என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "faint"
- சமந்தா 'மயோசிட்டிஸ்' என்ற அரியவகை நோயால் பாதிக்கப்பட்டார்.
- சமந்தா அடிக்கடி சமூக வலைதளங்கள் வாயிலாக ரசிகர்களோடு உரையாடி வருகிறார்.
பிரபல இயக்குனர் கவுதம்மேனன் இயக்கத்தில் 'விண்ணைத்தாண்டி வருவாயா' படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை சமந்தா.இப்படத்தின் தெலுங்கு மொழிபெயர்ப்பில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக நடித்து தெலுங்கு ஹீரோயின் ஆகவும் மாறினார்.
அதன்பின்னர் விஜய், சூர்யா போன்ற முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடியாக நடித்தார்விஜயுடன் சமந்தா ஜோடியாக நடித்த 'கத்தி', 'மெர்சல்' போன்ற படங்கள் தொடர் வெற்றி அடைந்தது.
புஷ்பா படத்திற்கு பிறகு, சமந்தா 'மயோசிட்டிஸ்' என்ற அரியவகை நோயால் பாதிக்கப்பட்டார். தற்போது அதில் இருந்து மீண்ட அவர் மீண்டும் நடிக்க தொடங்கினார்.
சினிமாவில் இருந்து விலகி அவ்வபோது சிகிச்சை பெற்று வரும் சமந்தா அடிக்கடி சமூக வலைதளங்கள் வாயிலாக ரசிகர்களோடு உரையாடி வருகிறார்.
இந்த நிலையில், உடல் ரீதியாக தான் எதிர்கொண்ட சவால்கள் பற்றி அவர் கூறியதாவது:-
நான் 'குஷி' படத்தை முடித்து விட்டு 'சிட்டாடல்' தொடர் படப்பிடிப்பில் பங்கேற்றேன். இப்படத்தில் மிகவும் உடல் ரீதியானதாக இருக்க வேண்டிய கட்டாயம் இருந்தது.
படத்தில் நிறைய ஆக்ஷன் காட்சிகள் இருந்தது. அதனால் மிகவும் கடினமாக இருந்தது. ஒரு அதிரடி காட்சி யில் மூளை அதிர்ச்சி ஏற்பட்டு மயக்கம் அடைந்தேன்.
இவ்வாறு பதிவிட்டுள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- சேலம் சீலநாயக்கன்பட்டி பைபாஸ் மேம்பாலம் அருகே, கடந்த சில தினங்க ளுக்கு முன்பு சுமார் 65 வயது மதிக்கத்தக்க முதியவர் மயங்கிய நிலையில் விழுந்து கிடந்தார்.
- அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அன்னதானப்பட்டி:
சேலம் சீலநாயக்கன்பட்டி பைபாஸ் மேம்பாலம் அருகே, கடந்த சில தினங்க ளுக்கு முன்பு சுமார் 65 வயது மதிக்கத்தக்க முதியவர் மயங்கிய நிலையில் விழுந்து கிடந்தார். இதனைப் பார்த்த அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் அன்னதானப்பட்டி போலீ சாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சைப் பலனின்றி நேற்று அவர் உயிரிழந்தார். அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது குறித்த விவரங்கள் ஏதும் தெரியவில்லை. இது குறித்து அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தரம் உயர்ந்த பின்பு மிக பிரமாண்டமாக மருத்துவமனையும், மருத்துவ வசதியும் வளர்ந்துள்ளது
- சிகிச்சையை முடித்துவிட்டு திரும்பும்போதும் கடும் அவதிக்கு ஆளாகின்றனர்.
திருப்பூர்:
அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தாராபுரம் சாலையில் உள்ளது. மருத்துவக் கல்லுரி மருத்துவமனையாக தரம் உயர்ந்த பின்பு மிக பிரமாண்டமாக மருத்துவமனையும், மருத்துவ வசதியும் வளர்ந்துள்ளது. இதனால் மாவட்டம் முழுவதிலும் இருந்து 2000க்கும் மேற்பட்டோர் தினமும் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். ஆனால் அதே சமயம் மருத்துவமனைக்கு வெளியே உள்ள பேருந்து நிறுத்தம் நிழற்குடை இல்லாததால் பொதுமக்கள் வெயிலிலும், மழையிலும் காய்ந்தும் நனைந்தும் வருகின்றனர்.
