என் மலர்
நீங்கள் தேடியது "Fruits"
- 13 அடி உயரம், 23 அடி சுற்றளவு உள்ள லிங்கம் தனித்தனி கருங்கற்களினால் செதுக்கப்பட்டு இணைக்கப்–பட்டுள்ளது.
- மாலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு, பெருவுடையாருக்கு மகா தீபாராதனை.
தஞ்சாவூர்:
உலக புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவில் உலக பாரம்பரிய சின்னமாக விளங்குவதோடு, தமிழர்களின் கட்டிடக்–கலைக்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்து வருகிறது. இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டும் அல்லாது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.
பெரியகோவிலில் கருவறையில் உள்ள பெருவுடையார் மிகப்பெரிய லிங்கத் திருமேனியாகும். 6 அடி உயரமும், 54 அடி சுற்றளவும் கொண்ட பீடமும், அதன்மேல் 13 அடி உயரம், 23 அடி சுற்றளவும் உள்ள லிங்கம் எனத் தனித்தனி கருங்கற்களினால் செதுக்கப்பட்டு இணைக்கப்–கட்டு உள்ளது. இத்தகைய சிறப்பு மிக்க பெருவுடையாருக்கு ஐப்பசி பவுர்ணமி தினத்தில் அன்னாபிஷேகம் நடைபெறுவது வழக்கம்.
அதன்படி நாளை (திங்கட்கிழமை) ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு பக்தர்கள் வழங்கிய அரிசியை சாதமாக தயார் செய்து, பெருவுடையார் திருமேனி முழுவதும் சாத்தப்பட்டு, காய்கறிகள், பழங்கள், இனிப்பு வகைகளால் அலங்காரம் செய்யப்பட்டு, அன்னாபிஷேகம் நடைபெற உள்ளது.
பின்னர் மாலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தஞ்சை அரண்மனை தேவஸ்தானம் மற்றும் இந்து சமய அறநிலையத் துறையினர் செய்து வருகின்றனர்.
- மேலநீலிதநல்லூர் கிழக்கு ஒன்றிய தி.மு.க. மற்றும் கிளை கழகம் சார்பில் நீர், மோர் மற்றும் 2ஆயிரம் கிலோ பழங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
- ராஜா எம்.எல்.ஏ. பக்தர்களுக்கு பழங்கள் மற்றும் நீர், மோர் வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் அருகே உள்ள மேலநீலிதநல்லூரில் சிவஞான வெளியப்ப சாஸ்தா கோவில் திருவிழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு மேலநீலிதநல்லூர் கிழக்கு ஒன்றிய தி.மு.க. மற்றும் கிளை கழகம் சார்பில் நீர், மோர் மற்றும் 2ஆயிரம் கிலோ பழங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. மேலநீலிதநல்லூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் பெரியதுரை தலைமை தாங்கினார். தெற்கு ஒன்றிய செயலாளர் வெற்றிவிஜயன், கிளை செயலாளர், மாவட்ட பிரதிநிதி சண்முகப்பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க.செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. பக்தர்களுக்கு பழங்கள் மற்றும் நீர், மோர் வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இதில் மாவட்ட பிரதிநிதி செந்தூர்பாண்டியன், வர்த்தக அணி செந்தில்குமார், கூட்டுறவு சங்கத் தலைவர் விஜயபாண்டியன் மற்றும் மகேந்திரன், இளைஞர் அணி கார்த்திக், வீராச்சாமி தகவல் தொழில்நுட்ப அணி வீமராஜ், சிவாஜி, சுபாஷ் சந்திர போஸ், குருசாமி, ராமர்பாண்டியன், மேலநீலிதநல்லூர் கிளை நிர்வாகிகள், நாட்டாமை வெள்ளத்துரை, அவை தலைவர் கருப்பசாமி, முத்துப்பாண்டியன், முருகன், சுரேஷ், தாமஸ், விஜயகுமார், குமாஸ்தா முருகன் செந்தூர்பாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- நெல்லை மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக கடுமையான பனி இருந்து வந்தது.
- கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே ஏற்பட்ட வெயிலால் பெரும்பாலான சாலைகளில் கானல் நீர் தோன்றியது.
நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக கடுமையான பனி இருந்து வந்தது. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதியடைந்து வந்த நிலையில் சில நாட்களாக பனி குறைந்து வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கி உள்ளது.
நெல்லை
நெல்லை மாவட்டத்தில் கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே ஏற்பட்ட வெயிலால் பெரும்பாலான சாலைகளில் கானல் நீர் தோன்றியது. இதனால் வெயிலை சமாளிக்க வாகன ஓட்டிகள், பொதுமக்கள் குளிர்ச்சியான பழங்களை தேடி பழக்கடைகளில் குவிந்து வருகின்றனர். மாநகர பகுதியில் உள்ள பெரும்பாலான பழக்கடைகளில் ஜூஸ்கள் அருந்துவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
ஒருசில இடங்களில் வெயிலின் உஷ்ணத்தை தாங்க முடியாமல் வாகனங்களில் பயணம் செய்தவர்கள் மிகுந்த சிரமப் பட்டனர். துணியால் தலை, முகம் உள்ளிட்டவற்றை மூடிக்கொண்டு பயணம் மேற்கொண்டனர். மாநகரில் கல்லூரி மற்றும் பணிகளுக்கு செல்லும் பெண்கள் குடைபிடித்தபடி நடந்து சென்றதை காண முடிந்தது.
