என் மலர்
நீங்கள் தேடியது "Garbage"
- பக்கத்து வீட்டுக்காரர் பூபதி அவரது உறவினரை வைத்து அனிதாவின் கார் மீது லாரியை ஏற்றி உள்ளார்.
- பெண்கள் மீது லாரி ஏற்றி கொல்ல முயன்றதாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது.
சேலம் மாவட்டம் அம்மம்பாளையத்தில் வசிக்கும் அனிதா என்பவர் பக்கத்து வீட்டு அருகே குப்பை கொட்டியதால் அவருக்கும் பக்கத்து வீட்டுக்காரருக்கும் மோதல் ஏற்பட்டது.
குப்பை கொட்டியதில் ஆத்திரமடைந்த பக்கத்து வீட்டுக்காரர் பூபதி அவரது உறவினரை வைத்து அனிதாவின் கார் மீது லாரியை ஏற்றி உள்ளார். இதில் காரின் முன்பகுதி சேதமடைந்தது.
இந்த விவகாரம் தொடர்பாக இரு வீட்டாருக்கும் இடையில் ஏற்பட்ட பிரச்சனையில் பெண்கள் மீது லாரி ஏற்றி கொல்ல முயன்றதாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது.
இந்த தகராறு தொடர்பாக ஆத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலமுருகன் என்பவரை தேடி வருகின்றனர்.
- நொச்சிபாளையம் பிரிவிலிருந்து அல்லாளபுரம் சாலை எப்பொழுதும் போக்குவரத்து நிறைந்த சாலையாகும்.
- திருப்பூர் மாநகராட்சி 53-வது வார்டுக்கு உட்பட்ட இடம்.
வீரபாண்டி :
திருப்பூர் நொச்சிபாளையம் பிரிவிலிருந்து அல்லாளபுரம் சாலை வழியாக பொங்கலூர் செல்லும் சாலை எப்பொழுதும் போக்குவரத்து நிறைந்த சாலையாகும். இதில் தெற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலக வாகன தணிக்கை செய்யும் இடத்திற்கு போகும் இடத்தில் குப்பை கொட்டியுள்ளார்கள்.இந்த இடம் திருப்பூர் மாநகராட்சி 53-வது வார்டுக்கு உட்பட்டது. குப்பையை எடுத்து 1மாதத்திற்கு மேல் ஆகிவிட்டது. இதனால் துர்நாற்றம் வீசுவதால் இரண்டு சக்கர வாகன ஓட்டிகள் அந்த இடத்தை கடக்கும் பொழுது மூக்கை பொத்திக்கொண்டு செல்லும் நிலை உள்ளது. இந்த இடத்தில் பலவகையான கழிவுகளை கொட்டுவதால் அதனை சாப்பிடுவதற்காக தெருநாய்கள் வருகின்றன.
இந்த தெரு நாய்கள் சாலையின் குறுக்கே செல்வதால் வாகனங்களில் செல்பவர்கள் கீழே விழுந்து விபத்துக்கள் தினந்தோறும் ஏற்படுகிறது . இதுவரைக்கும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்தக் குப்பையை உடனடியாக அகற்றியும் குப்பைத் தொட்டியை வேறு இடத்தில் வைக்கவும் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான நிலம் சுமார் 15 ஏக்கர் உள்ளது.
- பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதோடு நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
திருப்பூர் :
திருப்பூர் நல்லூர் பகுதி 3-ம் மண்டலத்தில் அமைந்துள்ள 46வது வார்டில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான நிலம் சுமார் 15 ஏக்கர் உள்ளது. அந்த நிலத்தை சுற்றிலும் சுமார் 5000 குடும்பத்தினர் வசித்து வருகின்றார்கள். அந்த நிலத்தில் அனைத்து வகையான குப்பைகளையும் கொட்டி வருகின்றனர். இதனால் பொதுமக்களுக்கு கொசு தொல்லை மற்றும் பல நோய்கள் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.
