என் மலர்
நீங்கள் தேடியது "forest fire"
- ஆங்காங்கே சில இடங்களில் காட்டு தீ ஏற்பட்டு வருகிறது.
- காட்டுத்தீ பற்றிய தகவல் அறிந்ததும் வனத்துறையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
ஊட்டி,
நீலகிரி மாவட்ட வனப்பகுதிகளில் கடந்த சில தினங்களாக வெப்பம் அதிகமாக காணப்படுகிறது. இதனால் அவ்வப்போது ஆங்காங்கே சில இடங்களில் காட்டு தீ ஏற்பட்டு வருகிறது. இதனை அணைக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இன்று காலை கூடலூர் அருகே உள்ள வனத்தில் காட்டுத்தீ பற்றி எரிந்து கொண்டிருந்தது. அந்த பகுதி முழுவதும் தீ வேகமாக பரவியது. சுமார் 10 ஏக்கர் பரப்பளவு தீயில் எரிந்து விட்டதாக கூறப்படுகிறது. இதில் வனத்திற்குள் இருக்கும் சிறிய வகை உயிரினங்கள் உயிரிழந்திருக்க வாய்ப்புள்ளது.
காட்டுத்தீ பற்றிய தகவல் அறிந்ததும் வனத்துறையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
- சித்தரேவு- பெரும்பாறை வனப்பகுதியில் திடீரென காட்டுத்தீ பற்றி எரிந்தது.
- தாண்டிக்குடி, பெரும்பாறை வனப்பகுதியில் பற்றி எரியும் காட்டுத்தீயை கட்டுப்படுத்த முடியாமல் வனத்துறையினர் தவித்து வருகின்றனர்.
பெரும்பாறை:
கொடைக்கானல் கீழ்மலைக் கிராமங்களான தாண்டிக்குடி, பெரும்பாறை வனப்பகுதியில் கடந்த சில வாரங்களாக சுட்டெரிக்கும் வெயில் வாட்டி வதைக்கிறது. இதனால் மலைப்பகுதியில் உள்ள புல்வெளிகள் கருகி வறட்சியின் பிடியில் சிக்கியுள்ளன. கோடைக்காலம் தொடங்கி விட்டால் வனப்பகுதியில் காட்டுத்தீ பற்றி எரிவது வழக்கமாக இருந்து வருகிறது.
அதன்படி நேற்று முன்தினம் மாலை சித்தரேவு- பெரும்பாறை வனப்பகுதியில் திடீரென காட்டுத்தீ பற்றி எரிந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த வத்தலகுண்டு வனத்துறையினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர். இருப்பினும் வனப்பகுதியில் இருந்த அரிய மூலிகைகள், மரங்கள் எரிந்து சேதமாகின.
இந்தநிலையில் 2-வது நாளாக தாண்டிக்குடியில் உள்ள கரியமாள் கோவில், அழிஞ்சோடை வனப்பகுதியில் திடீரென காட்டுத்தீ பற்றியது. சிறிது நேரத்தில் தீ மள மளவென பரவி கொழுந்து விட்டு எரிய தொடங்கியது.
இதுகுறித்து தகவல் அறிந்த வத்தலக்குண்டு வனச்சரகர் ராம்குமார் தலைமையிலான வனத்துறையினர் அங்கு சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தாண்டிக்குடி, பெரும்பாறை வனப்பகுதியில் பற்றி எரியும் காட்டுத்தீயை கட்டுப்படுத்த முடியாமல் வனத்துறையினர் தவித்து வருகின்றனர்.
- சூரியன் மலைப்பகுதியில் வனத்துறை மற்றும் தனியாருக்கு சொந்தமான நிலங்களில் காடுகள் அமைந்துள்ளன.
- கடந்த சில வாரங்களாக இப்பகுதியில் பகல் நேரங்களில் கடும் வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், மரங்கள், செடிகள் காய்ந்து இருந்ததால், நேற்று திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கின.
