என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Garland"
- 41 நாட்கள் மண்டல பூஜை நடைபெறும். அதன் பிறகு மகர விளக்கு பூஜை காலம் தொடங்கும்.
- ராஜா அண்ணாமலை புரத்தில் 18 படிகளுடன் கோவில் அமைந்துள்ளது. இங்கு காலை 6 மணிக்கு நடை திறக்கிறது. அது முதல் மாலை அணியலாம்.
சென்னை:
சபரிமலை அய்யப்பன் கோவிலில் இன்று நடை திறக்கப்பட்டது. நாளை (கார்த்திகை 1) மண்டல பூஜை காலம் தொடங்குகிறது. 41 நாட்கள் மண்டல பூஜை நடைபெறும். அதன் பிறகு மகர விளக்கு பூஜை காலம் தொடங்கும்.
இந்த காலத்தில் மாலை அணிந்து விரதம் இருந்து லட்சக்கணக்கான அய்யப்ப பக்தர்கள் சபரி மலைக்கு செல்வார்கள்.
மண்டல பூஜை காலத்தில் சபரிமலைக்கு செல்பவர்கள் பம்பை வரை வாகனங்களில் செல்வார்கள். அங்கிருந்து சின்னப் பாதை எனப்படும் நீலிமலை வழியாக கால்நடையாக அய்யப்பன் சன்னிதானம் செல்வார்கள்.
மகரவிளக்கு காலத்தில் செல்லும் பக்தர்களில் பலர் எரிமேலி வரை வாகனங்களில் செல்வார்கள். அங்கு பேட்டை துள்ளிவிட்டு அடர்ந்த காட்டுப் பகுதியான பெருவழி பாதையில் நடந்து செல்வார்கள். பேரூர்தோடு, காளைகட்டி, அழுதாமலை, கல்லிடும் குன்றம், கரிமலை, பெரியானை வட்டம் வழியாக பம்பை சென்றடைவார்கள் அங்கிருந்து நீலிமலை வழியாக சன்னிதானம் செல்வார்கள்.
நாளை விரதத்தை தொடங்கும் அய்யப்ப பக்தர்கள் அதிகாலையில் துளசி மாலை அணிவார்கள். அன்றாட வாழ்வியலில் இருந்து மாறுபட்டு துறவு வாழ்க்கை போல் தங்கள் வாழ்க்கை முறையை மாற்றி கொள்வார்கள். கருப்பு, நீலம், காவி ஆடைகள் அணிந்து, காலில் செருப்பு அணியாமல் இருப்பார்கள். தினமும் காலையிலும், மாலையிலும் குளிர்ந்த நீரில் குளித்து சரணம் சொல்லி பூஜை செய்வார்கள்.
விரத காலம் முழுவதும் உணவு கட்டுப்பாடு, மனக்கட்டுப்பாட்டுடன் இருப்பார்கள். புனிதமான மாலை அணியும் நிகழ்ச்சி நாளை நடைபெறுகிறது. இதற்காக சென்னையில் உள்ள முக்கியமான அய்யப்பன் கோவில்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கோடம்பாக்கம் மகாலிங்க புரத்தில் உள்ள அய்யப்பன் கோவிலில் ஆண்டுதோறும் ஏராளமானவர்கள் மாலை அணிவார்கள். கடந்த ஆண்டு சுமார் 15 ஆயிரம் பேர் மாலை அணிந்ததாகவும் இந்த ஆண்டு அதைவிட அதிகமாக இருக்கும் என்று கருதுவதால் கோவிலில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருப்பதாக கூறினார்கள்.
அதிகாலை 4.30 மணிக்கு நடை திறக்கிறது. அதுமுதல் மாலை அணியலாம். கோவிலிலேயே மாலை மற்றும் நீலவேஷ்டிகள் விற்பனைக்கு ஏற்பாடு செய்துள்ளனர். டிக்கெட் கட்டணமாக ரூ.10 வசூலிக்கிறார்கள்.
ராஜா அண்ணாமலை புரத்தில் 18 படிகளுடன் கோவில் அமைந்துள்ளது. இங்கு காலை 6 மணிக்கு நடை திறக்கிறது. அது முதல் மாலை அணியலாம். டிக்கெட் கட்டணம் ரூ.10 செலுத்தி மாலை அணிந்து கொள்ளலாம். மாலை, வேட்டிகள் விற்பனைக்காக தனியாக கடைகள் உள்ளன.