குளிர்ச்சி பானங்கள்
அதேநேரத்தில் பெரும்பாலான இடங்களில் சாலையோர பழக்கடைகள் புதிதாக தோன்றி உள்ளன. மேலும் கம்பங்கூழ், கேப்பை கூழ் உள்ளிட்டவைகளும் சாலையோரங்களில் தள்ளுவண்டிகளில் வைத்து விற்கப்பட்டு வருகிறது.
அதேபோல் பைபாஸ் சாலைகளில் உள்ள கடைகளில் விற்பனைக்காக உடலுக்கு குளிர்ச்சி தரும் தர்ப்பூசணி பழங்கள், இளநீர், பதநீர், நுங்கு உள்ளிட்டவை விற்பனைக்கு குவித்து வைக்கப்பட்டுள்ளன. இவற்றை பொதுமக்கள் வாங்கி செல்கிறார்கள். மேலும் வெள்ளரிக்காய், குளிர்பானங்களுக்கும் மக்களிடையே நாட்டம் அதிகரித்துள்ளது.
- பழங்கள் உற்பத்தியில் இந்தியா 2-வது இடத்தில் உள்ளது.
- கோடை காலத்தில் தர்பூசணி, திராட்சை, வாழைப்பழம், பப்பாளி, தக்காளி போன்ற பழங்கள் அதிக சேதம் அடைகின்றது.
திருவாரூர்:
நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய இணை பேராசிரியை சோ.கமலசுந்தரி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது:-
பழங்கள் நமது உடல் ஆரோக்கியத்திற்கு இன்றியமையாதவை.
நமது உடலுக்கு தேவையான வைட்டமின்கள் என்று சொல்லப்படும் உயிர்சத்துக்கள் மற்றும் தாது உப்புகளை நாம் பழங்கள் உண்பதன் மூலம் பெற முடியும்.
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மனிதனும் குறைந்தபட்சம் 150 கிராம் பழங்களை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் அறிவித்துள்ளது.
பழங்கள் உற்பத்தியில் இந்தியா 2-வது இடத்தில் உள்ளது.
உற்பத்தி செய்யப்பட்ட பழங்கள் சந்தைக்கு விற்பனைக்கு வரும் போது அவற்றின் விலை அதிகமாக காணப்படுகிறது.
மேலும் சரியான சேமிப்பு கிடங்கு வசதிகள் இல்லாததால் சந்தைக்கு விற்பனைக்காக வரும்போது அவற்றின் தன்மை குறைந்துவிடுகிறது.
மேலும் கோடை காலத்தில் தர்பூசணி, திராட்சை, வாழைப்பழம், பப்பாளி, தக்காளி போன்ற பழங்கள் அதிக சேதம் அடைகின்றது. பழச்சாறு உள்ளிட்ட பானங்கள் வடிகட்டிய பழகூலுடன், சர்க்கரை, சிட்ரிக் அமிலம் சேர்த்து தயார் செய்வதன் மூலம் பானங்களை கெடாமல் வைத்திருக்க முடியும்.
இதற்கான பயிற்சிகள் அனைத்தும் வேளாண்மை அறிவியல் நிலையத்தால் வழங்கப்படுகிறது.
ஒவ்வொரு வேளாண் விளைப்பொருட்களுக்கு ஏற்றவாறு பல்வேறு தொழில்நுட்பங்கள் கற்று தரப்படுகின்றது.
ஆர்வமுள்ளவர்கள் வேளாண்மை அறிவியல் நிலையத்தை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- காய்கறிகள் மற்றும் பழங்கள் என ரூ.40 லட்சம் முதல் ரூ.50 லட்சம் மதிப்பில் விற்பனை நடக்கிறது.
- 13 ஆயிரம் முதல் 15 ஆயிரம் பொதுமக்கள் பயன்பெற்று வருகிறார்கள்.
திருப்பூர் :
திருப்பூர் மாவட்டத்தில் திருப்பூர் தெற்கு, திருப்பூர் வடக்கு, பல்லடம், தாராபுரம், காங்கயம், உடுமலை ஆகிய 6 இடங்களில் உழவர் சந்தைகள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. நாளொன்றுக்கு 600 முதல் 645 விவசாயிகள், 145 முதல் 163 டன் காய்கறிகள் மற்றும் பழங்கள் என ரூ.40 லட்சம் முதல் ரூ.50 லட்சம் மதிப்பில் விற்பனை நடக்கிறது. இதன் மூலம் 13 ஆயிரம் முதல் 15 ஆயிரம் பொதுமக்கள் பயன்பெற்று வருகிறார்கள்.
