என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "holiday"

    • அதிகாலையில் சூரியன் உதயமாகும் காட்சியை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து இருந்தனர்.
    • கடல் நீர் மட்டும் தாழ்வு காரணமாக 2 மணி நேரம் தாமதமாக விவேகானந்தர் மண்டபத்துக்கு காலை 10 மணிக்கு பிறகு போக்குவரத்து தொடங்கியது.

    கன்னியாகுமரி:

    சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு உள்ளூர் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள். விடுமுறை நாட்களில் வழக்கத்தை விட சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக இருக்கும். இந்நிலையில் கோடை விடுமுறை முடிந்து கடந்த 12 மற்றும் 14 ஆகிய தேதிகளில் பள்ளிகூடங்கள் திறக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அடியோடு குறைந்தது. இதனால் கன்னியாகுமரி கடற்கரை பகுதி கடந்த சில நாட்களாக வெறிச்சோடி காணப்பட்டது.

    இந்நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் மக்கள் குடும்பத்துடன் கன்னியாகுமரிக்கு படையெடுத்து வந்த வண்ணமாக உள்ளனர். திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடற்கரை பகுதியில் இன்று அதிகாலையில் சூரியன் உதயமாகும் காட்சியை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து இருந்தனர். கன்னியாகுமரி கடலில் இன்று அதிகாலையில் சூரியன் உதயமான காட்சியை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர். கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மற்றும் திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் தரிசனத்துக்காக பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. கன்னியாகுமரியில் உள்ள தூய அலங்கார உபகார மாதா திருத்தலத்திலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. கன்னியாகுமரி முஸ்லிம் தெருவில் உள்ள முஸ்லிம் பள்ளிவாசலிலும் ஏராளமான சுற்றுலா பயணிகள் சென்று தொழுகை நடத்தினர்.

    கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை பார்வையிட இன்று காலை 8 மணியில் இருந்தே சுற்றுலா பயணிகள் படகுத்துறையில் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். ஆனால் கடல் நீர் மட்டும் தாழ்வு காரணமாக 2 மணி நேரம் தாமதமாக விவேகானந்தர் மண்டபத்துக்கு காலை 10 மணிக்கு பிறகு போக்குவரத்து தொடங்கியது. அதன் பிறகு சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் படகில் பயணம் செய்து விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை பார்வையிட்டு வந்தனர். மேலும் கன்னியாகுமரியில் உள்ள சுற்றுலா தலங்களான காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், சுனாமி நினைவு பூங்கா, கடற்கரை சாலையில் உள்ள பேரூராட்சி பொழுதுபோக்கு பூங்கா, விவேகானந்தபுரத்தில் உள்ள ராமாயண தரிசன சித்திரக்கண்காட்சி கூடம், பாரதமாதாகோவில் கன்னியாகுமரி சன்செட் பாயிண்ட் கடற்கரை பகுதி, மியூசியம், அரசு அருங்காட்சியகம், உள்பட அனைத்து சுற்றுலா தலங்களிலும் இன்று காலையில் இருந்தே சுற்றுலா பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

    வட்ட கோட்டைக்கு சுற்றுலா பயணிகள் உல்லாச படகு சவாரி செய்தனர். மாலை நேரங்களில் கடற்கரையில் இதமான குளிர் காற்று வீசுகிறது. இதனால் கோடை வெப்பத்தை தணிக்க கடற்கரைக்கு சுற்றுலா பயணிகள் படையெடுத்து சென்ற வண்ணமாக உள்ளனர். இதில் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆர்வமிகுதியினால் கடலில் ஆனந்த குளியல் போடுகின்றனர். இதனால் விடுமுறை நாளான இன்று சுற்றுலா தலங்கள் களைகட்டி உள்ளது. இந்த சுற்றுலா தலங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது. கடற்கரை பகுதியில் சுற்றுலா போலீசாரும் கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும், தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

    • ராமநாதபுரத்தில் பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டது.
    • பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டாம்.

