என் மலர்
நீங்கள் தேடியது "gambling"
- சட்டவிரோத சூதாட்ட செயலியை விளம்பரப்படுத்திய புகாரில் சைபராபாத் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
- பணம் பெற்றுக்கொண்டு நடிகர்கள் சூதாட்ட செயலி விளம்பரத்தில் நடித்ததாக தொழிலதிபர் பனிந்திர சர்மா புகார் அளித்திருந்தார்.
நடிகர்கள் பிரகாஷ் ராஜ், விஜய் தேவரகொண்டா உள்ளிட்ட 25 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சட்டவிரோத சூதாட்ட செயலியை விளம்பரப்படுத்திய புகாரில் சைபராபாத் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
பணம் பெற்றுக்கொண்டு நடிகர்கள் சூதாட்ட செயலி விளம்பரத்தில் நடித்ததாக தொழிலதிபர் பனிந்திர சர்மா புகார் அளித்திருந்தார்.
நடிகர்கள் மக்களை தவறாக வழி நடத்தியதால், அவர்கள் கடினமாக உழைத்த பணத்தை சூதாட்ட செயலியில் இழந்து விட்டனர் என்று புகார்தாரர் குறிப்பிட்டுள்ளார்.
2015ல் இதுபோன்ற விளம்பரத்தில் நடித்தேன். ஆனால் ஒரு வருடம் கழித்து விலகிவிட்டேன் என்று நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- பண்ருட்டியில் சூதாடிய 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
- அவர்களிடமிருந்து பணம், சீட்டு கட்டுஉள்ளிட்டவைகளை பறிமுதல்செய்தனர்.
கடலூர்:
பண்ருட்டி அருகே வீரபெருமாநல்லூரில் காசு வைத்து சூதாட்டம் நடைபெறுவதாக கடலூர்மாவட்டபோலீஸ் சூப்பிரண்டுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா மேற்பார்வையில் புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும்போலீசார் வீரபெருமாநல்லூருக்கு விரைந்து சென்றுஅங்கு சூதாடியஅதே ஊரை சேர்ந்த விநாயக மூர்த்தி (வயது23),விஜய் (41), முத்துவேல் (55),தனவேல் (40), ஜானகிராமன் (50)வெங்கடேசன் (38) அகியோரை கைதுசெய்தனர். அவர்களிடமிருந்து பணம், சீட்டு கட்டுஉள்ளிட்டவைகளை பறிமுதல்செய்தனர்.
- திருநாவலூர் அருகே பணம் வைத்து சூதாடிய 11 பேர் கைது செய்யப்பட்டனர்.
- அவர்களிடம் இருந்து சூதாட்ட பணம் ரூ. 5000 பறிமுதல் செய்தனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுக்காதிருநாவலூர் சராகத்துக்குட்பட்ட திருநாவலூர் இன்ஸ்பெ க்டர் அசோகன் தலைமை யில் சப்- இன்ஸ்பெ க்டர்கள் பிரபாகரன் மணிமேகலை தனிப்பிரிவு போலீசார் மனோகரன் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது கொரட்ட ங்குறிச்சி கிராமத்தில் சிலர் பணம் வைத்து சூதாடினர்.
அங்கு விரைந்த போலீ சார் மடக்கி பிடித்து அனை வரையும் கைதுசெய்து போலீஸ் நிலையம் கொண்டு வந்தனர். விசாரணையில் அதே பகுதியைச் சேர்ந்த சாரங்கன், மணிகண்டன், செல்வம், முருகன், ராஜா, சிவனேசன் சிவராமன், குணா, பாபு, ஏழுமலை என தெரிய வந்தது. அவர்க ளிடம் இருந்து சூதாட்ட பணம் ரூ. 5000 பறிமுதல் செய்தனர். அவர்கள் 11 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
- சிவகிரி 11-ம் நம்பர் ரோட்டில் குருசாமி என்பவர் வீட்டில் ஒரு கும்பல் பணம் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
- போலீசார் விரைந்து சென்று அங்கு சோதனை செய்தனர்
நெல்லை:
சிவகிரி 11-ம் நம்பர் ரோட்டில் குருசாமி என்பவர் வசித்து வருகிறார். இவரது வீட்டில் ஒரு கும்பல் பணம் வைத்து சூதாடுவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் தலைமையில் செயல்படும் தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் வேல்முருகனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து அவரது தலைமையில் தனிப்பிரிவு ஏட்டுக்கள் புகழேந்தி, கருப்பசாமி மற்றும் போலீசார் விரைந்து சென்று அங்கு சோதனை செய்தனர். அப்போது சுமார் 9 பேர் அங்கு பணம் வைத்து சூதாடிக்கொண்டிருந்தனர்.
