என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kushboo"

    • சுந்தர்.சி எப்படிப்பட்டவர் என்பது அனைவருக்கும் தெரியும்.
    • நயன்தாரா கடந்த காலத்தில் நடித்த ஒரு கதாபாத்திரத்தில் மீண்டும் நடித்து வருகிறார்.

    நயன்தாரா 'மூக்குத்தி அம்மன் 2-'ம் பாகத்தில் நடித்து வருகிறார். சுந்தர்.சி இயக்குகிறார். சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பில் உதவி இயக்குனர் ஒருவர் நயன்தாராவிடம் அவர் நடிக்க வேண்டிய காட்சிகளை விளக்கி சொன்னதாகவும் அப்போது நயன்தாரா இடைமறித்து உதவி இயக்குனரிடம் சில கேள்விகளை கேட்டதால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் தகவல் பரவியது.

    இந்த மோதலை தொடர்ந்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதாகவும், நயன்தாராவுக்கு பதில் தமன்னாவை நடிக்க வைக்க யோசனை நடப்பதாகவும் பேசப்பட்டது. இதற்கு படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான குஷ்பு விளக்கம் அளித்துள்ளார்.

    இதுகுறித்து சமூக வலைத்தளத்தில் குஷ்பு வெளியிட்ட அறிக்கையில், "சுந்தர்.சியின் நலம் விரும்பிகளுக்கு தெரிவிப்பது, மூக்குத்தி அம்மன் 2 படம் குறித்து தேவையற்ற வதந்திகள் பரவி வருகின்றன. அது உண்மையல்ல.

    படப்பிடிப்பு திட்டமிட்டபடி சுமூகமாக நடந்து வருகிறது. சுந்தர்.சி எப்படிப்பட்டவர் என்பது அனைவருக்கும் தெரியும். நயன்தாரா திறமையான நடிகை. அதை அவரே நிரூபித்து இருக்கிறார்.

    நயன்தாரா கடந்த காலத்தில் நடித்த ஒரு கதாபாத்திரத்தில் மீண்டும் நடித்து வருகிறார். தற்போது பரவும் வதந்திகள் திருஷ்டி எடுத்த மாதிரி. நடப்பதெல்லாம் நல்லதுக்கே. உங்களின் ஆசிர்வாதம், அன்பை நம்புகிறோம். அடுத்த வெற்றிப்படத்துக்கு காத்திருங்கள்'' என்று கூறியுள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • உங்கள் குடும்பத்தில் உள்ள பெண்களை இப்படி விமர்சித்து விட்டு தனியாக அழைத்து கண்டித்தால் ஏற்பீர்களா?
    • என்னிடம் யாரும் மன்னிப்பு கேட்கவில்லை. எனக்கு மன்னிப்பும் தேவையில்லை. நடவடிக்கை தான் தேவை.

    புதுடெல்லி:

    தி.மு.க. நிர்வாகியான சைதை சாதிக் பா.ஜனதா தேசிய செயற்குழு உறுப்பினர் நடிகை குஷ்பு பற்றி பொதுக்கூட்ட மேடையில் ஆபாசமாக பேசினார். அவரது பேச்சுக்கு பா.ஜனதா கடும் கண்டனம் தெரிவித்தது.

    அவரை கண்டித்து பா.ஜனதா மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இந்த போராட்டத்தில் அண்ணாமலை கைதாகி விடுதலையானார்.

    சைதை சாதிக் மீது நடவடிக்கை எடுக்கும் வரை ஓயப்போவதில்லை என்று அறிவித்த குஷ்பு இன்று டெல்லியில் தேசிய மகளிர் ஆணையத்துக்கு சென்று ஆணைய தலைவி ரேகா ஷர்மிளாவிடம் நேரில் புகார் மனு அளித்தார்.

    அந்த மனுவில் சைதை சாதிக்கின் பேச்சுக்கான வீடியோ ஆதாரத்தையும் இணைத்து கொடுத்துள்ளார்.

    குஷ்பு தனது புகாரில் அமைச்சர் மனோ தங்கராஜ் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

    அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமையில் நடந்த கூட்டத்தில் தான் சைதை சாதிக் சர்ச்சைக்குரிய வகையில் பேசியது குறிப்பிடத்தக்கது.

    புகார் அளித்த பிறகு குஷ்பு டெல்லியில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    எனக்கே இந்த கதி என்றால் மற்ற பெண்களுக்கு தமிழகத்தில் என்ன கதி ஏற்படும்?

    அமைச்சர் பொறுப்பில் இருக்கும் மனோ தங்கராஜ் தூங்கி விழித்து 4 நாள் கழித்து நான் விளம்பரம் தேடுவதாக கூறி இருக்கிறார். அதை கேட்டதும் சிரிப்பு தான் வந்தது.

    எனக்கு இனி விளம்பரம் தேவையில்லை. நானும், அவரும் பொது வெளியில் நின்றால் அவரை எத்தனை பேருக்கு அடையாளம் தெரியும்? அவருக்குத்தான் இப்போது விளம்பரம் தேவை.

    அவரது தலைமையில் நடந்த கூட்டத்தில் தான் இவ்வளவு அநாகரீகமாக பேசி உள்ளனர். அதை கேட்டு சிரித்துக் கொண்டிருந்த அமைச்சர் தனியாக அழைத்து கண்டித்ததாக கூறுகிறார்.

