என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "handed over"
- சாலையில் கிடந்த 45 ஆயிரம் ரூபாயை காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்
- காவல்துறையினர், பொது மக்கள் பாராட்டு
அறந்தாங்கி,
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ஆயிங்குடி பகுதியைச் சேர்ந்தவர் அமுதாராணி (55).விவசாயக் கூலி வேலை பார்க்கும் இவர் தனது பேரக்குழந்தைக்கு மருத்துவ பரிசோதனை செய்வதற்காக, ஆயிங்குடி யிலிருந்து அறந்தாங்கி பேருந்தில் சென்றுள்ளார்.கட்டுமாவடி முக்கம் பேருந்து நிறுத்தத்தில் பேருந்தில் இருந்து இறங்கி சாலையில் நடந்துள்ளார். அப்போது கட்டு கட்டாக பணம் கிடப்பதை அவர் கண்டுள்ளார். யாரும் இல்லாத நிலையில், சாலையில் கிடந்த பணத்தை எடுத்து, அருகே இருந்த பெட்டிக்கடை ஒன்றில் கொடுத்துள்ளார். பணத்தை தவற விட்டவர்கள் வந்து கேட்டால் ஒப்படைத்து விடுமாறு கூறிச் சென்றுள்ளார்.மீண்டும் மருத்துவமனை யிலிருந்து திரும்பி வந்த அவர் பெட்டிக்கடைக்கு சென்று யாரேனும் வந்தார்களா என கேட்டு உள்ளார். அதற்கு யாரும் வரவில்லையென பெட்டிக்கடைகாரர் கூறிய தையடுத்து, அவரிடமி ருந்து 45 ரொக்கப் பணத்தை வாங்கிய அமுதாராணி அறந்தாங்கி காவல்நிலையத்தில் சென்று ஒப்படைத்துள்ளார்.ஏற்கனவே அறந்தாங்கி எல்என்புரம் பகுதியைச் சேர்ந்த குமார் (45) என்பவர் கடைவீதிக்கு செல்லு ம்போது தான் வைத்திருந்த ரொக்கப்பணம் ரூ.45 காணவில்லையென புகார் கொடுத்துள்ளார்.அவரை வரவழைத்த காவல்துறையினர், பணம் தொலைந்த நேரத்தையும், கண்டெடுக்கப்பட்ட நேரத்தையும் ஒப்பிட்டு பார்த்து விசாரணைக்கு பிறகு 45 ஆயிரம் ரொக்கப் பணத்தை உரியவரிடம் ஒப்படைத்தனர். கூலி வேலை பார்த்து பிழைப்பு நடத்தும் பெண்மணியாக இருந்தாலும் அடுத்தவ ர்களின் பணத்திற்கு ஆசை படாத பெண்மணியை காவல்துறையினரும், பொதுமக்களும் வெகுவாக பாராட்டினர்.
- உமாதேவி 2 ஆண்டுகளுக்கு பின் மீட்கப்பட்டார்
- உமாதேவியை பல்வேறு இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.
கோவை,
கோவை கருமத்தம்பட்டி அருகே உள்ள சோமனூரை சேர்ந்தவர் உமாதேவி (வயது40).மனநலம் பாதிக்கப்பட்டவர். திருமணமாகவில்லை.
இவரை அவரது அக்கா ருக்மணி என்பவர் கவனித்து வந்தார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திடீரென உமாதேவி மாயமானார். அவரை அவரது அக்கா பல்வேறு இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இதுகுறித்து ருக்மணி மாயமான தனது தங்கையை கண்டுபிடித்து தரும்படி கருமத்தம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான உமா தேவியை தேடி வந்தனர். ஆனால் கடந்த 2 வருடமாக அவர் கிடைக்கவில்லை.
இந்த நிலையில் கேரள அரசு, வீடு இல்லாமல் சாலைகளில் சுற்றித் திரிபவர்களை கண்டுபிடித்து அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கும் பணியை தனியார் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து திட்டத்தை செயல்படுத்தி வந்தனர்.
