search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kolkata"

    • 7/7 என்ற புள்ளிகளுடன் ஆல் இந்தியா ராபிட் ஈவண்ட் (Event B) இல் வெற்றி பெற்றார்
    • காலைத் தொட்டுக் கும்பிட்ட சம்பவம் அங்கிருந்த அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

    டாடா ஸ்டீல் செஸ் இந்தியா திருவிழா 2024 நேற்றுடன் நிறைவடைந்தது. இதில் 7/7 என்ற புள்ளிகளுடன் ஆல் இந்தியா ராபிட் ஈவண்ட் (Event B) இல் இளம் வீராங்கனை பிரிஸ்டி முகர்ஜி வெற்றி பெற்றார்.

    உலகின் நம்பர் 1 செஸ் ஜாம்பவான் நார்வே நாட்டு வீரர் மாக்னஸ் கார்ல்சன், பிரிஸ்டி முகர்ஜியிடம் டிராபியை கொடுக்கும் சமயத்தில் பிரிஸ்டி அவரது காலைத் தொட்டுக் கும்பிட்ட சம்பவம் அங்கிருந்த அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

    பிரஸ்டியின் செயலை கவனித்த கார்ல்சன் முகத்திலும் புன்னகை அரும்பியது. இந்த சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    டாடா ஸ்டீல் செஸ் இந்தியா நிகழ்வானது மேற்குவங்க தலைநகர் கொல்கத்தாவில் அமைந்துள்ள தன்யோ ஆடிட்டோரியத்தில் வைத்து நவம்பர் 13 தொடங்கி நேற்று நவம்பர் 17 வரை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

    • மேற்கு வங்க மாநிலத்தின் பிரதான பண்டிகையான துர்கா பூஜா கொண்டாட்டங்கள் கலைகட்டத் தொடங்கியுள்ளன
    • பெண்களுக்கு எதிரான வன்முறைகளைக் காணச் சகிக்காது கண்களை மூடியுள்ளார்

    மேற்கு வங்க மாநிலத்தின் பிரதான பண்டிகையான துர்கா பூஜா கொண்டாட்டங்கள் கலைகட்டத் தொடங்கியுள்ளன. தலைநகர் கொல்கத்தாவில் வருடந்தோறும் நவராத்திரி கொண்டாட்டத்தில் பல்வேறு விஷயங்களில் பின்னணியில் துர்கை சிலை பந்தல்கள் உருவாக்கப்படுவது வழக்கம்.

    அந்த வகையில், இந்த வருடம் அமைக்கப்பட்டுள்ள பந்தல் ஒன்று கவனம் ஈர்த்து வருகிறது. சமீபத்தில் கொல்கத்தாவில் ஆர்.ஜி.கர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி பெண் டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது அனைவரும் அறிந்ததே நாடு முழுவதும் மருத்துவர்களின் போராட்டம் பெரும் அதிர்வலை ஏற்படுத்தியிருந்தது.

    கொல்கத்தாவிலும் இந்நாள்வரை போராட்டங்கள் நடத்தப்பட்டது. இந்நிலையில் பெண் மருத்துவர் கொல்லப்பட்ட சம்பவத்தைப் பின்னணியாகக் கொண்டு துர்கா பூஜா பந்தல் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. 'அவமானம்' என்ற தலைப்பில் அமைக்கப்பட்ட அந்த பந்தலில் பல கைகள் கொண்ட தேவி துர்க்கை இரு கைகளால் கண்களை மறைத்தவாறு வெட்கத்தில் நிற்பதுபோல் சிலை உருவாக்கப்பட்டுள்ளது.

     

    பெண்களுக்கு எதிரான வன்முறைகளைக் காணச் சகிக்காது அவர் கண்களை மூடுவது போல் இது காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. சிலைக்கு முன்பு வெள்ளைத் துணியால் பெண் மூடப்பட்டு விழுந்துகிடப்பது போன்றும், மருத்துவர்களின் உடை சுவரில் தொங்குவதுபோன்றும் அந்த பந்தலில் அமைக்கப்பட்ட இந்த பந்தல் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

    • 3 டாக்டர்கள் மற்றும் 3 நர்சுகள் மீது மர்ம கும்பல் தாக்குதல்
    • மெழுகுவர்த்தி ஜோதி ஏந்தி பேரணியாக சென்றனர்.

