search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Governor RN Ravi"

    • விலை மதிப்பற்ற உயிர்கள் பலியாகியிருப்பது மிகுந்த வேதனையை அளிக்கிறது.
    • காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனைகள்.

    சென்னை:

    தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதளப் பதிவில் கூறிஇருப்பதாவது:-

    "குவைத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் விலை மதிப்பற்ற உயிர்கள் பலியாகியிருப்பது மிகுந்த வேதனையை அளிக்கிறது. தங்களின் அன்புக்குரியவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனைகள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பாரதத் தாயின் மிகச்சிறந்த மகனான சுதந்திர வீரர் விநாயக் தாமோதர் சாவர்க்கரின் பிறந்தநாளில் அவருக்கு பணிவான மரியாதைகள்.
    • எண்ணற்ற சுதந்திர போராட்ட வீரர்களை ஊக்கப்படுத்திய தொலைநோக்குப் பார்வை கொண்ட தேசியவாத தலைவர் அவர்.

    ஊட்டி:

    புதிய பாராளுமன்றம் திறந்தபோது அங்கு தமிழகத்தின் செங்கோலை நிறுவியது பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு.

    இந்த நிகழ்வின் ஓராண்டு நிறைவை முன்னிட்டு தமிழக கவர்னர் ஆர்.என். ரவி, எக்ஸ்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    இந்திய பாராளுமன்றத்தில் புனித செங்கோலை மீட்டெடுத்து நிறுவியதன் முதலாம் ஆண்டு நிறைவை தேசம் பெருமிதத்துடன் கொண்டாடுகிறது.


    நமது சுதந்திரத்துக்கு வழிவகுத்த அதிகாரப் பரிமாற்றத்தின் வெளிப்படையான கருவியாக விளங்கிய செங்கோலின் புண்ணிய பூமியும் அதன் பிறப்பிடமான தமிழ்நாட்டின் சகோதர, சகோதரிகளுக்கும் இது சிறப்புப் பெருமைக்குரிய நாள்.

    தமிழர் பெருமையின் இந்த அடையாளத்தை வேண்டுமென்றே நீண்ட காலமாக இருட்டடிப்பு செய்வதிலிருந்து மீட்டு, அதை மீண்டும் உயர்ந்த தேசிய பீடத்தில் நிலைநிறுத்திய பிரதமர் மோடிக்கு தமிழ்நாட்டு மக்கள் என்றும் நன்றியுள்ளவர்களாக இருப்பார்கள்.

    இவ்வாறு அவர் அதில் கூறி உள்ளார்.

    இதேபோல சுதந்திர போராட்ட வீரர் வீரசாவர்க்கர் பிறந்தநாளை முன்னிட்டு ஊட்டியில் உள்ள ராஜ்பவனில் அவரது படத்துக்கு கவர்னர் ஆர்.என்.ரவி மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதுதொடர்பாக கவர்னர் ஆர்.என்.ரவி கூறியிருப்பதாவது:-


    பாரதத் தாயின் மிகச்சிறந்த மகனான சுதந்திர வீரர் விநாயக் தாமோதர் சாவர்க்கரின் பிறந்தநாளில் அவருக்கு பணிவான மரியாதைகள். 10 ஆண்டுகளுக்கும் மேலாக அந்தமான் செல்லுலார் சிறையிலும், 16 ஆண்டுகள் ரத்னகிரி சிறையிலும் ஆங்கிலேயர்களால் உடலாலும் மனதாலும் சித்ரவதைகளை மிகவும் கொடூரமாக அனுபவித்த அவர் ஒரு உறுதியான சுதந்திர போராட்ட வீரர்.

    எண்ணற்ற சுதந்திர போராட்ட வீரர்களை ஊக்கப்படுத்திய தொலைநோக்குப் பார்வை கொண்ட தேசியவாத தலைவர் அவர். அவரது தியாகங்கள், ஒன்றுபட்ட, வளர்ந்த மற்றும் வலிமையான பாரதத்தை அதன் பாரம்பரிய பெருமிதத்துடன் கட்டியெழுப்ப அனைத்து இந்தியர்களையும் ஊக்குவிக்கும் என கூறி உள்ளார்.

