என் மலர்
நீங்கள் தேடியது "gutka"
- தனிப்படை போலீசார் கஞ்சா மற்றும் குட்கா பொருட்கள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
- தனிப்படை போலீசார் குடோனிலிருந்து 274 கிலோ எடை கொண்ட ஹான்ஸ் மற்றும் குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
திருப்பூர் :
திருப்பூர் மாநகரில் பல்வேறு இடங்களில் அரசால் தடை செய்யப்பட்ட போதைப்பொருள் விற்பனை செய்யப்படுவதாக நகர போலீஸ் கமிஷனர் பிரபாகரனுக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து கமிஷனர் பிரபாகரன் தடை செய்யப்பட்ட போதைப்பொருட்களை ஒதுக்கி வைத்திருப்பவ ர்களை கண்டறிய ஒரு தனிப்படை அமைத்து உத்தரவிட்டார்.
அதனை தொடர்ந்து பல்வேறு இடங்களில் தனிப்படை போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர் இந்நிலையில் தெற்கு காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியான பல்லடம் சாலை சந்தப்பேட்டை அருகில் உள்ள குடோனில் தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள போதை பொருள் பதுக்கி வைத்திருப்பதாக வந்த தகவலை யடுத்து விரைந்து சென்ற தனிப்படை போலீசார் குடோனிலிருந்து 274 கிலோ எடை கொண்ட ஹான்ஸ் மற்றும் குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
பின்னர் போதை பொருளை பதுக்கி வைத்து விற்பனையில் ஈடுபட்ட ராமநாதபுரம் மாவட்டத்தைச் சார்ந்த வெங்கடேசன், ஈரோடு பகுதியைச் சார்ந்த தளராம் இரண்டு பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து பல லட்சம் ரூபாய் மதிப்பிலான குட்க்கா பொருட்களை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து தனிப்படை போலீசார் பல்வேறு இடங்களிலும் கஞ்சா மற்றும் குட்கா பொருட்கள் இருக்கிறதா என்பதை சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
- முசிறியில் 781 கிலோ குட்கா பறிமுதல் செய்யபட்டது
- கண்டெய்னர் வேன் மற்றும் டாடா ஏஸ் லோடு வேன் ஆகிய இரண்டு வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.
முசிறி:
திருச்சி மாவட்டம் முசிறி அடுத்த காமாட்சிபட்டியில் குட்கா கடத்தப்படுவதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் அங்கு சென்ற இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் உதவி இன்ஸ்பெக்டர்கள் கருணாநிதி, சக்தி விநாயகம், போலீசார் ராஜேஷ், சக்திவேல் ஆகியோர் காமாட்சி பட்டியில் உள்ள சேகர் என்பவரது வீட்டின் அருகே கண்டெய்னர் லாரியிலிருந்து, டாட்டா ஏசி வாகனத்தில் மூட்டைகள் மாற்றப்படுவது கண்டு சந்தேகம் அடைந்த போலீசார் உடனே அங்கு அதிரடி சோதனை நடத்தினர். அப்போது லட்சக்கணக்கான மதிப்பு உள்ள 30க்கும் மேற்பட்ட குட்கா பான் மசாலா மூட்டைகள் கொண்ட போதைப் பொருட்கள் மாற்றப்படுவதை போலீசார் கண்டறிந்தனர். இதனை அடுத்து விசாரணை செய்ததில் புனேவிலிருந்து தஞ்சாவூருக்கு பைப் லோடு ஏற்றி வந்த கன்டெய்னர் லாரி ஓட்டுநரான விராலிமலை தெற்கு தெருவை சேர்ந்த அழகர் மகன் வெள்ளைச்சாமி (வயது 23), கிளினர் அசுரப்பட்டி விராலிமலை அகர பட்டியை சேர்ந்த வேலு மகன் சீனிவாசன் ( வயது 25), ஆகிய இருவரும், நாமக்கல்லில் உள்ள லாரி உரிமையாளருக்கு தெரியாமல் குட்கா பொருட்கள் கடத்தி வந்தது விசாரணையில் தெரிய வந்தது. கடத்தி வந்த குட்கா பொருட்களை காமாட்சி பட்டி அருகே டாட்டா ஏஸ் வாகனம் ஓட்டுநர் சூரம்பட்டி செல்லிபாளையம் சோழன் மகன் திவாகர் ( வயது 23 )ஏற்ற சென்றுள்ளார். அங்கு மடக்கி பிடித்த முசிறி போலீசார் மூவரையும் கைது செய்து 781 கிலோ எடை கொண்ட குட்கா பொருட்களை பறிமுதல் செய்தும் கண்டெய்னர் வேன் மற்றும் டாடா ஏஸ் லோடு வேன் ஆகிய இரண்டு வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.
