என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Guinness World Record"

    • அதிக பார்வையாளர்கள் வருகைக்காக அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியம் கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளது.
    • இதை சாத்தியமாக்கிய ரசிகர்களுக்கு பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா நன்றி தெரிவித்துள்ளார்.

    புதுடெல்லி:

    குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் அமைந்துள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடந்த ஐபிஎல் 2022 இறுதிப்போட்டியில் குஜராத் டைட்டன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் குஜராத் அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது. இந்தப் போட்டியை பார்வையாளர்கள் அதிக அளவில் கண்டுகளித்தனர்.

    அதிக பார்வையாளர்களால் நேரில் பார்க்கப்பட்ட போட்டிக்காக குஜராத்தின் நரேந்திர மோடி மைதானம் கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளது. அங்கு நடைபெற்ற ஐபிஎல் 2022 இறுதிப்போட்டியை ஒரு லட்சத்து 1 ஆயிரத்து, 566 பேர் நேரில் கண்டுகளித்தனர்.

    இந்நிலையில், பிரபல கின்னஸ் நிறுவனம் அதற்கான சான்றிதழை இன்று பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா அவர்களிடம் வழங்கியது.

    இதுதொடர்பாக, பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், கின்னஸ் உலக சாதனையைப் பெற்றதில் மிகுந்த மகிழ்ச்சியும் பெருமிதமும்... இதை சாத்தியமாக்கிய ரசிகர்களுக்கு நன்றி என பதிவிட்டுள்ளார்.

    • ஜேமி மெக்டொனால்ட் முதலாவதாக சீனாவில் உள்ள பெருஞ்சுவரை பார்வையிட்டார்.
    • சூப்பர்ஹீரோ அறக்கட்டளை என்ற தொண்டு நிறுவனத்திற்கு பணம் திரட்டுவதே இந்த பயணத்தின் நோக்கம் ஆகும்.

    லண்டன்:

    சிலர் வழக்கத்திற்கு மாறான செயல்களை செய்து தனக்கென ஒரு தனி அடையாளத்தை ஏற்படுத்திக்கொள்வதுடன், உலக சாதனைகளை ஏற்படுத்துகின்றனர். அந்த வகையில் பிரிட்டனைச் சேர்ந்த ஒருவர் உலகின் ஏழு அதிசயங்களையும் ஒரு வாரத்திற்குள் சுற்றிப் பார்த்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

    ஜேமி மெக்டொனால்ட் என்ற அந்த நபர், ஏழு நாட்களில் உலகின் அனைத்து அதிசயங்களையும் பார்வையிடும் சவாலை ஏற்று வெற்றிகரமாக முடித்துள்ளார். முதலாவதாக சீனாவில் உள்ள பெருஞ்சுவரை பார்வையிட்டார். அதன்பின்னர் இந்தியா வந்து தாஜ் மஹாலை பார்த்தார். ஜோர்டானில் உள்ள பெட்ரா நகரம், ரோமில் உள்ள கொலோசியம், பிரேசில் நாட்டில் உள்ள மீட்பர் கிறிஸ்து சிலை, பெருவில் உள்ள மச்சு பிச்சு, மெக்சிகோவில் உள்ள சிச்செனிட்சா இட்சா ஆகியவற்றை பார்வையிட்டார். இந்த ஏழு அதிசயங்களையும் சரியாக 6 நாட்கள், 16 மணி நேரம், 14 நிமிடங்களில் அவர் பார்வையிட்டுள்ளார்.

    இந்த சாதனையை செய்து முடிக்க அவர் 13 விமானங்கள், 9 பேருந்துகள், 4 ரெயில்கள், 16 டாக்சிகள் மற்றும் ஒரு டோபோக்கன் ஆகியவற்றை பயன்படுத்தி 4 கண்டங்களில் மொத்தம் 36780 கி.மீ. பயணம் செய்திருக்கிறார்.

    மெக்டோனால்டின் இந்த சாதனைப் பயணத்திற்கு டிராவல்போர்ட் என்ற நிறுவனம் ஆதரவு அளித்தது. சூப்பர்ஹீரோ அறக்கட்டளை என்ற தொண்டு நிறுவனத்திற்கு பணம் திரட்டுவதே இந்த சாதனைப் பயணத்தின் நோக்கம் ஆகும். 