    • கற்க கசடற கற்ற பின் நிற்க அதற்குத் தக என்ற திருவள்ளுவரின் கூற்றின்படி கல்வியாளர்கள் மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்த பாடுபட வேண்டும்.
    • புதிய கல்விக் கொள்கை புதிய இந்தியாவை உருவாக்கும்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள ராஜ்பவனில் அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழக துணை வேந்தர்களின் 2 நாள் மாநாடு இன்று தொடங்கியது. மாநாட்டுக்கு கவர்னர் ஆர்.என். ரவி தலைமை தாங்கி உரையாற்றினார்.

    மாநாட்டில் கவர்னர் ஆர்.என்.ரவி பேசியதாவது:-

    2021-ம் ஆண்டு நான் கவர்னராக பொறுப்பேற்ற போது, தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்கள் மிகவும் மோசமான நிலையில் இருந்தன. சில பிரச்சனைகளும் இருந்தன. ஒவ்வொரு பல்கலைக்கழகங்களும் மற்ற பல்கலைக்கழகங்களுடன் தொடர்பின்றி தனித்தனியாக செயல்பட்டு வந்தன. அவைகளின் தரமும் குறைந்து காணப்பட்டது. இதனை சரி செய்து, ஒன்றிணைக்கவே இந்த மாநாடு மூன்றாண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது.

    புதிய தேசிய கல்வி கொள்கை தான் எதிர்காலம். நமது நாடு தற்போது பெரிய மாற்றத்திற்காக தயாராக உள்ளது. உலகம் வேகமாக மாறிவரும் நிலையில் நாம் பின் தங்கி உள்ளோம். சுதந்திரத்திற்கு பிறகு பொருளாதார நிலையில் 5-ம் இடத்தில் இருந்த நாம் 11-ம் இடத்திற்கு பின் தங்கிவிட்டோம். தற்போது 5-ம் இடத்திற்கு முன்னேறி உள்ளோம். விரைவில் 3-ம் இடத்திற்கு முன்னேற உள்ளோம்.

    தவறான கல்வி கொள்கையால் படித்து முடித்த இளைஞர்கள் வேலைக்காக கையேந்தும் நிலையில் உள்ளனர். கல்வி இளைஞர்களை திறன்மிக்கவர்களாகவும் தன்னம்பிக்கை உள்ளவர்களாகவும் உருவாக்க வேண்டும். ஆனால் அதை தவறவிட்டு விட்டோம். இது தொடர்ந்தால் இளைஞர்களின் எதிர்காலம் கேள்விகுறியாகிவிடும். நாம் சுதந்திரத்திற்கு முன்பு உலகின் பெரும் பொருளாதாரத்தில் முன்னேறிய நாடாக இருந்தோம். இதற்கு காரணம் அப்போது பின்பற்றப்பட்ட கல்வி கொள்கையாகும். கற்க கசடற கற்ற பின் நிற்க அதற்குத் தக என்ற திருவள்ளுவரின் கூற்றின்படி கல்வியாளர்கள் மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்த பாடுபட வேண்டும். கற்கும் முறையை, பழைய கல்வி முறையை மாற்றிட புதிய கல்வி கொள்கை கொண்டு வரப்பட்டது. பல்கலைக்கழகங்கள் நீண்ட நீடித்த கல்விக் கொள்கையை கொண்டு வர வேண்டும். புதிய கல்விக் கொள்கை புதிய இந்தியாவை உருவாக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அரசியலமைப்பு சட்டப்படி எந்த கட்சியும் சாராமல் இருக்க வேண்டிய கவர்னர் பாஜக கைக்கூலியாக செயல்படுவது வேதனை தருகிறது.
    • புதுவையில் முன்பு இருந்த கவர்னர்கள் போல சி.பி.ராதாகிருஷ்ணனும் புதுவை அரசு நிர்வாகத்தில் தலையிடுகிறார்.

    புதுச்சேரி:

    புதுவை முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    முதல்கட்ட தேர்தல் முதல் 6-ம் கட்ட தேர்தல் வரை மோடி 10 ஆண்டு பிரதமராக என்ன செய்தார்? என பிரசாரத்தில் பேசவில்லை.

    பிரதமர், அமித் ஷா, பா.ஜனதா தலைவர்கள் காங்கிரஸ் தலைவர்களை வசைபாடுவதும், காங்கிரஸ் கட்சியை தரம்தாழ்ந்து பேசுவதும், இந்தியா கூட்டணி கட்சி தலைவர்களை சிறையில் தள்ளும் வேலையைத்தான் செய்கின்றனர்.