உழவர் சந்தைகள் தொடர்பாக கலெக்டர் கிறிஸ்துராஜ் கூறும்போது, 'உழவர் சந்தையில் காய்கறி, பழங்களை விற்பனை செய்யும் விவசாயிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்படுகிறது. மாவட்டத்தில் 485 விவசாயிகள் பழைய அட்டைகளை புதுப்பிக்க ஆவணங்கள் பெறப்பட்டு ஆய்வு நடக்–கிறது. 939 பழைய அட்டைகளின் ஆய்வு முடிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் வடக்கு உழவர் சந்தையில் உள்ள குளிர்பதன கிடங்கில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் மே மாதம் வரை 6 ஆயிரத்து 743 கிலோ காய்கறிகள் இருப்பு வைத்து 284 விவசாயிகள் பயன் அடைந்துள்ளனர். நடமாடும் உழவர் சந்தை திட்டத்தில் 6 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு மானியம் வழங்கி நான்கு சக்கர வாகனங்களில் காய்கறி, பழங்கள் வீடுகளுக்கே சென்று விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2 ஆண்டுகளில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 6 உழவர் சந்தைகள் மூலமாக ரூ.310 கோடி மதிப்புள்ள 1 லட்சத்து 13 ஆயிரத்து 447 டன் அளவு காய்கறி மற்றும் பழங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 4 லட்சத்து 55 ஆயிரம் விவசாயிகளும், 1 கோடியே 10 லட்சத்து 93 ஆயிரம் நுகர்வோரும் பயனடைந்துள்ளனர் என்றார்.
- வெற்றியின் அடையாளமாகவும் வீரத்தின் அடையாளமாகவும் எலுமிச்சம்பழம் உள்ளது.
- சிவபெருமானின் நேத்ரகனி என்றும் எலும்மிச்சம் பழம் அழைக்கப்படுகிறது.
மேல் மலையனூர் ஆலயத்தில் குவிந்து இருக்கும் எலுமிச்சம் பழங்கள் போல வேறு எந்த தலங்களிலும் பார்க்க இயலாது. அந்த அளவுக்கு இங்கு எலும்மிச்சம் பழம் முக்கியத்துவம் பெற்றுள்ளது. அம்மனுக்கு மற்ற மலர் மாலைகளை விட எலுமிச்சம்பழ மாலையையே அதிகமாக பக்தர்கள் விரும்பி வாங்கி கொடுக்கிறார்கள். மேலும் அம்மனை வழிபட்ட பிறகு திருஷ்டிகளை விரட்ட கழிப்புக்காக சுற்றவும் எலுமிச்சம் பழத்தை பயன்படுத்துகிறார்கள்.
ஆகமங்களில் ஒவ்வொரு தெய்வங்களுக்கும் உரிய வழிபாடுகள் மற்றும் பூஜை பொருட்கள் எவை என்று விளக்கி கூறப்பட்டுள்ளன. ஒவ்வொரு தெய்வங்களுக்கும் உகந்த மலர், பழங்கள், மந்திரங்கள், வஸ்திரங்கள், எந்த நாட்களில் எப்படி பூஜை செய்ய வேண்டும் என ஆகமங்கள் விளக்கி உள்ளன. இவற்றில் ஒரு சில அனைத்து தெய்வங்களுக்கும் பொதுவானதாகும்.
பூக்களை தொடுத்து மாலையாக அணிவிப்பதை போல, சில சிறப்பான பழங்களையும் மாலையாக கட்டி கடவுளுக்கு அர்ப்பணிப்பதை ஆகமங்கள் ஆமோதிக்கின்றன. அவற்றில் முக்கியமான ஒன்று தான் எலுமிச்சம்பழம். தீயவற்றை போக்கி நன்மையை அளிக்கக்கூடிய மிகப் பெரிய மருந்து இது.
வெற்றியின் அடையாளமாகவும் வீரத்தின் அடையாளமாகவும் எலுமிச்சம்பழம் உள்ளது. காளி, மாரி, துர்கா போன்ற வீரத்தை வெளிப்படுத்தும் பெண் தெய்வங்களுக்கு இவை மிக உகந்தது. எனினும், மற்ற தெய்வங்களுக்கும் இவற்றை அளிக்கலாம்.
எலுமிச்சம்பழத்தை மாலையாக கடவுளுக்கு அளிப்பதினால், அந்த பழத்தின் சிறந்த மஞ்சள் நிறத்தினாலும் தன்மையாலும் நாம் நமது காரியங்களில் வெற்றி அடையலாம் என்பது உறுதி. நமது பிரார்த்தனையை இறைவனிடம் தெரிவிக்க வேண்டுமெனில், நாமே நமது பிரார்த்தனைகளை சங்கல்பம் செய்ய வேண்டும்.
பின்னர் பூ அல்லது பழங்களையோ தொடுத்து கடவுளுக்கு அளித்து நன்மைகளை பெற வேண்டும். முயன்றவரை நாமே நம் கைகளால் பூவையோ, பழங்களையோ மாலையாகத் தொடுத்து இறைவனுக்குப் படைப்பது கூடுதல் பலன் அளிக்கும்.