    • அகற்றப்பட்ட கல், 13.372 சென்டி மீட்டர் நீளமும், 801 கிராம் எடையும் கொண்டதாக இருந்தது.
    • தற்போதைய சாதனையை கின்னஸ் உலக சாதனைக்கான நிறுவனம் உறுதி செய்தது.

    கொழும்பு:

    இலங்கையின் ராணுவ மருத்துவர்கள் குழு, உலகிலேயே அதிக எடைகொண்ட சிறுநீரக கல்லை அறுவை சிகிச்சை செய்து அகற்றி உலக சாதனை படைத்திருக்கின்றனர். இதுவரை இந்திய மருத்துவர்கள் 2004ம் வருடம் அகற்றியிருந்த கல்தான் மிகப் பெரியதாக கணக்கிடப்பட்டிருந்த நிலையில், அந்த சாதனை இப்பொழுது முறியடிக்கப்பட்டுள்ளது.

    இந்த மாத துவக்கத்தில், கொழும்புவில் உள்ள ராணுவ மருத்துவமனையில் ஒரு நோயாளிடமிருந்து அகற்றப்பட்ட கல், 13.372 சென்டி மீட்டர் நீளமும், 801 கிராம் எடையும் கொண்டதாக இருந்தது என ராணுவம் தெரிவித்துள்ளது.

    கின்னஸ் உலக சாதனை பட்டியலில், இதுவரை அகற்றப்பட்ட கற்களிலேயே, இந்தியாவில் 2004ம் வருடம் அகற்றப்பட்ட 13 சென்டி மீட்டர் நீளம் கொண்ட கல்தான் பெரியதாக பட்டியலிடப்பட்டிருந்தது. அதே போன்று, மிக அதிக எடையுள்ள கல் என 2008ம் வருடம் பாகிஸ்தானில் அகற்றப்பட்ட 620 கிராம் கல் பட்டியலிடப்பட்டுள்ளது.

    இலங்கையின் தற்போதைய சாதனையை உறுதி செய்த கின்னஸ் உலக சாதனைக்கான நிறுவனம், இலங்கையைச் சேர்ந்த கேனிஸ்டஸ் கூங்கே என்பரின் சிறுநீரகத்திலிருந்து 13.372 சென்டிமீட்டர் (5.264 இஞ்ச்) உள்ள ஒரு சிறுநீரக கல், கடந்த 1-ம் தேதி அகற்றப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது.

    ராணுவ மருத்துவமனையின் சிறுநீரகத்துறை தலைவர் டாக்டர் கே.சுதர்சன் தலைமையில், டாக்டர் பதிரத்னா மற்றும் டாக்டர் தமஷா பிரேமதிலகா ஆகியோர் அறுவை சிகிச்சையை மேற்கொண்டனர்.

    • சீனாவைச் சேர்ந்த யுஷெங் டு 3.47 வினாடிகளில் தீர்வு கண்டதே முந்தைய சாதனையாக இருந்தது.
    • கிட்டத்தட்ட இந்த புதிர் சம்பந்தமான அனைத்து சாதனைகளும் மேக்ஸ் வசமே உள்ளது.

    ஹங்கேரி நாட்டை சேர்ந்த கட்டிடக்கலை பேராசிரியர் எர்னோ ரூபிக் என்பவர் 1974ம் வருடம், "மேஜிக் கியூப்" என்று அழைக்கப்படும் ஒரு புதிர் விளையாட்டை கண்டுபிடித்தார். இது உலகம் முழுவதும் பிரபலமான, மூளைக்கு சவால் விடும் ஒரு விளையாட்டாக பார்க்கப்படுகிறது. பல்வேறு நிறங்களை உள்ளடக்கிய கன சதுர கட்டங்களை ஒரு சேர ஒழுங்குபடுத்துவதே இந்த ரூபிக் கியூப் விளையாட்டு. மாறி மாறி உள்ள கனசதுர கட்டங்களை வேகமாக ஒழுங்குபடுத்துவதில் உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த, அனைத்து வயதினரும் சாதனைகளை படைத்துவருகின்றனர்.

