என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "farmers strike"
- அணையில் இருந்து தண்ணீர் திறப்பது சாத்தியமில்லை என்று அதிகாரிகள் கூறினார்.
- போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து பாசனத்திற்காக 2 லட்சம் ஏக்கர் விவசாய பாசனத்திற்கு 2 பிரிவுகளாக கீழ் பவானி வாய்க்காலில் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதையடுத்து ஒரு லட்சத்து 3 ஆயிரம் ஏக்கர் பாசனத்திற்கு 5 சுற்று முறையாக தண்ணீர் திறந்து விடப்படும் என அரசாணை கடந்த ஜனவரி மாதம் வெளியிடப்பட்டது.
இதையடுத்து கடந்த 4-ந் தேதி 4-வது முறை தண்ணீர் திறப்பு நிறைவடைந்த நிலையில் அணையில் போதுமான தண்ணீர் இல்லை எனக்கூறி 5-வது சுற்று முறைக்கு திறக்க வேண்டிய தண்ணீரை பொதுப்பணித் துறையினர் திறக்கவில்லை.
இதற்கிடையே பாசனத்திற்காக திறக்கப்பட்ட தண்ணீரை நம்பி பாசன விவசாயிகள் ஏக்கர் ஒன்றுக்கு 30 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்து எள், கடலை, மக்காச்சோளம், சோளம், உளுந்து போன்ற பயிர்களை பயிர் செய்துள்ளனர்.
இந்நிலையில் பாசனத்திற்கு விடப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டதால் புஞ்சை பாசன பகுதியில் போதுமான தண்ணீர் இல்லாமல் பயிர் கருகும் நிலையில் உள்ளது. இதனையடுத்து தண்ணீர் திறந்து விடக் கோரி ஈரோடு கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள நீர்வள கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்தை பாசன விவசாயிகள் நேற்று இரவு திடீரென முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது தண்ணீர் திறந்து விடப்படும் என அரசாணை அறிவித்த பின்னர் தண்ணீர் திறந்து விடபடாது என அரசு கூறுவது ஏற்புடையதல்ல என விவசாயிகள் கூறினர். இதனால் விவசாயிகளுக்கு பாசனத்திற்கு போதுமான தண்ணீரை 10 நாட்களுக்கு திறந்து விட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
ஆனால் தற்போது அணையில் போதுமான அளவு தண்ணீர் இல்லாததால் அணையில் இருந்து தண்ணீர் திறப்பது சாத்தியமில்லை என்று அதிகாரிகள் கூறினார்.
தொடர்ந்து விவசாயிகளிடம் நீர்வள துறை அலுவலர்கள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் பாசன விவசாயிகள் தண்ணீர் திறந்து விடும் வரை கலைந்து செல்ல மாட்டோம் எனக்கூறி நேற்று இரவு முதல் அலுவலகத்தின் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இரவு முழுவதும் விடிய விடிய இந்த போராட்டம் நீடித்தது.
இதைத்தொடர்ந்து இன்று 2-வது நாளாக பாசன சபை விவசாயிகள் காத்திருக்கு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். காலை 11 மணிக்கு பிறகு ஏராளமான விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் பங்கேற்றனர். இதனால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தொடர்ந்து இன்றும் 2-வது நாளாக விவசாயிகளிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.
- சந்தையை சுற்றியும் சாலையோரங்களில் வியாபாரிகள் கடைகள் அமைப்பதால், சந்தைக்குள் பொதுமக்கள் வருவதில்லை.
- திருப்பூர் தெற்கு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.
திருப்பூர்:
திருப்பூர் தென்னம்பாளையத்தில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு தினமும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் தாங்கள் விளைவித்த பொருட்களை விற்பனைக்கு கொண்டு வருகிறார்கள். இந்தநிலையில் தென்னம்பாளையம் பகுதியில் சாலையோரம் வியாபாரிகள் பலர் கடைகள் அமைத்து காய்கறிகள் விற்பனை செய்வதால் விவசாயிகளுக்கு விற்பனை பாதிக்கப்பட்டு வருகிறது.
