என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "fee"
- பள்ளி இறுதித் தேர்வில் வெற்றி பெறாதவர்களுக்கு துணை தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
- 10-ம் வகுப்பு துணைத் தேர்வு நிலை 2-ந்தேதி தொடங்கி 8-ந்தேதி வரை நடைபெறுகிறது.
சென்னை:
தமிழகத்தில் நேற்று 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. தேர்வு எழுதிய 8.94 லட்சம் மாணவ-மாணவிகளில் 91.55 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர்.
பள்ளி இறுதித் தேர்வில் வெற்றி பெறாதவர்களுக்கு துணை தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அந்த துணை தேர்வுக்கான அட்டவணை இன்று வெளியிடப்பட்டது.
10-ம் வகுப்பு பொதுத் தேர்வினை பள்ளி மாணவர்களாக எழுதி தேர்ச்சி பெறாதவர்கள், வருகை புரியாத மாணவர்கள் தேர்ச்சி பெறாத பாடங்களை மீண்டும் எழுத துணைத் தேர்வு நடத்தப்படுகிறது.
மீண்டும் தேர்வு எழுத அவர்கள் படித்த பள்ளிக்கு நேரில் சென்று 16-ந்தேதி முதல் ஜூன் 1-ந்தேதி வரை காலை 11 மணி முதல் மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
ஜூலை மாத துணைத் தேர்விற்கு தற்போது விண்ணப்பிக்க விரும்பும் தகுதியுள்ள தனித்தேர்வர்கள் மற்றும் ஏப்ரலில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வினை எழுதி தேர்ச்சி பெறாத, வருகை புரியாத தனித்தேர்வர்களும் 16-ந்தேதி முதல் ஜூன் 1-ந்தேதி வரை கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள சேவை மையங்கள் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.
செய்முறை தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள், வருகை புரியாதவர்கள், அறிவியல் பாட செய்முறை பயிற்சி வகுப்பில் சேர 16-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை மாவட்ட கல்வி அலுவலகங்களுக்கு சென்று கட்டணம் ரூ.125 பணமாக செலுத்தி பெயர்களை பதிவு செய்து ஒப்புகை சீட்டு பெற்றுக் கொள்ள வேண்டும். இந்த அனுமதி சீட்டை காண்பித்தால் மட்டுமே அறிவியல் பாட செய்முறை பயிற்சி வகுப்பிற்கு அனுமதிக்கப்படுவார்கள். 10-ம் வகுப்பு தேர்வு கட்டணம் ரூ.125, ஆன்லைன் பதிவு கட்டணம் ரூ.70, மொத்தம் ரூ.195. இதனை சேவை மையத்தில், பள்ளியில் பணமாக செலுத்த வேண்டும்.
மேற்கண்ட நாட்களில் விண்ணப்பிக்க தவறியவர்களுக்கு சிறப்பு அனுமதி திட்டத்தில் ஜூன் 3 மற்றும் 4-ந்தேதி ஆகிய 2 நாட்களில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். சிறப்பு அனுமதி கட்டணம் ரூ.500 ஆகும்.
ஆன்லைனில் விண்ணப்பத்தினை பதிவு செய்த பிறகு, தேர்வர்களுக்கு ஒப்புகை சீட்டு வழங்கப்படும். அதில் குறிப்பிட்டுள்ள விண்ணப்ப எண்ணை பயன்படுத்தி ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம்.
10-ம் வகுப்பு துணைத் தேர்வு நிலை 2-ந்தேதி தொடங்கி 8-ந்தேதி வரை நடைபெறுகிறது. ஜூலை 2-ந் தேதி தமிழ், 3-ந்தேதி ஆங்கிலம், 4-ந்தேதி கணிதம், 5-ந்தேதி அறிவியல் 6-ந்தேதி விருப்ப மொழிப்பாடம், 8-ந்தேதி சமூக அறிவியல் பாடங்களுக்கு தேர்வு நடத்தப்படும். தேர்வுகள் அனைத்தும் காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 1.15 மணி வரை நடைபெறும்.
மேற்கண்ட தகவலை தேர்வுத்துறை இயக்குனர் சேதுராம வர்மா தெரிவித்துள்ளார்.
- 9-வது சர்வதேச பலூன் திருவிழா பொள்ளாச்சி அருகே உள்ள ஆச்சிப்பட்டியில் இன்று காலை தொடங்கியது.
- காலை 10 மணி முதல் மாலை 4.30 மணி வரை இந்த ஹெலிகாப்டரில் ஏறி பொதுமக்கள் பயணிக்கலாம்.