மாநகராட்சி மூலமாக எடுக்கப்படும் கழிவு நீர்கள் இங்கே வந்து கொட்டப்படுகின்றன. இதனால் கொசு உற்பத்தியாகி அந்தப் பகுதியில் வசிக்கும் மக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். குழந்தைகளுக்கு காய்ச்சல் ஏற்படுகிறது. எத்தனையோ முறை பொதுமக்கள் சார்பாக தடுத்து பார்த்தும் குப்பைகள் மற்றும் கம்பெனி கழிவுகள், மீன் கழிவுகள், கோழி கழிவுகள் என அனைத்து வகையான கழிவுகளும் கொட்டும் இடமாக அந்த இடம் மாறி வருகிறது. அதுபோக அந்த இடம் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது. எனவே திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து பொதுமக்களின் அச்ச நிலையையும் நோய் தொற்று பரவும் அபாயத்திலிருந்தும் காப்பாற்ற வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்பூர் மாநகரில் பல்வேறு இடங்களில் குப்பைகள் அள்ளப்படாமல் உள்ளது . திருப்பூர் தாராபுரம் ரோடு உஷா தியேட்டர் பஸ் நிறுத்தம், கரட்டாங்காடு பஸ் நிறுத்தம் அருகில் குப்பைகள் தேங்கியுள்ளது. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதோடு நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
மேலும் மாநகரின் பல இடங்களில் கழிவு நீர் கால்வாயில் குப்பைகள் கொட்டப்படுவதால் கழிவு நீரில் அடைப்பு ஏற்பட்டு சாலையில் கழிவு நீர் ஓடுகிறது. எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் அதனை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்பூர் காமாட்சி புரம் கல்லூரி சாலையில், மின் இணைப்புக்கு இடையூறாக இருந்த மரத்தை வெட்டி சாலை ஓரத்தில் போட்டுள்ளதால் கால்வாய் அடைத்து கழிவுநீர் செல்வதற்கு இடையூறாக உள்ளது. எனவே மரங்களை அகற்ற வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- தினந்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இந்த பகுதிக்கு வந்து செல்கின்றனர்.
- இருசக்கர வாகனங்கள் வழியாக செல்ல முடியாமலும் தவித்து வருகின்றனர்.
கடலூர்:
கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பஸ் நிலையம் அருகாமையில் பூ மார்க்கெட் உள்ளது. இந்த மார்க்கெட் பகுதிகளில் உணவகங்கள், பூ கடைகள், நடைபாதை பழக் கடைகள், வணிக வளாகங்கள் உள்ளன. இதன்காரணமாக தினந்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இந்த பகுதிக்கு வந்து செல்கின்றனர். மேலும் பூ மார்க்கெட்டில் தினந்தோறும் கிலோ கணக்கில் பூக்கள் வீணாகி அதே பகுதியில் குப்பைகள் கொட்டப்பட்டு வருகின்றது. மேலும் அந்த பகுதிகளில் உள்ள வணிக நிறுவனங்கள், உணவகங்கள் உள்ளிட்ட பல்வேறு கடைகளில் இருந்தும் குப்பைகள் கொட்டப்பட்டு வருகின்றது. இதன் காரணமாக பூ மார்க்கெட் பகுதிகளில் தற்போது குப்பைகள் மலைபோல் குவிந்து கிடக்கின்றது. மேலும் இருசக்கர வாகனங்களில் ஏராளமான பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களையும் இந்த பகுதிக்கு வந்து வாங்கி செல்கின்றனர்.
கடந்த சில தினங்களாக குப்பைகளை நகராட்சி ஊழியர்கள் சரியான முறையில் சுத்தம் செய்யாததால் தற்போது குப்பைகள் குவிந்து உள்ளன. இதன் காரணமாக அந்த பகுதி முழுவதும் தற்போது துர்நாற்றம் வீசுவதோடு நோய் பரவும் அபாயமும் நிலவி வருகிறது. இது மட்டுமின்றி குப்பைகள் சரியான முறையில் அகற்றப்படாத காரணத்தினால் பொதுமக்கள் நடந்து செல்வதற்கு வழி இல்லாமலும் இருசக்கர வாகனங்கள் வழியாக செல்ல முடியாமலும் தவித்து வருகின்றனர். ஆகையால் கடலூர் நகராட்சி அதிகாரிகள் அதிகமாக மக்கள் செல்லக்கூடிய பூ மார்க்கெட் பகுதிகளில் குவிந்து கிடக்கும் குப்பைகளை உடனடியாக அகற்றி நோய் பரவும் அபாயத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
- சேகரிக்கப்படும் குப்பையில் இருந்து அவினாசி கைகாட்டிபுதூரில் உள்ள வளம் மீட்பு பூங்காவில் மக்காத குப்பையிலிருந்து இயற்கை உரம் தயாரிக்கப்படுகிறது.