    ராமநாதபுரம்

    ஏர்வாடி சந்தனக்கூடு திருவிழாவை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத் திற்கு கடந்த 13-ந்தேதி உள்ளூர் விடுமுறை விடப் பட்டிருந்தது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் இன்று (24-ந்தேதி) வேலை நாள் என கலெக்டர் விஷ்ணு சந்திரன் அறிவித்தி ருந்தார். அதன்படி இன்று பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு வேலை நாளாகும்.

    இந்தநிலையில் மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர்களுக்கு மண்டபம், திருப்புல்லாணி, ராமநாதபுரம், ஆர்.எஸ்.மங்கலம், திருவாடனை, நயினார்கோயில், போகலூர், பரமக்குடி, கமுதி, முதுகுளத்தூர் மற்றும் கடலாடி ஆகிய11 ஒன்றியங்களில் சி.ஆர்.சி பயிற்சி வகுப்புகள் இன்று நடைபெறுகிறது.

    இதனால் பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டாம் என அனைத்து அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் வாயிலாக தெரிவிக்கப் படுகிறது. மேலும் ஒன்று முதல் 10-ம் வகுப்பு வரை வழக்கம் போல் வகுப்புகள் நடக்கும் என தெரிவிக்கப் பட்டது. அதன்படி பள்ளிகள் இன்று செயல்பட்டன. 

    • பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ஜூன் 30-ந்தேதி அரசு விடுமுறை அறிவிக்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
    • பண்டிகையை கொண்டாடி திரும்புவதில் சிரமம் இருக்காது.

    ராமநாதபுரம்

    மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹி ருல்லா எம்.எல்.ஏ. கூறிய தாவது:-

    தமிழ்நாட்டில் ஹஜ் பெருநாள் எனும் பக்ரீத் பண்டிகை நாளை (29-ந்தேதி) கொண்டாட உள்ளது. இதையொட்டி 30-ந்தேதியை (வெள்ளிக் கிழமை) அரசு விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும் என முஸ்லிம்கள் எதிர் பார்த்து உள்ளனர்.

    வருகிற 1, 2-ந்தேதி வார விடுமுறை என்பதால் மாணவ-மாணவிகள், அரசு ஊழியர்கள் தமது சொந்த ஊர்களில் பண்டி கையை கொண்டாடி திரும்புவதில் சிரமம் இருக்காது. மேலும் ஒரு சில கல்வி நிறுவனங்களில்

    30-ந்தேதி அன்று தேர்வு களும் நடைபெற உள்ள தாக தகவல் வெளியாகி உள்ளது.

    சொந்த ஊருக்குச் செல்பவர்கள் திரும்பிவர அவகாசம் அளிக்கும் வகையில் பக்ரீத் பண்டி கைக்கு அடுத்த நாளான 30-ந்தேதியை விடுமுறை நாளாக அறிவிக்க முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சிக்கல் சிங்காரவேலவர் கோவில் கும்பாபிஷேகம் வருகிற 5-ந் தேதி நடக்கிறது.
    • வருகிற 8-ந் தேதி பள்ளிகளுக்கு வேலை நாளாக அறிவிக்கப்டுகிறது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிப்பதாவது:-

    நாகை மாவட்டம் சிக்கல் நவநீதேசுவர சுவாமி கோவிலில், ஜூலை 5-ம் தேதி குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது.

    இதனால், நாகை வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் ஜூலை 5-ம் தேதி ஒருாள் மட்டும் விடுமுறை அளிக்கப்படுகிறது.

    இந்த விடுமுறையை ஈடுசெய்யும் பொருட்டு, ஜூலை 8-ம் தேதி சனிக்கி ழமை அன்று பள்ளிகளுக்கு வேலைநாளாக அறிவிக்கப்டுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஈரானில் வெப்பநிலை 123 டிகிரி பாரன்ஹீட்டை (51 செல்சியஸ்) தாண்டியுள்ளது.
    • நாளை தெஹ்ரானில் வெப்பநிலை 39 செல்சியசாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ஈரானில் வரலாறு காணாத வெப்பம் காரணமாக நாளை மற்றும் நாளை மறுநாள் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வயதானவர்கள் மற்றும் உடல்நலம் பாதிப்பு உள்ளவர்கள் வெளியே செல்லாமல் வீட்டிற்குள்ளேயே இருக்குமாறும் ஈரான் அரசு தெரிவித்துள்ளது.

