search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Karthigai Deepa Festival"

    • கோப்பணம் பாளையம் பரமேஸ்வரர் ஆலயத்தில் உள்ள பாலமுருகனுக்கு கார்த்திகை தீபத்தை முன்னிட்டு 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
    • தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பாலமுருகன் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்து அருள் பெற்றனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கோப்பணம் பாளையம் பரமேஸ்வரர் ஆலயத்தில் உள்ள பாலமுருகனுக்கு கார்த்திகை தீபத்தை முன்னிட்டு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது . அதனை தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பாலமுருகன் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்து அருள் பெற்றனர்.

    அதேபோல் கபிலர்மலை பாலசுப்பிரமணிய சாமி கோவில், பிராந்தகத்தில் உள்ள ஆறுமுகக்கடவுள் கோவில், பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர் கோவிலில் உள்ள சுப்ரமணியர், பொத்தனூர் அருகே உள்ள பச்சமலை முருகன் கோவில், அனிச்சம்பாளையத்தில் வேல் வடிவம் கொண்ட சுப்ரமணியர்கோவில், பிலிக்கல்பாளையம் விஜயகிரி வடபழனி ஆண்டவர் கோவில், நன்செய் இடையார் திருவேலீஸ்வரர் கோவிலில் உள்ள சுப்ரமணியர், ராஜா சாமி கோவிலில் உள்ள ராஜா சாமி, பேட்டை பகவதியம்மன் கோவிலில் உள்ள முருகன், அருணகிரிநாதர் மலையில் உள்ள முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும், சிறப்பு அலங்காரமும் மகா தீபாராதனையும் நடைபெற்றது.

    விழாவில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.மேலும் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு பரமத்திவேலூர் வட்டாரத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. வீடுகள் தோறும் பொதுமக்கள் விளக்கேற்றி தீப திருநாளை கொண்டாடினர்.

    • கார்த்திகை தீப திருவிழாவில் ராமேசுவரம் கோவிலில் சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடந்தது.
    • திருச்சுழியில் திருமேனிநாதர் துணைமாலை அம்மன் கோவிலில் மகா தீபம் ஏற்றப்பட்டது.

    ராமேசுவரம்

    ராமேசுவரம் ராமநாத சுவாமி கோவிலில் கார்த்திகை பவுர்ணமியை யொட்டி சிவபெருமான் திரிபுரம் எரித்த புரா ணத்தின் அடிப்படையில் சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி சிறப்பாக நடை பெறும். அதன்படி நேற்று கோவில் முன்பு மிகப்பெரிய சொக்கப்பனை உருவாக்கப்பட்டு கொளுத்தப்பட்டது.

    தொடர்ந்து கோவிலில் சுவாமி-அம்மன் மற்றும் பரிவார தேவதைகளுக்கு சிறப்பு பூஜை, தீபாரதணை நடந்தது. இதன் பின் கிழக்கு கோபுரம் முன்புள்ள மண்ட பத்திற்கு சுவாமி-அம்மன் எழுந்தருளினர். கிழக்கு கோபுர வாசல் முன்பு அமைக்கப்பட்டிருந்த சொக்கபனைக்கு கோவில் தலைமை குருக்கள் உதய குமார் தலைமையில் பூஜைகள் நடைபெற்றது.

    சொக்கப்பனை கொளுத் தப்பட்ட பின்னர் சுவாமி அம்பாளுக்கு தீபாராதனை காட்டப்பட்டு 3-ம் பிர காரத்தில் வீதி உலா நடந்தது.

    ஏற்பாடுகளை துணை ஆணையர் சிவராம் குமார், உதவி ஆணையர் பாஸ்கரன், ஆய்வர் பிரபாகரன் செய்தி ருந்தனர். போலீஸ் துணை சூப்பிரண்டு உமாதேவி தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாது காப்பு பணியில் ஈடுபட்டனர். நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்ட னர்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் வனத்துறை கட்டுப் பாட்டில் இருக்கும் சஞ்சீவி மலையில் குமாரசாமி கோவிலில் உள்ள மூலவர், உற்சவர் சிலைகளுக்கு சிறப்பு அபிஷேகங்கள், ஆராதனைகள் நடந்தது. மாலை 6 மணிக்கு மேல் மலை உச்சியில் அமைக் கப்பட்டிருந்த தூணில் மகா தீபம் ஏற்றப்பட்டது.

