search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Items"

    • தொழில் மற்றும் வர்த்தகத்தில் பயன்படுத்தப்படும் எந்திரங்கள், கருவிகள் உள்ளிட்ட உபகரணங்கள் சுத்தப்படுத்தியும், அலங்கரித்தும் வழிபாடு நடத்தப்படும்.
    • சிறிய அளவிலான எல்.இ.டி., சர விளக்குகள், நிறம் மாறி எரியும் பல வர்ண விளக்கு சரங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் திருப்பூர் பகுதி கடைகளில் விற்பனையாகிறது.

    திருப்பூர்,அக். 21-

    கல்விக்கடவுளான சரஸ்வதி தேவியை வழிபடும் வகையில், கல்வி நிறுவனங்கள் மற்றும் வீடுகளில் சரஸ்வதி பூஜை கொண்டாடப்படும்.அதே சமயம் தொழில், வணிகம், வர்த்தகம் மேற்கொள்ளும் தொழிற்சாலைகள், கடைகள், அலுவலகங்கள் ஆகியவற்றில் ஆயுத பூஜை கொண்டாடப்படும்.

    தொழில் மற்றும் வர்த்தகத்தில் பயன்படுத்தப்படும் எந்திரங்கள், கருவிகள் உள்ளிட்ட உபகரணங்கள் சுத்தப்படுத்தியும், அலங்கரித்தும் வழிபாடு நடத்தப்படும். அதேபோல் அனைத்து வாகனங்களையும் அலங்கரித்தும் பூஜை நடத்துவர்.

    பூஜைகளின் போது, வாகனங்கள், தொழிற்சாலைகள், அலுவலகங்கள் ஆகியவற்றில், வண்ண காகிதங்கள், பூ வேலைப்பாடு செய்த மின்னும் வகையிலான அலங்கார வடிவங்கள், செயற்கை பூக்கள் கொண்ட தோரணங்கள், மாலைகள் கொண்டும் அலங்காரம் செய்வது வழக்கம்.

    அவ்வகையில் பூஜையில் பயன்படும் அலங்கார காகித தோரணங்கள், ரிப்பன்கள், மாலைகள், சரஸ்வதி படம் அச்சிட்ட ஆயுத பூஜை எழுத்துகள் கொண்ட வடிவங்கள், ஜொலிக்கும் ஜிகினா காகித டிசைன்கள் ஆகியன கடைகளில் விற்பனைக்கு வந்துள்ளன. சிறிய அளவிலான எல்.இ.டி., சர விளக்குகள், நிறம் மாறி எரியும் பல வர்ண விளக்கு சரங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் திருப்பூர் பகுதி கடைகளில் விற்பனையாகிறது. பொதுமக்கள், தொழில் நிறுவனத்தினர் அதனை ஆர்வமுடன் வாங்கி வருகின்றனர். 

    • 300 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது.
    • கர்ப்பிணிகளுக்கு புடவை, தட்டு, வளையல்கள் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டன.

    கும்பகோணம்:

    சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் 300 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி கும்பகோணத்தில் நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் ராமலிங்கம் எம்.பி, சாக்கோட்டை அன்பழகன் எம்.எல்.ஏ கலந்து கொண்டு கர்ப்பிணிகளுக்கு புடவை, தட்டு, வளையல்கள் உள்ளிட்ட சீர்வரிசை பொருட்களை வழங்கினர்.

    இதில் கும்பகோணம் மாநகராட்சி துணை மேயரும், மாநகர தி.மு.க. செயலா ளருமான சு.ப.தமிழழகன், கும்பகோணம் ஊராட்சி ஒன்றிய துணை தலைவரும், மத்திய ஒன்றிய தி.மு.க. செயலாளருமான கணேசன், கும்பகோணம் கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் சுதாகர், குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர்கள் ரேவதி, புனிதவள்ளி, கவுன்சிலர் அனந்தராமன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • 50-க்கும் மேற்பட்ட மகளிர் சுயஉதவி குழுவினர் தயாரித்த பொருட்களை காட்சிபடுத்தினர்.
    • வேதாரண்யம் ஒன்றியத்தில் 1603 மகளிர் சுயஉதவி குழுக்கள் உள்ளன.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மகளிர் சுயஉதவி குழுவினர், தமிழ்நாடு மாநில வாழ்வாதார குழு இயக்கம் சார்பில் மகளிர் சுயஉதவிக்குழு உற்பத்தி பொருட்கள் செய்வோர் மற்றும் விற்பனையாளர் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு ஊராட்சி ஒன்றிய துணை வட்டாட்சியர் அண்ணா துரை தலைமை தாங்கினார். முன்னதாக மகளிர் சுயஉதவி குழு வட்டார இயக்க மேலாளர் அன்பு ரோஸ் மேரி அனைவரையும் வரவேற்றார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட பயிற்றுனர் பாலகணேஷ் சுகந்தி, தலைமையாசிரியர் தெட்சணாமூர்த்தி, துணை வட்டார அலுவலர் பக்கிரிசாமி, வர்த்தக சங்க பொருளாளர் சீனிவாசன், வட்டார மகளிர் சுயஉதவி குழுஒருங்கிணை ப்பாள ர்கள் மேனகா, அருள்மேரி, ஜெயமாலினி சுமித்ரா, மணிபாரதி உள்ளிட்ட வர்கள் கலந்து கொண்டனர்.

