என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "flow"

    • திடீரென நிலை தடுமாறிய லாரி சாலையின் இடதுபுறம் உள்ள சுமார் 20 அடி பள்ளத்தில் பாய்ந்தது.
    • இதில் அதிர்ஷ்டவசமாக லாரியை ஓட்டி வந்த, டிரைவர் தர்மபுரி பகுதியைச் சேர்ந்த பெரியண்ணன் என்பவர் காயங்கள் இன்றி உயிர் தப்பினார்.

    பரமத்திவேலூர்:

    வாரணாசியில் இருந்து கன்னியாகுமரி வரை செல்லும் தேசிய நெடுஞ்சாலை, நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூரை கடந்து செல்கிறது. மேலும் இந்த நெடுஞ்சாலை, பரமத்திவேலூர் காவிரியின் இரட்டை பாலத்தை கடந்தும் செல்கிறது.

    ஏராளமான போக்குவரத்து நிறைந்த இச்சாலையில், காவிரி பாலம் அருகே பெங்களூரில் இருந்து தூத்துக்குடி நோக்கி பெரிய வெங்காயம் பாரம் ஏற்றி லாரி சென்று கொண்டிருந்தது. திடீரென நிலை தடுமாறிய லாரி சாலையின் இடதுபுறம் உள்ள சுமார் 20 அடி பள்ளத்தில் பாய்ந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக லாரியை ஓட்டி வந்த, டிரைவர் தர்மபுரி பகுதியைச் சேர்ந்த பெரியண்ணன் என்பவர் காயங்கள் இன்றி உயிர் தப்பினார்.

    இதையடுத்து, நெடுஞ்சாலைத் துறையினர் உதவியுடன் கிரேன் வாகனம் வரவழைக்கப்பட்டு மீட்பு பணியில் போலீசார் ஈடுபட்டனர். லாரி பள்ளத்தில் விழாதபடி தடுத்து, வெங்காய பாரத்தை வேறு லாரிக்கு மாற்றினர். அதன் பிறகு லாரியை பள்ளத்தில் இருந்து மீட்டனர்.

    இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்தில் சிரமம் ஏற்பட்டது.

    • விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக மாவட்ட அளவிலான மாரத்தான் ஓட்டம் நடைபெறவுள்ளது
    • விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக மாவட்ட அளவிலான மாரத்தான் ஓட்டம் நடைபெறவுள்ளது

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்ட கலெக்டர் பழனி வெளியி ட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

    தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், தடை செய்யப்பட்ட ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்று வழிகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக மாவட்ட அளவிலான மாரத்தான் ஓட்டம் நடைபெறவுள்ளது. மாரத்தான் போட்டிகள் 3 பிரிவாக பிரித்து பள்ளி, பொதுப்பிரிவினர் மற்றும் மாணவ/மாணவிகள், ஆண்கள், பெண்கள் என 4 பிரிவுகளாக 5 கிலோ மீட்டர் தூரமும், திருநங்கைகள் ஒரு பிரிவாக 3 கிலோமீட்டர் ஓட்ட போட்டியும் நடத்தப்ப டவு ள்ளது. இப்போட்டிகளில் வெற்றிபெறுபவர்களுக்கு முதல் பரிசு ரூ.5000, 2-ம் பரிசு ரூ.3000, 3-ம் பரிசு ரூ.1000 மற்றும் 4 முதல் 10 வரை ரூ.500 வீதம் 5 பிரிவினர்களுக்கும் பரிசளிக்கப்படும். இப்போ ட்டியில் கலந்துகொண்டு போட்டி தூரத்தை நிறைவு செய்யும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும்.    மாரத்தான் போட்டிகள் 01.05.2023 அன்று மாலை 3.30 மணியளவில் புதிய பஸ் நிலையம் அருகில் தளபதி திடல் வளாகத்திலிருந்து தொடங்கப்படும். போட்டியில் கலந்துகொள்ள விருப்பம் உள்ளவர்கள் தங்களது பெயரினை எம்.ஜி.ஆர் உள்விளை யாட்டரங்கில் பதிவு மேற்கொள்ளலாம்.   இந்த மாவட்ட அளவிலான மாரத்தான் போட்டிகளில் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த பள்ளி மாணவ/மாணவி ய ர்கள், பொதுப்பிரிவினர்கள் மற்றும் திருநங்கைகள் பெரு மளவில் கலந்துகொண்டு பயன்பெறவேண்டியும் மற்றும் சுற்றுசூழலை மாசுபடுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக்கூடாது என்ற விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என மாவட்ட கலெக்டர் பழனி தெரிவித்துள்ளார்.

    • போலீசார் வழக்கு பதிவு செய்து ஓட்டலில் ஒவ்வொரு அறையாக சோதித்தனர்.
    • இருவரும் வீடியோ பதிவான ஹார்டிஸ்க்கை எடுத்துக் கொண்டு தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது

    அழகான கடற்கரையை கொண்ட புதுச்சேரி சுற்றுலாவுக்கு பெயர் போனது. வார இறுதி நாட்களில் சென்னை, பெங்களூர் உள்பட தமிழகத்தில் இருந்து ஏராளமானோர் சுற்றுலாவுக்கு வருவது வழக்கம்.

