என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "India alliance"

    • மத்திய அமைச்சர் அமித் ஷா, மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் கலந்து கொண்டனர்.
    • பாஜகவுடனான கூட்டணி முறிவுக்கு எனது சொந்தக் கட்சியில் உள்ள சிலர் தான் காரணம்.

    பீகார் மாநிலத்துக்கு சட்டமன்றத் தேர்தல் வர உள்ள நிலையில் அங்கு அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.

    பாஜகவின் என்டிஏ கூட்டணியில் இடம்பற்றுள்ள ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ் குமார் தற்போது முதல்வராக உள்ளார். முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் உடைய ராஷ்டிரிய ஜனதா தளம் இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ளது. இவ்விரு கூட்டணிக்குமிடையில் இந்த தேர்தலில் போட்டி நிலவுகிறது.

    இந்நிலையில் இன்று பீகார் தலைநகர் பாட்னாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மத்திய அமைச்சர் அமித் ஷா, மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் கலந்து கொண்டனர். அரசின் நலத்திட்டங்களை பெறும் பயனாளிகளுக்கு நலத்திட்டங்களை அளித்தனர்.

    அதன்பின் நடந்த கூட்டத்தில் நிதிஷ் குமார் பேசுகையில், பாஜகவை இனி ஒரு போதும் கைவிட மாட்டேன். இரண்டு முறை தவறு செய்துவிட்டேன். இனி அந்த தவறு நடக்காது. என்னை யார் முதலமைச்சராக்கியது? அடல் பிகாரி வாஜ்பாய் என்னை முதலமைச்சராக்கினார். நாம் எப்படி மறக்க முடியும்?

    பீகாரில் ஐக்கிய ஜனதா தளம் - பாஜக கூட்டணி ஆட்சிக்கு வந்த பிறகு,அனைத்து விஷயங்களும் மேம்படத் தொடங்கின. 90களின் மத்தியில் இருந்து பாஜக கூட்டணியில் இருந்தோம். 2014இல் பிரிந்தோம்.

    3 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைந்தோம். 2022 ஆம் ஆண்டில் மீண்டும் பிரிந்தோம். ஆனால் கடந்த ஆண்டு மக்களவை தேர்தலுக்கு முன்னதாக மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்தோம்.

    பாஜகவுடனான கூட்டணி முறிவுக்கு எனது சொந்தக் கட்சியில் உள்ள சிலர் தான் காரணம். இரண்டு முறை நான் தவறு செய்தேன். ஆனால் அது மீண்டும் ஒருபோதும் நடக்காது என்றார்.

    • ஒரு அமைப்பு நாட்டின் எதிர்காலத்தையும் கல்வி முறையையும் அழிக்க விரும்புகிறது.
    • அனைத்து வளங்களையும் அதானி மற்றும் அம்பானியிடம் ஒப்படைத்துவிட்டு, அரசு நிறுவனங்களை ஆர்எஸ்எஸ்-க்கு ஒப்படைப்பதே பாஜக மாடல்.

    ஆர்எஸ்எஸ் கைகளில் கல்வி அமைப்பு சென்றால் இந்தியா அழிந்துவிடும் என மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி எச்சரித்துள்ளார்.

    இன்று, டெல்லி ஜந்தர் மந்தரில் தேசிய கல்விக் கொள்கைக்கு எதிராக இந்திய கூட்டணியின் துணை மாணவர் அமைப்புகள் ஒருங்கிணைத்த போராட்டத்தில் ராகுல்காந்தி கலந்துகொண்டார்.

    அப்போது மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய அவர், ஒரு அமைப்பு நாட்டின் எதிர்காலத்தையும் கல்வி முறையையும் அழிக்க விரும்புகிறது. அந்த அமைப்பின் பெயர் ராஷ்ட்ரிய சுயம்சேவக் சங்கம் (ஆர்.எஸ்.எஸ்).

    கல்வி முறை அவர்களின் கைகளுக்குச் சென்றால் இந்த நாடு அழிக்கப்படும். யாருக்கும் வேலை கிடைக்காது, நாட்டை முடித்து விடுவார்கள். இது மிகவும் மெதுவாக தற்போது நடந்து வருகிறது.

    இந்தியப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் ஆர்.எஸ்.எஸ்-இன் ஆதிக்கத்தில் உள்ளனர் என்பதை மாணவர் அமைப்புகள் மற்றும் மாணவர்களுக்குச் சொல்ல வேண்டும். வரும் காலத்தில், மாநிலப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் ஆர்.எஸ்.எஸ்-இன் பரிந்துரையின் பேரில் நியமிக்கப்படுவார்கள். இதை நாம் நிறுத்த வேண்டும் என்று தெரிவித்தார்.