    தொடர்ந்து சந்தான கிருஷ்ணன் கோயில் உச்சியிலும் மகா தீபம் ஏற்றப் பட்டது. இன்று மாலை 6 மணிக்கு மேல் முருகன், சந்தான கிருஷ்ணன் மற்றும் கம்பத்து பெருமாள் கோயில்களிலும் மகா தீபம் ஏற்றப் பட உள்ளது.


    கார்த்திகை மகா தீபத்தையொட்டி திருச்சுழி திருமேனிநாதர்- துைண மாலை அம்மன் கோவிலில் சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்ததையும், திடியன் மலை மீது கொப்பரையில் ஏற்றப்பட்ட மகா தீபத்தையும் படத்தில் காணலாம்.

     திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழியில் திருமேனிநாதர் துணைமாலை அம்மன் கோவிலில் கார்த்திகையை முன்னிட்டு கோவிலில் மகா தீபம் ஏற்றப்பட்டது.

    திருமேனிநாதர், துணை மாலையம்மன் உட்பட பஞ்சமூர்த்தி உற்சவ சிலை களுக்கு மஞ்சணை, மஞ்சள், சந்தனம், விபூதி, பால், பன்னீர், இளநீர் உள்பட 18-க்கும் மேற்பட்ட வாசனை பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடை பெற்றது. பின்னர் சுவாமி, அம்ம னுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

    தொடர்ந்து சொக்கப்பனை எரிக்கும் நிகழ்ச்சி நடந்தது. 15 அடி உயரத்திற்கு கோபுர வடிவில் சொக்கப்பனை உருவாக்கப்பட்டு அதற்கு தீபாராதனைகள் காட்டப்பட்டு பின்பு கொளுத்தப்பட்டது. திருச்சுழி, சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து நூற்றுக் கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    திருச்சுழி சரக போலீஸ் இன்ஸ்பெக்டர் மணி கண்டன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    மானாமதுரை

    மானாமதுரை அருகே குறிச்சியில் உள்ள வழிவிடு பெரியநாச்சி அம்மன் கோவிலில் உள்ள செந்தில் ஆண்டவர் சன்னதியில் கார்த்திகை மகாதீப விழா நடந்தது. இதில் பாலா பிஷேகம், சிறப்பு பூஜை நடைபெற்றது.

    தொடர்ந்து ராஜ அலங்காரத்தில் முருக பெருமான் காட்சியளித்தார். மானாமதுரை வைகைஆற்று கரையில் உள்ள ஆனந்த வல்லி சோமநாதர் கோவில், சுந்தரபுரம் தெருவில் உள்ள சுந்தர விநாயகர் கோவில், பைபாஸ் சாலையில் உள்ள வழிவிடு முருகன் கோவில் வேம்பத்தூர் கைலாசநாதர் கோவில், இடைக்காட்டூர் பாலமுருகன் கோவில், கட்டிக்குளம் ராமலிங்கம் சுவாமி கோவில்,

    தாய மங்கலம் அருகே உள்ள அலங்காரகுளம் சோனையா சுவாமி வைகைகரை அய்யனார் கோவில் ஆகிய கோவில்களி லும் கார்த்திகை மகா தீபத்தையொட்டி சொக்கபனை கொளுத்தும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    உசிலம்பட்டி

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வட்டம் திடியன் மலையில் 2 ஆயிரம் அடி உயரத்தில் 100 மீட்டர் திரி, நெய் கொண்டு தயாரிக்கப்பட்ட பெரிய கொப்பரையில் கார்த் திகை மகாதீபம் ஏற்றப் பட்டது. தொடர்ந்து மலை ே மல் உள்ள தங்கமலை ராமர் கோவில், அடி வாரத்தில் உள்ள கைலாச நாதர் சமேத பெரிய நாயகி அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. ஏராளமான பக்தர்கள் பவுர்ணமி கிரிவலம் சென்றனர்.