    தெற்கு ஈரானில் உள்ள பல நகரங்கள் ஏற்கனவே பல நாட்கள் அதிகளவிலான வெப்பத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. தெற்கு நகரமான அஹ்வாஸில் இந்த வாரம் வெப்பநிலை 123 டிகிரி பாரன்ஹீட்டை (51 செல்சியஸ்) தாண்டியதாக அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

    இதுகுறித்து அரசு செய்தித் தொடர்பாளர் அலி பஹடோரி- ஜஹ்ரோமி கூறுகையில், "புதன் மற்றும் வியாழன் (நாளை மற்றும் நாளை மறுநாள்) விடுமுறை தினங்களாக இருக்கும். அதே நேரத்தில் மருத்துவமனைகள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கும் என்று சுகாதார அமைச்சகம் கூறியது" என்றார்.

    அதன்படி, நாளை தெஹ்ரானில் வெப்பநிலை 39 செல்சியசாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • 259 உணவு நிறுவனங்களில் ஆய்வு செய்ததில் 201 நிறுவனங்களில் முரண்பாடுகள் கண்டறியப்பட்டன.
    • 21 மோட்டார் போக்குவரத்து நிறுவனங்களில் ஆய்வு செய்ததில் 7 நிறுவனங்களில் குறைபாடுகள் காணப்பட்டது.

    சென்னை:

    சென்னை 1,2 மற்றும் 3 -ம் வட்ட தொழிலாளர் உதவி ஆணையர்கள்(அமலாக்கம்) தலைமையில் தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள் சுதந்திர தின விடுமுறை நாளில் தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள்(தேசிய பண்டிகை விடுமுறை) சட்டம் 1958-ன் கீழ் சென்னை மாவட்டத்தில் உள்ள 324 கடைகள் மற்றும் நிறுவனங்களில் ஆய்வு செய்தனர். இதில் 257 கடைகளில் முரண்பாடுகள் கண்டுபிடிக்கப்பட்டது.

    259 உணவு நிறுவனங்களில் ஆய்வு செய்ததில் 201 நிறுவனங்களில் முரண்பாடுகள் கண்டறியப்பட்டன. இதேபோல் 21 மோட்டார் போக்குவரத்து நிறுவனங்களில் ஆய்வு செய்ததில் 7 நிறுவனங்களில் குறைபாடுகள் காணப்பட்டது.

    இதையடுத்து மொத்தம் 465 நிறுவனங்கள் மீது அபராதம் விதிக்கப்பட்டது. இது தொடர்பாக சென்னை 3-ம் வட்ட தொழிலாளர் உதவி ஆணையர்(அமலாக்கம்) எஸ்.நீலகண்டன் கூறுகையில், தேசிய விடுமுறை தினத்தன்று நிறுவனங்கள் தங்கள் அலுவலகங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு விடுமுறை அளிக்கவேண்டும். அவ்வாறு விடுமுறை அளிக்காமல் பணிக்கு அமர்த்தியுள்ள தொழிலாளர்களுக்கு இரட்டிப்பு சம்பளம் அல்லது மாற்று விடுப்பு வழங்க வேண்டும்.

    இதுபற்றி தொழிலாளர் உதவி ஆணையர்களுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்கவேண்டும். அவ்வாறு அளிக்காத 465 நிறுவனங்களின் உரிமையாளர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என்றார்.

    • எல்.டி.சி, ஸ்டோர் கீப்பர் நிலை-3 பணியிடத்துக்கான எழுத்து தேர்வு வருகிற 27-ந்தேதி நடக்கிறது.
    • 4 பிராந்தியங்களிலும் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறையால் தேந்தெடுக்கப்பட்ட பள்ளியில் நடைபெறவுள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-

     எல்.டி.சி, ஸ்டோர் கீப்பர் நிலை-3 பணியிடத்துக்கான எழுத்து தேர்வு வருகிற 27-ந்தேதி 4 பிராந்தியங்களிலும் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறையால் தேந்தெடுக்கப்பட்ட பள்ளியில் நடைபெறவுள்ளது.