    உங்கள் குடும்பத்தில் உள்ள பெண்களை இப்படி விமர்சித்து விட்டு தனியாக அழைத்து கண்டித்தால் ஏற்பீர்களா? என்னிடம் யாரும் மன்னிப்பு கேட்கவில்லை. எனக்கு மன்னிப்பும் தேவையில்லை. நடவடிக்கை தான் தேவை.

    அமைச்சர் என்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். சைதை சாதிக்கை கட்சியில் இருந்து நீக்க வேண்டும்.

    இது தொடர்பாக டெல்லியில் தேசிய பெண்கள் ஆணையத்தில் புகார் அளித்திருக்கிறேன். என்னைப் பற்றி பேசியவர் மீதும் அமைச்சர் மனோ தங்கராஜ் மீதும் புகார் அளித்துள்ளேன். என்னை பற்றி பேசிய பேச்சை மனோ தங்கராஜ் அமர்ந்து ரசித்துக் கொண்டிருக்கிறார். அந்த வீடியோ ஆதாரத்தையும் சமர்ப்பித்துள்ளேன் என்றார்.

    • பா.ஜ.க. சார்பில் சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட ‘தாவல் திலகம்’ குஷ்பு ஆர்ப்பாட்டத்திற்கான காரணத்தைப் பற்றி பேசாமல் தனது வாய்த்துடுக்கை காண்பித்துள்ளார்.
    • நடிகர் திலகம், நடிகையர் திலகம் என்றெல்லாம் கேள்விப்பட்டிருக்கிறோம். இது என்ன ‘தாவல் திலகம்’ என்று சிலருக்கு ஐயம் ஏற்படக்கூடும்.

    சென்னை:

    தமிழகத்தில் மின்கட்டண உயர்வு, பால்விலை உயர்வு, சொத்துவரி உயர்வை கண்டித்து சென்னையில் நடைபெற்ற பா.ஜனதா கட்சியின் ஆர்ப்பாட்டத்தில் தேசிய செயற்குழு உறுப்பினர் நடிகை குஷ்பு பங்கேற்று ஆவேசமாக பேசி இருந்தார்.

    மின்கட்டணம், பால் விலையை உயர்த்தியது தான் திராவிட மாடலா? என்று கேள்வி எழுப்பிய குஷ்பு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பற்றியும் விமர்சித்து பேசினார்.

    குஷ்புவின் பேச்சுக்கு தி.மு.க. இப்போது கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுபற்றி தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ நாளிதழான முரசொலியில் எழுதி இருப்பதாவது:-

    பா.ஜ.க. சார்பில் சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட 'தாவல் திலகம்' குஷ்பு ஆர்ப்பாட்டத்திற்கான காரணத்தைப் பற்றி பேசாமல் தனது வாய்த்துடுக்கை காண்பித்துள்ளார். நடிகர் திலகம், நடிகையர் திலகம் என்றெல்லாம் கேள்விப்பட்டிருக்கிறோம். இது என்ன 'தாவல் திலகம்' என்று சிலருக்கு ஐயம் ஏற்படக்கூடும்.

    அந்த அம்மையார் அரசியலில் ஈடுபட்ட குறைந்த காலத்தில் நிறைய கட்சிகளுக்குத் தாவியதால் 'தாவல் திலகம்' என்ற பட்டம் பொருத்தமாக இருக்குமல்லவா. அந்த 'தாவல் திலகம்'தான் தேவையில்லாமல் தனிப்பட்ட முறையில், முதல்-அமைச்சர் குறித்து பேசி வீண் வம்பை விலைக்கு வாங்கியுள்ளார்.

    "முதல்-அமைச்சர் தேர்தல் அறிக்கையைப் படிக்கவில்லை. எழுதிக் கொடுப்பதைத் தான் அவர், படிப்பது வழக்கம்" எனத் தேவையின்றி முதல்வர் குறித்து விமர்சித்துள்ளார்.

    மின்கட்டண உயர்வு 'ஷாக்' அடிக்கிறது. பால் விலை உயர்வால் வயிறு எரிகிறது எனத் துடித்துத் துவண்டுள்ளார். அம்மையார் பா.ஜ.க. வின் தேசிய அளவில் பதவி வகிப்பவர்.

    மத்திய அரசு சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை மாதா மாதம் சகட்டுமேனிக்கு ஏற்றிய போதும், பெட்ரோல், டீசல் விலைகளை உயர்தித்திக்கொண்டே இருந்த போதும், அதன் விளைவாலும், ஜி.எஸ்.டி. போன்ற ஒழுங்குமுறைப்படுத்தாத வரிவிதிப்பாலும், விண்முட்ட விலைவாசி ஏறியபோதெல்லாம் எரியாத வயிறு, ஏழைகளைப்பாதிக்காத வகை யில் பால் விலையை ஏற்றி, பால் முகவர்களுக்கு விலையை உயர்த்தியுள்ளது கண்டு எரிகிறதாம்.

