என் மலர்
நீங்கள் தேடியது "GRAM SABHA MEETING"
- அரியலூர் மாவட்டத்தில் உள்ள 201 ஊராட்சிகளிலும் 01.11.2022 உள்ளாட்சிகள் தினத்தன்று கிராம சபை கூட்டம் நடைபெறவுள்ளது
- சமுதாய அமைப்பு உறுப்பினர்கள், மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் அதிகளவில் கலந்து கொண்டு முழு ஒத்துழைப்பு வழங்குமாறு மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.
அரியலூர் :
அரியலூர் மாவட்டத்தில் உள்ள 201 ஊராட்சிகளிலும் 01.11.2022 உள்ளாட்சிகள் தினத்தன்று கிராம சபை கூட்டம் நடைபெறவுள்ளது.இதில் ஆணையர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி த்துறை சென்னையிலிருந்து பெறப்பட்ட கூட்டப் பொருட்கள் மற்றும் இதர கூட்டப் பொருட்கள் விவாதி க்கப்படும்.
இக்கிராம சபை கூட்டத்தில் மாவட்டத்தின் அனைத்து த்துறை அலுவலர்கள், அந்தந்த பகுதிகளில் உள்ள மக்கள் பிரதிநிதிகள், தன்னார்வலர்கள், சமுதாய அமைப்பு உறுப்பினர்கள், மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் அதிகளவில் கலந்து கொண்டு முழு ஒத்துழைப்பு வழங்குமாறு மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.
- ராமநாதபுரம் மாவட்டத்தில் 429 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் 1-ந் தேதி நடக்கிறது.
- பொதுமக்கள் தாமாகவே முன்வந்து கொரோனா தடுப்பு வழிமுறைகளை கடைபிடித்து இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு தங்கள் கருத்துகளை பதிவு செய்யலாம்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவித்ததாவது:-
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 429ஊராட்சிகளிலும் உள்ளாட்சிகள் தினத்தை முன்னிட்டு வருகிற 1-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணிக்கு அரசு விதித்துள்ள கொரோனா முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு வழிமுறைகளுடன் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை ஆணையரால் தெரிவிக்கப்பட்டுள்ள வழிமுறைகளையும் கடைபிடித்து கிராம சபை கூட்டம் நடத்த வேண்டும்.
இந்த கூட்டத்தில், முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்தல், கிராம ஊராட்சியில் சிறப்பாக பணி புரிந்த ஊழியர்களை சிறப்பித்தல், கிராம ஊராட்சியில் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கும் மகளிர் சுய உதவிக் குழுக்களை கவுரவித்தல், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், கலைஞர் வீடு வழங்கும் திட்ட கணக்கெடுப்பு, ஜல் ஜீவன் இயக்கம், மக்கள் திட்டமிடல் இயக்கம், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், இணையவழி வீட்டுவரி வரி செலுத்துதல், மகளிர் சுய உதவிக் குழு உருவாக்குதல், பண்ணை மற்றும் பண்ணை சாரா திட்ட இனங்கள், மக்கள் நிலை ஆய்வு, சுகாதாரம், மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதித் திட்டம், கலைஞர் வீட்டு வசதித் திட்ட பயனாளிகள் தேர்வு செய்தல் மற்றும் இதர பொருட்கள் குறித்து விவாதிக்க அரசு தெரிவித்துள்ளது.
பொதுமக்கள் தாமாகவே முன்வந்து கொரோனா தடுப்பு வழிமுறைகளை கடைபிடித்து இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு தங்கள் கருத்துகளை பதிவு செய்யலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் 11-ன் கீழ் ஊராட்சிகளில் தேர்வு செய்யப்பட்டுள்ள பணிகளின் முன்னேற்ற விவரம் உள்ளிட்ட பல்வேறு அறிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது
- நவம்பர் 1-ந்தேதி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் பல்வேறு துறைகளில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்த கண்காட்சியும் நடைபெற உள்ளது.
