என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
10.58 லட்சம் ரேஷன் கார்டுகளுக்கு பொங்கல் தொகுப்பு வழங்க ஏற்பாடு
- தமிழக அரசின் பொங்கல் பரிசாக அனைத்து அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா ரூ.1,000 ரொக்கப்பணம், தலா 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
- வருகிற 2-ந்தேதி அந்தந்த மாவட்டங்களில் அமைச்சர்கள் இதனை தொடங்கி வைக்க உள்ளனர்.
சேலம்:
பொங்கல் பண்டி கையை மக்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில் தமிழக அரசு சார்பில் ஆண்டுதோறும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி இந்த ஆண்டு தமிழக அரசின் பொங்கல் பரிசாக அனைத்து அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா ரூ.1,000 ரொக்கப்பணம், தலா 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பொங்கல் பரிசு வினி
யோகத்தை சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 2-ந்தேதி தொடங்கி வைக்கிறார். அன்றைய தினமே அந்தந்த மாவட்டங்க ளில் அமைச்சர்கள் இதனை தொடங்கி வைக்க உள்ளனர்.
இந்த நிலையில் சீனா, அமெரிக்கா போன்ற நாடுளில் வேகமாக பரவி வரும் உருமாறிய கொரோனா பி.எப்.7 தொற்று இந்தியாவிலும் நுழைந்துள்ளது. கொரோனா முதல் அலை போன்று இந்த தொற்று உயிர் சேதத்தையும், பொருளாதார இழப்பையும் ஏற்படுத்தி விடக்கூடாது என்பதில் மத்திய, மாநில அரசுகள் மிகவும் கவனம் செலுத்தி வருகின்றன.
புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகை கொண்டாட்டம் புதிய வகை கொரோனாவுக்கு கொண்டாட்டமாக அமைந்து விடாத வகையில் மக்கள் விழிப்புடனும், எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
இதையடுத்து தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பை ரேஷன்
கடைகளில் கூட்ட நெரிசல்
இன்றி எவ்வாறு வினியோகம் செய்ய ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. சேலம் மாவட்டத்தில் பொங்கல் பரிசு பெற தகுதியானவர்கள் குறித்து அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.
ரேஷன் கார்டுதாரர்கள் எத்தனை பேர் உள்ளனர்? அவர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு எவ்வாறு வழங்குவது என்பதுபற்றி ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. சேலம் மாவட்டத்தில் மொத்தம் சுமார் 10 லட்சத்து 58 ஆயிரம் ரேசன் கார்டுகள் உள்ளன. இவர்கள் அனைவருக்கும் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட இருக்கிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்