    இதில் 50-க்கும் மேற்பட்ட மகளிர் சுயஉதவி குழுவினர் தாங்கள் தயாரித்த பொருட்களை காட்சிபடு த்தினர்.

    இதுகுறித்து மகளிர் சுயஉதவி குழு வட்டார இயக்க மேலாளர் அன்பு ரோஸ் மேரி கூறுகையில்:-

    வேதாரண்யம் ஒன்றியத்தில் 1603 மகளிர் சுயஉதவி குழுக்கள் உள்ளன. அவற்றில் 1400 குழுக்களுக்கு சுமார் ரூ.3 கோடி நிதி வழங்கப்பட்டு சிறுதானிய பொருட்களை கொண்டு உணவு பொருட்கள் தயாரித்து விற்பனை செய்து தங்கள் வாழ்வாதாரத்தை உயர்த்தி உள்ளனர்.

    • சேலம் நெத்திமேட்டில் தனியார் சூப்பர் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது.
    • அப்போது அங்கு வந்த ஒருவர் பொருட்களை வாங்காமல் அங்குள்ள பொருட்களை திருடி உள்ளார்.

    சேலம் நெத்திமேட்டில் தனியார் சூப்பர் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இந்த சூப்பர் மார்க்கெட்டில் ஏராளமான பொதுமக்கள் மளிகை பொருட்கள் வாங்கி கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த ஒருவர் பொருட்களை வாங்காமல் அங்குள்ள பொருட்களை திருடி உள்ளார். இதை ஊழியர்கள் சி.சி.டி.வி கேமிராவில் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து அவரை பிடித்து பொருட்களை பறிமுதல் செய்து செவ்வாய்பேட்டை போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் கோட்டை அண்ணா நகர் பகுதியை சேர்ந்த சபியுல்லாகான் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • ஸ்ரீதேவி பூதேவி சமேத சவுந்தரராஜபெருமாள் கோவிலை சுற்றி வீதி உலா நடைபெற்றது.
    • திரவிய பொருட்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு கொடிமரத்தில் கொடி ஏற்றப்ட்டது.

    நாகப்பட்டினம்:

    நாகை சவுந்தரராஜ பெருமாள் கோவில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது நாகப்பட்டிணம் சௌந்தரராஜ பெருமாள் ஆலயம் 108 திவ்யதேசங்களில் 19வது திவ்யதேசமாகும்.

    இந்த ஆண்டு பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    முன்னதாக ஸ்ரீதேவி மூதேவி சமேத சௌந்தரராஜபெருமாள் கோவிலை சுற்றி வீதி உலா நடைபெற்றது.

    அதனை தொடர்ந்து ஆலய முன்பு உள்ள கொடி மரத்திற்கு பால், பன்னீர், சந்தனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட திரவிய பொருட்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு கொடிமரத்தில் கொடியேற்றம் நடைபெற்றது.

    இதில் பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என பக்தி கோஷங்கள் எழுப்பினர் அதனை தொடர்ந்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    • தமிழக அரசின் பொங்கல் பரிசாக அனைத்து அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா ரூ.1,000 ரொக்கப்பணம், தலா 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
    • வருகிற 2-ந்தேதி அந்தந்த மாவட்டங்களில் அமைச்சர்கள் இதனை தொடங்கி வைக்க உள்ளனர்.

    சேலம்:

    பொங்கல் பண்டி கையை மக்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில் தமிழக அரசு சார்பில் ஆண்டுதோறும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.