இதனால் சந்தை பகுதிகளில் ரோட்டோரம் வியாபாரிகள் காய்கறி கடைகளை அமைக்க கூடாது எனவும், இதனை கண்டித்தும் இன்று அதிகாலை 4மணி முதல் உழவர் சந்தையின் கேட்டை மூடிவிட்டு தென்னம்பாளையம் சந்தை முன்பு விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்ததும் திருப்பூர் தெற்கு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.
தென்னம்பாளையம் உழவர் சந்தையில் முறையாக பதிவு செய்து விவசாயிகள் காய்கறிகளை கொண்டு வந்து விற்பனை செய்து வருகிறார்கள். இந்தநிலையில் சந்தையை சுற்றியும் சாலையோரங்களில் வியாபாரிகள் கடைகள் அமைப்பதால், சந்தைக்குள் பொதுமக்கள் வருவதில்லை.
சாலையோரம் இருக்கும் கடைகளில் காய்கறி வாங்கி விட்டு செல்கிறார்கள். இதனால் விவசாயிகள் பாதிக்கப்படுகிறார்கள். இது குறித்து பலமுறை அதிகாரிகளிடம் புகார்கள் தெரிவித்தும் சரியான நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை. அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கும் போது 2 நாட்கள் கடைகள் அமைக்காமல் இருக்கிறார்கள். இதன் பின்னர் மீண்டும் கடைகளை அமைத்து வியாபாரத்தை தொடங்கி வருகிறார்கள். எனவே இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
சாலையோர வியாபாரிகள் கூறுகையில், உழவர் சந்தைக்கு 100 மீட்டருக்கு அப்பால் சாலையோர கடைகள் அமைக்கப்பட்டு வருவதாகவும் , விவசாயிகளுக்கு எந்தவித இடையூறும் இல்லாத வகையில் கடைகள் அமைத்து வரக்கூடிய நிலையில் சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை பாதிப்புக்கு உள்ளாக்கும் வகையிலும் , மோதல் சூழ்நிலையை உருவாக்கி சட்டம் ஒழுங்கு சீர்கேட்டை ஏற்படுத்தும் வகையில் விவசாயிகள் செயல்படுவதாக சாலையோர வியாபாரிகள் குற்றம் சாட்டினர். இரு தரப்பினரிடம் பேச்சு வார்த்தை நடத்தி பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வரப்படும் என போலீசார் உறுதி அளித்தனர்.
- நெல்லினை செஞ்சி ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு விவசாயிகள் கொண்டுவந்தனர்.
- விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வர வேண்டாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.
விழுப்புரம்:
செஞ்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக நெல் அறுவடை தொடங்கப்பட்டுள்ளது. அறுவடை செய்யப்பட்ட நெல்லினை செஞ்சி ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு விவசாயிகள் கொண்டுவந்தனர். அதன்படி நேற்று 4,600 நெல் மூட்டைகள் விற்பனைக்கு வந்திருந்தன. ஆனால் அந்த நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படவில்லை. இது குறித்து கமிட்டி நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் செஞ்சி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வேலை செய்கின்ற எடை போடும், சுமை தூக்கும் தொழிலாளர்கள் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி திடீரென மூட்டை மாற்ற மாட்டோம் என பணிகளை புறக்கணித்து உள்ளனர். இதனால் நேற்று கொண்டு வரப்பட்ட 4600 நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படாமல் விற்பனை கூடத்தில் வைக்கப்பட்டுள்ளது.
