search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Hike"

    • விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது.
    • தேர்தல் முடிந்த கையோடு பால் விலை உயர்த்தப்பட்டு வருவது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    புதுடெல்லி:

    மத்திய அரசின் தேசிய பால்வள மேம்பாட்டு வாரியத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 'மதர் டெய்ரி' நிறுவனத்தின் பால் விலை லிட்டர் ஒன்றுக்கு 2 ரூபாய் உயர்த்தப்படுவதாக அறிவித்துள்ளது. இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது.

    மேலும் குஜராத் மாநிலத்தின் அமுல் பாலின் விலை லிட்டருக்கு 2 ரூபாய் உயர்த்தப்படுவதாக அறிவிப்பு வெளியாகி இருந்தது. இன்று முதல் இந்த விலை உயர்வு அமலுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    தேர்தல் முடிந்த கையோடு பால் விலை உயர்த்தப்பட்டு வருவது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


    மின்சார நிலைகட்டணம் உயர்வு, பீக் ஹவர் கட்டண உயர்வு, சூவசூலிப்பது ஆகியவை அனைத்து தொழில்துறையினரையும் பாதிப்பு.

    திருப்பூர்

    தமிழ்நாடு தொழில் துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பு மற்றும் திருப்பூர் தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு சார்பில் ஆலோசனைக்கூட்டம் திருப்பூரில் நடைபெற்றது. கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளர்கள் நிட்மா இணை செயலாளர் கோபி, டீமா தலைவர் முத்துரத்தினம், டெக்பா தலைவர் ஸ்ரீகாந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருப்பூர் தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு நிர்வாகிகள் பங்கேற்று கலந்தாய்வு செய்தனர்.

    மின்சார நிலைகட்டணம் உயர்வு, பீக் ஹவர் கட்டண உயர்வு, சூரியஒளி சக்தி மின் உற்பத்திக்கு கட்டணம் வசூலிப்பது ஆகியவை அனைத்து தொழில்துறையினரையும் பாதிப்புக்கு உள்ளாக்கியிருக்கிறது. மின்கட்டண உயர்வால் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறையினர் தொழில் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வை வாபஸ் பெறக்கோரி, தொழில்துறையினரின் நிலையை முதல்-அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு செல்வதற்காக தொழில்துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பினர் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.

    நாளை 9-ந் தேதி காலை தொழில்துறையின் நிலை குறித்து திருப்பூர் மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுக்கும் நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது. இதில் பங்கேற்க வரும் தொழில்துறையினர் கருப்பு பேட்ஜ் அல்லது கருப்பு சட்டை அணிந்து வர வேண்டும். அவரவர் நிறுவனங்களில் கருப்புக்கொடி ஏற்றி தொழில் பாதிப்பை அரசுக்கு தெரியப்படுத்த வேண்டும்.

    ஒவ்வொரு சங்கத்தில் இருந்து குறைந்தபட்சம் 50 உறுப்பினர்கள் வர வேண்டும். ஒவ்வொரு அமைப்பினரும் மின்கட்டண பாதிப்பு குறித்து மனுவில் கையெழுத்திட்டு வழங்க வேண்டும். அனைத்து அமைப்பினரும் ஒன்று சேர்ந்து திருப்பூர் பல்லடம் ரோட்டில் உள்ள ராமசாமி முத்தம்மாள் திருமண மண்டபத்தின் முன் அனைவரும் வர வேண்டும். பின்னர் கலெக்டர் அலுவலகத்தில் நடக்கும் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டரிடம் மனு கொடுத்து முதல்-அமைச்சருக்கு அனுப்ப இருப்பதாக ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.

    • பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை நாளை நடைபயணத்தை தொடங்க உள்ளார்.
    • ராமநாதபுரத்தில் பா.ஜனதா கட்சியினர் வீடு, வீடாக சென்று அழைப்பிதழ் வழங்கி வருகின்றனர்.

    ராமேசுவரம்

    ராமேசுவரத்தில் நாளை மறுநாள்  (28-ந்தேதி) பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை "என் மண், என் மக்கள்" என்ற பெயரில் நடைபயணத்தை தொடங்க உள்ளார். மத்திய மந்திரி அமித்ஷா நடைபயணத்தை தொடங்கி வைக்க உள்ளார். அ.தி.மு.க. பொதுச் செய லாளர் எடப்பாடி பழனி சாமி உள்பட கூட்டணி கட்சியினர் கலந்து கொள்கின்றனர்.

