என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "girl killed"
- பிடிபட்ட 6 சிறுத்தைகளின் நகம் ரத்த மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டன.
- வனவிலங்குகள் நடமாட்டம் உள்ளதால் பக்தர்கள் கூட்டமாக செல்ல வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு பக்தர்கள் நடந்த செல்லக்கூடிய அலிப்பிரி நடைபாதையில் வன விலங்குகள் நடமாட்டம் உள்ளது.
கடந்த 7 மாதங்களுக்கு முன்பு நெல்லூர் மாவட்டம் போத்தி ரெட்டிபாளையத்தை சேர்ந்த தம்பதியினர் அவர்களது 3 வயது மகள் லக்ஷிதாவுடன் சென்றனர்.
இரவில் மின்விளக்கு வெளிச்சத்தில் பெற்றோரை பிரிந்து சிறுமி படிக்கட்டுகளில் ஓடிக் கொண்டிருந்தாள். அப்போது சிறுத்தை சிறுமியை தூக்கி சென்று கடித்துக் கொன்றது.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனை தொடர்ந்து மலைப்பாதையில் வைக்கப்பட்ட கூண்டில் அடுத்தடுத்து 6 சிறுத்தைகள் சிக்கின. இதில் குழந்தையை கொன்ற சிறுத்தையை மீண்டும் காட்டிற்கு விடக்கூடாது அது மீண்டும் மனிதர்களை தாக்கும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர்.
பிடிபட்ட 6 சிறுத்தைகளின் நகம் ரத்த மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டன.
முதற்கட்டமாக 4 சிறுத்தைகள் சிறுமியை கொல்லவில்லை என்பது தெரிய வந்தது. அந்த 4 சிறுத்தைகள் மீண்டும் திருப்பதி வனப்பகுதியில் விடப்பட்டன.
மேலும் 2 சிறுத்தைகளுக்கு ஆய்வு நடத்தப்பட்டது. அதில் ஒரு பெரிய சிறுத்தை சிறுமியைக் கொன்றது தெரியவந்தது .
இதனை தொடர்ந்து அந்த சிறுத்தை திருப்பதி பூங்காவில் உள்ள கூண்டில் நிரந்தரமாக அடைக்க முடிவு செய்தனர்.
மேலும் உள்ள ஒரு சிறுத்தையை காட்டில் விட நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இது ஒரு புறம் இருக்க நேற்று திருப்பதி மலைபாதையில் கரடி ஒன்று நடமாடியது. இதனைக் கண்டு பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
வனவிலங்குகள் நடமாட்டம் உள்ளதால் பக்தர்கள் கூட்டமாக செல்ல வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.
- மோட்டார் சைக்கிளில் நேற்று திரும்பி வந்து கொண்டிருந்தார்.
- ஸ்கூட்டரில் இருந்து அவர் நிலைதடுமாறி தவறி கீழே விழுந்தார்.
விழுப்–பு–ரம்:
விழுப்–பு–ரம் மாவட்–டம் வானூர் தாலுகா நல்–லா–வூர் கிரா–மத்தைசேர்ந்–த–வர் லோக–நா–தன் (வயது 42). அவ–ரது மனைவி தேவி (38). இவர் கிளி–ய–னூ–ருக்கு சென்று வீட்–டுக்கு மோட்டார் சைக்கிளில் நேற்று திரும்பி வந்து கொண்–டி–ருந்–தார்.
கிளி–ய–னூர் ஏரிக்–கரை சாலை–யில் வந்–தபோது எதிர்–பா–ராத வித–மாக ஸ்கூட்–டரில் இருந்து அவர் நிலைத–டு–மாறி தவறி கீழே விழுந்–தார். இதில் அவருக்கு மூச்–சுத்தி–ண–றல் ஏற்–பட்டு சம்–பவ இடத்–தி–லேயே பரி–தா–ப–மாக இறந்–தார்.