தென்காசி:
தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு நவம்பர் 1-ந்தேதி காலை 11 மணியளவில் கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது.
இக்கிராமசபை கூட்டத்தில் முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்தல், கிராம சபை ஊராட்சியில் சிறப்பாக பணிபுரிந்த ஊழியர்களை சிறப்பித்தல், கிராம ஊராட்சியில் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் மகளிர் சுய உதவி குழுக்களை கவுரவித்தல், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் 2022-23-ம் ஆண்டு அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் 11-ன் கீழ் ஊராட்சிகளில் தேர்வு செய்யப்பட்டுள்ள பணிகளின் முன்னேற்ற விவரம்,கலைஞர் வீடு வழங்கும் திட்ட கணக்கெடுப்பு, ஜல் ஜீவன் இயக்கம், மக்கள் திட்டமிடல் இயக்கம், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், இணைய வரி, வீட்டு வரி-சொத்து வரி செலுத்துதல்,
மகளிர் சுய உதவி குழுக்கள் உருவாக்குதல், 2021-22 மற்றும் 2022 -23 ஆகிய ஆண்டுகளில் செயல்படுத்தப்படும் பண்ணை மற்றும் பண்ணை சாரா திட்ட இனங்களில் மேற்கொள்ளப்பட்ட நிதி செலவின் அறிக்கை, பயனாளிகள் விவரம் மற்றும் நிதி பயன்பாடு குறித்த அறிக்கை,மக்கள் நிலை ஆய்வு பட்டியல், விடுபட்ட புதிய இலக்கு, மக்கள் குடும்பங்களை சேர்த்தல் மற்றும் இதர பொருட்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.
மேலும் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு நவம்பர் 1-ந்தேதி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் பல்வேறு துறைகளில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்த கண்காட்சியும் நடைபெற உள்ளது.
கிராம ஊராட்சிகளில் நடைபெறும் கிராம சபை கூட்டங்களிலும், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் கண்காட்சியிலும் அனைத்து பொது மக்களும் கலந்து கொண்டு பயனடையுமாறு மாவட்ட கலெக்டர் ஆகாஷ் கேட்டுக் கொண்டுள்ளார்.
- பொறுப்பு அலுவலர் மூலம் திட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கப்படும்.
- பயனடைந்த விவசாயிகளின் விபரம் பார்வைக்கு வைக்கப்படும்.
நவம்பர் மாதம் 1-ந்தேதி (நாளை) உள்ளாட்சிகள் தினம் கொண்டாடப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. அதையொட்டி அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டங்கள் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழக வேளாண் துறை சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
தமிழ்நாடு அரசின் அறிவிப்பின்படி, நவம்பர் ஒன்றாம் தேதி நடத்தப்படும் கிராம சபைக் கூட்டங்களில் வேளாண்மை-உழவர் நலத் துறை சார்பாக ஒவ்வொரு கிராம பஞ்சாயத்துக்கும் ஒரு பொறுப்பு அலுவலர் நியமிக்கப்பட்டு துறையின் திட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கப்படும்.
மேலும், முக்கிய தொழில்நுட்பங்கள், அரசின் திட்டங்கள் குறித்த விவரங்களை விளக்கும் வகையில் விளம்பரப் பதாகைகள் வைக்கப்படுவதுடன் துண்டு பிரசுரங்களும் விவசாயிகளுக்கு விநியோகிக்கப்படும். நடப்பு ஆண்டில் பல்வேறு திட்டங்களில் பயனடைந்த விவசாயிகளின் விபரம் கிராம வாரியாக தயாரிக்கப்பட்டு அக்டோபர் இரண்டாம் தேதியன்று நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டது.