    கொல்கத்தா:

    கொல்கத்தாவில் கடந்த ஆகஸ்டு மாதம் பயிற்சி பெண் டாக்டர் ஒருவர் கற்பழித்து கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

    இந்த கற்பழிப்பு கொலை சம்பவத்தை கண்டித்தும், இதற்கு நீதி கேட்டும், டாக்டர்களுக்கு பாதுகாப்பு அளிக்க கோரியும் நாடு முழுவதும் பல்வேறு போராட்டம் நடந்தது.

    டாக்டர்கள் ஆஸ்பத்திரி பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் நோயாளிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

    இந்நிலையில் இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க உத்தரவிடப்பட்டது. இதையடுத்து போராட்டங்கள் கட்டுக்குள் வந்தது.

    இந்த நிலையில் சாகூர்தத்தா மருத்துவமனையில் 3 டாக்டர்கள் மற்றும் 3 நர்சுகள் மீது மர்ம கும்பல் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.

    இந்த சம்பவம் மீண்டும் டாக்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டாக்டர்களுக்கு உறுதி அளிக்கப்பட்ட பாதுகாப்பை வழங்க அரசு தவறியதாக கூறி மீண்டும் டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    எஸ்.எஸ்.கே.எம். மருத்துவமனை, கொல்கத்தா மருத்துவ கல்லூரி டாக்டர்கள் தெற்கு கொல்கத்தாவில் உள்ள ஜாதவ்பூர் மற்றும் அரசு மருத்துவமனை டாக்டர்கள் பல்வேறு இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது அவர்கள் மெழுகுவர்த்தி ஜோதி ஏந்தி பேரணியாக சென்றனர். மருத்துவ கல்லூரிகளில் மாணவர்கள் அச்சுறுத்தல்களை எதிர் கொள்கின்றனர். இதற்கு முடிவு கட்ட வேண்டும்.

    பணியிடங்களில் டாக்டர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும். உறுதியளிக்கப்பட்ட பாதுகாப்பை வழங்குவதில் அரசு தோல்வி அடைந்துள்ளதாக கூறி டாக்டர்கள் பல்வேறு இடங்களில் மெழுகுவர்த்தி ஜோதி ஏந்தி பேரணி, போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    மருத்துவமனைகளில் பாதுகாப்பை பலப்படுத்தவும், மருத்துவமனை உள்கட்டமைப்பை மேம்படுத்தவும் அரசு எந்த ஒரு நேர்மறையான நடவடிக்கையையும் எடுக்க தவறினால் இன்று முதல் மீண்டும் முழு வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் டாக்டர்கள் அறிவித்துள்ளனர்.

    பயிற்சி டாக்டர் கொலை வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் முக்கிய விசாரணைக்கு வர உள்ள நிலையில் டாக்டர்கள் மீண்டும் போராட்ட களத்தில் இறங்கியுள்ளது கொல்கத்தாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • நாட்டில் விதி விதிவிலக்காக கொல்கத்தாவில் மட்டுமே டிராம் சேவைகள் தொடர்ந்து வருவகிறது.
    • டிராம் சேவையை நிறுத்துவதற்கான முடிவுக்கு எதிராக டிராம் ஆர்வலர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்

    கொல்கத்தாவில் 150 ஆண்டு காலமாக இயங்கி வந்த டிராம் வண்டி சேவை விரைவில் முடிவுக்கு வர உள்ளது பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. பிரிட்டிஷ் ஆட்சியில் புறநகர்களில் பிரபலமான போக்குவரத்தாக இருந்த டிராம் வண்டிகள் நாட்டில் தற்போது கொல்கத்தாவில் மட்டுமே இயங்கி வருகிறது. சென்னை மாகாணமாக இருந்த சமயத்தில் இங்கும் டிரம்ப் சேவைகள் பிரசித்தி பெற்றவை. ஆர்யா நடிப்பில் வெளிவந்த மதராசபட்டினம் படத்தில் சென்னையில் நகரின் ஊடே டிரம்ப் சேவைகள் இருந்தது காட்சிப்படுத்தப்பட்டிருக்கும்.