பொள்ளாச்சி:
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் சர்வதேச பலூன் திருவிழா ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.
தமிழக அரசின் சுற்றுலா வளர்ச்சித்துறை மற்றும் தனியார் அமைப்பு இணைந்து நடத்தும் இந்த திருவிழாவில் வெளிநாடுகளில் இருந்து ராட்சத பலூன்கள் வரவழைக்கப்பட்டு பறக்கவிடப்படும். இதனை காணவும், பலூனில் ஏறி பயணிக்கவும் அங்கு ஏராளமானோர் கூடுவார்கள்.
இந்த ஆண்டுக்கான 9-வது சர்வதேச பலூன் திருவிழா பொள்ளாச்சி அருகே உள்ள ஆச்சிப்பட்டியில் இன்று காலை தொடங்கியது. இந்த முறை பிரான்ஸ், நெதர்லாந்து, ஸ்பெயின், ஜப்பான், தாய்லாந்து, வியட்நாம் உள்ளிட்ட 8 நாடுகளில் இருந்து 11 ராட்சத பலூன்கள் வரவழைக்கப்பட்டு உள்ளன.
இன்று காலை ராட்சத பலூன்களில் வெப்பக்காற்றை நிரப்பி பிரேத்யக பைலட்டுகள் மூலம் வானில் பலூன்கள் பறக்கவிடப்பட்டன. இந்த பலூன்கள் சில கிலோமீட்டர் தூரம் பறந்து சென்றன. இதில் பொதுமக்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.
தொடர்ந்து வெப்ப பலூன்கள் நிலைநிறுத்தப்படுகிறது. அந்த பலூன்களில் பொதுமக்கள் ஏறி பறக்கலாம். சுமார் 500 அடி உயரத்துக்கு இந்த பலூன்கள் பறக்கவிடப்படும். இந்த பலூனில் வானில் பறந்தபடி பொள்ளாச்சி நகரையும், அருகே பச்சை பசேலென காட்சி அளிக்கும் இயற்கை அழகையும் ரசிக்கலாம். குழந்தைகளை கவரும் வகையில் யானை, வாத்து, தவளை உருவங்களை கொண்ட பலூன்கள் உள்ளன. இந்த பலூன்களில் பறக்க ஒரு நபருக்கு ரூ.1,500 வசூலிக்கப்படுகிறது.
பலூன் திருவிழாவை முன்னிட்டு சுற்றுலாபயணிகள் ஏராளமானோர் இன்று காலை முதலே பொள்ளாச்சியில் குவிந்து வருகிறார்கள். அவர்கள் வானில் பறக்கும் பலூன்களையும், ஒளி வெள்ளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பலூன்களையும் பார்த்து ரசித்து வருகிறார்கள். இந்த பலூன் திருவிழா வருகிற 16-ந் தேதி தொடர்ந்து நடக்கிறது.
இதுதவிர பொதுமக்களை கவரும் வகையில் சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. இசை நிகழ்ச்சி, குழந்தைகளுக்கான விளையாட்டுகள், உணவு அரங்குகளும் அமைக்கப்பட்டு உள்ளது. மேலும் 3 பிரிவுகளாக மாரத்தான் போட்டி நடத்தப்படுகிறது. இந்த 3 பிரிவுகளிலும் முதலிடம் பிடிப்போர் பலூனில் இலவசமாக பறக்க அனுமதிக்கப்படுகிறார்கள். மேலும் சுற்றுலா ஹெலிகாப்டரும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. காலை 10 மணி முதல் மாலை 4.30 மணி வரை இந்த ஹெலிகாப்டரில் ஏறி பொதுமக்கள் பயணிக்கலாம். ஹெலிகாப்டரில் பறந்தபடி பொள்ளாச்சி நகரை பொதுமக்கள் ரசிக்கலாம்.
- ஆண் மற்றும் பெண் இருபாலருக்கும் பயிற்சியினை தாட்கோ சார்பாக அளிக்கப்பட உள்ளது.
- ஆரம்ப கால மாத சம்பளமாக ரூ.18 ஆயிரம் முதல் ரூ.18,500 வரை பெற வழி வகை செய்யப்படும்.
விழுப்புரம்:
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இளைஞர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சி திட்டங்களை வழங்கி வருகிறது. இதன் அடிப்படையில் தற்போது சென்னையில் உள்ள ஸ்மைல் ஸ்கில் இந்தியா பயிற்சி நிலையத்தின் மூலமாக திறன்பேசி தொழில்நுட்பவியலாளர் பெண்களுக்கும் மற்றும் உற்பத்தி ஊழியர் பயிற்சி ஆண் மற்றும் பெண் இருபாலருக்கும் பயிற்சியினை தாட்கோ சார்பாக அளிக்கப்பட உள்ளது.