    தேர்வுக்கான முன்னேற்பாடுகளை மேற்கொள்வதற்காக வருகிற 26-ந்தேதி (சனிக்கிழமை) அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்படுகிறது.

    எழுத்து தேர்வு சுமூகமாக நடைபெற அனைத்து பள்ளிகளின் தலைவர்களும் தங்களால் முயன்ற உதவிகளை செய்யவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • நாட்டின் பிரதமர் ஒருவர் அனைத்து நேரத்திலும் பணியில் இருக்கிறார்.
    • இதுவரை 3 ஆயிரத்துக்கும் அதிகமான நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி பங்கேற்றுள்ளார்.

    புதுடெல்லி:

    குஜராத் முதல்வராக இருந்த மோடி 2014-ல் பா.ஜ.க. அமோக வெற்றி பெற்றதையடுத்து நாட்டின் பிரதமராக பதவி ஏற்றுக் கொண்டார். 2019 தேர்தலில் பா.ஜ.க. மீண்டும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து 2-வது முறையாக அவர் பிரதமர் ஆனார்.

    இந்நிலையில், பிரதமராக மோடி பொறுப்பேற்றது முதல் தற்போது வரை அவர் பங்கேற்ற நிகழ்ச்சிகள் குறித்த விவரங்களை தருமாறு தகவல் அறியும் சட்டம் மூலம் தகவல் கேட்கப்பட்டிருந்தது. இதற்கு பிரதமர் அலுவலகம் சார்பில் அளிக்கப்பட்டுள்ள பதிலில் கூறியிருப்பதாவது:-

    2014 முதல் ஒருநாள் கூட பிரதமர் மோடி விடுமுறை எடுக்கவில்லை. நாட்டின் பிரதமர் ஒருவர் அனைத்து நேரத்திலும் பணியில் இருக்கிறார்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    தகவல் அறியும் சட்டம் மூலம் அளிக்கப்பட்டுள்ள பதிலை அசாம் மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

    அண்மையில் நடைபெற்ற விழாவில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பேசும்போது, "பிரதமர் மோடி தினமும் 18 மணி நேரம் பணியாற்றுகிறார். கடந்த 20 ஆண்டுகளில் அவர் ஒரு நாள் கூட விடுமுறை எடுத்ததே இல்லை" என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    தகவல் அறியும் சட்டம் மூலம் 2-வது கேள்வியும் கேட்கப்பட்டிருந்தது. பிரதமர் பதவியேற்றது முதல் அவர் எத்தனை நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார் என்பதே அந்த 2-வது கேள்வியாகும்.

    இதற்கு பிரதமர் அலுவலகம் அளித்துள்ள பதிலில், "இதுவரை 3 ஆயிரத்துக்கும் அதிகமான நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி பங்கேற்றுள்ளார். ஏறக்குறைய ஒரு நாளைக்கு ஒரு நிகழ்ச்சி என்ற வகையில் அவர் நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார்" என்று கூறப்பட்டுள்ளது.

    • 100 சிறப்பு பஸ்கள் இயக்க விரிவான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    • முன்னதாகவே முன்பதிவு செய்து பயணிக்க வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக கும்பகோணம் கோட்ட மேலாண் இயக்குனர் மோகன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

    தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் சார்பில் வருகிற 16-ந் தேதி (சனிக்கிழமை), 17-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வார விடுமுறையையொட்டியும், 18-ந் தேதி (திங்கட்கிழமை) விநாயகர் சதுர்த்தி விடுமுறையையொட்டியும் பொதுமக்களின் வசதிக்காக திருச்சி, கும்பகோணம், தஞ்சை, பட்டுக்கோட்டை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி, புதுக்கோட்டை, காரைக்குடி, ராமநாதபுரம் ஆகிய ஊர்களில் இருந்து சென்னைக்கும், சென்னையில் இருந்து திருச்சி, கும்பகோணம், தஞ்சை, பட்டுக்கோட்டை, நாகை, வேளாங்கண்ணி, திருவாரூர், மயிலாடுதுறை, வேதாரண்யம், திருத்து றைப்பூண்டி, புதுக்கோட்டை, காரைக்குடி, ராமநாதபுரம் ஆகிய ஊர்களுக்கு 200 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.

