என் மலர்
நீங்கள் தேடியது "Krishna Jayanti"
- ஸ்ரீ கிருஷ்ணனுக்கு மோதிர விரலில் சந்தனம் இட வேண்டும்.
- அர்ப்பணம் செய்யும் போது பூவின் காம்பு கிருஷ்ணனை நோக்கியிருக்க வேண்டும்.
கிருஷ்ண பரமாத்மாவை எப்படி வழிபட வேண்டும் தெரியுமா?
ஸ்ரீகிருஷ்ண பூஜை செய்வதற்கு முன் வழிபடுவர் நடுவிரலால் விஷ்ணுவைப் போல் இரண்டு நேர் கோடுகளை வரையவும் அல்லது அடர்த்தியான ஒரு நேர் கோட்டை போட்டுக் கொள்ளவும். ஸ்ரீ கிருஷ்ணனுக்கு மோதிர விரலில் சந்தனம் இட வேண்டும். கிருஷ்ணகமல பூவால் அர்ப்பணம் செய்ய வேண்டும். மூன்று அல்லது மூன்றின் பெருக்குத் தொகை எண்ணிக்கை உள்ள பூக்களை அர்ப்பணிக்க வேண்டும். அர்ப்பணம் செய்யும் போது பூவின் காம்பு கிருஷ்ணனை நோக்கியிருக்க வேண்டும். பூக்களை நீள்வட்ட வடிவத்தில் அலங்கரிக்க வேண்டும். சந்தனம், தாழம்பூ, மல்லிகை, மணம் கொண்ட ஊதுபத்தியை உபயோகிக்க வேண்டும்.
வாசனை திரவியங்களில் சந்தனம் உபயோகிக்க வேண்டும். ஸ்ரீ கிருஷ்ணனை மூன்று முறை அல்லது மூன்றின் பெருக்கல் தொகை எண்ணிக்கை பிரதட்சணம் செய்ய வேண்டும்.
பூஜை செய்யும் முறை
கிருஷ்ண ஜெயந்தி அன்று, குழந்தை கண்ணனை வரவேற்கும் விதத்தில் மாக்கோலமிட வேண்டும். வாசல் முதல் வீட்டுக்குள் இருக்கும் பூஜையறை வரை பிஞ்சுக் கண்ணனின் பாதத்தை வரைய வேண்டும். இதனால், கண்ணனே நேரில் நம் வீட்டுக்கு எழுந்தருள்வதாக ஐதீகம். ஆயர்பாடியில் கண்ணனை வரவேற்க சித்திரகோலம், மலர் அலங்காரம், பூக்கோலம் போடுவார்கள். அதை நமது இல்லங்களிலும் செய்யலாம்.
அன்று காலை லட்சுமியின் அம்சமான பசுவுக்கு உணவு அளிக்க வேண்டும். கண்ணனுக்கு மிகவும் பிரியமான பால், தயிர், வெண்ணெய், சீடை, முறுக்கு, நாவல்பழம், அவல் படைக்க வேண்டும். துவாதச மந்திரமான 'ஓம் நமோ பகவதே வாசுதேவாய' என்னும் மந்திரத்தை 108 முறை ஜெபித்து, மலர்களை அவரது படத்திற்கு தூவ வேண்டும். தூப தீபம் காட்ட வேண்டும். பாகவதத்தில் கண்ணனின் பிறப்பை விவரிக்கும் தசம ஸ்கந்தம் எனப்படும் பத்தாவது அத்தியாயத்தை ஒருவர் படிக்க, குடும்பத்தில் மற்றவர்கள் கேட்க வேண்டும்.
- குச்சியினால் ஓட்டை செய்து, பால், தயிர் ஆகியவற்றைக் குடித்துவிட்டு ஓடுகிறான்.
- சின்னஞ்சிறிய அந்த பவள வாய்க்குள் அண்ட சராசரங்களும் தெரிந்தன.