    அயோத்தி கோவிலை இடிக்கும் கட்சி காங்கிரஸ் என பிரதமர் பொய் பிரசாரம் செய்கிறார். பிரதமர் தன்னை அவதார புருஷன் என பேசி வருகிறார். அவரது பேச்சில் இருந்து பா.ஜ.க. படுதோல்வி அடையும் என தெரிகிறது. இந்தியா கூட்டணி மிகப்பெரும் அளவில் எம்.பி. தொகுதிகளை கைப்பற்றும்.

    பா.ஜ.க. கூட்டணி கட்சிகள் 200 இடங்களை தாண்டாது. இந்தியா கூட்டணி 300 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று மத்தியில் ஆட்சி அமைக்கும். புதுவையில் காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் வைத்திலிங்கம் அமோக வெற்றி பெறுவார். தமிழகம், புதுவையில் 40 தொகுதியிலும் இந்தியா கூட்டணி வெற்றி பெறும். ஒரு இடத்தில்கூட பா.ஜனதா வெற்றி பெற வாய்ப்பு இல்லை. அ.தி.மு.க.வும் படுதோல்வி அடையும்.

    தமிழ்நாடு கவர்னராக ரவி பொறுப்பேற்றது முதல் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தொடர்ந்து பேசி வருகிறார். அவர் அதிகார மீறல், ஜனநாயகத்தை மதிக்கவில்லை என சுப்ரீம்கோர்ட் சாடியும் திருந்தவில்லை. தமிழக தி.மு.க. ஆட்சிக்கு தொல்லை கொடுப்பது, கோப்புகளை நிராகரிப்பது, திருப்பி அனுப்புவது என அவர் அதிகார துஷ்பிரயோகம் செய்து வருகிறார்.

    தமிழக கவர்னர் ரவி திருவள்ளுவர் விழாவை கவர்னர் மாளிகையில் கொண்டாடியுள்ளார். திருவள்ளுவர் எந்த காலத்திலும் காவி உடை அணிந்தது இல்லை. அவர் படங்கள், சிலைகளில் வெள்ளை உடையுடன் இருப்பார். வேண்டுமென்றே பிரச்சனையை உருவாக்க, தமிழ்நாட்டில் தமிழ் மொழியை கொச்சைப்படுத்த, தமிழக அரசுக்கு தொல்லை கொடுக்க சர்ச்சை வேலையை கவர்னர் செய்துள்ளார்.

    இதற்கு கவர்னர் மட்டும் பொறுப்பல்ல, அவரை ஊக்குவிக்கும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பிரதமர் மோடியும்தான் பொறுப்பு.

    கவர்னர் மூலம் எதிர்கட்சி ஆளும் மாநிலங்களுக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வருகின்றனர். இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் காலம் வெகு விரைவில் வரும்.

    கவர்னர் தமிழக மக்கள் உணர்வுகளை புரிந்து கொள்ளாமல் தனது ஆர்.எஸ்.எஸ். சித்தாந்ததை படிப்படியாக தமிழ்நாட்டில் நுழைக்கும் வேலையை பார்க்கிறார். அரசியலமைப்பு சட்டப்படி எந்த கட்சியும் சாராமல் இருக்க வேண்டிய கவர்னர் பாஜக கைக்கூலியாக செயல்படுவது வேதனை தருகிறது.

    புதுவையில் முன்பு இருந்த கவர்னர்கள் போல சி.பி.ராதாகிருஷ்ணனும் புதுவை அரசு நிர்வாகத்தில் தலையிடுகிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழ்நாடுக்கு வந்தால் தமிழர்களை போற்றுகின்றனர். இது என்னவென்று தெரியவில்லை.
    • இந்தியா கூட்டணி இந்த முறை 300ல் இருந்து 370 இடங்கள் வரை கைப்பற்றி ஆட்சி அமைக்கும். இதில் எந்தவித மாற்று கருத்தும் கிடையாது.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டையில் தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கேரளா அரசு சிலந்தியாற்றில் அணை கட்டும் விவகாரத்தில் தமிழ்நாடு முதல்வர், நீர்வளத்துறை அமைச்சர் ஆகியோர் உரிய நடவடிக்கை எடுத்து வருகின்றனர். முல்லை பெரியாறு விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது. எடுக்கவும் மாட்டார்கள்.