சிவபெருமானின் நேத்ரகனி என்றும் எலும்மிச்சம் பழம் அழைக்கப்படுகிறது. திருஷ்டி தோஷ நிவர்த்தி செய்வதில் எலுமிச்சம் பழத்தின் பங்கு மிக, மிக முக்கியமானது.
மஞ்சள் நிறத்தில் தோற்றம் அளிக்கும் எலுமிச்சம் பழம் பல்வேறு வகையான எதிர்வினை தீய சக்திகளை தம்முள் கிரகித்து கொண்டு திருஷ்டி, செய்வினை போன்றவற்றை பஸ்மம் செய்யும் ஆற்றல் கொண்டது.
மேல்மலையனூர் கோவிலுக்கு செல்லும் போது அம்மன் பாதத்தில் வைத்து எடுக்கப்படும் எலும்மிச்சம் பழங்களை தருவார்கள்.
அங்காளம்மன் பாதம்பட்ட அந்த எலுமிச்சம் பழங்கள் நிகரற்ற சக்திகள், சிறப்புகள் கொண்டது. எனவே அந்த எலுமிச்சம் பழங்களை வீணாக்கி விடாதீர்கள். வீட்டுக்கு எடுத்து வந்து உங்கள் திருஷ்டி தீர பல வகைகளில் அவற்றை பயன்படுத்தலாம்.
* வீடுகள், அலுவலகங்கள் இவற்றின் தலைவாசல் படியில் இரு பக்கங்களிலும் ஒரு எலுமிச்சம் பழத்தின் இரண்டு அரை வட்ட பகுதிகளாக பிளந்து, அதில் குங்குமம் தடவி வைத்துவிட வேண்டும். எவ்வித தீய எதிர்வினை சக்திகளும் உள்ளே செல்வதை தடுக்கும் சக்தி கொண்டதே குங்குமம் தடவிய எலுமிச்சம் பழம்.
* எலுமிச்சம் பழம், காய்ந்த மிளகாய், படிகாரம், உத்திரசங்கு இவைகளை ஒரு கறுப்பு கம்பளி கயிற்றில் கட்டி தலைவாசல் படியின் மேற்புறத்தில் தொங்க விட எவ்வித திருஷ்டி தோஷமும் அணுகாமல் பாதுகாக்கும்.
* வண்டி வாகனங்களில் முன்புறத்தில் பலர் பார்வையில் படும்படியாக 2, 3, 5, 7 என்ற எண்ணிக்கையில் எலுமிச்சம் பழங்களை வரிசையாக அமைத்து ஒரு கயிற்றில் கட்டி தொங்க விட வேண்டும். இதனால் பார்வை திருஷ்டிகளை அறவே தடுக்கலாம்.
* எலுமிச்சம் பழத்தை இரு துண்டுகளாக அரிந்து குங்குமத்தில் தோய்த்து அதை இரு கைகளால் சாறு பிழிந்து திருஷ்டி கழித்து போட வேண்டும். இப்படி பரிகாரம் செய்வதால் திருஷ்டி விலகும்.
* அங்காளம்மன் பாதம்பட்ட எலுமிச்சம் பழங்களை வீடுகள், அலுவலகங்கள், வண்டி வாகனங்களில் வைத்துக் கொள்வன் மூலம் பல்வகையான திருஷ்டி மற்றும் தீய எதிர்வினை சக்திகளிடமிருந்து உங்களை நீங்கள் தற்காத்துக் கொள்ள முடியும்.
* 21, 54, 108 எண்ணிக்கையில் சார்த்தப்பட்ட எலுமிச்சம் பழ மாலைகளில் இருந்து பிரசாதமாக பெறப்பட்ட எலுமிச்சம் பழங்கள் சிறந்த பாதுகாப்பு கவசமாக அமையும். இதை வெளியூர் பயணங்களின் போது கையில் வைத்துக் கொள்வது நல்லது. அது பயணத்தின் போது நமக்கு பாதுகாப்பு சக்தியை பெற்றுத்தரும்.
- ஏழைகளின் ஆப்பிள் என்று அழைக்கப்படும் பேரிக்காய் மற்றும் கொய்யா, வாழை, சப்போட்டா போன்றவை உடுமலை சுற்று வட்டாரப் பகுதிகளில் விளைவிக்கப்படுகிறது.
- பொதுமக்களின் தேவை அறிந்து சில்லறை வியாபாரிகள் சரக்கு வாகனத்தின் மூலமாக வீதி வீதியாக பழங்களை விற்பனை செய்து வருகின்றனர்.
உடுமலை:
உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை அளிப்பதில் காய்கறிகள், கீரைகள்,தானியங்களுக்கு அடுத்த படியாக பழங்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆப்பிள்,ஆரஞ்சு, சப்போட்டா, மாதுளை, திராட்சை, பிளம்ஸ், சீதாப்பழம், கொய்யா,சாத்துக்குடி, முலாம்பழம், ரம்பூட்டான் உள்ளிட்ட ஒவ்வொரு பழங்களும் மருத்துவ குணங்களை கொண்டு உள்ளது.
