என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "farmer arrest"
- குழந்தையை விலைக்கு வாங்கியது சூலூர் திம்மநாயக்கன் பாளையத்தை சேர்ந்த விவசாயி விஜயன் என்பது தெரியவந்தது.
- போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர்.
சூலூர்:
பீகாரை சேர்ந்தவர் மகேஷ்குமார். இவரது மனைவி அஞ்சலி.
இவர்கள் கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள அப்பநாயக்கன்பட்டியில் ஓட்டல் வைத்து நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இவர்கள் 2 பேரும் பீகாரில் இருந்து பச்சிளம் குழந்தையை கடத்தி வந்து விற்பனை செய்ததாக போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த சம்பவத்தில் வேறு யாருக்கு எல்லாம் தொடர்பு உள்ளது. யாரிடம் இருந்து குழந்தை கடத்தி வரப்பட்டது. வாங்கியவர்கள் யார்? என்பது உள்ளிட்ட விரிவான விசாரணை நடத்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் உத்தரவிட்டார்.
அதன்பேரில் கருமத்தம்பட்டி டி.எஸ்.பி. தங்கராமன் மேற்பார்வையில் கருமத்தம்பட்டி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வந்தது.
தனிப்படை விசாரணையில், குழந்தையை விலைக்கு வாங்கியது சூலூர் திம்மநாயக்கன் பாளையத்தை சேர்ந்த விவசாயி விஜயன் என்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில், தங்களுக்கு குழந்தை இல்லை என்பதை தெரிந்து கொண்ட மகேஷ்குமார் ஆசை வார்த்தை கூறி சட்டப்படியான குழந்தையை பெற்று தருவதாக கூறினார். ஆனால் அவர் போலியான ஆவணங்களை கொடுத்து எங்களிடம் ஏமாற்றி குழந்தையை ரூ.2.50 லட்சத்துக்கு விற்று விட்டார் என போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.
பின்னர் விஜயனை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
- நல்ல தீவனம் கொடுத்து மாட்டை சிறப்பாக பராமரித்ததால் அந்த பசு அதிக பால் கொடுக்க ஆரம்பித்தது.
- புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பைரப்பாவை கைது செய்தனர்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம் சத்தியசாய் மாவட்டத்தில் உள்ளது ஸ்ரீ கந்தபுரம். அந்த கிராமத்தை சேர்ந்த விவசாயி பைரப்பா பசுமாடு ஒன்றை வளர்த்து வந்தார். அந்த பசு சரியாக பால் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
எனவே தன்னுடைய பசுவை அதே கிராமத்தை சேர்ந்த மற்றொரு விவசாயிக்கு பைரப்பா விற்று விட்டார். பசுவை வாங்கிய விவசாயி அதை சரியாக பராமரித்து வளர்த்து வந்தார்.
நல்ல தீவனம் கொடுத்து மாட்டை சிறப்பாக பராமரித்ததால் அந்த பசு அதிக பால் கொடுக்க ஆரம்பித்தது. இந்த விஷயம் பைரப்பாவிற்கு தெரியவந்து ஆவேசமடைந்துள்ளார்.
தன்னிடம் இருக்கும் போது குறைந்த அளவே பால் கொடுத்த அந்த பசு மாடு, விற்பனை செய்த பின்அதிக பால் கொடுத்து தன்னை வஞ்சித்து விட்டதாக மனதிற்குள்ளாகவே குமுறினார்.
விவசாயியின் தோட்டத்தில் இருந்த மாட்டை பார்த்த அவர் ஆத்திரம் தலைக்கேறி அதன் மடியை கத்தியால் அறுத்தார். பசு அலறிய சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்தனர்.
அதற்குள்ளாக பைரப்பா தப்பியோடினார். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பைரப்பாவை கைது செய்தனர்.
- முன் விரோதம் காரணமாக பெயிண்டர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பூதப்பாண்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- போலீசில் சரணடைந்த ரிச்சரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
நாகர்கோவில்:
கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே உள்ள நாவல் காடு நம்பியான் குளம் பகுதியைச் சேர்ந்தவர் நெல்சன் (வயது 50), பெயிண்டர். அதே பகுதியை சேர்ந்தவர் விவசாயி ரிச்சர் (43). இவர்கள் இருவருக்கும் இடையே சொத்து பிரச்சனை உள்ளது. இதன் காரணமாக அடிக்கடி தகராறும் ஏற்பட்டு வந்தது.