- சேலம் கொண்ட லாம்பட்டி ரவுண்டானா சென்னை பைபாஸ் சாலையில் உளள திவ்யா தியேட்டர் அருகே இன்று அதிகாலை 5 மணிக்கு சீலநாயக்கன்பட்டி நோக்கி சென்ற சொகுசு கார் ஒன்று முன்னாள் சென்ற லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.
- பின்னர் காரில் சோதனை மேற்கொண்ட போது மூட்டை மூட்டையாக தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் இருந்தது தெரியவந்தது.
சேலம் :
சேலம் கொண்ட லாம்பட்டி ரவுண்டானா சென்னை பைபாஸ் சாலையில் உளள திவ்யா தியேட்டர் அருகே இன்று அதிகாலை 5 மணிக்கு சீலநாயக்கன்பட்டி நோக்கி சென்ற சொகுசு கார் ஒன்று முன்னாள் சென்ற லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்து நடந்த உடன் காரில் வந்தவர்கள் இறங்கி ஓடி விட்டனர்.இரவு ரோந்து பணியில் இருந்த கொண்டலாம்பட்டி உதவி கமிஷனர் ஆனந்தி, இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போக்குவரத்தை சரி செய்தனர்.
பின்னர் காரில் சோதனை மேற்கொண்ட போது மூட்டை மூட்டையாக தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் இருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து குட்கா மற்றும் காரை பறிமுதல் செய்த போலீசார் கொண்டலாம்பட்டி காவல் நிலையம் எடுத்துச் சென்று மூட்டைகளை பரிசோதனை செய்தபோது 550 கிலோ குட்கா பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அதை தொடர்ந்து காரின் பதிவு எண்ணை கொண்டு காரின் உரிமையாளர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர், இந்த குட்கா பொருட்கள் எங்கிருந்து கடத்தி வரப்படுகிறது?,என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- ஒரு லட்சம் பணம் பறிமுதல்
- ஒருவர் கைது
திருச்சி,
திருச்சி லால்குடி பகுதியில் போலீசார் குட்கா ரெய்டில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் உள்ள பக்ரூதீன் என்பவர் குட்கா மற்றும் புகையிலை வியாபாரம் செய்து வருவது போலீசாருக்கு தெரிய வந்தது. அய்யன்வாய்க்கால் கரை பகுதியில் பக்ரூதீனுக்கு சொந்தமான இடத்தில் போலீசார் நடத்திய சோதனையில் 53 மூட்டை தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை பொருட்கள் கைப்பற்றப்பட்டன. 8 லட்சம் மதிப்பிலான அந்த போதை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் அங்கிருந்த 1 லட்சம் ரூபாய் பணத்தையும் பறிமுதல் செய்தனர். இதனை தொடர்ந்து பக்ரூதீன் கைது செய்யப்பட்டார்.
