search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "feast"

    • 124-வது ஆண்டு பெருவிழா நேற்று தொடங்கியது.
    • 11-ந்தேதி லூர்து மாதாவின் தேர்த்திருவிழா நடைபெறுகிறது.

    சென்னை:

    சென்னை பெரம்பூர் தூய லூர்து அன்னை ஆலய 124-வது ஆண்டு பெருவிழா நேற்று தொடங்கியது. இன்று முதல் தினமும் மாலையில் திருப்பலி நடக்கிறது. வருகிற 8, 9-ந்தேதிகளில் அருட்தந்தை ஸ்டீபன் தச்சீல் சிறப்பு நற்செய்தி கூட்டமும், குணமளிக்கும் வழிபாடும் நடக்கிறது. வருகிற 10-ந்தேதி நற்கருணை பவனி நடைபெறுகிறது. 11-ந்தேதி லூர்து மாதாவின் தேர்த்திருவிழா நடைபெறுகிறது.

    இந்த 2 நாட்களிலும் மாபெரும் தேர் பவனியானது ஆலயத்தை சுற்றியுள்ள வீதிகளின் வழியாக சென்று இறுதியில் ரெயில்வே மைதானத்தில் ஒன்று கூடி திருப்பலியோடு நிறைவுபெறும். 11-ந்தேதி பாளையங்கோட்டை முன்னாள் ஆயர் ஜுடு பால்ராஜ் தலைமையில் திருப்பலி நடக்கிறது. இதில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் எரியும் மெழுகு வர்த்திகளை கையில் ஏந்தியவாறு பவனியாக வந்து பங்கேற்கிறார்கள்.

    • திருவண்ணாமலை தீப திருவிழாவில் பணியாற்றியவர்கள்
    • நகராட்சி சார்பில் வழங்கப்பட்டது

    வேங்கிக்கால்:

    திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா வெகு விமரிசையாக நடந்து முடிந்தது.

    கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்ட நவம்பர் 26-ந் தேதி மற்றும் 3 நாட்களில் அண்ணாமலையை 40 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வலம் வந்து வழிபட்டனர்.

    திருவண்ணாமலை நகராட்சி சார்பில் திருவண்ணாமலை நகரம் மற்றும் கிரிவலப்பாதைகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியாளர்களை கொண்டு தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது.

    இந்த பணிக்காக ஆற்காடு, அரக்கோணம், திருவத்திபுரம், வந்தவாசி, திண்டிவனம், ஆரணி, வாலாஜாபேட்டை, விழுப்புரம், குடியாத்தம், வாணியம்பாடி, ராணிப்பேட்டை, ஜோலார்பேட்டை, கள்ளக்கு றிச்சி, பேரணாம்பட்டு, மேல்விஷாரம், சோளிங்கர், உளுந்தூர்பேட்டை, ஆம்பூர், திருப்பத்தூர் ஆகிய நகராட்சிகளில் இருந்து தூய்மை பணியாளர்கள் வரவழைக்கப்பட்டனர்.

    இவர்களுடன் திருவண்ணாமலை நகராட்சியை சேர்ந்த தூய்மை பணியாளர்கள் இணைந்து கார்த்திகை தீபத்திருவிழா தூய்மை பணிகளை வெகு சிறப்பான முறையில் செய்தனர்.

    உடனுக்குடன் குப்பைகளை அகற்றி திருவண்ணாமலை நகரையும், கிரிவலப் பாதையையும் சுத்தமாக வைத்திருந்த நகராட்சி தூய்மை காவலர்களை பொதுமக்கள், ஆன்மிக பக்தர்கள் பாராட்டி சென்றனர்.

    நகராட்சி பணியாளர்களின் அர்ப்பணிப்பு மிக்க பணியை பாராட்டிய திருவண்ணா மலை நகராட்சி நிர்வாகம் அவர்களுக்கு விருந்தளித்தனர்.

    நகரமன்ற தலைவர் நிர்மலா வேல்மாறன், வேலூர் மண்டல நகராட்சி நிர்வாக இயக்குநர் தனலட்சுமி ஆகியோர் தங்கள் கைகளால் உணவு பரிமாறி அனைவருக்கும் நன்றி தெரிவித்தனர்.