மடிப்பாக்கம் அய்யப்பன் கோவிலில் 18 படிகள் அமைந்துள்ளது. மாலை அணிந்து இருமுடி கட்டி செல்பவர்கள் மட்டும் படிகள் வழியாக ஏறி செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.
இன்று சுத்தி பூஜை நடந்தது. நாளை காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டதும் பக்தர்கள் மாலை அணியலாம். இங்கும், மாலை, வேஷ்டி, விற்பனைக்கு உள்ளது. அர்ச்சனை கட்டணமாக ரூ.10 செலுத்த வேண்டும். காலை 9 மணிக்கு கொடியேற்றம் நடக்கிறது. அதைத் தொடர்ந்து பறை எடுப்பு (நெல் அளப்பது) நடைபெறுகிறது. ஊர்வலமாக அய்யப்பா நகர் தெருவில் அழைக்கப்பட்ட வீடுகளுக்கு சென்று நெல் அளப்பார்கள்.
மாலையில் படி பூஜை நடக்கிறது. தொடர்ந்து 18 நாட்கள் படி பூஜை நடக்கிறது.
மேடவாக்கம் அருகில் உள்ள வெள்ளக்கல்லில் 18 படியுடன் கூடிய அய்யப்பன் கோவில் அமைந்துள்ளது. இங்கு அதிகாலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டதும் பக்தர்கள் மாலை அணியலாம். தினமும் சபரிமலை அய்யப்பன் கோவிலில் நடைபெறுவது போல் பூஜைகள் நடைபெறும்.
திருவொற்றியூர் ஹைரோடு டோல்கேட் அருகே வடசென்னை அய்யப்பன் கோவில் அமைந்துள்ளது. இங்கு நாளை காலை 4 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. நிர்மால்ய தரிசனம், அபிஷேகம் முடிந்ததும் அய்யப்பனுக்கு சந்தனக் காப்பு அலங்காரம் நடைபெறும். மணலி, காசிமேடு, திருவொற்றியூர் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ளவர்கள் ஏராளமானோர் மாலை அணிந்து கொள்வார்கள்.
அண்ணாநகர் அய்யப்பன் கோவில் நாளை காலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. உடனே பக்தர்கள் மாலை அணிய தொடங்குவார்கள் என்றனர்.
இந்த அய்யப்பன் கோவில்கள் அனைத்திலும் மாலை அணிவதோடு, மாலை அணிந்த பக்தர்கள் இருமுடி கட்டவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
- அண்ணா சிலைக்கு அ.தி.மு.க.வின் புதிய நிர்வாகிகள் மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது.
- வருகிற சட்டசபை தேர்தலில் தஞ்சை, ஒரத்தநாடு ஆகிய 2 தொகுதிகளையும் அ.தி.மு.க. கைப்பற்றும்.
தஞ்சாவூர்:
தஞ்சை மத்திய மாவட்ட அ.தி.மு.க.வின் புதிய நிர்வாகிகள் தஞ்சை பழைய பஸ் நிலையம் அருகே உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது.
இதற்கு முன்னாள் அமைச்சரும், அமைப்பு செயலாளருமான காமராஜ் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். மத்திய மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் மா.சேகர் முன்னிலை வகித்தார். மாநகர செயலாளர் சரவணன் வரவேற்றார்.
பின்னர் புதிய நிர்வாகிகள் அனைவரும் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பின்னர் அங்கிருந்து அனைவரும் ஊர்வலமாக புறப்பட்டு தஞ்சை ரெயிலடிக்கு வந்தனர். தொடர்ந்து ரெயிலடியில் உள்ள எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைக்கு புதிய நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து புதிய நிர்வாகிகள் பேசினர்.
இதையடுத்து முன்னாள் அமைச்சர் காமராஜர் பேசியதாவது:-
தஞ்சை, ஒரத்தநாடு ஆகிய சட்டசபை தொகுதிகளை உள்ளடக்கியது தான் மத்திய மாவட்டமாகும். புதிய நிர்வாகிகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். உங்களது செயல்பாடுகளை பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி எதிர்பார்ப்பார்.
வருகிற சட்டசபை தேர்தலில் மத்திய மாவட்டத்தில் உள்ள தஞ்சை, ஒரத்தநாடு ஆகிய 2 தொகுதிகளையும் அ.தி.மு.க. கைப்பற்றும். நாடாளுமன்ற தேர்தலில் அதிக வாக்குகளை பெற்று தருவோம். தி.மு.க.வை எதிர்த்து தொடங்கப்பட்டது அ.தி.மு.க.
