என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "lakh"
- பல உணவு பொருட்கள் ஆர்டர் செய்யப்பட்டிருந்தது.
- பில்லின் புகைப்படத்தை அவர் பதிவிட்டிருந்தார்.
துருக்கியை சேர்ந்தவர் பிரபல சமையல் கலை நிபுணர் நுஸ்ரெட் கோட்சே என்ற சால்ட் பே. இவர் துபாயில் ஒரு உணவகம் நடத்தி வருகிறார். அங்கு சமீபத்தில் ஒரு வாடிக்கையாளர்கள் குழுவாக சென்று உணவு சாப்பிட்டுள்ளனர். அவர்களுக்கு வந்த பில் தொகையை சால்ட் பே தனது வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
மிகப்பெரிய உணவு பில்லான அதில், மொத்தம் ரூ.90 லட்சம் பில் தொகை இருந்தது. 'பணம் வரும்... போகும்...' என்ற தலைப்புடன் அந்த பில்லின் புகைப்படத்தை அவர் பதிவிட்டிருந்தார். அந்த பில்லில், பிரெஞ்ச் பொறியல், கோல்டன் பக்லாவா, பழத்தட்டு, துருக்கிய காபி மற்றும் சமையல்காரரின் கையொப்பம் கொண்ட இறைச்சி உணவுகள் உள்ளிட்ட பல உணவு பொருட்கள் ஆர்டர் செய்யப்பட்டிருந்தது தெரிய வந்தது.
உணவை தவிர பல விலை உயர்ந்த பானங்களையும் அருந்தியதற்கான தொகையும் பில்லில் இருந்தது. அதோடு வாடிக்கையாளர்கள் தாராளமாக சுமார் ரூ.20 லட்சத்தை டிப்ஸ்சாக வழங்கி இருந்ததும் பில்லில் இடம் பெற்றிருந்தது. இந்த பில் வைரலான நிலையில், பயனர்கள் பலரும் தங்களது விமர்சன கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். நாள்தோறும் பல லட்சக்கணக்கான மக்கள் பசியால் அவதிப்படும் போது ஒரு நேர உணவுக்காக இவ்வளவு செலவழிப்பது வெட்கக்கேடானது என ஒரு பயனரும், பணம் வீணடிக்கப்பட்டுள்ளது என மற்றொரு பயனரும் பதிவிட்டுள்ளனர்.
- சிலர் உண்மையை மறைத்து சேவல்களை அதிக விலைக்கு விற்பனை செய்கின்றனர்.
- வெற்றியை நிச்சயிக்கும் என்பதால் தரமான சண்டை சேவல்களை தேடி அலைந்து வருகின்றனர்.
தமிழகத்தில் பொங்கல் பண்டிகைக்கு எருது விடும் விழா பிரபலம் என்றால் ஆந்திராவில் சேவல் சண்டை பிரபலமாகும். ஆந்திராவில் சங்கராந்தி பண்டிகையின்போது கடலோர மாவட்டங்களில் 3 நாட்களுக்கு சேவல் சண்டை நடத்தப்படுகிறது.
ஆந்திராவில் சண்டை சேவல்களுக்கு வைரஸ் மற்றும் சுவாச பிரச்சனை நோய் தாக்கப்பட்டு ஏராளமான சேவல்கள் இறந்தன.
இதனால் சேவல் வளர்ப்பவர்கள் கடும் நஷ்டம் அடைந்தனர். தற்போது சங்கராந்தி பண்டிகை நெருங்கி வருவதால் தரமான சண்டை சேவல்களின் விலை 30 சதவீதம் உயர்ந்து உள்ளது. அதாவது சண்டை சேவல்கள் ரூ 2.50 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வெளிமாநிலங்களில் இருந்து சேவல்களை வாங்கி வந்து தாய்லாந்து, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டதாக கூறி மோசடியாக விற்பனை செய்து வருகின்றனர்.
இதுகுறித்து சேவல் வளர்ப்பவர் ஒருவர் கூறுகையில்:-
வெளிநாடுகளில் இருந்து சேவல்களை இறக்குமதி செய்ய மத்திய அரசு கடும் கட்டுப்பாடுகளை விதித்து உள்ளதால் சிலர் உண்மையை மறைத்து சேவல்களை அதிக விலைக்கு விற்பனை செய்கின்றனர்.
வெளிநாடுகளில் இருந்து சேவல்கள் விற்பனை செய்தால் நம்முடைய கால சூழ்நிலையை தாக்குப்பிடிக்க முடியாமல் இறந்து போகும் என கூறினார்.