இப்பயிற்சியில் சேர ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினராக இருத்தல் வேண்டும். 10-ம் வகுப்பு படித்த 18 முதல் 35 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சிக்கான கால அளவு 12 நாட்கள் ஆகும். மேலும் சென்னையில் பயிற்சி அளிக்கும் நிறுவனத்தில் தங்கி படிக்கும் வசதியும் இப்பயிற்சியினை முழுமை யாக முடிக்கப்பவர்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட தரச் சான்றிதழ் வழங்கப்படும். மேலும் இப்பயிற்சியினை பெற்றவர்கள் தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு அளிக்க நடவ டிக்கை மேற்கொ ள்ளப்படும். இப்பயிற்சியில் வெற்றிகரமாக முடிப்பவர்களுக்கு ஆரம்ப கால மாத சம்பளமாக ரூ.18 ஆயிரம் முதல் ரூ.18,500 வரை பெற வழி வகை செய்யப்படும். இப்பயிற்சியினை பெற தாட்கோ இணையதளம் www.tahdco.com என்ற முகவரி மூலம் விண்ணப்பி க்கலாம். பயிற்சிக்கான தங்கும் விடுதி மற்றும் பயிற்சிகட்டணத்தை தாட்கோ வழங்கும். இத் தகவலை விழுப்புரம் மாவட்ட கலெக்டர் பழனி தெரிவித்துள்ளார்.
- போலீஸ் இன்ஸ்பெக்டரை விட போலீஸ் மோப்ப நாய்க்கு வாடகை அதிகமாக இருக்கிறது.
- அரசின் நிதி நெருக்கடியை சரிசெய்வதற்கான திட்டம் என்று கருத்து நிலவியது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலத்தில் போலீஸ் நிலையங்களை வாடகைக்கு எடுக்கலாம் என்று கேரள காவல்துறை தெரிவித்துள்ளது. போலீஸ் நிலையத்துடன் இன்ஸ்பெக்டர் மோப்பநாய், வயர்லெஸ் கருவிகள் உள்ளிட்டவைகளையும் கட்டணம் செலுத்தி வாடகைக்கு எடுத்துக் கொள்ளலாம் என்று கூறியுள்ளது.
மேலும் ஒவ்வொரு வசதிக்கான கட்டண பட்டியலையும் வெளியிட்டிருக்கிறது. நாள் ஒன்றுக்கு போலீஸ் நிலையத்திற்கு ரூ12 ஆயிரம், வயர்லெஸ் கருவிகளுக்கு ரூ12ஆயிரத்து 130, மோப்ப நாய்க்கு ரூ7ஆயிரத்து 280, போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு ரூ3 ஆயிரத்து 35 முதல் ரூ3ஆயிரத்து 340 வரை என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மொத்தமாக ஒரு போலீஸ் நிலையம், ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர், வயர்லெஸ் கருவிகள், மோப்பநாய் என அனைத்தும் சேர்த்து ரூ34 ஆயிரத்து 750 கட்டணமாக இருக்கிறது. இன்ஸ்பெக்டருக்கு பதிலாக சிவில் போலீஸ அதிகாரிக்கான கட்டணம் ரூ610 ஆகும்.
காவல்துறை வெளியிட்டுள்ள இந்த பட்டிலின்படி, போலீஸ் இன்ஸ்பெக்டரை விட போலீஸ் மோப்ப நாய்க்கு வாடகை அதிகமாக இருக்கிறது. ஆனால் அதற்கான காரணம் தெளிவாக கூறப்படவில்லை.
காவல்துறையின் இந்த முடிவுக்கு பலர் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். அரசு அதிகாரிகள் சிலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள்.
அரசின் நிதி நெருக்கடியை சரிசெய்வதற்கான திட்டம் என்று கருத்து நிலவியது. ஆனால் இது நிதிநிலையை உயர்த்துவதற்கான திட்டம் இல்லை என்றும், இது ஏற்கனவே உள்ள பழைய திட்டம் எனவும், புதிய கட்டணங்களுடன் தற்போது வெளிவந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
- நீட் , கியூட் போன்ற நுழைவு தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும்.
- உயர்த்தப்பட்ட கல்வி கட்டணங்களை திரும்ப பெற வேண்டும்.
