என் மலர்
நீங்கள் தேடியது "Inspect"
- முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் விழா முன்னேற்பாடு பணிகளை அமைச்சர் ஆய்வு செய்தார்
- தடாகோவில் பகுதியில் நாளை நடைபெறுகிறது
கரூர்:
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே உள்ள தடாகோவிலில் 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின்சார இணைப்பு வழங்கும் திட்டத்தை நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இதனையடுத்து நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் பந்தல், மேடை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த பணியை மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், தி.மு.க. அளித்த தேர்தல் வாக்குறுதியின்படி கடந்த 20 ஆண்டுகளாக இலவச மின்சாரம் கேட்டு விண்ணப்பித்திருந்த விவசாயிகளுக்கு முதல் கட்டமாக ஆட்சிப்பொறுப்பேற்ற 6 மாதத்திற்குள் ஒரு லட்சம் இலவச மின்இணைப்பு வழங்கப்பட்டது. தற்போது 2-வது கட்டமாக கரூர் மாவட்டத்தில் நாளை (11-ந்தேதி, வெள்ளிக்கிழமை) மின்சாரத்துறை சார்பில் நடைபெற உள்ள விழாவில் 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின்சார இணைப்பு வழங்கும் திட்டத்தினை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் 20 ஆயிரம் விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெற உள்ளனர். அடுத்த கட்டமாக மீதமுள்ள விவசாய பெருமக்களுக்கு மின் இணைப்பு வழங்கப்படும். மேலும், கரூர் மட்டுமின்றி அண்டை மாவட்டங்களான கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வரக்கூடிய விவசாய பெருமக்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது, கலெக்டர் பிரபுசங்கர், எம்.எல்.ஏ.கள் இளங்கோ, சிவகாமசுந்தரி, மாணிக்கம், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சச்சிதானந்தம் மற்றும் பலர் உடனிருந்தனர்.
- நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி. வருடாந்திர ஆய்வு மேற்கொள்வது வழக்கம்.
- போலீஸ் நிலையங்களின் முக்கிய வழக்கு கோப்புகளையும், அலுவலகத்தில் பராமரிக்கப்படும் ஆவணங்களை ஆய்வு மேற்கொண்டார்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் ஆண்டுக்கு ஒரு முறை காவல்துறையில் நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி. வருடாந்திர ஆய்வு மேற்கொள்வது வழக்கம். அதன்படி தூத்துக்குடி ஊரக உட்கோட்ட காவல்துறை உதவி கண்காணிப்பாளர் அலுவலகத்தில், ஊரக உட்கோட்ட கட்டுப்பாட்டில் உள்ள புதுக்கோட்டை, முறப்பநாடு, புதியம்புத்தூர், தட்டப்பாறை, சிப்காட் மற்றும் புதுக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் ஆகிய போலீஸ் நிலையங்களின் முக்கிய வழக்கு கோப்புகளையும், அலுவலகத்தில் பராமரிக்கப்படும் ஆவணங்களையும் டி.ஐ.ஜி. பிரவேஷ் குமார் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அதனை தொடர்ந்து தூத்துக்குடி ஊரக உட்கோட்ட காவல்துறை உதவி கண்காணிப்பாளர் அலுவலக வளாகம் சுத்தமாக வைக்கப்பட்டுள்ளதா என சுற்றிலும் பார்வையிட்டு வளாகத்தில் மரக்கன்று நட்டார்.நிகழ்ச்சியின் போது தூத்துக்குடி ஊரக உட்கோட்ட உதவி போலீஸ் சூப்பிரண்டு சந்தீஷ், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முத்துசாமி உள்ளிட்ட காவல்துறையினர் உடனிருந்தனர்.
- நெல்லை மாநகராட்சி மேயர் சரவணன் தனது வார்டான டவுன் 16-வது வார்டில் இன்று அதிரடி ஆய்வு மேற்கொண்டார்.