சேவல்கள் போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்றால் அதனுடைய எடை வேகம் சண்டையிடும் திறன் மட்டுமே வெற்றியை நிச்சயிக்கும் என்பதால் தரமான சண்டை சேவல்களை தேடி அலைந்து வருகின்றனர்.
- மர்ம நபர் மொபட்டில் இருந்த ரூ.2 லட்சத்து 18 ஆயிரத்தை திருடிக்கொண்டு ஓடினார்.
- அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்தனர்.
பட்டுக்கோட்டை:
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையை அடுத்த அதம்பை வடக்கு கிராமத்தை சேர்ந்தவர் பாலன் (வயது 41 ) விவசாயி.
சம்பவத்தன்று பாலன் பட்டுக்கோட்டை பெரிய தெரு பகுதியில் உள்ள அரசு வங்கியில், தன்னுடைய கணக்கில் இருந்து ரூ.2 லட்சத்து 18 ஆயிரம் விவசாய தேவைக்காக எடுத்துள்ளார்.
தன்னுடைய மொபைட்டில் பணத்தை வைத்துகொண்டு புறப்பட்டார்.
அப்போது மேலும் கூடுதலாக பணம் தேவைப்பட்டதால், பட்டுக்கோட்டை வடசேரி சாலையில் உள்ள தனியார் வங்கி ஏ.டி.எம் முன்பு மொபைட்டை நிறுத்திவிட்டு உள்ளே சென்று பணம் எடுத்தார்.
இதனை நோட்டமிட்ட மர்ம நபர் சென்றுவிட்டு மீண்டும் வந்த போது, மர்ம நபர் மொபைட்டில் இருந்த ரூ.2 லட்சத்து 18 ஆயிரத்தை திருடி கொண்டு ஓடினார்.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பாலன் திருடன்.. திருடன்.. என சத்தம் போட்டார்.
அதற்குள் அந்த மர்மநபர் தப்பி ஓடிவிட்டார்.
இது குறித்து பாலன் பட்டுக்கோட்டை நகர போலீஸில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
மேலும் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அதில் வங்கியில் பாலன் பணம் எடுக்கச் சென்ற பொழுது மர்மநபர் ஒருவர் மாஸ்க் அணிந்தவாறு பின்புறம் வந்து நின்றுள்ளார்.
அதனை தொடர்ந்து பாலன் பணம் எடுத்ததை அறிந்த, அந்த மர்ம நபர் இரு சக்கர வாகனத்தில் மேலும் ஒரு நபருடன் சேர்ந்து அவரை பின்தொடர்ந்து சென்று பணத்தை திருடி சென்றது பதிவாகியுள்ளது.
தொடர்ந்து மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- ஈரோட்டில் ஆன்லைனில் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பெண் வியாபாரி இதுகுறித்து நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுத் தருமாறு ஈரோடு சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை தீவிரப்படுத்தினர். அந்த பெண் வியாபாரி பணத்தை செலுத்திய வங்கி கணக்கிலிருந்து பணத்தை எடுத்தனர்.
ஈரோடு:
ஈரோட்டை சேர்ந்த பெண் வியாபாரி ஒருவர் மிளகாவை மொத்த விலையில் வாங்குவதற்காக இணையதளம் உதவியை நாடியுள்ளார். அப்போது இணையதளத்தில் வந்த ஒரு விளம்பரத்தை பார்த்து அதில் இருந்த போன் நம்பருக்கு அந்த பெண் வியாபாரி போன் செய்துள்ளார்.
அப்போது எதிர்முனையில் பேசியவர்கள் தாங்கள் நிறுவனம் குஜராத்தில் உள்ளது என்றும் மொத்த வியாபாரிகளுக்கு சலுகை விலையில் பொருட்களை அனுப்பி வைத்து வருகிறோம் என்றும் கூறியுள்ளார்.
இதை உண்மை என்று நம்பிய அந்த பெண் வியாபாரி அவர்கள் கூறியபடி ஆயிரம் கிலோ பொருட்கள் வாங்குவதற்காக அவர்கள் கூறிய வங்கி கணக்கில் முன் தொகையாக ரூ.2 லட்சத்து 26 ஆயிரத்து 800-யை செலுத்தியுள்ளார்.
அதன் பின்னர் அவர்கள் கூறியபடி அந்த பெண் வியாபாரிக்கு அவர்கள் பொருட்களை அனுப்பவில்லை.