    கடந்த வாரம் பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் மகா கும்பமேளா பற்றி பெருமையடித்தது குறித்து விமர்சித்த ராகுல்காந்தி, வேலையின்மை மற்றும் பணவீக்கம் குறித்து பிரதமர் பேசியிருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

    பிரதமர் வேலையின்மை, பணவீக்கம் மற்றும் கல்வி முறை பற்றி ஒரு வார்த்தை கூட பேசுவதில்லை. அவர்களின் மாடல், அனைத்து வளங்களையும் அதானி மற்றும் அம்பானியிடம் ஒப்படைத்துவிட்டு, அரசு நிறுவனங்களை ஆர்எஸ்எஸ்-க்கு தாரைவார்ப்பதாகும் என்று தெரிவித்தார்.

    தொடர்ந்து பேசிய அவர், நீங்கள் இந்தியா கூட்டணியின் மாணவர்கள். நமது சித்தாந்தங்கள் மற்றும் கொள்கைகளில் சில வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் நாட்டின் கல்வி முறையில் நாம் ஒருபோதும் சமரசம் செய்ய முடியாது.  நாம் ஒன்றிணைந்து எதிர்த்துப் போராடி ஆர்எஸ்எஸ்ஸை பின்னுக்குத் தள்ளுவோம் என்று ராகுல் காந்தி சூளுரைத்தார்.

     இதற்கிடையே ஜந்தர் மாந்தரில் தேசிய கல்விக் கொள்கை மற்றும் யுஜிசி விதிகள், வினாத்தாள் கசிவு ஆகியவற்றுக்கு எதிராக போராட்டம் நடத்திய மாணவர் அமைப்புகளை சேர்ந்த மாணவர்கள் பலரை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்ததால் அங்கு பரபரப்பான சூழல் நிலவுகிறது.

    • இந்தியா கூட்டணி வெற்றி பெற்று மதச்சார்பற்ற அரசு அமையும் என்று நவாஸ் கனி எம்.பி. கூறினார்.
    • நகர்மன்ற உறுப்பினர்கள் அகமது யாசிர் அப்துல் ரகுமான் மற்றும் பொதுக்குழு புதிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    அருப்புக்கோட்டை

    விருதுநகர் வடக்கு மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொதுக்குழு புதிய நிர்வாகிகள் கூட்டம் அருப்புக்கோட்டையில் நடைபெற்றது. மாவட்ட அமைப்பாளர் இப்ராஹிம் ஷா தலைமை வகித்தார். நகரச் செயலாளர் சையது ராஜா முகமது, நகரத் தலைவர் முகமது அபூபக்கர் முன்னிலை வகித்தனர். அருப்புக்கோட்டை தொகுதி செயலாளர் முகமது சம்சுதீன் வரவேற்றார்.

    இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச் செயலாளர் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான முகமது அபூபக்கர் வாழ்த்து பேசினார். இதில் மாநில துணை தலைவர் நவாஸ் கனி எம்.பி. கலந்து கொண்டு பேசியதாவது:-

    சிறுபான்மை மக்களின் அரணாக தி.மு.க. அரசு உள்ளது. மணிப்பூரில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று சொல்லி உச்ச நீதிமன்றம் கண்டித்து இருக்கிறது. உச்ச நீதிமன்றம் தனியாக ஒரு குழுவை நியமித்திருக்கிறது என்று சொன்னால் மாநில அரசு இன்றைக்கு கலைக்கப்பட்டு இருக்க வேண்டும்.

    மாநில காவல் துறையும் ராணுவமும், பா.ஜ.க. கட்டுப்பாட்டில் இருந்தும் மணிப்பூரில் கலவரத்தை கட்டுப்படுத்த முடிய வில்லை. சிறுபான்மை யினருக்கு பாதுகாப்பு இல்லை வரும் 2024 நாடாளு மன்ற தேர்தலில் மதசார்பற்ற அரசு அமைய இந்திய அளவில் வலுவான கூட்டணி உருவாகி இருக்கிறது.

    முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உறுது ணையாக இருந்து தேர்தல் பணியாற்ற வேண்டும் வரும் நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்று மதச்சார்பற்ற அரசு இந்தியாவில் அமைவது உறுதி.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதில் மாவட்ட துணை அமைப்பாளர் சர்தார் நகர்மன்ற உறுப்பினர்கள் அகமது யாசிர் அப்துல் ரகுமான் மற்றும் பொதுக்குழு புதிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • ராமநாதபுரம் அரண்மனை முன்பு இந்தியா கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் அரண்மனை முன்பு இந்தியா கூட்டணி கட்சி சார்பில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பொது சிவில் சட்டம் என்ற பெயரால் மதத்தை வைத்து மக்களை பிளவு படுத்துவது, மணிப்பூர், ஹரியானா கலவரத்தை தூண்டுவது, தேர்தல் ஆணையம், அமலாக்கத்துறை மூலம் எதிர்கட்சிகளை பழி வாங்குவது, நாடாளுமன்ற ஜனநாயகத்தை சீரழிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவதாக மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டது.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி மாவட்ட தலைவர் தலைவர் ஹாஜி வருசை முகமது தலைமை வகித்தார். மாநில பொருளாளர் ஹாஜி எம்.எஸ்.ஏ. ஷாஜகான், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலக்குழ உறுப்பினர் ராஜன், செந்தில்வேல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் காசிநாததுரை, மாவட்ட செயற்குழு உறுப்பினர் குருவேல், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி மாவட்ட மகளிரணி தலைவர் ராமலட்சுமி, விடுதலை சிறுத்தை கட்சி மாவட்ட செயலாளர் அற்புத குமார், மனித நேய மக்கள் கட்சி இப்ராஹீம் மக்கள் ஒற்றுமை மேடை வெங்கடேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஐ.என்.டி.ஐ.ஏ. கூட்டணியின் மூன்றாவது ஆலோசனைக் கூட்டம் நாளை நடைபெறகிறது.
    • முன்னதாக பெங்களூருவில் ஐ.என்.டி.ஐ.ஏ. கூட்டணியின் இரண்டாவது ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

    பாராளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதம் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் போட்டியிட ஒவ்வொரு அரசியல் கட்சியும் இப்போதே தங்களை தயார்படுத்தி வருகின்றன. பா.ஜ.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் சார்பாக பிரதமர் வேட்பாளராக மீண்டும் மோடி நிறுத்தப்படுகிறார்.

    ஆனால் காங்கிரஸ் கூட்டணி சார்பில் பிரதமர் வேட்பாளர் யார் என்று இன்னும் முடிவு செய்யப்படாமல் உள்ளது. இந்த சூழலில் மத்தியில் ஆட்சியில் உள்ள பா.ஜ.க.-வுக்கு எதிராக காங்கிரஸ், தி.மு.க. உள்பட 16 கட்சிகள் இணைந்து ஐ.என்.டி.ஐ.ஏ. (I.N.D.I.A) என்ற பெயரில் கூட்டணியை உருவாக்கி உள்ளன.

    இந்த கூட்டணியின் முதல் கூட்டம் பீகார் மாநிலம் பாட்னாவில் நடந்தது. இரண்டாவது கூட்டம் பெங்களூருவில் நடந்தது. பெங்களூருவில் நடைபெற்ற கூட்டத்தில் தான் எதிர்க்கட்சிகள் கூட்டணிக்கு ஐ.என்.டி.ஐ.ஏ. என்று பெயர் சூட்டப்பட்டது. இந்த நிலையில், இந்த கூட்டணியின் மூன்றாவது கூட்டம் நாளை மும்பையில் நடைபெற இருக்கிறது.

    நாளைய கூட்டம் நிறைவுபெற்றதும், முக்கிய முடிவுகள் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதே கூட்டத்தில் எதிர்கட்சிகளின் பிரதமர் வேட்பாளர் யார் என்பது குறித்தும் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், ஐ.என்.டி.ஐ.ஏ. கூட்டணியில் மேலும் இரண்டு கட்சிகள் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    மும்பையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் பங்கேற்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை காலை மும்பை புறப்பட்டுச் செல்கிறார். இந்த கூட்டம் முடிந்ததும் செப்டம்பர் 1-ம் தேதி இரவு அவர் சென்னை திரும்ப திட்டமிட்டுள்ளார்.

    • இக்கூட்டணியின் இரண்டு சந்திப்புகள் பாட்னாவிலும், பெங்களூரூவிலும் நடைபெற்றது
    • கருத்து வேறுபாடுகளை மறந்து ஒற்றுமையுடன் மக்களவை தேர்தலை சந்திப்போம்

    இந்தியாவில் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் பாராளுமன்ற தேர்தலுக்காக அனைத்து அரசியல் கட்சிகளும் மும்முரமாக தங்களை தயார்படுத்தி வருகின்றன.

    ஆளும் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியை வீழ்த்தவும், குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராகவும் காங்கிரஸ், தி.மு.க., திரிணாமுல் காங்கிரஸ் உட்பட 26 கட்சிகள், இந்தியா (I.N.D.I.A.) எனும் பெயரில் ஒரு பிரமாண்ட கூட்டணியை அமைத்துள்ளன.

    இக்கூட்டணியின் முதல் சந்திப்பு கூட்டம் கடந்த ஜூன் 23 அன்று பீகார் மாநில தலைநகர் பாட்னாவிலும், இரண்டாவது சந்திப்பு கூட்டம் கர்நாடக மாநில தலைநகர் பெங்களூருவில் ஜூலை 17, 18 ஆகிய தேதிகளிலும் நடைபெற்றது.

    இந்நிலையில் இக்கூட்டணியின் அடுத்த சந்திப்பு மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் தற்போது நடைபெற்றது.