- 15 நாட்கள் கால கெடு கொடுத்து அனைவரும் மக்கும் குப்பை மக்காத குப்பை என தரம் பிரித்து தருவதற்கு 15 நாட்கள் அவகாசம் தர உள்ளது.
அவினாசி, நவ.23-
திருப்பூர் மாவட்டம் அவினாசியில் உள்ள 18 வார்டுகளில் குடியிருப்புகள், தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதில் தினசரி டன் கணக்கில் குப்பை சேருகிறது. பேரூராட்சி நிர்வாகத்தின் மூலம் 52 தள்ளுவண்டிகளில் துப்புரவு பணியாளர்கள் தினசரி குப்பையை சேகரித்து வருகின்றனர்.
இவ்வாறு சேகரிக்கப்படும் குப்பையில் இருந்து அவினாசி கைகாட்டிபுதூரில் உள்ள வளம் மீட்பு பூங்காவில் மக்காத குப்பையிலிருந்து இயற்கை உரம் தயாரிக்கப்படுகிறது. எனவே வீடுகள், தொழிற்கூடங்கள், வணிக நிறுவனங்களில் தினசரி குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து துப்புரவு பணியாளர்களிடம் தர வேண்டும் என பேரூராட்சி நிர்வாகத்தினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் பெரும்பாலானவர்கள் அதை கடைப்பிடிப்பதில்லை.
இதுகுறித்து பேரூராட்சி செயல் அலுவலர் செந்தில்குமார் கூறுகையில், பேரூராட்சி நிர்வாகத்தினர் ஒருவாரத்திற்கு வீடுவீடாக சென்று குப்பையை தரம்பிரிக்காதவர்கள் யார் என்று ஆய்வுப் பணி மேற்கொள்ள உள்ளனர். பெரிய வார்டுகள், வியாபார நிறுவனங்களில் அதிக அளவில் குப்பை சேருகிறது. பொதுமக்கள் தாங்களாகவே தரம் பிரித்து வழங்கினால் தூய்மை பணியாளர்களுக்கு வேலை பழு குறைவதுடன் அனைத்து பகுதிகளிலும் விரைவில் குப்பை சேகரிக்க ஏதுவாக இருக்கும்.
குப்பையில்லா பேரூராட்சியாக மாற்றும் நோக்குடன் குப்பைகள் தேங்காமல் தினசரி சேகரிப்பதற்காக 15-வது நிதிக்குழு மானியம் மூலம் பேட்டரி மூலம் இயங்கும் வகையில் ஒலிபெருக்கி வசதியுடன்4 ஆட்டோக்கள் வாங்கப்பட்டுள்ளது. இதில் 2-பகுதிகளாக பிரித்து குப்பைகள் சேகரிக்கப்படும். அதற்கு முன்பாக 15 நாட்கள் கால கெடு கொடுத்து அனைவரும் மக்கும் குப்பை மக்காத குப்பை என தரம் பிரித்து தருவதற்கு 15 நாட்கள் அவகாசம் தர உள்ளது. மேலும் தரம்பிரிக்காமல் குப்பையை வைத்திருப்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட உள்ளது. எனவே பொதுமக்கள் பேரூராட்சி நிர்வாகத்திற்கு ஒத்துழைப்புத்தர வேண்டுகிறோம் என்றார்.
- குப்பைகள் மட்டுமின்றி இறந்து போன விலங்குகளையும் கொண்டு வந்து சிலர் வீசுகின்றனர்.