    போதைப்பொருட்கள் புழக்கத்தை எந்தளவுக்கு தடுத்திருக்கிறோம் என்பதை நாங்கள் எவ்வளவு பிடித்திருக்கிறோம் என்பதில் இருந்து தெரிந்து கொள்ளலாம்.

    தமிழக முதல்வர் போதைப்பொருள் நடமாட்டத்தை ஒருபோதும் அனுமதிக்கமாட்டார். இதனால் மாணவர்களின் வாழ்வு கெடும் என்று உணர்ந்தவர் நமது முதல்வர். போதைப்பொருள் நடமாட்டத்தை முற்றிலும் ஒழிப்பது தான் எங்களது லட்சியம். ஒடிசாவில் தமிழர்களை திருடர்கள் என்று தமிழர்களுக்கு விரோதமாக பேசுகின்றனர்.

    தமிழ்நாடுக்கு வந்தால் தமிழர்களை போற்றுகின்றனர். இது என்னவென்று தெரியவில்லை. நாங்கள் இரட்டை நிலைப்பாடு எடுப்பது கிடையாது. என்றைக்கும் ஒரே நிலைப்பாடு தான்.

    குரங்கு கையில் பூ மாலை கிடைத்தால் அது பிச்சுக் கொண்டே தான் இருக்கும், அதுபோல் நமது கெட்ட நேரம் இது போன்ற ஆளுநர் நமக்கு வந்து வாய்த்துள்ளார். ஏற்கனவே திருவள்ளுவருக்கு காவி உடை அணிவித்து சர்ச்சை கிளம்பியது திரும்பவும் திருவள்ளுவருக்கு காவி உடை என்றால் ஆளுநரை என்னதான் செய்ய முடியும், வாதத்திற்கு மருந்துண்டு பிடிவாதத்திற்கு மருந்தில்லை.

    இந்தியா கூட்டணி இந்த முறை 300ல் இருந்து 370 இடங்கள் வரை கைப்பற்றி ஆட்சி அமைக்கும். இதில் எந்தவித மாற்று கருத்தும் கிடையாது.

    இவ்வாறு அமைச்சர் கூறினார்.

    • கவர்னர் ஆர்.என்.ரவி நீலகிரிக்கு வருவதையொட்டி மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
    • போலீசார் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளில் தீவிர ரோந்து பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் ஊட்டியில் ராஜ்பவன் மாளிகை உள்ளது. இங்கு வருகிற 27 மற்றும் 28-ந்தேதி துணை வேந்தர்கள் மாநாடு நடைபெற உள்ளது.

    இந்த மாநாட்டில் கவர்னர் ஆர்.என்.ரவி பங்கேற்கிறார். இதற்காக இன்று அவர் சென்னையில் இருந்து விமானம் மூலமாக கோவை விமான நிலையத்திற்கு வருகிறார்.

    பின்னர் அங்கிருந்து கார் மூலம் நீலகிரிக்கு புறப்படும் அவர் சாலை மார்க்கமாக ஊட்டி ராஜ்பவன் மாளிகைக்கு செல்கிறார். ஊட்டி ராஜ்பவன் மாளிகைக்கு செல்லும் கவர்னர் ஆர்.என்.ரவி அங்கு தங்கி ஓய்வெடுக்கிறார்.

    அதனை தொடர்ந்து வருகிற 27 மற்றும் 28-ந்தேதிகளில் ஊட்டி ராஜ்பவன் மாளிகையில் நடைபெறும் துணைவேந்தர்கள் மாநாட்டில் கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு உரையாற்றுகிறார்.

    இந்த மாநாட்டில் தமிழகத்தில் உள்ள 48 பல்லைக்கழகங்களின் துணைவேந்தர்களும் பங்கேற்கின்றனர். துணை வேந்தர்கள் மாநாடு முடிந்ததும் கவர்னர் ஆர்.என்.ரவி 29-ந்தேதி கோத்தகிரி பகுதியை சுற்றி பார்க்க உள்ளார்.

