என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "heavy snow"

    • பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது
    • கடந்த சில தினங்களாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கடும் பனிமூட்டம் நிலவுகிறது.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பகல் நேரத்தில் வெயிலும், இரவில் லேசான மழையும் பெய்து வருகிறது. தொடர்ந்து இதமான காலநிலையே நிலவி வருகிறது. இந்த நிலையில் கடந்த சில தினங்களாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கடும் பனிமூட்டம் நிலவுகிறது.

    ஊட்டி, குன்னூா் கோத்தகிரியில் கடும் பனி மூட்டம் காரணமாக வாகன ஓட்டிகள் வாகனங்களில் முகப்பு விளக்குகளை எரியவிட்டு சாலையில் ஊா்ந்து செல்லும் நிலைஏற்பட்டது. கடும் குளிா் மற்றும் பனி மூட்டம் காரணமாக பெரும்பாலான முக்கிய சாலைகளில் வாகனங்கள் குறைந்த அளவே காணப்பட்டன. காலை நேரத்தில் 16 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை காணப்பட்டது.

    காட்சிமுனைகளைக் காணமுடியாமல் சுற்றுலாப் பயணிகள் பனிமூட்டத்தை மட்டும் கண்டு செல்லும் சூழல் ஏற்பட்டது. அவ்வப்போது மழையும் பெய்து வருவதால் குளிரின் தாக்கம் மேலும் அதிகரித்துக் காணப்படுகிறது. இதன்காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

    • அமெரிக்காவில் கடும் பனிப்பொழிவு மற்றும் சீரற்ற வானிலை நிலவுகிறது.
    • பனிப்பொழிவால் அமெரிக்கா முழுவதும் நேற்று 2,270 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு மற்றும் சீரற்ற வானிலை நிலவுகிறது.

    கடந்த சில நாட்களாக கடும் பனிப்பொழிவு நிலவி வருவதால் பல்வேறு மாகாணங்களில் வரலாறு காணாத அளவிற்கு பனிப்பொழிவு ஏற்பட்டுது.

    சாலைகளில் பல அடி உயரத்துக்கு பனித்துகள் குவிந்துள்ளன. குளிர் வாட்டி வருவதால் மக்கள் வீடுகளுக்கு உள்ளேயே முடங்கியுள்ளனர்.

    இந்நிலையில், கடும் பனிப்பொழிவு காரணமாக அமெரிக்கா முழுவதும் நேற்று 2,270 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. வெள்ளிக்கிழமை செல்லும் 1000 விமானங்கள் ரத்தாகியுள்ளன. மேலும் விமானங்கள் பல மணி நேரம் தாமதமாக வந்தடைகின்றன.

    பனிப்பொழிவால் விமான சேவை தொடர்ந்து பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. இதனால் பயணிகள் பாதிப்புக்கு இலக்காகினர்.

    • தமிழகத்தில் தட்ப வெப்ப மாற்றம் ஏற்பட்டு, வானில் மேகக் கூட்டம் அதிகரித்துள்ளது.
    • இரவிலும் பனி நிலவுகிறது. இதனால் மக்கள் குளிரை தாங்க முடியாமல் திணறுகின்றனர்.

    சேலம்:

    தென் கிழக்கு வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் தட்ப வெப்ப மாற்றம் ஏற்பட்டு, வானில் மேகக் கூட்டம் அதிகரித்துள்ளது.

    இதனால் சேலம் மாவட்டத்தில் பகலில் வெயில் தாக்கம் குறைவா–கவும், குளிர்ந்த காற்றும் வீசி வருகிறது.

    இரவிலும் பனி நிலவுகிறது. இதனால் மக்கள் குளிரை தாங்க முடியாமல் திணறுகின்றனர். நேற்று மாலையில் சேலத்தின் சில இடங்களில் சிறிது நேரம் சாரல் மழை பெய்தது.

    கடும் குளிர்

    இன்று காலையிலும் பனி மூட்டம் நிலவியது. குறிப்பாக சுற்றுலா தலங்க–ளான ஏற்காடு படகு இல்லம், லேடீஸ் சீட், ஜென்ஸ் சீட், பகோடா பாயிண்ட், கிளியூர் நீர்வீழ்ச்சி, தாவரவியல் பூங்கா, ஏற்காடு அடிவாரம், சேர்வ ராயன் மலை, வாழப்பாடி அருகே அருநூற்றுமலை அடிவாரம், புழுதிக்குட்டை ஆனைமடுவு அணை, ஆத்தூர் அருகே கல்வராயன்மலை தொடர்ச்சியில் உள்ள முட்டல் ஏரி மற்றும் நீர்வீழ்ச்சி, மேட்டூர், ெகாளத்தூர் மலைபகுதிகளில் அதிக அளவில் பனி நிலவியது.