இது–கு–றித்து தக–வல் அறிந்–த–தும் சம்–பவ இடத்–திற்கு விரைந்து சென்ற கிளியனூர் போலீ–சார் அவ–ரது உடலை கைப்–பற்றி பிரேத பரி–சோதனைக்–காக புதுச்–சேரி கனகசெட்டிக்குளத்தில் உள்ள தனியார் மருத்து வக்கல்லூரி ஆஸ்–பத்–தி–ரிக்கு அனுப்பி வைத்த–னர்.
- செந்தில் குமாருக்கு மனைவி மற்றும் 8 வயதில் ஜெயஸ்ரீ என்ற மகள் இருந்தார்.
- மணலில் விளையாடிக்கொண்டிருந்த சிறுமி எதிர்பாராத விதமாக அங்கு இருந்த தண்ணீரில் விழுந்தார்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் திட்டக்குடி ராமநத்தம் அருகே தட்சூர் பகுதியை சேர்ந்தவர் செந்தில் குமார். ஆட்டோ டிரைவர். இவருக்கு மனைவி மற்றும் 8 வயதில் ஜெயஸ்ரீ என்ற மகள் இருந்தார். ஜெயஸ்ரீ அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 2-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று செந்தில் குமார் மற்றும் இவரது மனைவி வேலைக்காக வெளியில் சென்றுவிட்டனர். இதனையடுத்து வேலைக்கு சென்ற செந்தில்குமார் மனைவி வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டிலிருந்த மகள் ஜெயஸ்ரீயை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் பல இடங்களில் தேடினார். ஆனால் எங்கு தேடியும் கிடைக்கவில்லை.
செந்தில்குமார் அதே பகுதியில் புதியதாக வீடு ஒன்று கட்டிவருகிறார். உடனே அங்கு சென்று ஜெயஸ்ரீயை தேடினார். அப்போது அந்த வீட்டில்கழிவு நீர் தொட்டி கட்டி அதில் தண்ணீர் நிரப்பப்பட்டு இருந்தது. வீட்டின் அருகே வேலைக்காக மணல் கொட்டி வைக்கப்பட்டு இருந்தது. அந்த மணலில் விளையாடிக்கொண்டிருந்த சிறுமி எதிர்பாராத விதமாக அங்கு இருந்த தண்ணீரில் விழுந்து கிடந்தார்.
இதை பார்த்த ஜெயஸ்ரீயின் தாய் அருகில் இருந்தவர்களின் உதவியுடன் ஜெயஸ்ரீயை மீட்டு தண்ணீரில் விழுந்ததால் மயக்கத்தில் இருக்கலாம் என்று ராமநத்தம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு ஜெயஸ்ரீயை பரிசோதித்த டாக்டர் ஜெயஸ்ரீ ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து தகவல் அறிந்த ராமநத்தம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஜெயஸ்ரீ உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திட்டக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- காவல் துறை வாகனத்தை ஓட்டி வந்த ஊா்க்காவல் படையில் பணியாற்றி வரும் வீரசின்னகண்ணன் என்பவரை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
- வாகனம் இயக்கி விபத்து மற்றும் மரணம் விளைவித்தல் பிரிவின் கீழ் வழக்கு பதிந்து இன்று காலை கைது செய்தனர் .
திருப்பூர்:
திருப்பூா் விஜயாபுரம் செந்தில்நகா் பகுதியை சோ்ந்தவா் ஜெயராஜ், இவரது மனைவி ராஜே ஸ்வரி (வயது39). ஜெயராஜ் குவைத் நாட்டில் டெய்லராக பணியாற்றி வருகிறாா். இந்தத் தம்பதியின் மகன் சஞ்சய் (18), மகள் திவ்யதா்ஷினி (8). விஜயாபுரம் பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் திவ்யதா்ஷினி 3-ம் வகுப்பு படித்து வந்தாா்.