    அந்த வகையில், கடந்த 11ம் தேதி அமெரிக்காவின் கலிபோர்னியாவில் 3x3x3 ரூபிக்ஸ் கியூப் புதிருக்கு மிக வேகமாக தீர்வு கண்டு, "ஸ்பீட்கியூபிங் லெஜண்ட்" என்றழைக்கப்படும் அமெரிக்காவைச் சேர்ந்த மேக்ஸ் பார்க் (வயது 21) உலக சாதனை புரிந்தார்.

    இந்த வகை ரூபிக்ஸ் கியூபை சீனாவைச் சேர்ந்த யுஷெங் டு என்பவர் கடந்த 2018ம் ஆண்டில் 3.47 வினாடிகளில் தீர்வு கண்டதே உலக சாதனையாக இருந்தது. மேக்ஸ் 3.63 வினாடிகளில் தீர்வு கண்டு இரண்டாம் இடத்தில் இருந்தார். தற்போது தொடர் முயற்சிகளுக்குப் பிறகு மேக்ஸ் 3.13 வினாடிகளில் புதிருக்கு தீர்வு கண்டு முதலிடத்தைப் பிடித்தார். இதன்மூலம் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றார்.

    அவர் உலக சாதனையை முறியடித்த நிகழ்வின்போது பதிவு செய்யப்பட்ட வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வெளிவந்தன. அதில் அவரது சக கியூப் தோழர்கள் அவரை உற்சாகப்படுத்துவதைக் காணலாம்.

    ஸ்பீட்கியூபிங் போட்டிகளில் மேக்ஸ் பல சாதனைகளை படைத்துள்ளார். கிட்டத்தட்ட இந்த புதிர் சம்பந்தமான அனைத்து சாதனைகளும் அவர் வசமே உள்ளது எனலாம்.

    கின்னஸ் உலக சாதனைகள் பட்டியலின்படி 4x4x4 கியூப், 5x5x5 கியூப், 6x6x6 கியூப் மற்றும் 7x7x7 கியூப்  ஆகியவற்றிற்கான ஒற்றை-தீர்வு மற்றும் சராசரி-தீர்வு உலக சாதனைகளை மேக்ஸ் படைத்திருக்கிறார்.

    3x3x3 கியூப் புதிருக்கான சராசரி சாதனையை போலந்து நாட்டின் டைமன் கோலாசின்ஸ்கியுடன் இணைந்து தக்க வைத்திருந்தார். இதற்கு இவர் எடுத்து கொண்ட நேரம் 4.86 வினாடிகள். இந்த சாதனையை 4.69 வினாடிகளில் சீனாவைச் சேர்ந்த 9 வயது சிறுவன் யிஹெங் வாங் 2023 ஆம் ஆண்டு மார்ச் 12ஆம் தேதி முறியடித்தார்.

    ஆட்டிஸம் எனப்படும் ஒரு விதமான் மன இறுக்க நோயால் பாதிக்கபட்ட மேக்ஸிற்கு, இந்த ஸ்பீட்கியூபிங் ஒரு நல்ல சிகிச்சை  என்று அவரது பெற்றோர் தெரிவித்தனர். "ஒரு காலத்தில் மேக்ஸால் தண்ணீர் பாட்டில்களை கூட திறக்க முடியவில்லை. ஆனால் அவர் ரூபிக்ஸ் கியூப்களை தீர்ப்பதில் ஆர்வம் காட்டினார்," என்றும் அவர்கள் கூறினர்.

    • புல்வெளியில் அமர்ந்து அனைவரும் யோகாசனம் செய்து பிரமிக்க வைத்தனர்.
    • ஏறக்குறைய ஒவ்வொரு நாட்டைச் சேர்ந்தவர்களும் பங்கேற்றிருப்பதாக பிரதமர் மோடி பேசினார்.

    சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, ஐ.நா. சபை வளாகத்தில் உள்ள புல்வெளியில் இன்று பிரமாண்ட யோகாசன நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்கிக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி தலைமை தாங்கினார். இந்நிகழ்ச்சியில் ஐ.நா. உயர் அதிகாரிகள், பணியாளர்கள் மற்றும் 180க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து வந்திருந்த தூதர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டு யோகாசனம் செய்தனர்.

    மேடையில் யோகா கலைஞர்கள் யோகாசனங்களை செய்ய, புல்வெளியில் அமர்ந்து பிரதமர் மோடி உள்ளிட்ட அனைவரும் யோகாசனம் செய்து பிரமிக்க வைத்தனர்.

    இந்த யோகாசன நிகழ்ச்சியானது, கின்னஸ் சாதனை படைத்துள்ளது. அதிக நாடுகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்ற யோகா நிகழ்ச்சி என்ற உலக சாதனையை படைத்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    முன்னதாக யோகா நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, வருகை தந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். உங்கள் அனைவரையும் பார்த்ததில் மகிழ்ச்சி அடைகிறேன் என கூறிய மோடி, ஏறக்குறைய ஒவ்வொரு நாட்டைச் சேர்ந்தவர்களும் இன்று இங்கே வந்திருப்பதை பார்க்க முடிகிறது, என்றார்.

    • 15 மணி நேரம் 22 நிமிடம், 49 வினாடிகளில் அவர் 286 மெட்ரோ ரெயில் நிலையங்களையும் கடந்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
    • சான்றிதழுடன் அவரது புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    டெல்லியை சேர்ந்தவர் ஷஷாங்க் மனு. இவர் டெல்லி மெட்ரோ நிலையங்களில் அதிகமாக பயணம் செய்ய விருப்பம் கொண்டவர். இவர் கடந்த 2021-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கின்னஸ் சாதனைக்காக குறுகிய நேரத்தில் அதிக மெட்ரோ ரெயில் நிலையங்களை கடந்து சாதனை படைக்க முயற்சி செய்தார்.

    அதன்படி, அதிகாலை 5 மணிக்கு டெல்லியில் உள்ள புளூ லைன் பாதையில் தனது மெட்ரோ பயணத்தை தொடங்கினார். அன்று இரவு 8.30 மணிக்குள் 286 மெட்ரோ ரெயில் நிலையங்களை கடந்துள்ளார். அதாவது 15 மணி நேரம் 22 நிமிடம், 49 வினாடிகளில் அவர் 286 மெட்ரோ ரெயில் நிலையங்களையும் கடந்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார். இந்த சாதனை தற்போது அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பான சான்றிதழுடன் அவரது புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • முந்தைய கின்னஸ் சாதனை படைத்த நாயின் நாக்கின் அளவு மூன்று முதல் நான்கு அங்குலம் இடையில் இருந்துள்ளது.
    • முந்தைய சாதனையாளரான மோச்சியின் மரணத்தைப் பற்றி கேள்விப்பட்ட ராக்கியின் உரிமையாளர் போட்டிக்கு விண்ணப்பிக்க முடிவு செய்தார்.

    அமெரிக்காவின் இல்லினாய்ஸைச் சேர்ந்த நாய் ஒன்று, 5.6 அங்குலங்கள் நீளமான நாக்கு கொண்டுள்ளதை அடுத்து கின்னஸ் சாதனை படைத்துள்ளது.

    பிராட் மற்றும் கிரிஸ்டல் வில்லியம்ஸின் 9 வயதான பாக்ஸர் வகையை சேர்ந்த நாய் ராக்கி. இந்த நாய்க்கு வழக்கத்திற்கு மாறாக நீண்ட நாக்கு இருப்பதை உரிமையாளர்கள் அறிந்தனர். இதுகுறித்து பலரும் கருத்து தெரிவித்ததால் கின்னஸ் சாதனையில் போட்டியிட உரிமையாளர்களுக்கு உறுதிப்படுத்தியுள்ளது.

    முந்தைய சாதனையாளரான மோச்சி என்கிற நாயின் மரணத்தைப் பற்றி கேள்விப்பட்ட ராக்கியின் உரிமையாளர்கள் போட்டிக்கு விண்ணப்பிக்க முடிவு செய்தனர்.