உடனே போலீசார் அவர்களை சுற்றி வளைத்து கைது செய்தனர். விசாரணையில், விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த மணிகண்டன், கோவிந்தராஜ், மற்றொரு கோவிந்தராஜ், சங்கர், செம்புலிங்கம் மற்றும் சிவகிரியை சேர்ந்த குருசாமி ஆகியோர் என்பது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து ரூ.63,320-ஐ போலீசார் பறிமுதல் செய்தனர்.
- தி.மு.க. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் ஏமாற்றி வருகிறது.
- தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும்.
மன்னார்குடி:
மன்னார்குடியில் அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-
பாராளுமன்ற தேர்தல்களில் பிரதமரை தேர்ந்தெடுப்பதில் எங்கள் கட்சி முக்கிய பங்கு வகிக்கும்.
அதில் நாங்கள் அணில் போல் செயல்பட்டு வருகிறோம்.
தேசிய கட்சி ஒன்றுடன் அ.ம.மு.க. கூட்டணி அமைத்து பாராளுமன்ற தேர்தலை சந்திப்போம்.
எடப்பாடி பழனிச்சாமியுடன் இணைந்து செயல்பட மாட்டோம் என்று பலமுறை கூறி வருகிறோம்.
ஜெயலலிதாவை நேசிக்கிறவர்கள் ஒன்றிணைந்து, இதர கட்சியுடன் கைகோர்த்து தேர்தலை சந்தித்தால் தான் தி.மு.க.வை வீழ்த்த முடியும்.
தி.மு.க. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் ஏமாற்றி வருகின்றது.
இதனால் மக்கள் அதிருப்தியுடனும், வேதனையுடனும் உள்ளனர்.
இது வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கும்.
தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும்.
அதற்கான முயற்சியில் ஆளுநர் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வரும் நிலையில் இதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது துணை பொதுச்செயலாளர் ெரங்கசாமி, திருவாரூர் மாவட்ட செயலாளர் எஸ்.காமராஜ், தஞ்சாவூர் மாவட்ட செயலாளர்
மா. சேகர், மாநில வழக்கறிஞர் பிரிவு செயலாளர் வேலு.கார்த்திகேயன், தேர்தல் பிரிவு இணைச்செயலாளர் மலர்வேந்தன், அம்மா தொழிற்சங்க பேரவை மாநில இணைச் செயலாளர் சத்தியமூர்த்தி, நகரக் செயலாளர், ஒன்றிய செயலாளர், ஊராட்சி மன்ற தலைவர்கள், ஒன்றிய குழு உறுப்பி னர்கள் உடன் இருந்தனர்.
- தெலுங்கானா, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களைச் சேர்ந்த சூதாட்ட மாபியா கும்பல்கள் தமிழகத்துக்குள் மீண்டும் புகுந்து சூதாட்ட விடுதிகளை நடத்தி வருகிறார்கள்.
- முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு சூதாட்ட கிளப்புகளுக்கு தடை விதிக்க வேண்டும்.
சென்னை:
தமிழ்நாடு தெலுகு யுவசக்தி தலைவர் கே. ஜெகதீஸ்வர ரெட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோது ஆந்திராவை சேர்ந்த ஒருவர் சென்னையில் உள்ள ஒரு சூதாட்ட விடுதியில் மர்மமான முறையில் இறந்தார். தகவலறிந்த அன்றைய முதல்வர் ஜெயலலிதா அதிரடி நடவடிக்கை எடுத்து சென்னை மற்றும் தமிழகத்தில் செயல்பட்டு வந்த சூதாட்ட விடுதிகளுக்கு தடைவிதித்தார்.
தி.மு.க ஆட்சிக்கு வந்த பின்னர் மீண்டும் சென்னையில் சூதாட்ட விடுதிகள் செயல்பட தொடங்கின. இது குறித்து நான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்தேன். அதன் பேரில் முதல்வர் உடனடியாக அதிரடி நடவடிக்கை எடுத்து சென்னை தி. நகர், அண்ணாசாலை பகுதிகளில் செயல்பட்டு வந்த சூதாட்ட விடுதிகளுக்கு தடை விதித்தார். முதலமைச்சரின் அதிரடி நடவடிக்கைக்கு நான் கடிதம் எழுதி நன்றியும் பாராட்டும் தெரிவித்தேன்.
தற்போது தெலுங்கானா, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் சூதாட்ட விடுதிகளுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில் அந்த மாநிலங்களைச் சேர்ந்த சூதாட்ட மாபியா கும்பல்கள் தமிழகத்துக்குள் மீண்டும் புகுந்து சூதாட்ட விடுதிகளை நடத்தி வருகிறார்கள்.