    இந்த நிலையில் இந்த தொடக்க விழாவிற்கான அழைப்பிதழை பாரதிய ஜனதா கட்சியினர் ராமேசுவரத்தில் வீடு, வீடாக வழங்கி வருகின்றனர்.

    ராமேசுவரம் பகுதியில் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் அழைப்பிதழை வழங்க பா.ஜனதா திட்டமிட்டுள்ளது. ராமேசுவரம் நகர் பா.ஜனதா நிர்வாகிகள், தொண்டர்கள் நகர் தலைவர் ஸ்ரீதர் தலைமையில் வீடு வீடாக சென்று வெற்றிலை, பாக்குடன் அழைப்பிதழை கொடுத்து வருகின்றனர்.

    இதில் ராமநாதபுரம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், செயலாளர் கணேசன் அய்யர், பொருளாளர் சுரேஷ், பொதுச்செயலாளர்கள் செல்வம், முருகன் உள்பட பலர் அழைப்பிதழ்களை வழங்கி வருகின்றனர்.

    • அனைத்து வகையான, உற்பத்தி பிரிவுக்கும் பாதுகாப்பாக பேக்கிங் செய்ய அட்டைப்பெட்டிகள் அவசியமாகிறது.
    • கிராப்ட் காகிதம் முன்னறிவிப்பு இல்லாமல் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

    திருப்பூர்:

    ஜவுளித்தொழில் வளர்ச்சியில் ஜவுளி உற்பத்தி மட்டுமல்ல, அதனை சார்ந்த பல்வேறு ஜாப் ஒர்க் நிறுவனங்களும் இயங்கி வருகின்றன. அதன்படி, அட்டை பெட்டி தயாரிப்பும் முக்கிய தொழிலாக இருக்கிறது. ஜவுளி மட்டுமல்ல அனைத்து வகையான, உற்பத்தி பிரிவுக்கும் பாதுகாப்பாக பேக்கிங் செய்ய அட்டைப்பெட்டிகள் அவசியமாகிறது. குறிப்பாக பனியன் ஆடைகள், பின்னலாடைகள் பேக்கிங் செய்ய அட்டைப்பெட்டிகள் அதிக அளவு பயன்படுத்தப்படுகிறது.கோவை மண்டல அளவில் 400க்கும் அதிகமான அட்டை பெட்டி உற்பத்தி ஆலைகள் இயங்கி வருகின்றன.

    முக்கிய மூலப்பொருளாக காகித ஆலைகளிடம் இருந்து கிராப்ட் காகிதம் கொள்முதல் செய்யப்படுகிறது. காகிதத்தை பக்குவப்படுத்தி, அட்டையாக மாற்றுவதற்கு, ஹீட்டர் பயன்படுத்தப்படுகிறது. மூலப்பொருளுக்கு அடுத்தபடியாக எந்திரங்களுக்கான மின்கட்டண செலவும் மிகவும் அதிகமாகியுள்ளது. தற்போதைய மின் கட்டண உயர்வால் உற்பத்தி செலவு அதிகரித்துள்ளது. அதாவது ஒரு யூனிட் மின்சார கட்டணம் 7.20 ரூபாயாக இருந்தது தற்போது 11 ரூபாயாக உயர்ந்துள்ளது. மேலும், தொழிலாளர் ஊதியம், போக்குவரத்து என பல்வேறு செலவுகள் உயர்ந்து உற்பத்தி செலவு கட்டுக்கடங்காத வகையில் உயர்ந்துள்ளது.

    ஏற்கனவே ஆர்டர் இல்லாத நிலையில் உற்பத்தி செலவு அதிகரித்துள்ளதால் நஷ்டத்தை சமாளிக்க வேண்டிய அட்டைப்பெட்டி விலையை உயர்த்துவதாக உற்பத்தியாளர்கள் அறிவித்துள்ளனர்.

    இது குறித்து தென்னிந்திய அட்டைப்பெட்டி உற்பத்தியாளர் சங்க துணை தலைவர்கள் தண்டபாணி, சிவக்குமார் ஆகியோர் கூறுகையில், கிராப்ட் காகிதம் முன்னறிவிப்பு இல்லாமல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. டன் ஒன்றுக்கு 2,000 ரூபாய் உயர்ந்துள்ளதால் அதிர்ச்சி அடைந்து ள்ளோம்.