- சாய் குரு கார்டன் பகுதியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
பல்லடம் :
பல்லடம் அருகே உள்ள ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சி சாய் குரு கார்டன் பகுதியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில், குடியிருப்பு பகுதிக்கு அருகே உள்ள ஓடையில் குப்பைகள் கொட்டி வருவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. குப்பைகள் மட்டுமின்றி இறந்து போன விலங்குகளையும் கொண்டு வந்து சிலர் வீசுகின்றனர். இதனால் கடும் துர்நாற்றம் ஏற்பட்டு மக்கள் வசிக்கவே இயலாத சூழ்நிலை நிலவுவதாக பலமுறை புகார் அளித்தும் குப்பைகள் அகற்ற இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி பொதுமக்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.
- குப்பைகள் ஆற்றின் பகுதியில் கொட்டப்படுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.
- ஆற்றில் குளிக்கும் மக்களுக்கு அரிப்பு, சரும பாதிப்பு ஏற்படுகிறது.
சீர்காழி:
கொள்ளிடம் ஊராட்சி ஒன்றியத்திற்கு சமூக ஆர்வலர் ராம்பிரபு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிப்பதாவது :
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே பிரதான கொள்ளிடம் ஆறு உள்ளது. இந்த கொள்ளிடம் ஆற்றின் நீர் ஆதாரத்தின் மூலம் கொள்ளிடம் கரையோரம் உள்ள மகேந்திரப்பள்ளி, காட்டூர், அளக்குடி, புளியந்துறை, புதுப்பட்டினம், தண்டேசநல்லூர், ஆச்சாள்புரம், கொள்ளிடம், மாங்கனாம்பட்டு உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலத்தடி நீர் பாதுகாக்கப்படுகிறது.
இந்நிலையில் கொள்ளிடம் ரெயில்வே பாலத்தின் அருகில் சுமார் அரை கிலோமீட்டர் தூரத்திற்கு கோபாலசமுத்திரம், ஆணைக்காரன் சத்திரம் ஊராட்சிகளுக்கு உட்பட்ட சுமார் 20 கிராமங்களில் நாள்தோறும் சேகரிக்கப்படும் குப்பைகள் கொட்டுவதற்கு மாற்றுஇடம் இல்லாததால் ஆற்றங்கரையோரம் கொட்டப்படுவது வழக்கமாக இருந்துவருகிறது.
இவ்வாறு குப்பைகள் இறைச்சி கழிவுகள், இறந்த கால்நடைகள் கொள்ளிடம் ஆற்றின் பகுதியில் கொட்டப்படுவதால் அப்பகுதி கடும் சுகாதார சீர்கேட்டுடன் காணப்படுகிறது.
அதோடு குப்பைகள் ஆற்று தண்ணீரில் கலந்து தண்ணீருடன் அடித்து சென்று கடலிலும் கலந்து வருகிறது.
இந்த குப்பைகள் ஆற்றில் அடித்து செல்லப்படும்போது நெகிழிகள் புதைந்து கிராமங்களில் நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதோடு ஆற்றில் குளிக்கும் மக்களுக்கு அரிப்பு போன்ற சரும பாதிப்பு ஏற்படுகிறது. மேலும் மாசு அடைந்த ஆற்று நீரை பருகும் கால்நடைகளும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றன.
எனவே கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் குப்பைகள் கொட்டப்படுவதை தடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- தற்போது இந்த இடம் சாலை உயர–மாகவும், பயணிகள் நிழலகம் பள்ளமான இடத்திலும் உள்ளது.
- இரவு நேரங்களில் மதுபிரியர்கள் மது அருந்தும் கூடாரமாகவும் விளங்குகிறது.
பேராவூரணி:
பேராவூரணியில் இருந்து சேதுபாவாசத்திரம் செல்லும் மெயின் சாலையில் (முசிறி-சேதுபாவாசத்திரம்) மாசாகாடு என்ற இடத்தில் பஸ் நிறுத்தம் உள்ளது.