    திருச்சியில் இருந்து கோவை, திருப்பூர், மதுரை ஆகிய இடங்களுக்கும், கோவை, திருப்பூர், மதுரை ஆகிய இடங்களில் இருந்து திருச்சிக்கும், திருச்சியில் இருந்து காரைக்குடி, புதுக்கோட்டை, தஞ்சை, நாகை, வேளாங்கண்ணி ஆகிய ஊர்களுக்கு 100 சிறப்பு பஸ்களும் என கூடுதலாக 300 சிறப்பு பஸ்கள் நாளை ( வெள்ளிக்கிழமை ), நாளை மறுநாள் (சனிக்கிழமை) இயக்கப்பட உள்ளது.

    அதேபோன்று விடுமுறைக்கு வந்த பணிகள் மீண்டும் அவரவர் ஊர்களுக்கு திரும்ப செல்ல 18-ந் தேதியும், 19-ந் தேதியும் சென்னை தடத்தில் 200 சிறப்பு பஸ்களும், பிற தடங்களில் 100 சிறப்பு பஸ்களும் இயக்க விரிவான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    விடுமுறை காரணமாக பயணிகள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல வசதியாக முன்னதாகவே முன்பதிவு செய்து பயணிக்க வேண்டும். முன்பதிவு செய்யும் பயணி களின் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதலாக பஸ்கள் இயக்க நடவடிக்கை மேற்கொள்ள ப்படும்.

    முன்பதிவு செய்வதன் மூலம் எந்த சிரமமும் இன்றி பயணிப்பதோடு பயணிப்ப வர்களின் தேவைக்கு ஏற்ப போக்குவரத்து கழகங்கள் கணித்து அதற்கு ஏற்ப பஸ் சேவையை அளிக்க ஏதுவாகும்.

    அனைத்து போக்குவரத்து கழகங்களிலும் முக்கிய நகரங்களுக்கு இடையே இயக்கப்படும் பஸ்களுக்கும் முன்பதிவு சேவை விரிவுபடுத்த ப்பட்டுள்ளது.

    எனவே பயணிகள் www.tnstc.in என்ற இணைய முகவரி மூலம் முன்பதிவு செய்யலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கொடைக்கானலில் உள்ள தங்கும் விடுதிகள் அனைத்தும் நிரம்பி உள்ளது. இதனால் வியாபாரிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
    • சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக இருந்த காரணத்தினால் வாகன போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.

    கொடைக்கானல்:

    மலைகளின் இளவரசியான கொடைக்கானலை காண வெளி மாநிலங்கள் மட்டுமின்றி வெளி நாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்தது. கடந்த வாரம் பெய்த கனமழை காரணமாக சுற்றுலா பயணிகள் தங்கும் விடுதியிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டது.

    இதனால் பல்வேறு சுற்றுலா இடங்களும் வெறிச்சோடி காணப்பட்டன. ஆனால் தற்போது கொடைக்கானலில் மேகமூட்டத்துடன் கூடிய இதமான சீதோசனம் நிலவி வருகிறது. தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை, காந்தி ஜெயந்தி தொடர் விடுமுறையையொட்டி இன்று சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. கொடைக்கானலில் உள்ள தங்கும் விடுதிகள் அனைத்தும் நிரம்பி உள்ளது. இதனால் வியாபாரிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

    பிரையண்ட் பூங்கா, ரோஜா பூங்கா, செட்டியார் பூங்கா, வெள்ளி நீர்வீழ்ச்சி, பைன்பாரஸ்ட், குணாகுகை, மோயர் பாயிண்ட், தூண்பாறை, பசுமைப் பள்ளத்தாக்கு உள்ளிட்ட இடங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. மேலும் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள நட்சத்திர ஏரியில் உற்சாகமாக படகு சவாரியும், ஏரிச்சாலையில் சைக்கிள் மற்றும் குதிரை சவாரியும் செய்து மகிழ்ந்தனர். அவ்வப்போது பெய்த சாரல் மழை சுற்றுலா பயணிகளை உற்சாகப்படுத்தியது.

