என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Free bicycle"
- ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்
- உதயேந்திரம் பேரூராட்சி பள்ளியில் நடந்தது
ஆலங்காயம்:
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த உதயேந்திரம் பேரூராட்சியில் உள்ள புனித அந்தோணியார் மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் இலவச சைக்கிள் வழங்கும் விழா தாளாளர் மாறன் தலைமையில் நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளர்களாக பேரூராட்சி தலைவர் ஆ.பூசாராணி, முன்னாள் பேரூராட்சி தலைவர் மற்றும் பேரூராட்சி மன்ற உறுப்பினர் ஆ.செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு சைக்கிள்களை வழங்கி பேசினர்.
இதில் பள்ளியின் தலைமை ஆசிரியை சுகந்தி மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். முடிவில் அந்தோணிதாஸ் நன்றி கூறினார்.
- ஒன்றிய குழு தலைவர் வழங்கினார்
- ஏராளமானோர் கலந்துகொண்டனர்
காவேரிப்பாக்கம்:
ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி ஒன்றியத்திற்கு உட்பட்ட சம்பத்துராயன்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. பள்ளியின் தலைமை ஆசிரியர் குமாரி குட்டி தலைமை தாங்கிளார்.
சிறப்பு அழைப்பாளராக நெமிலி ஒன்றிய குழு தலைவர் வடிவேலு கலந்து கொண்டு 42 மாணவ மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்களைவழங்கி பேசினார்.
இதனை தொடர்ந்து நாகவேடு அரசு மேல்நிலைப் பள்ளியில்தலைமை ஆசிரியர் ரவிச்சந்திரன் தலைமையில் 27 மாணவர்க ளுக்கும் விலையில்லா சைக்கிள்கள் வழங்க ப்பட்டது.
இதில் நெமிலி ஒன்றிய குழு துணைத்த லைவர் தீனதயாளன், ஊராட்சி மன்ற தலைவர்கள் ஜோதி அருணாச்சலம் (சிறுணமல்லி), ஆனந்தி பாலசுப்பிர மணியன் (நாகவேடு), ஒன்றியக்குழு உறுப்பினர்கள் முருகேசன், சங்கரி செல்லப்பன், ஒன்றிய அவைத்தலைவர் புருஷோத்தமன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் கலைஞர்தாசன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
- முனிரத்தினம் எம்.எல்.ஏ. வழங்கினார்
- ரூ.2 கோடியே 12 லட்சம் மதிப்பீட்டில் புதிய வகுப்பறை கட்டும் பணியை தொடங்கி வைத்தனர்
காவேரிப்பாக்கம்:
பனப்பாக்கம் பேரூராட்சியில் உள்ள அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகளுக்கும், ஆண்கள் பள்ளி மாணவர்களுக்கும் விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பேரூராட்சி தலைவர் கவிதா சீனிவாசன் தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியை ஷர்மிளா முன்னிலை வகித்தார். சோளிங்கர் எம்.எல்.ஏ. முனிரத்னம் கலந்துகொண்டு 225 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கினார்.
முன்னதாக நபார்டு திட்டத்தின் மூலம் ரூ.2 கோடியே 12 லட்சம் மதிப்பீட்டில் புதிய வகுப்பறை கட்டும் பணியை தொடங்கிவைத்தார். இதில் பேரூராட்சி துணைத்தலைவர் மயூரநாதன், நகர தி.மு.க. செயலாளர் சீனிவாசன், பேரூராட்சி கவுன்சிலர்கள் குலோத்துங்கன், சாரதி, செந்தமிழ்செல்வன், சகிலா விநாயகமூர்த்தி, உட்பட பலர் கலந்துகொண்டனர்.
தொடர்ந்து நெமிலி பேரூராட்சியில் உள்ள அரசு பெண்கள் மற்றும் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிளை சோளிங்கர் எம்.எல்.ஏ. முனிரத்தினம் வழங்கினார்.
இதில் நெமிலி ஒன்றியக்குழு தலைவர் வடிவேலு, பேரூராட்சி தலைவர் ரேணுகாதேவி சரவணன், ஒன்றிய செயலாளர் ரவீந்திரன், நகர செயலாளர் ஜனார்த்தனன், நகர இளைஞரணி ராகேஷ் ஜெயின் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
- தமிழக அரசின் இலவச சைக்கிள்கள் வழங்கும் விழா நடைபெற்றது.