எடப்பாடி:
எடப்பாடியை அடுத்த தங்கையூர் ஊராட்சிக்கு உட்பட்ட கோணமோரி அரசு கலைக் கல்லூரியின் எதிர்புறம் சூரியன் மலைப்பகுதியில் வனத்துறை மற்றும் தனியாருக்கு சொந்தமான நிலங்களில் காடுகள் அமைந்துள்ளன. கடந்த சில வாரங்களாக இப்பகுதியில் பகல் நேரங்களில் கடும் வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், மரங்கள், செடிகள் காய்ந்து இருந்ததால், நேற்று திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கின. அப்பகுதியில் காற்றின் வேகம் அதிகமாக இருந்த நிலையில் தீ மேலும் பல பகுதிகளுக்கு பரவியது. அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் இதுகுறித்து எடப்பாடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் நீண்ட நேரமாக போராடி தீயிணை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். தொடர்ந்து அப்பகுதியில் முகாமிட்டுள்ள எடப்பாடி வட்டாட்சியர் லெனின், காட்டுத் தீ மேலும் வேறு பகுதிகளுக்கு பரவாமல் தடுக்கும் வகையில் முன்னேற்பாடு பாதுகாப்புப் பணிகளை முடுக்கி விட்டுள்ளார்.
அப்பகுதியில் இருந்த சிறு செடி, கொடிகள் அகற்றப்பட்டு காற்றின் வேகத்தால் தீ வனப்பகுதியில் உள்ள மற்ற இடங்களுக்கு பரவாமல் தடுத்து நிறுத்தப்பட்டது.
அப்பகுதியில் முகாமிட்டுள்ள வனத்துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர் காட்டுத் தீ வேறு எங்கேனும் பரவி உள்ளதா என தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து கொங்கணாபுரம் போலீசார் அப்பகுதியில் விசாரணை மேற்கொண்டனர்.
இந்த தீ விபத்து குறித்து எடப்பாடி வட்டாட்சியர் லெனின் கூறியதாவது:-
தற்போது கோடை காலம் ஆரம்பமாகும் நிலையில், எடப்பாடியின் தெற்கு எல்லைப் புரத்தில் உள்ள தேவண்ணகவுண்டனூர் மற்றும் சூரியன் மலையை ஒட்டிய வனப்பகுதியில் மரம், செடி, கொடிகள் அதிக அளவில் காய்ந்து தீப்பற்றக்கூடிய நிலையில் இருப்பதைக் கருத்தில் கொண்டு, அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். எளிதில் தீப்பற்றக்கூடிய எந்தப் பொருளையும் வனத்தை ஒட்டிய பகுதிக்குள் எடுத்துச் செல்லவோ வைத்திருக்கவோ அனுமதி இல்லை. வனப்பகுதியில் தீ விபத்து ஏற்படும் வகையில் யாரேனும் அஜாக்கிரதையாக செயல்பட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
- கொடைக்கானல் மலைப்பகுதியில் கடந்த சில தினங்களாக கடுமையான வெப்பம் நிலவியதால் செடி, கொடிகள், புல்வெளிகள், முட்புதர்கள் காய்ந்து கருகி வருகின்றன.
- தீ காரணமாக அரசு வருவாய் நிலங்கள் மற்றும் தனியார் தோட்டப்பகுதிகளில் ஆங்காங்கே தீ எரிந்து வருகிறது.
கொடைக்கானல்:
கொடைக்கானல் மலைப்பகுதியில் கடந்த சில தினங்களாக கடுமையான வெப்பம் நிலவியதால் செடி, கொடிகள், புல்வெளிகள், முட்புதர்கள் காய்ந்து கருகி வருகின்றன.
இந்நிலையில் விவசாயிகள் தனியார் தோட்டப்பகுதியில் வைக்கும் தீ காரணமாக அரசு வருவாய் நிலங்கள் மற்றும் தனியார் தோட்டப்பகுதிகளில் ஆங்காங்கே தீ எரிந்து வருகிறது. பழனி பிரதான மலைச்சாலையில் மேல்பள்ளம் மற்றும் ஜீவா நகர் பகுதிகளில் உள்ள தனியார் தோட்டத்துப்பகுதிகளில் சுமார் 100க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் வாழை, ஆரஞ்சு, எலுமிச்சை, அவக்கோடா உள்ளிட்ட பணப்பயிர்கள் பயிரிடப்பட்டிருந்தது. இந்த பகுதிகளில் காட்டுத்தீ மளமள வென பரவி கொளுந்து விட்டு எரிந்து வருகிறது.
