search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ganesh Chaturthi"

    • வருகிற 18-ந்தேதி நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ளது.
    • தமிழக அரசு எந்தவிதமான பாரபட்சமும் இன்றி விழாவை கொண்டாடுவதற்கு அனுமதி அளிக்க வேண்டும்.

    திருப்பூர்:

    இந்து முன்னேற்ற கழக தலைவர் கோபிநாத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- வருகிற 18-ந்தேதி நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ளது. இந்துக்கள் அனைவரும் சாதிகளை மறந்து ஒற்றுமையாக விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட வேண்டும்.

    இந்த ஆண்டு பா.ஜ.க. கட்சி விநாயகரை வைத்து வழிபடுவதற்கு திட்டமிட்டுள்ளதை இந்து முன்னேற்ற கழகம் வரவேற்கிறது. தமிழக அரசு எந்தவிதமான பாரபட்சமும் இன்றி விழாவை கொண்டாடுவதற்கு அனுமதி அளிக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.  

    • இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி மக்கள் எழுச்சி திருவிழா செங்காடு திடலில் நடந்தது.
    • இமயம் முதல் குமரி வரை ஒரே தேசமாக இருக்க வேண்டும் என்ற குறிக்கோளை கொண்டுள்ளன.

    அவிநாசி :

    அவிநாசியில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி மக்கள் எழுச்சி திருவிழா செங்காடு திடலில் நடந்தது. மாநகர் மாவட்ட செயலாளர் கேசவன் முன்னிலை வகித்தார்.

    இதில் மேகாலயா மாநில முன்னாள் கவர்னர் சண்முகநாதன் பேசியதாவது:- ஆர்.எஸ்.எஸ்.,இந்து முன்னணி மற்றும் பா.ஜ.க., ஆகியவை இமயம் முதல் குமரி வரை ஒரே தேசமாக இருக்க வேண்டும் என்ற குறிக்கோளை கொண்டுள்ளன. நாட்டின் ஒவ்வொரு அங்குல நிலமும் புனிதமானது.அனைத்து மக்களும் ரத்த சகோதரர்கள் என்ற உணர்வை வலியுறுத்துகின்றன. பிரதமர் மோடி தேசத்தின் ஒற்றுமைக்காக, வளர்ச்சிக்காக பல்வேறு பணிகளை செய்து வருகிறார். இவ்வாறு அவர் பேசினார்.இந்து முன்னணி மாநில செயலாளர் செந்தில்குமார் பேசுகையில், விநாயகர் சதுர்த்திக்கு முதல்-அமைச்சர் வாழ்த்து தெரிவிக்காததால் தி.மு.க.,வில் இருக்கும் இந்து தொண்டர்கள் வெட்கப்பட்டு தலைகுனிந்துள்ளனர். 'பிரிவினையை முறிடிப்போம், தேசிய சிந்தனையை வளர்ப்போம் என்ற கருத்து இந்தாண்டை குறிக்கோளாக கொண்டு செயல்படுகிறோம் என்றார்.

    • விநாயகர் சதுர்த்தி விழாவை அமைதியாக கொண்டாடுவது தொடர்பான ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.
    • விநாயகர் சிலை வைக்க ஒற்றைச்சாளர முறையில் விண்ணப்பிக்க வழிவகை செய்ய வேண்டும்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை அமைதியாக கொண்டாடுவது தொடர்பான ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர் வினீத் தலைமை வகித்தார். எஸ்.பி., சசாங் சாய், மாவட்ட வருவாய் அதிகாரி ஜெய்பீம் முன்னிலை வகித்தனர். இந்து முன்னணி மாநில பொதுசெயலாளர் கிேஷார்குமார், மாநில செயலாளர்கள் சேவுகன், சண்முகம், கோட்ட செயலாளர்கள் மோகன சுந்தரம், கோவிந்தராஜ் மற்றும் இதர இந்து அமைப்பினர் பங்கேற்று பேசினர்.

    விநாயகர் சிலை வைக்க ஒற்றைச்சாளர முறையில் விண்ணப்பிக்க வழிவகை செய்ய வேண்டும். விசர்ஜன ஊர்வல நாளில் மதுக்கடைக்கு விடுமுறை அளிக்க வேண்டும். வழக்கமான பாதைகளில் ஊர்வலம் நடத்த பாதுகாப்பு அளிக்க வேண்டும்.'ஸ்மார்ட் சிட்டி' பணிகளால் ரோடு உயரமாகியுள்ளது. சில இடங்களில், மின்கம்பிகள் தாழ்வாக செல்வதை சரிசெய்து கொடுக்க வேண்டும். மாவட்ட நிர்வாகம் அனுமதிக்கும் நீர்நிலைகளில், சிலைகளை கரைக்க ஏற்பாடு செய்யப்படும்.