    பேருந்து உள்ளிட்ட சேவைகள் வந்த பிறகு டிராம் சேவைகள் நாட்டில் படிப்படியாகக் குறைந்து முற்றிலுமாக காணாமல் போனது. ஆனால் விதி விதிவிலக்காக மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் மட்டுமே இன்னும் செயல்பட்டு அந்நகருக்கு தனித்தன்மையாக அடையாளமாகத் திகழ்ந்து வருகிறது. ஆனால் போக்குவரத்து நெரிசல் பிரச்சனைகளைக் காரணம் காட்டி அந்த சேவையை முற்றிலுமாக நிறுத்த அரசு முடிவெடுத்துள்ளது.

    இதன்மூலம் கொல்கத்தாவில் 150 ஆண்டுகள் பழமையான டிராம் சேவை சகாப்தம் வருந்தத்தக்க வகையில் முடிவுக்கு வர உள்ளது. டிராம்களின் குறைவான வேகத்தால் பீக் ஹவர் டிராஃபிக் நெரிசல் சமாளிக்க முடியாத அளவுக்கு அதிகரித்துள்ளது. எனவே இனி இதனைத்தொடர்வது சாத்தியமில்லை என்று அம்மாநில போக்குவரத்துத்துறை சினேகசிஸ் சக்ரவர்த்தி தெரிவித்துள்ளார். இருப்பினும் டிரம்ப் பாரம்பரியத்தின் நினைவாக மைதான் முதல் எஸ்பிளனேட் [Maidan to Esplanade] டிரம்ப் வழித்தடம் மட்டும் தொடர்ந்து செயல்படும் என்று தெரிவித்துள்ளார்.

     

    இந்நிலையில் டிராம் சேவையை நிறுத்துவதற்கான முடிவுக்கு டிராம் ஆர்வலர்கள் மற்றும் கொல்கத்தா டிராம் பயனர்கள் சங்கம் (CUTA) கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மாசற்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையிலும் மணிக்கு 20-30கிமீ வேகம்வரை ஓடக்கூடிய டிராம்கள் மெதுவாக நகர்கிறது என்று கூறுவது தவறு என்றும் அரசின் இந்த முடிவை எதிர்த்தும் அவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    • ஐந்து நிபந்தனைகளில் மூன்றை நிறைவேற்ற மம்தா பானர்ஜி சம்மதம்.
    • கொல்கத்தா போலீஸ் கமிஷனர் வினீத் கோயலை நீக்க மம்தா சம்மதம்.

    மேற்கு வங்க மாநிலம் தலைநகர் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணியில் இருந்த பெண் டாக்டர் ஒருவர் கடந்த மாதம் கற்பழித்து கொலை செய்யப்பட்டார். நாட்டையே உலுக்கிய இந்த சம்பவம் தொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்தனர். மேலும் தடயங்களை அழித்த குற்றச்சாட்டில் மருத்துவக்கல்லூரி முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ், வழக்கை முதலில் விசாரித்த போலீஸ் இன்ஸ்பெக்டரையும் சி.பி.ஐ. கைது செய்துள்ளது.

    இதற்கிடையே பெண் டாக்டர் கொலைக்கு நீதி கேட்டும், டாக்டர்களின் பாதுகாப்பை உறுதி செய்யக்கோரியும் மாநிலம் முழுவதும் இளநிலை டாக்டர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளனர். வேலைநிறுத்தம் 36 நாட்களை கடந்துள்ளது.

