என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "escape"

    • சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த நபர்களை பிடித்து விசாரணை செய்தனர்.
    • 2 மோட்டார் சைக்கிள், ஒரு மொபெட் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாருக்கு தியாகதுருகம் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி போலீஸ் இன்ஸ்பெக்டர் மூர்த்தி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது தியாகதுருகம் கால்நடை மருத்துவமனை அருகே சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த நபர்களை பிடித்து விசாரணை செய்தனர்.

    விசாரணையில் உளுந்தூர்பேட்டை அருகே எறையூர் பாளையம் கிராமத்தைச் சேர்ந்த டேவிட் குமார் (வயது 23), இவரது தம்பி ரட்சக நாதன் (19), எறையூர் கிராமத்தைச் சேர்ந்த ஆரோக்கியதாஸ் (19) என்பதும் தெரிய வந்தது. இவர்களிடமிருந்து ரூ. 20,000 மதிப்பிலான ஒரு கிலோ கஞ்சா மற்றும் 2 மோட்டார் சைக்கிள், ஒரு மொபெட் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அங்கிருந்து தப்பி ஓடிய எறையூர் பகுதியைச் சேர்ந்த ராஜ் பெர்ணான்டஸ், காட்டு எடையார் பகுதியைச் சேர்ந்த செல்வமணி ஆகியோரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

    • மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் லீலாவதி கழுத்தில் கிடந்த தங்க சங்கிலியை பறித்தனர்.
    • மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளில் வேகமாக தப்பி விட்டனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாதாக்கோட்டை நல்லான் நகரை சேர்ந்தவர் பக்கிரிசாமி. இவரது மனைவி லீலாவதி (வயது 63).

    இவர் தனது வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் 2 பேர் வந்தனர். திடீரென அவர்கள் லீலாவதி கழுத்தில் கிடந்த 11 Ñ பவுன் தங்க சங்கிலியை சட்டென்று பறித்தனர்.

    அதிர்ச்சியடைந்த லீலாவதி திருடன்.. திருடன்.. கத்தி கூச்சலிட்டார்.

    அதற்குள் மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்று தப்பி விட்டனர்.

    இது குறித்து தஞ்சை தமிழ் பல்கலைக்கழக போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    இந்த சம்பவம் தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • சுவர் ஏறி குதித்து ஓட்டம்
    • வழக்கு பதிந்து தேடி வரும் போலீசார்

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் கரடிகுளம் மேலத்தெருவை சேர்ந்தவர் நாராயணன் மகன் ஞானசுந்தர்(வயது 24). மனநலம் பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது. இவர் கடந்த மாதம் ஜெயங்கொண்டம் மகளிர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுமதி மூலம் சிகிச்சைக்காக விளாங்குடி வேலா கருணை இல்லத்தில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில் ஞானசுந்தர் நேற்று முன்தினம் வேலா கருணை இல்லத்தில் இருந்து சுவர் ஏறி குதித்து தப்பித்து சென்றுவிட்டாராம். இதுகுறித்து விடுதி காப்பாளர் கயர்லாபாத் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • சற்று முன்னதாகவே லாரியை நிறுத்தி விட்டு டிரைவர் இறங்கி தப்பி ஓடி விட்டார்.
    • எங்கிருந்து அரிசி மூட்டைகளை கடத்தி வந்தார் என விசாரணை.

    மன்னார்குடி:

    திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி மேல ராஜ வீதியில் நேற்று இரவு துணை போலீஸ் சூப்பிரண்டு அஸ்வத் ஆண்டோ ஆரோக்கியராஜ் தலைமையில் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் கண்ணன், சப்-இன்ஸ்பெக்டர் தேவதாஸ் முருகன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வீரையன் மற்றும் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

    அப்போது வேகமாக வந்து கொண்டிருந்த ஒரு மினிலாரியை மறிக்க முயன்றனர். ஆனால் சற்று முன்னதாகவே லாரியை நிறுத்தி விட்டு டிரைவர் இறங்கி தப்பி ஓடி விட்டார்.