அக்டோபர் இரண்டாம் தேதிக்குப் பின் வேளாண் - உழவர் நலத்துறையின் திட்டங்களில் பயனடைந்த விவசாயிகளின் விபரமும், நவம்பர் ஒன்றாம் தேதியன்று நடைபெறும் கிராம சபைக்கூட்டத்தில் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படும். எனவே,கிராம சபைக் கூட்டங்களில் அனைத்து விவசாயிகளும் திரளாகப் பங்கேற்று பயனடையுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 121 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நாளை நடக்கிறது.
- உள்ளாட்சி தினத்தையொட்டி நடைபெறுகிறது
பெரம்பலூர்
தமிழக அரசின் உத்தரவின்படி உள்ளாட்சி தினத்தையொட்டி நாளை (செவ்வாய்க்கிழமை) பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 121 கிராம ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம், அந்தந்த ஊராட்சி மன்ற தலைவர்களால் நடத்தப்பட உள்ளது. இதில் துணைத்தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள் ஆகியோர் கிராம சபை கூட்டத்தில் தவறாது கலந்து கொண்டு, கிராம மக்களுக்கு என்னென்ன தேவை என்பதை கேட்டறிதல், அரசு நலத்திட்டங்களை கூட்டத்தில் வழங்குதல், அரசு நிர்வாகத்தில் உள்ள குறைபாடுகளை மக்களிடையே கேட்டறிய வேண்டும். மேலும், கிராம சபை கூட்டத்தில் கூட்டப்பொருள்கள் பற்றி விவாதிக்க வேண்டும். கிராம சபை கூட்டத்தில் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் பங்கேற்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அனைத்து துறை வாரியான அலுவலர்கள் தவறாது கிராம சபை கூட்டங்களில் கலந்து கொள்வதோடு, துறை தொடர்பான திட்டங்கள் பொதுமக்கள் நன்கு அறியும் வகையில் எடுத்துக் கூறிட வேண்டும். கிராம சபை கூட்டம் நல்ல முறையில் நடைபெறுவதை கண்காணிக்க ஒவ்வொரு ஊராட்சிக்கும் சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலரால் (கிராம ஊராட்சிகள்) பற்றாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். வட்டாரம் வாரியாக மாவட்ட நிலை அலுவலர்கள், மண்டல அலுவலர்களாக கிராம சபை கூட்டம் நடைபெறுவதை மேற்பார்வையிட நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே கிராம சபை கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளும், பொதுமக்களும் கலந்து கொண்டு கிராம ஊராட்சிகளின் வெளிப்படையான நிர்வாகத்திற்கு வழிவகுத்து தக்க ஒத்துழைப்பு தர வேண்டும் என்று கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா தெரிவித்துள்ளார்."
- கீழக்கோட்டை கிராமத்தில் புதியபள்ளி கட்டிடம் கட்ட கிராமசபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
- கரிசல்பட்டி கிராமத்தில் கிராமசபை கூட்டம் தலைவர் கோட்டூர் குருவுலட்சுமி சின்னவெள்ளை தலைமையில் நடந்தது.
திருமங்கலம்
திருமங்கலம் அடுத்துள்ள கீழக்கோட்டை ஊராட்சியில் கிராமசபை கூட்டம் தலைவர் காளம்மாள் தனுஷ்கோடி தலைமையில் நடைபெற்றது. துணைத்தலைவர் சுப்பு லட்சுமி முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக திருமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலக ஓவர்சீயஸ் ஹேமசுதா, வேளாண்மைத்துறை சார்பில் சேதுராமன், வி.ஏ.ஓ. சுரேந்திரன், முன்னாள் பஞ்சாயத்து தலைவர் தனுஷ்கோடி ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் அரசு அறிவித்துள்ளபடி கிராம தூய்மை பாதுகாப்பாளர்கள் கவுரவிக்கப்பட்டனர். கீழக்கோட்டைக்கான ரேஷன்கடை கிரியகவு ண்டன்பட்டி கிராமத்தில் உள்ளது. அதனை பிரித்து கீழக்கோட்டையில் தனி ரேஷன்கடை அமைக்க வேண்டும், ஊராட்சி பள்ளியின் கட்டிடம் சேதமடைந்துள்ளது. அதனை அகற்றிவிட்டு புதியகட்டிடம் கட்ட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்ட முடிவில் ஊராட்சி செயலர் குமரேசன் நன்றி தெரிவித்தார். திருமங்கலத்தினை அடுத்துள்ள கரிசல்பட்டி கிராமத்தில் கிராமசபை கூட்டம் தலைவர் கோட்டூர் குருவுலட்சுமி சின்னவெள்ளை தலைமையில் நடந்தது. கூட்டத்தில் கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய கிராம தூய்மை பாதுகாவலர்கள், துப்பரவு பணியாளர்கள் கவுரவிக்கப்பட்டனர். இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் துணைத்த லைவர் சித்ராதேவி மற்றும் வார்டு உறுப்பினர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர். ஊராட்சி செயலாளர் மலர்விழி நன்றி கூறினார்.
- சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள இலுப்பக்குடி கிராம சபை கூட்டம் நடந்தது.
- கிராமத்தின் பல்வேறு பகுதி மக்களும் அடிப்படை தேவைகள் குறித்து கோரிக்கை விடுத்தனர்.
காரைக்குடி
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள இலுப்பக்குடி கிராமத்தில் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் வைரமுத்து அன்பரசன் தலைமையில் நடந்தது. உதவி திட்ட அலுவலர் (வீடுகள் மற்றும் சுகாதாரம்) விசாலாட்சி, வட்டார வளர்ச்சி அலுவலர் கேசவன் முன்னிலை வகித்தனர். பொன்நகர், திருமலை நகர் பகுதிகளில் வசிப்பவர்கள் சாலை வசதி மற்றும் தெருவிளக்கு, நியாய விலைக் கடை அமைக்கக்கோரி தலைவரிடம் மனு கொடுத்தனர்.வேளாண்மை உதவி இயக்குநர் சண்முக ஜெயந்தி, வேளாண்துறை சார்ந்த அரசின் நலத்திட்டங்களை எடுத்துக் கூறினார். கிராமத்தின் பல்வேறு பகுதி மக்களும் அடிப்படை தேவைகள் குறித்து கோரிக்கை விடுத்தனர்.
இலுப்பக்குடி அரசு பள்ளி தலைமையாசிரியர் பேசுகையில், பள்ளிக்கு கணிப்பொறி வாங்கித்தந்த யூனியன் தலைவர் சரண்யா செந்தில்நாதன் மற்றும் பள்ளி வளர்ச்சிக்கு பல்வேறு உதவிகளை செய்துவரும் தலைவர் வைரமுத்து அன்பரசன் உள்ளிட்ட பலருக்கு நன்றி தெரிவித்ததுடன், பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைத்துதர கோரிக்கை விடுத்தார். கொரோனா காலத்தில் சிறப்பாக செயல்பட்ட தூய்மை பணியாளர்கள் கவுரவிக்கப்பட்டனர். தலைவர் வைரமுத்து அன்பரசன் பேசுகையில், மக்களின் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும்.வடகிழக்கு பருவமழை வர இருப்பதால் அனைத்து பகுதிகளிலும் நீர் தேங்காமல் இருக்கவும், கண்மாய் கரைகளை பலப்படுத்தவும் தேவையானவற்றை செய்து வருகிறோம் என்றார்.
சாக்கோட்டை மேற்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் செந்தில்நாதன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் அன்பரசன், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், மகளிர் குழு உறுப்பினர்கள், கிராம நிர்வாக அலுவலர் விக்னேஷ், பொதுமக்கள் கலந்து கொண்டனர். ஊராட்சி செயலர் வீரப்பன் நன்றி கூறினார்.
- சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே காமலாபுரம் கிராம சபை கூட்டத்தில் மக்கள் பலரும் கலந்துகொண்டனர்.
- இதுவரை அந்த தீர்மானங்கள் நிறைவேறவில்லை என்று கூறி தீர்மான நகலை கிழித்து எறிந்து விட்டு கூட்டத்தை விட்டு சென்றார்.