    போராட்டத்தை முடித்துக் கொண்டு வேலைக்கு திரும்புமாறு மம்மா பானர்ஜி அழைப்பு விடுத்தார். ஆனால், டாக்டர்கள் அதை ஏற்க மறுத்தனர். இதனைத்தொடர்ந்து பேச்சுவார்த்தைக்கு அழைக்குவிடுத்தார். பல்வேறு நிபந்தனைகளை டாக்டர்கள் விதித்ததால் நான்கு முறை பேச்சுவார்த்தை நடைபெறவில்லை.

    இந்த நிலையில்தான் நேற்றிரவு 5-வது மற்றும் கடைசி கட்ட பேச்சுவார்த்தைக்கு மம்தா பானர்ஜி அழைப்பு விடுத்தார். அதன்படி டாக்டர்கள் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டனர்.

    அப்போது போராட்டக்காரர்கள் ஐந்து நிபந்தனைகள் விதித்தனர். அவற்றில் மூன்று நிபந்தனைகளை மம்தா பானர்ஜி ஏற்றுக் கொண்டார். அதன்படி கொல்கத்தா போலீஸ் கமிஷனர், ஆர்.ஜி. கர் மருத்துவக்கல்லூரி அமைந்துள்ள நகரின் வடக்கு பகுதி போலீஸ் தலைமை அதிகாரி ஆகியோரை நீக்க மம்தா சம்மதம் தெரிவித்துள்ளார். அத்துடன் இரண்டு சுகாதாரத்துறை அதிகாரிகளையும் நீக்குவதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார்.

    "இந்த கூட்டம் நேர்மறையாக இருந்ததாக நினைக்கிறேன். உறுதியாக அவர்களும் அப்படி நினைப்பார்கள். டாக்டர்களின் 99 சதவீத நிபந்தனைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. ஏனென்றால் அவர்கள் எங்களுடைய இளைய சகோதரர்கள். நாங்கள் சென்று ஆலோசனை நடத்தி அதன்பிறகு போராட்டத்தை கைவிடுவது பற்றி முடிவு செய்வோம் என அவர்கள் சொல்வார்கள் என்று எனக்குத் தெரியும். அதனால் சில மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கைக் கருத்தில் கொண்டு நோயாளிகளின் நிலையைக் காரணம் காட்டி அவ்வாறு செய்யுமாறு நான் அவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளேன்" என மம்தா பானர்ஜி தெரிவித்தார்.

    இருந்தபோதிலும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும்வரை போராட்டம் தொடரும் என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

    மருத்துவமனையின் கட்டமைப்பு உயர்த்துவதற்காக மாநில அரசு 100 கோடி ரூபாய் ஒதுக்க சம்மதம் தெரிவித்துள்ளது. கொல்கத்தா போலீஸ் கமிஷனர் வினீத் கோயலை நீக்கவும் சம்மதம் தெரிவித்துள்ளது.

    • கொல்கத்தா விமான நிலையத்தில் ஒரு சாதாரண தேநீர் ரூ.340க்கு விற்கப்படுகிறது.
    • சென்னை விமான நிலையத்தில் தேநீர் 80 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

    கொல்கத்தா விமான நிலையத்தில் விற்கப்படும் தேநீரின் விலை குறித்து மூத்த காங்கிரஸ் தலைவர் ப. சிதம்பரம் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த பதிவு பேசுபொருளானது.

    அவரது பதிவில், "கொல்கத்தா விமான நிலையத்தில் உள்ள The Coffee Bean and Tea Leaf உணவகத்தில் பால் சேர்க்கப்படாத ஒரு சாதாரண தேநீர் ரூ.340க்கு விற்கப்படுகிறது.

    சில வருடங்களுக்கு பிறகு சென்னை விமான நிலையத்தில் ஒரு சாதாரண தேநீர் 80 ரூபாய்க்கு விற்கப்பட்டதை குறித்து நான் பதிவிட்டுள்ளேன். தமிழ்நாட்டை விட மேற்குவங்கத்தில் பணவீக்கம் அதிகமாக உள்ளது" என்று பதிவிட்டுள்ளார்.