* குழந்தையாக இருக்கும் போதே கிருஷ்ணன் தன்னை கொல்லவந்த பூதனை, சகடாசுரன், திருணாவர்த்தன் ஆகியோரை கொன்றான்.
* குழந்தை பருவத்தில் கிருஷ்ணனும் பலராமனும் தவழ்ந்து சென்று பலவித லீலைகளில் ஈடுபட்டனர். மாடுகள் மற்றும் அவற்றின் கன்றுகள் இருக்கும் தொழுவத்துக்கு சென்று அவற்றின் வாலை பிடித்து இழுத்து விளையாடினர்.
*ஆயர்குல சிறுவர்களை அழைத்துக்கொண்டு கோபியர்களின் வீடுகளுக்குச் சென்று யாரும் அறியா வண்ணம் பால், தயிர், வெண்ணெயை எடுத்து உண்டு மகிழ்ந்தார்கள்.
* கோகுலத்து பெண்கள் ஸ்ரீகிருஷ்ணரை பிடிக்க முயற்சித்தும் முடியவில்லை. ஒருநாள் கோபியர்கள் யசோதையிடம் வந்து கிருஷ்ணரைப்பற்றிக் குறை கூறினார்கள்.
'அம்மா! உங்கள் மகன் கிருஷ்ணன் எங்கள் வீடுகளில் புகுந்து வெண்ணெய் திருடித் தின்கிறான். உரலின் மீதேறி, உரியில் உள்ள பானைகளைக் குச்சியினால் ஓட்டை செய்து, பால், தயிர் ஆகியவற்றைக் குடித்துவிட்டு ஓடுகிறான்' என்று புகார் செய்தார்கள். ஸ்ரீகிருஷ்ணர் அப்பாவியாய் நடித்து தாயை நம்ப வைத்தார்.
* ஒருமுறை வெண்ணெய் திருடும்பொழுது மதுகரவேணி என்ற பெண், கிருஷ்ணனை கையும் களவுமாகப் பிடித்து விட்டாள். யசோதையிடம் அழைத்துச் சென்றாள். அப்போது கிருஷ்ணன் அப்பெண்ணின் முகத்தில் கரி இருப்பதாகக் கூறினார். தான் துடைத்து விடுவதாகக் கூறினார். அதைக்கேட்ட மதுகரவேணி குனிந்து நின்றாள். உடனே, தன் கையில் இருந்த வெண்ணெயை அவளது கையிலும் வாயிலும் தடவி விட்டு தன் தாயான யசோதையை அழைத்தான்.
அங்கு வந்த யசோதையிடம், 'அம்மா! இந்தப் பெண் தன் கணவனுக்குத் தெரியாமல் வெண்ணெ யைத் தின்று விட்டு என்மீது பழியைப் போடுகிறாள். இவளது வாயில் வெண்ணெய் ஒட்டிக்கொண்டு இருக்கிறது பார்' என்று கூறிக் காட்டினான். இதைக்கேட்ட யசோதை மதுகரவேணியைப் பார்த்து, 'நீ தவறு செய்துவிட்டு என் குழந்தைமீது பழி போடுகிறாயா?' என்று கேட்டாள். இதைக் கேட்ட மதுகர வேணி 'அம்மா உன் மகன் மாயாவி கிருஷ்ணன், என் வாயில் வெண்ணெ யைத் தடவி விட்டு ஏமாற்றுகிறான்' என்றாள். யசோதை, ஸ்ரீகிருஷ்ணன் சொன்னதையே நம்பினாள்.