மேலும் தினமும் மழை பெய்து வருவதாலும், ஈ-நாம் திட்டத்தின் மூலம் கொள்முதல் செய்வதற்கு வியாபாரிகள் உடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாலும் இப்பிரச்சனையில் சமூக தீர்வு ஏற்படும் வரை தங்களது விளைபொருட்களை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வர வேண்டாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த அறிவிப்பு நேற்று இரவு தான் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தின் எதிரில் வைக்கப்பட்டது. இதனை அறியாத விவசாயிகள் கிராமங்களில் இருந்து ஏராளமானோர் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேலான நெல் மூட்டைகளை விற்பனைக்கு இன்றும் கொண்டு வந்திருந்தனர். அதிகாலையில் வந்த டிராக்டர், மாட்டு வண்டி உள்ளிட்டவைகளை உள்ளே அனுமதிக்காததால் அவர்கள் இதனை கண்டித்து நெல்மூட்டை கொண்டு வந்த வாகனங்களை சாலையின் குறுக்கே நிறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் செஞ்சி - திண்டிவனம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து வந்த போக்குவரத்து மற்றும் செஞ்சி போலீசார் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். கமிட்டி கேட்டை திறந்து நெல் மூட்டைகளை உள்ளே அனுமதித்ததால் சாலை மறியல் முடிவுக்கு வந்தது. சுமார் இரண்டு மணி நேரம் நடந்த சாலை மறியலால் ஏராளமான வாகனங்கள் சிக்கி தவித்தன. இதனைத் தொடர்ந்து இன்று கொள்முதல் செய்யப்படுமா என்பது குறித்து தகவல் இல்லை. இது போன்ற செயல்கள் மறைமுகமாக வெளி வியாபாரிகளை ஊக்குவிக்கும் செயலாக உள்ளதென விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
- கீழ்பவானி வாய்க்காலில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்வதற்காக ரூ.710 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய ப்பட்டு பணிகள் தொடங்க ப்படும் என அறிவிக்க ப்பட்டது.
- காஞ்சிகோவில் கருங்கரடு பகுதியில் நல்ல நிலையில் எந்தவிதமான உடைப்பும், பழுதும் ஏற்படாமல் மண் கரையாக உள்ள இடத்தில் இரவு நேர த்தில் பணிகள் தொடங்கி உள்ளதாக கூறப்படுகிறது.
பெருந்துறை:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள பவானிசாகர் அணை மற்றும் கீழ் பவானி, தட ப்பள்ளி- அரக்கன் கோட்டை, காலிங்கராயன் கால்வாய் மூலமாக 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பாசன வசதி பெற்று வருகிறது.
கீழ்பவானி வாய்க்காலில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்வதற்காக ரூ.710 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய ப்பட்டு பணிகள் தொடங்க ப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்கு கீழ்பவானி மூலம் பாசன வசதி பெறும் விவசாயிகள் எதிர்ப்பும், ஆதரவும் தெரிவித்து வருகி ன்றனர்.
மேலும் இந்த பிரச்சனை தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொட ரப்பட்ட வழக்கில், பணி களை தொடங்குவதற்கு எந்த தடையும் இல்லை என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி யது.
இதனை தொடர்ந்து கீழ்பவானி வாய்க்கால் காங்கிரீட் திட்டம் தொட ர்பான அரசணை எண் 276-யை ரத்து செய்ய வேண்டும். கீழ்பவானி வாய்க்காலில் பழைய கட்டு மான பணிகளை மட்டுமே தொடங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரி க்கைகள் வலியுறுத்தி பெருந்துறை அருகே உள்ள கீழ் பவானி கால்வாய் பகுதி அருகே காலவரையற்ற உண்ணாவிரத போரா ட்டத்தை விவசாயிகள் மேற்கொண்டனர்.
இந்நிலையில் விவ சாயிகளின் போராட்டம் தொடர்பாக அமைச்சர் முத்துசாமியிடம் பேச்சு வார்த்தை நடை பெற்றது. இந்த பேச்சு வார்த்தையில் விவசாயிகள் கீழ்பவானி கால்வாயில் பழு தடைந்த பழைய கட்டு மானத்தை மட்டுமே சீரமைக்க வேண்டும்.