- துறையூர் பகுதியில் நடத்தப்பட்ட சோதனையில் 825 கிலோ குட்கா சிக்கியது
- உணவு பாதுகாப்பு துறையினர் அதிரடி நடவடிக்கை
துறையூர்,
திருச்சி மாவட்ட உணவு பாதுகாப்பு பிரிவில் நியமன அலுவலராக பணிபுரிந்து வருபவர் ரமேஷ்பாபு. இவருக்கு துறையூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதனை அடுத்து மாவட்ட நியமன அலுவலர் ரமேஷ்பாபு தலைமையில், துறையூர் உணவு பாதுகாப்பு அலுவலர் ரெங்கநாதன் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் துறையூர் தெப்பக்குள தெருவில் உள்ள பாலாஜி (30) என்பவருக்கு சொந்தமான பெட்டிக்கடையில் திடீர் சோதனை செய்தனர்.அங்கு சுமார் 10 கிலோ எடையுள்ள குட்கா பொருட்கள் கைப்பற்றப்பட்டது. இதையடுத்து பாலாஜியிடம் விசாரணை மேற்கொண்டதில் திருச்சி ரோட்டில் பேன்சி கடை வைத்து நடத்தி வரும் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த உத்தம்சிங் (45) என்பவரிடமிருந்து குட்கா பொருட்களை வாங்கி விற்பனை செய்வதாக கூறினார். பின்னர் உத்தம்சிங் கடைக்கு சென்று அங்கு பணிபுரியும் அசுசிங் (25) என்பவரிடம் விசாரணை மேற்கொண்டதில், உத்தம்சிங்கின் ஏற்பாட்டில் தெப்பக்குள தெருவில் உள்ள பரிதாபானு என்பவருக்கு சொந்தமான வீட்டினை வாடகைக்கு எடுத்து அங்கு குட்கா, பான் மசாலா உள்ளிட்ட பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவது தெரிய வந்தது.இதனையடுத்து அங்கு சென்ற உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள், துறையூர் காவல் ஆய்வாளர் செந்தில்குமார், கிராம நிர்வாக அலுவலர் திருநாவுக்கரசு ஆகியோர் முன்னிலையில் வீட்டின் பூட்டை உடைத்து சோதனை மேற்கொண்டதில் அங்கு சுமார் ரூ.10 லட்சம் மதிப்புள்ள 825 கிலோ எடையுள்ள குட்கா பொருட்கள் கைப்பற்றப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக துறையூர் உணவு பாதுகாப்பு அலுவலர் ரெங்கநாதன் துறையூர் போலீசில் புகார் செய்தார்.இப்புகாரின் பேரில் போலீசார் உத்தம்சிங், அசுசிங், பாலாஜி ஆகிய 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து அசுசிங்கை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். துறையூர் பகுதியில் ஒரே இடத்தில் 800 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் உணவு பாதுகாப்பு துறை அலுவலர்களால் கைப்பற்றப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- கறம்பக்குடியில் 51 கிலோ குட்கா பறிமுதல் செய்யபட்டது
- கறம்பக்குடி காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஜானகிராமன் மற்றும் தனிப்படை போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
கறம்பக்குடி,
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் தங்கு தடை இன்றி கிடைப்பதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு புகார்கள் வந்துள்ளது. இதனை தொடர்ந்து கறம்பக்குடி காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஜானகிராமன் மற்றும் தனிப்படை போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வெங்கரை முகமது அப்பாஸ் (வயது 39), வாணிப தெரு சேக் தாவூத் ஆகியோரிடமிருந்து 51 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
- டீக்கடை உரிமையாளர் செல்வேந்திரனை போலீசார் கைது செய்தனர்.
- கடையில் இருந்த தடை செய்யப்பட்ட 17.72 கிலோ குட்கா புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
வில்லிவாக்கம் நியூ ஆவடி சாலையில் உள்ள ஒரு டீக்கடையில் குட்கா புகையிலைப் பாக்கெட்டுகள் பதுக்கி வைத்து ரகசியமாக விற்பனை செய்யப்பட்டது தெரிய வந்தது.
இது தொடர்பாக டீக்கடை உரிமையாளர் செல்வேந்திரனை போலீசார் கைது செய்தனர். கடையில் இருந்த தடை செய்யப்பட்ட 17.72 கிலோ குட்கா புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
- விக்கிரவாண்டி பகுதியில் குட்கா பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக ரகசிய தகவல் வந்தது.
- வீட்டில் மூட்டை மூட்டையாக குட்கா மறைத்து வைத்திருப்பது தெரியவந்தது.
விழுப்புரம்:
விழுப்புரம் போலீஸ் சூப்பிரண்டுக்கு விக்கிரவாண்டி பகுதியில் குட்கா பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக ரகசிய தகவல் வந்தது. அதன்படி விக்கிரவாண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயக முருகன், பெரிய தச்சூர் சப்-இன்ஸ்பெக்டர் மருது தங்கபாண்டியன் மற்றும் போலீசார் நாரேரிகுப்பத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அதே கிராமத்தை சேர்ந்த சிவா (வயது 46). வியாபாரி. இவரது வீட்டில் போலீசார் திடீர் சோதனை நடத்தினர். அவரது வீட்டில் மூட்டை மூட்டையாக குட்கா மறைத்து வைத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சிவாவை கைது செய்து அவரிடமிருந்து 200 கிலோ குட்காவை பறிமுதல் செய்தனர்.