- விழாவில் 100 மாணவிகளுக்கு சைக்கிள்கள் வழங்கப்பட்டது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் குருகுலம் மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் இலவச சைக்கிள்கள் வழங்கும் விழா நகர கூட்டுறவு வங்கி தலைவர் அன்பரசு தலைமையில் நடைபெற்றது.
விழாவில் 100 மாணவிகளுக்கு சைக்கிள்களை வங்கி தலைவர் அன்பரசு வழங்கினார்.
முன்னதாக குருகுலம் நிர்வாக அறங்காவலர் கயிலைமணி வேதரத்னம் முன்னிலை வகித்து அனைவரையும் வரவேற்றார்.
முடிவில் பள்ளி தலைமை ஆசிரியை செல்வி நன்றி கூறினார்.
- முத்துப்பேட்டையில் மாணவர்களுக்கு அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கப்பட்டது.
- இந்த நிகழ்ச்சியை பொருளியல் ஆசிரியர் ஜான் தொகுத்து வழங்கினார்.
கீழக்கரை
ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை புனித ஜோசப் மேல்நிலைப் பள்ளியில் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கப்பட்டது. விழாவிற்கு பள்ளி தாளாளர் காஷ்மீர் சகாயநாதன் தலைமை தாங்கினார். பெரியபட்டினம் ஊராட்சி மன்ற தலைவி அக்பர் ஜான் பீவி, காரான் ஊராட்சி மன்ற தலைவர் சக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாவட்ட தலைவர் ரியாஸ் கான் வாழ்த்துரை வழங்கினார். பள்ளியின் தலைமை ஆசிரியர் ஞானப்பிரகாசம் விழாவை நடத்தினார்.
பள்ளி ஆசிரியர் செயலர் ஜோசப் பீட்டர் ராஜா வரவேற்றார். இந்த நிகழ்ச்சியை பொருளியல் ஆசிரியர் ஜான் தொகுத்து வழங்கினார். முடிவில் ஆசிரியர் இணைச் செயலர் ஜெயஸ்ரீ நன்றி கூறினார்.
- திருமங்கலத்தில் 331 மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்களை நகர்மன்றத்தலைவர் வழங்கினார்.
- பி.கே.என். ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் வழங்கப்பட்டது.
திருமங்கலம்
தமிழகத்திலுள்ள மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவிகள் சிரமமின்றி பள்ளிக்குச் செல்லும் வகையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் தமிழக அரசின் சார்பில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டு வருகிறது.
மதுரை மாவட்டம் திருமங்கலம் பி.கே.என். ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயிலும்331 மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடந்தது. நகராட்சி தலைவர் ரம்யா முத்துக்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் திருமங்கலம் தி.மு.க. நகர கழகச் செயலாளர் ஸ்ரீதர், நகர் மன்றத்துணைத் தலை வர் ஆதவன் அதியமான், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் முத்துக்குமார், பி.கே.என். ஆண்கள் மேல்நிலைப் பள்ளி கமிட்டி செயலர் சரவணன், தலைவர் பார்த்திபன், பொருளாளர் காமராஜ், கவுன்சிலர்கள் திருக்குமார், வீரக்குமார் பள்ளியின் தலைமை ஆசிரியர் மாரிராஜன் மற்றும் பள்ளியின் டைரக்டர்கள், ஆசிரிய பெருமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
- எம்.எல்.ஏ. வழங்கினார்
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் அடுத்த அனந்தபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் இலவச சைக்கிள்கள் வழங்கும் விழா நடைபெற்றது.
விழாவிற்கு தலைமை ஆசிரியர் கலைபாஸ்கர் தலைமை தாங்கினார். போளூர் ஒன்றிய குழு தலைவர் சாந்தி பெருமாள், ஊராட்சி மன்ற தலைவர் வளர்மதிஅண்ணாமலை, பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் பழனிச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். உதவி தலைமை ஆசிரியர் வெங்கடேசன் வரவேற்று பேசினார். இந்த விழாவில் கலசபாக்கம் சரவணன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு, 66 மாணவளுக்கு இலவச சைக்கிள்களை வழங்கிப் பேசினார்.
இதேபோல் படவேடு ரேணுகொண்டாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா சைக்கிள்களை 77 மாணவ மாணவிகளுக்கு கலசபாக்கம் சரவணன் எம்.எல்.ஏ. வழங்கினார்.