    அதன் பெயர் வயிறு எரிவதல்ல. வயிற்றெரிச்சல். தி.மு.க. அரசு எந்தத் திட்டமிட்டாலும் ஏழை எளியவர்களைப் பாதிக்காத வகையில் போடுவதால் ஏற்பட்ட மன அரிப்பு. மின்கட்டண உயர்வுக்குப் பிறகும் மற்ற மாநிலங்களில் உள்ளதைவிட தமிழகத்தில் மின் கட்டணம் குறைவு என்பதை பலமுறையும் விளக்கியாகி விட்டது.

    மேலும், இப்போதுள்ள ஏற்றம்கூட மத்திய அரசு தரும் அழுத்தத்தின் காரணத்தால், என்பதும் தெளிவாக்கப்பட்டுவிட்டது. அம்மையார் தேசிய அளவில் அந்த கட்சியின் பொறுப்பில் உள்ளவர், அவருக்கும் அண்ணாமலைக்கும் தமிழ்நாட்டின் மின்கட்டண உயர்வு ஷாக் அடிக்கிறது.

    மற்ற மாநில கட்டணங்கள் ஷாக் அடிப்பதில்லை. மைக் கிடைத்து விட்டது என்பதால் எதையும் பேசிவிடலாம் என்று தரம் தாழ்ந்து பேசினால் கொடுத்த வழியிலேயே அதற்குப் பதிலும் வரும் என்பதை குஷ்பு உணர வேண்டும்.

    தி.மு.க. பேச்சாளர் ஒருவர் இந்த அம்மையார் குறித்து பேசுகையில் குறிப்பிட்ட சில வார்த்தைகள், அம்மையார் மனதைப் புண்படுத்தியதாகத் தெரிவிக்கப்பட்டபோது, அந்தப் பேச்சாளர் கண்டிக்கப்பட்டார்.

    அவர் பேசியதற்கு வருத்தம் தெரிவிக்கப் பணிக்கப்பட்டு வருத்தமும் தெரிவித்தார். கழக துணைப்பொதுச்செயலாளர் கனிமொழி கருணாநிதி அந்த பேச்சுக்கு கண்டனமும் தெரிவித்துள்ளார். அந்த பேச்சாளர் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் அவர் பேசியதற்கு, முதல்-அமைச்சர் ஸ்டாலின் மேடையில் இருந்த அமைச்சரும் மன்னிப்பு கோர வேண்டும் என்று அங்கு பேசியுள்ளார். பல நேரங்களில் வாய் நீளம் காட்டுவது பல சங்கடங்களை உருவாக்கி விடும் என்பதை அம்மையார் உணராது பேசுவது 'சும்மா இருந்தசங்கை ஊதிக்கெடுத்த' கதையாக மாறிவிட்டது.

    ஓவராக சில காட்சிகளில் 'ரீ ஆக்ட்' செய்தால் அது விரசமாகிவிடும் என்பது சிறந்த நடிகையான அம்மையாருக்குத் தெரியாமல் போனது ஏனோ? அம்மையார் அரசியலில் 'மைலேஜ்' எடுக்கும் நோக்கில் பேசியது இப்போது 'சேம் சைடு' கோல் போல ஆகிவிட்டது அவரைப்பற்றி அதாவது இன்றைய பா.ஜ.க.வின் தேசிய செயற்குழு உறுப்பினர் பற்றி அன்றைய தேசியச் செயலாளராக இருந்த எச்.ராஜா பேசிய 'அருவருக்கத்தக்க' பேச்சு மீண்டும் வலைதளங்களில் 'வைரலாக' வலம் வரத் தொடங்கி விட்டது.

    தி.மு.கழகப் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்ட சில வார்த்தைகளுக்காக, அவர் வருத்தம் தெரிவித்தும், வழக்கு அவர் மீது போடப்பட்ட பின்னும், அவர் பேசியதற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கேட்கிற குஷ்பு, எச்.ராஜா பேசியதற்கு அவர் மன்னிப்பு கேட்டாரா? அவர் பேசியதற்காக, அமித் ஷாவும், பிரதமர் மோடியும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று குஷ்பு கேட்டாரா. அல்லது இனியாவது கேட்பாரா?

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தமிழகத்தில் பா.ஜனதா வளர்ந்து இருப்பதாக தி.மு.க.வே ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளது.
    • தமிழ் நாட்டில் காங்கிரசுக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்காது. எதிர்பாராத படுதோல்வியே கிடைக்கும்.

    சென்னை:

    ராகுல்காந்தியின் நடைபயணம் பற்றி பா.ஜனதா தேசிய செயற்குழு உறுப்பினர் நடிகை குஷ்பு கூறியதாவது:-

    காங்கிரஸ் கட்சி இந்திய மக்களிடம் இருந்து விடை பெற்றுவிட்டது. இல்லாத ஊருக்கு வழி தேடுவதை போல் இல்லாத கட்சிக்காக ஊர் ஊராக ராகுல் நடைபயணம் செல்கிறார். இந்த நடைபயணம் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. கடைசியில் மிஞ்ச போவது ஏமாற்றமே.

    கன்னியாகுமரியில் தொடங்கி 9 மாநிலங்களை கடந்து விட்டதாக சொல்கிறார். அவர் சென்றதும் மக்களும் அவரை மறந்து விட்டார்கள்.