கடந்த 2013-14 ம் ஆண்டு பழுதுபார்க்கப்பட்டு மக்கள் பயன்பாட்டில் இருந்து வந்துள்ளது. தற்போது இந்த இடம் சாலை உயரமாகவும், பயணிகள் நிழலகம் பள்ளமான இடத்திலும் உள்ளது. இதனால் மழை பெய்தால் சாலையிலிருந்து மழை நீர் பஸ் நிறுத்ததிற்குள் புகுந்து விடுகிறது.
மேலும் இரவு நேரங்களில் மதுபிரியர்கள் மதுஅருந்தும் கூடாரமாகவும் விளங்குகிறது. மதுவை அருந்திவிட்டு பாட்டில்களையும், குப்பைகளையும் இந்த பஸ் நிறுத்தத்தில் வைத்து விட்டு சென்று விடுகின்றனர். இந்த இடம் சுகாதாரமற்றதாகவும், குப்பைகளுடனும் காணப்படுவதால் பஸ்சில் செல்ல வரும் பெண்கள், பயணிகள் பஸ் நிறுத்தத்திற்குள் செல்ல அச்சப்படுகின்றனர்.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த இடத்தை பார்வையிட்டு சுத்தம் செய்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு–வர வேண்டும் என சமூக ஆர்வலர்களும், கிராம பொதுமக்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.
- நகரில் பிரதான கடைவீதி, பள்ளிகள், கோயில்கள், பஸ் நிறுத்தம் உட்பட பல்வேறு இடங்களில் குப்பைகள் தரம் பிரிக்க உள்ளது.
- தற்போது மழை பெய்து வருவதால் தேங்கியுள்ள குப்பைகள் நனைந்து ஈக்கள், கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் சூழல் ஏற்பட்டுள்ளது.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகராட்சியில் 24 வார்டுகள் உள்ளன.இங்குள்ள வீடுகள், கடைகளில் உள்ள குப்பைகள் நாள் தோறும் நகராட்சி தூய்மை–பணியாளர்கள் மூலம் சேகரிக்கப்பட்டு நகராட்சிக்கு சொந்தமான ஈசானியத்தெரு குப்பை உரகிடங்கில் கொட்டப்பட்டு வருவது வழக்கம்.
ஆனால் கடந்த சில மாதங்களாக பொது மக்களிடம் சேகரிக்கப்படும் குப்பைகள் மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரித்து தூய்மைபணியாளர்களிடம் வழங்க வேண்டும் எனவும், அவ்வாறு வழங்காத குப்பைகள் வாங்க வேண்டாம் என நகராட்சி நிர்வாகம் தூய்மை பணியாளர்களுக்கு அறிவுறுத்தியதால் வீடுகளில் தரம் பிரிக்காத குப்பைகள் வாங்கப்படுவதில்லை.
அதேபோல் நகரில் சாலைகள் கொட்டப்படும் குப்பைகளையும் தரம் பிரித்து மட்டுமே உரகிடங்கிற்கு கொண்டுவந்து சேர்க்க வேண்டும் என உத்தர–விடப்பட்டுள்ளதால் குறைந்த அளவே உள்ள தூய்மை பணியாளர்கள் முழுமையாக குப்பைகள் தரம் பிரித்து கொண்டு செல்லமுடியவில்லையாம்.
இதனால் நகரில் பிரதான கடைவீதி, பள்ளிகள், கோயில்கள், பஸ் நிறுத்தம் உட்பட பல்வேறு இடங்களில் குப்பைகள் தரம் பிரிக்க முடியாமல் கடந்த 6 நாட்களாக கொட்டப்பட்ட குப்பைகள் மலைபோல் தேங்கி அள்ளப்படாமல் கிடக்கிறது.
இதனால் நகரில் கடும் சுகாதார சீர்கேடும், துர்நாற்றமும் ஏற்பட்டுள்–ளதால் மக்கள் பெரும் அவதியடைந்து வருகின்றனர். சாலையோரம் கொட்டி தேங்கி கிடக்கும் குப்பைகளை கால்நடைகள கிளறி மேய்வதால் குப்பைகள் சாலை முழுவதும் சிதறி கிடக்கிறது.