    கடும் நஷ்டம் ஏற்படும் என்பதால் அட்டைப்பெட்டி விலையை 15 சதவீதம் வரை உயர்த்த திட்டமிட்டுள்ளோம் என்றனர்.

    • கோவை மார்க்கெட்டுகளுக்கான தக்காளி வரத்து தற்போது மிகவும் குறைந்து உள்ளது.
    • தக்காளி ரூ.120க்கும், பீன்ஸ் ரூ.130க்கும் விற்பனை

    கோவை,

    கோவை மாநகரில் உக்கடம், காந்திபுரம், ஆர்.எஸ்.புரம் உள்பட 5 பகுதிகளில் காய்கறி சந்தைகள் உள்ளன.

    இங்கு உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்களில் இருந்தும் காய்கறிகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. இங்கு அவை ஏல முறையில் விற்பனை செய்யப்படுகின்றன.

    கோவை மார்க்கெட்டுகளுக்கான தக்காளி வரத்து தற்போது மிகவும் குறைந்து உள்ளது. இதனால் அவற்றின் விலை வேகமாக அதிகரித்து வருகிறது.

    இருந்தபோதிலும் பண்ணைப்பசுமை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.60க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    எனவே கோவை மார்க்கெட்டுகளில் தக்காளி விலை விரைவில் சரியும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால் இங்கு உள்ள காய்கறி சந்தைகளில் தற்போதும் ஒரு கிலோ தக்காளி ரூ.100 முதல் ரூ.120 வரை விற்கப்பட்டு வருகிறது.

    கோவையில் தக்காளி விலை ஒருபுறம் உயர்ந்து கொண்டே இருக்க, மற்றொரு புறம் மற்ற காய்கறிகளின் விலையும் கிடுகிடுவென உயர்ந்து காணப்படுகிறது.

    கோவை டி.கே. மார்க்கெட்டில் காய்கறிகளின் விலை கிலோ விவரம் (ரூபாயில்):

    வெண்டைக்காய்-60, பீர்க்கங்காய்-40, உருளைக்கிழங்கு-30, பாகற்காய்-40, புடலங்காய்-40, வாழைக்காய்-40, சுரைக்காய்-40, பூசணிக்காய்-30, முருங்கைக்காய்-60, அவரைக்காய்-100, பீன்ஸ்-130, கத்தரிக்காய்-60, கேரட்-80, எலுமிச்சை-80, சவ்சவ்-30, சின்னவெங்காயம்-120, பெரிய வெங்காயம் (3 கிலோ)-100, பீட்ரூட்-60.

    இதுகுறித்து கோவை டி.கே.காய்கறி மார்க்கெட் வியாபாரி ஜெயக்குமார் என்பவர் கூறுகையில், கோவையில் பருவமழை பெய்து வருகிறது. எனவே மார்க்கெட்டுக்கு போதிய காய்கறிகள் வரத்து இல்லை. இதனால் அவற்றின் விலை அதிகரித்து உள்ளது. கோவை மார்க்கெட்டுக்கு சரக்கு லாரிகளின் வரத்து அதிகரிக்கும்போது, காய்கறிகளின் விலை படிப்படியாக குறைந்துவிடும் என்றார்.

    • ஏராளமான விவசாயிகள் தற்போது சைனீஷ் வகை காய்கறிகளை அதிகளவு உற்பத்தி செய்து வருகின்றனர்.
    • புருக்கோலி தற்போது ரூ.100 முதல் 130 வரை கொள்முதல் விலை அதிகரித்துள்ளது.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டத்தில் தேயிலைக்கு அடுத்தபடியாக உருளைக்கிழங்கு, கேரட், பீட்ரூட், முட்டைகோஸ், முள்ளங்கி, டர்னீப், பீன்ஸ் உள்ளிட்ட மலை காய்கறிகள் பயிரிடப்படுகின்றன.

    இதுதவிர ஏராளமான விவசாயிகள் தற்போது சைனீஷ் வகை காய்கறிகளை அதிகளவு உற்பத்தி செய்து வருகின்றனர். இங்கு பயிரிடப்படும் சைனீஷ் வகை காய்கறிகள், வெளி மாநிலம், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.சைனீஷ் வகை காய்கறிகளுக்கு எப்போதும் சீரான விலை கிடைத்து வருகிறது.

