என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Govt Jobs"
- வெளிப்படைத்தன்மை மற்றும் பாகுபாடு இல்லாதது பொது ஆட்சேர்ப்பு செயல்முறையின் தனிச்சிறப்பாக இருக்க வேண்டும்.
- தேர்வு விதிகள் தன்னிச்சையாக இருக்கக் கூடாது. அரசியலமைப்பின் 14-வது பிரிவின்படி இருக்க வேண்டும்.
அரசு வேலைக்கான ஆட்சேர்ப்பு தொடர்பான வழக்கு இன்று தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான ஐந்து நீதிபகள் கொணட பெஞ்சு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசு வேலைக்கான ஆட்சேர்ப்பு விதியை பாதி வழியில் மாற்ற முடியாது. அதாவது ஆட்சேர்ப்புக்கான நடைமுறைகள் தொடங்கியபின் பரிந்துரைக்கப்படாவிடில் மாற்ற முடியாது என நீதிபதிகள் ஒருமித்த கருத்து அடிப்படையில் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் தேர்வு விதிகள் தன்னிச்சையாக இருக்கக் கூடாது. அரசியலமைப்பின் 14-வது பிரிவின்படி இருக்க வேண்டும் என பெஞ்ச் தெரிவித்துள்ளது.
வெளிப்படைத்தன்மை மற்றும் பாகுபாடு இல்லாதது பொது ஆள்சேர்ப்பு செயல்முறையின் தனிச்சிறப்பாக இருக்க வேண்டும் என்றும், நடுநிலையில் விதிகளை மாற்றுவதால் விண்ணப்பம் செய்தவர்கள் ஆச்சரியப்படக்கூடாது எனவும் பெஞ்ச் தெரிவித்துள்ளது.
- ஓபிசி கிரீமி லேயர் வருமான உச்சவரம்பு வருடத்துக்கு ரூ.8 லட்சம் எனவும் அதிகரிகரிக்கப்பட்டுள்ளது.
- அரியானாவில் சட்டமன்றத் தேர்தல் வர உள்ள நிலையில் அரசின் இந்த முடிவை முக்கியத்துவம் வாய்ந்த நகர்வாக பார்க்கமுடிகிறது.
அரியானா மாநிலத்தில் அரசுப் பணிகளில் சேர்வதற்கான ஓபிசி இட ஒதுக்கீட்டை ஆளும் பாஜக அரசு அதிரடியாக அதிகரித்துள்ளது. குரூப் A மற்றும் குரூப் B பணிகளில் சேர்வதற்கான இடஒதுக்கீடு 15 சதவீதத்தில் இருந்து 27 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் ஓபிசி கிரீமி லேயர் வருமான உச்சவரம்பு வருடத்துக்கு ரூ.8 லட்சம் எனவும் அதிகரிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பை வெளியிட்டு பேசிய அம்மாநில முதல்வர் நயாப் சிங் சைனி, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஓபிசி பிரிவினரின் நலனை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்த்தவர்கள் குரூப் A மற்றும் B பணிகளில் பின்தங்கியுள்ள நிலையில் அவர்களுக்கென மாநிலம் முழுவதும் சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படும் என்றும் அரியானா அரசு அறிவித்துள்ளது.
இந்த வருட இறுதியில் அரியானாவில் சட்டமன்றத் தேர்தல் வர உள்ள நிலையில் அரசின் இந்த முடிவை முக்கியத்துவம் வாய்ந்த நகர்வாக பார்க்கமுடிகிறது. மாநிலத்தில் இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பை அதிகரித்து முன்னேற்றப் பணிகளில் கவனம் செலுத்தி, ஏழைகள், விவசாயிகள் மற்றும் பெண்களின் நலனில் அக்கறை கொண்ட அரசாக இருந்துவருவதால் தாங்கள் தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடிப்போம் என்று முதல்வர் சைனி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
முன்னதாக புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து நடந்த போராட்டங்களில் அரியானா விவசாயிகள் அதிகளவில் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- குரூப்-பி மற்றும் குரூப்-சி நிலையில், 7,500-க்கும் மேற்பட்ட பணிக்காலியிடங்களை அறிவிக்கப்பட்டுள்ளது.
