (வயது 21). இவர் மதுரையில் விடுதியில் தங்கி அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் பணியாற்றி வந்தார்.
சம்பவத்தன்று பணிக்கு சென்ற ராதா அதன்பின் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அருண்குமார் விசாரித்தபோது ராதா, அவரது தோழியான கம்பிக்குடியை சேர்ந்த வைத்தீஸ்வரி வீட்டில் இருந்ததாக தெரிந்தது. இதையடுத்து அருண்குமார் அங்கு சென்று விசாரித்தார். ஆனால் ராதா குறித்த எந்த தகவலும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து எம்.ரெட்டியபட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. அதில், தனது சகோதரி மாயம் தொடர்பாக வைத்தீஸ்வரி மீது சந்தேகம் இருப்பதாக அருண்குமார் புகார் கூறியுள்ளார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராஜபாளையம் அருகே உள்ள சேத்தூர் அருந்ததியர் தெருவை சேர்ந்தவர் கருப்பசாமி (வயது 27), கட்டிட தொழிலாளி. சம்பவத்தன்று வேலைக்கு சென்ற இவர் பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து அவரது மனைவி கவுரி கொடுத்த புகாரின் பேரில் சேத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
திருத்தங்கல் அருகே உள்ள வடமலாபுரம் அண்ணா காலனியை சேர்ந்தவர் சதீஷ்குமார் (27). தனியார் வங்கியில் பணம் வசூல் செய்யும் பிரிவில் பணியாற்றி வந்தார். சம்பவத்தன்று வேலைக்கு சென்ற சதீஷ்குமார் பின்னர் வீடு திரும்பாமல் மாயமானார். அவரது மனைவி சகுந்தலா தேவி கொடுத்த புகாரின் பேரில் திருத்தங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மதுரை மாவட்டம் கள்ளிக்குடியை சேர்ந்தவர் சிங்காரவேலு. இவரது மனைவி முனியம்மாள் (31). இவர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் முனியம்மாள் சில நாட்களுக்கு முன்பு விருதுநகரில் உள்ள உறவினர் வீட்டில் சென்று தங்கினார். சம்பவத்தன்று அங்கிருந்த முனியம்மாள் திடீரென மாயமானார். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. விருதுநகர் மேற்கு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியை சேர்ந்த இளம்பெண் பத்தாம் வகுப்பு வரை படித்துவிட்டு துணிக்கடையில் வேலை பார்த்து வருகிறார்.
- பெற்றோர் உறவினர்கள் வீடுகளிலும் நண்பர்கள் வீடுகளிலும் மற்றும் பல்வேறு பகுதி களுக்கும் சென்று தேடிப் பார்த்தனர். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியை சேர்ந்த இளம்பெண் பத்தாம் வகுப்பு வரை படித்துவிட்டு துணிக்கடையில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கடந்த மாதம் 7-ஆம் தேதி அன்று வழக்கம் போல் ஜவுளி கடைக்கு வேலைக்கு சென்றுள்ளார்.
அன்று இரவு பாத்ரூம் சென்று வருவதாக கூறி சென்றவர் மீண்டும் ஜவுளி கடைக்கு வரவில்லை. இது குறித்து ஜவுளி கடைக்காரர்கள் அவர்களது பெற்றோர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் பெற்றோர் உறவினர்கள் வீடுகளிலும் நண்பர்கள் வீடுகளிலும் மற்றும் பல்வேறு பகுதி களுக்கும் சென்று தேடிப் பார்த்தனர். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இது குறித்து திருச்செங்கோடு போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்
குமார் வழக்கு பதிவு செய்து அந்த இளம்பெண் எங்காவது சென்று விட்டாரா? அல்லது எவராவது கடத்திச் சென்று விட்டனரா? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மதகடிப்பட்டு வார சந்தையில் தனியார் நிறுவன ஊழியரிடம் செல்போன் பறித்து சென்ற வாலிபரை போலீசார் தேடி வருகிறார்கள்.
- வாரச்சந்தைக்கு சென்று கோதண்டராமன் காய்கறிகளை வாங்கிகொண்டு சந்தை எதிரே நின்று செல்போனில் பேசிக்கொண்டிருந்தார்.