இது தொடர்பாக அப்பகுதியை சேர்ந்தவர்கள் கூறும்போது, நாள்தோறும் திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு, பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். வெள்ளியங்காடு, சந்திராபுரம், பழவஞ்சிபாளையம், வீரபாண்டி என பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்களும் தாராபுரம் சாலைக்கு வந்து செல்ல அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பேருந்து நிறுத்தம் முக்கிய நிறுத்தமாக உள்ளது.
இந்த நிறுத்தத்துக்கு பேருந்துகளை நாடி வரும் பொதுமக்களுக்கு வெயில், மழை என்றாலும் அனைத்தையும் சகித்துக்கொள்ளும் துர்பாக்கிய நிலை தான் உள்ளது. மருத்துவக்கல்லூரிக்கு வருபவர்களில் பெரும்பாலனோர் முதியவர்கள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்காக சிகிச்சைக்கு வருபவர்கள் உட்பட உடல்நலம் குன்றியிருப்பவர்கள் இங்கு வருகிறார்கள். ஆனால் அவர்கள் சிகிச்சைக்கு வரும்போதும், சிகிச்சையை முடித்துவிட்டு திரும்பும்போதும் கடும் அவதிக்கு ஆளாகின்றனர். அதிலும் சமீபநாட்களாக கடந்த மே மாதத்தை போலவே வெயிலின் தாக்கம் அதிகரித்திருப்பதால், பெரும் அவதியடைய வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது என்றனர்.
சந்திராபுரத்தை சேர்ந்த முத்துசாமி கூறும்போது, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையான பிறகு, பல்வேறு தேவைகளுக்காக பேருந்துகளில் அரசு மருத்துவமனையை பலரும் நாடி வந்து செல்கின்றனர். அதேபோல் நோயாளிகள் பல்லாயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். அவர்கள் வந்து செல்வதற்கான உயரிய தரத்தில் பேருந்து நிறுத்தம் அமைத்து தர வேண்டும் என்பது எங்களின் பல ஆண்டு கால எதிர்பார்ப்பு. ஆனால் நெடுஞ்சாலைத்துறையும், மாநகராட்சியும் கண்டுகொள்ளாமல் இருப்பதால் ஆண்டுக்கணக்கில் காத்திருக்க வேண்டிய நிலை பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் வெயிலில் வாடியும், மழையில் வதங்கியும் வருகின்றனர். வயதான பெண்கள் வெயிலால் சோர்ந்து மயக்க நிலைக்கு செல்லும் நிலை உள்ளது என்றனர்.
திருப்பூர் மாநகராட்சி 56-வது வார்டு கவுன்சிலர் காடேஸ்வரா தங்கராஜ் கூறும்போது, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை எதிரில் பேருந்து நிறுத்தம் அமைப்பது தொடர்பாக தொடர்ந்து மாநகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத்துறையிடம் கோரிக்கை வைத்து வருகிறோம். ஆனால் இதுவரை நிதி ஒதுக்கப்படாததால் பணிகள் தொடங்கப்படவில்லை.
அதேபோல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை எதிரில் சாக்கடை நீர் செல்வதற்கும், மழைநீர் வடிகால் உட்பட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம் என்றார்.
- வயலில் பருத்தி எடுக்கும் பணியில் அந்த பெண் ஈடுபட்டுள்ளார்.
- பாம்பு கடித்து அவர் வயலில் மயங்கி கிடந்துள்ளார்.
நாகப்பட்டினம்:
திருமருகல் ஒன்றியம் எரவாஞ்சேரி ஊராட்சி மத்தியக்குடி நடுத்தெரு பகுதியை சேர்ந்தவர் ஜெயபால்.