மேலும் கடந்த 2021-ம் ஆண்டு ரிச்சரை தாக்கியதாக நெல்சன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கு கோர்ட்டில் விசாரணையில் உள்ளது. இந்த நிலையில் அவர்களுக்கு இடையே தொடர்ந்து தகராறு ஏற்பட்டு வந்தது.
நேற்று இரவு நாவல் காடு பகுதியில் நெல்சன் வந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ரிச்சர் அவரை வழிமறித்து தகராறு செய்தார். இருவரும் தகாத வார்த்தையால் மாறி மாறி பேசினார்கள். இதில் ஆத்திரம் அடைந்த ரிச்சர் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து நெல்சனை சரமாரியாக வெட்டினார்.
கன்னம், வயிறு, மணிக்கட்டு பகுதிகளில் வெட்டு விழுந்தது. ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்த நெல்சன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதையடுத்து ரிச்சர், பூதப்பாண்டி போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார். நெல்சனை கொலை செய்த தகவலை போலீசாரிடம் அவர் தெரிவித்தார்.
இன்ஸ்பெக்டர் திருமுருகன், சப்-இன்ஸ்பெக்டர் தங்கராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். நெல்சன் கொலை செய்யப்பட்டது பற்றி தகவல் அறிந்ததும் அவரது உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் அங்கு திரண்டனர். பிணமாக கிடந்த நெல்சனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கொலை செய்யப்பட்ட நெல்சனின் உடல் பிரேத பரிசோதனை இன்று நடக்கிறது. இதையடுத்து அவரது உறவினர்கள் ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரியில் திரண்டு இருந்தனர். இதற்கிடையில் போலீசில் சரணடைந்த ரிச்சரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். முன் விரோதம் காரணமாக பெயிண்டர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பூதப்பாண்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- ரமேஷ் உரிமம் இல்லாமல் துப்பாக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
- சப்- இன்ஸ்பெக்டர்கள் செல்வராஜ், சீனிவாசன், கிராம நிர்வாக அலுவலர் பாஸ்கர் ஆனந்தம் ஆகியோர் ரமேஷ் வீட்டிற்கு சென்றனர்.
ஏற்காடு:
ஏற்காட்டில் சமீப காலமாக உரிமம் இல்லாமல் கள்ளத்துப்பாக்கி பயன்படுத்துவதாக புகார்கள் வந்தது.
இதையடுத்து ஏற்காடு பில்லேரி கிராமத்தில் உள்ள ரமேஷ் (வயது 38), விவசாயியான இவர் உரிமம் இல்லாமல் துப்பாக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சப்- இன்ஸ்பெக்டர்கள் செல்வராஜ், சீனிவாசன், கிராம நிர்வாக அலுவலர் பாஸ்கர் ஆனந்தம் ஆகியோர் அவரது வீட்டிற்கு சென்றனர்.
அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் வீட்டின் அருகில் உள்ள ஆட்டுப்பட்டியில் சோதனை செய்தனர்.
அப்போது உரிமம் இல்லாத நாட்டு துப்பாக்கி மற்றும் வெடி மருந்து பொருட்கள் 100 கிராமையும், ஈயக்குண்டுகள் 350 கிராம், சிறிய ஈய குண்டுகள் 100 கிராம் வீட்டில் வைத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து அதனை பறிமுதல் செய்த போலீசார் ரமேசையும் கைது செய்தனர்.
இதற்கிடையே ஏற்காட்டில் குற்றச்செயல்களை தடுக்கும் வகையில் ஏற்காடு போலீஸ் நிலையத்தில் அனைத்து பஞ்சாயத்து தலைவர்கள் ஊர் பெரியவர்களை சந்தித்து வருகிற 30-ந்தேதி ஆலோசனை நடத்த உள்ளதாகவும், இதில் பஞ்சாயத்து தலைவர்கள் ஊர் பெரியவர்கள் கலந்து கொள்ள வேண்டும் என வாழப்பாடி டி.எஸ்.பி. கூறி உள்ளார்.
- சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் அவர் மீது மிருகவதை தடுப்பு சட்டம் 429-ன் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
- பரிசோதனை முடிவுகள் வந்த பின்னரே நாய்கள் விஷம் வைத்து கொல்லப்பட்டதா என்ற விபரம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.