* ஒருமுறை கிருஷ்ணன் மண்ணைத் தின்று விட்டதாக, அவனுடைய தோழர்கள் யசோதையிடம் தெரிவித்தனர். யசோதை, 'கிருஷ்ணா! நீ மண்ணைத் தின்றாயா?' என்று அதட்டிக் கேட்டாள். 'இல்லை யம்மா' என்று அப்பாவிக் குழந்தைபோல் கண்ணன் மறுத்துக் கூறினான். ' அப்படியானால், வாயைத் திறந்துகாட்டு' என்றாள் யசோதை. கிருஷ்ணன், தன் பவளவாயைத் திறந்து காட்டினான். குழந்தை கிருஷ்ணன் வாய்க்குள் மண் இருக்கிறதா என்று பார்த்த யசோதைக்கு அதிசயம் காத்திருந்தது.
சின்னஞ்சிறிய அந்த பவள வாய்க்குள் அண்ட சராசரங்களும் தெரிந்தன. அஷ்டதிக்குப் பாலகர்கள், சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள், நவக்கிரகங்கள், தீவுகள், அஷ்ட நாகங்கள், தேவர்கள், மூவர்கள், முனிவர்கள், சித்தர்கள், மாடமாளி கைகள், கூட கோபுரங்கள் உட்பட உலகிலுள்ள அனைத்தும் தெரிந்தன. இந்த அதிசயத்தைக் கண்டு மயங்கி நின்றாள் யசோதை. பின் தனது மாயையால், இந்த நிகழ்ச்சியை யசோதையின் நினைப்பில் இருந்து நீங்கிடுமாறு செய்தான் கிருஷ்ணன். இது போன்று பால பருவத்தில் பல லீலைகளை கிருஷ்ணர் நிகழ்த்திக் காட்டினார்.
- கிராமங்களில் மாலை வேளையில்தான் கிருஷ்ண ஜெயந்தி பூஜை செய்வார்கள்.
- விரதம் இருந்து பூஜைகள் செய்து பக்தி பாமாலைகள் பாடி வழிபட வேண்டும்.
பகவான் கிருஷ்ணர் குழந்தை அவதாரமாக நம் வீட்டிற்கு வந்து அருள்பாலிப்பதே கோகுலாஷ்டமி பண்டி கையின் முக்கிய அம்சமும், நோக்கமும் ஆகும். அதனால்தான் கிருஷ்ண ஜெயந்தி அன்று வீட்டை கழுவி சுத்தம் செய்து அரிசி மாவில் கோலமிட்டு பூக்கள், மாவிலை தோரணங்களால் அழகுபடுத்துவர். வாசலில் தொடங்கி பூஜை அறை வரை குழந்தையின் பிஞ்சு பாத தடங்களை அரிசி மாவால் பதிப்பார்கள். ஆலிலை கிருஷ்ணன் தனது பிஞ்சு பாதங்களை அடிமேல் அடி வைத்து வீட்டிற்குள் தத்தித் தத்தி நடந்து வருவதாக ஐதீகம்.
கிருஷ்ணனின் படத்தை அலங்கரித்து மாலைகளும், மலர்களும் சூடி அவனுக்கு பிடித்தமான வெண்ணெய், இனிப்பு வகைகள், சீடை, முறுக்கு, தேன்குழல், பொங்கல், பால் பாயாசம் போன்ற நைவேத்யங்கள் படைத்து அவரவர் குடும்ப வழக்கப்படி விரதம் இருந்து பூஜைகள் செய்து பக்தி பாமாலைகள் பாடி வழிபட வேண்டும். அந்த நீலவண்ண கண்ணன் நம் இல்லம் வந்து அருள்புரிய சூடிக்கொடுத்த சுடர்க்கொடி ஆண்டாள் தனது திருப்பாவையில் இவ்வாறு பாடியருளியுள்ளார்.
'மாயனை மன்னு வட மதுரை மைந்தனை
தூய பெருநீர் யமுனைத் துறைவனை
ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கை
தாயை குடல் விளக்கஞ் செய்த தாமோதரனை
தூயோமாய் வந்து நாம் தூமலர் தூவித் தொழுது
வாயினாற்பாடி மனத்தினால் சிந்திக்க
போய பிழையும் புகு தருவானின்றனவும் தீயினில் தூசாகும் செப்பேலோ ரெம்பாவாய்.'