- தகவலின்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் நடேசன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றார்.
- போலீசார் காருக்குள் இருந்து தப்பி ஓடிய 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.
குனியமுத்தூர்,
கோவை-பொள்ளாச்சி ரோட்டில் இன்று அதிகாலை ஒரு சொகுசு கார் வேகமாக வந்தது. அதில் 2 பேர் பயணம் செய்தனர். இந்த நிலையில் அந்த கார் காந்திநகர் பஸ் நிலையம் அருகே, சாலைநடுப்புற தடுப்பில் மோதியது. இந்த விபத்தை நேரில் பார்த்த பொது மக்கள் அலறிஅடித்து ஓட்டம் பிடித்தனர்.
இதற்கிடையே காரில் பயணித்த 2 பேர் வெளியே குதித்து தப்பி ஓடி விட்டனர். எனவே பொதுமக்கள் காருக்கு அருகில் சென்று பார்த்தனர். அப்போது காருக்குள் மூட்டை, மூட்டையாக குட்கா பாக்கெட்டுகள் இருப்பது தெரியவந்தது.
இதுதொடர்பாக சுந்தராபுரம் போலீசுக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலின்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் நடேசன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றார்.
அதன்பிறகு காருக்குள் சோதனை நடத்தப்பட்டது. இதில் அங்கு 450 கிலோ குட்கா பாக்கெட்டுகள் இருப்பது தெரியவந்தது.
கோவையில் விபத்தில் சிக்கிய காருக்குள் குட்கா பாக்கெட்டுகள் மூட்டைக்கணக்கில் இருப்பது போலீசாருக்கு அதிர்ச்சியை ஏற்ப டுத்தி உள்ளது. எனவே சொகுசு காருடன் குட்கா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்த போலீசார் காவல் நிலையத்துக்கு கொண்டு வந்தனர்.
சொகுசு காரில் இருந்து தப்பி ஓடிய கும்பல் எங்கு இருந்து குட்கா பாக்கெட்டுகளை கடத்தி வந்தது என்பது பற்றிய விவரங்கள் தெரியவில்லை. இதுதொடர்பாக சுந்தராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து குட்கா கடத்தி வந்து விபத்துக்கு உள்ளான காருக்குள் இருந்து தப்பி ஓடிய 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.
- கே.ஆர். தோப்பூர் பகுதியை சேர்ந்த பிரபல குட்கா வியாபாரி லிங்கராஜ் (36) ஒரு காரில் வந்தார்.
- போலீசார் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளதால் எனக்கு குட்கா வேண்டாம் என இஸ்மாயில் மறுத்துள்ளார்.
சேலம்:
சேலம் கொண்ட லாம்பட்டி அடுத்த நாட்டாமங்கலம் கரட்டூர் பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வருபவர் இஸ்மாயில் (31). இவரது கடைக்கு நேற்று மாலை கே.ஆர். தோப்பூர் பகுதியை சேர்ந்த பிரபல குட்கா வியாபாரி லிங்கராஜ் (36) ஒரு காரில் வந்தார். அப்போது கடையில் இருந்த இஸ்மாயிலிடம் குட்கா எத்தனை பண்டல் வேண்டும் என கேட்டார். அதற்கு போலீசார் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளதால் எனக்கு குட்கா வேண்டாம் என இஸ்மாயில் மறுத்துள்ளார்.
இதனை தொடர்ந்து லிங்கராஜ் தனக்கு வர வேண்டிய பாக்கி தொகையை கேட்டுள்ளார். இதனால் 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த லிங்கராஜ், இஸ்மாயிலை தாக்கினார்.
இது குறித்து இஸ்மாயில் கொண்டலாம்பட்டி குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் புஷ்பராணியிடம் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து லிங்கராஜை கைது செய்து சேலம் மத்திய ஜெயிலில் அடைத்தனர்.