தஞ்சாவூர்:
நீட் , கியூட் போன்ற நுழைவு தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் ,
தேசிய கல்விக் கொள்கையை திரும்ப பெற வேண்டும். நிறுத்தப்பட்ட கல்வி உதவித் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். உயர்த்தப்பட்ட கல்வி கட்டணங்களை திரும்பப் பெற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று தஞ்சை மன்னர் சரபோஜி அரசு கல்லூரி மாணவ-மாணவிகள் கல்லூரி முன்பு திரண்டனர்.
பின்னர் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பா ட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கு இந்திய மாணவர் சங்கம் கிளை நிர்வாகி தமிழரசன் தலைமை தாங்கினார். மாவட்டத் தலைவர் அர்ஜுன் முன்னிலை வைத்தார். கிளை நிர்வாகி ஜெகன் வரவேற்புரை ஆற்றினார். மாவட்ட செயலாளர் சந்துரு , கிளை நிர்வாகிகள் எடிசன் ராஜதுரை, மூர்த்தி, நித்திஷ், சரண், ஹரிஷ் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
ஆர்ப்பாட்டத்தில் நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதில் ஏராளமான மாணவ -மாணவிகள் கலந்து கொண்டனர்.
தாராபுரம்:
தாராபுரம் மின்சார வாரிய நிர்வாக கோட்ட செயற்பொறியாளர் வ.பாலன் வெளியிட்டுள்ள செயதிக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தாராபுரம் மின்வாரிய கோட்டம் மூலனூர் பிரிவு அலுலகத்தில் நிர்வாக காரணத்தினால் மே மற்றும் ஜூன் மாத கணக்கீடு செய்ய இயலவில்லை. இதனால் கணேசன்புதூர், எம்.ஜி.வலசு, எம். காளிபாளையம், சமுத்திரவலசு பகுதி மின்நுகர்வோர் மே மற்றும் ஜூன் மாதங்களுக்கு ஏற்கனவே மார்ச் மாதம் கட்டிய மின்கட்டணத் தொகையையே மே மாதத்திற்–கும், ஏப்ரல் மாதம் கட்டிய மின்கட்டணத் தொகையையே ஜூன் மாதத்திற்கும் செலுத்தலாம்.
அதே போன்று தாராபுரம் கோட்டத்தில் கள்ளிவலசு பிரிவு அலுவலகத்தில் நிர்வாக காரணத்தினால் மே மாதம் மின் கணக்கீடு செய்ய இயலவில்லை. அதனால் மே மாத கணக்கீட்டு பணியில் கணக்கீடு மேற்கொள்ள இயலவில்லை. ஆகவே மின்நுகர்வோர்கள் மார்ச் மாதம் கட்டிய மின்கட்டணத் தொகையையே மே மாதத்திற்கு செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
- 11 குடியிருப்புகளின் குடிநீா் இணைப்புகளை நகராட்சி ஊழியா்கள் துண்டித்தனா்.
- நிலுவையில் உள்ள குடிநீா்க் கட்டணங்களை செலுத்தும்படி காங்கயம் நகராட்சி சாா்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
காங்கயம்:
காங்கயத்தில் குடிநீா்க் கட்டணம் செலுத்தாததால் 11 வீடுகளின் குடிநீா் இணைப்புகளை நகராட்சி ஊழியா்கள் துண்டித்தனா்.
2020ம் நிதி ஆண்டு முதல் தற்போது வரை நிலுவையில் உள்ள குடிநீா்க் கட்டணங்களை செலுத்தும்படி காங்கயம் நகராட்சி சாா்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதனைத் தொடா்ந்து, குடிநீா்க் கட்டணம் செலுத்தாத காங்கயம் சத்யா நகா், தொட்டியபட்டி ஆகிய பகுதிகளில் உள்ள 11 குடியிருப்புகளின் குடிநீா் இணைப்புகளை நகராட்சி ஊழியா்கள் துண்டித்தனா்.
இது குறித்து காங்கயம் நகராட்சி ஆணையா் வெங்கடேஷ்வரன் கூறியதாவது:-
காங்கயம் நகராட்சிப் பகுதி பொதுமக்கள் நிலுவையில் உள்ள குடிநீா்க் கட்டணங்களை உடனடியாக செலுத்தி குடிநீா் இணைப்பு துண்டிப்பு நடவடிக்கையை தவிா்த்துக் கொள்ள வேண்டும். தவறும்பட்சத்தில் குடிநீா் இணைப்பு துண்டிக்கப்படும் என்றாா்
- தேர்வு கட்டணம் உயர்வுக்கு கண்டனம்.