கிருஷ்ணனை இவ்வாறு பாடி வழிபட்டால் எல்லா விதமான தடைகளும், பிழைகளும் தீயினில் பட்ட தூசாக அழியும் என்று தனது திருப்பாவை பாசுரத்தில் கூறியுள்ளார்.
பாகவதத்தில் கண்ணனின் பிறப்பை விவரிக்கும் தசம ஸ்கந்தம் எனப்படும் பத்தாவது அத்தியாயத்தை ஒருவர் படிக்க, குடும்பத்தில் மற்றவர்கள் கேட்க வேண்டும். இதனால் பகவான் கிருஷ்ணரின் ஆசீர்வாதம் நமது இல்லத்திற்கும், உள்ளத்திற்கும் கிடைக்கும். கிராமங்களில் மாலை வேளையில்தான் கிருஷ்ண ஜெயந்தி பூஜை செய்வார்கள். வீட்டில் பூஜையும் நைவேத்தியமும் செய்து முடித்தபிறகு அருகே உள்ள கண்ணன் ஆலயத்துக்குச் சென்று இறைவனை வணங்கி மகிழ்வது சிறப்பு.
- ஒரு துளசி இலையைச் சமர்ப்பித்தாலும் பகவான் கிருஷ்ணன் அதை ஏற்றுக் கொள்வார்.
- நாம சங்கீர்த்தனத்துக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது.
ஒருமுறை கிருஷ்ணரிடம் யாருக்கு அன்பு அதிகம் என்பதை, ருக்மணியும் சத்தியபாமாவும் சோதித்துப் பார்க்க விரும்பினர். தங்களுடைய கருத்தை கிருஷ்ணரிடம் தெரிவித்தனர்.
கிருஷ்ணரும் அதற்கு சம்மதித்தார். அங்கே ஒரு துலாபாரம் (தராசு) கொண்டு வரப்பட்டது. கிருஷ்ணர் அதில் அமருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டார். அவரும் மறுவார்த்தை பேசாமல் துலாபாரத்தில் அமர்ந்து, ஏதும் அறியாதவர் போல் நடப்பதை அமைதியாகப் பார்த்துக் கொண்டு இருந்தார்.
முதலில் சத்தியபாமா தன்னிடம் இருந்த நகைகள் மொத்தத்தையும் ஒரு தட்டில் வைத்தாள். ஆனால் கண்ணன் அமர்ந்திருந்த தட்டில் அசைவே இல்லை. தனது முயற்சியில் சற்றும் தளராது சத்தியபாமா மேலும் தனது கழுத்தில், காதில், உடலில் அணிந்திருந்த எல்லா நகைகளையும் எடுத்து தராசில் வைத்தாள். அப்போதும் நகைகள் வைக்கப்பட்ட தட்டு கீழே வரவில்லை. சத்தியபாமா வெட்கத்தால் தலை குனிந்தாள்.
இந்த நிகழ்ச்சியை அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்த ருக்மணி, தராசின் அருகில் வந்து கிருஷ்ணரைப் பிரார்த்தித்து ஒரு துளசி இலையில் கிருஷ்ணரின் நாமத்தை எழுதி, தராசின் நகைகள் இருந்த தட்டில் வைத்தாள். என்ன ஆச்சரியம். அது கிருஷ்ணனுடைய எடைக்கு சமமாக நின்றது. இறைவனுக்கும், அவனது திருநாமத்துக்கும் எவ்வித வேறுபாடும் கிடையாது. பக்தியுடன் அவன் நாமத்தைச் சொல்லி ஒரு துளசி இலையைச் சமர்ப்பித்தாலும் பகவான் கிருஷ்ணன் அதை ஏற்றுக் கொள்வார். கலியுகத்தில், அதனால்தான் நாம சங்கீர்த்தனத்துக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது.
