search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ganja sold"

    • கைதானவர்களிடம் இருந்த 1 கிலோ 250 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
    • தென்பாகம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவின்படி தூத்துக்குடி நகர டி.எஸ்.பி. சத்தியராஜ் மேற்பார்வையில் தென்பாகம் இன்ஸ்பெக்டர் ராஜராம் தலைமையில் தலைமை காவலர் மாணிக்கராஜ், முதல் நிலை காவலர்கள் மகாலிங்கம், செந்தில், சாமுவேல், முத்துப்பாண்டி ஆகியோர் அடங்கிய தனிப்படை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது மீனவர் காலனி பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தவர்களை பிடித்து விசாரணை செய்தனர். அதில் அவர்கள் தூத்துக்குடி மேல சண்முகபுரம் பகுதியை சேர்ந்த லோகேஸ்வரன் (வயது21), வண்ணார் தெருவை சேர்ந்த உதயகுமார் (24), கீழசண்முகபுரம் பகுதியை சேர்ந்த விகாஷா (25) மற்றும் சென்னை ரெட்ஹில்ஸ் பகுதியை சேர்ந்த விக்னேஷ் (32) ஆகியோர் என்பதும், அவர்கள் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து 4 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்த 1 கிலோ 250 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக தென்பாகம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கைது செய்யப்பட்ட லோகேஸ்வரன் மீது ஏற்கனவே தென்பாகம் காவல் நிலையத்தில் கொலை முயற்சி வழக்குகள் உட்பட 3 வழக்குகளும், முத்தையாபுரம் காவல் நிலையத்தில் ஒரு வழக்கும் என 4 வழக்குகளும், உதயகுமார் மீது தென்பாகம் காவல் நிலையத்தில் கொலை முயற்சி உட்பட 3 வழக்குகளும் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

    • போலீசார் மற்றும் பொதுமக்களுக்கு சந்தேகம் வராமல் இருப்பதற்காக வடமாநிலங்களில் இருந்து டப்பாக்களில் அடைத்து கஞ்சா சாக்லேட்டுகளை கடத்தல்.
    • கஞ்சா சாக்லேட்டுகளை கடத்தி வந்து திருப்பூரில் பணியாற்றும் வடமாநில தொழிலாளர்களுக்கு சப்ளை செய்தது விசாரணையில் தெரியவந்தது.

    திருப்பூர்:

    திருப்பூர் போயம்பாளையத்தை அடுத்த மும்மூர்த்தி நகரில் உள்ள ஒரு பனியன் நிறுவனத்திற்கு சொந்தமான விடுதி அருகே வடமாநில வாலிபர் ஒருவர் கஞ்சா மற்றும் போதை சாக்லெட் விற்பனை செய்வதாக அனுப்பர்பாளையம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரேமா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த வடமாநில வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினார்.

    இதில் அவர் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த நிரஞ்சன் பிரதான் (வயது 38) என்பது தெரியவந்தது. மேலும் அவர் அந்த பகுதியில் கஞ்சா மற்றும் போதை சாக்லேட்டுகளை விற்பனை செய்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து ¼ கிலோ கஞ்சா, 16 டப்பா போதை சாக்லேட்டுகளை பறிமுதல் செய்தனர்.

    போலீசார் மற்றும் பொதுமக்களுக்கு சந்தேகம் வராமல் இருப்பதற்காக வடமாநிலங்களில் இருந்து டப்பாக்களில் அடைத்து கஞ்சா சாக்லேட்டுகளை கடத்தி வந்து திருப்பூரில் பணியாற்றும் வடமாநில தொழிலாளர்களுக்கு சப்ளை செய்தது விசாரணையில் தெரியவந்தது.

    இதேபோல் அவினாசி போலீசார் பழங்கரை பஸ் நிலையம் அருகே கஞ்சா சாக்லேட் விற்ற ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பிரேம் சிங் ரின்வா (வயது 21) என்பவரை கைது செய்தனர்.

    • சோழவரம் அடுத்த பூதூர் பகுதியில் உள்ள ஏரியில் பிரவீன் வெட்டி கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
    • கஞ்சா விற்பனை மோதலில் வாலிபர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    செங்குன்றம்:

    பெரியபாளையம் அடுத்த தண்டுமாநகர் பகுதியை சேர்ந்தவர் பிரவீன் என்கிற மண்டை பிரவீன்(வயது25). வீட்டில் இருந்து வெளியே சென்ற அவர் பின்னர் திரும்பி வரவில்லை. அவரை தேடிவந்தனர்.

    இந்த நிலையில் சோழவரம் அடுத்த பூதூர் பகுதியில் உள்ள ஏரியில் பிரவீன் வெட்டி கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரது தலையில் பலத்த வெட்டுக்காயம் காணப்பட்டது.

    இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவ்வழியே சென்றவர்கள் சோழவரம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    விசாரணையில் கஞ்சா விற்பனை மோதலில் இந்த கொலை நடந்து இருப்பது தெரியவந்தது.

    பெரியபாளையத்தை சேர்ந்த ஒருவர் கஞ்சா விற்பனை செய்து வருகிறார். அவரிடம் அதே பகுதியைச் சேர்ந்த சிலர் மாமூல் கேட்டு மிரட்டி உள்ளனர். இந்த விவகாரத்தில் பிரவீன் தலையிட்டதாக கூறப்படுகிறது. இந்த மோதலில் கொலை நடந்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். இது தொடர்பாக 3 பேரை போலீசார் பிடித்து உள்ளனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. கஞ்சா விற்பனை மோதலில் வாலிபர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    காரைக்கால் அருகே கஞ்சா விற்றது தொடர்பாக வாலிபரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காரைக்கால்:

    காரைக்கால் அருகே நிரவி ஆற்றங்கரைத் தெரு பகுதியில் நிரவி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் சந்தேகத்துக்கிடமான வகையில் நின்றிருந்த ஒருவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

    அதில், அவர் அதே பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணன் (எ) படையப்பா (வயது 22) என்பதும், இளைஞர்களுக்கு விற்பனை செய்யும் நோக்கில் கஞ்சா வைத்திருந்ததும் தெரிய வந்தது.

    இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காரைக்கால் அருகே திருநள்ளாறில் கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். மேலும் ரூ.2 ஆயிரம் மதிப்பிலான கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.
    காரைக்கால்:

    காரைக்காலை அருகே திருநள்ளாறு பகுதியில், போலீசார் ரோந்து சென்றனர். திருநள்ளாறு புறவழிச்சாலையில், சந்தேகத்துக்கிடமான வகையில் நின்றிருந்த ஒரு வாலிபரை பிடித்து விசாரித்தபோது, அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறியுள்ளார்.

    தொடர்ந்து, காவல்நிலையம் அழைத்துசென்று விசாரித்தபோது அவர் பெயர் நறுமுகன்(வயது20), காரைக்கால்மேடு சுனாமி நகரைச் சேர்ந்தவர் என்பதும், அப்பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரிய வந்தது.

    அதனை தொடர்ந்து, போலீசார் நறுமுகனை கைது செய்து, ரூ.2 ஆயிரம் மதிப்பிலான கஞ்சாவை  கைப்பற்றினர்.
    • பள்ளி-கல்லூரி மாணவர்களுக்கு ஒரு பாக்கெட் கஞ்சா ரூ.500-க்கு விற்பனை செய்து வந்தது போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது.
    • வழக்கில் தொடர்புடைய சொக்கலிங்கத்தை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    ஆலங்குளம்:

    தென்காசி மாவட்டம் ஆலங்குளம் காமராஜர் நகர் பகுதியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரே மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேரை பிடித்து விசாரித்துக் கொண்டிருந்தனர்.

    அப்போது அதில் ஒருவன் தப்பியோட முயற்சி செய்தான். அவனை மடக்கி பிடித்த போலீசார் 3 பேரையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அவர்களிடம் சோதனை மேற்கொண்டபோது அவர்கள் வைத்திருந்த பை ஒன்றில் சிறு சிறு பொட்டலங்களாக 320 கிராம் கஞ்சா வைத்திருப்பது தெரியவந்தது.

    விசாரணையில் அவர்கள் மூவரும் அதே பகுதியை சேர்ந்த முத்துராமன்(வயது 24), மாரி செல்வம்(25) மற்றும் அருணாசலம்(22) ஆகியோர் என்பதும், பள்ளி-கல்லூரி மாணவர்களுக்கு ஒரு பாக்கெட் கஞ்சா ரூ.500-க்கு விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.

    இதையடுத்து மூன்று பேரையும் கைது செய்த போலீசார் ஆலங்குளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பாளை மத்திய சிறையில் அடைத்தனர். இவ்வழக்கில் தொடர்புடைய சொக்கலிங்கத்தை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    • கஞ்சா விற்கப்படுவதால் அதனை வாங்கி பயன்படுத்தும் இளைஞர்கள், மாணவர்கள், முதியோர் போன்ற பல்வேறு தரப்பினரின் வாழ்க்கை சீரழிகிறது.
    • தமிழ்நாட்டில் கஞ்சா இல்லாத நிலை ஏற்பட வேண்டும் என்பது தான் தமிழக மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

    சென்னை:

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தில் கஞ்சா விற்பனைக்கும், பதுக்கலுக்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டியது தமிழக அரசின் கடமையாகும்.