    நகராட்சி ஆணையாளர் தட்சிணாமூர்த்தி, சீனியர் தடகள சங்க மாவட்ட தலைவர் ப.கார்த்தி வேல்மாறன், நகர மன்ற துணைத் தலைவர் சு.ராஜாங்கம், பொறியாளர் நீலேஸ்வர், உதவி பொறியாளர் ரவி உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

    • மணமக்களின் பெற்றோர் இந்த திருமணத்தை யூத முறைப்படி நடத்த முடிவு செய்தனர்.
    • இறுதியில் ஹீப்ரு பாடல்கள் படியும், நடனமாடியும் இந்த விழா நடந்தது.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் ஏராளமான யூத ஆலயங்கள் உள்ளன. மேலும் இங்கு யூத இனத்தை சேர்ந்தவர்களும் வசித்து வந்தனர். தற்போது இந்த ஆலயங்கள் அனைத்தும் காட்சிகூடங்களாக மாறிவிட்டன. இதனால் இங்கு திருமணம் போன்ற சடங்குகள் இப்போது நடப்பதில்லை.

    இந்நிலையில் கொச்சியை சேர்ந்த முன்னாள் போலீஸ் அதிகாரியின் மகள் மஞ்சுஷா மரியம் இம்மானுவேலுக்கும், அமெரிக்காவை சேர்ந்த விஞ்ஞானி ரிச்சர்ட்டு ரோவுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

    மணமக்களின் பெற்றோர் இந்த திருமணத்தை யூத முறைப்படி நடத்த முடிவு செய்தனர். தற்போது யூத ஆலயங்களில் இந்த திருமணம் நடப்பதில்லை என்பதால் கொச்சியில் உள்ள ஒரு ரிசார்ட்டில் யூத ஆலயம் போன்ற கூடாரம் அமைக்கப்பட்டது.

    அந்த கூடாரத்தில் யூத முறைப்படி இந்த திருமணம் நடைபெற்றது. இதனை நடத்தி கொடுக்க இஸ்ரேலை சேர்ந்த மதகுரு வந்திருந்தார். அவர் முன்னிலையில் முதலில் மணமக்கள் மோதிரம் மாற்றி திருமண ஒப்பந்தம் செய்து கொண்டனர். அடுத்து கெதுபா படித்து, கண்ணாடியை உடைத்து திருமண பந்தத்தில் இணைந்தனர். இறுதியில் ஹீப்ரு பாடல்கள் படியும், நடனமாடியும் இந்த விழா நடந்தது.

    இதில் மணமக்களின் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். இதுபற்றி விருந்துக்கு வந்தவர்கள் கூறும்போது, கடந்த 2008-ம் ஆண்டு இங்கு யூத முறைப்படி திருமணம் நடந்தது. அதன்பின்பு 15 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது தான் அதுபோன்ற திருமணம் நடந்துள்ளது, என்றனர்.

    • பொதுமக்களுடன் கலெக்டர் உணவருந்தினார்
    • நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்

    அரியலூர்,

    அரியலூர் ஸ்ரீகோதண்ட ராமசாமி திருக்கோவிலில் நடைபெற்ற சிறப்பு சமத்துவ விருந்தில் பொதுமக்களுடன் மாவட்டகலெக்டர் ரமண சரஸ்வதி கலந்து கொண்டு உணவருந்தினார்.அரியலூர் மாவட்டத்தில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் தீண்டாமை ஒழித்து மத நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் விதமாக ஸ்ரீகோதண்டராமசாமி திருக்கோவிலில் நடைபெற்ற சமத்துவ விருந்தில் மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி கலந்துகொண்டார்.இந்நிகழ்ச்சியில் அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் கு.சின்னப்பா முன்னிலை வகித்தார். ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் தமிழக முதலமைச்சர் ஆலயங்கள் தோறும் அன்னதானம் எனும் திட்டத்தின்கீழ் தமிழகம் முழுவதும் திருக்கோ யில்களில் அன்ன தானம் வழங்க உத்தரவி ட்டுள்ளார்.அனைத்து மக்களும் சமம் என்ற உன்னத நோக்கத்தின் அடிப்படையில் தமிழக அரசின் சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் மூலம் தீண்டாமை ஒழிப்பு தொடர்பாக சமத்துவ விருந்து ஏற்பாடு செய்யப்பட்டு, அனைத்து சமூக மக்களுக்கும் ஒன்றாக விருந்து அளிக்கும் நோக்கில் சமத்துவ விருந்து வழங்கப்படுகிறது என மாவட்ட கலெக்டர் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் விஜயபாஸ்கர், தனித்துணை ஆட்சியர் (ச.மூ.பா.தி) திரு.குமார், வட்டாட்சியர் கண்ணன் மற்றும் அரசு அலுவலர்கள், பொது மக்கள் கலந்து கொண்டனர்.