- கண்ணன் வந்து போனால் அவர்கள் வீட்டு பசுக்கள் நிறைய பால் சொறியும்.
- 16,108 ராணிகளுடன் துவாரகையில் கண்ணன் அரசாட்சி செய்தான்.
கிருஷ்ணர் ஆயர்பாடி பெண்கள் வைத்துள்ள வெண்ணையை திருடும்போது வெண்ணை கீழே சிந்தி அதில் அவன் பாதங்கள் பதிந்து வீடு முழுவதும் கண்ணன் வந்து போனதற்கான கால் தடங்கள் இருக்கும். இதை வைத்தே கண்ணன் வெண்ணெய் திருடியிருக்கிறான் என்பதை அறிந்து கொள்வார்களாம். இருப்பினும், கோபப்பட மாட்டார்கள். கண்ணன் வந்து போனால் அவர்கள் வீட்டு பசுக்கள் நிறைய பால் சொறியும். செல்வம் பொங்கும் என்பது அவர்களது நம்பிக்கை.
இந்த தாத்பரியத்திற்காகவே நம் முன்னோர்கள் கிருஷ்ண ஜெயந்தி தினத்தன்று தங்கள் வீடுகளில் வெண்ணெயினால் கண்ணன் பாதங்கள் போடுவதை வழக்கமாக கொண்டனர்.
கிருஷ்ணஜெயந்தியன்று குழந்தை பாத சுவட்டை மாக்கோலமாக வரைவது நாடெங்கும் எல்லா இடங்களிலும் மரபுவழி பழக்கமாக உள்ளது. இப்படி பாதம் வரைவதில் சைவ- வைணவ ஒற்றுமை இருப்பதாக சொல்கிறார்கள். குழந்தைகளின் பாத வடிவ சுவடு பார்ப்பதற்கு எட்டு (8) போன்ற வடிவுடன் இருக்கும். அதற்கு மேல் 5 விரல் பதிவுகள் இருக்கும். அதாவது ஓம் "நமோ நாராயணா" என்ற எட்டு எழுத்து மந்திரமும் "நமசிவாய" என்ற ஐந்தெழுத்து மந்திரமும் ஒருங்கிணைந்து இருப்பதை திருப்பாதம் பிரதிபலிக்கிறது.
16,108 ராணிகளுடன் துவாரகையில் கண்ணன் அரசாட்சி செய்தான். அப்போது நாரத முனிவர், அரசிகள் ஒவ்வொருவரின் வீட்டுக்கும் சென்றபோது எல்லோர் இல்லத்திலும் கண்ணன் இருப்பதைக் கண்டு அதிசயித்தார். அதேபோல் பிருந்தாவனத்தில் நடந்த "ராச லீலை'யிலும் ஒவ்வொரு கோபிகைக்கும் ஒவ்வொரு கண்ணன் கூட இருந்து ஆடிப்பாடினார். இந்த காட்சியை சிவபெருமானே தரிசித்து ஆனந்தப்பட்டிருக்கிறார்.
"இப்படி ஒரே நேரத்தில் பல்லாயிரம் இடங்களில் இருக்க வல்ல மகிமை வாய்ந்த தெய்வக்குழந்தை கண்ணன்' என்பதைக் குறிப்பிடவே ஒவ்வொருவர் வீட்டிலும் கிருஷ்ண ஜெயந்தியன்று "திருவடிக் கோலம்' இடப்படுகிறது. அன்று எல்லோர் இல்லத்திலும் ஒரே நேரத்தில் "கிருஷ்ணரின் அருளாட்சி' இருக்கும். அதாவது கண்ணனின் அருட்சக்தி அங்கே கொலு வீற்றிருக்கும்.
- மேலூர் கட்டச்சோலை பட்டியில் கிருஷ்ண ஜெயந்தி விழாவில் பக்தர்கள் பால்குடம் எடுத்து வழிபாடு செய்தனர்.