    அவர்கள் ஓட்டலில் அறை எடுத்து தங்கி பல்வேறு இடங்களுக்கு சுற்றுலா சென்று வருவார்கள்.

    புதுச்சேரி 100 அடி சாலையில் உள்ள தங்கும் விடுதிக்கு அதே ஊரை சேர்ந்த இளம் ஜோடி ஒன்று சென்றுள்ளது. கடந்த வாரம் காலை 11 மணிக்கு அறை எடுத்து தங்கி உள்ளனர்.

    அப்போது ஓட்டல் அறையில் சிவப்பு நிற விளக்கு ஒன்று மின்னி மறைவதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

    படுக்கைக்கு எதிரில் இருந்த டி.வி.க்கு அருகில் கேபிள் இணைப்புக்கான பிளக் பாயிண்டில் இருந்து இந்த சிவப்பு லைட் எரிவதை கண்டு பிடித்தனர்.

    இதையடுத்து வெளியில் சென்று ஸ்குரூடிரைவர் வாங்கி வந்து அந்த பிளக் போர்டை கழட்டி பார்த்தனர். அப்போது அதன் உள்ளே சிறிய அளவிலான ரகசிய கேமிரா மறைத்து வைக்கப்பட்டிருந்த தெரியவந்தது.

    அது இயங்கிக் கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த ஜோடி இதனை வீடியோவாக பதிவு செய்து ஓட்டல் நிர்வாகத்திடம் கூறினர்.

    ஆனால் அவர்கள் இதனை கண்டு கொள்ளாததால் தங்கள் வீடுகளுக்கு சென்று நடந்ததை உறவினர்களிடம் தெரிவித்தனர். அவர்கள் உருளையன் பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    போலீசார் வழக்கு பதிவு செய்து ஓட்டலில் ஒவ்வொரு அறையாக சோதித்தனர். அப்போது மேலும் 3 அறைகளில் இது போன்று கேமிரா வைக்கப்பட்டி ருந்தது தெரியவந்தது.

    தேங்காய்த்திட்டு மற்றும் அரியாங்குப்பத்தை சேர்ந்த 2 பேர் அங்கு வேலை பார்த்து வந்துள்ளனர். அவர்கள் 2 பேர்தான் இந்த விபரீத செயலில் ஈடுபட்ட தாக போலீசார் தெரிவித்தனர்.

    அவர்கள் இருவரும் வீடியோ பதிவான ஹார்டிஸ்க்கை எடுத்துக் கொண்டு தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது

    இதையடுத்து விடுதியின் உரிமையாளர் இளைய ஆழ்வார், ஓட்டல் பொறுப்பாளர் இருதயராஜ் ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்.

    இந்த சம்பவம் புதுச்சேரி ஓட்டல்களில் தங்குகின்ற சுற்றுலா பயணிகளிடம் கூடுதல் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • ஆகாய தாமரைகள் படர்ந்தும் நீரோட்டம் தடைப்பட்டு கழுமலை ஆறு தூய்மையை இழந்து வருகிறது.
    • குப்பைகள் மற்றும் தண்ணீர் வேகமாக ஓடுவதற்கு தடையாக உள்ள பொருட்களை அகற்றி தூய்மை செய்யும் பணி நடைபெற்றது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் பிரதான கழுமலை பாசன ஆறு உள்ளது. கொண்டல் பகுதியில் உருவாகும் கழுமலையாறு கொண்டல், வள்ளுவக் குடி, அகனி, சீர்காழி, திட்டை, தில்லைவிடங்கன், திருத்தோணிபுரம், செம்மங்குடி உள்ளிட்ட சுமார் 15க்கு மேற்பட்ட கிராமங்களில் சுமார் 6000 ஏக்கரில் பாசன வசதி நடைபெறுகிறது.

    சீர்காழி நகர் பகுதியில் கழுமலை பாசன ஆறு நகர் பகுதியில் உள்ள குடியிருப்புகள் வணிக நிறுவனங்களில் இருந்து கழிவுநீர் மற்றும் நகர் பகுதியில் இருந்து குப்பைகள், பிளாஸ்டிக் பொருட்கள் உடைந்த பாட்டில்கள் ஆகியவை கொட்டப்பட்டும், ஆகாயத் தாமரைகள் படர்ந்தும் நீரோட்டம் தடைப்பட்டு கழுமலை ஆறு தூய்மையை இழந்து வருகிறது.

    இதனிடையே நகர் பகுதியில் கழுமலை ஆற்றில் தேங்கி இருந்த குப்பைகள், மண்டி கிடந்த ஆகாயத் தாமரை செடிகள், மழைக்காலம் வர உள்ளதால் நகர் பகுதியில் உள்ள குப்பைகள் மற்றும் தண்ணீர் வேகமாக ஓடுவதற்கு தடையாக உள்ள பொருட்களை அகற்றி தூய்மை செய்யும் பணி நடைபெற்றது.