புதுச்சேரி:
மதகடிப்பட்டு வார சந்தையில் தனியார் நிறுவன ஊழியரிடம் செல்போன் பறித்து சென்ற வாலிபரை போலீசார் தேடி வருகிறார்கள்.
திருபுவனை அருகே திருபுவனை பாளையம் சேது நகரை சேர்ந்தவர் கோதண்டராமன் (வயது48). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவர் வாரந்தோறும் மதகடிப்பட்டு சந்தைக்கு சென்று வீட்டுக்கு தேவையான காய்கறிகளை வாங்கி வருவது வழக்கம்.
அதுபோல் வாரச்சந்தைக்கு சென்று கோதண்டராமன் காய்கறிகளை வாங்கிகொண்டு சந்தை எதிரே நின்று செல்போனில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு வாலிபர் திடீரென கோதண்டராமனிடமிருந்து செல்போனை பறித்துக்கொண்டு தப்பி ஓடினார்.
இதனால் அதிர்ச்சியடைந்த கோதண்டராமன் அந்த வாலிபரை பிடிக்க பின் தொடர்ந்து ஓடினார். ஆனால் அந்த வாலிபர் மின்னல் வேகத்தில் இருளில் சென்று தப்பியோடி விட்டார். இதனால் செல்போனை பறி கொடுத்த கோதண்டராமன் இதுகுறித்து திருபுவனை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து செல்போனை பறித்து சென்ற வாலிபரை தேடி வருகிறார்கள்.
- அரசு மருத்துவமனைக்குள் புகுந்து ஊழியரை குத்திக்கொன்ற வழக்கில் வாலிபருக்கு சிவகங்கை கோர்ட்டு ஆயுள் தண்டனை வழங்கியது.
- ரூ. 5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி சுமதி சாய் பிரியா உத்தரவிட்டார்.
சிவகங்கை
சிவகங்கை அரசு மருத்துவமனையில் தற்காலிக மருந்தாளுநராக பணிபுரிந்தவர் தமிழ் செல்வன். இவருக்கும், ஒக்கூர் அண்ணா நகரை சேர்ந்த அருண்குமாரின் தாயாருக்கும் தகாத உறவு இருந்தது.
கடந்த 10.4.2019-ந் தேதி இது குறித்து மருத்துவமனையில் பணியில் இருந்த தமிழ்ச்செல்வனிடம் அருண்குமார் கேட்க சென்றார். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த அருண்குமார் மறைத்து வைத்திருந்த கத்தியால் தமிழ்ச்செல்வனை குத்தினார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து சிவகங்கை போலீசார் வழக்குப்பதிவு செய்து அருண்குமாரை கைது செய்தனர். இந்த வழக்கு சிவகங்கை ஒருங்கினைந்த வளாகத்தில் உள்ள குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில் தீர்ப்பு கூறப்பட்டது.
அருண்குமார் மீதான குற்றம் நிரூபிக்கப்படவே அவருக்கு ஆயுள் தண்டனையும், ரூ. 5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி சுமதி சாய் பிரியா உத்தரவிட்டார்.
- பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
- காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு ஊழியர் மூலம் செயல்படுத்த வேண்டும்.
நாகப்பட்டினம்:
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் 200க்கும் மேற்பட்டோர் நாகை கோட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து புதிய பேருந்து நிலையம் வரை பேரணியாகச் சென்றனர்.
பேரணிக்கு அச்சங்கத்தின் மாவட்டத் தலைவர் ராணி தலைமை தாங்கினார்.
பேரணியை மாநிலச் செயலாளர் டானியல் ஜெயசிங் தொடங்கி வைத்தார்
பேரணியில் சிபிஎஸ்திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதி திட்டத்தைஅமுல்படுத்த வேண்டும், மாநகராட்சி, நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் நிரந்தர பணிகளை அழித்திடும் அரசாணை 152, 139 ஐ ரத்து செய்திட வேண்டும், தமிழக அரசின் காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு ஊழியர் மூலமாக செயல்படுத்த வேண்டும், இளைஞர்கள் வேலை வாய்ப்பை பறிக்கும் அரசாணை 115ஐ ரத்து செய்திட செய்து சாலை பணியாளர்களின் 41 மாத பணிநீக்க காலத்தை பணிக்கான பணி காலமாக முறைப்படுத்தி ஆணை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
- பனியன் நிறுவனத்துக்கு பேக்கிங் வேலை செய்து வருகிறார்.