    • கார்த்திகை தீப திருவிழாவுக்கு திருவண்ணாமலை செல்ல வசதியாக 695 அரசு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
    • காரைக்குடி-ராமேசுவரத்தில் இருந்து செல்கிறது.

    மதுரை

    அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் கோட்ட மேலாண் இயக்குனர் மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருவண்ணாமலை அருள்மிகு அண்ணா மலையார் திருக்கோவில் கார்த்திகை தீபத்திருநாள் வருகிற 26ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை )மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது. மேலும் 27-ந் தேதி பவுர்ணமி கிரிவலம் நடக்கி றது. இதையொட்டி நாளை 25-ந் தேதி முதல் 27 -ந் தேதி வரை அனைத்து பக்தர்கள் மற்றும் பொது மக்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்கு வரத்து கழகம் கும்ப கோணம் கோட்டத்தின் மூலம் 695 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

    இந்த சிறப்பு பஸ்கள் காரைக்குடி, ராமேஸ்வரம், புதுக்கோட்டை, கரூர், திருச்சி, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கும்ப கோணம் உள்ளிட்ட பகுதி களில் இருந்து இயக்கப்பட உள்ளது. மேலும் திருவண்ணாமலை நகரில் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக 9 தற்காலிக பஸ் நிறுத்தங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    இந்த பஸ் நிலையங்களில் இருந்து பக்தர்கள் கிரிவலப் பாதை சென்று திரும்பி வருவதற்கு வசதியாகவும் மினி பஸ்கள் வசதியும் செய்யப்பட்டுள்ளது.

    எனவே பயணிகள் தங்களின் பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டு பயணம் செய்ய எதுவாக www.tnstc.in என்ற இணைய தளம் மூலம் முன்பதிவு செய்து பயன்பெறலாம். மேலும் மொபைல் ஆப் மூலமும் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • கார்த்திகை தீப திருவிழா ஏற்பாடுகள் தீவிரம்
    • அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவு

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திரு விழாவை முன்னிட்டு கிரிவலப்பாதையில் கிரிவல பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்து பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்தார்.

    கார்த்திகை தீப திருவிழாவிற்கு வரும் ஆன்மீக பக்தர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து கொண்டே வருகிறது.

    கடந்த ஆண்டு கார்த்திகை தீபத்திருவிழா பாதுகாப்போடும், ஆன்மிக மக்கள் எல்லாம் பாராட்டும் அளவிற்கு சிறப்பாக நடை பெற்றது என தமிழ்நாடு முதல் - அமைச்சர் பாராட்டு தெரிவித்தார்.

    இந்த ஆண்டு தீபத்திருவிழா வெகு சிறப்பாக நடைபெற வேண்டும் என கூறிய முதல் - அமைச்சர் கார்த்திகை தீபத்திருவிழா முடியும் வரை திருவண்ணாமலையில் தங்கி இருந்து பணிகளை கவனிக்க சொல்லி யிருக்கிறார்.

    அதன் அடிப்படையில் இன்று கிரிவலப்பாதையில் செய்யப்பட வேண்டிய பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடன் ஆய்வு செய்யப்பட்டது.

    கார்த்திகை தீபத் திருவிழாவின் பிரதானமாக பார்க்கப்படுவது 14 கிலோ மீட்டர் தூரம் உள்ள அண்ணாமலையை சுற்றி கிரிவலம் வருவது தான். 14 கிலோ மீட்டர் தூரம் உள்ள கிரிவலப்பாதையில் ஆன்மிக மக்கள் காலணி அணியாமல் கிரிவலம் வருகின்றனர்.