இது சாதாரண மக்களுக்கான இயக்கம். 51 ஆண்டுகளை கடந்தும் நிமிர்ந்து நிற்கிறது.
மக்களால் ஏற்று கொண்ட இயக்கம். தமிழகத்தில் மக்கள் விரோத ஆட்சி நடக்கிறது. என்றைக்கு அ.தி.மு.க. ஆட்சிக்கு வரும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர். வரும் சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெறும். எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராக அமருவார். இன்றைக்கு தமிழகத்தை ஆளும் தி.மு.க. அரசு காவிரி நீரை பெற்று தரவிலை. காவிரியில் நமக்கான உரிமையை பெற்று தராத அரசாக உள்ளது. இதை கண்டித்து வருகிற 6-ந் தேதி தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர் ஆகிய மாவட்டங்களில் அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். தஞ்சையில் நடக்கும் ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்து கொள்வார்.
இந்த ஆர்ப்பாட்டம் வெற்றி அடைய முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.
- திருக்கோவிலூர் தீயணைப்பு நிலையத்தின் சார்பில் தீ தொண்டு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது
- ப்பு அலுவலர் ரேணு தலைமையில் தீயணைப்பு படை வீரர்கள் மலர்வளையம் வைத்து மரியாதை செய்தனர்.
கள்ளக்குறிச்சி:
திருக்கோவிலூர் தீயணைப்பு நிலையத்தின் சார்பில் தீ தொண்டு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தீயணைப்பின் போது மரணம் அடைந்த தீயணைப்பு படை வீரர்களுக்கு மரியாதை செய்யும் நிகழ்ச்சி நிலையத்தின் சிறப்பு அலுவலர் ரேணு தலைமையில் தீயணைப்பு படை வீரர்கள் மலர்வளையம் வைத்து மரியாதை செய்தனர்.
- சீர்காழியில் அம்பேத்கர் திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினர்.
- அ.தி.மு.க நகர்மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி புதிய பேருந்து நிலையம் அருகில் அம்பேத்கரின் 133-வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அ.தி.மு.க. நகர செயலாளர் எல்.வி.ஆர் வினோத் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர்கள் சந்திரசேகரன், ஆதமங்கலம் ரவிச்சந்திரன், கே.எம்.நற்குணன், சிவக்குமார், பேரூர் கழகச் செயலாளர் போகர் ரவி, ஒன்றிய துணை செயலாளர் திருமாறன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஜெ.பேரவை செயலாளர் ஏ.வி. மணி வரவேற்றார்.
மயிலாடுதுறை மாவட்ட அவை தலைவரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான பி.வி.பாரதி கலந்து கொண்டு அம்பேத்கரின் திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் நகர செயலாளர் பக்கிரி சாமி, முன்னாள் தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் நாடி செல்வ முத்துக்குமரன், நகர பொருளாளர் மதிவாணன், வார்டு செயலாளர் சுரேஷ் மற்றும் அ.தி.மு.க நகர்மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- காரைக்குடியில் எம்.ஜி.ஆர். சிலைக்கு ஓ.பி.எஸ். அணியினர் மாலை அணிவித்தனர்.
- நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
காரைக்குடி
எம்.ஜி.ஆரின் 106-வது பிறந்த தின விழா சிவகங்கை மாவட்ட அ.தி.மு.க ஓ.பன்னீர் செல்வம் அணியினர் மாவட்ட செயலாளர் கே.ஆர்.அசோகன் தலைமையில் காரைக்குடி ஐந்து விளக்கு பகுதியில் உள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினர்.தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி கொண்டாடினர். இதில் நகர செயலாளர் பாலா, மாநில இளைஞரணி இணை செயலாளர் திருஞானம், சாக்கோட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் மாத்தூர் பாண்டி, வடக்கு ஒன்றிய செயலாளர் அழகப்பன், மாநில எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் சித்தார்த்தன், தொகுதி செயலாளர் சக்கந்தி பழனி, மாவட்ட பாசறை செயலாளர் அங்குராஜ், தேவகோட்டை நகர செயலாளர் ரவிக்குமார், மாணவரணி செயலாளர் கண்ணதாசன், குணா பாண்டியன், மகளிரணி நிர்வாகி ராமாமிர்தம், முன்னாள் கவுன்சிலர் ரவி உள்பட நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
- 18 ஆண்டுகளாகியும் மறையாத சோகத்தில் பூஜைகள் செய்து அஞ்சலி.