- தூங்கிக் கொண்டிருந்த இளம் பெண்ணின் வாயை பொத்தி கற்பழிக்க முயற்சி செய்தார்.
திருப்பூர் :
திருப்பூர் தாராபுரம் ரோடு குறிஞ்சி நகர் காம்பவுண்டில் 5 க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த சதீஷ்குமார் (27) என்பவர் தனது நண்பர்களுடன் குடியிருந்து பனியன் நிறுவனத்துக்கு பேக்கிங் வேலை செய்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று அதிகாலை 2 மணி அளவில் வேலை முடிந்து வீட்டிற்கு வந்த சதீஷ்குமார் பக்கத்து வீட்டு கதவு திறந்து கிடப்பதை பார்த்தார். இந்த நிலையில் வீட்டுக்குள் புகுந்த சதீஷ்குமார் அங்கு தனியாக தூங்கிக் கொண்டிருந்த 21 வயது இளம் பெண்ணின் வாயை பொத்தி கற்பழிக்க முயற்சி செய்தார். இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பெண் சதீஷ்குமாரை கீழே தள்ளி சத்தம் போட்டார். சத்தம் கேட்டு பக்கத்து அறையில் தூங்கிக் கொண்டிருந்த பெற்றோர் மற்றும் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து சதீஷ்குமாரை பிடித்து தரும அடி கொடுத்தனர்.
பின்னர் இது குறித்து திருப்பூர் தெற்கு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சதீஷ்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பூரில் தனியாக தூங்கிக் கொண்டிருந்த இளம் பெண்ணின் வாயை பொத்தி கற்பழிக்க முயற்சி செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- பார் ஊழியரை தாக்கிய 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
- வீடு புகுந்து அவரை தாக்கினர்.
மதுரை
விருதுநகர் மாவட்டம், திருத்தங்கல் ஸ்டாண்டர்டு காலனியைச் சேர்ந்தவர் நாகராஜ் (வயது 53). இவர் மதுரை அய்யர்பங்களாவில் உள்ள தனியார் பாரில் பாதுகாவலராக உள்ளார்.
சம்பவத்தன்று இரவு 10 பேர் கும்பல் பாருக்கு வந்தது. அவர்கள் குடிபோதையில் தகராறு செய்தனர். இதை நாகராஜ் தட்டி கேட்டார். ஆத்திரமடைந்த கும்பல் அவரை தாக்கியது. அப்போது வாசலில் நிறுத்தப்பட்டிருந்த காரும் அடித்து நொறுக்கப்பட்டது.
இது குறித்த புகாரின்பேரில் தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோசாகுளம் திருக்குமார் (39), அய்யர் பங்களா எழில் நகர் பிரபு (43), பரசுராம்பட்டி பாண்டியன் (36), புதூர் மகாலட்சுமி நகர் ரமேஷ் (39), புதுக்கோட்டை மாவட்டம் வெள்ளை ஆண்டிப்பட்டி கார்த்திக் ராஜா (35), பரசுராம்பட்டி இஸ்மாயில் தெரு ராஜா (49) ஆகிேயாரை கைது செய்தனர்.
மதுரை ஒத்தப்பட்டி சிங்காரபுரத்தைச் சேர்ந்தவர் ராகுல்(26). இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் சிலருக்கும் முன் விரோதம் உள்ளது. ராகுல் வீட்டின் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டது.
இதுகுறித்து அவர் சந்தேக நபரின் தாயாரிடம் புகார் தெரிவித்தார். சம்பவத்தன்று இரவு ராகுல் வீட்டில் இருந்தார். அங்கு வந்த கும்பல் வீடு புகுந்து அவரை தாக்கினர். வீட்டின் வாசலில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளும் சூறையாடப்பட்டது.
இது குறித்த புகாரின்பேரில் எஸ்.எஸ்.காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்து வைத்திய நாதபுரம் சாதிக் பாட்சா மகன் அப்துல் மாலிக் (19), மகபூப்பாளையம் அன்சாரி நகர் பீர்முகமது மகன் முகமது ஆசிக் (19) ஆகியோரை கைது செய்தனர்.