    இதையடுத்து மினி லாரியை சோதனை யிட்டனர். அதில் 2Ñ டன் ரேஷன் அரிசி மூட்டைகள் கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

    தொடர்ந்து லாரி மற்றும் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய டிரைவர் யார் ? எங்கிருந்து அரிசி மூட்டைகளை கடத்தி வந்தார் என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி அவரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • 2 பேரை மீட்டு போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • எதற்காக காப்பகத்தில் இருந்து ஓட்டம் பிடித்தனர்.

    கோவை,

    கோவை கணபதி லட்சுமி புரம் பகுதியை சேர்ந்தவர் சிவானந்தம். இவரது மனைவி அம்பிகா (வயது 42).

    இவர் கோவை ரத்தினபுரி போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது:-

    நான் லட்சுமி புரம் பகுதியில் உள்ள

    காப்பகத்தில் காவலாளி யாக வேலை செய்து வருகிறேன். சம்பவத்தன்று காப்பகத்தில் இரவு பணியில் ஈடுபட்டு இருந்தேன்.

    அப்போது காப்பகத்தில் இருந்த மதுரையை சேர்ந்த 19 வயது பெண், காரமடையை சேர்ந்த 22 வயது பெண், தூத்துக்குடியை சேர்ந்த 37 வயது பெண் மற்றும் 3 வயது குழந்தையுடன் இருந்து வரும் திருப்பூரை சேர்ந்த 26 வயது பெண் ஆகியோர் சேர்ந்து நான் தூங்கி கொண்டு இருந்த போது எனது தலையணையின் அடியில் இருந்த காப்பகத்தின் சாவியை எடுத்து மாயமாகி விட்டனர்.

    அவர்களை பல இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. எனவே அவர்களை மீட்டு தரவேண்டும். இவ்வாறு அந்த புகார் மனுவில் கூறப்பட்டு இருந்தது.

    இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான 4 பெண்களையும் குழந்தையும் தேடி வந்தனர். அப்போது தூத்துக்குடியை சேர்ந்த 37 வயது பெண் உள்பட 2 பெண்கள் அவர்களது வீட்டு சென்று விட்டதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. மற்ற 2 பெண்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் 4 இளம் பெண்களும் எதற்காக காப்பகத்தில் இருந்து ஓட்டம் பிடித்தனர். அவர்களுக்கு வேறு ஏதாவது பிரச்சினையா என 2 பேரை மீட்டு போலீசார் பல்வேறு கோணங்களில் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 3 குழந்தைகளுடன் கணவர் தவிப்பு
    • போலீசில் புகார்

    திருச்சி,

    திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள செங்க–னம் பகுதியைச் சேர்ந்த–வர் கந் தன் மனைவி மங்கை–யர்க்க–ரசி (வயது 36) (இருவ–ரின் பெயர்களும் மாற்றப்பட் டுள்ளன). இந்த தம்பதிய–ருக்கு 2 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர்.இந்த நிலையில் மங்கை–யர்க்கரசிக்கு தைராய்டு பிரச்சனை ஏற்பட்டது. இதற்கு அவர் துறையூரில் உள்ள ஒரு தனியார் மருத் துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். வழக்கம் போல் கடந்த 24-ந்தேதி துறையூர் மருத்துவமனைக்கு செல்வதாக புறப்பட்டு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. கணவர் கந்தன் மனைவியை பல் வேறு இடங்களில் தேடிப் பார்த்தார்.

