search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Fainted"

    • வீட்டில் மாணவி இன்று காலை 7.45 பள்ளிக்குச் செல்வதற்காக தயாராக இருந்தார்.
    • போலீசாரின் விசாரணையில் அந்த மாணவி வீட்டில் கடிதம் ஒன்று எழுதி வைத்திருந்தார். அதை போலீசார் கைப்பற்றி உள்ளனர்.

    சேலம்:

    சேலம் டவுன் கல்லாங்குத்து பகுதியை சேர்ந்த மாணவி தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    வீட்டில் மாணவி இன்று காலை 7.45 பள்ளிக்குச் செல்வதற்காக தயாராக இருந்தார். அப்போது அவருடைய தாய் வெளியே சென்ற சிறிது நேரத்தில் பின்னர் வீடு திரும்பியபோது பையை வீட்டில் வைத்துவிட்டு மாணவி மாயமானது தெரியவந்தது.

    இதனால் பதற்றம் அடைந்த பெற்றோர் இது குறித்து உடனடியாக கிச்சிப்பாளையம் போலீசில் புகார் செய்தனர்.போலீசாரின் விசாரணையில் அந்த மாணவி வீட்டில் கடிதம் ஒன்று எழுதி வைத்திருந்தார். அதை போலீசார் கைப்பற்றி உள்ளனர்.

    சமீபத்தில் பள்ளியில் நடந்த தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்துள்ளதாக வீட்டில் மாணவி கூறியுள்ளார். ஆனால் அவர் குறைந்த மதிப்பெண் எடுத்துள்ளார். இன்று பள்ளியில் ரேங்க் கார்டு வழங்க உள்ளதால் எங்கே தன்னைப் பற்றிய உண்மை தெரிந்து விடுமோ என்ற அச்சத்தில் வீட்டை விட்டு வெளியேறியதாக மாணவி அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இதனை தொடர்ந்து போலீசார் அந்த மாணவியை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    • பிரீத்தி சுகாதார நிலையத்திற்கு அருகாமையில் உள்ள மாடி வீட்டில் வாடகைக்கு குடியிருந்து வந்தார்.
    • திடீரென மயக்கம் ஏற்பட்டு மாடிப்படியில் அமர்ந்து கொண்டார். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து அவரை மீட்டு திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    பரமத்திவேலூர்:

    திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே எரியோடு பாலசுப்பிரமணியன் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகன். இவரது மகள் பிரீத்தி (27).

    இவர் நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கந்தம்பா ளையத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடந்த 2 1/2 வருடங்களாக நர்சாக பணியாற்றி வந்தார். இவர் சுகாதார நிலையத்திற்கு அருகாமையில் உள்ள மாடி வீட்டில் வாடகைக்கு குடியிருந்து வந்தார்.

    இந்நிலையில் நேற்று அதிகாலை 5 மணியளவில் பால்காரர் அழைத்தபோது பால் வாங்குவதற்காக பிரீத்தி மாடியில் இருந்து இறங்கி வந்துள்ளார். அப்போது அவருக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டு மாடிப்படியில் அமர்ந்து கொண்டார். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து அவரை மீட்டு திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் பிரீத்தி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து பிரீத்தியின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவரது குடும்பத்தினர் பிரீத்தியின் உடலை பார்த்து கதறி அழுதனர். இதுகு றித்து பிரீத்தியின் சகோதரர் ராதா (51) நல்லூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இவரது மனைவியும் மற்றொரு கம்பெனியில் வேலை செய்து வருகிறார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்கள்.

    புதுச்சேரி:

    கிருமாம்பாக்கம் அருகே வள்ளுவர் மேடு முருகன் கோவில் தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது38). இவரது மனைவி நிர்மலா. இவர்கள் இருவரும் கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.

    மணிகண்டன் அங்குள்ள தனியார் கம்பெனியில் ஊழியராக வேலைபார்த்து வந்தார். இவரது மனைவியும் மற்றொரு கம்பெனியில் வேலை செய்து வருகிறார்.

    மணிகண்டனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்தது. நேற்று மணிகண்டன் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்தார். நிர்மலா வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டார். இந்த நிலையில் நேற்று மதியம் அப்பகுதியை சேர்ந்த ஜோதி என்பவர் நிர்மலாவுக்கு போன் செய்து உனது கணவர் வீட்டின் அருகே மயங்கி கிடப்பதாக தகவல் தெரிவித்தார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த நிர்மலா உடனடியாக வீட்டுக்கு வந்தார்.

    பின்னர் மயங்கி கிடந்த கணவரை மீட்டு கிருமாம் பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத் துக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே மணிகண்டன் இறந்து விட்டதாக தெரி வித்தனர். இதுகுறித்து அவரது மனைவி நிர்மலா கொடுத்த புகாரின் பேரில் கிருமாம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்கள்.

    • பஸ் நிறுத்தம் அருகே மயங்கி விழுந்தவர் பரிதாபமாக இறந்தார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    மதுரை

    மதுரை பாண்டியன் நகர் முல்லை நகரை சேர்ந்தவர் ஜாபர் சாதிக் (49). இவர் தெற்குவாசல் பஸ் நிறுத்தம் அருகே காத்திருந்தபோது திடீரென்று மயங்கி விழுந்தார்.

    அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து உறவினர் சாகுல் ஹமீது கொடுத்த புகாரின் பேரில் தெற்கு வாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    மாட்டுத்தாவணி பஸ் நிலையம் எதிரே உள்ள ஐகோர்ட்டு அதிகாரிகள் குடியிருப்பில் வசித்தவர் பாரதிராஜா (41). இவர் நீண்ட நாட்களாக நோய்வாய்ப்பட்டிருந்தார். இதனால் மன அழுத்தத்தில் இருந்தார்.

    இந்த நிலையில் வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.

    அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து மனைவி ஹேம சிவரஞ்சனி கொடுத்த புகாரின் பேரில் புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    • இவருக்கு கடந்த3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.
    • ஐஸ்வர்யா என்ற மனைவி உள்ளார்.

    புதுச்சேரி:-

    புதுவை தேங்காய்திட்டு திலகர் நகர் 3-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் முத்துகுமரன்(வயது26). கட்டிட தொழிலாளி. இவருக்கு கடந்த3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஐஸ்வர்யா என்ற மனைவி உள்ளார். முத்து குமரனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்தது. இதனால் அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. மேலும் இவருக்கு அல்சர் நோயும் இருந்து வந்தது.

    இந்த நிலையில் நேற்று காலை முத்துகிருஷ்ணன் திடீரென மயங்கி விழுந்தார். உடனே அவரது மனைவி ஐஸ்வர்யா உறவினர்கள் உதவியுடன் கணவரை மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே முத்துகுமரன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து அவரது மனைவி ஐஸ்வர்யா கொடுத்த புகாரின் பேரில் முதலியார்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • ஆட்டோவை ஓட்டிச் சென்ற டிரைவர் திடீரென சாலையில் விழுந்து மயங்கி கிடந்தார்.
    • விநாயகர் சதுர்த்திக்கு கடைகளில் பொருட்கள் வாங்க வந்த பொதுமக்கள் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    புதுச்சேரி:

    சேதராப்பட்டு திருச்சிற்றம்பலம் கூட்ரோடு செல்லும் சாலையில்  திடீரென ஆட்டோ ஒன்று தாறுமாறாக சாலையில் ஓடியது.

    ஆட்டோவை ஓட்டிச் சென்ற டிரைவர் திடீரென சாலையில் விழுந்து மயங்கி கிடந்தார். விநாயகர் சதுர்த்திக்கு கடைகளில் பொருட்கள் வாங்க வந்த பொதுமக்கள் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    இதையடுத்து சாலையில் விழுந்து கிடந்த ஆட்டோ டிரைவரை சாலை ஓரமாக அமர வைத்தனர். அப்போது அந்த வழியாக வந்த டாக்டர் ஒருவர் அவரை பரிசோதனை செய்தார். ஆட்டோ டிரைவர் இறந்து விட்டது தெரிந்த நிலையில் உடனே அங்கிருந்தவர்கள் வானூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இறந்து கிடந்த ஆட்டோ டிரைவரின் செல்போனை எடுத்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், லாஸ்பேட்டை செண்பக விநாயகர் கோயில் வீதியைச் சேர்ந்த விஜயன் (36) என்பது தெரியவந்தது.

    பின்னர் உடலை மீட்டு பரிசோதனைக்காக ஆம்புலன்ஸில் கனக செட்டிக் குளத்தில் உள்ள பிம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மயங்கி விழுந்து இறந்த விஜயனுக்கு திருமணமாகி விட்டது. மாற்று திறனாளியான இவர் சேதராப்பட்டுக்கு சவாரி வந்து வீடு திரும்பும் போது திடீரென மயங்கி விழுந்தது தெரியவந்தது.

    • குடும்பத் தகராறு காரணமாக கடந்த 13-ந் தேதி வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.
    • இது குறித்து வீராணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா–ரணை நடத்தி வருகிறார்கள்.

    சேலம்:

    சேலம் வாய்க்கால் பட்டறை அருகே உள்ள வால்காடு பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது மனைவி கலையரசி (வயது 34). இவர் குடும்பத் தகராறு காரணமாக கடந்த 13-ந் தேதி வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.

    அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த கலையரசி இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து வீராணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா–ரணை நடத்தி வருகிறார்கள்.

    • காதல் மனைவி கொடுத்த குளிர்பானத்தை குடித்த வாலிபர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
    • ஸ்ரீவில்லிபுத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் சாத்தூரை அடுத்த புதுசூரங்குடியை சேர்ந்தவர் சிவா (வயது 23), ஆட்ேடா டிரைவர். இவர் அதே பகுதியில் உள்ள ஒரு பெண்ணை காதலித்து திரு மணம் செய்து கொண்டார்.

    அந்த பெண் திருமண வயதை அடையவில்லை என்பதால் சிவாவை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். இதைத்தொடர்ந்து அவர் கடந்த 15-ந்தேதி ஜாமீனில் வெளியே வந்தார்.