தமிழக - ஆந்திர எல்லையான சூலூர்பேட்டை பகுதியில் உள்ள ஆரம்பாக்கம், கும்மிடிப்பூண்டி பகுதிகளில் சூதாட்ட கிளப்புகளை இந்த கும்பல் நடத்தி வருகிறது. ஆந்திராவின் நெல்லூர், கடப்பா, திருப்பதி, பிரகாசம் மாவட்டங்களை சேர்ந்த இந்த மாபியா கும்பல்கள் தமிழக - ஆந்திர எல்லை பகுதியை சேர்ந்த அரசியல்வாதிகள், போலீசாரின் துணையுடன் சூதாட்ட விடுதிகளை நடத்தி வருகிறார்கள். இதனால் பாதிப்புக்குள்ளான அந்த பகுதியை சேர்ந்த பெண்கள் என்னிடம் புகார் தெரிவித்தனர். தமிழ் கலாச்சாரத்தை சீரழிக்கும் இந்த சூதாட்ட கிளப்புகளுக்கு தமிழக அரசு தடை விதிக்க வேண்டும். மீண்டும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு சூதாட்ட கிளப்புகளுக்கு தடை விதிக்க வேண்டும். பெண்கள் நலனை கருத்தில் கொண்டு முதல்வர் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- பணம் வைத்து சீட்டு விளையாடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல்.
- வெவ்வேறு இடங்களில் நடந்த இந்த சம்பவத்தில் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தஞ்சாவூர்:
தஞ்சை சிவகங்கை பூங்கா அருகே பணம் வைத்து சீட்டு விளையாடப்படுவதாக மேற்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். போலீசாரை பார்த்ததும் அங்கிருந்த சிலர் தப்பிவிட முயன்றனர். சுதாரித்துக் கொண்ட போலீசார் 5 பேரை மடக்கிப் பிடித்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில், தஞ்சை இ.பி. காலனியை சேர்ந்த செந்தில்நாதன் (வயது 35), கரந்தை குமார் (45), காயிதே மில்லத் நகர் கார்த்தி (32), பூக்கார விளார் ரோடு ராஜா (42), ஜெகன் (30) என்பதும், பணம் வைத்து சீட்டு விளையாடியதும் தெரியவந்தது.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து செந்தில்நாதன் உள்பட 5 பேரையும் கைது செய்தனர்.
இதேபோல் தஞ்சை ரெயிலடி அருகே பணம் வைத்து சீட்டு விளையாடிய விளார் ரோட்டை சேர்ந்த ரமேஷ் (40), கார்த்தி (40), எல்.ஐ.சி. காலனி சங்கர் (55), தெற்கு சக்கரசாமந்தம் மணிகண்டன் (40), முத்து (40) ஆகிய 5 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
வெவ்வேறு இடங்களில் நடந்த இந்த சம்பவத்தில் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
- 3 சீட்டு கட்டுகள் மற்றும் ரூ.2 ஆயிரத்து 810 பறிமுதல்
- பணம் வைத்து சூதாடிய 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
பெரம்பலூர்
பெரம்பலூர் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சங்கர் தலைமையிலான போலீசார் நேற்று மதியம் ரோந்து சென்றனர். அப்போது பெரம்பலூர் வெங்கடேசபுரத்தில் ஒரு வீட்டில் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த திருவள்ளுவர் தெருவை சேர்ந்த அருண்குமார்(வயது 35), வினோத்குமார்(34), வெங்கடேசபுரத்தை சேர்ந்த சத்ரியன்(25), நீல்ராஜ் என்ற நீலமேகம்(50), உதயசூரியன்(47) மதனகோபாலபுரத்தை சேர்ந்த ராஜ்(46), மேட்டு தெருவை சேர்ந்த ரமேஷ்(56) ஆகிய 7 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 3 சீட்டு கட்டுகள் மற்றும் ரூ.2 ஆயிரத்து 810 பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட அனைவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
கள்ளக்குறிச்சி:
தியாகதுருகம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஸ்டாலின் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது புக்குளம் டாஸ்மாக் பின்புறம் சிலர் சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. போலீசார் விரைந்து சென்று சூதாட்டத்தில் ஈடுபட்டவர்களை மடக்கி பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் தியாகதுருகம் உதயமாம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர்கள் கோவிந்தராஜ் (வயது 56), சேகர் (46) வெங்கடேஸ்வரா நகர் பகுதியைச் சேர்ந்த சசிகுமார் (41), காந்திநகர் பகுதியைச் சேர்ந்த மகேந்திரன் (35), தியாகதுருகத்தைச் சேர்ந்த கமல்கான் (50) என்பது தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து 5 பேரையும் கைது செய்தனர்.