    கூட்டணி கட்சிகளின் தொகுதி பங்கீடுகள், கூட்டு செயல் கமிட்டிகள் அமைத்தல், கூட்டணியின் இலச்சினையை மக்களிடம் அறிமுகப்படுத்துதல், கூட்டணியின் கொள்கைகள் மற்றும் குறைந்தபட்ச செயல் திட்டங்கள் வகுத்தல், ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எதிராக இந்தியா முழுவதும் செயல்படுத்த வேண்டிய வியூகம், எந்தெந்த கட்சிக்கு எத்தனை இடங்கள் உட்பட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு முக்கிய முடிவுகள் எடுப்பதற்காக இந்த சந்திப்பு நடைபெற்றது.

    இக்கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகள் பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவையாக இருப்பதாலும், தலைவர்களுக்கிடையே கருத்து மோதல்கள் தோன்றாமலிருக்கும் வகையிலும், தேர்தலுக்கு கூட்டணியை வழிநடத்த 13-பேர் கொண்ட ஒருங்கிணைப்பு கமிட்டியை இக்கூட்டணி அறிவித்துள்ளது.

    காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கே.சி. வேணுகோபால், தேசியவாத காங்கிரஸை சேர்ந்த சரத் பவார், தி.மு.க.வை சேர்ந்த டி.ஆர் பாலு, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அபிஷேக் பானர்ஜி, சிவசேனா கட்சியை சேர்ந்த சஞ்சய் ராவத், ராஷ்ட்ரிய ஜனதா தளத்தை சேர்ந்த தேஜஸ்வி யாதவ், ஐக்கிய ஜனதா தளத்தை சேர்ந்த லல்லன் சிங், ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த ராகவ் சாடா, ஜனதா முக்தி மோர்சா கட்சியை சேர்ந்த ஹேமந்த் சோரன், சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த ஜாதவ் அலி கான், கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த டி.ராஜா, தேசிய மாநாட்டு கட்சியை சேர்ந்த உமர் அப்துல்லா மற்றும் மக்கள் ஜனநாயக கட்சியை சேர்ந்த மெஹ்பூபா முப்தி ஆகியோரை உள்ளடக்கிய 13-பேர் கொண்ட குழு ஒருங்கிணைக்கும் பணியை கவனிக்கும்.

    "வேற்றுமைகளை மறந்து மக்களவை தேர்தலுக்காக ஒன்றாக பணியாற்ற உறுதியெடுத்துள்ளோம். நாடு முழுவதும் மக்கள் சார்ந்த பிரச்சனைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேரணிகள் நடத்த உள்ளோம்," என்றும் எதிர்கட்சி கூட்டணி அறிவித்துள்ளது.

    • கூட்டணியை வழிநடத்த 13-பேர் கொண்ட ஒருங்கிணைப்பு கமிட்டியை அறிவித்தது
    • சமூக வலைதள பணிக்குழு, பிரச்சார கமிட்டி, ஊடக பணிக்குழு, தேர்தல் ஆராய்ச்சி பணிக்குழு அமைக்கப்பட்டது

    இந்தியாவில் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தலுக்காக அனைத்து அரசியல் கட்சிகளும் மும்முரமாக தங்களை தயார்படுத்தி வருகின்றன.

    ஆளும் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியை வீழ்த்தவும், குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராகவும் காங்கிரஸ், தி.மு.க., திரிணாமுல் காங்கிரஸ் உட்பட 26 கட்சிகள், இந்தியா (I.N.D.I.A.) எனும் பெயரில் ஒரு பிரமாண்ட கூட்டணியை அமைத்துள்ளன.

    இந்த கூட்டணியின் முதல் சந்திப்பு கூட்டம் கடந்த ஜூன் 23 அன்று பீகார் மாநில தலைநகர் பாட்னாவிலும், இரண்டாவது சந்திப்பு கூட்டம் கர்நாடக மாநில தலைநகர் பெங்களூருவில் ஜூலை 17, 18 ஆகிய தேதிகளிலும் நடைபெற்றது. இந்நிலையில் இந்த கூட்டணியின் அடுத்த சந்திப்பு மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் நடைபெற்றது.

    கூட்டணி கட்சிகளின் தொகுதி பங்கீடுகள், கூட்டு செயல் கமிட்டிகள் அமைத்தல், கூட்டணியின் இலச்சினையை மக்களிடம் அறிமுகப்படுத்துதல், கூட்டணியின் கொள்கைகள் மற்றும் குறைந்தபட்ச செயல் திட்டங்கள் வகுத்தல், ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எதிராக இந்தியா முழுவதும் செயல்படுத்த வேண்டிய வியூகம், எந்தெந்த கட்சிக்கு எத்தனை இடங்கள் உட்பட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு முக்கிய முடிவுகள் எடுப்பதற்காக இந்த சந்திப்பு நடைபெற்றது.

    இந்த கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகள் பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவையாக இருப்பதாலும், தலைவர்களுக்கிடையே கருத்து மோதல்கள் தோன்றாமல் இருக்கும் வகையிலும், தேர்தலுக்கு கூட்டணியை வழிநடத்த 13-பேர் கொண்ட ஒருங்கிணைப்பு கமிட்டியை இந்த கூட்டணி அறிவித்துள்ளது.

    அதே போன்று கூட்டணியில் உள்ள கட்சிகளில் இருந்து 11-பேர் அடங்கிய சமூக வலைதளங்களுக்கான பணிக்குழுவும், 18-பேர் அடங்கிய பிரச்சார கமிட்டியும், 16-பேர் கொண்ட ஊடக பணிக்குழுவும், 10-பேர் கொண்ட தேர்தல் திட்டங்களுக்கான ஆராய்ச்சி பணிக்குழுவும் அமைத்துள்ளது.

    இவையனைத்திலும், மேலும் ஒருவராக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஒரு உறுப்பினர் பின்னர் சேர்க்கப்படுவார் என எதிர்கட்சி கூட்டணி தெரிவித்துள்ளது.

    • நமது பிரதமர் இந்தியா கூட்டணிக்கு செய்தி தொடர்பாளர் ஆகிவிட்டார்.
    • நமது கூட்டணி வெறும் தேர்தல் வெற்றியை சார்ந்தது இல்லை.

    இந்தியாவை ஆளும் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியை வீழ்த்தவும், பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராகவும் காங்கிரஸ், தி.மு.க., திரிணாமுல் காங்கிரஸ் உட்பட 26 கட்சிகள் சார்பில் அமைக்கப்பட்ட இந்தியா (I.N.D.I.A.) கூட்டணியின் மூன்றாவது சந்திப்பு இன்று மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டு உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது..,

    "இந்தியா (I.N.D.I.A) கூட்டணியை சேர்ந்த அனைத்து தலைவர்களுக்கும் வணக்கம். இந்திய யூனியனை பாதுகாக்க உருவாக்கப்பட்டு இருக்கும் இந்தியா கூட்டணி பாட்னாவில் சந்தித்த போது வெறும் 19 கட்சிகள் தான் இணைந்திருந்தன. பிறகு பெங்களூருவில் நடைபெற்ற சந்திப்பில் இந்த கூட்டணி 26 ஆக அதிகரித்தது. தற்போது மும்பை சந்திப்பில் இது 28 ஆக உயர்ந்துள்ளது. ஒவ்வொரு நாளும் இந்தியா கூட்டணி உறுதியாக உருமாறி வருவதை அனைத்து செய்தியாளர்களும் நன்றாகவே அறிவர்."

    "நமது பிரதமர் இந்தியா கூட்டணிக்கு செய்தி தொடர்பாளர் ஆகிவிட்டார். நமது கூட்டணியை பற்றி இழிவாக பேசி நமக்கு விளம்பரம் தேடிக் கொடுத்து வருகிறார். இந்தியா கூட்டணியை பிரபலப்படுத்தி வரும் நமது பிரதமருக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்."

    "சி.ஏ.ஜி. அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருக்கும் ரூ. 7.5 லட்சம் கோடி ஊழல் புகார் பற்றி பிரதமர் நரேந்திர மோடி அமைதியாகவே இருந்து வருகிறார். நாளுக்கு நாள் இந்தியா கூட்டணி பிரபலம் அடைந்து வரும் நிலையில், மோடி அரசு சமீப காலங்களில் அவ பெயர் அதிகரித்து வருகிறது. நமது கூட்டணி வெறும் தேர்தல் வெற்றியை சார்ந்தது இல்லை. இது நாட்டை காப்பாற்றுவதற்கும், நாட்டில் உள்ள 1.4 பில்லியன் குடிமக்களின் எதிர்காலத்தையும் காப்பாற்றுவதற்காக உருவாக்கப்பட்டு இருக்கிறது."

    "நமது கூட்டணிக்கு மகாராஷ்டிரா மாநில மக்கள் தங்களது வாழ்த்துக்கள் மற்றும் ஆதரவை தெரிவித்து உள்ளனர். இந்த சந்திப்பு திருப்திகரமான ஒன்றாக இருந்ததோடு, திருப்புமுனையை ஏற்படுத்தும் வகையிலும் அமைந்து இருக்கிறது. ஆதரவும், எதிர்பார்ப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் வருகின்றன," என்று குறிப்பிட்டுள்ளார். 

    • கூட்டணியில் தமிழ்நாட்டின் திராவிட முன்னேற்ற கழகம் கட்சியும் அங்கம் வகிக்கிறது.
    • பா.ஜ.க. ஆட்சியை அகற்றுவதே இந்தியா கூட்டணியின் லட்சியம் என்று மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.