    இதனால் அவற்றை பயிரிடுவதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். நீலகிரியில் உற்பத்தியாகும் புருக்கோலிக்கு கடந்த சில வாரஙகளுக்கு முன்புவரை, ஒரு கிலோ ரூ.80 முதல் 100 வரை கொள்முதல்விலை கிடைத்து வந்தது. தற்போது ரூ.100 முதல் 130 வரை கொள்முதல் விலை அதிகரித்து உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

    • மெட்ரோ ரெயிலில் பயணித்தால் கட்டணத்தில் சலுகை உண்டு. மின்சார ரெயிலில் பயணிப்பவர்களுக்கு சலுகை கிடைக்காது.
    • பார்க்கிங் கட்டணம் வசூலிப்பதில் மெட்ரோ ரெயில் நிலையம் பாரபட்சம் காட்டுவது பயணிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.

    சென்னை:

    சென்னையில் மின்சார ரெயில் மற்றும் மெட்ரோ ரெயில் போக்குவரத்து பயdisணிகளுக்கு போக்குவரத்து நெருக்கடியை குறைத்துள்ளது.

    2-ம் கட்ட மெட்ரோ ரெயில் பணிகளும் முடிந்துவிட்டால் சென்னையில் எந்த பகுதிக்கும் எளிதாக சென்று வர முடியும்.

    அதற்கு ஏற்ற வகையில்தான் மின்சார ரெயில் நிலையங்களுடன் மெட்ரோ ரெயிலும் இணைக்கப்படுகிறது. பரங்கிமலை, கிண்டி, திரிசூலம் மின்சார ரெயில் நிலையங்களில் இருந்து மெட்ரோ ரெயில் நிலையங்களுக்குள் நடந்து செல்லும்படி வசதிகள் செய்யப்பட்டு உள்ளன.

    இதனால் தற்போது இரு சக்கர வாகனங்களில் தொலை தூரங்கள் வரை செல்வதை தவிர்த்து விட்டு பலர் மெட்ரோ நிலைய பார்க்கிங்கில் டூ வீலரை நிறுத்தி செல்கிறார்கள். பார்க்கிங் கட்டணமாக 6 மணி நேரம் வரை ரூ.10-ம் 12 மணி நேரம் வரை ரூ.15-ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

    இந்த நிலையில் வருகிற 14-ந்தேதி முதல் பார்க்கிங் கட்டணத்தை ஒரு மடங்கு அதிகமாக உயர்த்தி மெட்ரோ ரெயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இனி 6 மணி நேரம் வரை ரூ.20, 12 மணி நேரம் வரை ரூ.30, 12 மணி நேரத்துக்கு மேல் ரூ.40 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

    மாதாந்திர கட்டணமும் 6 மணி நேரத்துக்கு ரூ. 500-ல் இருந்து ரூ.750 ஆகவும், 12 மணி நேரத்துக்கு ரூ.1000-ல் இருந்து ரூ.1,500 ஆகவும் உயர்த்தப்பட்டு உள்ளது.

    பார்க்கிங் கட்டணம் வசூலிப்பதில் மெட்ரோ ரெயில் நிலையம் பாரபட்சம் காட்டுவது பயணிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.

    அதாவது மெட்ரோ ரெயிலில் பயணித்தால் கட்டணத்தில் சலுகை உண்டு. அதாவது பழைய கட்டணமே வசூலிக்கப்படும். மின்சார ரெயிலில் பயணிப்பவர்களுக்கு இந்த சலுகை கிடைக்காது. அவர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும்.

    இரண்டு நிறுவனங்களும் அரசு நிறுவனங்கள்தான். இதில் ஏன் பயணிகளிடம் பாகுபாடு காட்ட வேண்டும் என்று மின்சார ரெயில் பயணிகள் ஆதங்கப்படுகிறார்கள்.

    சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.112 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.37,200-க்கு விற்பனையாகிறது.
    சென்னை:

    தங்கம் விலை இன்று பவுனுக்கு ரூ.112 உயர்ந்தது. சென்னையில் இன்று காலை ஒரு பவுன் ரூ. 37 ஆயிரத்து 200-க்கு விற்றது. கிராமுக்கு ரூ.14 உயர்ந்து ரூ.4 ஆயிரத்து 650 ஆக உள்ளது.