மேலும் சாலையின் ஓரங்களிலும் தீ எரிந்து வருவதால் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. வனப்பகுதிக்கு அருகே தீ எரிந்து வருவதால் தீயை அணைக்கும் முயற்சியில் பெரும்பள்ளம் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
தனியார் இடங்களில் சிலர் தீ வைக்கின்றனர். காற்றின் வேகம் அதிகரிக்கும்போது அருகே உள்ள மற்ற தோட்டப்பகுதிகளில் தீ பரவி வருகிறது. எனவே தனியார் தோட்டப்பகுதிகளில் அனுமதியின்றி தீ வைக்கும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.
இந்நிலையில் இன்று காலை முதல் கொடைக்கானல் நகர் மற்றும் பல்வேறு பகுதிகளில் சாரல் மழை பெய்ததால் காட்டுத்தீ கட்டுப்படுத்தப்பட்டது.
- கடந்த 3 நாட்களாக அகஸ்தியர்புரம்- தென்மலை பகுதியில் அடிக்கடி காட்டுதீ பற்றி மளமளவென மற்ற பகுதிகளுக்கும் பரவி வருகிறது.
- இதில் சிக்கி பல ஏக்கர் நிலங்களில் உள்ள மூலிகை செடிகள், அரியவகை மரங்கள் கருகி நாசமாகின.
திண்டுக்கல்:
திண்டுக்கல் அருகே சிறுமலையில் ஏராளமான ஏக்கர் பரப்பளவில் அடர்ந்த வனப்பகுதி உள்ளது. இதில் காட்டெருமை, கடமான், காட்டுபன்றி, முயல் உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வருகின்றன. மேலும் ஏராளமான பறவைகளும் உள்ளன. குளிரின் தாக்கம் குறைந்து கோடைகாலம் தொடங்கி உள்ள நிலையில் வனப்பகுதியில் வறண்ட வானிலை காணப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த 3 நாட்களாக அகஸ்தியர்புரம்- தென்மலை பகுதியில் அடிக்கடி காட்டுதீ பற்றி மளமளவென மற்ற பகுதிகளுக்கும் பரவி வருகிறது. இதில் சிக்கி பல ஏக்கர் நிலங்களில் உள்ள மூலிகை செடிகள், அரியவகை மரங்கள் கருகி நாசமாகின. தீயை அணைக்க வனத்துறையினர் கடுமையாக போராடி வருகின்றனர். திண்டுக்கல் தீயணைப்புத்துறையினர் அங்கு விரைந்து சென்று வனத்துறையினருடன் இணைந்து காட்டு தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து அப்பகுதிமக்கள் கூறுகையில், சிறுமலை தற்போது சுற்றுலா பயணிகள் அதிகம் வரும் பகுதியாக மாறியுள்ளது. இதில் சிலர் எளிதில் தீப்பிடிக்கும் பொருட்களை வீசிசெல்வதால் அடிக்கடி காட்டு தீ பற்றுகிறது. மேலும் வறண்ட வானிலையும் ஒரு காரணமாகும். எனவே வனத்துறையினர் சிறுமலைக்கு வரும் வாகனங்களை சோதனை செய்த பின்னரே அனுமதிக்க வேண்டும். காட்டுதீயை கட்டுப்படுத்த நிரந்தர தீர்வு காணவேண்டும் என்றனர்.
- காட்டுத் தீயால் பல ஏக்கா் பரப்பிலான புல்வெளிகள் மற்றும் தாவர வகைகள் எரிந்து சாம்பலானது.
- தடுப்பு நடவடிக்கை எடுத்திருந்ததால் விவசாய நிலங்களுக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை.