அப்போது தொண்டு நிறுவனத்தினர் கேரள மாநிலம் கொல்லத்தில் சாலையோரத்தில் சுற்றித்திரிந்தவர்களை கண்டுபிடித்து அவர்களுக்கு சிகிச்சை மற்றும் கவுன்சிலிங் வழங்கி அவர்கள் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்கள் என்று விசாரித்தனர்.
அப்போது அவர்களில் உமாதேவியும் ஒருவர். அவரிடம் விசாரித்ததில் அவர் கோவையை சேர்ந்தவர் என்பதும், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறி வந்தது தெரிய வந்தது.
இதனையடுத்து அந்த தொண்டு நிறுவனத்தினர் கருமத்தம்பட்டி போலீசாரை தொடர்பு கொண்டு உமாதேவியின் குடும்பம் எங்கு உள்ளது என விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
இதனையடுத்து கருமத்தம்பட்டி போலீசார் உமாதேவி அக்கா ருக்மணி இருக்கும் இடத்தை கண்டுபிடித்தனர். பின்னர் தொண்டு நிறுவனத்தினருடன் இணைந்து கருமத்தம்பட்டி போலீசார் உமாதேவியை அவரது அக்கா ருக்மணியிடம் ஒப்படைத்தனர்.
- எதிர்பாராத விதமாக திலகவதி மற்றும் அஸ்வின் ஆகியோர் குட்டையின் ஆழமான பகுதிக்கு சென்று நீரில் மூழ்கினர்.
- அப்பகுதிக்கு சென்ற பொது மக்கள் குழந்தைகளை மீட்டபோது 2 பேரும் இறந்து விட்டனர்.
நம்பியூர்:
நம்பியூர் அருகே உள்ள கே.மேட்டுப்பாளையம் பகுதியில் சிவன் கோவில் குட்டை அமைந்துள்ளது. இதில் புளியம்பட்டி நொச்சிகுட்டை பகுதியை சேர்ந்த ராம்குமார் மகள் திலகவதி (17), ஆலம்பாளையம் கிருஷ்ண சாமியின் மகன் அஸ்வின் (11) மற்றும் சவுமியா, தன்யா, மனோஜ், பவித்ரா ஆகியோர் குட்டையில் மீன் பிடிப்பதற்காக சென்றுள்ளனர்.
அப்போது எதிர்பாராத விதமாக திலகவதி மற்றும் அஸ்வின் ஆகியோர் குட்டையின் ஆழமான பகுதிக்கு சென்று நீரில் மூழ்கினர். உடனே அருகில் இருந்த குழந்தைகள் பார்த்து பயந்து வீட்டிற்கு வந்து உறவினர்களிடம் திலகவதி மற்றும் அஸ்வின் குட்டையில் மூழ்கி விட்டனர் என கூறியுள்ளனர். உடனடியாக அப்பகுதிக்கு சென்ற பொது மக்கள் குழந்தைகளை மீட்டபோது 2 பேரும் இறந்து விட்டனர். இது குறித்து நம்பியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் பிரேத பரிசோதனைக்காக 2 சிறுவர்கள் உடல் கோபி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. பின்னர் பிரேத பரிசோ தனை முடிந்து இன்று உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
மத்தியபிரதேச மாநிலம் ஜபல்பூரில் உள்ள பீரங்கி தொழிற்சாலையில் பீரங்கிகள் ராணுவத்திடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடந்தது. தளவாட தொழிற்சாலை வாரியம் (ஓ.எப்.டி.) இயக்குனர் சவுரவ் குமார் கொடியசைத்து வழியனுப்பிவைத்தார்.
ராணுவ தேவைக்காக 114 தனுஷ் பீரங்கிகளை உற்பத்தி செய்வதற்கான ஒப்பந்தத்தை ராணுவம் மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சகமும், தளவாட தொழிற்சாலை வாரியத்துக்கு வழங்கியுள்ளன. அதில் முதல் கட்டமாக 6 பீரங்கிகள் தயாரிக்கப்பட்டு ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதல் பீரங்கிகள் என்ற பெருமையை ‘தனுஷ்’ ரக பீரங்கிகள் பெற்றுள்ளன. இந்த பீரங்கிகள் 38 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இலக்கை துல்லியமாகத் தாக்கும் திறன் கொண்டவை.
