search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Forfeiture"

    • சொத்து வரி செலுத்தாமல் இருப்பவர்களுக்கு நோட்டீஸ் செல்போன் வழியாக எஸ்.எம்.எஸ். அனுப்பப்படுகிறது.
    • 100 வணிக நிறுவன உரிமையாளர்களிடம் இருந்து சுமார் ரூ.70 கோடி நீண்டகாலமாக வசூல் ஆகாமல் உள்ளது

    சென்னை:

    சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சொத்துவரியை வசூலிப்பதில் மாநகராட்சி தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

    பருவமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை மக்களை சொத்துவரி, தொழில்வரி, தொழில் உரிமம் போன்ற வரி விதிப்புக்கு கடந்த 3 மாதமாக தீவிரப்படுத்தாமல் இருந்து வந்த நிலையில் மார்ச் 31-ந் தேதியுடன் இந்த நிதியாண்டிற்கான சொத்து வரி செலுத்தும் அவகாசம் முடிகிறது.

    அதனால் மாநகராட்சி வருவாய்த்துறை அதிகாரிகள், ஊழியர்கள் 15 மண்டலங்களிலும் வரி வசூலை தீவிரப்படுத்தி வருகின்றனர். சென்னையில் 4 லட்சம் வணிக கட்டிடங்கள், 8 லட்சம் வீடுகள் என மொத்தம் 12 லட்சம் சொத்துகளுக்கு வரி விதிக்கப்பட்டு வசூலிக்கப்படுகிறது.

    இந்த நிதியாண்டிற்கு ரூ.1600 கோடி சொத்து வரி இலக்காக நிர்ணயிக்கப்பட்டு அதில் இதுவரையில் ரூ.1,296 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை விட ரூ.2 கோடி கூடுதலாக வசூலிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள ரூ.300 கோடி இன்னும் 40 நாட்களில் வசூலிக்கப்பட வேண்டும்.

    சொத்து வரி செலுத்தாமல் இருப்பவர்களுக்கு நோட்டீஸ் செல்போன் வழியாக எஸ்.எம்.எஸ். அனுப்பப்படுகிறது. நீண்ட காலமாக சொத்து வரி செலுத்தாமல் நிலுவையில் உள்ளவர்களுக்கு நோட்டீஸ் வினியோகிக்கப்படுகிறது.

    சென்னை மாநகராட்சிக்கு நீண்ட காலமாக சொத்து வரி செலுத்தாமல் பல லட்சங்களை நிலுவையில் வைத்துள்ள வணிக நிறுவனங்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    100 வணிக நிறவன உரிமையாளர்களிடம் இருந்து சுமார் ரூ.70 கோடி நீண்டகாலமாக வசூல் ஆகாமல் உள்ளது அவர்களின் வணிக கட்டிடங்களை ஜப்தி செய்ய விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். அதற்கான சட்டம் சார்ந்த பணிகள் நடந்து வருகின்றன.

    எனவே பொதுமக்கள் தாங்கள் செலுத்த வேண்டிய சொத்து வரி, தொழில் வரியை செலுத்தினால்தான் அடிப்படையான வசதிகளை செய்ய முடியும். மார்ச் 31-ந் தேதி வரை காத்திருக்காமல் முன்கூட்டியே சொத்துவரி செலுத்தி மேல் நடவடிக்கை மற்றும் அபராதத்தை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் வீரமணி உயிரிழந்தார்.
    • போக்குவரத்து கழகத்துக்கு சொந்தமான பஸ் ஜப்தி செய்யப்படும் என உத்தரவிட்டார்.