- கோவில் அருகே உள்ள விநாயகர்கோவில் மண்டபத்தில் சிறப்பு அன்ன தானம் நடைபெற்றது.
மேலூர்
மேலூர் தாலுகா வெள்ள லூர் சேகரம், கட்டச்சோலை பட்டியல் அமைந்திருக்கும் ஸ்ரீ கோபாலகிருஷ்ணன் சமேத பாமா ருக்மணி கோவிலின் 16-ம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா நடைபெற்றது. பக்தர்கள் மாலை அணிந்து 15 நாட்கள் விரதம் இருந்து வந்தனர்.
கோபாலகிருஷ்ண கோவில் இருந்து 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால் குடம் எடுத்து ஊர்வலமாக சென்று பின்பு கோவில் வந்தடைந்தனர். பின்னர் கிருஷ்ணனுக்கு பாலா பிஷேக நடைபெற்றது. உரியடித்தல் தீப ஆராதனை நடைபெற்றது. பொதுமக்கள் சாமி தரிசனம் செய்து வழி பட்டனர். கோவில் அருகே உள்ள விநாயகர்கோவில் மண்டபத்தில் சிறப்பு அன்ன தானம் நடைபெற்றது.
இந்த அன்னதானத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்ட னர். கோபாலகிருஷ்ணன் சுவாமி ஊர்வலம் இடைய வலசை, இடையர்கோவில் பட்டி, இந்திராநகர், வெள்ள லூர் நகரத்தார் வீதி, வெள்ள லூர் மந்தை கருப் பன சுவாமி கோவில், ஏழை காத்த அம்மன் கோவில், அரசு மருத்துவமனை, மன்ற மலை ஒத்தப்பட்டி வழியாக சுவாமி கோவில் வந்தடைந் தது. சிறுவர்களுக்கு விளை யாட்டு போட்டு நடை பெற்றது.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடு களை கட்டச் சோலைப்பட்டி கிராமத்தார்கள் மற்றும் இளைஞர்கள் செய்திருந்த னர்.
- கிருஷ்ண ஜெயந்தி விழாவில் பக்தர்கள் பால்குடம் எடுத்து வழிபாடு நடத்தினர்.
- கட்டச் சோலைப்பட்டி கிராமத்தார்கள் மற்றும் இளைஞர்கள் செய்திருந்தனர்.
மேலூர்
மேலூர் தாலுகா வெள்ளலூர் சேகரம், கட்டச்சோலை பட்டியல் அமைந்திருக்கும் ஸ்ரீ கோபாலகிருஷ்ணன் சமேத பாமா ருக்மணி கோவிலின் 16-ம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா நடைபெற்றது. பக்தர்கள் மாலை அணிந்து 15 நாட்கள் விரதம் இருந்து வந்தனர்.
கோபாலகிருஷ்ண கோவில் இருந்து 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால் குடம் எடுத்து ஊர்வலமாக சென்று பின்பு கோவில் வந்தடைந்தனர். பின்னர் கிருஷ்ணனுக்கு பாலா பிஷேக நடைபெற்றது. உரியடித்தல் தீப ஆராதனை நடைபெற்றது. பொதுமக்கள் சாமி தரிசனம் செய்து வழிபட்டனர். கோவில் அருகே உள்ள விநாயகர்கோவில் மண்டபத்தில் சிறப்பு அன்ன தானம் நடைபெற்றது.
இந்த அன்னதானத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்ட னர். கோபாலகிருஷ்ணன் சுவாமி ஊர்வலம் இடைய வலசை, இடையர்கோவில் பட்டி, இந்திராநகர், வெள்ள லூர் நகரத்தார் வீதி, வெள்ள லூர் மந்தை கருப்பன சுவாமி கோவில், ஏழை காத்த அம்மன் கோவில், அரசு மருத்துவமனை, மன்ற மலை ஒத்தப்பட்டி வழியாக சுவாமி கோவில் வந்தடைந் தது. சிறுவர்களுக்கு விளை யாட்டு போட்டு நடைபெற்றது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கட்டச் சோலைப்பட்டி கிராமத்தார்கள் மற்றும் இளைஞர்கள் செய்திருந்தனர்.