    காரணம் கஞ்சா விற்கப்படுவதால் அதனை வாங்கி பயன்படுத்தும் இளைஞர்கள், மாணவர்கள், முதியோர் போன்ற பல்வேறு தரப்பினரின் வாழ்க்கை சீரழிகிறது. தமிழ்நாட்டில் கஞ்சா இல்லாத நிலை ஏற்பட வேண்டும் என்பது தான் தமிழக மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

    தமிழக அரசு, மாநிலத்தில் உள்ள மாணவர்கள், இளைஞர்கள், முதியோர் போன்ற பல்வேறு தரப்பினரின் உடல்நலன், வருங்கால நல்வாழ்வு ஆகியவற்றை மிக முக்கிய கவனத்தில் கொண்டு கஞ்சாவுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு கடுமையான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • பெருந்துறையில் பல்வேறு பகுதியில் போலீசார் கஞ்சா விற்பனை நடைபெறுகிறதா? என்று சோதனை செய்தனர்.
    • தனசேகர் பெருந்துறையில் உள்ள ஒரு தனியார் வங்கியில் ஊழியராக வேலை பார்த்து வருவது தெரியவந்தது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பெருந்துறை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப நாட்களாக கஞ்சா விற்பனை அதிகரித்து வருகின்றது. இதை தடுக்க போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அவ்வப்போது வரும் ரகசிய தகவலின் அடிப்படையில் போலீசார் சோதனை செய்து கஞ்சா பொட்டலங்கள் மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபடுபவர்களை கைது செய்து வருகின்றனர்.

    இந்நிலையில், பெருந்துறையில் பல்வேறு பகுதியில் போலீசார் கஞ்சா விற்பனை நடைபெறுகிறதா? என்று சோதனை செய்தனர். அப்போது கஞ்சா விற்றதாக திருப்பூர் மாவட்டம் ஊத்துகுளியை சேர்ந்த சக்திவேல்(29), ராமு என்பவரது மகன் தினேஷ்குமார்(23), பெருந்துறை குள்ளம்பாளையத்தை சேர்ந்த தனசேகர்(31) ஆகிய 3 பேரை பெருந்துறை போலீசார் கைது செய்தனர்.

    இதில் தனசேகர் பெருந்துறையில் உள்ள ஒரு தனியார் வங்கியில் ஊழியராக வேலை பார்த்து வருவது தெரியவந்தது. கைதானவர்களிடம் இருந்து 130 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதாக பெருந்துறை போலீசார் கூறினர். கஞ்சா விற்பனையில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கஞ்சா வியாபாரிகளின் நடமாட்டத்தை கண்டறிந்து, மக்களை பாதுகாக்க வேண்டிய போலீசாரே கஞ்சா விற்று வந்தது பொதுமக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    • கைது செய்யப்பட்ட இரண்டு போலீஸ்காரர்களையும் சிறையில் அடைத்தனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம், பல்லடம் போலீஸ் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருபவர் சரவணன், (35). இவர், கஞ்சா பதுக்கி வைத்திருந்ததாக, கடந்த சில மாதங்களுக்கு முன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய், இவரை சஸ்பெண்ட் செய்தார். இந்த நிலையில் போலீஸ்காரர் சரவணன் திடீரென தலைமறைவானார். தலைமறைவாக இருந்த இவரை, தேவகோட்டை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட போலீஸ்காரர் சரவணனிடம் விசாரித்த போது அவர் அளித்த தகவலின் பேரில், பல்லடம் போலீஸ் நிலையத்தில் வேலை பார்த்து வரும் மற்றொரு காவலர் அருண்பாண்டி, (33) என்பவருக்கும் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்ததில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து போலீஸ்காரர் அருண் பாண்டியும் கைது செய்யப்பட்டார் .

    கைது செய்யப்பட்ட இரண்டு போலீசாரிடமும் விசாரணை நடத்திய போது ராமநாதபுரம் மாவட்டம், எஸ்.பி., பட்டணம் பகுதியை சேர்ந்த பிரவீன், ராஜேந்திரன் ஆகியோருக்கு, பல்லடத்தை சேர்ந்த போலீஸ்காரர்கள் சரவணன், அருண்குமார் ஆகியோர் கஞ்சா சப்ளை செய்து வந்துள்ளனர். இவர்களுக்கு திருப்பூரில் இருந்து பல்வேறு நபர்கள் கஞ்சா கொடுத்துள்ளனர். அதனை பதுக்கி வைத்து பல்வேறு மாவட்டங்களுக்கு சப்ளை செய்ததும் தெரிய வந்தது.