    ப. சிதம்பரத்தின் பதிவிற்கு பதிலளித்த கொல்கத்தா விமான நிலையம், "நீங்கள் குறிப்பிட்டுள்ள விலை வித்தியாசத்தை குறித்து விசாரித்து விரைவில் உங்களுக்கு தெரிவிக்கிறோம். இதை எங்கள் கவனத்திற்குக் கொண்டு வந்ததற்கு நன்றி" என்று தெரிவித்துள்ளது.

    • குப்பை அள்ளும் தொழிலாளி படுகாயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
    • பிளாஸ்டிக் பையில் இருந்தே வெடித்ததாக சம்பவத்தின்போது அங்கிருந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

    மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவின் மத்திய பகுதியில் ப்லோக்மான் தெருவில் [Blochmann Street] உள்ள எஸ்.என்பானர்ஜி சாலையில் சிறிய அளவிலான திடீர் குண்டுவெடிப்பு ஏற்பட்டுள்ளது. சாலையோரம் பிளாஸ்டிக் பையில் இருந்த மர்ம பொருள் வெடித்ததில் அங்கு வசித்து வந்த குப்பை அள்ளும் தொழிலாளி படுகாயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

    குண்டுவெடிப்பு ஏற்பட்ட இடத்தை போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ள நிலையில் வெடிகுண்டு நிபுணர்கள் அப்பகுதியில் சோதனை நடத்தி வருகின்றனர். பிளாஸ்டிக் பையில் இருந்தே குண்டுவெடிப்பு ஏற்பட்டதாக சம்பவத்தின்போது அங்கிருந்தவர்கள் தெரிவித்துள்ளனர். பெண் டாகடர் கொலையை கண்டித்து ஜூனியர் மருத்துவர்கள் கொல்கத்தாவில் போராட்டம் நடத்தி வரும் வேளையில் இந்த குண்டுவெடிப்பு அரங்கேறியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • மருத்துவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
    • பேச்சுவார்த்தை நேரலையில் ஒளிபரப்பு செய்யப்படும் வரை பேச்சுவார்த்தைக்கு ஒப்புக் கொள்ள மாட்டோம்.

    கொல்கத்தாவில் உள்ள ஆர்ஜி கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி, மிக கொடூரமாக உயிரிழந்த சம்பவம் நாட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

    இந்த விவகாரத்தில் பெண் மருத்துவர்களுக்கு பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், உயிரிழந்த பெண் மருத்துவருக்கு நீதி வேண்டியும் மருத்துவமனையில் மருத்துவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

    போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்புமாறு உச்சநீதிமன்றம் கெடு விதித்து இருந்த நிலையில், அதையும் ஏற்க மறுத்து மருத்துவர்கள் போராட்டத்தில் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில், மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி மருத்துவர்களிடம் நேரில் பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு விடுத்தி இருந்தார்.

    இந்த பேச்சுவார்த்கையில் கலந்து கொள்ள சம்மதித்த மருத்துவர்கள், முதல்வர் உடனான பேச்சுவார்த்தையை நேரலையில் ஒளிபரப்பு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். எனினும், இதற்கு அம்மாநில அரசு திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துவிட்டது.

    இதைத் தொடர்ந்து ஆளும் அரசு இந்த விவகாரத்தில் மிகவும் விடாப்பிடியாக உள்ளது என குற்றம் சாட்டியுள்ளனர். இதோடு முதல்வர் மம்தா பானர்ஜியின் ராஜினாமாவை தாங்கள் ஒருபோதும் கோரவில்லை என்றும் தெரிவித்தனர்.

    பேச்சுவார்த்தை நேரலையில் ஒளிபரப்பு செய்யப்படும் வரை பேச்சுவார்த்தைக்கு ஒப்புக் கொள்ள மாட்டோம் என்று மருத்துவர்கள் உறுதியாக தெரிவித்துவிட்டனர். இன்றைய பேச்சுவார்த்தையில் முதல்வர் மம்தா பானர்ஜி கலந்து கொள்ள இருந்த நிலையில், அவர் மருத்துவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த கிட்டத்தட்ட இரண்டு மணி நேரமாக காத்துக் கொண்டிருந்தார். எனினும், மருத்துவர்கள் மற்றும் முதல்வர் இடையிலான சந்திப்பு நடைபெறவே இல்லை.