    கவர்னர் ஆர்.என்.ரவி நீலகிரிக்கு வருவதையொட்டி மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. போலீசார் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளில் தீவிர ரோந்து பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதேபோல கோவை மற்றும் மேட்டுப்பாளையம் பகுதியிலும் இன்று போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

    • கவர்னர் மாளிகை வெளியிட்ட அழைப்பிதழில் திருவள்ளுவருக்கு காவி உடை அணிவிக்கப்பட்டுள்ளது.
    • இதற்கு தி.மு.க, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

    சென்னை:

    சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் திருவள்ளுவர் திருநாள் விழா இன்று மாலை நடைபெற உள்ளது. இந்த விழாவை முன்னிட்டு கவர்னர் மாளிகை தரப்பில் அழைப்பிதழ் வெளியிடப்பட்டுள்ளது. அந்த அழைப்பிதழில் திருவள்ளுவருக்கு காவி உடை அணிவிக்கப்பட்டுள்ளது.

    ஆளுநர் மாளிகை அழைப்பிதழில் திருவள்ளுவருக்கு காவி உடை அணிவிக்கப்பட்டதற்கு தி.மு.க, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

    இந்நிலையில், தமிழக சட்டசபை சபாநாயகர் அப்பாவு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு இன்ஸ்டாகிராமில் கேள்வி எழுப்பியுள்ளார். அதில்,

    ஆளுநருக்கு குல்லா அணிவித்தால் ஏற்பாரா? அவரது மனைவிக்கு பர்தா அணிவித்தால் ஏற்பாரா என கேள்வி எழுப்பியுள்ளார்.

    • கூட்டத் தொடர் சுமார் 25 நாட்களுக்கு மேல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    • பாராளுமன்ற தேர்தலில் எந்தெந்த கட்சிகள் எத்தனை இடம் பிடிக்கப் போகிறது என்பதை பொறுத்து சட்டசபையில் அதற்கேற்ப காரசார விவாதம் நடைபெறும்.

    சென்னை:

    தமிழக சட்டசபை கூட்டம் கடந்த பிப்ரவரி மாதம் 12-ந்தேதி நடைபெற்ற போது இந்த ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் கவர்னர் ஆர்.என்.ரவி உரையாற்றினார்.

    அப்போது அரசு தயாரித்து கொடுத்த கொள்கை உரையில் தனக்கு உடன்பாடு இல்லை என தெரிவித்த கவர்னர் 2 நிமிடங்களில் தனது உரையை முடித்து இருக்கையில் அமர்ந்தார். சட்டப்பேரவை நிகழ்ச்சியின் தொடக்கத்திலும், இறுதியிலும் தேசிய கீதம் பாட வேண்டும் என்று நான் முன் வைத்த கோரிக்கை தொடர்ச்சியாக புறக்கணிக்கப்பட்டுள்ளது.

    தமிழக அரசு தயாரித்த உரையில் இடம் பெற்றுள்ள சில வரிகள் உண்மைக்கு மாறாகவும் தார்மீகத்துக்கு முரணாகவும் உள்ளதால் இதை நான் வாசித்தால் அரசியலமைப்பை கேலிக்கூத்தாக்கும் செயலாகிவிடும் என்பதால் உரையை முடித்துக் கொள்கிறேன் என்று அப்போது அவர் கூறினார்.

    இதன் பிறகு சபாநாயகர் அப்பாவு கவர்னர் உரையின் தமிழாக்கத்தை முழுவதையும் வாசித்து முடித்தார். இது அன்றைய தினம் சட்டசபையில் பரபரப்பான சூழ்நிலையை ஏற்படுத்தியது. அதற்கு மறுநாளில் இருந்து கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்றது. இதற்கு அமைச்சர்கள் பதிலுரை அளித்தனர்.

    அதைத் தொடர்ந்து 2024-2025-ம் ஆண்டுக்கானன பட்ஜெட்டும், வேளாண்மை பட்ஜெட்டும் சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. இதன் மீது நடைபெற்ற விவாதங்களுக்கும் அமைச்சர்கள் பதில் அளித்தனர். இதில் சில சட்ட மசோதாக்களும் நிறைவேற்றப்பட்டது. அதன் பிறகு சட்டசபை கூட்டத்தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது.

    இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற்ற காரணத்தால் சட்டசபையை தொடர்ந்து நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது. இதனால் மானிய கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெறாமல் இருந்தது.