    அப்போதுதான், முந்தைய கின்னஸ் சாதனை படைத்த நாயின் நாக்கின் அளவு மூன்று முதல் நான்கு அங்குலம் இடையில் இருப்பதாகச் சொன்னார்கள். இதை அறிந்தவுடன் ராட் மற்றும் கிரிஸ்டல் ஆகியோர் இது தங்களுக்கு கிடைத்த ஒரு அறிய வாய்ப்பாக கருதி விண்ணப்பித்தனர்.

    இதற்கான சமர்ப்பிப்பு செயல்முறை நீண்ட மற்றும் கடினமானதாக இருந்ததாகவும், போட்டிக்கு விண்ணப்பிக்கும் முன் ராக்கியின் நாக்கு அளவீடுகளை இரண்டுக்கு அல்லது மூன்று முறை சாிபார்த்து பின்னர் சமர்ப்பித்ததாகவும் உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

    இதையடுத்து, கின்னஸ் குழுவினர் தங்கள் கால்நடை மருத்துவரான டாக்டர் பெர்னார்ட்டை ராக்கியின் நாக்கை அளவீடு செய்ய அனுப்பியுள்ளனர். அளவு எடுத்த டாக்டர், "ராக்கி சாதனைக்கு தகுதியானது" என தெரிவித்தார்.

    இந்நிலையில், ராக்கி 5.6 அங்குல நீள நாக்கு கொண்ட நாய் என்கிற பட்டத்துடன் கின்னஸ் சாதனை படைத்துள்ளது.

    • ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஒரு நாய் 29 ஆண்டுகள் மற்றும் 150 நாட்கள் வாழ்ந்தது தான் உலகின் மிக அதிக வயது கொண்ட நாய் என்ற சாதனையை படைத்திருந்தது.
    • நாய் வயது முதிர்வு காரணமாக பார்வை குறைபாடு மற்றும் நடப்பதற்கு சிரமப்பட்டாலும், ஆரோக்கியமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

    பொதுவாகவே நாய்களின் ஆயுட்காலம் 10 முதல் 15 வயது வரை தான். ஆனால் போர்ச்சுகல் நாட்டை சேர்ந்த பாபி என்ற பெயரிடப்பட்ட நாய் ஒன்று 30 வருடங்கள் வாழ்ந்து கின்னஸ் சாதனை படைத்துள்ளது.

    இதற்கு முன்பு ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஒரு நாய் 29 ஆண்டுகள் மற்றும் 150 நாட்கள் வாழ்ந்தது தான் உலகின் மிக அதிக வயது கொண்ட நாய் என்ற சாதனையை படைத்திருந்தது.

    அந்த சாதனையை பாபி முறியடித்துள்ளது. இந்த நாய் வயது முதிர்வு காரணமாக பார்வை குறைபாடு மற்றும் நடப்பதற்கு சிரமப்பட்டாலும், ஆரோக்கியமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

    • எரின் ஹனிகட் என்ற 38 வயதான பெண் ஹார்மோன் சமநிலையின்மை பிரச்சனையால் அவதிப்பட்டு வந்துள்ளார்.
    • பலமுறை அகற்றியும் தாடி வளர்ந்ததால் ஒரு கட்டத்தில் அவர் தாடியை அகற்றுவதை நிறுத்தி விட்டார்.

    ஆண்கள் தாடி வளர்ப்பது பொதுவானது. அதே நேரம் பெண்கள் முகத்தில் மீசை வளர்ந்தால் சங்கடப்படுவார்கள். ஆனால் மீக நீளமான தாடிக்காக கின்னஸ் சாதனை படைத்துள்ளார் அமெரிக்க பெண் ஒருவர். எரின் ஹனிகட் என்ற 38 வயதான அந்த பெண் ஹார்மோன் சமநிலையின்மை பிரச்சனையால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் அவருக்கு ஒழுங்கற்ற மாதவிடாய், எடை அதிகரிப்பு போன்ற பிரச்சனைகளும் வந்துள்ளது. இதற்காக சிகிச்சைகள் பெற்ற நிலையிலும் தொடர்ந்து அவரது முகத்தில் தாடி வளர ஆரம்பித்தது. பலமுறை அகற்றியும் தாடி வளர்ந்ததால் ஒரு கட்டத்தில் அவர் தாடியை அகற்றுவதை நிறுத்தி விட்டார்.