    அவர் நடைபயணம் சென்று கொண்டிருக்கும்போது தான் குஜராத்தில் தோல்வி, டெல்லியில் படுதோல்வி என்ற தகவலும் அவருக்கு சென்றது. அந்த நடைபயணத்தில் மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டு இருந்தால் வாக்களித்து வெற்றி பெற செய்து இருப்பார்கள்.

    புதிதாக தலைவராக பொறுப்பேற்ற கார்கே அடித்த 'டைமிங்' காமெடி தான். காங்கிரஸ் தலைவர்களின் உண்மையான முகத்தை காட்டியது. உலகமே மீண்டும் கொரோனா வருகிறதே என்ற பீதியில் இருக்கிறது. அதற்காக மத்திய அரசு எடுத்துள்ள கட்டுப்பாட்டு நடவடிக்கை டெல்லியில் ராகுல் நடைபயணத்தை முடக்க செய்யும் சதி வேலை என்கிறார்.

    இப்படித்தான் ஒவ்வொருவரும் ராகுலிடம் நல்ல பெயர் வாங்க அவரை சுற்றி இருந்து ஜால்ரா தட்டுவார்கள். கொரோனா கட்டுப்பாட்டையே அரசியலாக்கும் இவர்களுக்கு மக்கள் மீது எந்த அக்கறையும் கிடையாது. பாராளுமன்றத்துக்குள் செல்லவே முக கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளதே? அதை ஏன் விமர்சிக்கவில்லை.

    மக்கள் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை. நமக்கு அரசியல் செய்ய வேண்டும் என்ற குறுகிய எண்ணம்தான். இதுதான் காங்கிரஸ் வீழ்ச்சிக்கு காரணம்.

    வருகிற பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்திலும மிகப்பெரிய மாற்றம் வரும். தமிழகத்தில் பா.ஜனதா வளர்ந்து இருப்பதாக தி.மு.க.வே ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளது. எனவே தமிழ் நாட்டிலும் இனி காங்கிரசுக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்காது. எதிர்பாராத படுதோல்வியே கிடைக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தி.மு.க. பொதுக்கூட்டத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் போலீசிடம் தி.மு.க. இளைஞர் அணியை சேர்ந்த 2 பேர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டனர்.
    • பெண்களை இழிவுபடுத்தும் ஆண்களை ஆதரிக்கும் கட்சியிடம் இருந்து என்ன எதிர்பார்க்க முடியும்?

    சென்னை:

    சென்னை விருகம்பாக்கத்தில் நடந்த தி.மு.க. பொதுக்கூட்டத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த 22 வயது பெண் போலீசிடம் தி.மு.க. இளைஞர் அணியை சேர்ந்த 2 பேர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டனர்.

    இந்த சம்பவத்துக்கு அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    நடிகை குஷ்புவும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், "பெண்களை இழிவுபடுத்தும் ஆண்களை ஆதரிக்கும் கட்சியிடம் இருந்து என்ன எதிர்பார்க்க முடியும்? இதுபோன்ற நிகழ்வுகளில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்ணை மூடிக்கொண்டிருப்பது துரதிர்ஷ்டமானது" என்று கூறியுள்ளார்.

    • தமிழக அரசு பொங்கல் பரிசாக மக்களுக்கு ரூ.1000 மட்டுமே கொடுப்பது வெட்கக்கேடானது.
    • தமிழ் கலாசாரத்தை பாதுகாப்பதாக கூறி வரும் தி.மு.க அரசு இவ்வளவு கேவலமாக நடந்து கொள்ளக்கூடாது.

    கோவை:

    கோவை மாவட்ட பா.ஜ.க சார்பில் நம்ம ஊர் பொங்கல் திருவிழா இன்று வெள்ளலூரில் நடைபெற்றது.

    இதில் பா.ஜ.க தேசியக்குழு உறுப்பினர் நடிகை குஷ்பு கலந்து கொண்டார். அவர் அங்கு பெண்களுடன் சேர்ந்து பொங்கல் வைத்தார்.

    பொங்கல் திருவிழாவையொட்டி அங்கு நாட்டுபுற கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டது. பெண்கள், ஆண்கள் ஒன்றிணைந்து பாடல் பாடி கும்மி அடித்து மகிழ்ந்தனர். அவர்களுடன் நடிகை குஷ்புவும் இணைந்து கும்மியடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

    தொடர்ந்து அவர் ரேக்ளா பந்தயத்தை தொடங்கி வைத்தார். சிறிது தூரம் ரேக்ளா வண்டியிலும் பயணித்தார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பொங்கல் பண்டிகை நம்முடைய பாரம்பரிய பண்டிகையாகும். இது வீட்டிலும், குடும்பத்திலும் சந்தோஷம் கொடுக்க கூடிய பண்டிகையாகும். இந்த பண்டிகையை இங்கு நான் மக்களுடன் சேர்ந்து உற்சாகமாக கொண்டாடி உள்ளேன். இது மகிழ்ச்சியாக உள்ளது.

    தமிழக அரசு பொங்கல் பரிசாக மக்களுக்கு ரூ.1000 மட்டுமே கொடுப்பது வெட்கக்கேடானது. தமிழ் கலாசாரத்தை பாதுகாப்பதாக கூறி வரும் தி.மு.க அரசு இவ்வளவு கேவலமாக நடந்து கொள்ளக்கூடாது.

    காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி மேற்கொள்ளும் பாதயாத்திரையில் கமல்ஹாசன் கலந்து கொண்டது அவரது கட்சியின் தனிப்பட்ட உரிமையாகும். அதில் கருத்து சொல்ல முடியாது.

    பா.ஜ.க.வில் எல்லா பெண்களும் கட்சியை விட்டு போகவில்லை. ஒரு சிலர் போவதால் பாதுகாப்பு இல்லை என்று கூறமுடியாது. பா.ஜ.க.வில் இருக்கும் அனைத்து பெண்களுக்கும் பாதுகாப்பு இருக்கிறது. நானும் கட்சியில் தானே இருக்கிறேன்.

    தற்போதைய தலைவர் அண்ணாமலை துணிச்சலான தலைவர். துணிச்சலாக பல முடிவுகளை எடுத்து வருகிறார். அவரை பாராட்டுகிறேன்.

    தமிழகம், தமிழ்நாடு என்று சொல்வதால் எந்த தவறும் இல்லை. நான் மும்பையில் பிறந்தாலும் தமிழச்சி தான். 36 ஆண்டுகளாக தமிழகத்தில் தான் உள்ளேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பின்னர் நிருபர்கள் அவரிடம் பொங்கலுக்கு துணிவு பார்ப்பீர்களா? வாரிசு பார்ப்பீர்களா என கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் நான் பொங்கலுக்கு எங்கும் போகவில்லை. வீட்டில் தான் இருக்க போறேன். எந்த படத்திற்கு போவார்கள் என்பதை நீங்கள் ரசிகர்களிடம் தான் கேட்க வேண்டும் என்றார்.

    ஏற்கனவே நடிகை காயத்ரி ரகுராம் பா.ஜ.க.வில் இருந்து விலகிய நிலையில் நேற்று நடிகையும், இயக்குனருமான லட்சுமி ராமகிருஷ்ணனும் அந்த கட்சியில் இருந்து வெளியேறினார்.

    இந்தநிலையில் அந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முயற்சியில் நடிகை குஷ்பு இன்று கோவையில் கருத்து தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மோசமாக உள்ளது.
    • சட்டம் அனைவருக்கும் ஒன்றுதான்.

    தூத்துக்குடி :

    கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக, பா.ஜ.க. தேசிய குழு உறுப்பினரும், நடிகையுமான குஷ்பு நேற்று சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வந்தார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மோசமாக உள்ளது. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. பத்திரிகைகளில் தினமும் வரும் செய்திகளே இதற்கு சாட்சி. தமிழகத்தில் தினமும் ஏதாவது ஒரு இடத்தில் பெண்களுக்கு பிரச்சினை நடந்து கொண்டுதான் இருக்கிறது.

    ஆனால், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்களை மூடிக்கொண்டு எதுவுமே நடக்கவில்லை என நினைத்துக் கொண்டிருக்கிறார். அவரது செயலும் அப்படித்தான் இருக்கிறது. சட்டம் அனைவருக்கும் ஒன்றுதான். எனவே, பெண்களுக்கு எதிரான குற்றம் எங்கே நடந்தாலும் முறையாக விசாரணை நடத்த வேண்டும்.

    நாங்கள் எழுதி கொடுத்ததைத்தான் கவர்னர் படிக்க வேண்டும் என கூறுவது சரியல்ல. சட்டசபையில் இருந்து கவர்னர் வெளியே செல்லும்போது அமைச்சர் பொன்முடி இழிவாக பேசி உள்ளார். இதுதான் திராவிட மாடல் ஆட்சியா?. இதற்கு முன்பு இதே பொன்முடி அரசு பஸ்சில் பெண்களுக்கான இலவச பயணம் குறித்தும் இழிவாக பேசி உள்ளார்.

    அப்போதும் அவர் மீது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மற்றவர்களை தரக்குறைவாக இழிவாக பேசுவது, அவமரியாதை செய்வது தான் திராவிட மாடலா?.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • காதல் வரும்போது மட்டும் மனதில் இருந்து யோசிக்க வேண்டும் என்பது இல்லை.
    • அனைத்து நேரத்திலும் மனதில் இருந்து யோசித்தால் வாழ்க்கையில் வெற்றி ஏற்படும்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரியில் நடந்த சுவாமி விவேகானந்தர் பிறந்த நாள் விழாவில் பா.ஜனதா தேசிய குழு உறுப்பினரும், நடிகையுமான குஷ்பு கலந்து கொண்டார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    பல நேரங்களில் உங்களுக்கு முடிவெடுக்க வேண்டிய நிலை வரும் போது கொஞ்சம் குழம்பி போவீர்கள். அவ்வாறு குழப்பம் வரும்போது மனம் மற்றும் புத்தி இதில் எது சொல்வதை கேட்க வேண்டும் என தெளிவாக விவேகானந்தர் சொல்லியுள்ளார்.