    அதனால் பாதைகள் அனைத்தும் தூய்மையாக வைக்கப்படும். 24 மணி நேரமும் பக்தர்கள் கிரிவலம் வருவதால் இரவு நேரங்களில் தேவையான அளவு மின்விளக்கு வசதி செய்யப்பட்டுள்ளது. தேவையான அளவிற்கு கழிப்பிட வசதி மற்றும் குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்களின் நிதியில் இருந்து கிரிவல ப்பாதையில் கேமராக்கள் அமைக்க நிதிகள் வழங்கப்பட்டு அதற்கான பணிகளும் நடைபெற்று வருகிறது.

    தமிழ்நாடு போலீஸ் ஸ்காட்லாந்து போலீசுக்கு இணையானவர்கள். கிரிவலம் வரும் பக்தர்களின் பாதுகாப்பிற்காகவும் சிறு சிறு குற்ற சம்பவங்கள் கூட நடைபெறாமல் தடுக்கவும் காவலர்கள் சாதாரண உடையில் மக்களோடு மக்களாக கலந்து கண்காணிப்பு பணியில் இந்த ஆண்டு ஈடுபடுவார்கள். இவ்வாறு அவர் பேசினார்.

    கலெக்டர் பா,முருகேஷ், சி.என்.அண்ணாதுரை எம்பி, மாநில தடகள சங்க துணை தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன், தொழிலாளர் நல மேம்பாட்டு பிரிவு அரசு பிரதிநிதி இரா.ஸ்ரீதரன், நகராட்சி ஆணையாளர் ந.தட்சிணாமூர்த்தி, நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் பழனி, கோட்டப்பொறி யாளர் ராஜ்குமார், உதவி கோட்ட ப்பொறியாளர் ரகுராமன், அண்ணா மலையார் கோவில் இணை ஆணையர் சி.ஜோதி, கோட்டாட்சியர் மந்தாகினி, ஒன்றியக்குழு தலைவர் கலைவாணி கலைமணி, வட்டாட்சியர் தியாகராஜன், மின்வாரிய உதவி செயற்பொறியாளர் வெங்கடேசன், வட்டார வளர்ச்சி அலுவலர் அமிர்தராஜ், நகர மன்ற துணைத் தலைவர் சு.ராஜாங்கம், டாக்டர் சேஷாத்ரி, மெய்யூர் சந்திரன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

    • அர்த்த நாரீஸ்வரர் மலைகோவிலில் இறைவன் ஜோதி ரூபத்தில் பக்தர்களுக்கு காட்சி தரும் நிகழ்வை தீபத் திருவிழாவாக கொண்டாடுகின்றனர்.
    • இந்த தீபத் திருவிழாவில் ஆயிரக் கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    திருச்செங்கோடு:

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அர்த்த நாரீஸ்வரர் மலைகோவிலில் இறைவன் ஜோதி ரூபத்தில் பக்தர்களுக்கு காட்சி தரும் நிகழ்வை தீபத் திருவிழாவாக கொண்டாடுகின்றனர். கார்த்திகை மாதம் கிருத்திகை நட்சத்திரத்தில் திருவண்ணாமலையிலும், அதனை தொடர்ந்து வரும் பவுர்ணமி திதியில் அனைத்து சிவாலயங்களிலும் தீபத் திருவிழா கொண்டாடப் படுவது வழக்கம்.

    அதன்படி திருச்செங்கோடு அர்த்த நாரீஸ்வரர் மலை கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா நேற்று பவுர்ணமி திதியில் கொண்டாடப்பட்டது. அர்த்தநாரீஸ்வரர், ஆதிகே சவ பெருமாள் உடன் வந்து கோவிலின் பிரதான கோபுரத்தின் அருகில் நெய்தீபம் ஏற்றி வைக்கும் நிகழ்ச்சி நடந்தது.

    தொடர்ந்து உச்சி பிள்ளையார் கோவிலில் திருக்கார்த்திகை தீப விழா அறக்கட்டளை சார்பில் கூம்பு கொளுத்தும் நிகழ்ச்சி

    நடந்தது. அப்போது பக்தர்கள்

    அரோகரா என கோஷ மிட்டனர். தொடர்ந்து கோவிலின் மேற்கு வாயில் அருகில் சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடந்தது.