- ஊர்வலமாக சென்று நினைவு ஸ்தூபி மற்றும் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி.
தரங்கம்பாடி:
தமிழக கடலோர கிராமங்களை கடந்த 2004 ம் ஆண்டு ஆழிப்பேரலை தாக்கியது. இதில் பல்லாயிரக்கணக்கானோர் உயிர் நீத்தனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் உயிர் நீத்ததுடன், மீனவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்தனர்.
ஆழிப் பேரலை தாக்கியதன் 18ம் ஆண்டு நினைவு தினமான இன்று மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தரங்கம்பாடி, சந்திரபாடி, சின்னங்குடி, பூம்புகார், திருமுல்லைவாசல், பழையாறு உள்ளிட்ட பல்வேறு மீனவ கிராமங்களில் மீனவர்கள் இன்று கடலுக்கு செல்லாமல் கடற்கரையில் கூடி சிறப்பு ஹோமங்கள் செய்து ஆழிப் பேரலையின் தாக்குதலில் உயிர் நீத்த தங்களது உறவினர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து கடலில் நீராடினர்.
தொடர்ந்து ஊர்வலமாக சென்ற மீனவர்கள் ஆழிப் பேரலை தாக்குதலில் உயிரிழந்தவர்களின் நினைவாக அமைக்கப்ப ட்டுள்ள நினைவுச்சின்னம் மற்றும் நினைவிடத்தில் 18 ஆண்டுகளாகியும் மறையாத சோகத்தில் பூஜைகள் செய்து அஞ்சலி செலுத்தி வழிபட்டனர்.
தரங்கம்பாடியில் நடைபெற்ற நினைவஞ்சலி நிகழ்ச்சியில் கடற்கரையில் மீனவர்கள் யாகம் செய்து உயிர் நீத்தவர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்.
அங்கிருந்து மலர் வளையத்துடன் 500க்கும் மேற்பட்டோர் மௌன ஊர்வலமாக நினைவு ஸ்தூபி மற்றும் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். பின்னர் சந்திரபாடி மீனவ கிராம பஞ்சாயத்தார்கள், மௌன ஊர்வலமாக வந்து சுனாமி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.
இதில் எம்எல்ஏ. நிவேதா முருகன், முன்னாள் எம்எல்ஏ பவுன்ராஜ், பா.ஜ.க. மாவட்ட தலைவர் அகோரம், முன்னாள் எம் எல் ஏ பாலாஅருட்ச்செல்வன், உள்ளிட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
- எம்.ஜி.ஆர். படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டது.
- எம்.ஜி.ஆரின் 35-வது நினைவு தினம்.
அ.தி.மு.க. ஓ.பி.எஸ். அணியினர் எம்.ஜி.ஆர். படத்திற்கு மாலை அணிவித்தனர்.
மேலூர்
எம்.ஜி.ஆரின் 35-வது நினைவு தினத்தை முன்னிட்டு மேலூர் பஸ் நிலையம் முன்பு அ.தி.மு.க. சார்பில் அவரது படத்திற்கு மாலை அணிவித்து உறுதிமொழி எடுக்கப்பட்டது.
நகர் இணை செயலாளர் சரவணகுமார் தலைமை தாங்கினார். முன்னாள் சேர்மன் சாகுல் ஹமீது, முன்னாள் நகர் செயலாளர் நாகசுப்பிரமணியன், கச்சிராயன்பட்டி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மாணிக்கம், முன்னாள் கவுன்சிலர் தம்பிதுரை மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மதுரை வடக்கு மாவட்ட அ.தி.மு.க. ஓ.பி.எஸ். அணி செயலாளர் கே.முருகேசன் தலைமையில் எம்.ஜி.ஆர். படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இதில் மாவட்ட பொருளாளர் துதி திருநாவுக்கரசு, மாவட்ட துணைச் செயலாளர் பூமி நாதன், கொட்டாம்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் ஜீவ சன்மார்க்கம், இணைச் செயலாளர் தன பாக்கியம், பொதுக்குழு உறுப்பினர் சோனியா காந்தி, தொகுதி செயலாளர் மொண்டி, துணைச் செயலாளர் சின்னக் கருப்பன், மேலூர் நகர் செயலாளர் தங்க சாமி, மேலூர் ஒன்றிய செயலாளர்கள் (கிழக்கு) ராகவன், (மேற்கு) ஜெயராமன், (தெற்கு) ராஜன், (வடக்கு) வக்கீல் பிரேம்குமார், கொட்டாம்பட்டி ஒன்றிய செயலாளர் வடக்கு பாரதி, அ.வல்லாள பட்டி பேரூர் செயலாளர் கார்த்திக், கரந்த பாண்டி, அட்டப்பட்டி பாலா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- கோரிப்பாளையம் தேவர்சிலைக்கு ஓ.பன்னீர்செல்வம் நாளை காலை மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.