ஓமலூர்:
ஓமலூர் ஊராட்சி ஒன்றியத்தில் 33 கிராம ஊராட்சிகள் உள்ளன. இந்த கிராமங்களில் உள்ளாட்சி தினத்தை சிறப்பாக கொண்டாடி கிராம சபை கூட்டங்கள் நடத்தபட்டது. கோட்டைமாரியம்மன்கோவில் ஊராட்சியில் நடைபெற்ற கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் நிர்மலா முத்துக்குமார் தலைமை வகித்தார். மாவட்ட கவுன்சிலர் சம்பு சண்முகம் முன்னிலை வகித்தார். கோட்டமேட்டுபட்டியில் ஊராட்சி மன்ற தலைவர் கலைச்செல்வி தலைமையிலும், வெள்ளைக்கல்பட்டி தலைவர் கண்ணன் தலைமையிலும் நடைபெற்ற கூட்டத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்ட பணிகளின் முன்னேற்றம் குறித்து மக்களுக்கு தெரிவிக்கப்பட்டது.
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே காமலாபுரம் கிராம சபை கூட்டத்தில் மக்கள் பலரும் கலந்துகொண்டனர். இதில், மதுக்கடையை அகற்ற கோருதல் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டது. இதில், கலந்துகொண்ட முன்னாள் ராணுவ வீரர் முருகன் என்பவர், காமலாபுரம் கிராமத்தில் 3 அரசு டாஸ்மாக் மதுக்கடைகள் செயல்பட்டு வருகிறது. இந்த கடைகளால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
அரசின் அனைத்து விதிகளையும் மீறி செயல்படும் இந்த மதுக்கடைகளை அகற்ற வேண்டும் என்று தொடர்ந்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு வருகிறது. ஆனால், இதுவரை அந்த தீர்மானங்கள் நிறைவேறவில்லை என்று கூறி தீர்மான நகலை கிழித்து எறிந்து விட்டு கூட்டத்தை விட்டு சென்றார். இதேபோன்று பெரியேரிப்பட்டி ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்திற்கு 11-வது வார்டு பெண் உறுப்பினர் பவித்ரா, விளக்குகளை அணிந்துகொண்டும், வாயை கட்டிக்கொண்டும் நூதன வேடமணிந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.
தனது வார்டு பகுதியான தன்டானூர் பகுதிக்கு தெரு விளக்குகள் அமைத்து கொடுக்கவில்லை. தனது வார்டு வேண்டுமென்றே புறக்கணிக்கப்படுகிறது என்றும் கூறினார். தொடர்ந்து வாயை கட்டிக்கொண்டு கூட்டத்திற்கு வந்த அவர், தன்னை புறக்கணிக்கும் நிர்வாகத்தை கண்டிப்பதாக கூறி, கூட்டம் நடக்கும் இடத்தில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினார். இதனால், கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதேபோன்று பல்வேறு இடங்களிலும் தீர்மானங்கள் நிறைவேற்றுவது கண்துடைப்பு என்று கூறி வார்டு உறுப்பினர்கள் பலரும் கூட்டத்தை புறக்கணித்தனர்.
- மேலூர் நகராட்சிக்கு உட்பட்ட 27 வார்டுகளிலும் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது.
- தி.மு.க. நிர்வாகிகளை நியமித்ததை கண்டித்து கிராம சபை கூட்டத்தை புறக்கணித்தார்.