    கடலூர்:

    விருத்தாசலம் அருகே உள்ள ஊத்தங்கால் பழைய காலனியை சேர்ந்தவர் ராமலிங்கம் மகன் வீரமணி (வயது 24). இவர் கடந்த 4.5.2017 அன்று ஊ.மங்கலம் அம்பேத்கர் சிலை அருகே கடலூர்-விருத்தாசலம் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அரசு பஸ், மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் வீரமணி உயிரிழந்தார். இதுதொடர்பாக ஊ.மங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    இதையடுத்து வீரமணியின் தாய் அனுசுயா, சகோதரி ரதி ஆகியோர் நஷ்டஈடு பெற்றுத்தரக்கோரி கடலூர் மூத்த வக்கீல் சிவமணி, வக்கீல்கள் சரவணன், முகுந்தன், சத்யா ஆகியோர் மூலம் கடலூர் கூடுதல் மாவட்ட நீதிமன்றம் எண் 1-ல் வழக்கு தாக்கல் செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, விபத்தில் பலியான வீரமணியின் குடும்பத்துக்கு சம்பந்தப்பட்ட விழுப்புரம் போக்குவரத்து கழகம் நஷ்டஈடாக ரூ.17 லட்சத்து 73 ஆயிரத்து 600 வழங்க வேண்டும் என கடந்த 18.3.2021 அன்று உத்தரவிட்டார். ஆனால் இதுநாள் வரை வீரமணியின் குடும்பத்துக்கு நஷ்டஈடு வழங்கப்படவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட வீரமணியின் குடும்பத்தினர், நிறைவேற்று மனு தாக்கல் செய்தனர்.

    இந்த மனுவை விசாரித்த கூடுதல் மாவட்ட நீதிபதி பிரகாஷ், வீரமணியின் குடும்பத்துக்கு விழுப்புரம் போக்குவரத்து கழகம் வட்டியுடன் ரூ.23 லட்சத்து 68 ஆயிரத்து 129 வழங்க வேண்டும், இல்லையெனில் சம்பந்தப்பட்ட போக்குவரத்து கழகத்துக்கு சொந்தமான பஸ் ஜப்தி செய்யப்படும் என உத்தரவிட்டார். இருப்பினும் நஷ்டஈடு வழங்கவில்லை. இதனால் நேற்று காலை கடலூர் பஸ் நிலையத்தில் நின்ற விழுப்புரம் போக்குவரத்து கழகத்துக்கு சொந்தமான அரசு பஸ்சை, கோர்ட்டு ஊழியர்கள் ஜப்தி செய்தனர்.

    • தாண்டவனூரை சேர்ந்த முத்துசாமி என்பவருக்கு சொந்தமான நிலத்தில் இருந்து, மண் எடுத்து சென்றது தெரியவந்தது.
    • இதையடுத்து டிராக்டர் மற்றும் மண் எடுக்க பயன்படுத்திய பொக்லைன் எந்திரம் ஆகியவற்றை பறிமுதல் செய்து, தொளசம்பட்டி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள தொளசம்பட்டி பகுதியில் கட்டுமானத்திற்கு தேவைப்படும் கிராவல் மண் கடத்துவதாக சேலம் மாவட்ட கனிம வளம் மற்றும் சுரங்க துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் கனிமவளத்துறை புவியியல் உதவி அலுவலர் பிரசாந்த் மற்றும் அதிகாரிகள் தொளசம்பட்டி பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது அவ்வழியாக வந்த டிராக்டரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் தாண்டவனூரை சேர்ந்த முத்துசாமி என்பவருக்கு சொந்தமான நிலத்தில் இருந்து, மண் எடுத்து சென்றது தெரியவந்தது. இதையடுத்து டிராக்டர் மற்றும் மண் எடுக்க பயன்படுத்திய பொக்லைன் எந்திரம் ஆகியவற்றை பறிமுதல் செய்து, தொளசம்பட்டி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    மேலும் உதவி அலுவலர் பிரசாந்த் கொடுத்த புகாரின்பேரில் மானத்தாள் கிராமத்தை சேர்ந்த சித்துராஜ் (38), உப்பாரப்பட்டியை சேர்ந்த விஜி ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, இருவரையும் தேடி வருகின்றனர்.