- அங்கு பணம் வைத்து சூதாடிய 6 பேரை போலீசார் மடக்கி பிடித்தனர்.
- 6 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்த ரூ.1,367 மற்றும் 5 செல்போன்களை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்தனர்..
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டத்தில் நடந்து வரும் குற்றச் செயல்க ளை கட்டுப்படுத்த விழுப்புரம் மாவட்ட எஸ்.பி. ஸ்ரீநாதா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதன்படி விழுப்புரம் பகுதியில் பணம் வைத்து சூதாட்ட ங்கள் நடப்பதாக போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதாவிற்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து உதவி சூப்பிரண்டு பார்த்திபன் தலைமையிலான போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். ப்போது விழுப்புரம் தாலுக்கா போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட சிந்தாமணி கிராமம் மாந்தோப்பு அருகே சூதாடுவதாக போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்த விழுப்புரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தன் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் சத்யானந்தம், புனித வள்ளி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
இதில் அங்கு பணம் வைத்து சூதாடிய 6 பேரை போலீசார் மடக்கி பிடித்தனர். அவர்களிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில், சிந்தாமணி கிராமம் மெயின் ரோட்டை சேர்ந்த பாஸ்கரன் மகன் மதன் (வயது 23), அதே ஊரைச் சேர்ந்த கனகராஜ் மகன் அருண் (27), குமார் மகன் விக்னேஷ் (26), ராஜேந்திரன் மகன் ராமச்சந்திரன் (30), அய்யனார் மகன் வடிவேல் (29), கிருஷ்ணமூர்த்தி மகன் சங்கர் (47) என்பது தெரியவந்தது. இதையடுத்து 6 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்த ரூ.1,367 மற்றும் 5 செல்போன்களை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்தனர்.
- பணம் வைத்து சூதாட்டம் நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
- கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பல்லடம் :
பல்லடம் அருகே உள்ள பொங்கலூர் நாதேகவுண்டம்பாளையத்தில் பணம் வைத்து சூதாட்டம் நடைபெறுவதாக காமநாயக்கன்பாளையம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்த போது அங்கே 7 பேர் பணம் வைத்து சூதாடியது தெரியவந்தது. அவர்களை சுற்றி வளைத்து கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து ரொக்கம் ரூ.44 ஆயிரத்து 400 பறிமுதல் செய்தனர்.
விசாரணையில் அவர்கள் நாதே கவுண்டம்பாளையத்தை சேர்ந்த ரங்கசாமி ( வயது 60), அதே ஊரைச் சேர்ந்த திருமூர்த்தி (39), மாயவன் (36 ), சரண்குமார் (19 ), துத்தாரி பாளையத்தைச் சேர்ந்த ஆறுமுகம் (50), கள்ளிப்பாளையத்தைச் சேர்ந்த அரவிந்த்குமார் (26), கழுவேறி பாளையத்தை சேர்ந்த சிவா(29) என்பது தெரியவந்தது. அவர்களை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடலூர்:
பண்ருட்டி பகுதிகளில் பல்வேறு சட்டவிரோத செயல்பாடுகளில் பலர் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை, புதுச்சேரியி்ல் இருந்து கடத்தி வரும் மது விற்பனை, கஞ்சா விற்பனை, சூதாட்டம் போன்றவைகளில் ஈடுபடும் நபர்களால் பண்ருட்டி பகுதியின் சட்டம் ஒழுங்கு பிரச்சினை அடிக்கடி ஏற்படுகிறது.
இதனை கட்டுப்படுத்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம், பண்ருட்டி போலீஸ் துணை சூப்பிரண்டு சபியுல்லா ஆகியோர் பண்ருட்டி போலீசாருக்கு உத்தரவிட்டனர். அதன்படி பண்ருட்டி பகுதிகளில் மேற்கண்ட செயல்களில் ஈடுபடும் நபர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் பண்ருட்டி நகரில் தங்கும் விடுதிகளில் சூதாட்டம் நடப்பதாக பண்ருட்டி போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து பண்ருட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் தங்கவேல், புஷ்பராஜ், பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர் விஜய் தலைமையிலான போலீசார் பண்ருட்டி நகரில் உள்ள அனைத்து தங்கும் விடுதிகளிலும் ஆய்வு செய்தனர். இதில் அங்கு ரூம்களை வாடகைக்கு எடுத்து பணத்தை வைத்து சீட்டு கட்டு விளையாடி சூதாட்டத்தில் ஈடுபட்ட 12 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும், சூதாட்டத்திற்கு பயன்படுத்தப்பட்ட பணம், சீட்டு கட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.