தற்போது மழை பெய்து வருவதால் தேங்கியுள்ள குப்பைகள் நனைந்து ஈக்கள், கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் சூழல் ஏற்பட்டுள்ளது.கொசுவினால் ஏற்படும் நோயை தடுக்கவேண்டிய நகராட்சி நிர்வாகமே, குப்பைகளில் உள்ள பிளாஸ்டி டீ கப்புகள், உடைந்த பாட்டில்கள், தேங்காய்மட்டைகளில் மழைநீர் தேங்கி கிடப்பதை அள்ளி அப்புறப்படுதாமல் அலட்சியம் காட்டுவது நகர மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
குப்பைகள் தரம் பிரித்து அள்ளுவது ஒரு புறம் இருந்தாலும் மக்கள் பாதிக்காத வகையில் உடனடியாக நகராட்சி நிர்வாகம் சாலையில் தேங்கியுள்ள குப்பைகள் உடனடியாக அகற்றிட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- மழைக்காலங்களில் மழைநீர் வெளியேற முடியாமல் குடியிருப்பு பகுதியில் மழைநீர் புகுந்தது.
- வடிகாலில் புல்பூண்டுகள், குப்பைகளை அகற்றும் பணி.
மெலட்டூர்:
பாபநாசம் தாலுக்கா, வடக்குமாங்குடி ஊராட்சி யின் முக்கிய வடிகால் வாய்க்காலில் பல இடங்களில் வாய்க்காலின் பெரும்ப குதிகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதால் மழைக்காலங்களில் மழைநீர் வெளியேற முடியாமல் குடியிருப்பு பகுதியில் மழைநீர் புகுந்து தெருக்களை சுற்றி தேங்கி நிற்கும் நிலை இருந்து வருகிறது.
தற்போது பலமாக காற்று வீசி வருவதாலும், கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வடிகால் சுத்தம் செய்யும் பணி ஊராட்சி மன்ற தலைவர் கலைச்செல்வி கனகராஜ் மேற்பார்வையில் நடைபெற்றது.
வடிகால் வாய்க்காலில் தேங்கியிருந்த தண்ணீரை வெளியேற்றவும், வடிகாலில் தண்ணீர் தேங்காமல் இருக்கவும் வடிகாலில் புல்பூண்டுகள் குப்பைகள் அகற்றும் பணி நடைபெற்றது. வடிகால் வாய்க்காலை சுத்தம் நடவடிக்கை எடுத்த ஊராட்சி நிர்வாகத்திற்கு கிராம மக்கள் நன்றி பாராட்டினர்.
- சில வாரங்களாக குப்பைகள் அள்ளப்பாடமல் சாலைகளில் ஆங்காங்கே தேங்கி கிடக்கிறது.
- பல்வேறு குறைகளை கூறி நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்தனர்.
சீர்காழி:
சீர்காழி நகர்மன்ற சாதாரணக்கூட்டம் நகராட்சி வளாகம் அவைகூடத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு நகர்மன்ற தலைவர் துர்காபரமேஸ்வரிராஜசேகரன் தலைமை வகித்தார்.
நகராட்சி ஆணையர் வாசுதேவன், மேலாளர் காதர்கான், நகராட்சி பொறியாளர் சித்ரா, சுகாதார அலுவலர் செந்தில்ராம்குமார், வருவாய் ஆய்வாளர் சார்லஸ், ஓவர்சியர் விஜேந்திரன் முன்னிலை வகித்தனர். இளநிலை உதவியாளர் ராஜகணேஷ் தீர்மானங்களை வாசித்தார்.
கூட்டத்தில் முபாரக்அலி பேசுகையில், சீர்காழி நகரில் கடந்த சில வாரங்களாக குப்பைகள் அள்ளப்பாடமல் சாலைகளில் ஆங்காங்கே தேங்கி கிடக்கிறது.
இதனால் வார்டு பகுதிகளில் கடும் சுகாதாரசீர்கேடு நிலவுவதால் சீர்மிகு நகராட்சி சீர்கேடு அடைந்து வருகிறது. இதனால் அனைத்து நகர்மன்ற உறுப்பினர்களுக்கும் மக்களிடம் அவப்பெயர் ஏற்பட்டுவருகிறது.