சேலம் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் ரோகிணி தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து 386 கோரிக்கை மனுக்களை பெற்றார். இந்த மனுக்கள் மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
மேலும் 30 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.2¼ லட்சம் மதிப்பிலான மோட்டார் பொருத்திய தையல் எந்திரங்களையும், மாற்றுத்திறனாளிகள் 5 பேருக்கு 3 சக்கர சைக்கிள்களும், 6 பயனாளிகளுக்கு ஓய்வூதியதாரர் உத்தரவு ஆணைகளையும் கலெக்டர் வழங்கினார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் சுகுமார், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் ஜெகநாதன், சமூக பாதுகாப்பு திட்ட அலுவலர் சாரதா ருக்மணி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சுப்பிரமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடாக பழனி முருகன் கோவில் விளங்குகிறது. இங்குள்ள நவபாஷாணத்தால் ஆன மூலவர் சிலை, போகர் என்னும் சித்தரால் செய்யப்பட்டதாகும். தினமும் அபிஷேகம் செய்வதால், இந்த சிலை சேதம் அடைவதாக கூறி ஐம்பொன்னால் ஆன புதிய சிலை செய்ய முடிவு செய்யப்பட்டது.
அதன்படி கடந்த 2004-ம் ஆண்டு ஜனவரி மாதம் புதிய ஐம்பொன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. அதன்பிறகு 6 மாத காலத்தில் அந்த சிலை அகற்றப்பட்டு, கோவில் வளாகத்தில் உள்ள அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது. இந்தநிலையில் ஐம்பொன் சிலை செய்ததில் மோசடி நடந்திருப்பதாக புகார் எழுந்தது.
இதையடுத்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் ஐ.ஜி.பொன் மாணிக்கவேல் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பிறகு ஸ்பதி முத்தையா, முன்னாள் இணை ஆணையர் கே.கே.ராஜா, உதவி ஆணையர் புகழேந்தி, சென்னை அறநிலையத்துறை சென்னை தலைமையிட நகைமதிப்பீட்டு அதிகாரி தேவேந்திரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
மேலும் இந்த மோசடி தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் வழக்கு விசாரணை முடியும் வரை கோவில் நிர்வாகத்திடம் இருந்து சிலையை பெற்று பாதுகாப்பாக வைக்கும்படி, கும்பகோணத்தில் உள்ள சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கோர்ட்டு போலீசாருக்கு உத்தரவு பிறப்பித்தது.
அதன்படி சிலையை கோர்ட்டுக்கு எடுத்து செல்ல சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நேற்று முன்தினம் பழனிக்கு வந்தனர். பழனி கோவில் இணை ஆணையர் செல்வராஜ் சென்னை சென்றிருந்ததால் சிலையை போலீசாரிடம் ஒப்படைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. மேலும் சிலையின் சக்தியை இழக்க வைக்க பூஜைகளும் செய்ய வேண்டும் என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து சிலையின் சக்தியை இழக்க வைக்கும் பூஜை மற்றும் பாதுகாப்பாக கொண்டு செல்வதற்கான பிரத்யேக ஏற்பாடுகளை கோவில் அதிகாரிகள் செய்தனர். நேற்று அதிகாலை 5 மணி அளவில், கோவில் இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர் செந்தில்குமார் மற்றும் அதிகாரிகள் மலைக்கோவிலுக்கு வந்தனர்.
பின்னர் ஐம்பொன் சிலையை, பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட பெட்டியில் வைத்து கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. முன்னதாக சிலையின் எடை, உயரம் உள்ளிட்டவைகளை கோவில் அதிகாரிகள் அளவீடு செய்து விவரங்களை ஆவணங்களாக பதிவு செய்தனர்.