இதில் படவேடு ரேணுகாம்பாள் கோவில் முன்னாள் அறங்காவலர் குழுத்தலைவர் ஆர் வி சேகர், படவேடு ஆசிரியர் சங்க தலைவர் முருகன், உதவி தலைமை ஆசிரியர் சிங்காரகிருஷ்ணகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- ஒ.ஜோதி எம்.எல்.ஏ. வழங்கினார்
- பலர் கலந்துக் கொண்டனர்
செய்யாறு:
செய்யாறு கல்வி மாவட்டத்தைச சேர்ந்த கொருக்கை, வாழ்குடை, செங்காடு, கோவிலூர், அனக்காவூர், புரிசை, உக்கல், ஆக்கூர் ஆகிய அரசு மேல் நிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி செங்காடு அரசு மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவரும் முன்னாள் எம்எல்.ஏ வு மான எஸ்.பி.ஜே.கமலக்கண்ணன் தலைமைத் தாங்கினார். மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் பார்வதி சீனுவாசன், அனக்காவூர் ஒன்றியக்குழுத் தலைவர் திலகவதி ராஜ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் (பொ) தமிழரசன் அனைவரையும் வரவேற்றார்.
சிறப்பு விருந்தினராக செய்யாறு தொகுதி ஒ.ஜோதி எம் எல் ஏ கலந்துகொண்டு 585 மாணவர்களுக்கு இலவச சைக்கிள்களை வழங்கி பேசினார்.
முன்னதாக கொருக்கை அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ. 6 லட்சம் மதிப்பீட்டில் சுற்று சுவர் கட்டிடம் கட்டும் பணியினை எம்.எல்.ஏ. ஒ.ஜோதி தொடங்கி வைத்தார்.
இதில் ஊராட்சி மன்றத் தலைவர்கள் அருள் நரசிம்மன், டி.பாஸ்கர், பள்ளி மேலாண்மைக்குழுத் தலைவர் மீனாட்சி தமிழரசன், ஒன்றியக் கவுன்சிலர் மகாலட்சுமி அருள், ஒப்பந்ததாரர் கதிரேசன் குமரவேல், திமுக நிர்வாகிகள் மோ.ரவி, சி.கே.ரவிக்குமார், பார்த்தீபன், ஜெ.ஜெ.ஆறுமுகம் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.
- மிதிவண்டிகள் வழங்கும் விழா மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் தலைமையில் நடைபெற்றது.
- விழாவில் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்து கொண்டார்.
சென்னை:
நந்திவரம் கூடுவாஞ்சேரி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி கல்வித் துறை சார்பில் 11-ம் வகுப்பு மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் தலைமையில் நடைபெற்றது.
விழாவில் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்து கொண்டு மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார். நிகழ்ச்சியில் வரலட்சுமி மதுசூதனன் எம்.எல்.ஏ, நந்திவரம் கூடுவாஞ்சேரி நகராட்சி தலைவர் எம்.கே.டி.கார்த்திக் தண்டபாணி, துணை தலைவர் வக்கீல் ஜி.கே.லோகநாதன், தி.மு.க.தலைமை பொதுக் குழு உறுப்பினர் இரா.ஜிஜேந்திரன் ஜிஜி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆறுமுகம், மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) எஸ்.கே.ரவிச்சந்திரன், நகராட்சி ஆணையர் தாமோதரன், வண்டலூர் வட்டாட்சி யர் ராஜேந்திரன், பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் தி.மு.க.நிர்வாகிகள் கே.பி.ஜார்ஜ், கே.பி. அச்சுததாஸ், எஸ்.அப்துல்காதர், டி.ராமமூர்த்தி, ஜெ.மனோகரன், கே.பாஸ்கர், மதன கோபால், எம்.கே.டி.சரவணன், எம்.கே.எஸ்.செந்தில், ஓய்.ஜினோ, எஸ்.மதன், கே.பி.நரேஷ்பாபு, ஜி.எம்.கார்த்திக், எஸ்.முரளி, எஸ்.ஜெகதீசன், டி.பிரகாஷ், எஸ்.பழனி வேல், ஆர்.கணேசன், த.சீனிவாசன், என்.கோகுலநாதன், வி.சண்முகம், ஜெமினிஜெகன்,எம்.கே.பி.சதீஷ்குமார், ஆர்.தினேஷ்குமார்,பொன்.தசரதன், புண்ணியகோட்டி, ஏ.எஸ்.தரணி, பாலாஜி, வெங்கடேசன், ஜெ.காளிஸ்வரன்,எஸ்.ராம்பிரசாத், பி.கணேசன், சந்திரசேகர் மற்றும் கவுன்சிலர்கள் ஸ்ரீமதி ராஜி, ப.ரவி, ஜெ.குமரவேல், டி.சதீஷ்குமார், ஆர்.விக்னேஷ், எம்.நாகேஸ் வரன், அ.டில்லீஸ்வரி ஹரி, ஜெயந்திஅப்பு, எம்.நக்கீரன், எஸ்.சரஸ்வதி, திவ்யா சந்தோஷ்குமார், சசிகலாசெந்தில், அம்பிகா பழனி, ஸ்ரீமதி டில்லி, கெளசல்யாபிரகாஷ், ஜெயந்தி ஜெகன், நளினி மோகன், பரிமளா கணேசன், சுபாஷினி கோகுலநாதன்,கே.கார்த்திக் மற்றும் வழக்கறிஞர்கள் வி.மகாலிங்கம், ஜெயசாமுவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. பரிசுகள் வழங்கினார்.
- நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயமீனா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விளாத்திகுளம்:
விளாத்திகுளம் அருகே உள்ள செங்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் 31 பள்ளி மாணவ- மாணவிகளுக்கு இலவச சைக்கிள் மற்றும் கல்வி வளர்ச்சி நாளில் நடைபெற்ற கட்டுரை, ஓவியம், கவிதை போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. பரிசுகள் வழங்கினார்.
நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயமீனா, பள்ளி மேலாண்மை குழு தலைவர் செல்வவடிவேல், பெற்றோர் ஆசிரியர் சங்கத்தலைவர் சரஸ்வதி, புதூர் தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் ராதாகிருஷ்ணன், மும்மூர்த்தி, செல்வராஜ், மாவட்ட கவுன்சிலர் ஞானகுருசாமி, ஒன்றியக்குழு உறுப்பினர் சுமதி இமானுவேல், விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி தகவல் தொழில் நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் உட்பட மாணவ- மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
- 9-ம் வகுப்பு படித்த மாணவர்களுக்கு இலவச சைக்கிள், சீருடை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
- சீருடை மற்றும் சீருடை தைப்பதற்கு தையல் கூலி ஆகியவற்றை வழங்கினார்.
புதுச்சேரி:
நெட்டப்பாக்கம் கம்பன் அரசு மேல்நிலைப் பள்ளியில் 2022-23 கல்வியாண்டில் 9-ம் வகுப்பு படித்த மாணவர்களுக்கு இலவச சைக்கிள், சீருடை வழங்கும் நிகழ்ச்சி நடை பெற்றது.
துணை சபாநாயகர் ராஜவேலு கலந்து கொண்டு 97மாணவர்களுக்கு இலவச சைக்கிள், சீருடை மற்றும் சீருடை தைப்பதற்கு தையல் கூலி ஆகியவற்றை வழங்கினார். பள்ளி துணை முதல்வர் ஆஷா ராணி அனைவரையும் வரவேற்று பேசினார்.
விழாவில் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் உட்பட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் வழங்கினார்
- முதல்-அமைச்சர் ரங்கசாமி சைக்கிள்களை மாணவ மாணவிகளுக்கு வழங்கி, தொடங்கி வைத்தார்.
புதுச்சேரி:
புதுவையில் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட இலவச சைக்கிள்கள் கடந்த கால ங்களில் நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் சைக்கிள்களை மீண்டும் வழங்க அரசு நடவடிக்கை எடுத்தது. சமீபத்தில் முதல்-அமைச்சர் ரங்கசாமி சைக்கிள்களை மாணவ மாணவிகளுக்கு வழங்கி, தொடங்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து மங்கலம் தொகுதி கண்ணகி அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் பிற்படுத்த ப்பட்டோர் நலத்துறையின் மூலம் சைக்கிள், கல்வி துறையின் மூலம் சீருடை மற்றும் தையல் கூலி ரூ.400 ஆகியவற்றை அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் மாணவிகளுக்கு வழங்கினார். நிகழ்ச்சியில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை இயக்குனர் குமரன், இணை இயக்குனர் சுகந்தி மற்றும் என்.ஆர் காங்கிரஸ் பிரமுகர் சங்கர், பள்ளி முதல்வர் கேஷோவ், பள்ளி தலைமை ஆசிரியர் தனராசு, ஆசிரியர்கள் அமுதன், சுப்பிரமணியம், முரளிதரன், ஆதி, சுபசரவணன் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்