என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "gang"

    • சிலர் கொடிக்கம்பங்களை பிடுங்கி எறிந்தும், கீழே சாய்த்தும் சேதப்படுத்தி யுள்ளனர்.
    • பல்லடம் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள பணிக்கம்பட்டி ஊராட்சி காலனி பகுதியில், அரசியல் கட்சி கொடி கம்பங்கள் உள்ளது. இதனை சம்பவத்தன்று சிலர் கொடிக்கம்பங்களை பிடுங்கி எறிந்தும், கீழே சாய்த்தும் சேதப்படுத்தி யுள்ளனர்.

    இதையடுத்து கொடிக்கம்பங்களை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி அ.தி.மு.க. தெற்கு ஒன்றிய செயலாளர் சித்துராஜ் தலைமையில் நிர்வாகிகள் புகார் அளித்தனர்.இதேபோல பா.ஜ.க. சார்பில் மாவட்ட விவசாய அணி தலைவர் ரமேஷ் குமார் தலைமையில் நிர்வாகிகள் புகார் அளித்தனர். இதேபோல பணிக்கம்பட்டி ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் தலைவர் ரோஜா மணி ஈஸ்வரன் சார்பில் கொடிக்கம்பங்களை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பல்லடம் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

    • மதுபான கடைகளை உடைத்து தொடர் கொள்ளையில் ஈடுபட்டுவந்த கும்பல்.
    • சுமார் ரூ.4 லட்சம் மதிப்புள்ள நகைகள் பறிமுதல்.

    கும்பகோணம்:

    தஞ்சாவூர், திருவா ரூர் பெரம்பலூர் மாவட்ட ங்களில் தொடர்ந்து வழிப்பறி செய்தும், பூட்டிய வீடுகளை நோட்டமிட்டு திருடியும் அரசு மதுபான கடைகளை உடைத்து தொடர் கொள்ளையில் ஈடுபட்டுவந்த கும்பலில் இருவர் கைது செய்யப்பட்டனர்.

    தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்த குற்றவாளிகளை பிடிக்க தஞ்சாவூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரவளிப்பிரியா உத்தரவின் பேரில் திருவிடைமருதூர் துணை கண்காணிப்பாளர் ஜெகபர்சித்திக் மேற்பார்வையில் தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் காமராஜ் தலைமையில் கவியரசன் போலீசார் ரமணி, விக்னேஷ் தினேஷ் இவர்களை கொண்ட தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.

    இந்நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய திருவாடுதுறை குமார், தஞ்சாவூர் மாதவனை ஆகியோர் ஆடுதுறை பஸ் நிறுத்ததில் இருப்பதாக போலீசார் தகவல் கிடைத்தது.

    இதைத் தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இருவரையும் கைது செய்தனர்.

    மேலும் அவர்களிடமிருந்து சுமார் ரூ.4 லட்சம் மதிப்புள்ள நகைகள் மீட்கப்பட்டன. மேலும் அவர்கள் பயன் படுத்திய மோட்டர் சைக்கிள் பிறமுதல் செய்யப்பட்டது.

    • பல்லடம் அருகே உள்ள கணபதிபாளையம் விநாயகர் கோவில் தெருவில் வீடு கட்டி வாடகைக்கு விட்டுள்ளோம்.
    • சேதப்படுத்திய 6 பேர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

      பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள கணபதிபாளையம் வாய்க்கால் மேடு தோட்டத்தைச் சேர்ந்த முத்துசாமி மனைவி காந்திமதி பல்லடம் போலீஸ் நிலையத்தில் கொடுத்துள்ள புகாரில் கூறியிருப்பதாவது:- பல்லடம் அருகே உள்ள கணபதிபாளையம் விநாயகர் கோவில் தெருவில் வீடு கட்டி வாடகைக்கு விட்டுள்ளோம். இந்த நிலையில் கடந்த 17ஆம் தேதி இரவு அங்கு வந்த மர்ம நபர்கள் 6 பேர் வீட்டின் முன்பு பொறுத்தி இருந்த 3 கண்காணிப்பு கேமராக்களை உடைத்து சேதப்படுத்தி உள்ளனர். கேமராக்களை உடைக்கும் முன்பு அதில் 6 பேர் உள்ளதாக தெரிகிறது. எனவே கண்காணிப்பு கேமராக்களை உடைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் .இவ்வாறு அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புகாரின் பேரில் சுமார் 26 ஆயிரம் மதிப்புள்ள 3 கண்காணிப்பு கேமராக்களை சேதப்படுத்திய 6 பேர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    • இடைத்தரகர்கள் மூலமே பெரும்பாலும் துணிகள் விற்பனை நடந்து வருகிறது.
    • பல்லடம், அவிநாசி, ஈரோடு என பல்வேறு பகுதி போலீஸ் நிலையங்களிலும் மோசடி கும்பல் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