    வெள்ளி விலையில் மாற்றம் இல்லை. வெள்ளி கிலோ ரூ.71 ஆயிரத்து 500 ஆக உள்ளது. ஒரு கிராம் ரூ.71.50-க்கு விற்பனை செய்யப்பட்டது.
    தனியார் பால் விலை ஜுன் 1-ந்தேதி முதல் லிட்டருக்கு ரூ.2 உயருகிறது. ஆரோக்கியா மற்றும் ஹட்சன் பால் விலை மட்டும் உயருகின்றன.
    சென்னை:

    தமிழகத்தில் பால் விற்பனையில் அரசின் ஆவின் நிறுவனமும் 5 தனியார் பால் நிறுவனங்களும் ஈடுபட்டு வருகின்றன.

    பால் உற்பத்தியாளர்களி டம் இருந்து இவைகள் பாலை கொள்முதல் செய்து பதப்படுத்தி தரம் பிரித்து பொதுமக்களுக்கு வினியோகம் செய்கின்றன.

    ஆவின் நிறுவனம் தினமும் 30 லட்சம் லிட்டர் பால் விற்பனை செய்கிறது. ஹட்சன் (ஆரோக்கியா), ஹெரிட்டாஷ், டோட்லா, ஜெசி, திருமலா போன்ற ஆந்திர மாநில பால் நிறுவனங்களும் போட்டி போட்டு பால் வினியோகத்தில் ஈடுபட்டு வருகின்றன.

    தமிழகத்தை பொறுத்தவரை தனியார் பால் விலையை விட ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.10 குறைவாக விற்கப்படுகிறது. அதனால் கடைகளில் உடனே விற்று தீர்ந்து விடுகிறது.

    ஆவின் பால் புல்கிரீம் லிட்டர் ரூ.45, சமன்படுத்தப்பட்ட பால் ரூ.37க்கு விற்கப்படுகிறது.

    இந்த நிலையில் தனியார் பால் விலை ஜுன் 1-ந்தேதி முதல் லிட்டருக்கு ரூ.2 உயருகிறது. ஆரோக்கியா மற்றும் ஹட்சன் பால் விலை மட்டும் உயருகின்றன. கொள்முதல் விலையை காரணம் காட்டி விலை உயர்த்தப்படுவதாக அந்நிறுவனங்கள் பால் முகவர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.

    ஆரோக்கியா புல்கிரீம் லிட்டர் பால் ரூ.54-ல் இருந்து ரு.56 ஆகவும், சமன்படுத்தப்பட்ட பால் ரூ.42-ல் இருந்து ரூ.44 ஆகவும் உயர்த்தப்பட உள்ளது.

    ஹெரிட்டேஜ் நிலைப்படுத்தப்பட்ட பால் ரூ.48-ல் இருந்து ரூ.50 ஆகவும், கொழுப்பு சத்து செறிவூட்டப்பட்ட பால் ரூ.52-ல் இருந்து ரு.54 ஆகவும் உயருகிறது.

    இதுகுறித்து பால் முகவர்கள் சங்க தலைவர் எஸ்.ஏ.பொன்னுசாமி கூறியதாவது:-

    தனியார் பால் நிறுவனங்கள் தொடர்ந்து விலையை உயர்த்தி வருகின்றன. இந்த வருடத்தில் விலை உயர்வு இரண்டாவது முறையாகும். இதனை அரசு தடுக்க வேண்டும். விலை உயர்வை திரும்ப பெற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிலையில் ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என்று பால் உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் நல சங்க தலைவர் செங்குட்டுவேலு மாலைமலர் நிருபரிடம் கூறியதாவது:-


    ஆவின் பால் கொள்முதல் விலை 2014-ம் ஆண்டு உயர்த்தப்பட்டது. அதன்படி பசும்பால் லிட்டர் ரூ.28-க்கும், எருமை பால் ரு.32-க்கும் கொள்முதல் செய்யப்படுகிறது.

    தற்போது மாட்டு தீவனம் விலை பல மடங்கு உயர்ந்து விட்டது. மருத்துவ செலவு மற்றும் பராமரிப்பு செலவும் பல மடங்கு அதிகரித்துள்ளது.

    எனவே பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.16 அதிகமாக்க வேண்டும் என்பது எங்கள் கோரிக்கை. கடந்த முறை 1 லிட்டர் பால் கொள்முதல் விலை ரூ.5 அதிகரிக்கப்பட்டது. விற்பனை விலை ரூ.10அதிகமானது.