- அரசன்நகர், லாலுகாபுரம், அமிர் சாகிப்நகர், தொண்டை மான் தெரு, சிக்கந்தர் மேலத்தெரு உள்ளிட்ட பல்வேறு தெருக்களுக்கு சென்று சேதமான வாறுகால்கள், பழுதடைந்த கட்டிடங்களை ஆய்வு செய்தார்.
நெல்லை:
நெல்லை மாநகராட்சி மேயர் சரவணன் தனது வார்டான டவுன் 16-வது வார்டில் இன்று அதிரடி ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது வார்டுக்கு ட்பட்ட அரசன்நகர், லாலுகாபுரம், அமிர் சாகிப்நகர், தொண்டை மான் தெரு, சிக்கந்தர் மேலத்தெரு உள்ளிட்ட பல்வேறு தெருக்களுக்கு சென்று சேதமான வாறுகால்கள், பழுதடைந்த கட்டிடங்களை ஆய்வு செய்தார்.
அப்போது அப்பகுதி பொதுமக்களிடம் அடிப்படை வசதிகள் குறித்தும், தேவைகள் குறித்தும், குறைகள் குறித்தும் கேட்டறிந்தார்.
தொடர்ந்து அங்குள்ள டீக்கடையில் அமர்ந்து டீ குடித்தவாறே வியாபாரிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.
ஆய்வின் போது நெல்லை மண்டல உதவிகமிஷனர் வெங்கட்ராமன், உதவி பொறியாளர் பட்டுராஜன், சுதாகர் அலுவலகர் இளங்கோ, சுகாதார ஆய்வாளர் பாலசுப்பிரமணியன் உள்பட பலர் உடன் இருந்தனர்.
- மீனாட்சி அம்மன் கோவிலில் அமைச்சர்கள் ஆய்வு செய்தனர்.
- அமைச்சர் சேகர்பாபு, யானைக்கு பழம் கொடுத்து மகிழ்ந்தார்.
மதுரை
மதுரை அழகர்கோவில் மலையில் உள்ள ராக்காயி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா மற்றும் பழமுதிர்சோலை முருகன் கோவிலில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி ஆகியோர் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வந்தனர்.
அவர்கள் கோவில் திருப்பணிகள் தொடர்பாக அதிகாரிகளுடன் அமைச்சர் சேகர்பாபு ஆலோசனை நடத்தினார். அவர் கோவில் வளாகம் முழுவதும் சென்று பார்வையிட்டு, அங்கு நடைபெறும் புனரமைப்பு பணிகளை ஆய்வு செய்தார். வீரவசந்தராயர் மண்டப சீரமைப்பு பணியை பார்வையிட்ட அவர், அந்த பணியை துரிதப்படுத்த உத்தரவிட்டார்.
மேலும் மீனாட்சி அம்மன் கோவில் யானை பார்வதி உடல்நலம் குறித்து விசாரித்த அமைச்சர் சேகர்பாபு, யானைக்கு பழம் கொடுத்து மகிழ்ந்தார். பின்னர் யானை குளிப்பதற்காக கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள நீச்சல் குளத்தையும் அவர் பார்வை யிட்டார்.
மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள வீர வசந்தராயர் மண்டபத்தின் திருப்பணிகளுக்கு வந்துள்ள கற்களை தூண்களாக அமைக்கும் பணிகள் மதுரை அருகே உள்ள பெருங்குடி சின்ன உடப்பு கிராமத்தில் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளையும் அமைச்சர்கள் சேகர்பாபு, மூர்த்தி ஆகியோர் பார்வை யிட்டு ஆய்வு செய்தனர்.
- கோவில்பட்டி - கடம்பூர் ெரயில் நிலையங்கள் இடையே 22 கிலோ மீட்டர் இரட்டை ெரயில் பாதை பணிகள் நிறைவடைந்து உள்ளன.