நெல்லை:
நெல்லை மேலப்பாளையம் அருகே உள்ள கருங்குளம் சிவன்கோவில் பகுதியில் மாநகராட்சி பள்ளி அருகே கருங்குளம் வாய்க்கால் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று காலையில் நாய்கள் சில இறந்து கிடந்தன.
இதனை அறிந்த பொதுமக்கள் மேலப்பாளையம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். உடனே சப்-இன்ஸ்பெக்டர் எபனேசர் தலைமையிலான போலீசார் சம்பவ இடங்களுக்கு சென்று பார்வையிட்டனர். அதில் மொத்தம் 9 நாய்கள் உயிர் இழந்தது தெரியவந்தது.
விசாரணையில் அந்த நாய்கள் விஷம் வைத்து சாகடிக்கப்பட்டது தெரியவந்தது. தொடர்ந்து நடத்திய விசாரணையில் மேலப்பாளையம் கருங்குளத்தை சேர்ந்த விவசாயி அருள் செல்வம் (வயது 47) என்பவர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகம் அடைந்தனர். இவருக்கு சொந்தமான தோட்டம் அப்பகுதியில் உள்ளது. அங்கு ஆடுகளை வளர்த்து வந்துள்ளார். அவற்றை நாய்கள் கடித்து கொன்று விடும் என்று சில நாட்களாக அருள் செல்வம் அச்சத்தில் இருந்துள்ளார். இது தொடர்பாக சிலரிடம் அவர், இந்த நாய்களை மருந்து வைத்து கொல்ல வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
இந்த நிலையில் தான் அந்த நாய்கள் இறந்து கிடந்துள்ளது என்ற விபரமும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் பிடித்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றபோது, அவர் நான் நாய்களை கொல்லவில்லை என்று கூறியுள்ளார். எனினும் சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் அவர் மீது மிருகவதை தடுப்பு சட்டம் 429-ன் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
தொடர்ந்து, உயிரிழந்த நாய்களை நெல்லையை அடுத்த ராமையன்பட்டியில் உள்ள அரசு கால்நடை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். அங்கு பரிசோதனை முடிவுகள் வந்த பின்னரே நாய்கள் விஷம் வைத்து கொல்லப்பட்டதா என்ற விபரம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.
தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளியில் உள்ள பாலஜக்கமனஅள்ளி சேவன் கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் சித்தன். இவரது மனைவி சிவகாமி(வயது55).
இவர் நேற்று அதிகாலை 4 மணியளவில் வீட்டில் இருந்து வெளியே வந்தார். அப்போது மர்ம நபர் ஒருவர் அவரது கழுத்தில் அரிவாளல் அறுத்துவிட்டு தப்பி ஓடிவிட்டார். இதனால் அவர் அலறியபடியே ஓடிவந்தார்.
அவரது அலறல் சத்தம்கேட்டு உறவினர்கள் ஓடிவந்து அவரை மீட்டு தருமபுரி அரசுமருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து சிவகாமியின் மகன் சரவணன் அதியமான் கோட்டை போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்போது அதே பகுதியைச் சேர்ந்த விவசாயியான பொன்னுசாமி (72) என்பவர் ஆடுகளுக்கு இலைகளை வெட்டிபோடும் அரிவாளால் சிவகாமியின் கழுத்தை அறுத்தது தெரிய வந்தது. உடனே போலீசார் பொன்னுசாமியை சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர். அவரிடம் போலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் தெரிவித்தாவது:
பொன்னுசாமியின் மனைவி பெரியம்மாள் (50). இவர்களுக்கு சின்னசாமி, செல்வம் என்ற 2 மகன்கள் உள்ளனர். 2 பேருக்கும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர்.
பொன்னுசாமிக்கும், பெரியம்மாளுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் அவர் கோபமடைந்து பொம்மிடி ஜாலிகொட்டாய் ஊரில் உள்ள தனது உறவினருக்கு வீட்டிற்கு சென்றுவிட்டார்.