இந்நிலையில் ராஜேஸ்வரி, பள்ளியில் இருந்து திவ்யதா்ஷினியை அழைத்துக் கொண்டு விஜயாபுரத்தில் இருந்து நல்லூா் நோக்கி இருசக்கர வாகனத்தில் நேற்று மாலை வந்து கொண்டிருந்தாா். நல்லூா் காவல் நிலையம் அருகே உள்ள பெட்ரோல் பங்க் அருகே வந்தபோது பின்னால் வந்த போலீஸ் வாகனம் ராஜேஸ்வரியின் இருசக்கர வாகனத்தின் மீது எதிா்பாராதவிதமாக மோதியது. இதில் திவ்யதா்ஷினி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தாா்.
ராஜேஸ்வரிக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதைப் பாா்த்து அங்கு திரண்ட பொதுமக்கள், காவல் துறை வாகனத்தை ஓட்டி வந்த முதலிபாளையம் ஹவுஸிங் யூனிட் பகுதியைச் சோ்ந்த ஊா்க்காவல் படையில் பணியாற்றி வரும் வீரசின்னகண்ணன் (32) என்பவரை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
சம்பவ இடத்துக்கு விரைந்த நல்லூா் போலீசார் வீரசின்னகண்ணனை பொதுமக்களிடமிருந்து மீட்டு விசாரணைக்காக காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனா்.
இந்த சம்பவத்தைக் கண்டித்து காங்கயம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொது மக்கள் கூறுகையில், விபத்தை ஏற்படுத்திய காவல் துறை வாகனத்தை ஓட்டி வந்தவா் வேகமாக வாகனத்தை இயக்கியதால்தான் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. எனவே, வீரசின்னகண்ணனை கைது செய்வதுடன், சிறுமியின் குடும்பத்துக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றனா்.
இதனிடையே மாநகர போலீஸ் துணை கமிஷனர் வனிதா தலைமையிலான காவல் துறையினா் சம்பவ இடத்துக்கு வந்து மறியலில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். இது தொடா்பாக உரிய விசாரணை நடத்தப்படும் என்று உறுதியளித்ததன் பேரில் மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனா்.
இந்நிலையில் இந்த விபத்து தொடர்பாக வீரசின்ன கண்ணன் மீது 304 ஏ பிரிவின் கீழ் அஜாக்கிரதையாக வாகனம் இயக்கி விபத்து மற்றும் மரணம் விளைவித்தல் பிரிவின் கீழ் வழக்கு பதிந்து இன்று காலை கைது செய்தனர் .
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும் விசாரணையின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.
- கோவில் அகல் விளக்கில் இருந்து ஹேமாவதியின் சுடிதாரில் தீப்பற்றியது.
- மப்பேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூர்:
திருவள்ளூரை அடுத்த நரசமங்களம் கிராமத்தை சேர்ந்தவர் அண்ணாமலை (வயது 47). இவரது மகள் ஹேமாவதி (15). இவர் கடந்த மே மாதம் 14-ந் தேதி கிராமத்தில் உள்ள கோவிலுக்கு சாமி கும்பிட சென்றார். அப்போது கோவில் அகல் விளக்கில் இருந்து ஹேமாவதியின் சுடிதாரில் தீப்பற்றியது. இதனால் அவரது உடலின் பின்பகுதி மற்றும் கழுத்தில் பலத்த தீக்காயம் ஏற்பட்டது.
இதையடுத்து சிறுமி ஹேமாவதியை தண்டலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று முதல் உதவி சிகிச்சை அளித்தனர். தொடர்ந்து அவரை மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கும் அழைத்து சென்று சிகிச்சை அளித்தனர்.
இந்நிலையில் சிறுமி ஹேமாவதி நேற்று முன்தினம் திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவ கல்லூரி மருத்து வமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று பிற்பகல் சிகிச்சை பலனின்றி சிறுமி ஹேமாவதி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து மப்பேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்