மண் கரையாக வே இருக்க வேண்டும். அரசணை 276-யை ரத்து செய்வது தொடர்பாக சட்ட பாதுகாப்பு வழங்க வேண்டும். பணிகள் தொடங்கபட்ட இடத்தில் அப்பகுதியை சேர்ந்த விவசாயிகளின் கருத்தை கேட்டு பணிகள் மேற்கொள் வேண்டும் உள்ளிட்ட கோரி க்கைகளை விவசாயிகள் முன் வைத்தனர்.
இந்த கோரிக்கைகள் தொடர்பாக பேச்சு வார்த்தை நடைபெற்ற நிலையில் இந்த பேச்சு வார்த்தையில் உடன்பட்ட தை தொடர்ந்து தமிழக முதல்-அமைச்சர் மூலம் அரசாணையை ரத்து செய்வது உள்ளிட்ட கோரிக்கையை பேச்சு வார்த்தை நடத்தி விரைவில் தீர்வு காணப்படும் என அமைச்சர் முத்துசாமி உறுதி அளித்த தை தொடர்ந்து விவ சாயிகளின் உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டனர்.
இந்நிலையில் ஈரோடு மாவட்டம் காஞ்சிகோவில் கருங்கரடு பகுதியில் நல்ல நிலையில் எந்தவிதமான உடைப்பும், பழுதும் ஏற்படாமல் மண் கரையாக உள்ள இடத்தில் இரவு நேர த்தில் பணிகள் தொடங்கி உள்ளதாக கூறப்படுகிறது.
இது பற்றி தகவல் கிடை த்ததும் விவசாயிகள் அந்த பகுதியில் இன்று திரண்ட னர். தொடர்ந்து இதனை கண்டித்து கால்வாயில் இறங்கிய அப்பகுதி பாசன விவசாய பொது மக்கள் 200-க்கும் மேற் பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது பற்றி தகவல் கிடைத்ததும் போலீசார் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்தனர். இதை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பொது மக்களிடம் போலீசார் மற்றும் வருவாய் துறையினர் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.
இதனால் அந்த பகுதியில் பரபரப்பான நிலவியது.
- அதிகாரிகள் பேச்சுவார்த்தை
- டிரான்ஸ்பார்மர் பழுதால் மின்சார விநியோகம் துண்டிப்பு
வந்தவாசி:
வந்தவாசி அடுத்த சாலவேடு கிராமம் கிராமத்தில் திப்பம்மாள் நகர் பகுதியில் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.
இந்த பகுதியில் டிரான்ஸ்பாரம் ஒன்று கடந்த 20 நாட்களாக பழுதானதால் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கர் விளை நிலங்கள் தண்ணீர் இல்லாமல் முற்றிலும் காய்ந்து போகும் அவலம் ஏற்பட்டுள்ளது.
மறியல்
மேலும் தற்போது கோடை காலம் என்பதால் 20 நாட்களாக மின்சாரம் இல்லாத காரணத்தால் தண்ணீர் இல்லாமல் நெல் பயிர்கள் கத்திரிக்காய், செடிகள் உள்ளிட்ட பல்வேறு பயிர்கள் முற்றிலும் காய்ந்து போனதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.
மேலும் நகைகளை அடகு வைத்து விவசாயிகள் விவசாயம் செய்து வரும் நிலையில் 20 நாட்களாக பழுதான டிரான்ஸ்பார்மரை மின்சாரத்துறை அதிகாரிகள் சரி செய்யாமல் தொடர்ந்து மெத்தனப் போக்கில் செயல்பட்டு வருவதாக பாதிக்கப்பட்ட விவசாயிகளும் பொதுமக்களும் வேதனையுடன் குற்றம் சாட்டினர்.