கடந்த 2 தினங்களுக்கு முன்பு பெரியம்மாள் தனது பேத்தியின் புனித நீராட்டு விழாவிற்காக சேவன்கொட்டாயுக்கு வந்து இருந்தார். அப்போது அவர் பொன்னுசாமி வீட்டில் தங்காமல், அருகில் இருந்த உறவினர் சித்தன் வீட்டில் தங்கியிருந்தார்.
பெரியம்மாள் மீண்டும் ஊருக்குள் வந்திருந்ததை அறிந்த பொன்னுசாமி அவரை சந்தித்து மீண்டும் குடும்ப நடந்த அழைத்ததாக கூறப்படுகிறது. இதனை பெரியம்மாள் ஏற்காமல் வரமறுத்து விட்டார். இதில் ஆத்திரம் அடைந்த பொன்னுசாமி தனது மனைவியை கொலை செய்ய திட்டமிட்டார்.
நேற்று அதிகாலை 4 மணியளவில் சித்தன் வீட்டில் இருந்து சிவகாமி வெளியே வந்துள்ளார். அப்போது அங்கு இருட்டில் மறைந்து இருந்த பொன்னுசாமி வெளியே வருவது தனது மனைவி பெரியம்மாள் என்று நினைத்து பின்னால் சென்று சிவகாமியின் கழுத்தை அரிவாளால் அறுத்தார்.
அப்போது சிவகாமி தான் உங்களது மனைவி இல்லை என்று கூறியதாக தெரிகிறது. உடனே பொன்னுசாமி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் சிவகாமி அலறியதால், உறவினர்கள் மீட்டு ஆஸ்பத்திரியில் அவர் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட பொன்னுசாமியை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி தருமபுரி கிளை சிறையில் அடைத்தனர்.
ஊத்துக்கோட்டை அருகே உள்ள வெள்ளாத்து கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் சுதாகர் (27). என்ஜினீயர். சென்னையில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார்.
அதே கிராமத்தை சேர்ந்தவர் பூபாலன் விவசாயி. இவர் நண்பர் விஜயகுமாருடன் மோட்டார் சைக்கிளில் அதிவேகமாக சென்றதாக கூறப்படுகிறது.
இதனை சுதாகர் கண்டித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த பூபாலனும், விஜயகுமாரும் சேர்ந்து கத்தியால் சுதாகரை குத்தினர். பலத்த காயம் அடைந்த அவருக்கு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இது குறித்து பென்னாலூர் பேட்டை இன்ஸ்பெக்டர் பாலு வழக்கு பதிவு செய்து பூபாலனை கைது செய்தார். தலைமறைவான விஜயகுமாரை தேடி வருகின்றனர்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே உள்ள குமரிபாளையம் பகுதியை சேர்ந்தவர் ராமாயி (வயது 65).
இவருடைய வீட்டின் அருகே வசித்து வருபவர் நல்லுசாமி (77). விவசாயி.
குமரிபாளையத்தில் ராமாயிக்கு சொந்தமான நிலத்தையொட்டி நல்லு சாமிக்கு பாத்தியப்பட்ட நிலம் உள்ளது. இந்த நிலத்தில் உள்ள வரப்பு தொடர்பாக 2 பேருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.
நேற்று ராமாயி தனது நிலத்தில் வளர்ந்துள்ள புறக்ளை பிடுங்குவதற்காக சென்றார். இரவு ஆன பிறகும் அவர் வீட்டிற்கு திரும்பி வரவில்லை.
இதனால் அவரது மகன் லோகநாதன் தனது தாயை தேடி புறப்பட்டார். இரவு நேரம் என்பதால் உதவிக்கு உறவினர்களையும் கூடவே அழைத்துக் கொண்டு சென்றார்.
குமரிபாளையத்தில் உள்ள நிலத்திற்கு சென்று பார்த்தபோது, அங்கு ராமாயி கழுத்தறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். தாய் கொலை செய்யப்பட்டுள்ளதை பார்த்து லோகநாதன் கதறி அழுதார்.
இது குறித்து மோகனூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் சுகுமார் சம்பவ இடத்திற்கு வந்து ராமாயி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
இதனை தொடர்ந்து லோகநாதன் தனது தாயை நல்லுசாமி என்பவர் தான் கொலை செய்துள்ளார். அவர் மீது எனக்கு சந்தேகம் உள்ளது. அவருக்கும் எங்களது குடும்பத்திற்கும் வரப்பு பிரச்சினை உள்ளது. அவரை பிடித்து விசாரித்தால் உண்மை தெரிய வரும் என போலீசில் புகார் கூறினார்.