    "நாங்கள் முதல்வரை ராஜினாமா செய்ய கோரிக்கை வைக்கவில்லை, அதற்கான அழுத்தம் கொடுக்கவும் நாங்கள் இங்கு வரவில்லை. ஆர்ஜி கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொலை செய்யப்பட்ட மருத்துவருக்கு நீதி வேண்டி, எங்களது கோரிக்கைகளுடன் இங்கு வந்திருக்கிறோம்."

    "எங்களுக்கு இந்த பிரச்சனைக்கு தீர்வு கிடைக்க வேண்டும். பேச்சுவார்த்தையே நடக்கவில்லை என்பது எங்களுக்கு ஏமாற்றத்தை அளிக்கிறது. நிர்வாகத்திடம் இருந்து எங்களுக்கு தில் கிடைக்கும் என்று இப்போதும் காத்துக் கொண்டே இருக்கிறோம்," என்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர் ஒருவர் தெரிவித்தார்.

    • முதல்வர் மம்தா பானர்ஜியை சந்திக்க 30 பேருடன் செல்வதாக அறிவித்தனர்.
    • போராடும் இளநிலை டாக்டர்கள் தங்கள் முடிவில் உறுதியாக உள்ளனர்.

    மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா நகரில் பயிற்சி பெண் டாக்டர் ஒருவர் பலாத்காரம் செய்யப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, டாக்டர்களுக்கு பாதுகாப்பு கோரி, கொல்கத்தா நகரில் டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் பணிக்கு திரும்பவில்லை. டாக்டர்களின் போராட்டம் 34-வது நாளாக தொடரும் நிலையில், அரசு மருத்துவமனைகளில் தொடர்ந்து சுகாதார நலன் சார்ந்த சேவைகள் பாதிக்கப்பட்டு உள்ளன. டாக்டர்களை சமாதானம் செய்து பணிக்கு அனுப்பும் நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.

    மேற்கு வங்காள தலைமைச் செயலாளர், 15 பிரதிநிதிகளை மட்டுமே பேச்சுவார்த்தைக்கு அழைத்திருந்தார். ஆனால், போராடும் இளநிலை டாக்டர்கள் தங்கள் முடிவில் உறுதியாக உள்ளனர். முதல்வர் மம்தா பானர்ஜியை சந்திக்க 30 பேருடன் செல்வதாக அறிவித்தனர்.

    முதல்வர் மம்தா பானர்ஜியை, மேற்கு வங்காள ஜூனியர் டாக்டர்கள் மன்ற நிர்வாகிகள் பேருந்து மூலம் தலைமைச் செயலகத்திற்கு விரைந்தனர். ஆனால், மருத்துவர்களின் நேரலை கோரிக்கையை ஏற்க மம்தா அரசு மறுத்ததால், இருதரப்பு சந்திப்பு நடைபெறாமல் போனது.

    இதைதொடர்ந்து, கொல்கத்தா பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக மம்தா பானர்ஜி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அதில், "மேற்கு வங்க முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய தயார்" என மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.

    மேலும், " பதவி குறித்து கவலைப்படவில்லை, எனக்கு நீதிதான் முக்கியம். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்போவதில்லை" என குறிப்பிட்டுள்ளார்.

    • 2 இடங்களில் இன்று அமலாக்க துறை அதிகாரிகள் சோதனை.
    • முதல்வர் சந்தீப் கோஷ் மீது நிதி முறைகேடு வழக்கு உள்ளது.

    கொல்கத்தா:

    மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தா ஆர்.ஜி.கர் மருத்துவமனை மருத்துவ கல்லூரியில் கடந்த மாதம் இளம் பயிற்சி டாக்டர் பாலியல் வன்கொடுமையால் கொல்லப்பட்டார்.