    இந்த தீபத் திருவிழாவில் ஆயிரக் கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்

    • வெற்றி பெரும் 3 பேருக்கு கலெக்டர் முருகேஷ் பரிசு வழங்குகிறார்
    • போலீஸ் சூப்பிரண்டு தகவல்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு தூய்மை மற்றும் பாதுகாப்பான தீபம்-2022 என்ற தலைப்பில் பாதுகாப்பு விழிப்புணர்வு 'மீம்ஸ்' போட்டி திருவண்ணாமலை மாவட்ட காவல் துறையில் நடைபெற உள்ளது.

    தீபத்தின் போது பொதுமக்கள் குற்ற முன்னெச்சரிக்கை நடவடி க்கைகளான குற்ற விழிப்பு ணர்வு, நகை பறிப்பு, பிக்பாக்கெட், குழந்தை கடத்தல், பெண்கள் பாதுகாப்பு தொடர்பான பிரச்சி னைகள், மூத்த குடிமக்களுக்கான உதவி, தீயணைப்பு பாதுகாப்பு, சுற்றுச்சூழல் தூய்மை, பிளாஸ்டிக் பயன்படுத்தாதீர் தொடர்பான 'மீம்ஸ்'கள் தமிழ், ஆங்கிலம், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் தயார் செய்து தங்களுடைய பெயர், முகவரி மற்றும் தொலைபேசி எண்களை இணைத்து smctvmpolice@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

    சிறந்த 'மீம்ஸ்'களாக தேர்ந்தெடுக்கப்படும் முதல் 3 பேருக்கு கலெக்டர் முருகேஷ் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் ஆகியோரால் நினைவு பரிசு மற்றும் வெகுமதி வழங்கப்படும்.

    மேலும் சிறந்ததாக தேர்ந்தெடுக்கப்படும் 'மீம்ஸ்'கள் மகா தீப திருவிழாவின் போது பொதுமக்களிடையே திரையிடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தங்களுடைய 'மீம்ஸ்'களை வருகிற 28-ந்தேதி (திங்கட்கிழமை) மாலை 5 மணிக்குள் அனுப்ப வேண்டும்.

    இந்த தகவலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் தெரிவித்து உள்ளார்.

    • 24-ந்தேதி துர்க்கை அம்மன் உற்சவத்துடன் தீப விழா தொடங்குகிறது
    • டிசம்பர் மாதம் 6-ந் தேதி மகா தீபம் ஏற்றப்படுகிறது

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் பல்வேறு விழாக்கள் நடைபெறாலும் கார்த்திகை தீபத் திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.

    இந்த ஆண்டிற்கான கார்த்திகை தீபத் திருவிழா வருகிற நவம்பர் மாதம் 24-ந்தேதி துர்க்கை அம்மன் உற்சவத்துடன் தொடங்குகிறது. தொடர்ந்து 27-ந் தேதி அதிகாலையில் சாமி சன்னதி முன்பு உள்ள தங்க கொடிமரத்தில் கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

    விழாவின் சிகர நிகழ்ச்சி டிசம்பர் மாதம் 6-ந் தேதி காலையில் பரணி தீபமும், மாலையில் கோவில் பின்புறம் உள்ள மலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது.

    இவ்விழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு கார்த்திகை தீபத் திருவிழா பத்திரிக்கை வழங்குவதற்காக கோவிலில் உள்ள சம்பந்த விநாயகர் சன்னதியில் பத்திரிக்கைக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது.

    இதையடுத்து கோவில் சிவாச்சாரியார்கள் பூஜை செய்யப்பட்ட பத்திரிக்கைகளை கோவில் அலுவலர்களிடம் வழங்கினர்.

    அதனை தொடர்ந்து கோவில் அலுவலர்கள் சிவாச்சாரியார்கள், அலுவலர்கள், பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு வழங்கி பத்திரிக்கை விநியோகம் செய்யும் பணியை தொடங்கி வைத்தனர்.

    ×