    கடந்த சில நாட்களாக மேல்மலை கிராமங்களான மன்னவனூர், பூண்டி, பூம்பாறை பகுதிகளுக்கு செல்ல சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் மன்ன வனூரில் உள்ள சூழல் சுற்றுலா மையம், எழு ம்பள்ளம் ஏரியில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. மேலும் அங்கு விளைவிக்கப்படும் காய்கறிகளை சுற்றுலா பயணிகள் ஆர்வமாக வாங்கி சென்றனர். தொடர்மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக இருந்த காரணத்தினால் வாகன போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. தொடர் விடுமுறையையொட்டி இனி வரும் நாட்களில் மேலும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • ஆண்கள், பெண்கள், சிறுவர்-சிறுமியர் கூட்டம் கூட்டமாக குளித்து மகிழ்ந்தனர்.
    • அனைத்து விளையாட்டு சாதனங்களிலும் சிறுவர் சிறுமியர் ஏறி விளையாடி கூச்சலிட்டு மகிழ்ந்தனர்.

    பூதலூர்:

    தொடர்ந்து விடுமுறை நாளாக அமைந்ததால் நேற்று கல்லணையில் கூட்டம் அலைமோதியது. கார் நிறுத்துமிடங்களில் இடம் இல்லாததால் கொள்ளிடம் புதிய பாலத்தில் இரு இருபுறமும் கார்கள் வேன்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்ததால் காவிரி ஆற்றில் பாலங்களில் அருகில் குளிக்காமல்,

    பாலத்திற்கு அருகில் சற்று மேடான பகுதிகளில் கடலில் குளிப்பது போல் ஆண்கள், பெண்கள், சிறுவர்-சிறுமியர் கூட்டம் கூட்டமாக குளித்து மகிழ்ந்தனர். சிறுவர் பூங்காவில் இருந்த அனைத்து விளையாட்டு சாதனங்க ளிலும் சிறுவர் சிறுமியர் ஏறி விளையாடி கூச்சலிட்டு மகிழ்ந்தனர். கல்லணையில் கூட்டம் அதிகமாக இருந்ததால் கோவிலடி வழியாக வந்த பாஸ்கள் அனைத்தும் புதிய படத்தி லிருந்து திருப்பி விடப்ப ட்டன. இதனால் பொதுமக்கள் சற்று அவதிப்பட்டனர்.

    • தொழிலாளா்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு அளிக்கப்பட்டதா என ஆய்வு நடை பெற்றது.
    • 131 நிறுவனங்களில் தொழிலாளா் துணை ஆய்வா்கள், உதவி ஆய்வா்கள் ஆய்வு செய்தனா்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூா் தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) கமலா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தஞ்சாவூா் மாவட்டத்தில் தேசிய விடுமுறை நாளான காந்தி ஜெயந்தி நாளில் தொழிலாளா்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு, தொழிலாளா்களின் சம்மதத்துடன் இரட்டிப்பு ஊதியம் அல்லது மாற்று விடுப்பு அளிக்கப்பட்டுள்ளதா என கடைகள், நிறுவன ங்கள், உணவு நிறுவ னங்கள், போக்குவரத்து நிறுவனங்கள் என மொத்தம் 131 நிறுவ னங்களில் தொழிலாளா் துணை ஆய்வா்கள், உதவி ஆய்வா்கள் ஆய்வு செய்தனா்.

    இதில், சட்ட விதிகளி ன்படி செயல்படாத கடைகள், நிறுவனங்களில் 68 முரண்பாடுகளும், உணவு நிறுவனங்களில் 44 முரண்பாடுகளும், மோட்டாா் நிறுவன ங்களில் 6 முரண்பாடுகளும் என மொத்தம் 118 நிறுவனங்கள் மீது சட்ட நடவடிக்கை மே ற்கொள்ள ப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×