    இதனை நகர் மன்ற தலைவர் துர்காபரமேஸ்வரி ராஜசேகரன், ஆணையர் (பொ) ராஜகோபால், ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பணி மேற்பார்வையாளர் விஜயேந்திரன், எழுததர் ராஜகணேஷ், திமுக நகர இளைஞரணி அமைப்பாளர் ராஜசேகரன் ஆகியோர் உடனிருந்தனர்.

    • பவானிசாகர் அணைக்கு மீண்டும் நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது.
    • தடப்பள்ளி-அரக்கன்கோட்டை பாசனத்திற்கு 700 கன அடி நீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

    பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்டத்தில் 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. கடந்த 2 நாட்களாக நீர்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு மீண்டும் நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது.

    இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 83.53 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 5,654 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கனஅடி நீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

    நேற்று தடப்பள்ளி-அரக்கன்கோட்டை பாசனத்திற்காக 900 கன அடி நீர் திறந்து விட்ட நிலையில் இன்று 200 கன அடி குறைத்து தடப்பள்ளி-அரக்கன்கோட்டை பாசனத்திற்கு 700 கன அடி நீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

    இதேபோல் கீழ்பவானி வாய்க்காலுக்கு 5 கனஅடி என மொத்தம் பவானிசாகர் அணையில் இருந்து 805 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணைக்கு நீர்வரத்து அதிகரித்து ள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • தாரமங்கலம் அருகில் உள்ள கருக்கல்வாடி கிராமம் கரட்டூர் பகுதியில் தங்கை கணவருடன் இளம்பெண் ஓட்டம் பிடித்தார்.
    • இவர்களுக்கு திருமணம் முடிந்து 8 ஆண்டுகளாகியும் இதுவரை குழந்தைகள் இல்லை.

    தாரமங்கலம்:

    தாரமங்கலம் அருகில் உள்ள கருக்கல்வாடி கிராமம் கரட்டூர் பகுதியை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 33). இவருடைய மனைவி கோகிலா (27). இவர்களுக்கு திருமணம் முடிந்து 8 ஆண்டுகளாகியும் இதுவரை குழந்தைகள் இல்லை .

    இந்நிலையில் தளவாய்பட்டியில் உள்ள கோகிலாவின் தங்கை கணவர் மோகன்ராஜ் (28) என்பவரோடு கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாக தெரிகிறது. இந்த விவரம் கணவர் நாகராஜுக்கு தெரியவந்ததால் இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்பத்தில் சண்டை நடந்து வந்துள்ளது.

    இந்நிலையில் கடந்த 26-ந் தேதி முதல் கோகிலாவை காணவில்லை என்றும் மோகன்ராஜ் தனது மனைவியை கடத்தி சென்று விட்டதாகவும் நாகராஜ் தாரமங்கலம் போலீசில் புகார் அளித்தார். இதுபற்றி இன்ஸ்பெக்டர் தொல்காப்பியன், சப்-இன்ஸ்பெக்டர் முரளிதரன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 97-ம் ஆண்டு பிரமோற்சவ திருவிழா
    • நாளை மறுதினம் தேரோட்டம் நடக்கிறது.

    ஆரணி:

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் பெரியகடை வீதியில் உள்ள மிகவும் பழமை வாய்ந்த ஸ்ரீபெருந்தேவி தாயார் சமேத கில்லா வரதராஜ பெருமாள் கோவில் விளங்கி வருகின்றன.

    இந்த கேவிலில் 97-ம் ஆண்டு பிரமோற்சவம் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற உள்ளன.

    வரதராஜ பெருமாள் தேர் திருவிழா வருகின்றன 7.06.22 அன்று நடைபெறுவதால் தேரின் தன்மை குறித்து கோவில் நிர்வாகம் மற்றும் வருவாய் துறை நகராட்சி துறை மற்றும் போலீசார் ஆகியோர் கோவில் வளாகத்தில் உள்ள தேரை ஆய்வு மேற்கொண்டனர்.

    இதில் தேரின் உயரம் அகலம் குறித்து அளவு குறித்தும் பெரியகடை வீதி ஷராப் பஜார் காந்தி ரோடு மார்க்கெட் வீதி உள்ளிட்ட சாலைகளில் அளவுகளை சரிபார்த்து தேர் வருவதற்கான வழிகளை ஆய்வு மேற்கொண்டனர்.

    இதில் தாசில்தார் பெருமாள் நகராட்சி ஆணையர் தமிழ்ச்செல்வி கோவில் ஆய்வாளர் நடராஜன் நிர்வாக செயலாளர் சிவாஜி வருவாய் ஆய்வாளர் வேலுமணி வி.ஏ.ஒ இன்ஸ்பெக்டர் கோகுல் ராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வில் பங்கேற்றனர்.

    ×