- ஆன்லைனில் கட்டணம் செலுத்த கடைசி நாள் 4.5.2023 ஆகும்.
தென்காசி:
தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மத்திய அரசு பணியாளர்கள் தேர்வாணையம் ஒருங்கிணைந்த பட்டதாரி நிலையிலான தேர்வு தொடர்பான அறிவிப்பினை கடந்த 3-4-2023 அன்று வெளியிட்டுள்ளது. மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள், துறைகள், நிறுவனங்கள் மற்றும் பல்வேறு அரசியலமைப்பு சார்ந்த அமைப்புகள், சட்டப்பூர்வ அமைப்புகள், தீர்ப்பாயங்கள் போன்றவற்றில் உள்ள குரூப்-பி மற்றும் குரூப்-சி நிலையில், 7,500-க்கும் மேற்பட்ட பணிக்காலியிடங்களை அறிவித்துள்ளது.
இத்தேர்வில் தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம். பணியிடங்களின் விவரம், வயது வரம்பு, தேவையான கல்வித்தகுதி, செலுத்த வேண்டிய கட்டணம், தேர்வு திட்டம், விண்ணப்பிக்கும் முறை போன்ற விவரங்கள் ஆள்சேர்ப்பு அறிவிப்பில் விரிவாக கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த விவரங்கள் https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/noticeCG LE03042023.pdf என்ற இணையதள முகவரியிலும் உள்ளது.
விண்ணப்பிக்க கடைசி நாள்
இந்த பணிக்காலியிடங்களுக்கு www.ssc.nic.in என்ற பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். கணினி அடிப்படையிலான இத்தேர்வுகளுக்கு உரிய கட்டணத்துடன் இணைய வழியாக விண்ணப்பிக்க கடைசி நாள் 3.5.2023 மற்றும் ஆன்லைனில் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி நாள் 4.5.2023 ஆகும்.
தென் மண்டலத்தில், கணினி அடிப்படையிலான தேர்வு ஜூலை 2023ல் ஆந்திரபிரதேச மாநிலத்தில் 10 மையங்களிலும், புதுச்சேரியில் 1 மையத்திலும், தமிழ்நாட்டில் 7 மையங்களிலும், தெலுங்கானா மாநிலத்தில் 3 மையங்களிலும் ஆக மொத்தம் 21 மையங்களில் நடைபெற உள்ளது.
தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டங்களில் பணியாளர் தேர்வாணைய போட்டித் தேர்வுகளுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நேரடியாக நடத்தப்பட உள்ளன.
பயிற்சி வகுப்புகள்
இத்தேர்விற்கான பாடத்திட்டங்கள் மற்றும் பாடக்குறிப்புகள் தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் மெய்நிகர் கற்றல் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்த இணையதளத்தில் TN Career Services Employment மற்றும் அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியின் AIM TN என்ற யூ-டியூபில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்த தேர்விற்கான காணொளிகளை கண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். எனவே, இத்தேர்விற்கு விண்ணப்பித்த மற்றும் விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் உரிய மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை தொடர்பு கொண்டு இப்பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- நடப்பு நிகழ்வுகள், பாடநூல்கள் பழைய வினாத்தாள்கள், மாதிரி தேர்வுகள், பதிவேற்றம்.
- போட்டித்தேர்வர்கள் மெய்நிகர் கற்றல் வலைதளத்தில் சுயவிவரங்களை பதிவு செய்ய வேண்டும்.
சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் சு. அமிர்த ஜோதி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் தொகுதி – I , தொகுதி – II/II-A , தொகுதி – IV/VAO மற்றும் தொகுதி – VII/VIII ஆகிய தேர்வுகளுக்கும் மேலும் மத்திய அரசால் நடத்தப்படும் IBPS, SSC, RRB, INDIAN POSTAL SERVICE,UPSCதேர்வுகளுக்கும் பாடத்திட்டங்கள் மற்றும் நடப்பு நிகழ்வுகள், பாடநூல்கள் பழைய வினாத்தாள்கள், மாதிரி தேர்வுகள், கேள்வி & பதில்கள் ஆகியன https://tamilnaducareerservices.tn.gov.in வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கு தயாராகும் போட்டித்தேர்வர்கள் Virtual Learning Portal - Tamil Nadu | Login என்ற மெய்நிகர் கற்றல் வலைதளத்தில் (Virtual Learning Portal) தங்களைப் பற்றிய விவரங்களை உள்ளீடு செய்து, இவ்வலைதளத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர், சு. அமிர்த ஜோதி தெரிவித்துள்ளார்.