    5 வருடங்களாக பால் கொள்முதல் விலை அதிகரிக்கப்படவில்லை. பால் மாடு வளர்ப்பவர்கள் அதிக செலவு காரணமாக அதிக சுமையை ஏற்க வேண்டியுள்ளது. எனவே, ஆவின் பால் கொள்முதல் விலையை குறைந்தது லிட்டருக்கு ரூ.10 அதிகரிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    சேலம் மார்க்கெட்களில் கடந்த வாரம் 40 ரூபாய்க்கு விற்ற தக்காளியின் விலை கிலோவுக்கு 10 ரூபாய் உயர்ந்து தற்போது 50 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் ஓமலூர், மேச்சேரி, காடையாம்பட்டி பகுதிகளில் அதிக அளவில் தக்காளி பயிரிடப்படுகிறது. இந்த தக்காளி சேலம் மார்க்கெட்களுக்கு அதிக அளவில் விற்பனைக்கு கொண்டு வரப்படும்.

    சேலம் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தாலும் ஓமலூர், மேச்சேரி பகுதிகளில் குறிப்பிடும் அளவுக்கு இதுவரை மழை பெய்யவில்லை. இதனால் அந்த பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள தக்காளி செடிகள் தண்ணீரின்றி கருகி வருகின்றன. இதனால் தக்காளி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதால் சேலம் மார்க்கெட்களுக்கு தக்காளி வரத்து குறைந்துள்ளது.

    கடந்த வாரம் சேலம் மார்க்கெட்களில் 40 ரூபாய்க்கு விற்ற தக்காளியின் விலை கிலோவுக்கு 10 ரூபாய் உயர்ந்து தற்போது 50 ரூபாய்க்கு விற்பனையாகிறது. விலையை கேட்டு அதிர்ச்சி அடையும் பொது மக்கள் தக்காளியை குறைந்த அளவே வாங்கி செல்வதை பார்க்க முடிகிறது.

    இந்த விலை உயர்வுக்கான காரணம் குறித்து சேலத்தை சேர்ந்த வியாபாரி ஒருவர் கூறுகையில், தக்காளி வரத்து குறைந்துள்ளதால் விலை உயர்ந்து வருகிறது. இந்த விலை உயர்வு மேலும் அதிகரிக வாய்ப்புள்ளது என்றார்.
    சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.296 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.24,722-க்கு விற்பனையாகிறது.
    சென்னை:

    சென்னையில் கடந்த 5-ந் தேதி ஒரு பவுன் ரூ.24 ஆயிரத்து 96 ஆக இருந்தது. பின்னர் படிப்படியாக விலை உயர்ந்தது. நேற்று முன்தினம் பவுனுக்கு ரூ.112 அதிகரித்து ரூ.24 ஆயிரத்து 416 ஆக இருந்தது. நேற்று மீண்டும் பவுனுக்கு ரூ.16 உயர்ந்து 24 ஆயிரத்து 432-க்கு விற்றது.

    இன்றும் தொடர்ந்து விலை அதிகரித்துள்ளது. ஒரே நாளில் பவுனுக்கு ரூ.296 உயர்ந்துள்ளது. ஒரு பவுன் ரூ.24 ஆயிரத்து 722 ஆக உள்ளது. கிராமுக்கு ரூ.37 ஆதிகரித்து ரூ.3,091-க்கு விற்கிறது.

    வெள்ளி கிலோவுக்கு ரூ.300 உயர்ந்துள்ளது. ஒரு கிலோ ரூ. 40 ஆயிரத்து 400 ஆகவும், ஒரு கிராம் ரூ.40.40 ஆகவும் உள்ளது.
    சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.112 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.24,416-க்கு விற்பனையாகிறது.
    சென்னை:

    தங்கம் விலை கடந்த 3-ந் தேதி ஒரு பவுன் ரூ.23 ஆயிரத்து 936 ஆக இருந்தது. அதன் பின்னர் தொடர்ந்து விலை உயர்ந்தது. நேற்று பவுனுக்கு ரூ.16 குறைந்து ரூ.24 ஆயிரத்து 304 ஆக இருந்தது.

    இன்று மீண்டும் ஒரே நாளில் பவுனுக்கு ரூ.112 உயர்ந்துள்ளது. ஒரு பவுன் ரூ.24 ஆயிரத்து 416 ஆக உள்ளது. ஒரு கிராம் ரு.3,052-க்கு விற்கிறது.

    வெள்ளி ஒரு கிலோ ரூ.40 ஆயிரத்து 100 ஆகவும், ஒரு கிராம் ரூ.40.10 ஆகவும் உள்ளது.
    ×