    தற்போது தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் முடிந்து விட்டாலும் இந்தியா முழுவதும் தேர்தல் முடிந்து ஜூன் 4-ந் தேதி தான் ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் என்பதால் அதன் பிறகு சட்டசபை கூட்டத்தை எந்த தேதியில் நடத்துவது என்பது பற்றி அரசு முடிவெடுக்க உள்ளது.

    தேர்தல் நடத்தை விதிகள் ஜூன் முதல் வாரத்தில் விலக்கி கொள்ளப்பட்ட பிறகு ஜூன் 2-வது வாரம் தமிழக சட்டசபைக் கூட்டத் தொடர் மீண்டும் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதற்காக சபாநாயகர் தலைமையில் அலுவல் ஆய்வுக் குழு ஜூன் 2-வது வாரம் கூடி எத்தனை நாட்கள் சட்டசபையை நடத்துவது எந்தெந்த தேதிகளில் மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடத்துவது என்பது பற்றி முடிவு செய்ய உள்ளது.

    இந்த கூட்டத் தொடர் சுமார் 25 நாட்களுக்கு மேல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாராளுமன்ற தேர்தலில் எந்தெந்த கட்சிகள் எத்தனை இடம் பிடிக்கப் போகிறது என்பதை பொறுத்து சட்டசபையில் அதற்கேற்ப காரசார விவாதம் நடைபெறும். அதிலும் குறிப்பாக தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜனதா கட்சிகளிடையே தான் அனல் பறக்கும் விவாதம் சட்டசபையில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த முறை நடைபெறும் சட்டசபைக் கூட்டத்தொடரில் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை, போதைப் பொருள் விவகாரம், குடிநீர் பிரச்சனை, தேர்தல் வெற்றி- தோல்வி உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை அ.தி.மு.க. கிளப்ப உள்ளதாக தெரிகிறது.

    இதனால் அனல் பறக்கும் விவாதங்களுக்கு பஞ்சமிருக்காது என தெரிகிறது.

    • பயணத்தில் அரசியல் முக்கியத்துவம் ஏதும் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
    • புதன்கிழமை பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளதாகவும் தெரிவித்தனர்.

    தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று காலை டெல்லி புறப்பட்டுச் சென்றார்.

    3 நாட்கள் பயணமாக டெல்லி சென்று உள்ள அவர் வருகிற செவ்வாய்க்கிழமை சென்னை திரும்புவார் என்று ஆளுநர் மாளிகை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    டெல்லியில் தமிழ்நாடு இல்லத்தில் தங்கி இருக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவி தனிப்பட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்க இருப்பதாகவும் அவரது பயணத்தில் அரசியல் முக்கியத்துவம் ஏதும் இல்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    சென்னை வந்த பிறகு ஆளுநர் ஆர்.என்.ரவி புதன்கிழமை அன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளதாகவும் தெரிவித்தனர்.

    • காஞ்சிபுரத்தில் உள்ள உத்திரமேரூர் போன்ற நமது கலாசார பாரம்பரிய கல்வெட்டுகள் அவற்றின் பெருமை மற்றும் துடிப்பான சாட்சியமாக உள்ளன.
    • இன்று, பஞ்சாயத்துகள், சுயராஜ்ஜியத்தின் வலுவான தூணாக மட்டுமல்லாமல், சுயசார்பு பாரதத்தின் உள்ளடக்கிய மற்றும் முழுமையான வளர்ச்சி மாதிரியின் பிரதிபலிப்பாகவும் உள்ளன.

    சென்னை:

    ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 24 ஆம் தேதி தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி இன்று தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்படுவதையொட்டி தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி இன்று எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    பஞ்சாயத்து ராஜ் தின வாழ்த்துக்கள்!

    பஞ்சாயத்து ஆட்சிமுறையானது நமது பழமையான ஜனநாயக மதிப்புகள் மற்றும் நெறிமுறைகளின் ஆன்மாவாக இருந்து வருகிறது. காஞ்சிபுரத்தில் உள்ள உத்திரமேரூர் போன்ற நமது கலாசார பாரம்பரிய கல்வெட்டுகள் அவற்றின் பெருமை மற்றும் துடிப்பான சாட்சியமாக உள்ளன. இன்று, பஞ்சாயத்துகள், சுயராஜ்ஜியத்தின் வலுவான தூணாக மட்டுமல்லாமல், சுயசார்பு பாரதத்தின் உள்ளடக்கிய மற்றும் முழுமையான வளர்ச்சி மாதிரியின் பிரதிபலிப்பாகவும் உள்ளன.