குப்பை களை அள்ள நடவடிக்கை எடுக்காவிட்டால் பொது மக்கள் சாலைமறியல் போரா ட்டம் நடத்தும் முடிவுக்கு வந்துள்ளனர். மக்களுக்கு ஆதரவு தெரிவித்து தானும் பங்கேற்பேன் என்றார்.
நகர்மன்ற உறுப்பினர் வள்ளிபேசுகையில், நாய்கள் தொல்லைஅதிக ரித்துவருவதை கட்டுப்ப டுத்தவேண்டும்.கொசு மருந்து தெளிக்கவேண்டும்.
இறப்பு சான்றிதழ் விண்ணப்பம் செய்பவர்களுக்கு உடனடியாக வழங்காமல் அலைகழிப்பு செய்கின்றனர் என்றார். ஜெயந்திபாபுபேசுகையில், நகர்மன்ற உறுப்பினர்கள் முழுமதி இமயவரம்பன், ராஜேஷ், பாலமுருகன், சாமிநாதன் கிருஷ்ணமூர்த்தி வேல்முருகன், பாஸ்கரன், நாகரத்தினம், ரேணுகாதேவி, கலைசெல்வி, ரஹ்மத்நிஷா உள்ளிட்ட பலரும் நகரில் குப்பைகள் 15 நாட்களுக்கு மேலாக எடுக்கப்படாமல் மூட்டை மூட்டையாக கிடைக்கின்றன.
இதனால் பொதுமக்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். சுகா தாரக் கேடு ஏற்பட்டு வருகிறது.
குப்பைகள் எடுக்கப்படாததால் கவுன்சிலர்கள் சாலையில் நடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
எங்களால் பொதுமக்களிடம் பதில் சொல்ல முடியவில்லை உடனடியாக குப்பைகளை உடனுக்குடன் அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஒட்டுமொத்தமாக கோரிக்கை விடுத்தனர்.
பாலமுருகன் பேசுகையில், ஈமகிரிகை மண்டபம் பகுதியில் தண்ணீர் வசதி இல்லாததால் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.நகர மன்ற தலைவர் துர்கா பரமேஸ்வரி பேசுகையில், குப்பைகளை கொட்டுவதற்கு இடம் தேர்வு செய்யப்பட்டு வருகிறது.
கால்நடைகள், பன்றிகளை பிடிக்க உறுப்பினர்கள் கூட்டத்தில் கோரிக்கை வைக்கின்றனர்.
அவ்வாறு பிடித்தால் சில உறுப்பினர்களே போராடும் மக்களுக்கு துணை போகின்றனர். இவ்வாறு செயல்படும் உறுப்பினர்கள் மீது சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
- பல்வேறு மாணவர்கள் கலந்து கொண்டு பெரிய கோவில் வளாகம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கிடந்த குப்பைகளை சேகரித்தனர்.
தஞ்சாவூர்:
தஞ்சை பெரிய கோவிலில் பிளாஸ்டிக் ஒழிப்பு மற்றும் தூய்மை பணி இன்று காலை 34 தேசிய மாணவர் படை தஞ்சாவூர் சார்பில்
நடைபெற்றது.
இதில் தேசிய மாணவர் படை அதிகாரிகள் லெப்டி னைட்கள் சுரேஷ்பாபு, வசந்த், பேரரசன் மற்றும் தஞ்சை மன்னர் சரபோஜி கல்லூரி, அன்னை வேளாங்கண்ணி கல்லூரி, கரந்தை தமிழ்வேள் உமா மகேஸ்வரனார், பூண்டி புஷ்பம் கல்லூரிகளை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட என்.சி.சி. மாணவர்கள் கலந்து கொண்டு பெரிய கோவில் வளாகம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கிடந்த குப்பைகளை சேகரித்தனர்.
பிளாஸ்டிக் கழிவுகளை அப்புறப்படுத்தி மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து சேகரித்தனர்.
புல் பூண்டுகளை அகற்றி சுத்தப்படுத்தினர். தொடர்ந்து பெரிய கோவிலுக்கு வந்தி ருந்த சுற்றுலாப் பயணிகள், பொதுமக்களுக்கு பிளா ஸ்டிக் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.