குறிப்பிட்ட இடைவெளியில் அதை உணவாக எடுத்துக் கொண்டு வரும் போது உடலும் உள்ளமும் நோய் நொடி இல்லாமல் ஆரோக்கியமாக இருக்கும்.
ஏழைகளின் ஆப்பிள் என்று அழைக்கப்படும் பேரிக்காய் மற்றும் கொய்யா, வாழை, சப்போட்டா போன்றவை உடுமலை சுற்று வட்டாரப் பகுதிகளில் விளைவிக்கப்படுகிறது.
மற்ற பழங்கள் அனைத்தும் அண்டை மாநிலங்களில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. அவை மொத்தமாகவும் சில்லரையாகவும் நடைபாதை வியாபாரிகள் மூலமாகவும் பழங்கள் பொதுமக்களை சென்றடைகின்றது. நகரப்பகுதிகளில் தள்ளுவண்டியில் கூட பழங்கள் விற்பனை செய்வதை காணலாம். இந்த நிலையில் தென்மேற்கு பருவமழை பொய்த்துப் போனதால் வெப்பத்தின் தாக்குதல் தொடர்ந்த வண்ணம் உள்ளது. அதை சமாளிக்க முடியாமல் பொதுமக்கள் திணறி வருகின்றனர். அதைத் தொடர்ந்து வெப்பத்தால் ஏற்படுகின்ற உடல் சூட்டை தணித்து நீர் இழப்பை தடுப்பதற்காக பழச்சாறுகளையும் பழங்களையும் பொதுமக்கள் உணவாக எடுத்து கொண்டு வருகின்றனர்.
இதனால் உடுமலையில் உள்ள பழக்கடைகள் மற்றும் தள்ளுவண்டிகளில் பழங்களின் விற்பனை அதிகரித்து உள்ளது. கூடவே அதன் விலையும் கணிசமான அளவில் உயர்ந்து உள்ளது. பொதுமக்களின் தேவை அறிந்து சில்லறை வியாபாரிகள் சரக்கு வாகனத்தின் மூலமாக வீதி வீதியாக பழங்களை விற்பனை செய்து வருகின்றனர். அதுமட்டுமின்றி பிரதான சாலையின் ஓரங்கள் முக்கிய சந்திப்புகளிலும் புதிதாக பழக்கடைகள் அமைக்கப்பட்டு உள்ளது.
இதனால் பொதுமக்களும் உற்சாகத்தோடு பழங்களை வாங்கி சென்று பயன்படுத்தி வருகின்றனர்.
- ஒரே நாளில் விரதம், உணவு சாப்பிடுவது மாறி மாறி பின்பற்றும் ஒரு முறையாகும்.
- ஊட்டச்சத்துக்கள் நிறைந்ததாகவும் இருக்க வேண்டியது அவசியம்.
ஒரே நாளில் விரதம், உணவு சாப்பிடுவது இரண்டையும் மாறி மாறி பின்பற்றும் ஒரு முறையாகும். இதில் உங்களுக்கு பிடித்த எல்லா வகை உணவுகளையும் எடுத்துக் கொள்ளலாம். அது உங்களுடைய அன்றாட கலோரி தேவைக்குள் இருந்தால் போதுமானது. அதேசமயம் அது ஊட்டச்சத்துக்கள் நிறைந்ததாகவும் இருக்க வேண்டியது அவசியம்.
இன்டர்மிட்டண்ட் டயட்டில் இருப்பவர்கள் செய்யும் மிகமுக்கியமான தவறு என்ன தெரியுமா? ஒரு நாளைக்கு 8-12 மணி நேரம் சாப்பிடாமல் இருக்க வேண்டும். அவ்வளவு தானே என்று ஏதோவொரு வேளையில் சாப்பிடுவது, 12 மணி நேரம் விரதம் இருப்பது என ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நேரத்தைப் பின்பற்றுவார்கள். அது மிகவும் தவறு.
இன்டர்மிட்டண்ட் டயட்டில் விரதத்தை பின்பற்ற உணவு முறை இருக்கிறது. அதில் உங்களுக்கு ஏற்ற ஒன்றை முதலில் முடிவு செய்து கொள்ளுங்கள். அதை தான் நீங்கள் பின்பற்ற வேண்டும். ஒவ்வொரு நாளும் ஒரு டயட் விண்டோவை பின்பற்றக் கூடாது. உதாரணத்துக்கு 16 மணிநேரத்தை தேர்வு செய்கிறீர்கள் என்றால் 16 மணி நேர விரதமும் 8 மணி நேரம் உணவு நேரமாகவும் இருக்க வேண்டும். இதுதான் இன்டர்மிட்டண்ட் விரதத்தின் முதல் படி.
