என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "flag hoisting"

    • விழாவில் தினமும் காலை, மாலை , இரவு நேரங்களில் சிறப்பு அலங்காரத்துடன் பூஜைகள் நடைபெறும்
    • 31-ந்தேதி காலை ஆராட்டு நிகழ்ச்சியும், இரவில் திருக்கல்யாண வைபோகமும் நடைபெறும்.

    செங்கோட்டை:

    செங்கோட்டை குமாரசுவாமி கோவிலில் சூரசம்ஹார திருவிழா கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து யாகசாலை பூஜை, சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. 8 நாட்கள் நடைபெறும். விழாவில் தினமும் காலை, மாலை , இரவு நேரங்களில் சிறப்பு அலங்காரத்துடன் பூஜைகளும், 29-ந் தேதி திருமலை குமரன் சிங்க வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலாவில் யானை சூரன் முகம், சிங்க சூரன், மகா சூரன் முகம் காட்டும் வைபோகம் நடைபெறும்.

    வருகிற 30-ந் தேதி மதியம் 2.00 மணிக்கு முருக பெருமாள் வெள்ளி மயில் வாகனத்தில் திருவீதி உலா நிகழ்ச்சியை தொடர்ந்து மாலை 5.00 மணிக்கு முக்கிய ரத வீதிகளில் சூரசம்ஹாரம் நடைபெறுகிறது. பத்கர்களுக்கு அருள் பிரசாதம் வழங்கப்படும். 31-ந்தேதி காலை ஆராட்டு நிகழ்ச்சியும், இரவில் திருக்கல்யாண வைபோகமும் நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

    • தொண்டி அருகே கந்தூரி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • 2-ம் நிகழ்ச்சியாக சந்தாதாரர்களுக்கு உணவு வழங்கப்பட்டது.

    தொண்டி

    ராமநாதபுரம் மாவட்டம் நம்புதாளையில் 99-ம் ஆண்டு கந்தூரி விழா கொடியேற்றத்துடன் நடந்தது. மஸ்தான் சாகிபு தர்காவில் இருந்து கிழக்கு கடற்கரை சாலையில் ஊர்வலமாக கொடி கொண்டு செல்லப்பட்டு ஏற்றப்பட்டது.

    இதில் திரளாேனார் கலந்து கொண்டனர். 2-ம் நிகழ்ச்சியாக சந்தாதாரர்களுக்கு உணவு வழங்கப்பட்டது. குர்ஆன் ஓதி மகான் பெயரால் தப்ரூக் என்னும் உணவு வழங்கப்படும். மகான் பெயரால் மவுலிது ஓதி கந்தூரி விழா நிறைவுபெறும்.

    • மதுரையில் கூட்டுறவு வாரவிழா ெகாடியேற்றத்துடன் தொடங்கியது.
    • மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் கூட்டுறவு விற்பனை மேளா தொடங்கப்பட்டது.

    மதுரை

    மதுரை மாவட்டத்தில் 69-வது அனைத்திந்திய கூட்டுறவு வாரவிழா நேற்று முதல் வருகிற 20-ந் தேதி வரை நடைபெற உள்ளது.

    முதல் நிகழ்ச்சியாக கூட்டுறவு கொடி ஏற்று விழா மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைமையகம் மண்டல இணைப்பதிவாளர் அலுவலகம், திருநகர் பாண்டியநாடு கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையம் மற்றும் சின்ன உடப்பு கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையம் ஆகிய இடங்களில் நடந்தது.

    விழாவில் உறுதிமொழியை கூட்டுறவுத்துறையயைச் கூட்டுறவாளர்கள் எடுத்துக்கொண்டனர். இதில் இணைப்பதிவாளர்கள், துணைப்பதிவாளர்கள் மற்றும் கூட்டுறவுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    மேலும் மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் கூட்டுறவு விற்பனை மேளா தொடங்கப்பட்டது. இதை கலெக்டர் அனீஷ்சேகர் பார்வையிட்டார்.

    • இரட்டை திருப்பதி தேவர்பிரான் கோவிலில் கொடி ஏற்றம் நடந்தது.
    • உற்சவர் தேவர்பிரானுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது.