ஊட்டி,
கூடலூா் வனச் சரகத்தில் உள்ள நம்பாலக்கோட்டை மஞ்சமூலா இடைப்பட்ட பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீயால் பல ஏக்கா் பரப்பிலான புல்வெளிகள் மற்றும் தாவர வகைகள் எரிந்து சாம்பலானது.
கட்டுப்படுத்தமுடியாத நிலையில் பரவிய காட்டுத் தீ, மலை முழுவதையும் எரித்து சாம்பலாக்கியது. விவசாயிகள் தங்களது தோட்டத்துக்குள் தீ பரவாமல் இருக்க ஏற்கெனவே தடுப்பு நடவடிக்கை எடுத்திருந்ததால் விவசாய நிலங்களுக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை.
- கல்லூரி சுற்றிலும் வனப்பகுதிகள் சூழ்ந்துள்ளது.
- கல்லூரி மாணவர்கள் தண்ணீரை எடுத்து ஊற்றி தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
அரவேணு,
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே சக்தி மலை உள்ளது. இங்கு பிரசித்தி பெற்ற முருகன் கோவிலும், தனியார் பாலிடெக்னிக் கல்லூரியும் அமைந்துள்ளது. இதை சுற்றிலும் வனப்பகுதிகள் சூழ்ந்துள்ளது. இங்கு திடீரென நேற்று காட்டுத் தீ பரவியது. இதனையடுத்து கல்லூரியில் அமர்ந்திருந்த மாணவர்கள், ஆசிரியர்கள் புகை வருவதை கண்டு வெளியே வந்து பார்த்தனர். அப்போது காட்டுக்குள் தீ பரவிக் கொண்டிருந்தது. உடனடியாக கல்லூரி மாணவர்கள் அனைவரும் தண்ணீரை எடுத்து ஊற்றி தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் கோத்தகிரி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு துறையினரும் விரைந்து வந்து மாணவர்களுடன் சேர்ந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து காட்டுத் தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
- நீலகிரி மாவட்டத்திலும் பகலில் கோடை வெப்பமும், இரவில் அதிக பனிப்பொழிவும் நிலவுகிறது.
- கார்குடி உள்பட அனைத்து பகுதிகளிலும் வனத்துறையினர் தீத்தடுப்பு கோடுகளை அமைத்தனர்.
ஊட்டி,
தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
குளு, குளு காலநிலையை கொண்ட நீலகிரி மாவட்டத்திலும் பகலில் கோடை வெப்பமும், இரவில் அதிக பனிப்பொழிவும் நிலவுகிறது.
கூடலூர், முதுமலை, மசினகுடி, பந்தலூரில் அனல் காற்று வீசுகிறது. மேலும் வனப்பகுதியில் உள்ள பசும்புற்கள், புதர்கள் காய்ந்து விட்டது. மரங்களில் உள்ள இலைகள் உதிர்ந்து காணப்படுகிறது. இதனால் காட்டுத்தீ பரவாமல் இருக்க முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு, கார்குடி உள்பட அனைத்து பகுதிகளிலும் வனத்துறையினர் தீத்தடுப்பு கோடுகளை அமைத்தனர்.
இந்த நிலையில் நேற்று மசினகுடி அருகே மரவகண்டி ஏரி, ஆச்சக்கரை பகுதியில் பயங்கர காட்டுத்தீ பரவியது.
அப்பகுதியில் மூங்கில்கள் அதிகமாக இருந்ததால் தீ கொழுந்து விட்டு எரிந்தது.எங்கு பார்த்தாலும் தீ மற்றும் புகை மண்டலமாக காணப்பட்டது. இதைத்தொடர்ந்து போலீசார், வருவாய், வனத்துறையினர் விரைந்து வந்து அணைக்க முயன்றனர். ஆனால் முடியவில்லை.
இதனால் கூடலூரில் இருந்து தீயணைப்பு துறையினர் வரவழைக்கப்பட்டனர். நாலாபுறமும் தீ வேகமாக பரவிக்கொண்டே இருந்ததால் தீயணைப்புத் துறையினராலும் கட்டுப்படுத்த முடியவில்லை.