இதற்குமுன் நீங்கள் எந்தவித டயட்டையும் பின்பற்றியதே இல்லை. புதிதாக முயற்சி செய்கிறீர்கள் என்றால் எடுத்தவுடனே இன்டர்மிட்டண்ட் டயட்டுக்குள் நுழைவது கொஞ்சம் சிரமமான விஷயம் தான். அதனால் எடுத்தவுடனே தீவிரமான டயட்டுக்குள் நுழைய வேண்டும் என்று நினைக்காதீர்கள். அப்படி செய்தால் சில நாட்களிலேயே அதில் இருந்து வெளியே வந்துவிடுவீர்கள்.
புதிதாக டயட்டுக்குள் வர நினைப்பவர்கள் முதல் வாரத்தில் 12 -12 மணி நேர் என்று தொடங்கி அப்படியே படிப்படியாக அதை 16-௮ விண்டோவுக்குள் நுழைய முயற்சி செய்யுங்கள். அது உங்களுக்கு கடினமாக இருக்காது.
எந்த டயட்டை பின்பற்றினாலும் தண்ணீர் நிறைய குடிக்க வேண்டியது முக்கியம். குறிப்பாக இன்டர்மிட்டண்ட் டயட்டில் நீண்ட நேரம் விரதம் இருக்க வேண்டியிருக்கும். அதனால் உடலில் நீர்ச்சத்து குறைபாடு உண்டாகும். அதனால் வழக்கமாக குடிக்கும் தண்ணீரின் அளவைக் காட்டிலும் இன்டர்மிட்டண்ட் டயட்டுக்குள் நுழையும்போது அதிகமாக தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
இன்டர்மிட்டண்ட் டயட்டை பொருத்தவரையில் இந்த நேரத்தில் தான் சாப்பிட வேண்டும் என்கிற நேரக்கட்டுப்பாடு தான் இருக்கிறது. உணவுக் கட்டுப்பாடு எதுவும் கிடையாது. பிடித்த உணவுகளை சாப்பிடலாம். அதனாலேயே நிறைய பேர் நொறுக்குத்தீனி, ஸ்நாக்ஸ் என்று சாப்பிடுகிறார்கள். அதனால் கலோரிகள் அதிகமாகுமே தவிர பலன் கிடையாது.
அதனால் உணவு எடுத்துக் கொள்ளும் நேரத்தில் எவ்வளவு ஊட்டச்சத்து அடர்ந்த உணவுகளை எடுத்துக் கொள்ள முடியுமோ அவ்வளவு நல்லது. அதனால் காய்கறிகள், பழங்கள், புரதங்கள், முழு தானியங்கள், ஆரோக்கியமான கொழுப்புகள் இருக்கும்படியான உணவுகளைத் தேர்வு செய்வது நல்லது.
விரதத்தை தொடங்கியதும் அதற்கு உங்களுடைய உடல் எப்படி ஒத்துழைக்கிறது என்பதை கண்காணிக்க வேண்டியது முக்கியம். ஒருவேளை டயட்டில் உங்களுக்கு ஏதேனும் அசவுகரியங்கள் ஏற்பட்டால், குறிப்பாக தலைசுற்றல், மயக்கம், உடல் சோர்வு, அதிகப்படியான பசி ஆகியவை இருந்தால் உங்களுடைய மருத்துவரிடம் ஆலோசனை கேட்டு அதற்கு ஏற்றபடி உங்களுடைய டயட் முறையில் மாற்றங்களை செய்து கொள்ளுங்கள்.
இன்டர்மிட்டண்ட் டயட்டை பொருத்தவரையில் உங்களுடைய விரத நேரமும் சரி, உணவு எடுக்கும் நேரங்களும் ஒரே சீராக இருப்பது நல்லது. எட்டு மணி நேரத்துக்குள் எப்போது வேண்டுமானாலும் சாப்பிடலாம் என்பதற்காக ஒவ்வொரு நாள் காலை உணவும் ஒவ்வொரு வேளையில் சாப்பிடுவது போன்ற தவறுகளை செய்யாதீர்கள். அப்படி செய்யும்போது உடல் அதிகமாக குழம்பிவிடும்.
8 மணி நேரத்துக்குள் உணவு எடுத்துக் கொள்ளும் நேரத்தையும் திட்டமிட்டு பின்பற்றுவது இன்டர்மிட்டண்ட் டயட்டில் மிக முக்கியம். இன்டர்மிட்டண்ட் விரதத்தை பின்பற்றினால் போதும் உடலில் எல்லா வித நல்ல மாற்றங்களும் நடந்து விடும் என்று மற்ற எந்த விஷயத்தையும் பின்பற்றாமல் இருப்பது தவறு.
ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றுவது மிக அவசியம். தினசரி உடற்பயிற்சி, ஜங்க் உணவுகளை தவிர்த்தல், புகைப்பிடித்தல், மது அருந்துதலை தவிர்த்தல், மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்துதல் ஆகியவை மிக முக்கியம்.
- உடலில் எலக்ட்ரோலைட்டுகளை சமநிலைப்படுத்தவும் துணை புரியும்.