    காதல் வரும்போது மனதில் இருந்து யோசிப்பீர்கள். ஏனென்றால் மனதுதான் சரியான முடிவை எடுக்கும். மனதில் இருந்து யோசி அப்போதுதான் முடிவு சரியாக இருக்கும். வீட்டில் அம்மாவிடம் கேட்டுப்பாருங்கள். நீங்கள் புத்தியில் இருந்து யோசிப்பீர்களா அல்லது மனதில் இருந்து யோசிப்பீகளா என்று. அதற்கு மனதில் இருந்துதான் யோசிப்பதாக சொல்வார்கள். அதனால் தான் சுவாமி விவேகானந்தர் சொன்னார் வாழ்க்கையில் குழப்பம் வரும்போது மனதில் இருந்து முடிவு எடுங்கள் என்று.

    காதல் வரும்போது மட்டும் மனதில் இருந்து யோசிக்க வேண்டும் என்பது இல்லை. அனைத்து நேரத்திலும் மனதில் இருந்து யோசித்தால் வாழ்க்கையில் வெற்றி ஏற்படும். புத்தியை முன்னேற்றத்துக்கு பயன்படுத்துங்கள். நாளை நீ என்ன சாதிக்க வேண்டும், என்னவாக மாற வேண்டும் என்பதை நீங்கள் முடிவு செய்யுங்கள். ஆண், பெண் வித்தியாசம் பார்க்காமல் இருக்கிறோம். பெண்களிடம் சில விஷயங்களை சொல்லி வளர்க்கிறோம். ஆனால், ஆண்களிடம் அதைச்சொல்லி வளர்ப்பது இல்லை. இதை எல்லாம் சுவாமி விவேகானந்தர் சொல்லிக் கொடுத்திருக்கிறார். உண்மையை பேசும்படி சுவாமி விவேகானந்தர் சொல்லியிருக்கிறார்.

    வெளியில் இருந்து இந்துத்துவத்தை தவறான சாயம் பூசுகிறார்கள். எல்லோரையும் சமமாக மதி. ஆண், பெண்ணை சமமாக பார் என்பது தான் இந்துத்துவா. பிரதமர் மோடியின் பேச்சிலும் விவேகானந்தர் தான் இருக்கிறார். உலகம் கொரோனாவால் தத்தளித்துக் கொண்டிருந்த போது நம் நாட்டுக்கு மட்டுமில்லாமல் உலகத்துக்கே தடுப்பூசி அனுப்பியிருக்கிறார்.

    கன்னியாகுமரி பாறையில் தான் 3 நாள் தியானம் இருந்தார். இந்த மண் சுவாமி விவேகானந்தரின் புனித மண். இரவு தூங்குவதற்கு முன் கண்மூடி ஒரு நிமிடம் இருந்தால் சுவாமி விவேகானந்தர் வருவார். அவர் வந்தபிறகு உங்கள் வாழ்க்கையில் நிம்மதி வரும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    முன்னதாக அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கூறியதாவது:-

    சுவாமி விவேகானந்தரை பின்பற்றவில்லை என்று கூறினாலும் ஏதோ ஒரு விஷயத்தில் அவரை பின்பற்றிக் கொண்டு தான் இருக்கிறோம். விவேகானந்தர் என்ன சொல்லிக்கொடுத்தாரோ அந்த விஷயங்கள் மட்டும் தான் இப்போதும் பார்த்து பேசி கொண்டு இருக்கிறோம்.

    இந்துத்துவாவை எதிர்கட்சிகள் தவறாக புரிந்து கொண்டார்கள். தேர்தல் நேரத்தில் மட்டும் தான் எதிர்கட்சியினருக்கு பூநூல், கோவில் நினைவுக்கு வரும். அப்போது தான் தலைக்கு டர்பன் கட்டுவார்கள். சாதியை வெளிப்படுத்துவார்கள்.

    இந்துத்துவத்துக்கும், மதத்துக்கு எதிராக பேசுபவர்களுக்கு தேர்தல் நேரத்தில் மதம் நினைவுக்கு வரும். யாருமே கோவிலுக்கு போகக்கூடாது என்றவர்கள் கோவில் கோவிலாக போகிறார்கள். கையில் காப்பு கட்டுகிறார்கள். பூஜை செய்வார்கள். மதத்தை ஓட்டு வங்கியாக மாற்ற அந்த நேரத்தில் மக்களை முட்டாளாக்குகிறார்கள். மக்களின் ஓட்டு வேண்டும் என்பதற்காக மதத்தை அவர்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

    கவர்னர் விஷயத்தில் எல்லாமே தவறாகத்தான் இருக்கிறது. நீங்கள் அரசாங்கம் நடத்துகிறீர்கள் என்றால் அதற்கு மேல் கவர்னர் இருக்கிறார். அரசாங்கத்தை மேற்பார்வை செய்யவும், தவறு நடந்தால் தட்டி கேட்பவராகவும் கவர்னர் இருக்கிறார். சட்டசபையில் இருந்து கவர்னர் போகும்போது பொன்முடி அவரை சைகைகாட்டினார். அது எவ்வளவு பெரிய தவறு. இதற்கு முன்பு பெண்கள் பஸ்சில் ஓசியில் போவதாக பொன்முடி சொன்னார். அப்போது முதல்-அமைச்சர் பேசவில்லை. அப்படி எனில் கவர்னருக்கு என்ன மரியாதை கொடுக்கிறீர்கள்?