- பணகுடி புள்ளிமான் மெட்ரிக் மேல் நிலைப் பள்ளியில் ஆசிரியர் தினம் மற்றும் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.
- மாணவ-மாணவிகள் ராதா மற்றும் கிருஷ்ணா வேடமிட்டு நடனமாடினர்.
வள்ளியூர்:
பணகுடி புள்ளிமான் மெட்ரிக் மேல் நிலைப் பள்ளியில் ஆசிரியர் தினம் மற்றும் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் பள்ளி தாளாளர் டாக்டர் தேவிகா பேபி தலைமை தாங்கினார். பள்ளி நிர்வாகி டாக்டர் பொன் லட்சுமி முன்னிலை வகித்தார். இதில் மாணவ-மாணவிகள் ராதா மற்றும் கிருஷ்ணா வேடமிட்டு நடனமாடினர். மாணவ-மாணவிகள் வண்ண மலர் கொத்துக்களை ஆசிரியர் களுக்கு வழங்கி ஆசிரியர் தின வாழ்த்துகளை தெரிவித்தனர். பின்னர் மாணவ- மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.
- பிரசாதங்கள் வழங்கப்பட்டது
- எராளமனோர் கலந்து கொண்டனர்
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் லட்சுமி நாராயணன் பெருமாள் கோவிலில் நேற்று ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.
இதைமுன்னிட்டு சாமிக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்து தீபாராதனை நடைபெற்றது.
பின்னர் உற்சவர் ஸ்ரீகிருஷ்ணர் கருடவாகனத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது.
இதேபோல் கொளத்தூர் ஏகாம்பரேஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ள ஸ்ரீவெங்கடேசபெருமாளுக்கு ஸ்ரீகிருஷ்ணர் ஜெயந்தி விழா பூஜை நடைபெற்றது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கிராம கோவில் விழாக்குழு தலைவர் சரவணன் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
- கோலாட்டம், மயிலாட்டம், பொய்கால் குதிரை, சிலம்பாட்டம் போன்றவை நடைபெற்றது
- 10-க்கும் மேற்ப்பட்ட கிராமத்தினர் தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர்.
அணைக்கட்டு:
வேலூர் மாவட்டம், அணைக்கட்டு அடுத்த எடைத்தெரு கிராமத்தில் 72-ம் ஆம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா கோலா கலமாக கொண்டாட ப்பட்டது.
இதனை முன்னிட்டு நேற்று காலை கிருஷ்ணருக்கு பால், பன்னீர், சந்தனம், விபூதி உள்ளிட்ட 16 வகையான திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.
மேலும் கிருஷ்ணருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து பாரம்பரிய விளையாட்டு களான கோலாட்டம், மயிலாட்டம், பொய்கால் குதிரை, சிலம்பாட்டம் போன்றவை நடைபெற்றது.
இதில் சிறப்பு அழை ப்பாளராக அணைக்கட்டு ஏம்.எல்.ஏ நந்தகுமார் கலந்துக்கொண்டு சிலம்பம் ஆடியும், கோவிலில் அருகே கட்டப்பட்டிருந்த உறி அடித்தும் விளையாடினார்.
பின்னர் வழுக்குமரம் ஏறுதல், கயிறு இழுத்தல் போன்ற விளையாட்டுகளை தொடங்கி வைத்து சாமி தரிசனம் செய்தார்.