- முன்னாள் எம்.பி. கோபாலகிருஷ்ணன் ஏற்பாட்டில் வழிநெடுக வரவேற்பு அளிக்கப்படுகிறது.
மதுரை
பசும்பொன் முத்துராம லிங்க தேவரின் 115-வது ஜெயந்தி விழா நாளை (30-ந்தேதி) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி மதுரை கோரிப்பாளையம் ரவுண்டானாவில் உள்ள தேவர் சிலை மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு உள்ளது.
பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக பங்கேற்று பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு புகழஞ்சலி செலுத்தி வருகிறார்கள். நாளை காலை 9.30 மணிக்கு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அவரது ஆதரவாளர்கள் கோரிப்பா ளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்கள்.
இதற்காக ஓ.பன்னீர் செல்வம் இன்று இரவு மதுரை வருகிறார். பின்னர் நாளை காலை 9 மணிக்கு அழகர் கோவில் ரோட்டில் உள்ள விடுதியில் இருந்து கோரிப்பாளையம் புறப்படும் ஓ.பன்னீர் செல்வத்துக்கு முன்னாள் எம் பி. கோபால கிருஷ்ணன் தலைமையில் திரளானோர் பங்கேற்று உற்சாக வரவேற்பு அளிக்கின்றனர்.
தல்லாகுளம், தமுக்கம் மைதானம், கோரிப்பாளையம் வரை வழிநெடுக ஓ.பன்னீர் செல்வத்துக்கு சிறப்பான வரவேற்பு வழங்கப்படுகிறது.
இதையடுத்து கோரிப்பாளையம் தேவர் சிலையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் ஓ.பன்னீர்செல்வம் அங்கிருந்து ஆதரவாளர்களுடன் ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்திற்கு சென்று காலை 11 மணியளவில் தேவர் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்துகிறார்.
அவருடன் முன்னாள் அமைச்ச ர்கள் வைத்திலிங்கம், கு.ப.கிருஷ்ணன் மற்றும் ஜே. சி. டி. பிரபாகரன், மனோஜ் பாண்டியன் உள்ளிட்ட நிர்வாகிகளும் கலந்து கொள்கிறார்கள்.
இதுகுறித்து முன்னாள் எம்.பி. கோபாலகிருஷ்ணன் கூறியதாவது:-
அ.தி.மு.க. ஒருங்கிணை ப்பாளர்-முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செ ல்வம், தேவர் ஜெயந்தி விழாவில் பங்கேற்பதற்காக இன்று இரவு மதுரை வருகிறார். மதுரை அழகர் கோவில் ரோட்டில் உள்ள விடுதியில் தங்கும் அவர் நாளை (30-ந்தேதி) காலை 9 மணி அளவில் அங்கிருந்து புறப்பட்டு கோரிப்பாளையம் தேவர் சிலைக்கு வருகிறார். வழிநெடுக அவருக்கு மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்க படுகிறது.
கோரிப்பாளையத்தில் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்னர் ஓ.பன்னீர்செல்வம் பசும்பொன் செல்கிறார்.
இந்த நிகழ்ச்சியில் அம்மாவின் உண்மை விசுவாசிகள் அனைவரும் பங்கேற்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு உற்சாக வரவேற்பு அளிக்கிறார்கள். இதில் அனைத்து நிர்வாகிகளும், பொதுமக்களும் திரளாக பங்கேற்க வேண்டுகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- திருப்பத்தூரில் மருதுபாண்டியர் தூக்கலிடப்பட்ட இடத்தில் வீர வணக்கம் செலுத்தப்பட்டது.
- வாளுக்குவேலி அம்பலத்தின் 221-வது பெருவிழாவில் மாலை அணிவித்து வீர வணக்கம் செலுத்தினார்.