    இங்கு சுற்றுலா வந்திருந்த சுற்றுலா பயனாளிகள் இந்த குளிரை தாங்க முடியாமல் அவதிப்பட்டனர். எனினும் நடுங்க வைக்கும் குளிரில் மலையில் படர்ந்திருந்த மேக கூட்டத்தை ரசிக்கும் வாய்ப்பு கிடைத்ததால் அவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    இந்த பனி மூட்டதால், மலை பகுதிகளில் உள்ள சாலைகள் தெளிவாக காண முடியவில்லை. இதனால் வாகன ஓட்டிகள் வாகனத்தின் முகப்பு விளக்கை எரியவிட்டபடி வாகனங்களை இயக்கினர்.

    • முகப்பு விளக்குகளை எரியவிட்ட படி சென்றனர்
    • டீக்கடைகளில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது

    ஆம்பூர்:

    ஆம்பூரில் கடும் பனிப்பொழிவால் வாகன ஓட்டிகள் அவதி அடை கின்றனர். எதிரே வரும் வாகனங்கள் கண்ணுக்கு தெரியவில்லை. இதனால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டு படி செல்கின்றனர்.

    பனிபொழிவால் அப்பகுதியில் உள்ள மலைகளை சூழ்ந்துள்ளது. கடந்த 2 நாட்களாகவே கடுமையான பனி மூட்டம் காணப்படுகிறது. காலை நேரத்தில் எதிரே இருப்பது கூட தெரியாத அளவுக்கு பனிப்பொழிவு கொட்டுகிறது. இதனால் தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் விடிந்தும் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி செல்கிறார்கள்.

    மாலை 5 மணிக்கு மேலும் பனிப்பொழிவு அதிகமாக இருக்கிறது. காலை, மாலை பனியின் தாக்கம் கடுமையாக இருப்பதால் பொதுமக்கள் வீடுகளுக்குள்ளே முடங்கி கிடக்குகிறார்கள்.

    சூரியன் வந்த பிறகே, வீடுகளில் இருந்து வெளியில் வருகிறார்கள். கடும் பனிப்பொழிவு மக்களை வாட்டி வதைத்து உறைய வைக்கிறது.

    பனியின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க மக்கள் வீதியிலும், வீட்டு முன்பும் குப்பைகள் மற்றும் பழைய பொருட்களை கொளுத்தி விட்டு குளிர் காய்கிறார்கள். கொட்டும் பனிக்கும், உறைய வைக்கும் குளிருக்கும் ஸ்வெட்டர், சால்வை விற்பனையும் சூடுபிடித்துள்ளது.

    நாட்கள் செல்ல செல்ல பனிப்பொழிவும், உறைய வைக்கம் குளிரும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பனி கொட்டுவதால் மக்கள் சளி, காய்ச்சலால் அவதிப்ப டுகிறார்கள்.

    பனிக்கு டீக்கடைகளிலும் மக்கள் கூட்டம் அதிக மாகவே காணப்படுகிறது.

    • சேலம் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் வெயிலின் தாக்கம் காலை முதலே அதிகரிக்கிறது.
    • குளிர் காலை 9 மணி வரை நீடித்ததால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் மார்கழி மாதம் பிறந்ததில் இருந்தே பனிப்பொழிவு அதிகமாக இருந்ததால் குளிரின் தாக்கம் அதிகரித்தது. பின்னர் தை மாதம் பிறந்ததும் பனிப்பொழிவு சற்று குறைந்த நிலையில் தற்போது மீண்டும் பனிப்பொழிவு அதிகரித்துள்ளது.

    குறிப்பாக ஏற்காட்டில் ஏற்கனவே குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவி வந்த நிலையில் கடந்த 4 நாட்களாக பனிப்பொழிவு மேலும் அதிகரித்துள்ளதால் அங்கு வசிக்கும் பொதுமக்கள் குளிரில் நடுங்கி வருகிறார்கள். குளிரில் இருந்து தப்பிக்க குளிர் தாங்கும் உடைகளை அணிந்து நடமாடுகின்றனர்.