    திருப்பூர்:

    தமிழகத்தில் தொழில் ரீதியாக வளர்ச்சி அடைந்து வரும் நகரத்தில்திருப்பூர், பல்லடம் முக்கிய பங்கு வகிக்கிறது. பல லட்சங்களில் முதலீடு செய்து உற்பத்தியை பெருக்கி ஏற்றுமதி வரை கொண்டு செல்ல தொழில்துறையினர் பல்வேறு இன்னல்களை சந்திக்கின்றனர்.

    சமீப காலமாக மோசடி செய்யும் கும்பல் ஒன்று, தொழில் துறையினரை ஏமாற்றி கோடிக்கணக்கில் பணத்தை சுருட்டி கொண்டு தலைமுறைவாகி வருவது அதிகரித்துள்ளது.

    இது குறித்துதிருப்பூரை சேர்ந்த தொழில் துறையினர் சிலர் கூறியதாவது:-

    இடைத்தரகர்கள் மூலமே பெரும்பாலும் துணிகள் விற்பனை நடந்து வருகிறது. அவ்வாறு லட்சக்கணக்கான மதிப்பிலான துணிகளை பெற்றுச்செல்லும் சில இடைத்தரகர்கள், பணத்துடன் கம்பி நீட்டுவது வாடிக்கையாகி வருகிறது. குறிப்பாக ஈரோட்டைச் சேர்ந்த தந்தை மகன் என இருவர், இடைத்தரகர்களாக செயல்பட்டு பல கோடிகள் சுருட்டி மோசடி செய்துள்ளனர்.

    கடந்த4ஆண்டுக்கு முன் பல்லடம், அவிநாசி வட்டார பகுதிகளில் 60க்கும் மேற்பட்டவர்களிடம், துணிகளை பெற்றுக்கொண்டு ரூ. 4.75 கோடி, ஈரோட்டை சேர்ந்தவரிடம், ரூ.3.75 கோடி , பல்லடத்தை சேர்ந்த இருவரிடம்ரூ.1.68 கோடி , அவிநாசியை சேர்ந்தவரிடம் 90 லட்சம் ரூபாய் என பல கோடிகள் மோசடி செய்துள்ளனர்.ஒவ்வொரு இடத்திலும் வெவ்வேறு பெயர்கள், செல்போன் எண்கள் பயன்படுத்தி மோசடியை அரங்கேற்றி உள்ளனர். நம்பிக்கை காரணமாக துணிகளை கொடுத்து ஏமாறும் பலர் புகார் அளிக்க வருவதில்லை.இருப்பினும், பல்லடம், அவிநாசி, ஈரோடு என பல்வேறு பகுதி போலீஸ் நிலையங்களிலும் மோசடி கும்பல் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது போன்ற மோசடி ஆசாமிகளால், தொழிலை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்ல முடியாமல் புகார் அளிக்கவும் வழியின்றி, எண்ணற்ற தொழில் துறையினர் வேதனையில் ஆழ்ந்துள்ளனர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • தங்கியிருந்த வீடுகளில் போலீசார் அதிரடி சோதனை
    • பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்

     ஊட்டி,

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியில் சந்தேகத்துக்கிடமாக சுற்றித்திரிந்த வட மாநில கும்பலை பிடித்து சோதனை செய்ததில், புலி தோல், நகம், எலும்பு உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன.