    அதன்படி இந்த ஆண்டு தமிழக அரசின் பொங்கல் பரிசாக அனைத்து அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா ரூ.1,000 ரொக்கப்பணம், தலா 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    பொங்கல் பரிசு வினி

    யோகத்தை சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 2-ந்தேதி தொடங்கி வைக்கிறார். அன்றைய தினமே அந்தந்த மாவட்டங்க ளில் அமைச்சர்கள் இதனை தொடங்கி வைக்க உள்ளனர்.

    இந்த நிலையில் சீனா, அமெரிக்கா போன்ற நாடுளில் வேகமாக பரவி வரும் உருமாறிய கொரோனா பி.எப்.7 தொற்று இந்தியாவிலும் நுழைந்துள்ளது. கொரோனா முதல் அலை போன்று இந்த தொற்று உயிர் சேதத்தையும், பொருளாதார இழப்பையும் ஏற்படுத்தி விடக்கூடாது என்பதில் மத்திய, மாநில அரசுகள் மிகவும் கவனம் செலுத்தி வருகின்றன.

    புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகை கொண்டாட்டம் புதிய வகை கொரோனாவுக்கு கொண்டாட்டமாக அமைந்து விடாத வகையில் மக்கள் விழிப்புடனும், எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

    இதையடுத்து தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பை ரேஷன்

    கடைகளில் கூட்ட நெரிசல்

    இன்றி எவ்வாறு வினியோகம் செய்ய ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. சேலம் மாவட்டத்தில் பொங்கல் பரிசு பெற தகுதியானவர்கள் குறித்து அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.

    ரேஷன் கார்டுதாரர்கள் எத்தனை பேர் உள்ளனர்? அவர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு எவ்வாறு வழங்குவது என்பதுபற்றி ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. சேலம் மாவட்டத்தில் மொத்தம் சுமார் 10 லட்சத்து 58 ஆயிரம் ரேசன் கார்டுகள் உள்ளன. இவர்கள் அனைவருக்கும் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட இருக்கிறது.

    • அடிப்படை வசதிகளை மேம்படுத்த தேவையான பொருட்கள் வாங்க முன்கூட்டியே திட்டம்.
    • பொருட்கள் மற்றும் செலவின தொகையை எமிஸில் பதிவு செய்ய வேண்டும்.

    சீர்காழி:

    ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தின் கீழ் அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளுக்கு பள்ளி மானியம் அனுப்பப ட்டுள்ளது. கொள்ளிடம் ஒன்றியத்தில் உள்ள சுமார் 94 பள்ளிகளுக்கு மானியம் விடுவிக்கபட்டுள்ளது.

    இந்த மானிய தொகையை பள்ளியின் வளர்ச்சிக்கு செலவு செய்தல் சார்ந்த கூட்டம் கொள்ளிடம் வட்டார வளமையத்தில் நடைபெற்றது. இக்கூட்ட த்திற்க்கு ஆசிரியர் பயிற்றுநர் ஐசக் ஞானராஜ் வரவேற்புரை ஆற்றினர். வட்டார வளமைய மேற்பா ர்வையாளர் ஞானபுகழேந்தி தலைமை யேற்று பேசும் பொழுது,

    இந்த ஆண்டு புதியதாக தொடங்கப்பட்டுள்ள வங்கி கணக்கினை தலைமை ஆசிரியர் மற்றும் பள்ளி மேலாண்மை குழு தலைவர் இணைந்து பராமரிக்கபடவேண்டும்.

    அடிப்படை வசதிகளை மேம்படுத்த தேவையான பொருட்கள் வாங்க முன்கூட்டியே திட்டமிட பட்டு பள்ளி மேலாண்மை குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு தரமான பொருட்களை வழங்க வேண்டும்.

    'வழங்கப்பட்டுள்ள மொத்த தொகையில் 10 சதவீதத்தை கழிவறை சுத்தம் செய்யவும் பள்ளி வளாகத்தை சுத்தம் செய்யவும் பயன்படு த்தி கொள்ளலாம். பள்ளி மானியத்தில் வாங்க ப்பட்டுள்ள பொருட்கள் மற்றும் செலவின தொ கையை எமிஸில் பதிவு செய்ய வேண்டும் என்றார்.

    இப்பயிற்சியின்கருத்தா ளர்களாக மாவட்ட தணிக்கையாளர் மோகன், வட்டார தணிக்கையாளர்கள் ராஜீவ்காந்தி சிவனேசன் ஆகியோர் ஈடுபட்டனர். முடிவில் ஆசிரியர் பயிற்றுநர் கவிதா நன்றி கூறினார்.

    ×