    இதனையடுத்து கைது செய்யப்பட்ட இரண்டு போலீஸ்காரர்களையும் சிறையில் அடைத்தனர். கஞ்சா வியாபாரிகளின் நடமாட்டத்தை கண்டறிந்து, மக்களை பாதுகாக்க வேண்டிய போலீசாரே கஞ்சா விற்று வந்தது பொதுமக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    • புஞ்சை அரசன் தாங்கல் பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் 2 உயர்ரக மோட்டார் சைக்கிள்களில் வந்தவர்களை பிடித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
    • செவிலிமேடு பகுதியை சேர்ந்த ஜவகர் மற்றும் 3 மாணவர்கள் என்பது தெரியவந்தது. 4 பேரும் ராணிப்பேட்டை பகுதியில் இருந்து கஞ்சா பொட்டலங்களை வாங்கி வந்து விற்பனை செய்தனர்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் சுற்று வட்டார பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்வதை தடுக்கும் வகையில் கண்காணிக்கும் பணியை மாவட்ட போலீசார் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் காஞ்சிபுரம் அடுத்த புஞ்சை அரசன் தாங்கல் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக வந்த ரகசிய தகவலின் அடிப்படையில் காஞ்சிபுரம் தாலுகா போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    புஞ்சை அரசன் தாங்கல் பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் 2 உயர்ரக மோட்டார் சைக்கிள்களில் வந்தவர்களை பிடித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அவர்கள் செவிலிமேடு பகுதியை சேர்ந்த ஜவகர் மற்றும் 3 மாணவர்கள் என்பது தெரியவந்தது. 4 பேரும் ராணிப்பேட்டை பகுதியில் இருந்து கஞ்சா பொட்டலங்களை வாங்கி வந்து விற்பனை செய்தனர்.

    இதைத்தொடர்ந்து அவர்களிடம் காஞ்சிபுரம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி 57 பொட்டலங்கள் கொண்ட ஒரு கிலோ 300 கிராம் கஞ்சாவையும், கஞ்சா விற்பனைக்கு பயன்படுத்திய விலை உயர்ந்த 18 லட்சம் ரூபாய் மதிப்புள்ள உயர்ரக 2 மோட்டார் சைக்கிள்களையும் பறிமுதல் செய்தனர்.

    கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பள்ளி, கல்லூரி மாணவர்கள் மீது வழக்கு பதிவு செய்து காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, 3 சிறுவர்களை சீர்திருத்தப் பள்ளிக்கும், ஜவகரை ஜெயிலுக்கும் அனுப்பி வைத்தனர்.

    • கஞ்சா விற்பனையை கண்டித்த ஒருவரை வாலிபர் கத்தியை காட்டி மிரட்டி தப்பி சென்று விட்டார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து பேரம்பாக்கம் அருகே உள்ள இருளஞ்சேரி பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த கமலக்கண்ணன் என்பவரை கைது செய்தனர்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் அடுத்த பேரம்பாக்கத்தில் உள்ள அரசு பள்ளி அருகே வாலிபர் ஒருவர் கஞ்சா பொட்டலங்களை வைத்து சிறுவர்களுக்கு விற்பனை செய்து கொண்டிருந்தார். இதனை கண்டித்த அப்பகுதியை சேர்ந்த ஒருவரை அந்த வாலிபர் கத்தியை காட்டி மிரட்டி தப்பி சென்று விட்டார்.

    இதுகுறித்து மப்பேடு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து பேரம்பாக்கம் அருகே உள்ள இருளஞ்சேரி பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த கமலக்கண்ணன் (30) என்பவரை கைது செய்தனர்.

    • கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பெரம்பூரை சேர்ந்த முகமது மசூத், கொளத்தூரை சேர்ந்த ராதாகிருஷ்ணன், நெற்குன்றத்தை சேர்ந்த பரத் ஆகிய 3 பேரை கைது போலீசார் செய்தனர்.
    • பெரம்பூர் ரெயில் நிலையத்தில் இருந்த அசாம் மாநிலத்தை சேர்ந்த சத்யரஞ்சன் என்பவரையும் பிடித்தனர்.

    போரூர்:

    போரூர் அடுத்த லட்சமி நகர் பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பதாக இன்ஸ்பெக்டர் சந்திரசேகருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் அப்பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டபோது கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பெரம்பூரை சேர்ந்த முகமது மசூத், கொளத்தூரை சேர்ந்த ராதாகிருஷ்ணன், நெற்குன்றத்தை சேர்ந்த பரத் ஆகிய 3பேரை கைது செய்தனர்.

    அவர்கள் கொடுத்த தகவலின் படி பெரம்பூர் ரெயில் நிலையத்தில் இருந்த அசாம் மாநிலத்தை சேர்ந்த சத்யரஞ்சன் என்பவரையும் பிடித்தனர். அவர்கள் திரிபுரா மாநிலத்தில் இருந்து ரெயில் மூலம் கஞ்சா கடத்தி வந்து விற்று வந்தது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து 10 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

    ×