    இருந்தபோதிலும் அவர் குறித்த எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதற்கி–டையே கடந்த மூன்று மாதங் களுக்கு முன்பு மங்கை–யர்க்கரசி இதேபோன்று திடீரென மாயமாகி உள் ளார். பின்னர் 3 நாட்கள் கழித்து வீடு திரும்பினார். அதேபோன்று வீட்டிற்கு வந்து விடுவார் என கந்தன் எண்ணியிருந்தார்.ஆனால் தற்போது 15 நாட்களுக்கு மேல் ஆகியும் மனைவி வீடு திரும்பாததால் ஜம்புநாதபுரம் போலீசில் கந்தன் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசா–ரணை நடத்தினர். இதில் மாயமான மங்கையர்க்கரசி அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அரு–கேயுள்ள மீன்சுருட்டி பகுதியைச் சேர்ந்த வீரா (21) என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டு இருப்பது தெரிய–வந்தது.இதில் மீண்டும் அந்த வாலிபரை அழைத்துக் கொண்டு அவர் ஓட்டம் பிடித்து இருக்கலாம் சந்தே–கிக்கப்படுகிறது. மேலும் இருவரின் செல்போன்க–ளும் சுவிட்ச் ஆப் செய் யப்பட்டுள்ளதால் போலீ–சாருக்கு சந்தேகம் வலுத் துள்ளது. மூன்று குழந்தை–களின் தாயான 36 வயது பெண்மணி 21 வயது வாலி–பருடன் ஓட்டம் பிடித் துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்ப–டுத்தியுள்ளது.

    • தேவனோடை கொள்கை ஆற்றில் இருந்து மணல் ஏற்றி வந்த மாட்டு வண்டியை வழிமறித்து சோதனை.
    • மாட்டு வண்டியை பறிமுதல் செய்து தப்பி ஓடியவரை தேடி வருகின்றனர்.

    கபிஸ்தலம்:

    கபிஸ்தலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அனிதா கிரேசி, சப்- இன்ஸ்பெக்டர் முருகேசன், பயிற்சி சப் -இன்ஸ்பெக்டர் நஸ்ரின் மற்றும் போலீசார் கபிஸ்தலம் காவல் சரக பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்பொழுது கபிஸ்தலம் அருகே உள்ள தேவனோடை கொள்கை ஆற்றில் இருந்து மணல் ஏற்றி வந்த மாட்டு வண்டியை வழிமறித்து சோதனை செய்ததில் மாட்டு வண்டி ஓட்டி வந்த தேவனோடை நடுத்தெரு ராஜன் (வயது 45) என்பவர் தப்பி ஓடிவிட்டார்.

    அதில் திருட்டுத்தனமாக மணல் கடத்தி வந்தது தெரியவந்தது.

    இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி மாட்டு வண்டியை பறிமுதல் செய்து தப்பி ஓடிய ஜோதி ராஜனை தேடி வருகின்றனர்.

    • கால் முறிவால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
    • பார்த்தசாரதியுடன் சேர்த்து கோகுல் கொலை வழக்கில் இதுவரை 17 பேர் கைதாகி உள்ளனர்.

    கோவை,

    கோவை கோர்ட்டு அருகே கடந்த சில தினங்களுக்கு முன்பு கோகுல் என்ற ரவுடி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் கோவையில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியது.

    2 ரவுடிகளிடையே ஏற்பட்ட விரோதம் காரணமாக கோகுல் கொல்லப்பட்டது விசாரணையில் தெரியவந்தது. இந்த வழக்கில் தனிப்படை போலீசார் இதுவரை 16 பேரை கைது செய்திருந்தனர்.

    இந்த வழக்கில் தூத்துக்குடியைச் சேர்ந்த பார்த்தசாரதி (வயது 26) என்ற நபருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதனால் அவரை போலீசார் தேடி வந்தனர். ஏற்கனவே கோத்தகிரியில் சில குற்றவாளிகளை போலீசார் தேடிச் சென்றபோது போலீசாரிடம் இருந்து பார்த்தசாரதி தப்பிச் சென்றார். இதனால் அவரை போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