இவரது மனைவி ஜெயா (வயது 42).விவசாய கூலித் தொழிலாளி. இவர் அதே பகுதியில் உள்ள வயலில் பருத்தி எடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது அவரை பாம்பு கடித்து அவர் வயலில் மயங்கி கிடந்துள்ளார்.
இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் ஜெயாவை மீட்டு காரைக்கால் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்கு திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
ஜெயா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து திட்டச்சேரி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- பைபர் படகில், மூன்று மீனவர்களுடன் சம்பா நண்டு பிடிக்க சென்றுள்ளார்.
- திடீரென மயங்கி நிலையில் கடலில் மூழ்கி கிடந்துள்ளார் கரைக்கு சென்ற போது இறந்து விட்டது தெரியவந்தது.
பேராவூரணி:
தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே வல்லவன்பட்டினம் பகுதியை சேர்ந்தவர் சேகர் (வயது 54).
இவர் நேற்று (புதன்கிழமை) காலை பைபர் படகில், மூன்று மீனவர்களுடன் சம்பா நண்டு பிடிக்க சென்றுள்ளார்.
சுமார் 2 நாட்டிக்கல் கடல் மைல் தூரத்தில், சேகர் கடலில் இறங்கி சம்பா நண்டு பிடிப்பதற்காக வலையை இறக்கிக் கொண்டு இருந்துள்ளார். சேகருடன் வந்த மீனவர்கள் வேறு பக்கம் வலையை கடலில் இறக்கிக் கொண்டு இருந்தனர்.
அவர்கள் படகுக்கு திரும்பிய நிலையில், சேகர் வலையை இறக்கிய பகுதியில் பார்த்த போது, மயங்கி நிலையில், கடலில் மூழ்கி கிடந்துள்ளார்.
உடனடியாக சக மீனவர்கள் அவரை மீட்டு, கரைக்கு கொண்டு வந்து பார்த்த போது அவர் இறந்து விட்டது தெரிய வந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த சேதுபாவாசத்திரம் கடலோர காவல்துறை ஆய்வாளர் மஞ்சுளா மற்றும் உதவி ஆய்வாளர் சுப்பிரமணியன் ஆகியோர் சேகர் உடலை கைப்பற்றி, பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சேலம் பழைய பஸ் நிலையத்தில் சுமார் 72 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் உடல் நிலை சரியில்லாமல் மயங்கி கிடந்தார்.
- 108 ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
சேலம்:
சேலம் பழைய பஸ் நிலையத்தில் சுமார் 72 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் உடல் நிலை சரியில்லாமல் மயங்கி கிடந்தார். இது பற்றி தகவல் அறிந்த சேலம் டவுன் போலீசார், அங்கு விரைந்து சென்று மயங்கி கிடந்த மூதாட்டியை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சையில் இருந்த மூதாட்டி கடந்த 27-ந்தேதி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். விசாரணையில், அவரது பெயர் ஜெயமணி என்பது தெரியவந்தது. ஆனால் ஊர் முகவரி, அவரது உறவினர்கள் பற்றிய விபரம் எதுவும் தெரியவில்லை.
இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, இறந்த மூதாட்டி எந்த ஊரை சேர்ந்தவர்? விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இவரை பற்றி தகவல் தெரிந்தால், உடனடியாக போலீஸ் நிலையத்தில் தெரிவிக்கும்படி பொதுமக்களுக்கு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
- சத்திபாளை யம் செல்லும் சாலையில், சுமார் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார்.
- அப்போது வெயிலின் தாக்கத்தை தாக்குப் பிடிக்க முடியாமல் மயங்கி விழுந்தார்.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா சோழசிரா மணியில் இருந்து சத்திபாளை யம் செல்லும் சாலையில், சுமார் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது வெயிலின் தாக்கத்தை தாக்குப் பிடிக்க முடியாமல் மயங்கி விழுந்தார்.
அவரை அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி முதியவர் உயிரிழந்தார்.
இது குறித்து ஜேடர்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இறந்துபோன முதியவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர், எங்கிருந்து இந்த பகுதிக்கு வந்தார் என்பது தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்