    அதோடு அதனையே சாதனையாக மாற்றுவதற்கும் முடிவு செய்த அவருக்கு சுமார் 30 சென்டி மீட்டர் அதாவது 11.8 அங்குலம் தாடி வளர்ந்தது. இதன் மூலம் ஒரு பெண்ணால் இவ்வளவு நீளமான தாடி வளர்த்து கின்னஸ் உலக சாதனையில் இடம்பிடித்தார்.

    அவருக்கு முன்பு அமெரிக்காவை சேர்ந்த 75 வயது பெண் விவியன் வீலர் இந்த சாதனையை படைத்திருந்தார். அவருக்கு 25.5 சென்டி மீட்டர் தாடி இருந்தது. இந்த சாதனை குறித்து பேசிய எரின் ஹனிகட் கின்னஸ் சாதனையில் இடம்பெறுவேன் என்று நினைக்கவில்லை என தெரிவித்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • உலகில் மிகவும் வயதான நபர் பட்டியலில் ஸ்பெயின் நாட்டை சேர்ந்த 116 வயதான மூதாட்டியான மரியா பிரான்யாஸ் இடம் பெற்றிருந்தார்.
    • 5 தலைமுறைகளை கண்டுள்ள குஞ்சீரும்மாவுக்கு தற்போது வரை கண் பார்வை மற்றும் கேட்கும் திறன் நன்றாக இருக்கிறது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் கோட்டக்கல் பகுதியைச் சேர்ந்தவர் குஞ்சீரும்மா. 120 வயது மூதாட்டியான இவர், உலகிலேயே மிகவும் வயதானவர் என்று கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.

    உலகில் மிகவும் வயதான நபர் பட்டியலில் ஸ்பெயின் நாட்டை சேர்ந்த 116 வயதான மூதாட்டியான மரியா பிரான்யாஸ் இடம் பெற்றிருந்தார். அவரை பின்னுக்கு தள்ளி கேரள மூதாட்டி குஞ்சீரும்மா உலகில் அதிக வயதானவர் என்ற இடத்தை பிடித்துள்ளார்.

    குஞ்சீரும்மா பள்ளிக்கு செல்லவில்லை. அவருக்கு 17 வயதிலேயே திருமணம் ஆகி உள்ளது. கலம்பன் செய்தலி என்பவரை திருமணம் செய்து இருக்கிறார். அவர்களுக்கு மொத்தம் 13 குழந்தைகள் பிறந்துள்ளனர். அவர்களில் 7 பேர் இறந்து விட்டனர்.

    5 தலைமுறைகளை கண்டுள்ள குஞ்சீரும்மாவுக்கு தற்போது வரை கண் பார்வை மற்றும் கேட்கும் திறன் நன்றாக இருக்கிறது. உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்படாமல் மிகவும் ஆரோக்கியமாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஆட்டோமோடிவ் டெஸ்டிங் பபென்பர்க் களத்தில் இதற்கான டெஸ்டிங் செய்யப்பட்டது.
    • நெவெராவை ரிவர்சில் முழு திறனை வெளிப்படுத்தும் வகையில் இயக்கப்பட்டது.

    ரிமக் ஆட்டோமொபைல் நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் ஹைப்பர்கார் நெவெரா கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்து இருக்கிறது. ரிவர்சில் அதிவேகமாக செல்லும் கார் என்ற சாதனையை ரிமக் நெவெரா படைத்திருக்கிறது. ஜெர்மனியில் உள்ள ஆட்டோமோடிவ் டெஸ்டிங் பபென்பர்க் களத்தில், இதற்கான டெஸ்டிங் செய்யப்பட்டது.