    தென்திருப்பேரை:

    நவதிருப்பதி கோவில்களில் 5-வது திருப்பதியான இரட்டை திருப்பதி தேவர்பிரான் கோவிலில் கொடி ஏற்றம் நடந்தது. காலையில் விஸ்வரூபம், யாகசாலை ஹோமம், கொடி பட்டம் உள் பிரகாரம் சுற்றி வந்து கொடி மரம் பூஜை செய்யப்பட்டு 11.45 மணிக்கு கொடி ஏற்றம் நடந்தது. கொடிப் பட்டத்தை அர்ச்சகர் சுந்தர ராஜன் ஏற்றினார். பின்னர் உற்சவர் தேவர்பிரானுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. தினமும் காலை உற்சவர் தேவர்பிரான் தோளிக்கினியானில் உள் பிரகாரம் சுற்றி புறப்பாடும், மாலை இந்திர விமானம், சிம்ம வாகனம், அனுமார் வாகனம், சேஷ வாகனம், கருட வாகனம், யானை வாகனம், சந்திரபிரபை வாகனம், குதிரை வாகனம், பல்லக்கு வெட்டிவேர் சப்பரம் ஆகியவற்றில் உள் பிரகாரம் சுற்றி வரும் நிகழ்ச்சி நடைபெறும். வருகிற 24-ந்தேதி 5-ம் திருவிழாவை முன்னிட்டு உற்சவர் தேவர்பிரான் மற்றும் தொலைவில்லிமங்கலம் உற்சவர் செந்தாமரைக் கண்ணன் ஆகியோரது கருட சேவை நடைபெறுகிறது.

    இந்நிகழ்ச்சியில் நிர்வாக அதிகாரி அஜித், தக்கார் கோவில் மணிகண்டன், ஆய்வாளர் லோகநாயகி, அர்ச்சகர் ரகு, ஆத்தான் திருமாளிகை ராமானுஜ சுவாமி, ஸ்தலத்தார்கள் ஸ்ரீதரன், சந்தானம், வாசு, முன்னாள் அறங்காவலர் தலைவர் ராஜப்பா வெங்கடாச்சாரி, சீனிவாசா அறக்கட்டளை முதுநிலை செயல் அலுவலர் கசங்காத்த பெருமாள், கள இயக்குனர் விஜயகுமார், பொறியாளர் சுப்பிரமணியம் உட்பட பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • திருப்பரங்குன்றத்தில் தீப திருவிழா கொடியேற்றத்துடன் நாளை தொடங்குகிறது.
    • திருக்கார்த்திகை தீபத்திருவிழா விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.

    திருப்பரங்குன்றம்,

    திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதத்தில் 10 நாட்கள் திருக்கார்த்திகை தீபத்திருவிழா விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.

    இந்த ஆண்டிற்கான திருக்கார்த்திகை தீபதிருவிழா நாளை (28-ந்தேதி) தொடங்கி அடுத்த மாதம் (டிசம்பர்) 7-ந்தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. முதல் நாளான நாளை பகல் 12.15 மணிக்கு மேல் 12.30 மணிக்குள் கும்ப லக்னத்தில் தங்கமுலாம் பூசப்பட்ட கொடிமரத்தில் கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்குகிறது.

    தினமும் காலையில் தங்க சப்பரத்திலும், இரவில் வெள்ளி பூத வாகனம், அன்ன வாகனம், சேஷ வாகனம், வெள்ளி ஆட்டுக்கிடா வாகனம், தங்கமயில் வாகனம், தங்க குதிரைவாகனம் என்று தினமும் ஒரு வாகனத்தில் தெய்வானையுடன் முருக ப்பெருமான் எழுந்தருளி நகர் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்கள்.

    திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 5-ந்தேதி (திங்கட்கிழமை) இரவு 8 மணிக்கு மேல் 8.15 மணிக்குள் கடக லக்னத்தில் கோவிலுக்குள் 6 கால் மண்டபத்தில் முருகப்பெருமானுக்கு பட்டாபிஷேகம் நடக்கிறது.

    திருவிழாவின் விசேஷ நிகழ்ச்சியாக 6-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) பகல் 11.15 மணிக்கு மேல் 11.30 மணிக்குள் கும்ப லக்னத்தில் சிறிய தேரோட்டம் நடக்கிறது.திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக (6-ந்தேதி) மாலை 6 மணிக்கு மேல் கோவிலுக்குள் பாலதீபமும், மலையில் மகா கார்த்திகை தீபமும் ஏற்றப்படுகிறது.