நாகப்பட்டினம்:
மாமன்னர்கள் மருதுபாண்டியரின்1801-வது குருபூஜை விழாவில். திருப்பத்தூரில் மருதுபாண்டியர் தூக்கலிடப்பட்ட இடத்தில் வீர வணக்கம் செலுத்தப்பட்டது.
இதில் முக்குலத்துபுலி கட்சியின் நிறுவனத் தலைவர் ஆறு.சரவணத்தேவர் வீர வணக்கம் செலுத்தினார்.
அதனையடுத்து சிவகங்கை கத்தபட்டு கிராமத்தில் வாளுக்குவேலி அம்பலத்தின் 221-வது பெருவிழாவில் மாலை அணிவித்து வீர வணக்கம் செலுத்தினார்.
இதில் கட்சியின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- நாகை சாலையில் உள்ள அண்ணா சிலைக்கு நகர செயலாளர்முனியப்பன் தலைமையில் மாலை அணிவித்தனர்.
- பின்னர் மலர் தூவி மரியாதையும் செய்தனர்.
திருத்துறைப்பூண்டி:
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி முன்னாள் முதல்வர் அண்ணாவின் 114 வது பிறந்தநாளை முன்னிட்டு திருத்துறைப்பூண்டி நாகை சாலையில் உள்ள அண்ணா சிலைக்கு நகர செயலாளர்முனியப்பன் தலைமையில் மாலை அணிவித்து பூ தூவி மரியாதை செய்தனர்.
இதில் ஒன்றிய செயலாளர் பரமசிவன், ஒன்றிய செயலாளர் எழில் பாலகிருஷ்ணன், ஒன்றிய அவை தலைவர்சாமி, சிவ.மகேந்திரன், நகரதுணை செயலாளர்பூண்டி பிரசாந்த், பிரபாகரன், தாமோதரன், நாசர், கொடி ஜெயராமன்சாமிநாதன் கார்த்திகேயன்உள்ளிட்ட ஒன்றிய, நகர பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்.
- சிகாகோ சொற்பொழிவின் 129 ஆம் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது.
- விவேகானந்தர் உருவச்சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு வழிபாடு செய்யப்பட்டது.
திருப்பூர் :
சுவாமி விவேகானந்தரின் சிகாகோ சொற்பொழிவின் 129 ஆம் ஆண்டு விழா, திருமுருகன்பூண்டி, ஸ்ரீ விவேகானந்த சேவாலயத்தில் கொண்டாடப்பட்டது. இதில் விவேகானந்தர் உருவச்சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு வழிபாடு செய்யப்பட்டது.
மாணவர்களால் புஷ்பாஞ்சலி செய்யப்பட்டது. நிர்வாக அறங்காவலர் சுவாமி விவேகானந்தர் பற்றி சிறப்புச் சொற்பொழிவு செய்தார். குழந்தைகளின் பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்கள் கலந்து கொண்டனர்.அர்ச்சனை, ஆரத்தி மற்றும் பஜனை நடைபெற்றது. அனைவருக்கும் விவேகானந்தர் நூல்கள் வழங்கப்பட்டன. அன்னதானமும் நடைபெற்றது.
- பாரதியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
- மகாகவி பாரதி தேசிய பேரவை தஞ்சை மாவட்டத்தலைவர் வக்கீல் கோ. அன்பரசன் தலைமை வகித்தார்.
தஞ்சாவூர்:
பாரதியார் நினைவு தினத்தை முன்னிட்டு தஞ்சாவூர் பாரத் கல்லூரியில் உள்ள பாரதியார் சிலைக்கு மகாகவி பாரதி தேசிய பேரவை சார்பாக மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
நிகழ்ச்சிக்கு மகாகவி பாரதி தேசிய பேரவை தஞ்சை மாவட்டத்தலைவர் வக்கீல் கோ. அன்பரசன் தலைமை வகித்தார்.
மாவட்ட செயல் தலைவர் மூவர் கோட்டை ஸ்ரீதர் மாலை அணிவித்தார்.
நிகழ்ச்சியில் துணை த்தலைவர்கள் பூதலூர் மோகன்ராஜ், முனைவர் செந்தில்குமார், குருவி ரமேஷ்குமார், சாய்சரன், பாரத் கல்லூரி தமிழ்த்துறை தலைவர் மா.சதானந்தம். பேராசிரியை சிவரஞ்சனி, பாரத் அலைகள் இணை ஆசிரியர் வே. தேவநேசன், பாரதி இயக்கத்தை சேர்ந்த மோகன்,கண்ணையன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்