    இந்தநிலையில் பார்த்தசாரதி இன்று ரத்தினபுரி பகுதியில் பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே போலீசார் அவர் தங்கியிருந்த இடத்துக்கு சென்று சுற்றி வளைத்தனர். அப்போது போலீசாரிடம் இருந்து பார்த்தசாரதி தப்பி ஓடினார். ரத்தினபுரி பகுதியில் உள்ள கண்ணப்பநகர் பாலம் தப்பிச் சென்றார். திடீரென பாலத்தில் இருந்து கீழே குதித்து தப்பிக்க முயன்றார். ஆனால் அவரது காலில் முறிவு ஏற்பட்டு பலத்த காயம் அடைந்தார். அதனால் அவரால் அங்கிருந்து தப்பி ஓட முடியவில்லை. இதையடுத்து போலீசார் பார்த்தசாரதியை கைது செய்தனர்.

    காலில் முறிவு ஏற்பட்டதால் உடனடியாக அவர் கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு காலில் கட்டு போடப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    பார்த்தசாரதியுடன் சேர்த்து கோகுல் கொலை வழக்கில் இதுவரை 17 பேர் கைதாகி உள்ளனர்.

    • கணவரை தவிக்க விட்டு இன்ஸ்டாகிராம் நண்பருடன் ஓட்டம்
    • புது வாழ்க்கை அமைத்து விட்டதாக செல்போனில் தகவல்

    திருச்சி,

    திருச்சி துறையூர் கோம்பை புதூர் பகுதியைச் சேர்ந்தவர் புஷ்பராஜ் (வயது 33 ) மினி பஸ் டிரைவர். இவருக்கும் நர்சிங் படித்து வந்த நித்யா (23) என்ற மாணவிக்கும் காதல் மலர்ந்தது. இதை யடுத்து கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு புஷ்பராஜ் காதலியை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கவில்லை. இந்த நிலையில் நித்யா அந்தப் பகுதியில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் உதவியாளராக பணிக்கு சேர்ந்தார்.அதன் பின்னர் அவரது நடத்தையில் மாற்றம் ஏற்பட்டது. 24 மணி நேரமும் செல்போனும் கையுமாக இருந்துள்ளார். இன்றைய காலகட்டத்தில் செல்போன் தவிர்க்க முடியாத ஒன்று என்பதால் மனைவி மீது அவருக்கு சந்தேகம் வரவில்லை. இதற்கிடையே இன்ஸ்டாகிராம் மூலம் நவீன் என்பவர் நித்யாவுக்கு அறிமுகம் ஆகியுள்ளார். பின்னர் கணவருக்கு தெரியாமல் நீண்ட நேரம் அவருடன் அரட்டை அடித்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் ஆசிரியை ஒருவரை பார்க்கச் செல்வதாக கூறிச் சென்ற நித்யா வீடு திரும்பவில்லை. இதை யடுத்து புஷ்பராஜ் காதல் மனைவியை தேடி வந்தார். இந்த நிலையில் மனைவியின் செல்போனிலிருந்து நள்ளிரவு அழைப்பு வந்தது.உடனே புஷ்பராஜ் செல்போனை எடுத்துப் பேசினார். எதிர் முனையில் பேசிய நித்யா,புது வாழ்க்கை ஒன்றை அமைத்து விட்டேன். ஆகவே என்னை தேட வேண்டாம் என கூறி இணைப்பை துண்டித்தார்.இதைக் கேட்டு புஷ்பராஜ் கடும் அதிர்ச்சிக்கு உள்ளானார்.பின்னர் துறையூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதில் மாயமான தனது மனைவியை தேடி கண்டுபிடித்து தருமாறு கூறியுள்ளார். போலீசாரின் விசாரணையில்,மாயமான நித்யா கணவரை தவிக்க விட்டு இன்ஸ்டாகிராம் நண்பருடன் ஓட்டம் பிடித்தது தெரியவந்தது.அந்த இன்ஸ்டாகிராம் நம்பர் எந்த ஊரை சேர்ந்தவர் என்பது உறுதியாக தெரியவில்லை. மதுரையைச் சேர்ந்தவர் என பழகி வந்துள்ளார்.