- பழைய கட்டணத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.
நன்னிலம்:
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வந்த, கல்லூரி வேண்டும் என்ற கோரிக்கை நிறைவேற்றப்பட்டு, பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் மூலம், பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியாக தொடங்கப்பட்டு, தற்போது அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆக மாறி உள்ளது நன்னிலம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி.
தற்போது தேர்வு கட்டணம் உயர்த்தப்பட்டதை கண்டித்து, கல்லூரி மாணவ, மாணவிகள் திடீர் வகுப்புப் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு, கல்லூரிக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில், கட்டணம் உயர்த்தப்பட்டதை கைவிடக்கோரியும், ஏற்கனவே வாங்கிய பழைய கட்டணத்தையே நடைமுறைப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
கடந்த செமஸ்டர் தேர்வில் இளங்கலையில் தேர்வு கட்டணம் 75 ரூபாய் இருந்ததை தற்போது 120 ரூபாயும், முதுகலையில் 150 ரூபாய் இருந்த தேர்வு கட்டணம் தற்போது 200 ரூபாய் உயர்ந்துள்ளது.
அதேபோல் செய்முறை கட்டணமும் உயர்ந்துள்ளதால் பழைய கட்டணத்தை அமல்படுத்த வேண்டும் என்று கோஷம் எழுப்பினர்.
- மின் கட்டண உயர்வை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும்.
- புதிய மின் இணைப்பு பதிவு கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும்.
தஞ்சாவூர்:
மின் கட்டண உயர்வை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும், மாதந்தோறும் மின் அளவீடு செய்ய வேண்டும்,
புதிய மின் இணைப்பு பதிவு கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தஞ்சை ரெயில் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதற்கு மாநகர செயலாளர் வடிவேலன் தலைமை தாங்கி னார். மாவட்ட செயலாளர் சின்னை.பாண்டியன், மூத்த தலைவர் சீனிவாசன், மாவட்டக்குழு நிர்வாகிகள் குருசாமி, சரவணன், வசந்தி, மாநகர குழு நிர்வாகிகள் அன்பு, கரிகாலன், ராஜன், கோஸ்கனி, அப்துல்நசீர், ராஜன், காதர்உசேன், அருண்குமார், வின்சி லாராணி, பைந்தமிழ், 35-வது வார்டு மாமன்ற உறுப்பினர் வைஜெயந்திமாலா முருகேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
போளூர் தாலுகா வெள்ளூர் கிராமத்தை சேர்ந்த கீர்த்தனா என்பவர் கடந்த மாதம் 9-ந் தேதி கலெக்டர் கே.எஸ்.கந்தசாமியை சந்தித்து, தான் கண்ணமங்கலத்தில் உள்ள தனியார் கல்லூரியில் டிப்ளமோ இன் நர்சிங் முதலாம் ஆண்டு படிப்பதாகவும், வயதான பாட்டியால் படிக்க வைக்க முடியாத நிலையில் தொடர்ந்து படிக்க உதவிடுமாறும் கோரிக்கை வைத்தார். இதுகுறித்து விசாரணை செய்ய சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
விசாரணையில், அந்த மாணவி கண்ணமங்கலத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் படித்து வருவதும், கீர்த்தனாவிற்கு 5 வயது இருக்கும் போது அவரது தாய், தந்தை இருவரும் இறந்துவிட்டதும் அதன் பின்னர் அவரது பாட்டி அம்பிகா, அவரை வளர்த்து வருகிறார் என்பதும் தெரியவந்தது.
இதனையடுத்து கலெக்டர் கந்தசாமி, கல்லூரி நிர்வாகத்தை தொடர்பு கொண்டு மாணவி கீர்த்தனாவின் குடும்ப நிலையினை சொல்லி கட்டணமின்றி படிக்க உதவிடுமாறு வேண்டுகோள் விடுத்தார். அதைத் தொடர்ந்து, மாணவி கீர்த்தனா கட்டணமின்றி படிப்பதற்கான பரிந்துரை கடிதத்தினை கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி, கல்லூரி முதல்வர் ஜெயசூரியா ஜார்ஜிடம் வழங்கினார்.
மாணவி கீர்த்தனா செலுத்த வேண்டிய அனைத்து கட்டணங்களில் இருந்தும் முழுவதுமாக கல்லூரி நிர்வாகத்தால் விலக்கு அளிக்கப்பட்டது. இதனால் மகிழ்ச்சி அடைந்த மாணவி கீர்த்தனா, கலெக்டருக்கு நன்றி தெரிவித்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்