இதைத்தொடர்ந்து ஐம்பொன் சிலை வைக்கப்பட்ட பெட்டியை, மலைக்கோவிலில் இருந்து அடிவாரத்துக்கு கோவில் அதிகாரிகள் கொண்டு வந்தனர். அதன் பின்பு கோவிலுக்கு சொந்தமான வாகனம் மூலம் ஐம்பொன் சிலை வைக்கப்பட்ட பெட்டி, இடும்பன் கோவில் பை-பாஸ் சாலை வழியாக பாலாறு இல்லத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
அங்கு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் சிலை வைக்கப்பட்டு இருந்த பெட்டி ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் முன்னிலையில் பெட்டி திறக்கப்பட்டு ஐம்பொன் சிலை வெளியே எடுக்கப்பட்டது. தொடர்ந்து சிலையின் எடை மற்றும் உயரம் அளவீடு செய்யப்பட்டது. அதில் சிலையின் எடை 221 கிலோ 100 கிராமும், உயரம் 3¾ அடி (111.5 சென்டி மீட்டர்) இருப்பதும் தெரியவந்தது.
இந்த விவரங்களை சிலையை கொண்டு செல்வதற்காக தயாரிக்கப்பட்ட ஆவணங்களில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பதிவு செய்தனர். அதன்பிறகு சிலை வைக்கப்பட்ட பெட்டியை, வேனில் ஏற்றி கும்பகோணத்துக்கு போலீசார் எடுத்துச்சென்றனர். பின்னர் அந்த சிலை கும்பகோணம் கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டது.
பின்னர் அந்த சிலை கும்பகோணத்தில் உள்ள சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கோர்ட்டில் நீதிபதி அய்யப்பன் பிள்ளை முன்பு ஒப்படைக்கப்பட்டது. நீதிபதி முன்பு சிலையை மரப்பெட்டியில் இருந்து வெளியில் எடுத்து வைத்து சிலையை எடை போட்டனர். அந்த சிலையை கும்பகோணம் நாகேஸ்வரன் கோவிலில் உள்ள சிலைகள் பாதுகாப்பு மையத்தில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
இதனைத்தொடர்ந்து கும்பகோணம் கோர்ட்டுக்கு வந்த ஐ.ஜி.பொன்மாணிக்கவேல், கோர்ட்டு நடவடிக்கைகளை பார்வையிட்ட பின் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருடன் நாகேஸ்வரன் கோவிலில் உள்ள சிலை பாதுகாப்பு மையத்திற்கு சென்றார். அங்கு சிலையை ஒப்படைத்த அவர், அந்த சிலை மீது எந்தவித குறிப்பும் எழுதக்கூடாது என்றும், மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்து விட்டுச் சென்றார். #Idolsmuggling #Tamilnews
மராட்டிய மாநிலம் சங்க்லியில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில், அவினாஷ் தாதாசாகேப் பக்வடே (வயது 50) என்பவர் கல்லீரல் கோளாறு காரணமாக சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். நேற்று முன்தினம் அவருடைய குடும்பத்தினரை ஆஸ்பத்திரி நிர்வாகம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, அவினாஷ் இறந்து விட்டதாக கூறியது.
அழுதபடி ஆஸ்பத்திரிக்கு சென்ற குடும்பத்தினரிடம், பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, துணியால் மூடப்பட்ட ஒரு உடலை ஒப்படைத்தது. ஒரு உறவினர் சந்தேகப்பட்டு கேள்வி எழுப்பியபோது, உடலை பெற்றுக்கொண்டு வெளியேறுமாறு ஆஸ்பத்திரி அதிகாரிகள் கண்டிப்புடன் கூறினர்.
அந்த உடலுடன் அவினாஷ் குடும்பத்தினர் வீட்டுக்கு வந்தனர். அஞ்சலி செலுத்த வந்த சில உறவினர்களுக்கு அது அவினாஷ் உடல்தானா என்ற சந்தேகம் ஏற்பட்டது. இதனால், முழுமையாக துணியை அகற்றி பார்த்தனர். அப்போது, அது வேறு ஒருவரது உடல் என்று உறுதி செய்யப்பட்டது.
மீண்டும் ஆஸ்பத்திரிக்கு சென்று பார்த்தபோது, அவினாஷ் சிகிச்சை பெற்று வருவது தெரியவந்தது. அவரை இறந்து விட்டதாக கூறியதுடன், வேறு நபரின் உடலை ஒப்படைத்த ஆஸ்பத்திரி ஊழியர்கள் மீது ஆஸ்பத்திரி சூப்பிரண்டு சுபோத் உகானேவிடம் புகார் தெரிவித்தனர். இதுபற்றி விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் உறுதி அளித்தார். அதே சமயத்தில், ஒப்படைக்கப்பட்டது யாருடைய உடல் என்பதும் அடையாளம் காணப்படவில்லை. அந்த உடலுக்கு யாரும் உரிமை கோரவில்லை.