    முன்னதாக இதே களத்தில் 20-க்கும் அதிக அக்செல்லரேஷன் மற்றும் பிரேக்கிங் சாதனைகளை நெவெரா முறியடித்து இருந்தது. சிமுலேஷன் எனப்படும் இயந்திர பரிசோதனையில் மணிக்கு 241 கிலோமீட்டர் வேகத்தை எட்ட முடியும் என்று தெரியவந்தது. இதனை பரிசோதிக்க முடிவு செய்த குழு, நெவெராவை ரிவர்சில் முழு திறனை வெளிப்படுத்தும் வகையில் இயக்கியது. அதன்படி ரிமக் நெவெரா ரிவர்சில் மணிக்கு 275.74 கிலோமீட்டர் வேகத்தில் சென்று கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்து உள்ளது.

    "சோதனையின் போதே, அது கிட்டத்தட்ட பழகியதை போன்ற அனுபவத்தை கொடுத்தது. எடுத்த எடுப்பில், பின்புறம் பார்க்க வேண்டும், அப்போது காரின் வேகம் அதிகரித்துக்கொண்டே போகும் போது காட்சிகள் நிழலாடுவதை போன்று தெரியும். இந்த நிலையில், உங்களது கழுத்து- காரை வேகமாக வந்து பிரேக்கிங் செய்யும் போது முன்புறம் செல்வதை போன்று தள்ளப்படும்," என்று காரை ரிவர்சில் இயக்கிய டெஸ்ட் ஓட்டுனர் கோரன் ரென்டக் தெரிவித்தார்.

    நெவெராவில் உள்ள புதுமை-மிக்க டிரைவ்-டிரெயின் காரணமாக இந்த சாதனை சாத்தியமானது. வழக்கமாக கார்களில் உள்ள டிரான்ஸ்மிஷன் இந்த காரில் இல்லாததால், நெவெராவை முன்புறம் மணிக்கு 411 கிலோமீட்டர் வேகத்தில் இயக்கிய அதே மோட்டார்கள் இந்த காரினை ரிவர்ஸ்-இலும் இத்தகைய வேகத்தில் இயக்க வழி செய்தது.

    முன்னதாக கேட்டர்ஹாம் 7 ஃபயர்பிலேடின் டாரென் மேனிங் 2001-ம் ஆண்டு ரிவர்சில் காரினை மணிக்கு 165.08 கிலோமீட்டர்கள் வேகத்தில் இயக்கியது கின்னஸ் உலக சாதனையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

    • உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் ஸ்மிதா ஸ்ரீவஸ்தவா.
    • மிக நீளமான தலைமுடிக்கு சொந்தக்காரர் என்ற சாதனையை படைத்தார்.

    லக்னோ:

    உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் ஸ்மிதா ஸ்ரீவஸ்தவா (46). சிறுவயது முதலே தலைமுடி வளர்ப்பதில் ஆர்வம் கொண்ட இவர், முடியை பராமரிப்பதற்கு கவனம் செலுத்தி வருகிறார்.

    ஸ்மிதாவுக்கு சிறு வயதில் முடியை வெட்டிவிட்டனர். 14 வயதுக்கு பிறகு தனது தலைமுடியை வெட்டுவதை அவர் தவிர்த்தார். இதனால் அவரது முடி தொடர்ந்து வளர்ந்து தற்போது 7 அடி மற்றும் 9 அங்குலம் உள்ளது. 236.22 செ.மீ உள்ளது. இதன்மூலம் உலகின் நீளமான தலைமுடியை கொண்ட பெண் என்ற கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

    இதுதொடர்பாக ஸ்மிதா கூறுகையில், பெண்களுக்கு அழகே நீண்ட தலைமுடிதான். வாரத்திற்கு 2 நாட்கள் தலைமுடியை வாஷ் செய்து வருகிறேன். முடியை வாஷ் செய்தல், உலர்த்துதல், சிக்கல் எடுத்தல் மற்றும் ஸ்டைலாக பின்னுதல் என இந்த நடைமுறையை செய்து முடிக்க கிட்டத்தட்ட 3 மணி நேரம் ஆகிறது என தெரிவித்தார்.

    இந்தி நடிகைகளின் முடி அலங்காரத்தால் ஈர்க்கப்பட்டு தலைமுடியை வளர்க்கத் தொடங்கிய ஸ்மிதா, தற்போது நீண்ட தலைமுடிக்காக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார்.

    ×