    அவர் தினமும் ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் நீதிமன்றத்தில் தினமும் கையெழுத்திட உத்தரவிடப்பட்டுள்ளது.

    அதன்படி அவர் கையெழுத்திட வந்தபோது அவர் காதலித்து திருமணம் செய்த பெண்ணும், மகா லட்சுமி என்பவரும் அவரிடம் பேச்சு கொடுத்து குடிக்க குளிர்பானம் கொடுத்தனர். அதனை வாங்கி குடித்ததும் சிவா மயங்கி விழுந்தார்.

    அவரை மீட்டு சாத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுபற்றிய புகாரின்பேரில் ஸ்ரீவில்லிபுத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் ஸ்ரீவில்லிபுத்தூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கள்ளக்குறிச்சி அருகே வண்டு கடித்து விவசாயி பலியானார்.
    • கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி அருகே தண்டலை கிராமத்தைச் சேர்ந்தவர் துரைக்கண்ணு (வயது 71) விவசாயி, இவர் நேற்று முன்தினம் தனது விவசாய நிலத்தில் உள்ள வாழைத்தாரை வெட்டினார். அப்போது அங்கிருந்த 30-க்கும் மேற்பட்ட கரு விஷ வண்டுகள் அவரை கடித்த. இதில் வலியால் துடித்த துரைக்கண்ணு மயக்கமடைந்து அதே இடத்தில் கீழே விழுந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அவரது மகன் பழனிச்சாமி கொடுத்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    நெல்லையில் வெவ்வேறு இடங்களில் மயங்கி விழுந்து 3 பேர் மரணம் அடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நெல்லை:

    ரெட்டியார்பட்டி பகுதியை சேர்ந்தவர் ராமசுப்பு (வயது59). இவர் அப்பகுதியில் உள்ள சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் திடீரென மயங்கி விழுந்தார். அவரை நெல்லை அரசு ஆஸ்பத்திரி யில் அனுமதித்தனர்.அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் ராமசுப்பு பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து பெருமாள்புரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நெல்லை அரசு மருத்துவமனை வளாகத்தில் சுமார் 80 வயது மதிக்கத்தக்க ஆண் மற்றும் 60 வயது மதிக்கத்தக்க ஆண் மயங்கிய நிலையில் இருந்துள்ளனர். உடனடியாக அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

    அங்கு அவர்கள் இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று இரவு பரிதாபமாக இறந்தனர். அவர்கள் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்கள் என்று தெரியவில்லை. இதுகுறித்து ஐகிரவுண்டு போலீசார் விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    மார்க்கெட்டுக்கு சென்ற வாலிபர் மயங்கி விழுந்து பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை:

    மதுரை காய்கறி மார்க்கெட்டுக்கு வந்த வாலிபர் ஒருவர் மயங்கி விழுந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து மாட்டுத்தாவணி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் செல்வகுமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில் இறந்த வாலிபரின் பெயர் சுந்தர் (வயது 43) என்பது தெரிய வந்தது. போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை வடக்கு மாசி வீதி மதுக்கடை முன்பு 45 வயது மதிக்கத்தக்க நபர் இறந்து கிடந்தார். அவர் யார்? எந்த ஊரைச் சேர்நதவர் என்பது தெரியவில்லை.

    இதுகுறித்து மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் சீனிவாசன் கொடுத்த புகாரின் பேரில் விளக்குத் தூண் போலீசார் வழக்குப் பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை அரசு ஆஸ்பத்திரி சித்தா பிரிவு பார்வையாளர் அறை முன்பு 70 வயது முதியவர் இறந்து கிடந்தார். அவர் யார்? எந்த ஊரைச் சேர்நதவர் என்பது தெரியவில்லை. சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

    களக்காடு அருகே வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்த பட்டதாரி பெண் மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    களக்காடு:

    களக்காடு அருகே உள்ள கீழவடகரையை சேர்ந்தவர் மருதையா. விவசாயி. இவரது மகள் முப்பிடாதி என்ற உஷா (25) இவர் பி.காம் படித்துள்ளார். காவல்கிணற்றில் உள்ள கையுறை தயாரிக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு கடந்த சில ஆண்டுகளாக மனநிலை பாதிப்பு இருந்து வந்துள்ளது. 

    இதற்காக உஷா பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். தினசரி மருந்துகளும் சாப்பிட்டு வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன் தினம் மாலை உஷாவிற்கு உடல்நல குறைவு ஏற்பட்டது. இதையடுத்து மருதையா காவல்கிணற்றில் இருந்து ஊருக்கு அழைத்து வந்தார். நேற்று காலை உஷா வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்த போது திடீர் என மயங்கி விழுந்தார். 

    உறவினர்கள் அவரை சிகிச்சைக்காக களக்காடு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அவரை பரிசோதனை செய்த டாக்டர் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து அவரது தந்தை மருதையா களக்காடு போலீசில் புகார் செய்தார். களக்காடு சப்- இன்ஸ் பெக்டர்கள் லிபிபாரல்ராஜ், அய்யப்பன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உஷாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
    ×