இந்த நிலையில் ஆத்திரமடைந்த 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் வந்தவாசி மேல்மருவத்தூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் வந்தவாசி மேல்மருவத்தூர் சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த கீழ்கொடுங்காலூர் போலீசார் சம்பவம் இடத்திற்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இதனால் வந்தவாசி மேல்மருவத்தூர் சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மேலும் மின்சாரத்துறை அதிகாரிகள் டிரான்ஸ்பார்மரை சரி செய்யவில்லை என்றால் மீண்டும் சாலை மறியலில் ஈடுபட போவதாக விவசாயிகள் கூறினர்.
- கலெக்டர் அலுவலகத்திற்கு வருபவர்களின் உடைமைகளை சோதனை செய்து அனுப்பி வைத்தனர்
- தென்னை மரங்களை வெட்ட வேண்டும் என்று மரங்களில் அம்புக்குறியிட்டு சென்றுள்ளனர்.
கோவை,
கோவை கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறை தீர்ப்பு முகாம் நடைபெற்றது. இதனால் அலுவலக வாசல் முன்பு ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக நின்றிருந்தனர். அவர்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு வருபவர்களின் உடைமைகளை சோதனை செய்து அனுப்பி வைத்தனர். கலெக்டர் கிராந்திகுமார் பாடி மக்களிடமிருந்து மனுக்களை பெற்றார். அப்போது தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பாக வாழைத்தார், தென்னை குருத்து, மட்டை ஆகிய பொருட்களுடன் போராட்டம் நடத்தினர். இதுகுறித்து சங்கத்தின் கோவை மாவட்ட தலைவர் சு.பழனிசாமி கூறியதாவது:- கோவை மாவட்டம் இருகூர் பேரூராட்சியில் விவசாயம் செய்து வரும் நிலத்திற்கு அருகில் சில தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனத்தினர் இடத்தை வாங்கி வீட்டு மனைகளாக பிரித்து விற்பனை செய்ய முயற்சித்து வருகின்றனர். அதற்காக 30 அடி உள்ள சாலையை விரிவுபடுத்த முடிவு செய்து விவசாய நிலங்களை கையகப்படுத்த முயற்சி நடந்து முடிகிறது. இதற்காக தென்னை மரங்களை வெட்ட வேண்டும் என்று மரங்களில் அம்புக்குறியிட்டு சென்றுள்ளனர். எனவே கோரிக்கையே இல்லாமல் சாலையை விரிவுபடுத்த தன்னிச்சையாக முயற்சிக்கும் பேரூராட்சி செயல் அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இதனைத் தொடர்ந்து விவசாயிகள் தங்களது கோரிக்கை மனுவை கலெக்டரிடம் அளித்தனர்.
- விவசாயிகளின் நீராதாரமாக உள்ள எழும்பள்ளம் ஏரியை சீரமைக்கும் உரிமையை தங்களுக்கு வழங்க வேண்டும். அல்லது வனத்துறையினர் ஏரியை சீரமைத்து தர வேண்டும் என கோஷம் எழுப்பினர்
- எழும்பள்ளம் ஏரியை சீரமைப்பதில் உள்ள பிரச்சனைகளை முடிவுக்கு கொண்டு வரவும் முறையிட உள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
கொடைக்கானல்:
கொடைக்கானல் மேல்மலை கிராமமான மன்னவனூர் பகுதியில் சூழல் சுற்றுலா மையத்திற்குள் அமைந்துள்ளது எழும்பள்ளம் ஏரி. இந்த ஏரியை இப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் பல வருடங்களாக பராமரித்து வருகின்றனர்.
ஏரியை சீரமைக்க வனத்துறையினர் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே ஏரியின் வாய்க்காலை சீரமைக்க சூழல் சுற்றுலா மையத்திற்குள் விவசாயிகள் நுழைய முயன்றனர். ஆனால் வனத்துறையினர் அவர்களை உள்ளே நுழைய விடாமல் தடுத்தனர்.