    இவ்வாறு அவர் அந்த பதிவில் கூறியுள்ளார்.

    • நாம் கட்டும் வரி ஒரு ரூபாயில் 29 பைசா தருவதால் மோடி பிரதமர் அல்ல மிஸ்டர் 29 பைசா.
    • தமிழ்நாட்டின் பெயரை மாற்றவும், தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை இசைப்பதை தடுக்கவும் முயற்சித்தவர் கவர்னர்.

    ராணிப்பேட்டை:

    அரக்கோணம் பாராளுமன்ற தொகுதியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று பிரசாரம் செய்தார். ஆற்காடு, ராணிப்பேட்டை, வாலாஜா, ஆகிய இடங்களில் வாக்கு சேகரித்தார்.

    ஆற்காட்டில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-

    ஆற்காட்டில் புதிய பஸ் நிலையம், காவனூர் மருத்துவமனை, வணிகவளாகம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளது.

    சோளிங்கர் பனப்பாக்கத்தில் 400 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் சிப்காட் தொழிற்சாலை கூடிய விரைவில் திறக்கப்படும்.

    திண்டிவனம்-நகரி ரெயில் பாதை விரைந்து அமைக்கப்படும், விளாப்பாக்கம் கூட்டுறவு வங்கி, ஆற்காட்டில் அரசு கல்லூரிகள் அமைக்கப்படும்.

    மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்காததை கேட்டால் மத்திய அரசு நிதியில்லை என்று சொல்கிறது. ஆனால் எடப்பாடி பழனிசாமிக்கு கோபம் வருகிறது.

    நாம் கட்டும் வரி ஒரு ரூபாயில் 29 பைசா தருவதால் மோடி பிரதமர் அல்ல மிஸ்டர் 29 பைசா.

    கவர்னர் ஆர்.என்.ரவி அல்ல, ஆர்.எஸ்.எஸ்.ரவி, வின்னர் படத்தில் வரும் கைப்புள்ள கதாப்பாத்திரம் போன்றவர் கவர்னர் ஆர்.என்.ரவி.

    தமிழ்நாட்டின் பெயரை மாற்றவும், தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை இசைப்பதை தடுக்கவும் முயற்சித்தவர் கவர்னர்.

    இவ்வாறு அமைச்சர் உதயநிதி பேசினார்.

    உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரசார கூட்டத்தில் இந்தியா கூட்டணி கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

    • 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நாளை தொடங்கி ஏப்ரல் 8-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
    • இத்தேர்வை 9.38 லட்சம் மாணவ, மாணவிகள் எழுத உள்ளனர்.

    தமிழகத்தில் அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நாளை தொடங்குகிறது. இத்தேர்வை 9.38 லட்சம் மாணவ, மாணவிகள் எழுத உள்ளனர்.

    10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நாளை தொடங்கி ஏப்ரல் 8-ம் தேதி வரை நடைபெற உள்ளது. முதல் நாளான நாளை, தமிழ் உள்ளிட்ட மொழிப் பாடங்களுக்கான தேர்வு நடைபெறுகிறது.

    இந்நிலையில், பொதுத்தேர்வு எழுதும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ஆளுநர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    நாளை 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் அனைத்து மாணவர்களுக்கும் எனது நல்வாழ்த்துக்கள்! அன்புள்ள மாணவர்களே, தேர்வுகளை நம்பிக்கையுடன் அணுகுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    தேர்வு மையங்களுக்கு முன்கூட்டியே வந்து, வினாத்தாள்களை விடாமுயற்சியுடன் படித்துவிட்டு, முதலில் எளிதான கேள்விகளுடன் தொடங்கவும். உங்கள் ஆரோக்கியத்தை நன்கு கவனித்துக் கொள்ளுங்கள். சில கேள்விகள் சவாலாகத் தோன்றினால் பீதி அடைய வேண்டாம்; பதில்கள் பல சமயங்களில் ஒரு மனதைக் கொண்டு வரும்.

    அன்பான பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களே, இந்த நேரத்தில் உங்கள் விலைமதிப்பற்ற உணர்ச்சிபூர்வமான ஆதரவு மற்றும் வழிகாட்டுதல் நம் மாணவர்களுக்கு மிகவும் முக்கியமானது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×