    இரவு 8 மணியளவில் சன்னதி தெருவில் 16 கால் மண்டபம் அருகே சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடக்கிறது. திருவிழாவின் நிறைவாக வருகிற 7-ந்தேதி (புதன்கிழமை) பகல் 12 மணிக்கு சரவண பொய்கையில் ஆறுமுகநாத சுவாமி கோவில் வளாகத்தில் தீர்த்த உற்சவம் நடக்கிறது.

    கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தேரோட்டம் நடைபெறவில்லை. இந்த ஆண்டு வருகிற 6-ந்தேதி வழக்கம்போல தேரோட்டம் நடக்கிறது. திருவிழாவிற்கான ஏற்பாடு களை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.

    • திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • விழா ஏற்பாடுகளை கோவில் துணை ஆணையர் சுரேஷ் தலைமையில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.



    தாமிர கொப்பரை.

    ............... 

    திருப்பரங்குன்றம்

    திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கொண்டாடப்படும் விழாக்களில் கார்த்திகை தீபத் திருவிழா சிறப்பு வாய்ந்தது ஆகும்.

    கார்த்திகை மாதம் 10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவிற்கான கொடியேற்றம் இன்று காலை நடந்தது. உற்சவர் சன்னதியில் சுப்பிரமணிய சுவாமி-தெய்வானைக்கு பால், சந்தனம், இளநீர், திரவிய பொடி உள்ளிட்ட 16 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

    சிறப்பு அலங்காரத்தில் சுப்பிரமணியசாமி தெய்வானையுடன் சிம்மாசனத்தில் கோவில் கம்பத்தடி மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு சுப்பிரமணிய சுவாமி- தெய்வானை முன்னிலையில் தங்க முலாம் பூசப்பட்ட கொடிமரத்தில் சந்தனம், பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட சிறப்பு அபிசேகம் செய்யப்பட்டு தர்ப்பை புல், மாவிலை, பூ மாலை கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மதியம் 12.20 மணிக்கு கார்த்திகை தீப திருவிழாவிற்கான கொடி ஏற்றப்பட்டது.

    விழாவையொட்டி சுப்பிரமணிய சுவாமி- தெய்வானையுடன் தினமும் காலையில் தங்க சப்பரத்திலும், மாலையில் தங்கமயில், தங்க குதிரை வாகனம், வெள்ளி பூத வாகனம், அன்ன வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்கள்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 5-ந் தேதி இரவு 8 மணிக்கு சுப்ரமணிய சுவாமிக்கு வைர கிரீடம், நவரத்தினங்கள் பதித்த செங்கோல் வழங்கி பட்டாபிஷேகம் நடைபெறும்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 6-ந் தேதி மதியம் 11 மணிக்கு கார்த்திகை தேரோட்டம் நடைபெறும்.அன்று மாலை 6 மணிக்கு மலைமேல் மகா தீபம் ஏற்றப்படுகிறது. அதன்பிறகு இரவு 8 மணி அளவில் 16 கால் மண்டபம் அருகில் சொக்கப்பனை கொளுத்தப்படுகிறது.

    திருப்பரங்குன்றம் கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழாவுக்காக மலைமீது மகா தீபம் ஏற்றப்படும். இதற்காக 3½ அடி உயரம், 2½ அடி அகலம் கொண்ட தாமிர கொப்பரையில் 300 லிட்டர் நெய், 100 மீட்டர் காடாதுணியால் ஆன திரியில், 5 கிலோ கற்பூரத்தில் மகாதீபம் ஏற்றப்படுகிறது. இந்த கொப்பரை சுத்தம் செய்யப்பட்டு கம்பத்தடி மண்டபத்தில் வைக்கப்பட்டது.

    விழா ஏற்பாடுகளை கோவில் துணை ஆணையர் சுரேஷ் தலைமையில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    • பஞ்ச சபைகளில் ஒன்றான சித்திரை சபை அமைய பெற்றதுமான குற்றாலநாதர் ஆலயம் குற்றாலத்தில் அமைந்துள்ளது.
    • 4-ந் தேதியன்று சித்திரசபையில் பச்சை சாத்தி தாண்டவ தீபாராதனை நடைபெறுகிறது.