மேலூர்
மேலூர் நகராட்சிக்கு உட்பட்ட 27 வார்டுகளிலும் உள்ளாட்சி தினத்தைமுன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது. நகர்மன்ற தலைவர் முகமது யாசின் தலைமை தாங்கினார்.ஆணையாளர் ஆறுமுகம், பொறியாளர் பட்டுராஜன், சுகாதார அலுவலர் மணிகண்டன், நகர் அமைப்பு ஆய்வாளர் சரவணன் ஆகியோர் கலந்து கொண்டனர். மலம்பட்டி, முகமதியாபுரம், மில்கேட், கலைஞர் நகர் ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தெரு விளக்கு, குடிநீர் வசதி, மழைநீர் வடிகால் வசதி, குடிநீர் மேல்நிலைத் தொட்டி வசதி, பொது சுகாதார கட்டிட வசதி, ரேசுன் கடை வசதி, அங்கன்வாடி கட்டிடம் ஆகிய வசதிகளை கேட்டு மனு கொடுத்தனர். இதில் துணைத் தலைவர் இளஞ்செழியன், நகர் மன்ற உறுப்பினர்கள் பாண்டி, ஆனந்த், அறிவழகன், அருண் சுந்தர பிரபு, ரமேஷ், கமால் மைதீன், செல்வராஜ், மனோகரன், கலைச்செல்வி செந்தில்குமார், வசந்தா ராஜா, செல்வி மகாதேவன், ஜெயஸ்ரீ மகேந்திரன், மல்லிகா தெய்வேந்திரன், சைபுனிசா அலாவுதீன், ரிம்யா செந்தில், பிரேமா பழனிச்சாமி, சத்யா மந்தைச்சாமி, நகராட்சி சுகாதார ஆய்வாளர் சரவணன், மற்றும் நகராட்சி பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
23-வது வார்டு நகர் மன்ற அ.தி.மு.க. உறுப்பினர் திவாகர் தமிழரசன் தனது பகுதியில் நடந்த கிராம சபை கூட்டத்தில் தி.மு.க. நிர்வாகிகளை நியமித்ததை கண்டித்து கிராம சபை கூட்டத்தை புறக்கணித்தார்.
- பரமக்குடி பகுதியில் நடந்த கிராம சபை கூட்டத்தில் முருகேசன் எம்.எல்.ஏ. பங்கேற்றார்.
- செவ்வூர் கிராம ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் சாந்தா சின்னார் தலைமை தாங்கினார்
பரமக்குடி
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி,போகலூர், நயினார் கோவில் ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட கிராமங்களில் கிராம சபை கூட்டம் நடந்தது. பரமக்குடி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட நெல்மடூர் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் சுகன்யா சதீஷ்குமார் தலைமையில் கிராம சபை கூட்டம் நடந்தது.
பொது மக்களின் கோரிக்கைகள் பெறப்பட்டு அரசின் மூலம் நலத்திட்ட பணிகள் குறித்த கணக்கு வழக்குகள் பொதுமக்களிடம் காண்பிக்கப்பட்டது.இதில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ராமு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஊராட்சி செயலர் பெத்துக்காளை நன்றி கூறினார்.
புட்டிதட்டி ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் சரவணகுமார் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் கோவிந்தராஜ் உள்ளிட்ட ஊராட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். ஊராட்சி செயலர் ரவீந்திரன் நன்றி கூறினார்.
செவ்வூர் கிராம ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் சாந்தா சின்னார் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற துணைத் தலைவர் காளீஸ்வரர் உள்ளிட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். ஊராட்சி செயலர் முருகேசன் நன்றி கூறினார்.
மஞ்சூர் கிராம ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்மணி தலைமை தாங்கினார். துணைத்தலைவர் கலைச்செல்வி உள்ளிட்ட வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். ஊராட்சி செயலர் வடிவேல் நன்றி கூறினார்.
போகலூர் கிராம ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் கலையரசி பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற துணைத் தலைவர் லலிதா உள்ளிட்ட வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். ஊராட்சி செயலர் பழனி நன்றி கூறினார்.