- இருக்கூர் செஞ்சுடையாம் பாளையத்தில் உள்ள ஒரு பெட்டிக்கடை ஒன்றில் தடை செய்யப்பட்டுள்ள பான் மசாலா, குட்கா, ஹான்ஸ், பான்பராக் மற்றும் பல்வேறு வகையான புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக பரமத்தி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
- சுமார் 4 கிலோ எடையுள்ள பான் மசாலா,குட்கா, ஹான்ஸ் , பான்பராக் மற்றும் புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்தனர்.
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கபிலர்மலை அருகே உள்ள இருக்கூர் செஞ்சுடையாம் பாளையத்தில் உள்ள ஒரு பெட்டிக்கடை ஒன்றில் தடை செய்யப்பட்டுள்ள பான் மசாலா, குட்கா, ஹான்ஸ், பான்பராக் மற்றும் பல்வேறு வகையான புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக பரமத்தி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில். போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று செஞ்சுடையாம்பாளை யத்தில் உள்ள பிரேம்குமார் என்பவருக்கு சொந்தமான பெட்டிக்கடையில் சோதனை மேற்கொண்டனர். சோதனையில் பெட்டிக்கடையில் தடை செய்யப்பட்டுள்ள மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 4 கிலோ எடையுள்ள பான் மசாலா,குட்கா, ஹான்ஸ் , பான்பராக் மற்றும் புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்தனர். அதனை தொடர்ந்து குட்கா புகையிலை பொருட்களை விற்பனை செய்த கடையின் உரிமையாளர் பிரேம்குமார் (29) என்பவரை கைது செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா கடத்தி வருவதாக தீவட்டிப்பட்டி போலீ சாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
- இதையடுத்து இன்ஸ்பெக்டர் ஞானசேகர் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் பழனிசாமி மற்றும் போலீசார் ஓமலூர் அருகே உள்ள குதிரைகுத்தி பள்ளம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
காடையாம்பட்டி:
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து சரக்கு வாகனத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா கடத்தி வருவதாக தீவட்டிப்பட்டி போலீ சாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
மினி டெம்போவில் ரகசிய அறை
இதையடுத்து இன்ஸ்பெக்டர் ஞானசேகர் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் பழனிசாமி மற்றும் போலீசார் ஓமலூர் அருகே உள்ள குதிரைகுத்தி பள்ளம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த மினிடெம்போவை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அதில் இருந்த தக்காளி காலிப்பெட்டிகளை அகற்றிவிட்டு பார்த்தபோது அந்த வண்டியில் ரகசிய அறை ஒன்று அமைத்து இருந்ததை கண்டுபிடித்தனர்.
தொடர்ந்து மேலே இருந்த மரப்பலகையை எடுத்து விட்டு பார்த்தபோது அந்த அறைக்குள் மூட்டை, மூட்டையாக 180 கிலோ குட்கா அடுக்கி வைத்தி ருப்பது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.1 லட்சத்து 90 ஆயிரம் இருக்கும் என கூறப்படுகிறது.
டிரைவர் கைது
இது குறித்து டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அவர் மேச்சேரி வெள்ளார் வெள்ளம்பட்டி பகுதியை சேர்ந்த இளையபாரதி (வயது 27) என்பதும், பெங்களூருவில் இருந்து சேலத்திற்கு குட்கா கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து டிரைவர் இளையபாரதியை போலீசார் கைது செய்தனர். மேலும் மினி ெடம்போ மற்றும் குட்கா ஆகியவற்றை பறிமுதல் செய்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம்
இதேபோல் செவ்வாய் பேட்டை போலீசார் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர்.
அப் போது செவ்வாய்பேட்டை லாரி மார்க்கெட் பகுதியில் மகாராஷ்டிரா பதிவு எண் கொண்ட ஒரு கார் கேட்பா ரற்று நின்றது. அந்த காரை சோதனை செய்த போது தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை கண்டுபிடிக்கப் பட்டது. இதன் மதிப்பு ஒரு லட்சம் ஆகும்.
இந்த குட்கா புகை யிலையை போலீசார் பறிமுதல் போலீஸ் நிலை யம் கொண்டு சென்றனர். அந்த கார் பதிவு எண்ணை வைத்து அந்த கார் யாருடையது கடத்தி வந்தது யார் என்பது குறித்து வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.