- புதிய மின்மய இரட்டை ரெயில் பாதையில் தெற்கு ரெயில்வே தலைமை முதன்மை மின் பொறி யாளர் சித்தார்த்தா இன்று ஆய்வு செய்தார்.
நெல்லை:
கோவில்பட்டி - கடம்பூர் ெரயில் நிலையங்கள் இடையே 22 கிலோ மீட்டர் இரட்டை ெரயில் பாதை பணிகள் நிறைவடைந்து உள்ளன.
இந்த புதிய மின்மய இரட்டை ெரயில் பாதையில் தெற்கு ெரயில்வே தலைமை முதன்மை மின் பொறி யாளர் சித்தார்த்தா இன்று ஆய்வு செய்தார்.
கடம்பூர் ெரயில் நிலையத்திலிருந்து சிறப்பு ஆய்வு ெரயில் மூலமாக காலை 10.30 மணிக்கு ஆய்வை தொடங்கினார்.
வழியில் ெரயில்வே கேட்டுகள், கடம்பூர் உபமின் நிலையம், தமிழ்நாடு மின்சார வாரிய மின்தடை குறுக்கீடுகள் ஆகியவற்றை ஆய்வு செய்தார்.
அவருடன் கூடுதல் கோட்ட ெரயில்வே மேலா ளர் தண்ணீரு ரமேஷ் பாபு, முதன்மை மின் வழங்கல் பிரிவு பொறியாளர் சுந்தரேசன், மின் மயமாக்கல் பிரிவு பொது மேலாளர் ராமநாதன், ெரயில் விகாஸ் நிகம் லிமிடெட் முதன்மை திட்ட மேலாளர் கமலாகர ரெட்டி, மதுரை கோட்ட மின்மயமாக்கல் பொறியாளர் பச்சு ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்தப் புதிய இரட்டை ெரயில் பாதையை நாளை (புதன்கிழமை) பெங்களூர் தென் சரக ெரயில்வே பாதுகாப்பு ஆணையர் அபய் குமார் ராய் ஆய்வு செய்ய இருக்கிறார்.
- தேசிய பேரிடர் மீட்பு குழு அதிகாரிகள் காவிரி ஆற்றில் ஆய்வு செய்தனர்
- தேசிய பேரிடர் மீட்பு குழு இன்ஸ்பெக்டர் சுபோத் டாங்கே தலைமையில் அதிகாரிகள் பார்வையிட்டனர்.
கரூர்:
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அடுத்த மாயனுாரில் காவிரி ஆறு செல்கிறது. ஆற்றில் மழை, வெள்ளம் போன்ற காலங்களில் மக்களை பாதுகாக்கும் வகையில், அந்த பகுதியை பார்வையிடுவதற்காக தேசிய பேரிடர் மீட்பு குழு இன்ஸ்பெக்டர் சுபோத் டாங்கே தலைமையில் அதிகாரிகள் பார்வையிட்டனர். மாயனூர் கதவணை, காவிரி ஆற்று படுகை பகுதிகள், அதிகம் தண்ணீர் செல்லும் இடங்கள் ஆகியவற்றை பார்வையிட்டனர். இதில் கிருஷ்ணராயபுரம் தாசில்தார் மோகன்ராஜ் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- மழையால் பாதிக்கப்பட்ட வயல்களை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
- அதிகாரிகளை சந்தித்த விவசாயிகள், மழையால் ஏற்பட்டுள்ள சேதம் குறித்து விளக்கிக் கூறினர்.
அரியலூர்:
அரியலூர் மாவட்டம், தா.பழூர் வட்டாரத்தில் தொடர்ந்து பெய்த கோடை மழை காரணமாக சுமார் 750 ஏக்கர் நிலப்பரப்பில் நஞ்சை வயல்களில் பயிரிடப்பட்டிருந்த எள் செடிகள் முற்றிலும் அழிந்து நாசமானது. இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் எள் பயிர் செய்யப்பட்டு பாதிப்புக்கு உள்ளான பகுதிகளை நேற்று மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் பழனிச்சாமி தலைமையிலான வேளாண் துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.இந்த ஆய்வின்போது அதிகாரிகளை சந்தித்த விவசாயிகள், மழையால் ஏற்பட்டுள்ள சேதம் குறித்து விளக்கிக் கூறினர்.