விழாவில் மத்திய ஒன்றிய செயலாளர் வெங்கடேசன், வேணுகோபால், தனஞ்செயன், திருப்பதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதனை ெதாடர்ந்து போடிப்பேட்டை எல்லப்பன்பட்டி, அகரம் , அகரராஜாபாளையம், மகமதுபுரம், கரடிகுடி உள்ளிட்ட 10-க்கும் மேற்ப்பட்ட கிராமத்தினர் கலந்துக்கொண்டு கிருஷ்ண ஜெயந்தி தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர்.
- சோழவந்தான் அருகே கிருஷ்ணர் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.
- உறியடி போட்டி மற்றும் இளவட்ட கல் தூக்கும் போட்டி நடந்தது.
சோழவந்தான்
சோழவந்தான் அருகே நாச்சிகுளம் ஊராட்சிக்குட்பட்ட மேல்நாச்சிகுளம் கிராமத்தில் கிருஷ்ணன் கோவிலில் வருடம் தோறும் கிருஷ்ணன் ஜெயந்தி விழா நடந்து வருகிறது. இதே போல் இந்த ஆண்டு 3 நாட்கள் விழா நடைபெற்றது. இவ்விழாவை முன்னிட்டு பல்வேறு போட்டிகள் நடந்து பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் முக்கிய விழாவான உறியடி போட்டி மற்றும் இளவட்ட கல் தூக்கும் போட்டி நடந்தது.
இந்தப் போட்டியில் டிரைவர் கண்ணன் (வயது41) இளவட்டக் கல்லை தூக்கி போட்டியில் வெற்றி பெற்றார். இங்கு கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு சுமார் 4 அடியில் கிருஷ்ணர் சிலை நிறுவப்பட்டு கிருஷ்ணர் ஜெயந்தி விழா நிறைவு பெற்றவுடன் இந்த சிலை குலுக்கல் முறையில் கிராமத்தில் உள்ள பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதே போல் இந்த ஆண்டு நேற்று இரவு கிருஷ்ணர் ஜெயந்திக்கு வைக்கப்பட்டிருந்த கிருஷ்ணர் சிலை பூஜைகள் நிறைவு பெற்று குலுக்கல் முறையில் மேல்நாச்சிகுளம் கிராமத்தைச் சேர்ந்தவருக்கு வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை மேல் நாச்சிகுளம் கிராமமக்கள் செய்திருந்தனர். சோழவந்தான் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடு செய்தனர்.
- முதுகுளத்தூர், மானாமதுரையில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.
- பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டன.
முதுகுளத்தூர்
முதுகுளத்தூர் நாயக்கர் தெருவில் அமைந்துள்ள கண்ணன்கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழாவையொட்டி சிறப்பு பூஜைகள் சுப்பையா தலைமையில் சிறப்பாக நடைபெற்றன. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டன. கண்ணன். ராதை வேடமிட்ட சிறுவர் சிறுமிகளின் கலைநிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் செல்லையா, மணி, செந்தில் கண்ணன், சிவமுருகேசன் மற்றும் சிறப்பு அழைப்பாளர்களாக கவுன்சிலர் சத்தியநாதன், கா.வினோத்குமார், முத்துமணி உள்பட திரளானோர் கலந்துகொண்டனர்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சுந்தரபுரம் சுந்தர விநாயகர் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா நடைபெற்றது. விழாவில் குழந்தை கிருஷ்ணருக்கு சிறப்பு பூஜை கள் நடைபெற்றது. கோவில் முன்பு நூற்றுக்கணக்கான குழந்தைகள் ராதை கிருஷ்ணன் வேடமிட்டு கோலாட்டம் ஆடினார்கள். ஸ்வாமி வேடத்தில் வந்த குழந்தைகள் அனைவருக்கும் கோவில் நிர்வாகம் சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டது. இதேபோல் சாஸ்தாநகர், அழகர் கோவில் தெரு, ெரயில்வே காலணி மற்றும் கொன்னக்குளம், வேதியேரேந்தல், செய்களத்தூர் பகுதியில் கிருஷ்ண ஜெயந்தி விழா நடைபெற்றது.