மேலும் பணியிலிருந்த அதிகாரி விவசாயிகளை தரக்குறைவாக பேசியதாக குற்றம் சாட்டி சூழல் சுற்றுலா மையத்தை முற்றுகையிட்டனர். மன்னவனூர் விவசாயிகளின் நீராதாரமாக உள்ள எழும்பள்ளம் ஏரியை சீரமைக்கும் உரிமையை தங்களுக்கு வழங்க வேண்டும். அல்லது வனத்துறையினர் ஏரியை சீரமைத்து தர வேண்டும் என சூழல் சுற்றுலா மையம் முன்பு குவிந்த விவசாயிகள் கோஷம் எழுப்பினர்.
இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இன்று மாவட்ட வன அலுவலரை சந்தித்து வனஅதிகாரி தங்களை தரக்குறைவாக பேசியது குறித்தும், எழும்பள்ளம் ஏரியை சீரமைப்பதில் உள்ள பிரச்சனைகளை முடிவுக்கு கொண்டு வரவும் முறையிட உள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
- போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருவதாக புகார்
- போலீசார் பேச்சுவார்த்தை
செங்கம்:
செங்கம் டவுன் பகுதியில் நாளுக்குநாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருவதால் செங்கத்தை அடுத்த மண்மலை பகுதியில் இருந்து குயிலம் கூட்ரோடு வரை புறவழிச்சாலை திட்டத்திற்கு விவசாயம் நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் திருவண்ணாமலை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் நேற்று திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் செங்கம் போலீசார் சம் பவ இடத்துக்கு வந்து மறிய லில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதைத் தொடர்ந்து விவசாயிகள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
- தினசரி சந்தை காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே வியாபாரம் செய்ய வேண்டும்
- உழவர் சந்தையில் விவசாயிகளுக்கு தேவையான அத்தியாவசிய வசதிகள் எதுவும் இல்லை என புகார்.
திருப்பூர் :
திருப்பூர்-பல்லடம் சாலை தென்னம்பாளையம் பகுதியில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது . இங்கு திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் நூற்றுக்கணக்கானோர் வந்து தங்கள் தோட்டங்களில் விளைவித்த காய்கறிகளை விற்பனை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் உழவர் சந்தைக்கு வெளிப்புறமாக பல்லடம் சாலையில் இரண்டு கிலோ மீட்டர் தூரத்திற்கு வியாபாரிகள் சாலையோரமாக கடை அமைத்து காய்கறிகளை வியாபாரம் செய்வதால் உழவர் சந்தைக்கு வரும் வாடிக்கையாளர்கள் சாலையோரங்களில் வாங்கி செல்வதால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்ப டுவதாகவும் , அதேபோல் உழவர் சந்தைக்கு அருகாமையில் உள்ள தினசரி சந்தை காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே வியாபாரம் செய்ய வேண்டும் என்ற விதி உள்ள நிலையில் 8 மணிக்கு முன்பாக உழவர்சந்தை நேரத்திலேயே செயல்படுவதாலும் விவசாயிகளின் வியாபாரம் பாதிக்கப்படுவதாகவும் மேலும் உழவர் சந்தையில் விவசாயிகளுக்கு தேவையான அத்தியாவசிய வசதிகள் எதுவும் இல்லை என குற்றம் சாட்டி தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் விவசாயிகள் இன்று கோரிக்கைகளை வலியுறுத்தி காய்கறிகளை சாலையில் கொட்டி போரா ட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்திருந்தனர்.
இதனையடுத்து விவசாயிகள் மற்றும் விவசாய சங்க நிர்வாகிகள் உழவர் சந்தைக்கு வந்திருந்தனர். இதனை கேள்விப்பட்டு நள்ளிரவிலேயே மாநகராட்சி அலுவலர்கள் , வேளாண்மைத்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி சாலையோரம் கடை அமைக்காத வகையில் நடவடிக்கை மேற்கொ ள்ளப்படும் எனவும் உழவர் சந்தையின் வசதிகள் குறித்து கோட்டாட்சியர் தலைமையில் பேச்சு வார்த்தை நடத்தப்படும் என தெரிவித்தனர்.