    மாலை 6 மணி முதல் காலை 10 மணி வரை கடும் குளிர் நிலவுவதால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகளும் அதே போல ஸ்வெட்டர், ஜர்கின் போன்ற உடை அணிந்து செல்கின்றனர். ஆனாலும் வழக்கத்தை விட குளிரின் தாக்கம் நடப்பாண்டில் அதிக அளவில் உள்ளதால் ஏற்காட்டில் வசிக்கும் மக்கள் மற்றும் தொழிலாளர்கள், மாணவ-மாணவிகள், சுற்றுலா பயணிகள் என அனைத்து தரப்பினரும் குளிரில் நடுங்கும் நிலையே நீடிக்கிறது.

    இதே போல மாவட்டத்தின் புறநகர் பகுதிகளான ஆத்தூர், வாழப்பாடி, ஓமலூர், எடப்பாடி, மேட்டூர், சங்ககிரி, வீரபாண்டி ஆகிய பகுதிகளிலும் கடந்த 4 நாட்களாக பனிப்பொழிவு மீண்டும் அதிகரித்துள்ளது. இதனால் குளிரின் தாக்கம் மேலும் அதிகரித்துள்ளதால் வாகனங்களில் காலை நேரங்களில் செல்பவர்கள் குளிரில் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    சேலம் மாநகரில் கடந்த வாரம் குளிரின் தாக்கம் சற்று குறைந்த நிலையில் பனிப்பொழிவு அதிகரிப்பால் கடந்த 4 நாட்களாக குளிரின் தாக்கம் மேலும் அதிகரித்து வாட்டி வதைக்கிறது. இதனால் பெரும்பாலான வீடுகளில் மின் விசிறிகளை நிறுத்திவிட்டு போர்வைகளை போர்த்தியபடியே பொதுமக்கள் தூங்கும் நிலையே ஏற்பட்டது. இந்த குளிர் காலை 9 மணி வரை நீடித்ததால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.

    இதற்கிடையே சேலம் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் வெயிலின் தாக்கம் காலை முதலே அதிகரிக்கிறது. மேலும் பகல் 11 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை வெயிலின் உஷ்ணம் அதிகமாக இருப்பதால் சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்துள்ளது.

    மேலும் வானிலை மையமும் இனி வரும் நாட்களில் வெப்பம் அதிகரிக்கும் என்று கூறி உள்ளதால் நேற்று 86 டிகிரி வெயில் பதிவான நிலையில் இனி வரும் நாட்களில் மேலும் வெப்பத்தின் உஷ்ணம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இரவில் பனி குளிரும், பகலில் வெப்பத்தின் தாக்கமும் என வித்தியாசமான காலநிலை நிலவுவதால் இரவில் குளிரிலும், பகலில் வெயிலிலும் பொதுமக்கள் தவித்து வருகிறார்கள். 

    சூளகிரி பகுதிகளில் ஏற்பட்ட கடும் பனி பொழிவினால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.
    வேப்பனஹள்ளி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி தாலுகா பகுதிகளில் தொடர்ந்து சில நாட்களாக கடும் பனி பொழிவு இரவு 12 மணி முதல் காலை 9 மணி வரை நீடித்தது. இதனால் வீடுகளின் ஜன்னல், கதவுகள் மூடப்பட்டு இருந்தும் பெரும் பனியாக உணரப்பட்டது. வாகனங்கள் மீது பனி துளி விழுந்து, வாகனங்களை கழுவியதுபோல இருந்தது. வாகன ஓட்டிகள் சொட்டர் - குல்லா அணிந்தவாறு வாகனங்களை ஓட்டினர். 

    தேசிய நெடுஞ்சாலையில் பத்து அடிக்கு முன்பு என்ன வருகிறது என்பது தெரியாததால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டு சென்றனர். பனி அதிகமாக கொட்டுவதால் விவசாயம் பாதிப்புக்குள்ளாகும், பொதுமக்களுக்கு பல்வேறு நோய் ஏற்படும் என்ற அச்சத்துடன் உள்ளனர். 

    சூளகிரி பகுதிகளில் ஏற்பட்ட கடும் பனி பொழிவினால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அவதிப்பட்டனர். 
    ×