    இந்தியாவை ஆளும் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியை வீழ்த்தவும், பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராகவும் காங்கிரஸ், தி.மு.க., திரிணாமுல் காங்கிரஸ் உட்பட 26 கட்சிகள் சார்பில் அமைக்கப்பட்ட இந்தியா (I.N.D.I.A.) கூட்டணியின் மூன்றாவது சந்திப்பு இன்று மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் நடைபெற்றது.

    இந்த கூட்டணியில் தமிழ்நாட்டின் திராவிட முன்னேற்ற கழகம் கட்சியும் அங்கம் வகிப்பதால், இந்த சந்திப்பில் பங்கேற்ற பிறகு அதன் தலைவர் மு.க. ஸ்டாலின் சென்னை திரும்பினார்.

    இக்கட்சியின் சார்பாக இந்தியா கூட்டணியை வலுப்படுத்தும் வகையில் ஒருங்கிணைப்பு மற்றும் செயல்திட்ட கமிட்டியில் தி.மு.க. பாராளுமன்ற உறுப்பினர் டி. ஆர். பாலு, பிரசார கமிட்டியில் பாராளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா, சமூக வலைதளங்களுக்கான பணிக்குழுவில் பாராளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் மற்றும் ஊடகங்களுக்கான பணிக்குழுவில் பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி மற்றும் ஆராய்ச்சி பணிக்குழுவில் பாராளுமன்ற உறுப்பினர் அ. ராசா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

    "பா.ஜ.க. ஆட்சியை அகற்றுவதே இந்தியா கூட்டணியின் லட்சியம்" என சந்திப்பிற்கு பிறகு பேசிய மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.

    • பாராளுமன்றத்தில் மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் 400 முதல் 440 தொகுதிகள் தான் பொது வேட்பாளரை நிறுத்த வியூகம் வகுக்கப்பட்டு உள்ளது.
    • மும்பையில் நடந்த கூட்டத்தில் சில கட்சி தலைவர்களிடம் அதிருப்தி ஏற்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

    மும்பை:

    "இந்தியா" என்ற பெயரில் புதிய கூட்டணியை உருவாக்கி இருக்கும் எதிர்க்கட்சி தலைவர்கள் கடந்த 2 நாட்களாக மும்பையில் கூடி ஆலோசனை நடத்தினார்கள்.

    இந்த கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. குறிப்பாக அடுத்த பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதாவை வீழ்த்துவதற்கு அடித்தளம் அமைக்கக் கூடிய வகையில் தீர்மானங்கள் கொண்டு வரப்படும் என்று தகவல் வெளியாகி இருந்தது.

    ஆனால் முடிந்தவரை ஒரே அணியாக போட்டியிடலாம் என்று தீர்மானம் நிறைவேற்றி விட்டு "இந்தியா" கூட்டணி கட்சி தலைவர்கள் கலைந்துள்ளனர். இந்தியா கூட்டணியில் உள்ள பல்வேறு மாறுபட்ட கொள்கைகள் கொண்ட கட்சி தலைவர்களிடம் முக்கிய விஷயங்களில் ஒருமித்த கருத்து உருவாகவில்லை என்பதையே மும்பை ஆலோசனை கூட்டம் காட்டுவதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகிறார்கள்.

    பாரதிய ஜனதாவை எதிர்க்கும் எதிர்க்கட்சிகளின் தொண்டர்களுக்கு மும்பை கூட்டத்தின் முடிவுகள் மகிழ்ச்சி தருவதற்கு பதில் ஏமாற்றத்தையே அளித்து இருப்பதாக கூறப்படுகிறது. தொகுதி பங்கீடு பற்றி பேசினால் மிகப்பெரிய சர்ச்சை ஏற்பட்டு விடும் என்று கருதி அதை சற்று தள்ளி வைக்கும் வகையில் எதிர்க்கட்சி தலைவர்கள் முடிவு செய்துள்ளனர்.

    பெரும்பாலான மாநிலங்களில் இந்தியா கூட்டணி கட்சிகள் இடையே தொகுதி பங்கீடு சுமூகமாக முடிந்து விட்டதாக எதிர்க்கட்சி தலைவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் மேற்கு வங்காளம், கேரளா, டெல்லி, பஞ்சாப் போன்ற மாநிலங்களில் இந்தியா கூட்டணி கட்சிகள் இடையே மிக எளிதில் தொகுதி பங்கீடு செய்ய முடியுமா? என்பதில் கேள்விக்குறி எழுந்துள்ளது.

    எனவே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை விரைவில் தொடங்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர்கள் முடிவு செய்துள்ளனர். தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையின் போது ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்து சுமூகமான முடிவை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக மும்பை கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட முடிவு விவரம் வருமாறு:-

    * பல்வேறு மாநிலங்களில் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகள் கூட்டுணர்வுடன் உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டும். தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைகள் அனைத்தும் ஒரு மாதத்தில் முடிக்கப்பட வேண்டும்.