    • 17 வயது இளம் சிறாரை மதுரையில் இருந்து செங்கல்பட்டிற்க்கு அழைத்து சென்றனர்.
    • இளம் சிறார் சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசாரை தள்ளிவிட்டு அங்கிருந்து தப்பிஓட முயற்சித்தார்.

    விழுப்புரம்:

    திருப்பூர் மாவட்டம் காங்கேயன் பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் 17 வயதுடைய இளம் சிறார். இவர் மீது பழனி கோவிலுக்கு வந்த பக்தர்களிடம் திருட்டு உள்பட 30-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது. அவரை ேபாலீசார் கைது செய்தனர்.பின்னர் திண்டுக்கல் கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள். நீதிபதி 18 வயது பூர்த்தியாகும் வரை செங்கல்பட்டு இளம் சிறார் மையத்தில் வைத்து பாதுகாக்குமாறு உத்தரவிட்டார். இதனால் மதுரை இளம் சிறார் மையத்திலிருந்து செங்கல்பட்டு இளம் சிறார் மையத்திற்கு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சிவகுமார் போலீசார் கார்த்திக் ஆகியோர் நேற்று இரவு அரசு பஸ்சில் 17 வயது இளம் சிறாரை மதுரையில் இருந்து செங்கல்பட்டிற்க்கு அழைத்து சென்றனர்.

    விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே தனியார் ஓட்டலில் அரசு பஸ் நின்றது. அப்போது பஸ்சில் இருந்து இருந்து சப்-இன்ஸ்பெக்டர் சிவகுமார் மற்றும் போலீஸ்காரர் கார்த்திக் 17 வயதுடைய இளம் சிறாருடன் சாப்பிட சென்றனர். பின்னர் சாப்பிட்டுவிட்டு ஓட்டலில் இருந்து வெளியே வந்த போது 17 வயதுடைய இளம் சிறார் சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசாரை தள்ளிவிட்டு அங்கிருந்து தப்பிஓட முயற்சித்தார். இதில் சுதாரித்துக் கொண்ட போலீசார் இளம் சிறாரை பிடிக்க முற்பட்டனர். ஆனால் இளம் சிறார் அவர்களிடமிருந்து தப்பி ஓடிவிட்டார். இரவு நேரம் என்பதால் இளம் சிறார் எங்கு சென்றார் என்று தெரியவில்லை. இது குறித்து சப்- இன்ஸ்பெக்டர் சிவக்குமார் விக்கிரவாண்டி போலீசில் கொடுத்த புகாரின் பேரில் விக்கிரவாண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பவ இடத்திற்கு சென்று தனியார் ஓட்டல் இருந்த இடத்தை சுற்றியுள்ள பகுதிகளில் தப்பி ஓடிய இளம் சிறாரை வலைவீசி தேடி வருகின்றனர்.

    • மர்ம நபர்கள் எடுத்த துணி களுக்கு பில் வழங்கப்பட்டு பணம் செலுத்த ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
    • பணம் செலுத்தாமல் கடை ஊழியர்களை கத்தியை காட்டி மிரட்டி தப்பியுள்ளனர்.

    புதுச்சேரி:

    காரைக்கால் மாவட்டத் தில் பிரதான சாலையான பாரதியார் வீதியில் அன்சாரி என்பவர் துணிக் கடை நடத்தி வருகிறார். இந்த கடையில் நேற்று இரவு காரில் வந்த 5 பேர், அந்த கடையில் விலை உயர்ந்த துணிகள் எடுத்த னர். தொடர்ந்து மர்ம நபர்கள் எடுத்த துணி களுக்கு பில் வழங்கப்பட்டு பணம் செலுத்த ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். அப்போது அவர்கள், பணம் செலுத்தாமல் கடை ஊழியர்களை கத்தியை காட்டி மிரட்டி, அவர்களை தாக்கி விட்டு துணிகளை எடுத்துக்கொண்டு காரில் தப்பி ஓடி விட்டனர்.