    தமிழகம், தமிழ்நாடு இரண்டுக்குமே வித்தியாசம் இல்லை என காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி சொன்னபோது ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஏன் கோஷம் போடவில்லை. கவர்னருக்கு எதிராக கோஷம் போடும்போது மக்கள் பார்ப்பார்கள் என்பதற்காக அப்படி செய்கிறார்கள். காங்கிரஸ் ஒரு காமெடி பீஸ், அதை யாரும் மதிக்க மாட்டார்கள் என்பதால் அதுபற்றி பேசுவது இல்லை.

    சேதுசமுத்திர திட்டம் கொண்டு வர தனி தீர்மானத்தை முதல்-அமைச்சர் கொண்டு வருகிறார். அதுதொடர்பாக நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. கூறியதை நாங்கள் ஆதரிக்கிறோம். துணிவு படத்தில் சர்ச்சைக்குரிய வசனம் வருவதாக கூறுகிறீர்கள். ஆனால் நான் இன்னும் படம் பார்க்கவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராக நியமிக்கப்பட்ட குஷ்புவுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.
    • பெண்களுக்கு எதிரான கொடுமைகளை தடுக்க தன்னால் முடிந்ததை செய்வேன் என்றார் குஷ்பு.

    தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராக நடிகையும், பாஜக தேசிய செயற்குழு சிறப்பு அழைப்பாளருமான குஷ்பு நியமிக்கப்பட்டுள்ளார்.

    தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராக நியமிக்கப்பட்ட குஷ்புவுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் நியமனம் குறித்து குஷ்பு கூறியதாவது, ரொம்ப மகிழ்ச்சி அளிக்கிறது. மிகப்பெரிய பொறுப்பு கிடைத்துள்ளது. பிரதமர் மோடிக்கு நன்றி. பெண்களுக்கு எதிரான கொடுமைகளை தடுக்க என்னால் முடிந்ததை செய்வேன் என்றார்.

    • பாதிக்கப்படும் பெண்கள் தைரியமாக புகார் அளிக்கலாம்.
    • வெளியே தெரியாமல் பல விஷயங்கள் நடக்கின்றன.

    புதுடெல்லி :

    பா.ஜனதா செய்தி தொடர்பாளராக இருந்த நடிகை குஷ்புக்கு தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவி வழங்கப்பட்டு உள்ளது.

    இதனைத்தொடர்ந்து நேற்று அவர் டெல்லியில் உள்ள தேசிய மகளிர் ஆணைய அலுவலகத்துக்கு சென்று பதவி ஏற்றுக்கொண்டார்.

    பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    இதை புது தொடக்கமாக உணர்கிறேன். பெண்களுக்காக போராடி, குரல் கொடுத்து பேசி வரும் எனக்கு அங்கீகாரம் வழங்கியது போல் உள்ளது.

    பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. பெண்களுக்காக செய்ய விரும்புவதை செய்யவும், அவர்களுக்காக பேச, அவர்களுக்கு தைரியம் கொடுக்க மிகப்பெரிய தளம் கிடைத்ததில் மகிழ்ச்சி.

    பெண்களுக்கு எதிரான கொடுமைகள் எங்கிருந்து தொடங்குகிறது? என்பதை பார்க்க வேண்டும். இது டெல்லியில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் இருக்கிறது. ஆனால் இந்தியாவில் அதிகமாக இருக்கிறது. ஏன் இப்படி பிரச்சினைகள் வந்து கொண்டிருக்கிறது, அதற்கு எப்படி முற்றுப்புள்ளி வைப்பது, எப்படி தடுப்பது? என்பதைத்தான் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

    நான் இப்போதுதான் பதவி ஏற்று இருக்கிறேன். இங்கு பல புகார்கள் ஏற்கனவே இருக்கிறது. அந்த ஆவணங்களை படித்துப் பார்த்துவிட்டு நடவடிக்கை எடுக்கப்படும். ஊடகங்கள் வாயிலாக வெளியே வரும் வன்கொடுமைகள் மட்டுமே வெளி உலகத்துக்கு தெரிகிறது. வெளியே தெரியாமல் பல விஷயங்கள் நடக்கின்றன. பாதிக்கப்படும் பெண்கள் போலீசுக்கு செல்லவோ, கோர்ட்டுக்கு செல்லவோ பயப்படுகிறார்கள்.

    அவர்களுக்கு நான் சொல்லுவது, 'நாங்கள் இருக்கிறோம். எங்களிடம் வாருங்கள்' என்பதுதான். தேசிய மகளிர் ஆணையம் வலுவான அமைப்பு. பாதிக்கப்படும் பெண்கள் தைரியமாக புகார் அளிக்கலாம். அவர்களுக்கு நிச்சயமாக நியாயம் கிடைக்கும்.

    தமிழகத்தில் இருந்து என்னை தேர்ந்தெடுத்து உள்ளனர். அதனால் கண்டிப்பாக தமிழக பெண்களுக்கு எதிரான பிரச்சினைகளை அதிகம் பேசுவேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • என்னுடைய அம்மா ஒரு மோசமான நபரைத் திருமணம் செய்து கொண்டார்.
    • பாலியல் ரீதியாக ஒரு குழந்தை துன்புறுத்தப்படும்போது அது அந்தக் குழந்தையின் வாழ்நாள் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தும்.