    தென்காசி:

    குற்றாலத்தில் பழமையானதும், தமிழகத்தின் பஞ்ச சபைகளில் ஒன்றான சித்திரை சபை அமைய பெற்றதுமான குற்றாலநாதர் ஆலயம் அமைந்துள்ளது. திருக்குற்றாலநாதா் கோவிலில் பல்வேறு திருவிழாக்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் படி இந்த ஆண்டுக்கான மாா்கழி திருவாதிரை திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக குற்றாலநாத சுவாமி ஆலயத்திற்கு எதிரே உள்ள கொடிமரத்திற்கு பால், தயிர், இளநீர் உள்ளிட்ட 16 வகையான அபிஷேக பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து தீபாராதனை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    நாள் தோறும் காலை மாலை சுவாமி, அம்பாள் வீதியுலா நடைபெறுகிறது. விழாவின் 5-ந் திருநாளான ஜனவரி 1 -ந் தேதியன்று திருத்தோ் வடம்பிடித்தலும், 4-ந் தேதியன்று சித்திரசபையில் பச்சை சாத்தி தாண்டவ தீபாராதனை நடைபெறுகிறது. 6-ந் தேதியன்று அதிகாலை 4 மணிக்கு சித்திரசபையில் ஆருத்ரா தரிசன தாண்டவ தீபாராதனையும், 5 மணிக்கு திரிகூடமண்டபத்தில் ஆருத்ரா தரிசன தாண்டவ தீபாராதனையும் நடைபெறுகிறது. விழா நாள்களில் காலை9.30 மற்றும் இரவு 7 மணிக்கு மேல் நடராசப்பெருமானுக்கு தாண்டவ தீபாராதனை நடைபெறும். விழா நாள்களில் நாள்தோறும் காலை மற்றும் இரவு சுவாமி,அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதியுலா நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

    • நூற்றாண்டு பழமை மிக்க ஏரல் சேர்மன் அருணாசலசாமி கோவிலில் ஆடி மற்றும் தை மாதங்களில் அமாவாசை பெருநாள் 11நாட்கள் நாட்கள் மிகவும் சிறப்பாக நடைபெறும்.
    • தை அமாவாசை திருவிழா இன்று காலை 8 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. நிகழ்ச்சியின் தொடக்கமாக காலையில் வேள்விகள் செய்யப்பட்டு விநாயகருக்கு பூஜைகள் நடத்தப்பட்டு கொடி பட்டம் அலங்கரிக்கப்பட்டு மூலவரின் சன்னதியை சுற்றி ஊர்வலமாக வந்து கொடியேற்றப்பட்டது.

    ஏரல்:

    நூற்றாண்டு பழமை மிக்க ஏரல் சேர்மன் அருணாசலசாமி கோவிலில் ஆடி மற்றும் தை மாதங்களில் அமாவாசை பெருநாள் 11நாட்கள் நாட்கள் மிகவும் சிறப்பாக நடைபெறும்.

    தை அமாவாசை திருவிழா இன்று காலை 8 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. நிகழ்ச்சியின் தொடக்கமாக காலையில் வேள்விகள் செய்யப்பட்டு விநாயகருக்கு பூஜைகள் நடத்தப்பட்டு கொடி பட்டம் அலங்கரிக்கப்பட்டு மூலவரின் சன்னதியை சுற்றி ஊர்வலமாக வந்து கொடியேற்றப்பட்டது.

    நிகழ்ச்சி ஏற்பாட்டினை கோவில் பரம்பரை அக்தார் அ.ரா.க.அ. கருத்தப்பாண்டிய நாடார் செய்திருந்தார். இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசித்தனர்.