அதனை கேட்டுக்கொண்ட அதிகாரிகள், தா.பழூர் வட்டாரம் முழுவதும் சுமார் 700 ஏக்கர் அளவில் பயிரிடப்பட்டுள்ள எள் பயிர் முற்றிலும் சேதம் அடைந்து விட்டதாக, அரசுக்கு அறிக்கை அனுப்பியுள்ளதாகவும், தொடர்ந்து மழை பெய்யும் சூழ்நிலை இருப்பதால், மழையால் ஏற்படக்கூடிய சேதங்கள் குறித்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், பின்னர் அரசுக்கு முழுமையான அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு உரிய நிவாரணம் கிடைக்க ஆவண செய்யப்படும் என்றும் உறுதியளித்தனர். ஆய்வின்போது வட்டார வேளாண்மை அலுவலர் செல்வகுமார், தென்கச்சிபெருமாள்நத்தம் கிராம நிர்வாக அலுவலர் அசோக்குமார், வேளாண்மை உதவி அலுவலர் செல்வப்பிரியா உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.
- உப்பில் அயோடின் கண்டறியும் ஆய்வு நடைபெற்றது
- அரசு மகளிர் கலை அறிவியல் கல்லூரியில்
கரூர்:
கரூர் மாவட்டம் மண்மங்கலம் அருகே பண்டுதகாரன்புதூர் கரூர் -சேலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் குடிமக்கள் நுகர்வோர் மன்றம் சார்பாக எளிய முறையில் உப்பில் அயோடின் கண்டறியும் ஆய்வு மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி கல்லூரி கலையரங்கில் நடைபெற்றது. விழாவிற்கு தமிழ்நாடு ஆசிரியர் கல்வியல் பல்கலைக்கழக துணைவேந்தர் துணைக் குழு உறுப்பினர் மற்றும் அரசு கல்வி நிறுவனங்களின் தலைவர் முனைவர் நடேசன் தலைமை வகித்தார். தாளாளர் கோதை நடேசன், செயலாளர் இன்ஜினீயர் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரியின் துணை முதல்வர் ரதிதேவி வரவேற்றார்.
சிறப்பு விருந்தினராக குளோபல் சமூக நலப் பாதுகாப்பு இயக்கத்தின் மாநிலத் தலைவர் டாக்டர் சொக்கலிங்கம்,
சிசிஐ தமிழ்நாடு மாநில தலைவர் - டிஎன்சிபிஇசி- ன் திட்ட ஒருங்கிணைப்பாளர் திருநாவுக்கரசு,
தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மையத்தின் பொதுச் செயலாளர் ரமேஷ், வேதியியல் ஆய்வாளர் அகிலன், குளோபல் சமூக நலப் பாதுகாப்பு இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெகதீசன்
ஆகியோர் கலந்து கொண்டு அயோடின் நுண்சத்து குறித்த விழிப்புணர்வு மற்றும் அயோடின் கலந்த உப்பினை கண்டறியும் பரிசோதனை ஆய்வையும் மாணவிகளிடையே நடத்திக் காட்டினார்கள்.
முடிவில் கல்லூரியின் குடிமக்கள் நுகர்வோர் மன்ற ஒருங்கிணைப்பாளர் ரமாபிரியா நன்றி கூறினார்.நிகழ்ச்சியில் கல்லூரி உள் தர கட்டுப்பாட்டு ஒருங்கிணைப்பாளர் மற்றும் பிற துறை சார்ந்த துறை தலைவர்கள் பேராசிரியர்கள் மாணவிகள் உட்பட சுமார் 300 பேர் கலந்து கொண்டனர்.