    * நாட்டின் பல்வேறு பகுதிகளில் நிலவும் மக்கள் பிரச்சனைகள் குறித்து பொதுக்கூட்டங்கள் விரைவில் நடத்தப்படும். இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகள் அனைத்தும் ஒருங்கிணைந்து இந்த கூட்டத்தை நடத்த வேண்டும்.

    * "ஒன்றாக இணைவோம் ஒன்றாக வெற்றி பெறுவோம்" என்ற கருத்துடன் இந்தியா கூட்டணி கட்சிகள் செயல்பட்டு பிரசாரம் மேற்கொள்ளப்படும் என்பது உள்பட பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

    கூட்டத்தில் 14 பேர் கொண்ட ஒருங்கிணைப்பு குழு தேர்வு செய்யப்பட்டு உள்ளது. இந்த குழுதான் இந்தியா கூட்டணியை வழி நடத்தி செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் மூத்த தலைவராக சரத்பவார் இருக்கிறார். அவர்தான் இந்தியா கூட்டணி தொடர்பாக இனி முக்கிய முடிவுகள் எடுப்பார் என்று கூறப்படுகிறது.

    இந்த குழு தவிர 19 பேர் கொண்ட பிரசார குழுவும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. மேலும் 3 செயல் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. 12 பேர் கொண்ட சமூக வலைத்தள குழு, 19 பேர் கொண்ட ஊடக குழு, 11 பேர் கொண்ட ஆய்வு குழு உருவாக்கப்பட்டு இருக்கிறது.

    இந்த 5 குழுக்கள்தான் இந்தியா கூட்டணியின் அடுத்தக்கட்ட நகர்வுகளை மேற்கொள்ளும் என்று தெரிய வந்துள்ளது. இதில் முதன்மையான ஒருங்கிணைப்பு குழு விரைவில் கூட இருக்கிறது. அவர்களின் வழிகாட்டுதல் பேரில்தான் ஒரு மாதத்தில் தொகுதி பங்கீட்டை முடிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

    பாராளுமன்றத்தில் மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் 400 முதல் 440 தொகுதிகள் தான் பொது வேட்பாளரை நிறுத்த வியூகம் வகுக்கப்பட்டு உள்ளது. சரத்பவார் தலைமையிலான ஒருங்கிணைப்பு குழு இதை கண்காணிக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

    இது தவிர இந்தியா கூட்டணியின் தேர்தல் அறிக்கை மற்றும் கொள்கை விளக்க குறிப்புகளை அக்டோபர் 2-ந்தேதிக்குள் தயாரிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. அந்த குறைந்தபட்ச பொது செயல்கொள்கை திட்ட அறிவிப்புகளை டெல்லியில் அக்டோபர் 2-ந்தேதி காந்தி நினைவிடத்தில் வெளியிடவும் எதிர்க்கட்சி தலைவர்கள் முடிவு செய்துள்ளனர்.

    மும்பை கூட்டத்தில் இந்தியா கூட்டணியை வழிநடத்தும் ஒருங்கிணைப்பாளர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று கூறப்பட்டு இருந்தது. ஆனால் அப்படி ஒருவரை தேர்வு செய்தால் அவர்தான் இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் என்று கூறி பாரதிய ஜனதா திசை திருப்பி விடும் என்ற பயத்தில் ஒருங்கிணைப்பாளரை தேர்வு செய்யாமல் தவிர்த்து உள்ளனர்.

    அதுபோல இந்தியா கூட்டணிக்கு தனி லோகோ ஒன்றை வெளியிடவும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அந்த லோகாவை பார்த்து பெரும்பாலான கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். தங்கள் கட்சி தேர்தல் சின்னத்தை பாதிக்கும் வகையில் கூட்டணியின் லோகோ அமைந்து விடும் என்று கருத்து தெரிவித்தனர்.

    இதையடுத்து இந்தியா கூட்டணிக்காக தயாரித்த லோகோ வெளியீடு கைவிடப்பட்டது.

    மும்பையில் நடந்த கூட்டத்தில் சில கட்சி தலைவர்களிடம் அதிருப்தி ஏற்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்காள முதல்-மந்திரியுமான மம்தா பானர்ஜி மும்பை கூட்டத்தில் கம்யூனிஸ்டு தலைவர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதாக கூறி அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளார்.

    கூட்டத்தில் அவர் மற்ற தலைவர்களிடம் பேசுகையில், "நாடு முழுவதும் கம்யூனிஸ்டுகளுக்கு என்று எந்த முக்கியத்துவமும் இல்லை. ஆனால் அவர்கள் தான் கூட்டத்தில் அதிக நேரம் பேசி உள்ளனர். இதனால் பிரயோஜனமும் கிடையாது" என்று அதிருப்தியை வெளியிட்டதாக தெரிய வந்துள்ளது.

    மம்தா பானர்ஜியை போன்று கெஜ்ரிவாலும் அதிருப்தி தெரிவித்ததாக தெரிய வந்துள்ளது. இதனால் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகள் சுமூகமாக முடியுமா? என்பதில் கேள்விக்குறி எழுந்துள்ளது.

    இத்தகைய சிக்கலை தீர்ப்பதற்காக இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் விரைவில் பேச்சுவார்த்தையை தொடங்குவார்கள் என்று தெரிகிறது.

    • தேர்தல் ஏற்பாடுகளை மேற்பார்வையிடவும், எதிர்க்கட்சிகள் ஒற்றுமையாக வைத்திருக்கவும் 5 குழுக்களை இந்தியா முன்னணி அமைத்தது.
    • தேர்தலில் ‘பாரதம் ஒன்று படும், இந்தியா வெல்லும்’ என்பதே முழக்கமாக இருக்கும்.

    மும்பை:

    பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியை வீழ்த்துவதற்காக காங்கிரஸ் உள்ளிட்ட 28 கட்சிகள் ஒன்றிணைந்து 'இந்தியா' கூட்டணியை உருவாக்கி உள்ளன. இந்த கூட்டணியின் முதலாவது ஆலோசனை கூட்டம் பாட்னாவிலும், 2-வது கூட்டம் பெங்களூருவிலும் நடந்த நிலையில், 3-வது கூட்டம் மும்பையில் கடந்த 2 நாட்களாக நடந்தது.

    இந்த கூட்டத்தில் சோனியாகாந்தி, ராகுல்காந்தி, மு.க.ஸ்டாலின், மம்தா பானர்ஜி, அகிலேஷ் யாதவ், அரவிந்த் கெஜ்ரிவால், சரத் பவார், ஹேமந்த் சோரன், உமர் அப்துல்லா, நிதிஷ்குமார், லாலு பிரசாத் யாதவ் உள்ளிட்ட கட்சி தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

    நேற்று நடந்த கூட்டத்தில் தேர்தலை சந்திக்கும் வியூகம் குறித்த கருத்துக்களை பல்வேறு கட்சி தலைவர்களும் தெரிவித்தனர். மேலும் இந்த கூட்டத்தில் சில முடிவுகளும் எடுக்கப்பட்டுள்ளன. பாரதிய ஜனதா கட்சி ஆளும் கட்சியாக அல்லது பிரதான எதிர்க்கட்சியாக இருக்கும் மாநிலங்களில் இந்தியா முன்னணி ஒரு பொது வேட்பாளரை நிறுத்தும்.

    அதன்படி 440 இடங்களில் பாரதிய ஜனதாவிற்கு எதிராக பொது வேட்பாளர்கள் நிறுத்தப்படுகிறார்கள். கேரளா மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் பொது வேட்பாளர்கள் யாரும் நிறுத்தப்பட மாட்டார்கள். அடுத்த மாத இறுதிக்குள் அதிகபட்ச வேட்பாளர்கள் எண்ணிக்கை குறித்து முடிவு செய்யப்படுகிறது.

    தேர்தல் ஏற்பாடுகளை மேற்பார்வையிடவும், எதிர்க்கட்சிகள் ஒற்றுமையாக வைத்திருக்கவும் 5 குழுக்களை இந்தியா முன்னணி அமைத்தது. எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் 14 பேர் கொண்ட குழுவில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் சேர்க்கப்பட்டார்.

    தேர்தலில் 'பாரதம் ஒன்றுபடும், இந்தியா வெல்லும்' என்பதே முழக்கமாக இருக்கும். காந்தி பிறந்த தினமான அக்டோபர் 2-ந்தேதி இந்தியா முன்னணியின் தொலைநோக்கு அறிக்கை ராஜ்காட்டில் அறிவிக்கப்படும். வருகிற மாதங்களில் 5 முக்கிய நகரங்களில் பேரணிகள் நடத்தப்படும். இதன் தொடர்ச்சியாக நாடு முழுவதும் கூட்டு நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு முடிவுகள் நேற்று நடந்த கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • டெல்லியில் மல்லிகார்ஜூன கார்கே இல்லத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.
    • ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக மத்திய அரசு குழு அமைத்துள்ள நிலையில் ஆலோசனை.

    இந்தியா கூட்டணியை சேர்ந்த பாராளுமன்ற குழு தலைவர்கள், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுடன் செப்டம்பர் 5ம் தேதி ஆலோசனை நடத்தப்படுகிறது.

    டெல்லியில் மல்லிகார்ஜூன கார்கே இல்லத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.

    ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக மத்திய அரசு குழு அமைத்துள்ள நிலையில் ஆலோசனை நடைபெற உள்ளது.

    இதற்கிடையே, செப்டம்பர் 18ம் தேதி பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் தொடங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

    ×