இதனையடுத்து விவசாயிகள் போராட்ட த்தை கைவிட்டு கலைந்து சென்றனர். தொடர்ந்து கோரிக்கைகள் நிறைவேறாத பட்சத்தில் அடுத்த கட்ட போராட்டம் அறிவிக்கப்படும் எனவும் விவசாயிகள் தெரிவித்தனர்.
மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் விவசாய விளைபொருள் ஏற்றுமதி கொள்கையை நிர்ணயிக்க வேளாண்மைத்துறை ஆராய்ச்சியாளர்களை நியமிக்க வேண்டும். உற்பத்தி கொள்முதலுக்கான அதிகபட்ச ஆதரவு விலையை அறுவடைக்கு 2 மாதங்களுக்கு முன்னதாகவே அறிவிக்க வேண்டும்.
இயற்கை முறையில் மட்டும் வேளாண்மை செய்யும் விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ஏக்கர் ஒன்றுக்கு 8 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை அளிக்க வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஜூன் மாதம் முதல் தேதியில் இருந்து பத்தாம் தேதிவரை தொடர் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக 130 விவசாய சங்கங்களை உள்ளடக்கிய மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள கிசான் கிராந்தி ஜன் அந்தோலன் என்னும் அமைப்பு அறிவித்திருந்தது.
இதே கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூன் பத்தாம் தேதி நாடு தழுவிய கடையடைப்பு போராட்டம் நடைபெறும் என்றும் இந்த அமைப்பின் உறுப்பினர் குசும் சாவந்த் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இம்மாநிலத்தில் அனைத்து மாவட்டங்களிலும் இன்று போராட்டம் தொடங்கியது. இன்றிலிருந்து தொடர்ந்து பத்து நாட்கள் நடைபெறும் இந்த போராட்டத்தின்போது விவசாயிகள் தங்களது விளைபொருட்களை மற்றும் பால் போன்றவற்றை சந்தைகளுக்கு அனுப்ப கூடாது என சங்கத்தின் சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளதால், காய்கறி மற்றும் தானியங்களின் விலை கணிசமாக உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.
இந்த தடையை மீறி நீமுச் பகுதியில் சிலர் விளைபொருட்களை சந்தைக்கு கொண்டு செல்ல முயன்றபோது போராட்டக்காரர்கள் வழிமறித்து தகராறில் ஈடுபட்டனர்.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் மாநிலம் தழுவிய அளவில் நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தின்போது மன்ட்சூர் பகுதியில் வெடித்த வன்முறையை கட்டுப்படுத்த போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் உயிரிழந்தனர்.
தற்போது, தொடங்கியுள்ள போராட்டமும் வன்முறை களமாக மாறிவிடாதபடி போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். அரசியல் கட்சி தலைவர்களை உளவுத்துறை காவலர்கள் நோட்டமிட்டு வருகின்றனர். இந்தூர் நகரில் உள்ள மாநில காவல்துறை தலைமை அலுவலகத்தில் தனி கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. #MPFarmersstrike
இயற்கை முறையில் மட்டும் வேளாண்மை செய்யும் விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ஏக்கர் ஒன்றுக்கு 8 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை அளிக்க வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஜூன் மாதம் முதல் தேதியில் இருந்து பத்தாம் தேதிவரை தொடர் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 130 விவசாய சங்கங்களை உள்ளடக்கிய கிசான் கிராந்தி ஜன் அந்தோலன் என்னும் அமைப்பு அறிவித்துள்ளது.
இதே கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூன் பத்தாம் தேதி நாடு தழுவிய கடையடைப்பு போராட்டம் நடைபெறும் என்றும் இந்த அமைப்பின் உறுப்பினர் குசும் சாவந்த் தெரிவித்துள்ளார். #MaharashtraFarmersstrike #bharatbandh
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்