- பழங்கள் சாப்பிட்டு வருவது பிளேட்லெட்டுகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும்.
கிவி
டெங்கு காய்ச்சலில் இருந்து குணமடைய உட்கொள்ள வேண்டிய சத்தான பழங்களுள் ஒன்று கிவி. இந்த பழத்தில் வைட்டமின் சி, பொட்டாசியம், பாலிபினால்கள், டிரோலாக்ஸ் போன்ற ஆன்டிஆக்சிடென்டுகள் நிறைந்துள்ளன. அவை உடலின் நோய் எதிர்ப்பு தன்மையை மேம்படுத்தவும், டெங்கு காய்ச்சலை திறம்பட எதிர்த்துப் போராடவும் உதவும்.
உடலில் எலக்ட்ரோலைட்டுகளை சமநிலைப்படுத்தவும் துணை புரியும். டெங்கு பாதிப்புக்கு ஆளாகுபவர்கள் தினமும் 2 கிவி பழங்கள் சாப்பிட்டு வருவது பிளேட்லெட்டுகளின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவி செய்யும்.
மாதுளை
மாதுளை பழத்தில் இரும்புச் சத்து அதிகம் உண்டு. ரத்தத்தில் பிளேட்லெட் எண்ணிக்கையை அதிகப்படுத்தவும் உதவும். மேலும் டெங்கு காய்ச்சலின்போது ஏற்படும் சோர்வை குறைக்கும். உடல் ஆற்றலையும் மேம்படுத்தும்.
சிட்ரஸ் பழங்கள்
ஆரஞ்சு, நெல்லிக்காய், எலுமிச்சை போன்ற சிட்ரஸ் பழங்களில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. அவை நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துவதற்கு உதவி செய்யும். பிளேட்லெட்டுகளுடன் ரத்த ஓட்டத்தை துரிதப்படுத்தும். ரத்தப்போக்கு அபாயத்தை குறைக்கவும் செய்யும்.
பப்பாளி
பப்பாளியில் பப்பைன், கரிகைன், சைமோபாபைன், அசிட்டோஜெனின் போன்ற சேர்மங்கள் உள்ளன. அவை அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகளைக் கொண்டுள்ளன. உடலின் நோய் எதிர்ப்பு தன்மையை வலுப்படுத்தி டெங்கு தொடர்பான வீக்கத்தை குறைக்கும் தன்மை கொண்டவை. டெங்குவில் இருந்து விரைவாக மீளவும் உதவும்.
பீட்ரூட்
இதில் இரும்பு மற்றும் போலிக் அமிலம் அதிகம் உள்ளன. அவை ரத்த சிவப்பணுக்களின் உற்பத்திக்கு அவசியமானவை. மேலும் பீட்ரூட்டில் நச்சு நீக்கும் பண்புகள் உள்ளன. அவை கல்லீரலை சுத்தப்படுத்தவும், அதன் செயல்பாட்டை மேம்படுத்தவும் உதவும். டெங்கு தொடர்பான அழற்சியின் காரணமாக உடலில் உள்ள பிளேட்லெட்டுகள் சேதம் அடைவதை தடுக்கும். இருப்பினும் பிளேட்லெட் அளவுகளில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தாது.
கீரை
கீரையில் வைட்டமின் கே மிகுதியாக இருக்கும். இது பிளேட்லெட் எண்ணிக்கையை நேரடியாக உயர்த்தாது. ஆனால் ரத்த அணுக்கள் நன்றாக உறைவதற்கு உதவும். அதனால் டெங்கு நோயாளிகள் கீரையை தவறாமல் சாப்பிட வேண்டும். இதில் இரும்பு, போலேட் மற்றும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. டெங்கு போன்ற வைரஸால் ஏற்படும்
ஆக்சிஜனேற்ற அழுத்தத்தில் இருந்து உடலை பாதுகாக்க உதவும். சோர்வு மற்றும் பலவீனம் போன்ற அறிகுறிகளில் இருந்து விரைவாக மீளவும் உதவி புரியும்.
பூசணி
இதில் வைட்டமின் ஏ மற்றும் பீட்டா கரோட்டின் போன்ற ஆக்சிஜனேற்றங்கள் நிறைந்துள்ளன. இவை உடலில் ஏற்படும் அழற்சி மற்றும் ஆக்சிஜனேற்ற அழுத்தத்தை எதிர்த்து போராடும் ஆற்றல் படைத்தவை.
- ஓட்டல் உாிமையாளா்கள் ஆண்டுதோறும் உரிமம் அல்லது பதிவுசான்றை புதுப்பிக்க வேண்டும்.
- உணவுப்பொருட்கள் தயாரிப்பு இடங்களில் உணவு பாதுகாப்பு மேற்பார்வையாளர்கள் பயிற்சி பெற்றவர் பணியில் இருக்க வேண்டும்.