    விசாரணையில் அவர்கள் ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்தவர்கள் என்பதும், நீலகிரி மாவட்டம் குந்தா காப்புக்காட்டில் புலியை வேட்டையாடியதும், சத்தியமங்கலம் பகுதியில் தங்கி இருந்து புலித்தோலை விற்பனை செய்ய முயன்றபோது சிக்கிக் கொண்டதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து புலியை வேட்டையாடியதாக கூறப்படும் நீலகிரி வனப்பகுதியில், கடந்த வாரம் அவர்களை அழைத்து வந்து வனத்துறையினர் விசாரணை நடத்தினர். இதில், புலியை வேட்டையாட பிரத்யேகமாக தயாரிக்க ப்பட்ட கருவிகள், தற்காலிக கூடாரம், பாத்தி ரங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. கைதானவர்கள் கொடூரமாக வேட்டை மற்றும் கொள்ளை சம்பவத்தில் ஈடுபடும் பவாரியா கும்பலை சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது. இந்நிலையில், வட மாநில கும்பல் தங்கி இருந்த எடக்காடு தக்கர் பாபா நகர் பகுதியில் வனத் துறையினர் மற்றும் எமரால்டு போலீசார் நேற்று தீவிர விசாரணை யில் ஈடுபட்டனர். சில வீடுகளுக்குள் புகுந்து சோதனை செய்தனர்.இதுகுறித்து வனத்துறையினர்கூறியதாவது:-

    இப்பகுதியில் கம்பளி விற்பனை செய்வதுபோல வட மாநில கும்பல் வந்து, 2 ஆண்டுகள் வரை தங்கி இருந்து புலி வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். மேலும், அங்கு வசிக்கும் உள்ளூர் நபரின் ஆவணங்களை பயன்படுத்தி சிம் கார்டு வாங்கி பயன்படுத்தியுள்ளனர். அந்த நபரையும் பிடித்து விசாரணை நடத்தி வருகிறோம். அவர்களிடம் கைப்பற்றப்பட்ட செல்போனில் இருந்து, இந்த சம்பவம் நடைபெற்ற சமயங்களில் யார், யாருக்கு தொடர்பு கொண்டனர் என்ற விவரங்கள் சேகரிக்க ப்பட்டு, அவர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.அவர்கள் அங்கு தங்கியிருந்த போது என்ன வேலைக்கு சென்றார்கள்? யாருடன் நெருங்கி பழகினார்கள்? சொந்த ஊருக்கு சென்று வந்தா ர்களா? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகிறோம். இதற்கிடையே சோதனை செய்தபோது ஒரு வீட்டில் இருந்து மான் கொம்பு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வேட்டையாடி மான் கொம்பு எடுத்துவரப்பட்டதா? என்பது குறித்தும் விசாரித்து வருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • நடந்து செல்வோரை குறிவைத்து செல்போன் பறித்துச்செல்கின்றனர்.
    • அண்ணாநகர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    மதுரை

    மதுரை நகர் பகுதியில் கடந்த சில மாதங்களாக நடந்து செல்வோரை குறிவைத்து செல்போன்கள் பறித்துச் செல்லும் சம்பவம் அதிகரித்து வருகின்றன. ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில் மோட்டார் சைக்கிளில் வரும் கும்பல் நடந்து செல்வோரை தாக்கி செல்போனை பறித்துச் செல்கிறது.

    ராமநாதபுரம் மாவட்டம் விளாத்தூரை சேர்ந்தவர் ரகு(28). மதுரை வந்திருந்த இவர், ஆரப்பாளையம் டி.டி.ரோட்டில் நடந்து சென்றார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் ரகுவை வழிமறித்து செல்போனை பறித்துச் சென்றனர்.

    சூர்யாநகரை சேர்ந்தவர் பாலசுப்பிரமணி(47). இவர் கூடல்நகர் ரோட்டில் நடந்து சென்றபோது, மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் கொண்ட கும்பல் செல்போனை பறித்துச் சென்றது. இதுதொடர்பாக கரிமேடு, கூடல்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    மதுரை அய்யனார்புரம் மண்டபம் தெருவை சேர்ந்தவர் ராமர்(20). இவர் சம்பவத்தன்று பனையூர் பகுதியில் நடந்த கபடி போட்டியை பார்க்க சென்றார். அப்போது அவரது செல்போன் திருடு போனது. இது தொடர்பாக சிலைமான் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்ததில் செல்போனை திருடியது பனையூர் கீழத்தெருவை சேர்ந்த ராமு(37), சிவகங்கை மாவட்டம் புலியூர் மேலத்தெருவை சேர்ந்த பால்பாண்டி(39) என தெரியவந்தது. 2 பேரையும் போலீசார் கைது செய்து செல்போனை பறிமுதல் செய்தனர்.