    இந்த கல்லூரி முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ் மீது நிதி முறைகேடு வழக்கு உள்ளது. இது தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டார். மேலும் அவருக்கு சொந்தமான வீடு மற்றும் இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.

    இதன் தொடர்ச்சியாக ஆர்.ஜி.கர் மருத்துவமனைக்கு மருந்துகள் வினியோகம் செய்தவர் வீடு உள்ளிட்ட 2 இடங்களில் இன்று அமலாக்க துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். 

    • கொலை செய்யப்பட்ட பெண் டாக்டரின் பெற்றோர் தொடர்ந்து அரசு மற்றும் போலீஸ் மீது குற்றச்சாட்டு.
    • பணம் தர முன்வந்ததாகவும், தாங்கள் அதை மறுத்ததாகவும் பெற்றோர் ஏற்கனவே தெரிவித்திருந்தனர்.

    மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா ஆர்.ஜி. கர் மெடிக்கல் கல்லூரி மற்றும் மருத்துவமனை பயிற்சி பெண் டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே சோகத்தில் உலுக்கியது. தற்போது பெண் டாக்டர் கொலைக்கு நீதி வேண்டும் என வலியுறுத்தி ஜூனியர் டாக்டர்கள் தொடர்ந்து வேலை நிறுத்தம் செய்து வருகின்றனர்.

    போராட்டத்தில் கொலை செய்யப்பட்ட பெண் டாக்டரின் பெற்றோர்களும் கலந்து கொண்டு வருகின்றனர். மேற்கு வங்க போலீசார் தொடக்கத்தில் இருந்தே தங்கள் மகள் கொலையை மூடி மறைக்க முயற்சி மேற்கொண்டு வருவதாக குற்றம்சாட்டினார். அத்துடன் போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் பணம் தர முயன்றதாகவும் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தனர்.

    இதற்கிடையே மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, இழப்பீடு தொடர்பாக பணம் தருவதாக பெண் டாக்டரின் பெற்றோரிடம் கூறவில்லை எனத் தெரிவித்திருந்தார்.

    இது தொடர்பாக மம்தா பானர்ஜி கூறுகையில் "பெண் டாக்டர் குடும்பத்தினருக்கு பணம் (இழப்பீடு) கொடுக்க நான் ஒருபோதும் முன்வரவில்லை. அவதூறைத் தவிர இது வேறு ஏதுமில்லை. பெற்றோர்கள் பெண் டாக்டர் நினைவாக

    ஏதாவது செய்ய விரும்பினால், அரசு அதற்கு ஆதரவாக இருக்கும் என்பதை மட்டும்தான் தெரிவித்தேன்.

    இந்த சம்பவம் தொடர்பாக கொல்கத்தா போலீஸ் கமிஷனர் வினீத் கோயல் ராஜினாமா செய்ய வேண்டும் முன்வந்தார். ஆனால், துர்கா பூஜையின்போது சட்டம் ஒழுங்கை பற்றி நன்கு அறிந்தவர் எங்களுக்கு தேவை" எனக் கூறியிருந்தார்.

    இந்த நிலையில்தான் மம்தா பானர்ஜி பொய் சொல்வதாக பெண் டாக்டரின் பெற்றோர்கள் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர்கள் கூறுகையில் "முதல்வர் மம்தா பானர்ஜி பொய் சொல்லிக் கொண்டிருக்கிறார். எங்களுடைய மகள் திரும்ப வரப்போவதில்லை. அவள் பெயரில் நான் பொய் சொல்லலாமா?.

    நாங்கள் பணம் பெற்றுக் கொள்ள வேண்டும் என முதலமைச்சர் மம்தா பானர்ஜி எங்களிடம் கூறினார். மேலும், உங்கள் மகள் நினைவாக ஏதாவது உருவாக்குகிறோம் எனவும் தெரிவித்தார். நீதி கிடைத்த பிறகு உங்களுடைய அலுவலகம் வந்து பணத்தை பெற்றுக் கொள்கிறோம் எனத் தெரிவித்தோம்" என்றனர்.