    சென்னை:

    நடிகை குஷ்பு திரைப்பட வாழ்க்கையில் வெற்றிகரமாக இயங்கி வந்த நிலையில் அடுத்த கட்டமாக அரசியலில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

    அவ்வப்போது பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் குற்றங்களுக்கு எதிராகவும் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் வன்கொடுமைக்கு எதிராகவும் குரல் கொடுத்து வருகிறார்.

    சமீபத்தில் அவர் தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து டெல்லி சென்று ஆணையத்தில் உறுப்பினராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

    டெல்லியில் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பேட்டியளித்த குஷ்பு சுந்தர் அதிர்ச்சிகரமான தகவலைப் பகிர்ந்திருக்கிறார். அவர் கூறியதாவது:-

    "பாலியல் ரீதியாக ஒரு குழந்தை துன்புறுத்தப்படும்போது அது அந்தக் குழந்தையின் வாழ்நாள் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தும். அந்த கொடூரம் ஆறாத வடுவாக மாறிவிடும் என்று நான் நினைக்கிறேன்.

    என்னுடைய அம்மா ஒரு மோசமான நபரைத் திருமணம் செய்து கொண்டார். என் அப்பா என் அம்மாவை அடிப்பதையும், தன் ஒரே மகளான என்னையும் பாலியல் ரீதியாகத் துஷ்பிரயோகம் செய்வதையும் தனது பிறப்புரிமையாக நினைத்தார்.

    என்னை பாலியல் ரீதியாக அவர் துன்புறுத்தியபோது எனக்கு 8 வயதுதான் ஆகியிருந்தது. 15 வயது வரை அது தொடர்ந்தது. 16 வயதில்தான் நான் அப்பாவிற்கு எதிராகப் பேசத் தொடங்கினேன்.

    இதைச்சொன்னால் என் அம்மா என்னை நம்ப மாட்டார் என்ற பயம் எனக்கு இருந்தது. காரணம் தனக்கு என்ன துன்பம் கொடுத்தாலும் என் அப்பாவை தன்னுடைய கடவுளாகவே நினைத்தார் அம்மா.

    நான் 16 வயது தொடக்கத்தில் அப்பாவுக்கு எதிராகப் போராடினேன்.

    இவ்வாறு குஷ்பு கூறியிருக்கிறார்.

    தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராகப் பொறுப்பேற்றபின் குஷ்பு தன்னை குறித்துப் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    • இந்திய திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் குஷ்பு.
    • இவர் தற்போது தனக்கு சிறு வயதில் ஏற்பட்ட பாலியல் சீண்டல் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

    தமிழ் திரையுலகிற்கு 1988ம் ஆண்டு வெளியான தர்மத்தின் தலைவன் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் குஷ்பு. அதன்பின் வருஷம் 16, வெற்றி விழா, மை டியர் மார்த்தாண்டம், சின்ன தமிபி, மன்னன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலம்டைந்தார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்த குஷ்பு சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான வாரிசு படத்தில் நடித்து அனைவரையும் கவர்ந்தார்.

     

    குஷ்பு

    குஷ்பு


    இந்நிலையில் நடிகை குஷ்பு சிறு வயதில் தனக்கு ஏற்பட்ட பாலியல் சீண்டல் குறித்து சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, "ஒரு குழந்தை துஷ்பிரயோகம் செய்யப்படும்போது, அது குழந்தையின் வாழ்நாள் முழுவதும் வடுவாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். அது ஒரு பெண் அல்லது பையனை என்பது அல்ல. என் அம்மா மிகவும் மோசமான திருமணத்தை அனுபவித்துள்ளார். தன் மனைவியை அடிப்பதும், குழந்தைகளை அடிப்பதும், தன் ஒரே மகளை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்வதும் தன் பிறப்புரிமை என நினைத்துக் கொண்டிருந்த ஒரு மனிதன். எனக்கு பாலியல் தொல்லை தொடங்கியபோது எனக்கு 8 வயதுதான். 15 வயதில் அவருக்கு எதிராகப் பேசும் தைரியம் எனக்கு இருந்தது.

     

    குஷ்பு

    குஷ்பு


    தான் ஒரு நிலைப்பாட்டை எடுக்க வேண்டிய நிலை வந்தது. ஆனால் குடும்பத்தினர் என்ன சொல்வார்களோ என்ற பயம் இருந்ததால், பல ஆண்டுகளாக வாயை மூடிக்கொண்டு இருந்தேன். என் அம்மா என்னை நம்பவில்லை. ஆனால் 15 வயதில் அது போதும் என்று நினைத்து அவருக்கு எதிராக பேச ஆரம்பித்தேன். எனக்கு அப்போது 16 வயது கூட ஆகவில்லை. எங்களை நிர்கதியாக விட்டு சென்றார். அடுத்த உணவு எங்கிருந்து வரும் என்று எங்களுக்குத் தெரியவில்லை. இதுபோன்ற பல சம்பவங்கள் என்னை சிறுவயதிலேயே மன உறுதியை படைத்தவளாக மாற்றியது" என்று கூறினார். நடிகை குஷ்புவின் இந்த பேச்சு பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ×