என் மலர்
நீங்கள் தேடியது "injury"
- ஆட்டோ டிரைவர் உள்பட மூவரும் காயமடைந்தனர்.
- விபத்து குறித்து திருவாரூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை.
திருவாரூர்:
மயிலாடுதுறை மாவட்டம் மன்னம்பந்தல் மெயின் ரோட்டை சேர்ந்தவர் கபிலன் (வயது60). இவர் நேற்று முன்தினம் திருவாரூர் பகுதியில் உள்ள கோவிலுக்கு சாமி கும்பிட சென்றார்.
தரிசனம் முடித்து தனது மனைவி லதாவுடன் ஸ்கூட்டரில் திருவாரூரில் இருந்து மயிலாடுதுறைக்கு புறப்பட்டார். மயிலாடுதுறை சாலை சேந்தமங்கலம் என்ற இடத்தில் எதிரே வந்த ஆட்டோ, கபிலன் ஓட்டிச்சென்ற ஸ்கூட்டர் மீது மோதியது.
இந்த விபத்தில் கணவன், மனைவி மற்றும் ஆட்டோ டிரைவர் சொரக்குடி பகுதியை சேர்ந்த சங்கர் (30) ஆகிய 3 பேரும் காயம் அடைந்தனர்.
இதனையடுத்து அவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் கபிலன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
காயம் அடைந்த லதா, ஆட்டோ டிரைவர் சங்கர் ஆகிய இருவரும் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து திருவாரூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் இருந்த மின்கம்பத்தில் மோதியது.
- இதில் மின்கம்பம் முறிந்து மின்கம்பிகள் அறுந்தன.
திருவாரூர்:
திருத்துறைப்பூண்டியில் இருந்து ராயநல்லூர் புழுதிக்குடி வழியாக விக்கிரபாண்டியம் வரை தனியார் மினி பஸ் இயக்கப்பட்டு வருகிறது. சம்பவத்தன்று இந்த மினி பஸ்சை டிரைவர் சுந்தரம் (வயது 50) ஓட்டினார்.
கண்டக்டர் வருண்குமார் (25) பணியில் இருந்தார். மினி பஸ் விக்கிரபாண்டியம் வந்து விட்டு திருத்துறைப்பூண்டி செல்லும் வழியில் விக்கிரபாண்டியம் கீழத்தெரு அருகே பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் இருந்த மின்கம்பத்தில் மோதி அருகிலிருந்த குட்டையில் இறங்கியது.
இதில் பயணம் செய்த மஞ்சவாடி கிராமத்தை சேர்ந்த கவுசல்யா (22), டிரைவர் சுந்தரம், கண்டக்டர் வருண்குமார் ஆகியோர் லேசான காயமடைந்தனர்.
இவர்கள் மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதில் மின்கம்பம் முறிந்து மின்கம்பிகள் அறுந்தன.
இதனால் அங்கு மின்தடை ஏற்பட்டது. மின் கம்பம் முறிந்தபோது அங்கு மக்கள் நடமாட்டம் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
இதுகுறித்து விக்கிரபாண்டியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- திடீரென அவர் போதையில் கேசவனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
- காயம் அடைந்த கேசவனை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
தஞ்சாவூா்:
தஞ்சை மாவட்டம் மெலட்டூர் மேல தெருவை சேர்ந்தவர் கேசவன் (வயது 45). இவர் தஞ்சை கரந்தையில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் பம்ப் ஆபரேட்டராக வேலை பார்த்து வருகிறார்.
இந்த நிலையில் தஞ்சை வடக்கு வாசல் சுண்ணாம்பு கால்வாய் பகுதியை சேர்ந்த வெங்கடேஷ் (24) என்பவர் குடிபோதையில் பெட்ரோல் பங்கிற்கு வந்தார்.
திடீரென அவர் போதையில் கேசவனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
வாக்குவாதம் முற்றி வெங்கடேஷ் ஆத்திரமடைந்து கத்தியால் கேசவனின் கையில் குத்தினார்.
இதில் காயம் அடைந்த கேசவனை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து கேசவன் தஞ்சை மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வெங்கடேசனை கைது செய்தனர்.
- பஸ்சில் பயணித்த 15 மாணவிகள் படுகாயங்களுடன் உயிர் தப்பினர்.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மன்னார்குடி:
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே சுந்தரகோட்டையில் ஒரு தனியார் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரிக்கு பலபகுதிகளில் இருந்து மாணவிகள் பஸ்சில்வந்து படித்து செல்கின்றனர்.
இந்நிலையில் இன்று காலை கல்லூரிக்கு சொந்தமான பஸ்சில் சுமார் 20-க்கும் மேற்பட்ட மாணவிகள் கல்லூரிக்கு சென்று கொண்டிருந்தனர்.
கல்லூரி பஸ் மன்னார்குடி அருகே காளவாய்கரை பகுதியில் வந்த போது செருமங்கலம் கிராமத்தில் இருந்து மண் ஏற்றி வந்த லாரி, முன்னாள் சென்ற தனியார் கல்லூரி பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் கல்லூரி பேருந்தில் பயணித்த 15 மாணவிகள் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.
தகவல் அறிந்து வந்த மன்னார்குடி போலீசார் விபத்தில் காயமடைந்த மாணவிகளை மீட்டு சிகிச்சைக்காக மன்னார்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- ராஜபாளையத்தில் அடுத்தடுத்து நடந்த விபத்தில் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
- மின்கம்பி அறுந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ராஜபாளையம்
விருதுநகர் மாவட்டம் தென்காசி நெடுஞ்சாலை யில் ராஜபாளையம் தெற்கு போலீஸ் நிலையம் உள்ளது. இந்தநிலையில் இன்று காலை தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே உள்ள சேர்ந்தமரம் பகுதியில் இருந்து தேனிக்கு நுங்குகளை ஏற்றிக்கொண்டு ஒரு பிக்கப் வாகனம் சென்றது.
அப்போது எதிரே டிராக்டர் வந்த தால் மோதாமல் இருப்பதற்காக டிரைவர் மணிகண்டன் வாகனத்தை திருப்பி யுள்ளார். அப்போது வாகனம் ரோட்டில் கவிழ்ந்தது. இதில் டிரைவர் மணி கண்டன், அவருடன் வந்த முருகன், மனோஜ் ஆகிய 3 பேரும் படுகாய மடைந்தனர். இதுபற்றி தகவல் கிடைத்ததும் ராஜபாளையம் தெற்கு போலீசார் விரைந்து சென்று விபத்தில் சிக்கிய வர்களை மீட்டு விசாரணை நடத்தினர்.
இந்த நேரத்தில் நாமக்கல் மாவட்டத்தில் இருந்து தேங்காய்களை ஏற்றிக்கொண்டு கேரள மாநிலம் புனலூர் நோக்கி ஒரு ஈச்சர் லாரி சென்றது. அந்த லாரி டிரைவர் ரோட்டில் கவிழ்ந்து கிடக்கும் வாகனத்தை பார்த்துக் கொண்டே சென்றதால் ஈச்சர் லாரி நிலைதடுமாறி அதே பகுதியில் உள்ள மின் கம்பத்தில் மோதியது. இந்த விபத்தில் உயர்ரக மின்கம்பிகள் அறுந்து விழுந்தது. இதனை மீட்பு பணியில் இருந்த போலீசார் கண்டு விலகி சென்றதால் உயிர் தப்பினர். அடுத்தடுத்து வாகன விபத்து ஏற்பட்டதால் ராஜபாளையத்தில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- பணியில் இருந்த கேட் கீப்பர் பிரசாத் காயம் அடைந்தார்.
- போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
தஞ்சாவூர்:
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே உள்ள பூவனூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜ்குமார்(வயது 35).
வளரும் தமிழகம் கட்சியின் மாநில இளைஞரணி செயலாளராக இருந்த இவரை சிலர் வெட்டி படுகொலை செய்தனர்.
இது தொடர்பாக கொரடாச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து 5 பேரை கைது செய்தனர்.
இந்த நிலையில் ராஜ்குமார் உடல் பிரேத பரிசோதனைக்கு பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதையடுத்து ராஜ்குமார் உடல் திருவாரூரில் இருந்து பூவனூருக்கு அமரர் ஊர்தியில் எடுத்து வந்தனர்.
அப்போது ஊர்வலத்தில் வந்தவர்களில் சிலர் சாலையோர கடைகள் மீது தாக்குதல் நடத்தினர்.
இதனால் போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்.
இந்த நிலையில் ஊர்வலத்தின் போது நீடாமங்கலத்துக்கும், மன்னார்குடிக்கும் இடையே உள்ள ரெயில்வே கேட் மீதும் சரமாரி கற்கள் வீசப்பட்டன.
இதில் அங்கு பணியில் இருந்த கேட் கீப்பர் பீகாரை சேர்ந்த பவன்குமார் பிரசாத் காயம் அடைந்தார்.
உடனடியாக அவர் திருவாரூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.
இது குறித்து அவர், தஞ்சை ரெயில்வே இருப்புபாதை போலீசில் புகார் செய்தார்.
அதன் பேரில் திருச்சி ரெயில்வே போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் உத்தரவின் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு மகாதேவன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் சாந்தி, சிவவடிவேல் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
கல்வீசிய சம்பவம் தொடர்பாக திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் வடகரைவயல் குளத்து மேட்டு தெருவை சேர்ந்த இளவரசன் (34), நீடாமங்கலம் அருகே உள்ள கானூர் மெயின் சாலையில் உள்ள ராஜப்பன்சாவடியை சேர்ந்த பழனி (38) ஆகிய 2 பேரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- உடனடியாக காயமடைந்தவர்களை மீட்டு பேராவூரணி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
- சக்திவேல் என்பவர் மேல்சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
பேராவூரணி:
தஞ்சை மாவட்டம் திருச்சிற்றம்பலம் கோவிலில் நேற்று ஒரு திருமணம் நடைபெற்றது. பின்னர் பேராவூரணி திருமண மண்டபத்தில் விருந்து நடைபெற்றது.
திருமணம் முடிந்து அவரது உறவினர்கள் வேனில் பேராவூரணியில் இருந்து முடச்சிக்காடு நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது பேராவூரணி அரசு பெண்கள் மேல்நி லைப்பள்ளி அருகே உள்ள வளைவில் திரும்பும்போது வேன் நிலை தடுமாறி தலைகீழாக கவிழ்ந்தது.
இதில் முடச்சிக்காடு கலைஞர் நகரை சேர்ந்த டிரைவர் மோகன் (வயது 34), புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா ஏம்பல் பகுதியை சேர்ந்த சக்திவேல் (27), அவரது சகோதரி முத்துமீனா (24), முடச்சிக்காடு கலைஞர் நகரை சேர்ந்த லதா (45), சிவகங்கை மாவட்டம் நாட்டார்வள்ளியை சேர்ந்த ஆனந்தி (22), அவரது 8 மாத பெண் குழந்தை மற்றும் முடச்சிக்காடு கலைஞர் நகரை சேர்ந்த ஜெயா ( 60), முடச்சிக்காடு கலைஞர் நகரை சேர்ந்த நடராஜ் (70) ஆகியோர் காயமடைந்தனர்.
இதனை பார்த்த அக்கம்ப க்கத்தி னர் உடனடியாக காயம்அடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பேராவூரணி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி நடராஜ் உயிரிழந்தார்.
மற்றவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சக்திவேல் என்பவர் மேல்சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இதுகுறித்து பேராவூரணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சுபாஷ் லோடு ஏற்றுவதற்காக தினேஷ் ராஜாவின் ஆட்டோவை அழைத்தார்.
- தினேஷ்ராஜா சிகிச்சைக்காக வள்ளியூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
களக்காடு:
ஏர்வாடி அருகே உள்ள ஒத்தக்கடை, நடுத்தெருவை சேர்ந்தவர் தினேஷ் ராஜா (வயது41). இவர் லோடு ஆட்டோ ஓட்டி வருகிறார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு ராமகிருஷ்ணாபுரம் நடுத்தெருவை சேர்ந்த சுபாஷ் (29) என்பவர் லோடு ஏற்றுவதற்காக தினேஷ் ராஜாவின் ஆட்டோவை அழைத்தார். ஆனால் தினேஷ் ராஜா செல்ல மறுத்து விட்டார். இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு முன் விரோதம் இருந்து வந்தது.
இந்நிலையில் நேற்று சுபாஷ், அவரது நண்பர் ராகவேந்திர சர்மா (28), சண்முகபுரத்தை சேர்ந்த விக்னேஷ் (24), தளபதி சமுத்திரம் பிளசண்ட் நகரை சேர்ந்த ஆலன் (22) ஆகியோர் லோடு ஆட்டோவில் வந்து, தினேஷ்ராஜாவை கம்பால் சரமாரியாக தாக்கி னர். இதுபோல தினேஷ் ராஜாவும், அவரது மனைவி தங்கபழமும் சேர்ந்து சுபாஷையும், ராகவேந்திர சர்மாவையும் கம்பால் தாக்கினர். இந்த மோதலில் தினேஷ்ராஜா, சுபாஷ், ராக வேந்திரசர்மா ஆகிய 3 பேரும் படுகாயமடைந்தனர்.
இதில் தினேஷ்ராஜா சிகிச்சைக்காக வள்ளியூர் அரசு மருத்துவமனையிலும், சுபாஷ், ராகவேந்திர சர்மா நெல்லை அரசு மருத்துவ மனையிலும் அனுமதிக்கப் பட்டனர். இதுபற்றி இரு தரப்பினரும் ஏர்வாடி போலீசில் தனித்தனியாக புகார் அளித்தனர்.
இதையடுத்து ஏர்வாடி போலீசார் இரு தரப்பை சேர்ந்த தினேஷ்ராஜா, அவரது மனைவி தங்கபழம், சுபாஷ், ராகவேந்திர சர்மா, விக்னேஷ், ஆலன் ஆகிய 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலை ஓரமாக இருந்த பள்ளத்தில் இறங்கி வீட்டின் சுவற்றில் மோதி நின்றது.
- 2 பேர் மீது விழுந்து தலையில் படுகாயம் அடைந்தனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த தச்சூர் கிராமத்தில் திட்டக்குடியிலிருந்து சின்னசேலம் நோக்கி சென்ற அரசு பஸ் இன்று காலை குறைந்த அளவிலான பயணிகளுடன் புறப்பட்டு சென்றது. தச்சூர் கிராமத்தின் உள்ளே செல்லும் பொழுது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலை ஓரமாக இருந்த பள்ளத்தில் இறங்கி வீட்டின் சுவற்றில் மோதி நின்றது.
மோதிய வேகத்தில் பஸ்சின் கண்ணாடி உடைந்து வீட்டின் முன்பு தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்த தச்சூர் கிராமத்தைச் சேர்ந்த செல்வகுமார் (வயது 59), அவரது மனைவி லட்சுமி (52) ஆகிய 2 பேர் மீது விழுந்து தலையில் படுகாயம் அடைந்தனர். 2 பேரையும் கிராம மக்கள் மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதில் செல்வகுமார் தலையில் பலத்த காயமிருந்ததால் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இது குறித்து ராமநத்தம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அரசு பஸ் வீட்டின் சுவற்றில் மோதி நின்றதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
- இவர்கள் 3 பேரும் கடலூர் திருவந்திபுரம் - பாலூர் சாலையில் பில்லாலி தொட்டி பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.
- ட்டார் சைக்கிளுக்கு பின்னால் வந்த டிராக்டர் திடீரென்று மோதியதில் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 3 பேருக்கும் காயம் ஏற்பட்டது.
கடலூர்:
நெல்லிக்குப்பம் அடுத்த வரக்கால்பட்டை சேர்ந்தவர் இளவழகன் (வயது 25), கொங்கராயனூரை சேர்ந்தவர்கள் நிவேதா (20), நிரோஷா (17). இவர்கள் 3 பேரும் கடலூர் திருவந்திபுரம் - பாலூர் சாலையில் பில்லாலி தொட்டி பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது மோட்டார் சைக்கிளுக்கு பின்னால் வந்த டிராக்டர் திடீரென்று மோதியதில் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 3 பேருக்கும் காயம் ஏற்பட்டது. இது குறித்து நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் ரிஷிவந்தியத்தை சேர்ந்த ஜெயமேரி என்பவர் இறந்து போனார்
- இதையடுத்து அவரின் உடலை அடக்கம் செய்ய உறவினர்கள் எடுத்து சென்றனர்
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் ரிஷிவந்தியத்தை சேர்ந்த ஜெயமேரி என்பவர் இறந்து போனார். இதையடுத்து அவரின் உடலை அடக்கம் செய்ய உறவினர்கள் எடுத்து சென்றனர். அதே கிராமத்தை சேர்ந்த மைக்கேல் என்பவர் நாட்டு வெடிகளை வெடித்து கொண்டே இறுதி ஊர்வலத்தின் முன்பாக சென்றார்.அப்போது மொத்தமாக வைக்கப்பட்டிருந்த வெடிகளில் எதிர்பாராதவிதமாக தீ பட்டது. இதில் அனைத்து வெடிகளும் ஒரே நேரத்தில் வெடித்து சிதறியது. இதனால் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்ட அதே கிராமத்தை சேர்ந்த கிருபை (வயது 13) அடைக்கலமேரி (50), செல்வி (39), கன்னிமேரி (55), ரஞ்சித் (15), கோவிந்தன் (50), மைக்கேல் (25) ஆகியோருக்கு தீக்காயம் ஏற்பட்டது.
இதையடுத்து படுகாயமடைந்த 6 பேரும் சிகிச்சைக்காக ரிஷிவந்தியம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த வெடி விபத்து குறித்து ரிஷிவந்தியம் கிராம நிர்வாக அலுவலர் மணிகண்டன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
- தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தை அடுத்த போவினப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர்கள் சந்தீப் (வயது 30), சாய்பிரபு (35), வினியலட்சுமி (45) ஷோபா (50) ஆகியோர் காரில் வந்தனர்.
- இதில் காரில் இருந்த டிரை வர் உள்ளிட்ட 5 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
கடலூர்:
சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தை அடுத்த போவினப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர்கள் சந்தீப் (வயது 30), சாய்பிரபு (35), வினியலட்சுமி (45) ஷோபா (50) ஆகியோர் காரில் வந்தனர். இந்த காரை அதே பகுதியைச் சேர்ந்த சினுவாச்சாரி (30) என்பவர் ஓட்டி வந்தார். இந்த கார் இன்று அதி காலை சிதம்பரம் வண்டி கேட் பகுதிக்கு வந்தது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் இருந்த தடுப்புக் கட்டையில் மோதி விபத்துக் குள்ளானது. இதில் காரில் இருந்த டிரை வர் உள்ளிட்ட 5 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அப்பகுதியில் இருந்த வர்கள் காரில் இருந்தவர் களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிதம்பரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து சிதம்பரம் நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.