    மதுரை ஆலங்குளம் மங்கள விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் பெரோஸ்கான்(47). தனியார் மது பாரில் காவலாளியாக பணிபுரியும் இவர் சம்பவத்தன்று பாரில் உள்ள அறையில் தூங்கினார். அப்போது மர்ம நபர் அவரது செல்போனை திருடிக்கொண்டு தப்பினார். இதுகுறித்து அண்ணாநகர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • நேற்று இரவு கடலூர் முதுநகர் சான்றோர் பாளையம் பகுதியை சேர்ந்த ஒரு நபர் தங்களது வீட்டில் பாம்பு இருப்பதாக நள்ளிரவு தகவல் தெரிவித்துள்ளார்.
    • அவர்கள் செல்லா மற்றும் அஜய்யை சரமாரியாக தாக்கியதோடு செல்லா வைத்திருந்த செல்போனை உடைத்து நொறுக்கினர்

    கடலூர்:

    கடலூர் மஞ்சக்குப்பத்தை சேர்ந்தவர் செல்லா (வயது 30). வன ஆர்வலர். இவரது உதவியாளர் செல்லங்குப்பம் சேர்ந்த அஜய் (வயது 23). இவர்கள் கடலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பாம்பு பிடித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று இரவு கடலூர் முதுநகர் சான்றோர் பாளையம் பகுதியை சேர்ந்த ஒரு நபர் தங்களது வீட்டில் பாம்பு இருப்பதாக நள்ளிரவு தகவல் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து செல்லா மற்றும் அவரது உதவியாளர் அஜய் ஆகியோர் மோட்டார் சைக்கிளில் சான்றோர் பாளையம் பகுதியில் சென்றனர். பின்னர் பாம்பு இருப்பதாக தகவல் கொடுத்த நபருக்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்டு வீட்டிற்கு அழைத்துச் செல்லுமாறு தெரிவித்தனர். அப்போது அவ்வழியாக வந்த ஒரு வாலிபர் செல்லா மற்றும் அஜய்யிடம் நீங்கள் யார்? எதற்காக நிற்கிறீர்கள்? என கேட்டார்.

    அப்போது பாம்பு பிடிப்பதற்காக இங்கு வந்துள்ளோம் என தெரிவித்தனர். இந்த நிலையில் அந்த வாலிபர் திடீரென்று செல்லா மற்றும் அஜய்யை சரமாரியாக தாக்கினார். மேலும் அதே பகுதியை சேர்ந்த தனது ஆதரவாளர்களுக்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்டார். இதனை தொடர்ந்து சுமார் 20-க்கும் மேற்பட்ட கும்பல் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

    அவர்கள் செல்லா மற்றும் அஜய்யை சரமாரியாக தாக்கியதோடு செல்லா வைத்திருந்த செல்போனை கீழே போட்டு உடைத்து நொறுக்கினர். மேலும் செல்லாவை தாக்கியபோது அவர் கழுத்தில் இருந்த 2 பவுன் தங்க சங்கிலி அறுந்து கீழே விழுந்த நிலையில் அதனை பத்திரமாக செல்ல எடுத்துக்கொண்டு அங்கிருந்து உயிர் பிழைத்து தப்பித்து வந்தனர். இதில் காயமடைந்த செல்லா மற்றும் அஜய் ஆகியோர் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இது குறித்து கடலூர் முதுநகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடலூர் அருகே வன ஆர்வலர் செல்லா மற்றும் அவரது உதவியாளரை ஒரு கும்பல் தாக்கி செல்போைன அடித்து நொறுக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • உவரியில் இருந்து நேற்று இரவு ரேஷன் அரிசி மூட்டைகள் மினி லாரியில் கேரளாவிற்கு கடத்த முயல்வதாக 3 பேரை நவ்வலடியில் பொதுமக்கள் மடக்கி பிடித்தனர்.
    • தகவல் அறிந்து உவரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நதியா, பறக்கும் படை தாசில்தார் சுப்பு மற்றும் போலீசார் அங்கு வந்து விசாரணை நடத்தினர்.