- திருச்சி பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து முணைய கட்டுமான பணிகள் நகராட்சி நிர்வாகத் துறை இயக்குனர் சிவராசு நேரில் ஆய்வு
- ரூ.349.98 கோடி மதிப்பீட்டில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது
திருச்சி
திருச்சி பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பேருந்து முணையம் கட்டும் பணி மற்றும் பல்வகை பயன்பாடுகள் மற்றும் வசதிகளுக்கான மையம் ரூ.243.78 கோடி, கனரக சரக்கு வாகன முணையம் கட்டுமானப் பணி மற்றும் சாலைகள், மழைநீர் வடிகால் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் ரூ.106.20 கோடி ஆக மொத்தம் ரூ.349.98 கோடி மதிப்பீட்டில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதை நகராட்சி நிர்வாகத்துறை இயக்குனர் சிவராசு, மாநகராட்சி ஆணையர், நகர பொறியாளர், ஒப்பந்ததாரர்களுடன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து பணி களை விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
பின்னர் எடமலைப்பட்டி புதூர் ராஜீவ் காந்தி நகரில் புதிதாக 9 . 90 கோடி மதிப்பீட்டில் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி கட்டிடம் கட்டுமான பணிகளை ஆய்வு செய்துகட்டுமான பணிகளை தரமாக மேற்கொள்ளவும் விரைந்து முடிக்கவும் ஒப்பந்ததாரர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
மேலும் கொட்டப்பட்டு குளத்தில் ரூபாய் 95 லட்சம் மதிப்பீட்டில் நடைபாதையுடன் கூடிய கலர் மின்விளக்குகள் அமைக்கும் பணி,குளத்தின் கரையை அழகுப்படுத்தும் பணி நடைபெற்று வருவதை பார்வையிட்டார்.
சீர்மிகு நகர திட்டத்தின் கீழ் புத்தூர் மீன் மார்க்கெட் பகுதியில் புதிதாக வணிக வளாகம் கட்டுமான பணிகளை பார்வையிட்டு விரைந்து முடிக்க உத்தரவிட்டார்கள்
இந்த ஆய்வில் மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன், நகரப்பொறியாளர் சிவபாதம் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.
- தமிழ்நாடு சட்டமன்ற பேரவை உறுதிமொழிக்குழு இன்று நெல்லை மாவட்டத்தில் நடைபெற்று வரும் பல்வேறு பணிகளை ஆய்வு செய்ய வந்தனர்.
- முதலில் முருகன்குறிச்சி பகுதியில் உள்ள பாளையங்கால்வாய் பகுதிக்கு சென்று அதனை பார்வை யிட்டு ஆய்வு செய்தனர்.
நெல்லை:
தமிழ்நாடு சட்டமன்ற பேரவை உறுதிமொழிக்குழு இன்று நெல்லை மாவட்டத்தில் நடைபெற்று வரும் பல்வேறு பணிகளை ஆய்வு செய்ய வந்தனர்.
பாளையங்கால்வாய்
குழுவின் தலைவர் வேல்முருகன் தலைமையில் கலெக்டர் கார்த்திகேயன், சட்டப்பேரவை செய லாளர் சீனிவாசன், உறுப்பினர்களான எம்.எல்.ஏ.க்கள் ரூபிமனோகரன், அண்ணாத்துரை, அருள், மோகன், ராமலிங்கம், விஸ்வநாதன், ஜெயக்குமார் மற்றும் நெல்லை மாநக ராட்சி மேயர் சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ, கமிஷனர் சிவகிருஷ்ண மூர்த்தி ஆகியோர் நெல்லை மாவட்டத்தில் நடைபெற்று வரும் பணிகளை இன்று ஆய்வு செய்தனர்.