    இயற்கை நீர்நிலைகளுக்கு கேடு விளைவிக்கும் ரசாயன சிலைகளை கரைக்க மாவட்ட நிர்வாகம் அனுமதிக்க கூடாதென கோரிக்கை வைக்கப்பட்டது. கலெக்டர் வினீத் பேசுகையில், விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்ய மாநகர போலீசில் உதவி கமிஷனரிடமும், மற்ற பகுதிகளில் ஆர்.டி.ஓ., அலுவலகத்திலும் அனுமதி கேட்டு விண்ணப்பிக்கலாம். சுற்றுச்சூழலை பாதிக்காத களிமண் சிலைகளை மட்டும் நீர்நிலைகளில் கரைக்க வேண்டும்.'பிளாஸ்டர் ஆப் பாரீஸ்' ரசாயன சிலைகளை பயன்படுத்தக்கூடாது. சிலையின் உயரம் 10 அடிக்கு மேல் இருக்க கூடாது. எளிதில் தீ பிடிக்கும் பொருட்களை கொண்ட பந்தல், பக்கவாட்டு தடுப்பு அமைக்க கூடாது. சதுர்த்தி விழாவை அமைதியாக நடத்திட அனைத்து தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும்.இவ்வாறு கலெக்டர் பேசினார்.

    • மண்டலின் தங்க, வெள்ளி நகைகள் ரூ.31.97 கோடிக்கு காப்பீடு செய்யப்பட்டுள்ளது.
    • கடந்த 2016-ல் ரூ.300 கோடிக்கு காப்பீடு செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

    மும்பை :

    மும்பையில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் எளிமையாக நடந்தது. இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.

    இந்தநிலையில் மும்பையின் பணக்கார கணபதி மண்டலான ஜி.எஸ்.பி. மண்டல் ரூ.316.40 கோடிக்கு காப்பீடு செய்யப்பட்டுள்ளது.

    இதுகுறித்து ஜி.எஸ்.பி. மண்டல் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    மண்டலின் தங்க, வெள்ளி நகைகள் ரூ.31.97 கோடிக்கு காப்பீடு செய்யப்பட்டுள்ளது. மண்டலை சேர்ந்த தன்னார்வலர்கள், பூசாரிகள், காலணி கடை ஊழியர்கள், பார்க்கிங் பிரிவு பணியாளர்கள், பாதுகாவலர்கள் ரூ.263 கோடிக்கும், மண்டலில் உள்ள நாற்காலிகள், கணினி, கண்காணிப்பு கேமரா, ஸ்கேனர், காய்கறி, பழங்கள் உள்ளிட்ட பொருட்கள் ரூ.1 கோடிக்கும், மண்டல் பந்தல், அரங்கம், பக்தர்கள் ரூ.20 கோடிக்கும் காப்பீடு செய்யப்பட்டுள்ளது.

    ஜி.எஸ்.பி. கணபதி மண்டல் சார்பில் பிரதிஷ்டை செய்யப்படும் விநாயகர் சிலை 66 கிலோ தங்க நகைகள், 295 கிலோ வெள்ளி நகைகளால் அலங்காரம் செய்யப்பட்டு இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. வருகிற 31-ந் தேதி பிரதிஷ்டை செய்யப்படும் ஜி.எஸ்.பி. விநாயகர் சிலை, 5-வது நாளில் (அடுத்த மாதம் 4-ந் தேதி) கரைக்கப்பட உள்ளது. முன்னதாக வருகிற 29-ந் தேதி ஜி.எஸ்.பி. மண்டல் கணபதி சிலையின் அறிமுக (பர்ஸ்ட் லுக்) நிகழ்ச்சி நடக்கிறது.

    ஜி.எஸ்.பி. கணபதி மண்டல் இதற்கு முன் அதிகபட்சமாக கடந்த 2016-ல் ரூ.300 கோடிக்கு காப்பீடு செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

    ஈரோடு பவானி ஆற்றில் பிள்ளையாரை கரைக்க சென்றபோது இளைஞர்கள் இருவர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. #GaneshChaturthi
    ஈரோடு:

    நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. விநாயகர் சதுர்த்தியின் சிறப்பு அம்சமாக, பூஜை செய்யப்பட்ட கணபதி சிலைகளை ஆற்றிலும், கடலிலும் கரைப்பது வழக்கம்.