    இதுகுறித்து கடை ஊழி யர்கள் நகர போலீஸ் நிலை யத்தில் புகார் அளித்தனர். அதன் பெயரில் போலீஸ் சூப்பிரண்ட் சுப்ரமணியம் தலைமையிலான போலீசார் அந்த கடையில் பணிபுரிந்த ஊழியர்களிடம் விசாரணை செய்தனர். மேலும் கடை யில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. காட்சிகளை கைப்பற்றி, போலீசார் வழக்கு பதிவு செய்து 5 மர்ம நபர்களை தேடி வரு கின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • கடந்த சில நாட்களுக்கு முன்பு பெங்களூரில் துப்பாக்கி முனையில் ஒரு கொள்ளை சம்பவம் நடந்து உள்ளது.
    • திருப்போரூரில் வாலிபர் துப்பாக்கியுடன் சிக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    திருப்போருர்:

    திருப்போரூர் குளக்கரை அருகே பேக்கரி கடை உள்ளது. இங்கு விழுப்புரம் மாவட்டம் டி.குன்னத்துரை சேர்ந்த விக்னேஷ் (வயது 25) என்பவர் தங்கி வேலை பார்த்து வந்தார்.

    நேற்று இரவு பெங்களூரில் இருந்து தனிப்படை போலீசார் பேக்கரிக்கு வந்து அங்கிருந்த ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர். பின்னர் ஊழியர் விக்னேஷ் தங்கி இருந்த வீட்டிற்கு சென்று சோதனை நடத்தினர்.

    அப்போது அங்கு ஒரு கைத்துப்பாக்கி மற்றும் தங்க வளையல்கள் இருந்தன. இதைத்தொடர்ந்து விக்னேசை போலீசார் கைது செய்து துப்பாக்கி மற்றும் தங்க நகைகளை பறிமுதல் செய்தனர்.

    விக்னேஷ் கைது செய்யப்பட்டது எதற்கு என்று தெரியாமல் அப்பகுதி மக்கள் குழப்பமும் அதிர்ச்சியும் அடைந்தனர்.

    இதற்கிடையே கைது செய்யப்பட்ட விக்னேசை பெங்களூர் போலீசார் காரில் அழைத்து சென்றனர். பின்னர் அவர் கைது செய்யப்பட்டது தொடர்பாக தகவல் தெரிவித்து திருப்போரூர் போலீஸ் நிலையத்துக்கு வந்தனர்.

    அப்போது திடீரென விக்னேஷ் போலீசாரை தாக்கி தள்ளிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இரவு நேரம் என்பதால் அவரை போலீசாரால் விரட்டி பிடிக்க முடியவில்லை. இதனால் கையில் சிக்கிய விக்னேசை தவற விட்டுவிட்டோமே என்ற ஏமாற்றத்துடன் பெங்களூர் போலீசார் திரும்பி சென்றனர்.

    துப்பாக்கியுடன் சுற்றிய விக்னேஷ் குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பெங்களூரில் துப்பாக்கி முனையில் ஒரு கொள்ளை சம்பவம் நடந்து உள்ளது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளி ஒருவரை போலீசார் பிடித்தனர்.

    அவரிடம் போலீசார் விசாரித்த போது 'கொள்ளைக்கு பயன்படுத்திய துப்பாக்கி மற்றும் நகைகளை திருப்போரூரில் பேக்கரி கடையில் வேலைபார்த்து வரும் விக்னேசிடம் கொடுத்து வைத்திருப்பதாக தெரிவித்து உள்ளனர்.

    இதன் அடிப்படையில் தான் பெங்களூர் போலீசார் விக்னேசை துப்பாக்கி உடன் பிடித்து இருந்தனர். ஆனால் அவர் பின்னர் தப்பி ஓடிவிட்டார். அவரை கைது செய்ய போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருப்போரூரில் வாலிபர் துப்பாக்கியுடன் சிக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×