முதலில் முருகன்குறிச்சி பகுதியில் உள்ள பாளை யங்கால்வாய் பகுதிக்கு சென்று அதனை பார்வை யிட்டு ஆய்வு செய்தனர். அப்போது மேலப்பாளை யம் பகுதியை சேர்ந்த சமூக நல ஆர்வலர்கள், சட்டமன்ற உறுதிமொழி குழுவின் தலைவர் வேல்முருகனிடம் அளித்த மனுவில் கூறியி ருப்பதாவது:-
தாமிரபரணியின் கிளை ஆறாக ஓடக்கூடிய பாளயங்கால்வாய் சுமார் 42 கிலோமீட்டர் நீளம் கொண்டது. இந்த கால்வாயானது நெல்லை மாவட்டம் பழவூர் கிரா மத்தில் தொடங்கி 14 கிலோ மீட்டர் பயணத்திற்கு பின்னர் மாநகர பகுதியான மேலப்பா ளையத்தை வந்தடைகிறது.
சுமார் 800 ஆண்டுகள் பழமையான பெரிய பள்ளிவாசல் இந்த கரையில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் நெல்லை மாநக ரத்தின் 10 ஆயிரம் ஏக்கர் விவசாயத்திற்கும், 57 குளங்களுக்கு நீர் ஆதாரமாகவும், கால்நடை களுக்கான முக்கியமான நீர் நிலை யாகவும், நிலத்தடி நீர் ஆதாரமாகவும் பாளை யங்கால்வாய் திகழ்ந்து வருகிறது.
இத்தகைய முக்கி யத்துவம் வாய்ந்த பாளை யங்கால்வாயை நெல்லை மாநகராட்சி மேலப்பா ளையம் மண்டலத்தில் பயணிக்கும் போது மாநகராட்சி கழிவு நீரோடையும், வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு களும் நேரடியாக கலக்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நச்சுகேடாக உள்ளது. எனவே இந்த பாளையங்கால்வாயை பாதுகாக்க தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.
மனுவை பெற்றுக் கொண்ட வேல்முருகன் எம்.எல்.ஏ., பாளையங்கால் வாயை முழுவது மாக தூர்வார கூடுதல் நிதி ஒது க்கீடு செய்யவும், அனைத்து விதமான நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். மேலும் கால்வாயில் கழிவு நீர் கலப்பதை முழுதும் தடுக்கும் முறை குறித்து நடவடிக்கை எடுப்பதற்கு உறுதியாக இருப்பதாக குழு தலைவர் வேல்முருகன் மனு அளித்தவர்களிடம் வலியுறுத்தினார்.
பொருநை அருங்காட்சியகம்
தொடர்ந்து சீவலப்பேரி சாலையில் அமைந்துள்ள விளையாட்டு கிராமத்தை பார்வையிட்ட உறுதிமொழி குழுவினர், ரெட்டியார்பட்டி மலைப்பகுதியில் ரூ.33 கோடி மதிப்பிட்டில் கட்டப்பட்டு வரும் பொருநை அருங்காட்சியகத்தையும் ஆய்வு செய்தனர்.
இதனை முடித்துக் கொண்டு இன்று பிற்பகல் நாங்குநேரியில் உள்ள தொழில் பூங்கா, அரசு என்ஜினீயரிங் கல்லூரி அருகே உள்ள ஆவின் பால் பண்ணை, சந்திப்பில் புதிதாக கட்டப்பட்டு வரும் பஸ்நிலைய கட்டுமானப் பணிகள், சுத்தமல்லி யில் நடைபெற்று வரும் கூட்டுக் குடிநீர் திட்டப்பணிகள், மனோன்மணியம் சுந்தர னார் பல்கலைக் கழகத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிட பணிகள், பேட்டை கண்டியப்பேரியில் அரசு மருத்துவமனை கட்டிட பணிகளையும் பார்வை யிட்டு ஆய்வு செய்ய உள்ளனர்.
தொடர்ந்து இன்று மாலை கலெக்டர் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் நடை பெறும் ஆய்வு கூட்டத்தில் கலந்து கொள்கின்றனர்.