    • பண்ருட்டியில் சாராயம் கஞ்சா விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    • சாராயபாக்கெட் களையும்,கஞ்சாபொட்டலங்களையும் பறிமுதல் செய்து பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    கடலூர்:

    புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார், சப்-இன்ஸ்பெக்டர் ராமசாமி மற்றும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுப்பட்டனர். அப்போது பண்ருட்டி அருகே மனம் தவிழ்ந்த புத்தூர் சுடுகாடு அருகில் சாராய விற்பனையில் ஈடுபட்ட அதே பகுதியை சேர்ந்த சாண்டி(வயது21) என்பவரைகைது செய்தார். பின்னர் அவரிடம் இருந்து ஏராளமான சாராயபாக்கெட் களையும்,கஞ்சாபொட்டலங்களையும் பறிமுதல் செய்து பண்ருட்டி படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • ரூ.2½ லட்சம் மதிப்பிலான ஹைட்ராலிக் பம்பு திருட்டு.
    • ஹைட்ராலிக் எந்திரம் பறிமுதல் செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கீராளத்தூர் பகுதியை சேர்ந்தவர் சிங்காரவேல்.

    இவருக்கு சொந்தமான கதிர் அறுவடை எந்திரத்தில் இருந்து ரூ.2½ லட்சம் மதிப்பிலான ஹைட்ராலிக் பம்பை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.

    இதுகுறித்து அவர் ஆலிவலம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இதுதொடர்பாக துணை போலீஸ் சூப்பிரண்டு சோமசுந்தரம் தனிப்படை அமைத்தார்.

    தனிப்படை போலீசார் பிரான்சிஸ், பாலா, தேவதாஸ், சக்திவேல் ஆகியோர் ஹைட்ராலிக் பம்பை திருடிச்சென்றவர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் சேலம் மாவட்டம் ஆத்தூர் வேப்பந்தட்டை பகுதியை சேர்ந்த சுரேஷ்(வயது 22), செல்லப்பா(22), ஆறுமுகம்(28) ஆகியோர் ஹைட்ராலிக் பம்பை திருடியது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் அங்கு சென்று 3 பேரையும் கைது செய்து அலிவலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பார்த்திபன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் புஷ்பநாதன் ஆகியோரிடம் ஒப்படைத்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ஹைட்ராலிக் எந்திரம் பறிமுதல் செய்யப்பட்டது.

    இதையடுத்து 3 பேரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

    • என்ஜின், 25 லிட்டர் டீசல் பறிமுதல்.
    • 5 ஆயிரத்துக்கும் அதிகமான மீனவர்கள் 4-வது நாளாக மீன்பிடிக்க செல்லவில்லை.

    வேதாரண்யம்:

    குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அறிவுறுத்தி உள்ளது.

    இதுதொடர்பாக தங்கு கடல் மீன்பிடி தொழிலுக்கு சென்ற மீனவர்களுக்கு கோடியக்கரை மீன்வள த்துறை அலுவலகத்தில் இருந்து 'வாக்கி- டாக்கி' மூலம் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

    எச்சரிக்கையை மீறி அதிராம்பட்டினத்தில் இருந்து செந்தில்குமார் என்பவருக்கு சொந்தமான படகில் மீன்பிடிக்க கோடிய க்கரைக்கு வந்தனர்.

    இந்த படகை மீன்வளத்துறை ஆய்வாளர் நடேசராஜா, மீன்வள மேற்பார்வையாளர் விக்னேஷ் ஆகியோர் மற்றொரு படகில் கடலில் விரட்டி சென்று மடக்கி பிடித்து கரைக்கு கொண்டு வந்து படகை பறிமுதல் செய்தனர்.

    படகில் இருந்து என்ஜினையும், 25 லிட்டர் டீசலையும் பறிமுதல் செய்தனர்.

    இதேபோல் அறிவிப்பை மீறி கடலுக்கு சென்ற மேலும் 2 மீனவர்களுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

    மீன்வளத்துறை அறிவிப்பை தொடர்ந்து வேதாரண்யம் அருகே கோடியக்கரை கடற்கரையில் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்பதை அறிவிக்கும் வகையில் சிவப்பு கொடி ஏற்றப்பட்டுள்ளது.