    திருவிழா நாட்களில் சுவாமி இரவு வெவ்வேறு அலங்காரத்தில் கோவில் வளாகத்தில் சப்பரத்தில் எழுந்தருளல் காட்சி நடைபெறுகிறது. முக்கிய நிகழ்ச்சியான தை அமாவாசை திருவிழா 21-ந் தேதி (சனிக்கிழமை) நடக்கிறது. அன்று பகல் 1 மணிக்கு சாமி உருகு பலகை தரிசனம், அபிஷேகம், மாலை 5 மணிக்கு இலாமிச்சவேர் சப்பரத்தில் சேர்மத்திருக்கோல காட்சி, இரவு 10 மணிக்கு கற்பகபொன் சப்பரத்தில் சிவப்பு சாத்தி தரிசனம் நடக்கிறது. 22-ந் தேதி காலை 5 மணிக்கு வெள்ளை சாத்தி தரிசனம், காலை 9 மணிக்கு பச்சை சாத்தி அபிஷேகம், மதியம் 1.30 மணிக்கு பச்சை சாத்தி தரிசனம் நடக்கிறது. 

    • செங்கோட்டை குலசேகரநாத சுவாமி கோவிலில் தைப்பூச திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • தைப்பூசத்தின் 9-ம் திருநாளில் தேர் திருவிழா நடைபெறும்.

    செங்கோட்டை:

    செங்கோட்டையில் உள்ள குலசேகரநாத சுவாமி கோவிலில் தைப்பூசம் திருவிழா இன்று காலை காலை 6 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் நாள்தோறும் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேம், அலங்காரமும், மதியம் 12 மணிக்கு சிறப்பு தீபாராதனைகளும் நடைபெறும். மாலை 5 மணிக்கு சாயரட்சை, தொடர்ந்து இரவில் சுவாமி, அம்பாள் எழுந்தருளி திருவீதியுலா நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.

    முக்கிய நிகழ்ச்சியான 9-ம் திருநாளில் தேர் திருவிழா நடைபெறும். இதில் செங்கோட்டையை சுற்றியுள்ள 20 மேற்பட்ட கிராம மக்கள் கலந்துகொண்டு தேரை வடம்பிடித்து இழுத்து செல்வது வழக்கம். இறுதி நிகழ்ச்சியான தைப்பூசத்திற்கு செங்கோட்டை சுற்று வட்டார பகுதியை சேர்ந்த பக்தர்கள் வருவார்கள். இதற்கான சிறப்பு பூஜைகளை கணேச பட்டர், ராஜா பட்டர் செய்து வருகின்றனர். 10 நாள் நடைபெறும் திருவிழா ஏற்பாடுகளை மண்டகபடிதாரர்கள் செய்து வருகின்றனர்.

    • தென்தமிழகத்தில் பிரசித்திபெற்ற சிவாலயங்க ளுள் நெல்லை நெல்லையப்பர்- காந்திமதியம்மாள் கோவிலும் ஒன்றாகும்.
    • இங்கு ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெறுகின்றன. அதன் ஒரு நிகழ்வாக தைபூசத் திருவிழா இன்று காலை கொடி யேற்றத்துடன் தொடங்கியது.

    நெல்லை:

    தென்தமிழகத்தில் பிரசித்திபெற்ற சிவாலயங்க ளுள் நெல்லை நெல்லையப்பர்- காந்திமதியம்மாள் கோவிலும் ஒன்றாகும்.

    இங்கு ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெறுகின்றன. அதன் ஒரு நிகழ்வாக தைபூசத் திருவிழா இன்று காலை கொடி யேற்றத்துடன் தொடங்கியது.

    விழாவினை முன்னிட்டு கோவில் திருநடை அதிகாலையில் திறக்கப்பட்டு திருவனந்தல் பூஜை , விஸ்வரூப பூஜை ஆகியவை நடைபெற்றது. பின்னர் திருக்கொடி பல்லக்கில் ரதவீதிகளில் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு பூஜைகள் நடைபெற்றது.

    தொடா்ந்து சுவாமி சன்னதி முன் அமைந்துள்ள தங்க கொடிமரத்தில் கொடி ஏற்றப்பட்டது. கொடி மரத்திற்கு மஞ்சள்பொடி, மாப்பொடி, வாசனைப்பொடி, பால், தயிா், இளநீா், விபூதி, சந்தனம் உள்ளிட்ட அபிசேக திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிசேகமும் மகா தீபாராதனையும் நடைபெற்றது.

    ெதாடர்ந்து 12 நாட்கள் திருவிழா நடைபெறுகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருநெல்வேலி என மாவட்டத்திற்கு பெயர் வர காரணமான நெல்லுக்கு வேலியிட்ட திருவிளையாடல் வைபவம் வருகிற 29-ந் தேதி நடைபெறுகின்றது.