    அதன்படி, திருப்பூர் மாவட்டம் மும்மூர்த்தி நகரில் இருந்து ஈரோடு மாவட்டம் பவானி ஆற்றில் விநாயகர் சிலையை கரைப்பதற்காக எடுத்து வந்துள்ளனர். அப்போது சிலையை ஆற்றில் கரைக்கும்போது எதிர்ப்பாராத விதமாக 3 இளைஞர்கள் ஆற்றில் விழுந்தனர்.

    உடனடியாக அப்பகுதியில் இருந்தவர்கள் அவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபடவே, ஒருவர் மீட்கப்பட்டார். மீட்கப்படாத இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    விநாயகர் சதுர்த்தி போன்ற தெய்வ வழிபாட்டு விழாக்களில் பொதுமக்கள் தங்கள் பாதுகாப்பையும் உறுதி செய்துகொள்ள வேண்டியது அவசியமான ஒன்றாக உள்ளது. #GaneshChaturthi
    விநாயகர் சிலைகள் ஊர்வலத்தையொட்டி ஊட்டி, கோத்தகிரியில் போலீசாரின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.
    ஊட்டி:

    விநாயகர் சதுர்த்தியையொட்டி நீலகிரி மாவட்டத்தில் இந்து அமைப்புகள் சார்பில் மொத்தம் 500 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளன. ஊட்டி மற்றும் கேத்தியில் இருந்து விசுவ இந்து பரிசத் சார்பில் 54 சிலைகள் இன்றும்(சனிக்கிழமை), இந்து முன்னணி சார்பில் 45 சிலைகள் நாளையும்(ஞாயிற்றுக்கிழமை) ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு காமராஜர் சாகர் அணையில் கரைக்கப்படுகிறது. இதையொட்டி ஊட்டி சேரிங்கிராசில் பழங்குடியினர் பண்பாட்டு மையம் அருகில் இருந்து போலீசாரின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது. அதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சண்முகப்பிரியா, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் கோபி, தம்பிதுரை, ஊட்டி நகர துணை போலீஸ் சூப்பிரண்டு திருமேனி உள்பட 300 போலீசார் கலந்து கொண்டனர். கொடி அணிவகுப்பு ஊர்வலமானது கமர்சியல் சாலை வழியாக காபிஹவுஸ் சந்திப்பு, மணிக்கூண்டை கடந்து பஸ் நிலையம் சென்றது. பின்னர் காந்தல் முக்கோண பகுதியில் இருந்து ரோகிணி தியேட்டர் வரை கொடி அணிவகுப்பு நடந்தது.

    இதுகுறித்து போலீஸ் சூப்பிரண்டு சண்முகப்பிரியா கூறும்போது, ஊட்டியில் இருந்து விநாயகர் சிலைகளை விசர்ஜனம் செய்ய காமராஜர் சாகர் அணைப்பகுதிக்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்படுகிறது. இதனால் அசம்பாவித சம்பவம் நடைபெறுமோ? என்று மக்கள் அச்சப்பட தேவையில்லை. உரிய பாதுகாப்பு அளிக்கப்படும். இதை உறுதி செய்யும் வகையில் போலீசாரின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது. அணையில் நீர் மட்டம் உயர்ந்து இருப்பதால், மாலை 6 மணிக்குள் விநாயகர் சிலைகளை விசர்ஜனம் செய்து விட வேண்டும் என்று இந்து அமைப்புகளுக்கு அறிவுறுத்தி உள்ளோம் என்றார்.

    கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இந்து முன்னணி சார்பில் 99 இடங்களிலும், அனுமன் சேனா சார்பில் 75 இடங்களிலும் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளன. அந்த சிலைகளை நாளை(ஞாயிற்றுக்கிழமை) மற்றும் நாளை மறுநாள்(திங்கட்கிழமை) உயிலட்டி நீர்வீழ்ச்சியில் விசர்ஜனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    இதையொட்டி நேற்று மதியம் 12 மணிக்கு குன்னூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணமூர்த்தி தலைமையில் போலீசாரின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது. கோத்தகிரி டானிங்டன் சந்திப்பில் தொடங் கிய அணிவகுப்பு ஊர்வலம் காமராஜர் சதுக்கம், மார்க்கெட் திடல், பஸ் நிலையம், ராம்சந்த் சதுக்கம் வழியாக போலீஸ் நிலையத்தில் நிறைவடைந்தது. அதில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் கலந்து கொண்டனர். 
    திருவள்ளூர் அருகே ரசாயன கலவை கலந்திருப்பதாக கூறி விநாயகர் சிலைகளை விற்க அதிகாரிகள் தடை விதித்து சீல் வைத்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
    திருவள்ளூர்:

    திருவள்ளூர் அருகே திருப்பாச்சூர் சாலையோரத்தில் ராஜஸ்தானை சேர்ந்த ஏராளமானோர் தங்கி விநாயகர் சிலைகளை கடந்த 3 மாதங்களாக இரவும் பகலும் தயாரித்தனர்.