இதையடுத்து போலீசார், நல்லுசாமியை பிடித்து அதிரடி விசாரணை நடத்தினர். விசாரணையில் நான் தான், ராமாயியை கொலை செய்தேன் என ஒப்புக்கொண்டார்.
நல்லுசாமி போலீசாரிடம் கூறியதாவது:-
நேற்று மாலை ராமாயி, அவருக்கு சொந்தமான நிலத்தில் தனியாக புற்களை பிடுங்கி கொண்டிருந்தார். மாலையில் நான் அங்கு சென்றேன். அப்போது எங்களுக்குள் வாய் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த நான், இடுப்பில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, ராமாயியை பிடித்து இழுத்து, அவரது கழுத்தை ஆட்டை அறுப்பது போல் அறுத்தேன்.
அப்போது அவர் தப்பிக்க முயன்றார். ஆனாலும் நான், அவரை விடவில்லை. உயிர் போகும்வரை வாயையும், கழுத்தையும் இறுக்கமாக பிடித்துக் கொண்டேன். உயிர் போனபிறகு நிலத்திலே உடலை போட்டு விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டேன். போலீசாரின் அதிரடி விசாரணையில் நான் மாட்டிக்கொண்டேன்.
இவ்வாறு அவர் போலீசாரிடம் கூறியதாக தெரிகிறது.
இதையடுத்து நல்லுசாமி மீது கொலை வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்து நாமக்கல் கிளை சிறையில் போலீசார் அடைத்தனர்.
திருப்பரங்குன்றம்:
மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகேயுள்ள உச்சப்பட்டி தோப்பூர் பகுதியில் 572 ஏக்கர் பரப்பளவில் துணைக்கோள் நகரம் அமைய உள்ளது. இதற்கான பணிகள் நடை பெற்று வருகிறது.
இதில் உச்சபட்டி பகுதியில் 60 ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலங்களை வழங்க விவசாயிகள் மறுத்து வந்தனர். கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
இந்த நிலையில் திருப்பரங்குன்றம் அருகே உள்ள மூணான்பட்டி பகுதியில் 18 ஏக்கர் நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற போலீஸ் துணை சூப்பிரண்டு ராமகிருஷ்ணன், வீட்டு வசதி வாரிய குடியிருப்பு செயற் பொறியாளர் பாண்டியராஜன் தலைமையில் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அங்கு வந்தனர்.
அவர்கள் 18 ஏக்கர் இடத்தில் இருந்த மரங்களை ஜே.சி.பி. எந்திரங்கள் மூலம் அகற்றினர். இதற்கு மகாதேவன் என்ற விவசாயி எதிர்ப்பு தெரிவித்தார்.
திடீரென்று அவர் மரத்தில் ஏறி தற்கொலை செய்வதாக மிரட்டினார். பெண்களும் மண்எண்ணை குடித்தும், கிணற்றில் குதித்தும் தற்கொலை செய்வோம் என மிரட்டினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
மரத்தில் ஏறி தற்கொலைக்கு முயன்ற விவசாயியை போலீசார் கைது செய்தனர். மற்றவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
கடலூர் மாவட்டம் சோழத்தரம் அருகே உள்ள வலசக்காடு பகுதியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (வயது 33). விவசாயி.
இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ராஜதுரை (27) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இருவரும் அடிக்கடி மோதி கொண்டனர்.
இந்த நிலையில் நேற்று மாலை ராஜதுரை தனது நண்பர் கலைமணி (28) என்பவருடன் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த ராதாகிருஷ்ணன், அவரது நண்பர் முத்துக்குமார் ஆகியோர் சேர்ந்து ராஜ துரையிடம் தகராறில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் ராஜதுரையையும், கலைமணியையும் தாக்கி விட்டு கொலை மிரட்டல் விடுத்தனர்.
இது குறித்து சோழத்தரம் போலீசில் ராஜதுரை புகார் செய்தார். சப்- இன்ஸ்பெக்டர் மகேசுவரி வழக்குப்பதிவு செய்து ராதாகிருஷ்ணனை கைது செய்தார். தலைமறைவாகி விட்ட முத்துக்குமாரை போலீசார் தேடிவருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்