தொடர்ந்து 10 ஏக்கர் பரப்பளவில் மூங்கில்கள், புதர்கள் எரிந்து சாம்பலானது. மொத்தத்தில் கூடலூர், மசினகுடி பகுதியில் சுமார் 100 ஏக்கர் பரப்பளவிலான வனப்பகுதி காட்டு தீயால் எரிந்து நாசமானது.இதேபோல், குன்னூர், கோத்தகிரி பகுதியில், பல இடங்களில் பரவிய காட்டுத்தீயை, தீயணைப்பு துறையினர், வனத்துறையினர் அணைத்தனர்.
மலைப்பாதை மற்றும் வனப்பகுதிகளில் சுற்றுலா பயணிகள் புகை பிடித்து வீசுவது. இடத்தை ஆக்கிரமிக்க தீ வைப்பது போன்றவை காட்டுத்தீ ஏற்பட முக்கிய காரணமாக அமைந்துள்ளதால், வருவாய், வனம், உள்ளாட்சி நிர்வாகத்தினர், போலீசார் ஒருங்கிணைந்து நடவடிக்கை எடுக்க நீலகிரி மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
- வேட்டை தடுப்பு காவலர் ஆனந்த் உள்பட 22 பேர் கொண்ட குழுவினர் காட்டுத் தீயணைக்க வனப்பகுதிக்கு சென்றனர்.
- உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட ஆசனூர் வனச்சரகத்தில் வேட்டை தடுப்பு காவலராக பணியாற்றி வருபவர் ஆனந்த் (28). சம்பவத்தன்று இரவு ஆசனூர் வனசரகத்திற்கு உட்பட்ட மாவல்லரம் பகுதியில் காட்டுத்தீ ஏற்பட்டதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து வேட்டை தடுப்பு காவலர் ஆனந்த் உள்பட 22 பேர் கொண்ட குழுவினர் காட்டுத் தீயணைக்க வனப்பகுதிக்கு சென்றனர். தீயை அணைக்கும் கருவிகளுடன் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அப்போது எதிர்பாராத விதமாக வேட்டை தடுப்பு காவலர் ஆனந்த் கால் தவறி கீழே பாறையில் விழுந்தார். இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனையடுத்து உடன் இருந்த மற்ற வேட்டை தடுப்பு காவலர்கள் உடனடியாக ஆனந்தை மீட்டு சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இந்நிலையில் தலையில் பலத்த காயம் அடைந்ததால் ஆனந்த் சுயநினைவை இழந்தார். தொடர்ந்து அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
- கடந்த 5ம் தேதி முதல் கோவாவின் வனப்பகுதிகளில் காட்டுத் தீ பரவல் ஏற்பட்டுள்ளது.
- கோவாவில் காட்டுத் தீயை கட்டுப்படுத்த இந்திய விமானப்படை களமிறங்கி உள்ளது.
பனாஜி:
கோவாவில் காட்டுத் தீயை கட்டுப்படுத்த இந்திய விமானப்படை களமிறங்கி உள்ளது.
கோவாவின் வனப்பகுதிகளில் கடந்த 5-ம் தேதி முதல் ஆங்காங்கே காட்டுத் தீ பரவல் ஏற்பட்டுள்ளது. தீயணைப்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், கோவாவில் இந்திய விமானப்படையும் தீயணைப்பு பணிகளில் ஈடுபட்டு உள்ளது. எம்.ஐ.-17 ரக ஹெலிகாப்டர் மூலம் காட்டுத் தீ பரவும் பகுதிகளில் தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்ட காட்சிகள் வெளியாகின.
- ஏணிக்கல் வனப்பகுதியில் சாலைக்கு மேல் திடீரென காட்டுத்தீ பற்றி எரிந்தது. சிறிது நேரத்தில் தீ மள மளவென பரவி கொழுந்து விட்டு எரிய தொடங்கியது.