திருப்பூர்:
உணவு பாதுகாப்புத்துறை சார்பில் உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டம் விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகள் குறித்த விழிப்புணா்வு கூட்டம் திருப்பூரில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை தலைமை தாங்கி பேசியதாவது:-
ஓட்டல் உாிமையாளா்கள் ஆண்டுதோறும் உரிமம் அல்லது பதிவுசான்றை புதுப்பிக்க வேண்டும். தரமான உணவுப்பொருட்கள் மற்றும் உணவுகளையே விற்பனை செய்ய வேண்டும். அனைத்து ஓட்டல்கள், உணவுப்பொருட்கள் தயாரிப்பு இடங்களில் உணவு பாதுகாப்பு மேற்பார்வையாளர்கள் பயிற்சி பெற்றவர் பணியில் இருக்க வேண்டும். ஓட்டல்களில் சமையல் அறைகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். ஏற்கனவே உபயோகப்படுத்திய சமையல் எண்ணெயை மீண்டும் உபயோகிக்காமல் பயோ-டீசல் உற்பத்திக்கு விற்பனை செய்ய வேண்டும். உணவுப்பொருட்களில் நிறமி சேர்க்க கூடாது. பழங்களை செயற்கை வகையில் பழுக்க வைக்கக்கூடாது. இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள், ஓட்டல் உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள், இனிப்பு, காரம் தயாரிப்பாளர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
- பின்னர் அங்கு விற்பனையாகும் காய்கறிகள், பழ வகைகள் ஆகியவற்றை பார்வையிட்டனர்.
- மேலும் வெளிநாட்டினர் பல்வேறு புகைப்படங்களை எடுத்துக் மகிழ்ந்தனர்.
கடலூர்:
சென்னை மற்றும் புதுவைக்கு ஏராளமான வெளிநாட்டினர் நேரில் வருகை தந்து, அதன் பின்பு சிதம்பரம், நாகப்பட்டினம் வேளாங்கண்ணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு வாகனங்கள் மூலமாக சுற்றுலா சென்று வருகின்றனர். இந்த நிலையில் இன்று காலை கடலூர் வழியாக சென்ற வெளிநாட்டினர் கடலூர் உழவர் சந்தைக்கு சென்றனர். பின்னர் அங்கு விற்பனையாகும் காய்கறிகள், பழ வகைகள் ஆகியவற்றை பார்வையிட்டனர். மேலும் அங்கிருந்த பழ வகைகளை வாங்கி ருசித்து பார்த்தனர்.
காய்கறிகள் வாழைத்தார்கள் போன்றவற்றை உற்பத்தி மற்றும் விற்பனை நடப்பது குறித்தும் வியாபாரிகளிடம் கேட்டறிந்தனர். அதனை வெளிநாட்டினருடன் வந்த மொழிபெயர்ப்பாளர் விவசாயிகள் மற்றும் வியாபாரிகளிடம் கேட்டு வெளிநாட்டினருக்கு கூறினார். மேலும் வெளிநாட்டினர் பல்வேறு புகைப்படங்களை எடுத்துக் மகிழ்ந்தனர்.
- காய்கறிகள், பழங்கள், இனிப்பு வகைகள், மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டது.
- ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்து வருகின்றனர்.
தஞ்சாவூர்:
உலக பாரம்பரிய சின்னமாக விளங்கும் தஞ்சாவூர் பெரிய கோவில் கட்டிட கலைக்கு சிறந்த எடுத்துகாட்டாள விளங்குகிறது. தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.
பெரிய கோவிலில் கருவறையில் உள்ள பெருவுடையார் மிகப்பெரிய லிங்கத்திருமேனியாகும். 6 அடி உயரமும், 54 அடி சுற்றளவும் கொண்ட பீடமும், அதன்மேல் 13 அடி உயரம், 23 அடி சுற்றளவும் உள்ள லிங்கமும் என தனித்தனி கருங்கற்களினால் செதுக்கப்பட்டு இணைக்கப்பட்டுள்ளன. இத்தகைய பல்வேறு சிறப்புகள் வாய்ந்த பெருவுடையாருக்கு ஐப்பசி மாத பவுர்ணமியில் அன்னாபிஷேகம் நடைபெறும்.
அதன்படி இன்று ஐப்பசி மாத பவுர்ணமி என்பதால் பிற்பகலில் அன்னாபிஷேகம் நடைபெற்றது. இதற்காக பக்தர்கள் வழங்கிய 1500 கிலோ அரிசி சாதமாக தயார் செய்யப்பட்டன. பின்னர் தயார் செய்யப்பட்ட சாதம் பெருவுடையார் திருமேனி முழுவதும் சாத்தப்பட்டன.
இதையடுத்து 500 கிலோ காய்கறிகள், பழங்கள், இனிப்பு வகைகள், மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டது. மாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். இரவில் லிங்கத்தில் இருந்து எடுக்கப்பட்ட அன்னம் பக்தர்கள், கால்நடைகளுக்கு பிரசாதமாக வழங்கப்படும்.
இரவு 7 மணி வரை தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். இரவு சந்திரகிரகணம் என்பதால் 8 மணிக்கே நடை சாத்தப்பட உள்ளது.