- மத்திய அரசு பணிக்கான தேர்வில் சேலம், நாமக்கல் பட்டதாரிகள் தேர்ச்சி.
- பல்வேறு அரசு துறைகளில் பட்டப்படிப்பு தரத்திலான காலி பணியிடங்களை நிரப்புவதற்கான பேஸ்-9 தேர்வு 2021 அறிவிப்பு கடந்த ஆண்டு வெளியிட்டது.
சேலம்:
இந்திய அரசு பணியாளர் தேர்வாணையம் பல்வேறு அரசு துறைகளில் பட்டப்படிப்பு தரத்திலான காலி பணியிடங்களை நிரப்புவதற்கான பேஸ்-9 தேர்வு 2021 அறிவிப்பு கடந்த ஆண்டு வெளியிட்டது.
பட்டதாரிகளுக்கான கணினி அடிப்படையிலான இந்த தேர்வு கடந்த பிப்ரவரி மாதம் 2-ந்தேதி முதல் 10-ந்தேதி வரையும் மற்றும் மார்ச் மாதம் 14-ந்தேதி முதல் 16-ந்தேதி வரையும் நடைபெற்றது.
4 லட்சம் பேர் இந்தியா முழுவதும் 4 லட்சத்து 27 ஆயிரத்து 536 பேர் இந்த தேர்வை எழுதினர். குறிப்பாக சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, கரூர், ஈரோடு, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் வசித்து வரும் பட்டதாரிகள், முதுநிைல பட்டதாரிகள் என ஏராளமானோர் எழுதினர்.
இந்த நிலையில் பேஸ்-9 தேர்வு முடிவு வெளியாகி உள்ளது. அதில் கட் ஆப் மதிப்பெண் மற்றும் தகுதியான தேர்வர்கள் மற்றும் தேர்ச்சி பெறாதவர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளன. ெமாத்தம் 14 ஆயிரத்து 345 பேர் அடுத்த கட்ட நேர்முக தேர்வுக்கு தகுதி பெற்றுள்ளனர்.
குறிப்பாக பட்டியலி னத்தவர் -2306 பேர், பழங்குடியினர் -1140 , இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் - 3165 , பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் -1014, பொதுப்பிரிவு- 6424, இ.எஸ்.எம்.-174, ஓ.எச்-68, எச்.எச்-19, வி.எச்-29, இதர மாற்றுத்திறனாளிகள் -6 என 14 ஆயிரத்து 345 பேர் தேர்வு பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். இதில் சேலம், நாமக்கல் மற்றும் பக்கத்து மாவட்டங்களை சேர்ந்த பட்டதாரிகள் பலர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் அனைத்து துணை ஆவணங்களின் நகலை கையோப்பம் போட்டு சமர்ப்பிக்க வேண்டும். கல்வித் தகுதி, அனுபவம், வகை, வயது, வயது தளர்வு, முதலியவற்றை ஆன்லைன் விண்ணப்பபடிவத்தை பிரிண்ட் அவுட் எடுத்து அந்தந்த பிராந்திய அலுவலகங்களுக்கு வருகிற 22-ந்தேதி விரைவு தபால் வழியாக மட்டுேம அனுப்ப வேண்டும்.
உறையின் மேல் பகுதியில் "பட்டதாரி மற்றும் அதற்கு மேல் நிலை" மற்றும் வகை எண் எழுத வேண்டும். ஒரு விண்ணப்பதார் 3 வகை பதவிகளுக்கு விண்ணப்பித்திருந்தால், ஒவ்வொரு பதவிகளுக்கு தனித்தனியாக சமர்ப்பிக்க வேண்டும் என தேர்வாணையம் தெரிவித்துள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்