    திசையன்விளை:

    திசையன்விளை அருகே உவரியில் இருந்து நேற்று இரவு ரேஷன் அரிசி மூட்டைகள் மினி லாரியில் ஏற்றப்பட்டு கேரளாவிற்கு கடத்த முயல்வதாக கூறி 3 பேரை நவ்வலடியில் பொதுமக்கள் மடக்கி பிடித்தனர்.

    தகவல் அறிந்து உவரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நதியா, பறக்கும் படை தாசில்தார் சுப்பு மற்றும் போலீசார் அங்கு வந்து விசாரணை நடத்தினர். அதில் உவரியில் ரேஷன் அரிசியை குறைந்த விலையில் வாங்கி கேரளாவிற்கு கடத்தி செல்ல முயன்றது தெரியவந்தது.

    ரேஷன் அரிசி பறிமுதல்

    இதையடுத்து லாரியில் இருந்த 37 மூட்டை ரேஷன் அரிசியை லாரியுடன் போலீ சார் பறிமுதல் செய்தனர். மேலும் ரேஷன் அரிசியை கடத்தி வந்த களியக்காவிளை பாடசாலையை சேர்ந்த சரத் (வயது 29), அருண்(36), அரிபிரசாத் (29) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். பின்பு அவர்கள் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி களிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

    • ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் சென்ற போது 5 பேர் கும்பல் தாக்கியது.
    • இதுகுறித்து ஜெய்ஹிந்த்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    மதுரை

    மதுரை துவரிமான் மேல தெருவை சேர்ந்தவர் கண்ணன் (56). சரக்கு வேன் டிரைவரான இவர் சம்பவத்தன்று லட்சுமிபுரம் பகுதியில் சரக்குகளை இறக்கினார். அப்போது அவருக்கும், அதே பகுதியில் இருந்த காவலாளிக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த கும்பல் கண்ணனை தாக்கியது. இதுகுறித்த புகாரின் பேரில் விளக்குத்தூண் போலீசார் வழக்குப்பதிவு செய்து கருப்பட்டியை சேர்ந்த பிரபாகரன் (24) என்பவரை கைது செய்தனர்.

    மேலூர் சந்தைப்பே ட்டையை சேர்ந்தவர் அயூப்கான் (45) ஷேர் ஆட்டோ டிரைவரான இவர் சம்பவத்தன்று ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் சென்ற போது 5 பேர் கும்பல் தாக்கியது. இது தொடர்பாக ஜெய்ஹிந்த்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    • பள்ளி மாணவ மாணவிகள், பெண்கள், பொதுமக்கள் வந்து செல்ல முடியாத அளவிற்கு போதை ஆசாமிகள் அட்டகாசம் உள்ளது.
    • மர்ம நபர்கள் கல் மற்றும் காலி மது பாட்டில்களை கொண்டு எறிந்து உடைத்திருப்பது தெரிந்தது.

    உடுமலை:

    கோவை மாவட்டம் மத்திய கூட்டுறவு வங்கியின் உடுமலை கிளை பசுபதி வீதியில் செயல்பட்டு வருகிறது. இந்த வங்கி கிளையில் கணக்கு வைத்துள்ளவர்கள் நகை கடன் ,பயிர் கடன் பெறவும் பரிவர்த்தனை மேற்கொள்ளவும் ஏராளமான வாடிக்கையாளர் வந்து செல்கின்றனர்.

    நேற்று முன் தினம் வங்கி அலுவலர்கள்வங்கியை பூட்டி சென்றனர். நேற்று காலை வங்கியைத் திறக்க வந்த போது வங்கி முன் உள்ள ஏடிஎம். மையத்தின் கண்ணாடி உடைந்து கிடந்தது. மர்ம நபர்கள் கல் மற்றும் காலி மது பாட்டில்களை கொண்டு எறிந்து உடைத்திருப்பது தெரிந்தது. இது குறித்து வங்கி அதிகாரிகள் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரிக்கின்றனர்.