    தைப்பூச தீர்த்தவாரி நிகழ்ச்சி வருகிற 4-ந் தேதியும், சவுந்தர சபையில் நடராஜபெருமான் திருநடனக் காட்சி 5-ந் தேதியும், தெப்பத்திருவிழா 6-ந் தேதியும் நடைபெறுகிறது.

    • ஆண்டு பெருவிழா கடந்த 20-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • வாணவேடிக்கை நிகழ்ச்சியும், தப்பாட்டமும் நடைபெற்றது.

    நாகப்பட்டினம் :

    நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் மாதா கோவிலின் உபகோவிலான பழமை வாய்ந்த புனித செபஸ்தியார் ஆலயம் அமைந்துள்ளது. ஆலயத்தின் ஆண்டு பெருவிழா கடந்த 20-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பெரிய தேர்பவனி இன்று நடைபெற்றது. முன்னதாக ஆலயத்தில் வேளாங்கண்ணி பேராலய பங்குத்தந்தை அற்புதராஜ் தலைமையில் சிறப்பு திருப்பலி, கூட்டுப்பாடல் பிரார்த்தனை, உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    அதனை தொடர்ந்து மின் விளக்குகளால் அலங்கரிகக்ப்பட்ட சப்பரத்தில் மைக்கல்ச ம்மனசு, புனித அந்தோனியார், செபஸ்தியார், எழுந்தருளிய தேரை புனித நீர் தெளிக்கப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக சென்ற தேர்பவனியில் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.

    அதனைதொடர்ந்து கண்கவர் வாணவேடிக்கை நிகழ்ச்சியும், தப்பாட்டமும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சி ஏற்பாடுகளை முக்குலத்தோர் கத்தோலிக்க சமுதாயத்தினர் செய்திருந்தனர்.

    • செய்யது மக்தூம் பெரிய பள்ளி வாசல் கந்தூரி விழாவில் ரஜப் முதல் பிறை கொடி ஊர்வலம் நடைபெற்றது.
    • தர்கா வளாகத்தில் உள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது.

    கடையநல்லூர்:

    கடையநல்லூரில் உள்ள பிரசித்திபெற்ற செய்யது மக்தூம் பெரிய பள்ளி வாசல் கந்தூரி விழா ஆண்டுதோறும் நடந்து வருகிறது.

    கடந்த 23-ந் தேதி ரஜப் முதல் பிறை கொடி ஊர்வலம் நடைபெற்றது. அன்று இரவு 7 மணிக்கு முதல் பிறை கொடியேற்றம் நடைபெற்றது.

    நேற்று 10-வது நாள் கொடி ஊர்வலம் பகல் 2 மணிக்கு தொடங்கி அலங்கரிக்கப்பட்ட யானையில் பிறைக்கொடி ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு கடையநல்லூரில் உள்ள பேட்டை, ரஹ்மானி யாபுரம் பெரிய தெரு, புதுத்தெரு, பஜார் ரோடு, தேசிய நெடுஞ்சாலை, கிருஷ்ணாபுரம், உட்பட பல்வேறு இடங்களுக்கு யானை மீது பச்சை களை ஊர்வலமும் சந்தனக் கூடும் நடைபெற்றது . இரவு 10 மணிக்கு தர்கா வளாகத்தில் உள்ள கொடிமரத்தில் நாரே தக்பீர் அல்லாஹு அக்பர் தீன் ஒலி முழங்க கொடியேற்றப்பட்டது. கொடியேற்ற விழாவில் பல்வேறு இடங்களில் இருந்து பொதுமக்கள் கலந்து கொண்டனர்.அதனைத் தொடர்ந்து ராத்திப் மஜ்லீஸ் நடைபெற்றது. இரவு 10 மணிக்கு சந்தனம் பூசுதல் நடைபெற்றது.

    இன்று( வெள்ளிக்கிழமை) இரவு 7 மணிக்கு தீப உற்சவம் நடைபெறும். நாளை(சனிக்கிழமை) மாலை 5 மணிக்கு மவுலூது சரிப் நடைபெறும். ஞாயிற்றுக்கிழமை பகல் தப்ரூக் என்னும் நேர்ச்சை வழங்கப்படும்.

    ×