அரிய குடிபுத்தூர் கிராம ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் காயத்ரி கார்த்திக் பாண்டியன் தலைமையில் கிராம சபை கூட்டம் நடந்தது. துணைத் தலைவர், வார்டு உறுப்பினர்கள் மற்றும் ஊராட்சி செயலர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பரமக்குடி ஒன்றியம் கலையூர் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் சுபேகா தலைமையில் நடந்த கிராமசபை கூட்டத்தில், பரமக்குடி எம்.எல்.ஏ. முருகேசன் கலந்து கொண்டு, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
- பரமத்தி ஊராட்சி ஒன்றியம் மாணிக்கநத்தம் ஊராட்சி சார்பில் சிறப்பு கிராம கூட்டம் நடைபெற்றது.
- கூட்டத்திற்கு ஊராட்சி தலைவர் வேலுசாமி தலைமை வகித்தார்.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பரமத்தி ஊராட்சி ஒன்றியம் மாணிக்கநத்தம் ஊராட்சி சார்பில் சிறப்பு கிராம கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஊராட்சி தலைவர் வேலுசாமி தலைமை வகித்தார். துணைத் தலைவர் வசந்தகுமாரி சரவணன் முன்னிலை வகித்தார். ஊராட்சி செயலர் உதயகுமார் வரவேற்றார். கூட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் 2023- 2024 -ம் நிதிஆண்டுக்கான வேலைக்கான பணிகள் தயாரித்து கிராம சபை கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டது. மேலும் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த கூட்டத்தில் ஊராட்சி உறுப்பினர்கள், பொதுமக்கள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் பணியாற்றும் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.
- சமூக தணிக்கை சிறப்பு கிராமசபை கூட்டங்கள் வட்டாரத்திலுள்ள கிராம ஊராட்சிகளில் நடைபெற்றது.
- ஊராட்சி மன்ற தலைவர்கள், அரசு அதிகாரிகள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பல்லடம் :
பல்லடம் வட்டாரத்திலுள்ள கிராம ஊராட்சிகளில், சமூக தணிக்கை சிறப்பு கிராமசபை கூட்டம் நடைபெற்றது.பல்லடம் அருகேயுள்ள சித்தம்பலம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் சமூக தணிக்கை சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் ஊராட்சி தலைவர் ரேவதி கிருஷ்ணமூர்த்தி, ஊராட்சி செயலர் புவனேஸ்வரி, அரசு அதிகாரிகள், வார்டு உறுப்பினர்கள், பல்லடம் மேற்கு ஒன்றிய தி.மு.க., பொறுப்பாளர் கிருஷ்ணமூர்த்தி, மற்றும் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதே போல பல்லடம் அருகே உள்ள கணபதிபாளையம் ஊராட்சியில் நடைபெற்ற சமூக தணிக்கை கிராம சபைக் கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர் நாகேஸ்வரி சோமசுந்தரம், துணை தலைவர் முத்துக்குமார், அரசு அதிகாரிகள், வார்டு உறுப்பினர்கள், பல்லடம் கிழக்கு ஒன்றிய தி.மு.க. பொறுப்பாளர் சோமசுந்தரம் மற்றும் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதே போல சமூக தணிக்கை சிறப்பு கிராமசபை கூட்டங்கள் வட்டாரத்திலுள்ள கிராம ஊராட்சிகளில் நடைபெற்றது. இதில் கரைப்புதூர் ஊராட்சியில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயந்தி கோவிந்தராஜ், செம்மிபாளையம் ஊராட்சியில் ஷிலா புண்ணியமூர்த்தி, மாதப்பூர் ஊராட்சியில் அசோக்குமார், கரடிவாவி ஊராட்சியில் ரஞ்சிதா பகவதி கிருஷ்ணன் ,கோடங்கிபாளையம் ஊராட்சியில் காவி. பழனிச்சாமி, மாணிக்காபுரம் ஊராட்சியில் நந்தினி சண்முகசுந்தரம், மல்லேகவுண்டம்பாளையத்தில் முத்துக்குமாரசாமி,பருவாய் ஊராட்சியில் ரவிச்சந்திரன்,புளியம்பட்டி ஊராட்சியில் உத்தமராஜ் உள்ளிட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள், அரசு அதிகாரிகள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.