என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
பெண் மருத்துவர்கள் தனியாக செல்ல வேண்டாம்- சர்ச்சை அறிக்கையை திரும்ப பெற்ற அசாம் கல்லூரி
- கொல்கத்தாவில் பெண் பயிற்சி டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.
- இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என கொல்கத்தா ஐகோர்ட் உத்தரவிட்டது.
மேற்குவங்காள மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதுநிலை பெண் பயிற்சி டாக்டர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்தக் குற்றத்தில் தொடர்புடைய சஞ்சய்ராய் என்பவரை கொல்கத்தா போலீசார் கைது செய்துள்ளனர். விசாரணையில், இவர் போலீஸ் என்று சொல்லி மிரட்டி பயிற்சி பெண் டாக்டரை பாலியல் பலாத்காரம் செய்தது தெரிய வந்தது.
கைதான சஞ்சய்ராயுடன் அந்த மருத்துவமனையில் உள்ள மேலும் சிலருக்கும் தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதுபற்றி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதற்கிடையே, உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்கக் கோரி கொல்கத்தா டாக்டர்கள் 5-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் நோயாளிகள் கடும் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள்.
இந்நிலையில், பெண் டாக்டர் கொலை தொடர்பான வழக்கு கொல்கத்தா ஐகோர்ட்டில் நடைபெற்று வருகிறது. அப்போது இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என கொல்கத்தா ஐகோர்ட் உத்தரவிட்டது. மாணவி கொலை வழக்கு தொடர்பான ஆவணங்களை சி.பி.ஐ.யிடம் உடனே ஒப்படைக்க வேண்டும் என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
கொல்கத்தா பெண் டாக்டர் கொலையை தொடர்ந்து, பெண் மருத்துவர்கள், மருத்துவ மாணவிகள் யாரும் வெளியில் தனியாக செல்ல வேண்டாம் என்றும் தெரியாத மற்றும் சந்தேகத்திற்குரிய நபர்களுடன் பழக வேண்டாம் என்று அசாமில் உள்ள ஒரு மருத்துவ கல்லூரி சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டது.
இந்த அறிக்கை சமூக வலைத்தளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அதனை மருத்துவ கல்லூரி நிர்வாகம் திரும்பப்பெற்றுள்ளது.
பெண்களுக்கு அறிவுரை வழங்குவதை விட பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் கல்லூரி நிர்வாகம் கவனம் செலுத்த வேண்டும் என்று இந்த சுற்றறிக்கை தொடர்பாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்