    • சுதந்திர தின விழாவை முன்னிட்டு சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் சமபந்தி விருந்து நடந்தது.
    • ராஜா எம்.எல்.ஏ. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சமபந்தி விருந்தில் பங்கேற்றவர்களுக்கு வேஷ்டி, சேலை மற்றும் உணவு வழங்கினார்.

    சங்கரன்கோவில்:

    சுதந்திர தின விழாவை முன்னிட்டு சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் சமபந்தி விருந்து நடந்தது. கோவில் துணை ஆணையர் ரத்தினவேல் பாண்டியன் தலைமை தாங்கினார். சேர்மன் உமா மகேஸ்வரி சரவணன், நகராட்சி கமிஷனர் ரவிச்சந்திரன், மேலநீலிதநல்லூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் பெரியதுரை, சங்கரன்கோவில் நகர நிர்வாகி பிரகாஷ், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ராஜா எம்.எல்.ஏ. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சமபந்தி விருந்தில் பங்கேற்றவர்களுக்கு வேஷ்டி, சேலை மற்றும் உணவு வழங்கினார். தொடர்ந்து அவர்களுடன் சமபந்தி விருந்தில் பங்கேற்றார். இதில் மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு உறுப்பினர் மாரியப்பன், நகராட்சி கவுன்சிலர்கள் புஷ்பம், அலமேலு, விஜய்குமார், செல்வராஜ், குருப்பிரியா ராமராமர், தி.மு.க. வக்கீல் சதீஷ், காவல் கிளி ஜெயக்குமார், சங்கர், மாணவரணி கார்த்தி, அப்பாஸ்அலி, வார்டு செயலாளர்கள் ஜிந்தாமைதீன், கோமதிநாயகம் மற்றும் அன்சாரி பீர்முகமது, பிரபாகரன், கோமதி சங்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    முன்னதாக ராஜா எம்.எல்.ஏ. மற்றும் சேர்மன் உமாமகேஸ்வரி சரவணன் ஆகியோர் கோவிலில் உள்ள பூலித்தேவர் அறைக்கு சென்று அவரது படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதேபோல கவுரி சங்கர் தியேட்டர் சாலையில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    • 75-வது சுதந்திர தின அமுத பெருவிழா வாகன பேரணி நடைபெற்றது.
    • இந்த ஊர்வலத்தில் இன்ஸ்பெக்டர் தொல்காப்பி–யன், சப்-இன்ஸ்பெக்டர் முரளிதரன், கோவிந்தன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    தாரமங்கலம்:

    தாரமங்கலத்தில் போலீசார் மற்றும் பொது–மக்கள் கலந்துகொண்ட 75-வது சுதந்திர தின அமுத பெருவிழா வாகன பேரணி நடைபெற்றது. தாரமங்கலம் போலீஸ் நிலையம் முன்பு இருந்து டி.எஸ்.பி. சங்கீதா தொடங்கி வைத்தார்.

    பேரணி அண்ணாசிலை, தேர்நிலையம், காமராஜர் சிலை, பஸ் நிலையம் வழியாக சென்று மீண்டும் போலீஸ் நிலையத்தில் நிறைவடைந்தது.