    வங்கிக்கு எதிரில் வணிக வளாகங்கள், பொதுமக்கள் அதிகம் வந்து செல்லும் பிரதான ரோடான பசுபதி வீதியில் டாஸ்மாக் மதுக்கடை செயல்பட்டு வருகிறது. இங்கு இரவிலும் மது விற்பனை முறைகேடாக நடந்து வருவதால் போதை ஆசாமிகளின் புகலிடமாக மாறி உள்ளது. பள்ளி மாணவ மாணவிகள், பெண்கள், பொதுமக்கள் வந்து செல்ல முடியாத அளவிற்கு போதை ஆசாமிகள் அட்டகாசம் உள்ளது.

    எனவே இந்த கடையை மாற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். தற்போது ஏடிஎம். மையத்தை உடைத்து திருட முயற்சி நடந்துள்ளதால் பாதுகாப்பற்ற சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே அப்பகுதியில் உள்ள டாஸ்மாக் மது கடையை உடனடியாக மாற்று அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கொண்ட லாம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் புஷ்பராணி நேற்றிரவு கொண்ட லாம்பட்டி சூளைமேடு பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்.
    • சந்தேகம் அடைந்த போலீசார், காருக்குள் சோதனை செய்தனர்.

    சேலம்:

    சேலம் கொண்ட லாம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் புஷ்பராணி நேற்றிரவு கொண்ட லாம்பட்டி சூளைமேடு பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது நீண்ட நேரமாக ஒரு கார் அங்கு நின்று கொண்டு இருந்ததை கவனித்த அவர் அருகில் சென்று விசாரித்தார்.

    அப்போது காருக்குள் 6 பேர் கும்பல் இருந்தது. அவர்களிடம் விசாரித்த போது கல்லூரிக்கு காவலாளி பணிக்கு செல்வதாக கூறினார்கள்.

    சந்தேகம் அடைந்த போலீசார், காருக்குள் சோதனை செய்தனர். அப்போது அதில் ஏராளமான கொடுவாள், கத்தி உட்பட ஆயுதங்கள் இருந்தது. அவர்கள் யாரையாவது கொலை செய்ய வந்திருக்கலாம் என சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களை பிடிக்க முயன்றனர்.

    உடனே காரில் இருந்த 5 பேர் கண் இமைக்கும் நேரத்தில் தப்பி ஓடினர். போலீசார் சுற்றி வளைத்ததில் ஒருவர் மட்டும் சிக்கினார். பிடிபட்ட நபர் நெல்லை மாவட்டத்தை சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது.

    தொடர்ந்து அவரிடம் கொண்டலாம்பட்டி போலீசார், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தப்பி ஓடிய மற்றவர்களை தேடும் பணியில் ேபாலீசார் ஈடுபட்டுள்ளனர்.

    ஆயுதங்களுடன் வந்த கும்பல் யார்? எதற்காக வந்தார்கள்? யாரையும் கொலை செய்யும் நோக்கில் வந்தனரா? என பல கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    • மணல் கடத்திய கும்பலை மடக்கி பிடித்தார்.
    • இந்த நிலையில் அந்த கும்பல் கிராம நிர்வாக அதிகாரி வினோத்குமாரை கொலை செய்து விடுவதாக மிரட்டி உள்ளது.

    சேலம்:

    சேலம் மாவட்டம் மானத்தாள் கிராம நிர்வாக அதிகாரி வினோத்குமார். இவர் அந்த பகுதியில் மணல் கடத்தலை தடுக்க ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது மணல் கடத்திய கும்பலை மடக்கி பிடித்தார்.

    இந்த நிலையில் அந்த கும்பல் கிராம நிர்வாக அதிகாரி வினோத்குமாரை கொலை செய்து விடுவதாக மிரட்டி உள்ளது. இதனால் அச்சமடைந்த வினோத்குமார் ஓமலூர் அருகே உள்ள தொளசம்பட்டி போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தார்.தனக்கு மிரட்டல் விடுத்த மணல் கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

    மேலும் அந்த கும்பலால் தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது என்றும் அவர் புகார் தெரிவித்தார். ஏற்கனவே தூத்துக்குடி மாவட்டத்தில் மணல் கடத்தலை தடுத்த கிராம நிர்வாக அதிகாரி கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் சேலத்தில் கிராம நிர்வாக அதிகாரிக்கு மணல் கடத்தல் அச்சுறுத்தல் ஏற்படுத்திய சம்பவம் அதிகாரிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    ×