சென்னை அண்ணாநகர், 6-வது நிழற்சாலை சந்திப்பில் சரவண பவன் ஓட்டல் உள்ளது. அந்த ஓட்டலுக்கு நேற்று முன்தினம் காலை 2 பேர் சாப்பிட வந்தனர். அப்போது அவர்கள் கொண்டு வந்த ஒரு பையை, தாங்கள் அமர்ந்து சாப்பிட்ட மேஜைக்கு அருகில் வைத்து விட்டு ஞாபக மறதியாக சென்றனர்.
அவர்களுக்கு உணவு பரிமாறிய ஓட்டல் ஊழியர் ரவி அந்த பையை எடுத்து பார்த்தார். அதில் பணம் இருந்ததால் ஓட்டலின் கிளை மேலாளர் லோகநாதனிடம் அதை கொடுத்தார். அவர் அந்த பையை திறந்து பார்த்தபோது, அதில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் கட்டுக்கட்டாக ரூ.25 லட்சம் இருப்பது தெரியவந்தது.
அதை தவற விட்டுச்சென்ற வாடிக்கையாளர்கள் திரும்ப வந்து அதை பெற்றுக்கொள்வார்கள் என நினைத்து அவர்கள் காத்திருந்தனர். ஆனால் அந்த பணத்தை உரிமை கோரி யாரும் வரவில்லை.
இதனால் அண்ணாநகர் இணை கமிஷனர் சுதாகருக்கு நேற்று தகவல் கொடுத்தனர். பின்னர் மேலாளர் லோகநாதன், ஊழியர் ரவி இருவரும் வாடிக்கையாளர் விட்டுச்சென்ற ரூ.25 லட்சத்தை அண்ணாநகர் போலீஸ் நிலையத்துக்கு சென்று இன்ஸ்பெக்டர் சரவணனிடம் ஒப்படைத்தனர். மேலும் அங்கு பதிவான கண்காணிப்பு கேமரா காட்சி பதிவுகளையும் போலீசில் கொடுத்தனர்.
ஏழ்மை நிலையில் ஓட்டல் ஊழியராக வேலை பார்த்தாலும், பணத்தை பார்த்து அதற்கு ஆசைப்படாமல் நேர்மையுடன் போலீசில் ஒப்படைத்த ரவியை, இன்ஸ்பெக்டர் சரவணன் பாராட்டினார். மேலும் தன்னுடைய கைக்கெடிகாரத்தை இன்ஸ்பெக்டர் சரவணன், ரவிக்கு பரிசாக அளித்தார். அப்போது ஓட்டல் மேலாளரிடம், ரவிக்கு பதவி உயர்வு வழங்கவும் கேட்டுக்கொண்டார்.
பணம் காணாமல் போனது குறித்து இதுவரை யாரும் போலீசில் புகார் அளிக்கவில்லை. எனவே ஓட்டலில் பதிவான கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து பணத்தை விட்டுச்சென்றவர்கள் யார்? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். பணத்தை சம்பந்தப்பட்டவர்கள் வந்து பெறாத பட்சத்தில் தாசில்தார் மூலம் அரசு கருவூலத்தில் அந்த பணம் ஒப்படைக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.
ஓட்டல் ஊழியர் ரவியின் சொந்த ஊர் திருச்சி மாவட்டம் துறையூர் ஆகும். அவர் அந்த ஓட்டலில் 15 ஆண்டுகளாக வேலை பார்த்து வருகிறார். ரவியின் நேர்மைக்கு பரிசாக ஓட்டல் நிர்வாகம் அவருக்கு மேற்பார்வையாளர் பதவியை வழங்கியது.
போலீசார் மட்டும் அல்லாமல் பொதுமக்கள் தரப்பிலும் ரவிக்கு பாராட்டுகளும், வாழ்த்துகளும் குவிந்தவண்ணம் உள்ளன.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்