    பேரணியில் 100 இருசக்கர வாகனங்களும், 10 நான்கு சக்கர வாகனங்களும் தேசிய கொடிகளை கட்டியவாறு அணிவகுத்து சென்றது. இந்த ஊர்வலத்தில் இன்ஸ்பெக்டர் தொல்காப்பி–யன், சப்-இன்ஸ்பெக்டர் முரளிதரன், கோவிந்தன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • ராசிபுரம் அருகே உள்ள மலையாம்பட்டி கிராமத்தில் ஆலமரத்தடியில் குடிகொண்டிருக்கும் மலையாள தெய்வம் பொங்களாயி அம்மன் திருவிழா ஆண்டுதோறும் ஆடி மாதம் நடந்து வருகிறது.
    • இந்த திருவிழா வருகிற 31-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) இரவு நடக்கிறது.

    ராசிபுரம்:

    ராசிபுரம் அருகே உள்ள மலையாம்பட்டி கிராமத்தில் ஆலமரத்தடியில் குடிகொண்டிருக்கும் மலையாள தெய்வம் பொங்களாயி அம்மன் திருவிழா ஆண்டுதோறும் ஆடி மாதம் நடந்து வருகிறது. பொங்களாயி அம்மன் திருவிழாவில் ஆண்கள் மட்டுமே கலந்து கொள்வர்.

    பொதுமக்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றும் வகையில் நேர்த்தி கடனாக ஆடுகளை பலியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

    இந்த திருவிழா வருகிற 31-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) இரவு நடக்கிறது. அப்போது பக்தர்கள் நேர்த்தி கடனாக வழங்கிய ஆடுகளை பலியிட்டு பொங்கல் வைத்து அம்மனை வழி பட்ட பிறகு விடிய விடிய கறி விருந்து(சமபந்தி விருந்து) பொதுமக்களுக்கு வழங்குவார்கள். சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வர்கள் சேலம்,நாமக்கல், சின்னசேலம், கள்ளக்குறிச்சி, ஆத்தூர், அரியலூர், பெரம்பலூர், ஈரோடு, ராசிபுரம் உள்பட பல்வேறு கிராமபகுதிகளில் இருந்து கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஏற்பாடுகளை தர்ம கருத்தாக்கள் சுப்பிரமணியம், ஆனந்த், சுப்பிரமணி மற்றும் விழாக்குழுவினர், ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

    சுதந்திர தின விழாவையொட்டி திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கோவில்களில் பொது விருந்து நடந்தது.
    திருவாரூர்:

    சுதந்திர தின விழாவையொட்டி திருவாரூர் தியாகராஜர் கோவிலில் பொது விருந்து நடந்தது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் நிர்மல்ராஜ் கலந்து கொண்டார். இதில் உதவி கலெக்டர் முருகதாஸ், செயல் அதிகாரி ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதேபோல காகிதகாரத் தெருவில் உள்ள சீதளாதேவி மாரியம்மன் கோவிலில் பொது விருந்து நடைபெற்றது. இதில் திரளானோர் கலந்து கொண்டனர்.

    இதேபோல் ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில் சுதந்திர தின விழாவையொட்டி சிறப்பு வழிபாடு மற்றும் பொதுவிருந்து நடந்தது. இதையொட்டி அனைத்து சன்னதிகளிலும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. மூலவர் குருபகவானுக்கு தங்ககவசம் சாற்றப்பட்டிருந்தது.

    திருவாரூர் மாவட்ட வருவாய் அதிகாரி சக்திமணி, அறநிலைய உதவி ஆணையரும், கோவில் செயல் அலுவலருமான தமிழ்ச்செல்வி மற்றும் திரளானோர் கலந்து கொண்டனர்.

    வலங்கைமான் மகாமாரியம்மன் கோவிலில் சுதந்திர தின விழாவையொட்டி சிறப்பு வழிபாடு மற்றும் பொதுவிருந்து நடந்தது. இதனையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரத்துடன், தீபாராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து பொதுவிருந்து நடந்தது. இதில் கூட்டுறவு சங்க தலைவர் குணசேகரன், முன்னாள் பேரூராட்சி தலைவர் ஜெயபால், அவளிவநல்லூர் முன்னாள் ஊராட்சி தலைவர் சங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் சிவக்குமார் மற்றும் நிர்வாகிகள், ஊழியர்கள் செய்து இருந்தனர்.
    ×