வேலாயுதம்பாளையம்,
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் வட்டம் பாண்டமங்கலம் மெயின் ரோட்டில் அமைந்துள்ள ஆர்.என்.ஆக்ஸ்போர்டு மெட்ரிக் பள்ளி மாணவ, மாணவியர்கள் பரமத்தி வேலூரில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்றத்தை களப்பயணமாக பார்வையிட்டனர். 8-ம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் நீதிமன்றங்களின் செயல்பாடுகளை பற்றி பாடம் உள்ளது. இந்த பாடங்களில் உள்ள பாடத்திட்டத்தின் செயல்பாடுகளின் விளக்கங்களை அறிந்து கொள்ள எட்டாம் வகுப்பு மாணவ, மாணவியர்கள் நேரில் சென்று பார்வையிட்டு அறிந்து கொண்டனர். நீதிமன்ற வளாகத்தில் இயங்கும் குற்றவியல் நீதிமன்றம், குடும்ப நல நீதிமன்றம், துணை நீதிமன்றம், நீதிமன்ற பதிவு அறைகளை பார்வையிட்டு அதன் செயல்பாடுகளை அறிந்து கொண்டனர். நீதிபதிகள் மாணவ, மாணவியர்கள் இடையே இந்திய அரசியலமைப்பு சட்ட விதிகளை பற்றி விரிவாக கூறினார்கள். அரசு வழக்கறிஞர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் நீதிமன்ற வளாகத்தின் அனைத்து செயல்பாடுகளை பற்றி மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டனர். இந்த களப்பயணம் மாணவர்களின் இடையே தங்களது ஜனநாயக கடமை, சமூகப் பொறுப்புணர்ச்சியை தூண்டும் விதமாக அமைந்தது. இவர்களுடன் ஆர்.என்.ஆக்ஸ்போர்டு மெட்ரிக் பள்ளி முதல்வர் நந்தினி மற்றும் சமூக அறிவியல் பாட ஆசிரியர்கள் உடன் இருந்தனர். ஒருங்கிணைந்த நீதிமன்றத்தை பார்வையிட்டு வந்த மாணவ, மாணவியர்களை ஆர்.என். ஆக்ஸ்போர்டு கல்வி நிறுவனத்தின் தலைவர் சண்முகம், தாளாளர் சக்திவேல், செயலாளர் ராஜா, இயக்குனர்கள் டாக்டர் அருள், இன்ஜினீயர் சேகர், சம்பூரணம் மற்றும் ஆர்.என்.ஆக்ஸ்போர்டு பள்ளி முதல்வர்கள், ஆசிரிய, ஆசிரியைகள் பாராட்டினார்கள்.
- புகழூர் நகராட்சியில் சாலைபோடும் பணிகள் ஆய்வு
- மண் சாலைகளை தார் சாலைகளாக போடப்படும் பணி
வேலாயுதம்பாளையம்,
கரூர் மாவட்டம் புகழூர் நகராட்சித் தலைவர் சேகர் என்கிற குணசேகரன் புகழூர் நகராட்சிக்கு உட்பட்ட 12-வது வார்டுக்கு உட்பட்ட சுந்தரம்பாள் நகர் பகுதியில் கழிவுநீர் கால்வாயுடன் கூடிய சாலை போடப்படும் பணியினையும், சுந்தரம்பாள் நகர் வடக்கு (1,2,3) தெருக்கள் தார் சாலைகள் மற்றும் 23-வது வார்டுக்கு உட்பட்ட கணபதி நகர், வீனஸ் நகர் மற்றும் சிந்து நகர் பகுதியில் உள்ள மண் சாலைகளை தார் சாலைகளாக போடப்படும் பணிகளையும் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது நகராட்சி பொறியாளர் மலர்கொடி, நகராட்சி பணி மேற்பார்வையாளர் ரவி, நகர்மன்ற உறுப்பினர்கள் சுமங்கலி நந்தா, ராமு கணேஷ் ,நகராட்சி நிர்வாக அலுவலர்கள், நகராட்சி பணியாளர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.