    இதன் காரணமாக 10-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் 5 ஆயிர த்துக்கும் அதிகமான மீனவர்கள் இன்று 4-வது நாளாக மீன்பிடிக்க செல்லவில்லை.

    அங்கு கடல் சீற்றமாக காணப்படுவதால் மீனவர்கள் தங்கள் படகு களை பாதுகா ப்பான இட ங்களில் நிறுத்தி உள்ளனர்.

    • வாகனத்தில் கடத்திய 2 டன் ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
    • அதனை தாசில்தார் மற்றும் அதிகாரிகள் பறிமுதல் செய்து ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தில் ஒப்படைத்தனர்.

    வத்திராயிருப்பு

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு தாலுகாவிற்கு உட்பட்ட மகாராஜபுரம் பகுதியில் வத்திராயிருப்பு தாசில்தார் உமா மகேஸ்வரி, வட்ட வழங்கல் அதிகாரி செந்தில்குமார் மற்றும் அலுவலர்கள் வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 2 டன் ரேசன் அரிசி மூட்டைகள் இருந்தது.

    இது தொடர்பாக அந்த வாகனத்தை ஓட்டி வந்த விஜயனிடம் விசாரணை நடத்தினர். இதில் ரேசன் அரிசியை அவர் கடத்தி வந்தது தெரியவந்தது. அதனை தாசில்தார் மற்றும் அதிகாரிகள் பறிமுதல் செய்து ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தில் ஒப்படைத்தனர்.

    மேலும் ரேசன் அரிசி கடத்திய புகாரின் பேரில் விஜயனை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர்.

    • மதுரையில் சிலை கடத்தல் பிரிவு போலீசார் மீட்ட சிலைகள் எந்த கோவிலில் திருடப்பட்டது என 2 பேரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
    • உலோகத்தால் செய்யப்பட்ட நாகலிங்கம் சிலை, திருவாச்சியுடன் கூடிய அம்மன் சிலை மற்றும் 2 பாவை விளக்குகளை பறிமுதல் செய்தனர்.

    மதுரை

    சென்னை-தஞ்சை நெடுஞ்சாலையில் சாமி சிலைகள் கடத்தப்படுவதாக மதுரை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து சிலை கடத்தல் மற்றும் சிலை திருட்டு தடுப்பு பிரிவு போலீஸ் சூப்பிரண்டுகள் ரவி, மலைச்சாமி ஆகியோர் உத்தரவின்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு கதிரவன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அதிரடி வாகன சோதனை நடத்தினார்கள்.

    அப்போது சிலை கடத்தும் கும்பல் ராம்நகர் பாலம் அருகில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. அங்கு விரைந்து சென்ற போலீசார் சிலை கடத்தல் கும்பலை சுற்றி வளைத்தனர். இதில் 2 பேர் பிடிபட்டனர்.

    அவர்களை போலீசார் கைது செய்து அவர்களிடம் உலோகத்தால் செய்யப்பட்ட நாகலிங்கம் சிலை, திருவாச்சியுடன் கூடிய அம்மன் சிலை மற்றும் 2 பாவை விளக்குகளை பறிமுதல் செய்தனர்.

    இதனைத் தொடர்ந்து 2 பேரையும் போலீசார் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் தஞ்சை மாவட்டம் கும்பகோணம் தாலுகா தேனாம்படுகை வடக்கு தெருவை சேர்ந்த குருசேவ் (வயது 42), கொரநாட்டு கருப்பூர் அம்மன் கோவில் தெருவை சேர்ந்த பவுன்ராஜ் (36) என்பது தெரிய வந்தது.

    அவர்களுக்கு இந்த சிலை எப்படி கிடைத்தது? என்பது பற்றிய விவரங்கள் உடனடியாக கிடைக்க வில்லை.

    கடத்தல் கும்பலிடம் இருந்து மீட்கப்பட்ட சாமி சிலைகள் எந்த கோவிலில் இருந்து திருடப்பட்டது? மதுரை மாவட்டத்தில் உள்ள கோவிலில் இருந்து திருடப்பட்டதா? என்பது குறித்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×