    தற்போது வர்ணங்கள் பூசிய நிலையில் பெரிய அளவிலான 50-க்கும் மேற்பட்ட சிலைகளை விற்பனைக்குத் தயாராக வைத்து இருந்தனர்.

    இந்த நிலையில், இன்று நடைபெறும் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, விநாயகர் சிலைகளை எடுத்துச் செல்வதற்காக முன் பணம் கட்டியவர்கள் ஏராளமானோர் பல்வேறு வாகனங்களில் அங்கு குவிந்தனர்.

    இதற்கிடையே விற்பனைக்கு தயாரான சிலைகளை திருவள்ளூர் வட்டாட்சியர் தமிழ்செல்வன் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது சிலைகளில் ‘‘பிளாஸ்டர் ஆப் பாரிஸ்’’ என்ற ரசாயன பவுடர் பயன்படுத்தப்பட்டு இருப்பதாக தெரிந்தது. சிலைகளை நீர் நிலைகளில் கரைக்கும் போது சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படும் என்று கூறி அதிகாரிகள் விநாயகர் சிலை விற்பனைக்கு தடை செய்து சீல் வைத்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    பல்வேறு கிராமங்களில் இருந்து சிலைகளை எடுத்துச் செல்வதற்கு வாகனங்களில் வந்திருந்த பொது மக்கள் ஏமாற்றம் அடைந்தனர். திருவள்ளூர்-திருப்பதி சாலையில் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    வட்டாட்சியர் தமிழ்செல்வன் மற்றும் துணை போலீஸ் சூப்பிரண்டு கங்காதரன் ஆகியோர் பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    தாமரைப்பக்கம் பகுதியில் ரசாயனக் கலவை இல்லாமல், எளிதில் நீர் நிலையில் கரையக்கூடிய மற்றும் சுற்றுச் சூழல் பாதிக்காத வண்ணம் சிலைகள் உள்ளது என்றும் அங்கு விநாயகர் சிலைகள் வாங்கும் படியும் அதிகாரிகள் அறிவுறுத்தினர்.

    இதைத் தொடர்ந்து சிலைகள் வாங்க வந்தவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
    விநாயகர் சதுர்த்தி விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சிட்லபாக்கத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் 10 ஆயிரம் விநாயகர் சிலைகள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டு உள்ளது.
    தாம்பரம்:

    விநாயகர் சதுர்த்தி விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சிட்லபாக்கத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் 10 ஆயிரம் விநாயகர் சிலைகள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டு உள்ளது.

    கண்காட்சியில் பல்வேறு வடிவங்களுடன் விநாயகர் சிலைகள் விதவிதமாக காட்சி அளிக்கிறது. இதில் அனைத்து வகை கற்களால் ஆன பிள்ளையார் சிலைகள், கண்ணாடி பிள்ளையார் சிலைகள், 25 தலைகள் 52 கைகளுடன் சாம்பசிவ கணபதி சிலை, 12 அடி உயர தும்பிக்கையை தூக்கி ஆசிர்வதிக்கும் விநாயகர், நீச்சல் குளத்தில் படகில் செல்லும் விநாயகர், ரெயில் ஓட்டும் விநாயகர், நவக்கிரகங்களை சுற்றிவரும் விநாயகர் சிலை என வித்தியாசமான சிலைகள் காண்போரை ஆச்சரியப்பட வைக்கிறது.

    இந்த கண்காட்சி விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி தொடர்ந்து 11 நாட்கள் நடைபெறுகிறது. அனுமதி இலவசம் ஆகும். கண்காட்சியை ஏராளமான பொது மக்கள் பார்த்து ரசித்து வருகின்றனர்.

    திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டை விட கூடுதல் இடங்களில் விநாயகர் சிலைகளை வைக்க போலீசார் அனுமதி அளித்துள்ளனர். இதையொட்டி திருவள்ளூரில் 231, திருத்தணியில் 272, ஊத்துக்கோட்டையில் 227, பொன்னேரியில் 223, கும்மிடிப்பூண்டியில் 202 ஆகிய 5 உட்கோட்டங்களில் மொத்தம் 1155 சிலைகள் வைத்து வழிபாடு நடக்கிறது. #GaneshChaturthi
    ×