    பெண் டாக்டர் கொலை வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.

    • சி.பி.ஐ. தனது விசாரணை நிலை குறித்த அறிக்கையை தாக்கல் செய்தது.
    • மேற்கு வங்காள அரசின் சுகாதார துறை சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

    கொல்கத்தா:

    கொல்கத்தாவில் ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் பெண் பயிற்சி டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டது தொடா்பாக சுப்ரீம் கோர்ட்டு தானாக முன்வந்து விசாரித்து வருகிறது.

    இந்த விசாரணையின்போது மேற்கு வங்காள அரசை சுப்ரீம் கோர்ட்டு கடுமையாக சாடியது. முதல் தகவல் அறிக்கையை தாமதமாக பதிவு செய்தது, வன் முறை தொடர்பாக கடும் கண்டனம் தெரிவித்தது. டாக்டர்கள் பாதுகாப்பு தொடர்பாக 10 பேர் கொண்ட குழுவையும் நியமித்தது.

    கடந்த விசாரணையின்போது பெண் பயிற்சி டாக்டரின் இயற்கைக்கு மாறான மரணத்தை பதிவு செய்வதில் தாமதம் ஏற்பட்டது குறித்து மேற்கு வங்காள போலீசை சாடியது.

    இந்த நிலையில் பெண் டாக்டர் கற்பழித்து கொல்லப்பட்ட வழக்கு விசாரணை சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், நீதிபதி ஜே.பி. பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று மீண்டும் தொடங்கியது.

    சி.பி.ஐ. தனது விசாரணை நிலை குறித்த அறிக்கையை தாக்கல் செய்தது. இதுவரை என்ன விசாரணை நடைபெற்றுள்ளது. விசாரணை விவரங்கள் உள்ளிட்ட விவரங்களை தனது அறிக்கையில் சி.பி.ஐ. குறிப்பிட்டுள்ளது.

    இதேபோல மேற்கு வங்காள அரசின் சுகாதார துறை சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில் 'டாக்டர்கள் போராட்டத்தில் 23 நோயாளிகள் மரணம் அடைந்துள்ளனர்' என்று தெரிவிக்கப்பட்டது.

    இந்த 2 அறிக்கையை வைத்து சுப்ரீம் கோர்ட்டு விசாரணையை தொடங்கியது. பெண் பயிற்சி டாக்டரின் இயற்கைக்கு மாறான மரணம் குறித்து எப்போது பதிவு செய்யப்பட்டது என்று தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார். பிற்பகல் 2.55 மணிக்கு பதிவு செய்யப்பட்டது என்று, இறப்பு சான்றிதழ் 1.45 மணிக்கு வழங்கப்பட்டது என்றும் மேற்கு வங்காள அரசு தரப்பில் ஆஜரான வக்கீல் கபில்சிபில் தெரிவித்தார். வீடியோ பதிவுகள் சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டதா? என்றும் தலைமை நீதிபதி கேட்டார்.

    சி.பி.ஐ. தரப்பில் ஆஜரான சொலிசிடர் ஜெனரல் துஷார் மேத்தா கூறும்போது 'பெண் பயிற்சி டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டது தொடர்பான தடயவியல் மாதிரிகள் மேற்கு வங்காளத்தில் ஆய்வு செய்யப்பட்டது. ஆனால் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தடயவியல் மாதிரிகளை அனுப்ப விசாரணை நிறுவனமான சி.பி.ஐ. முடிவு செய்துள்ளது என்றார்.

    இதை தொடர்ந்து வரு கிற 17-ந்தேதி விசாரணையின் புதிய நிலை அறிக்கையை சி.பி.ஐ. தாக்கல் செய்ய வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

    போராட்டத்தில் ஈடுபட்டு வரும் டாக்டர்கள் நாளை மாலை 5 மணிக்குள் பணிக்கு திரும்ப வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. பணிக்கு திரும்பாவிட்டால் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுப்ரீம் கோர்ட்டு எச்சரித்துள்ளது.

    ×