- வனக்காப்பாளர் மற்றும் தீ தடுப்பு காவலர்கள் அங்கு சென்று 7 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
பெரும்பாறை;
கொடைக்கானல் கீழ்மலை பெரும்பாறை, தடியன்குடிசை, கொங்கப்பட்டி, மஞ்சள்ப ரப்பு, புல்லாவெளி வனப்பகுதியில் கடந்த சில நாட்களாக சுட்டெரிக்கும் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதனால் மலைப்பகுதியில் உள்ள புல்வெளிகள் கருகி வறட்சியின் பிடியில் சிக்கியுள்ளன. கோடைக்காலம் தொடங்கி விட்டதால் வனப்பகுதியில் காட்டுத்தீ பற்றி எரிவது வழக்கமாக இருந்து வருகிறது. கடந்த சில நாட்களாக பல்வேறு இடங்களில் அடிக்கடி காட்டுத்தீ பற்றி அதனை வனத்துறையினர் போராடி அணைத்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று பெரும்பாறை, சித்தரேவு மலைப்பாதையில் உள்ள ஏணிக்கல் வனப்பகுதியில் சாலைக்கு மேல் திடீரென காட்டுத்தீ பற்றி எரிந்தது. சிறிது நேரத்தில் தீ மள மளவென பரவி கொழுந்து விட்டு எரிய தொடங்கியது. இதனால் அப்பகுதியில் முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது.இதுகுறித்து தகவல் அறிந்த வத்தலக்குண்டு வனவர் சுரேஸ் தலைமையில் வனக்காப்பாளர் கணேசன் மற்றும் தீ தடுப்பு காவலர்கள் அங்கு சென்று 7 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
இருந்தபோதும் வனப்பகுதியில் இருந்த அரிய வகை மூலிகைகள், மரங்கள் எரிந்து நாசமானது. மேலும் காட்டெருமை, கடமான் உள்ளிட்ட வனவிலங்குகளும் பாதிக்கப்பட்டது. அவை உணவு மற்றும் குடிநீர் தேடி இடம்பெயர்ந்து வருகின்றன.
- காளஹஸ்தி கைலாசகிரி மலையில் ஏராளமான அரிய வகை மூலிகைகள், பல்வேறு வகையான விலை உயர்ந்த மரங்கள் வளர்ந்து அடர்ந்த வனப்பகுதியாக உள்ளது.
- கோடை காலங்களில் மலையில் ஏறும் சமூக விரோதிகள் அடிக்கடி இதுபோல் மலைகளுக்கு தீ வைப்பதால் செடி கொடிகள் மரங்கள் எரிந்து நாசமாகிறது.
திருப்பதி:
ஆந்திர மாநிலம் காளஹஸ்தி கைலாசகிரி மலையில் ஏராளமான அரிய வகை மூலிகைகள், பல்வேறு வகையான விலை உயர்ந்த மரங்கள் வளர்ந்து அடர்ந்த வனப்பகுதியாக உள்ளது.
இந்த மலையில் யானை, மான், சிறுத்தை, மயில் உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. தற்போது கோடை காலம் என்பதால் மரங்களின் இலைகள் உதிர்ந்தும், புற்கள் காய்ந்தும் சருகாக உள்ளது.
இந்த நிலையில் நேற்று மாலை கைலாசகிரி மலை, பரத்வாஜ் தீர்த்தம், முக்கந்தி கோவில் அருகே சமூக விரோதிகள் மது குடித்துள்ளனர். பின்னர் மழையில் இருந்த சருகுகளுக்கு தீ வைத்து உள்ளனர்.
தீ மளமளவென மலை முழுவதும் பரவியது. இதனைக்கண்ட பொதுமக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை கட்டுப்படுத்த முயன்றனர். ஆனால் தீயின் வேகம் அதிகமாக இருந்ததால் மிகவும் சிரமம் அடைந்தனர். இரவு முழுவதும் தீப்பற்றி எரிந்ததால் பல ஏக்கரில் மூலிகை செடிகள், மரங்கள் தீயில் கருகி நாசமானது.
தீயணைப்பு துறையினர் விடிய விடிய போராடி தீயை கட்டுப்படுத்தினர். கோடை காலங்களில் மலையில் ஏறும் சமூக விரோதிகள் அடிக்கடி இதுபோல் மலைகளுக்கு தீ வைப்பதால் செடி கொடிகள் மரங்கள் எரிந்து நாசமாகிறது.
எனவே சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.