இது குறித்து அந்த பெண் வியாபாரிகள் கேட்டதற்கு காலம் தாழ்த்தி வந்தனர். அதன்பிறகு செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்ட போது போன் சுவிட்ச் - ஆப் என்று வந்தது.
இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அந்த பெண் வியாபாரி இதுகுறித்து நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுத் தருமாறு ஈரோடு சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.
அதன்பேரில் ஈரோடு சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை தீவிரப்படுத்தினர். அந்த பெண் வியாபாரி பணத்தை செலுத்திய வங்கி கணக்கை முதலில் முடக்கினர்.
அதன் பின்னர் அவர் செலுத்திய பணத்தை அந்த வங்கி கணக்கிலிருந்து எடுத்தனர். நேற்று பாதிக்கப்பட்ட பெண்ணை அலுவலகத்திற்கு நேரடியாக வரவழைத்து மோசடியில் அவர் இழந்த ரூ.2 லட்சத்து 26 ஆயிரத்து 800 பணத்தை மீண்டும் அவரிடமே ஒப்படைத்தனர்.
இதையடுத்து அந்த பெண் வியாபாரி நன்றி கூறி சென்றார்.
- பணத்திற்கு ஆசைப்பட்டுகணவன்-மனைவி நிதி நிறுவனத்தில் கையாடல் செய்து பணம் மோசடி செய்துள்ளனர்.
- இது குறித்து நடவடிக்க வேண்டும் என நிர்வாகிகள் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வந்து புகார் மனு கொடுத்தனர்.
ஈரோடு:
ஈரோடு, கருங்கல்பாளையத்தை தலைமையிடமாக கொண்டு இயங்கும் தனியார் நிதி நிறுவனத்தை சேர்ந்த பொது மேலாளர் மாரிமுத்து(42) என்பவர் தலைமையில் நிர்வாகிகள் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வந்து புகார் மனு கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:
நாங்கள் ஈரோடு, கருங்கல்பாளையம் நியூ ஸ்டேட் பேங்க் காலனியில் தலைமை இடமாக வைத்து நிதி நிறுவனம் நடத்தி வருகிறோம். எங்களுக்கு ஈரோடு, பவானி, ஓமலூர், சங்ககிரி, அரச்சலூர், மற்றும் அம்பாசமுத்திரம் என 6 இடங்களில் எங்கள் கிளைகள் உள்ளன.
எங்கள் நிறுவனத்தில் சேலம் மாவட்டம் சங்ககிரி, தேவன்ன கவுண்டனூர் பகுதியை சேர்ந்த ஒருவர் பணிபுரிந்து வந்தார். அவர் சொல்பவர்கள் எல்லாம் எங்கள் நிறுவனத்திற்கு வரச்சொல்லி ஆவணங்களை சரிபார்த்து பெற்றுக்கொண்டு பணத்தை அவரிடம் வழங்கினோம்.
அவர் ஒரு பெண்ணை காதலித்து வந்தார். அவர்கள் திருமணத்தையும் நாங்களே தலைமையேற்று நடத்தி வைத்தோம். இந்நிலையில் பணத்திற்கு ஆசைப்பட்டு இருவரும் எங்கள் நிதி நிறுவனத்தில் கையாடல் செய்து பணம் மோசடி செய்துள்ளனர்.
இருவரும் 3 மாதத்திற்குள் எங்கள் நிதி நிறுவனம் இடமிருந்து ரூ.19 லட்சத்து 37 ஆயிரத்து 325 ரூபாயை மோசடி செய்து கையாடல் செய்து உள்ளனர். இது குறித்து அவர்களிடம் கேட்டபோது முறையாக பதில் சொல்லாமல் உள்ளனர்.
எனவே அவர்கள் இருவர் மீதும் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுத்து எங்கள் பணத்தை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் அதில் கூறி உள்ளனர்.
- விபத்தில் உயிரிழந்த ராமனின் வாரிசுதாரரான அவரது மனைவி நீலா என்பவருக்கு காப்பீட்டு தொகை வழங்கப்பட்டது.
- ரூ.30 லட்சத்துக்கான காசோலையை கலெக்டர் மகாபாரதி வழங்கினார்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாவட்டம் புதுப்பட்டினம் பாரத ஸ்டேட் வங்கி கிளை சார்பில், விபத்தில் உயிரிழந்த ராமனின் வாரிசுதாரரான அவரது மனைவி நீலா என்பவருக்கு விபத்து காப்பீட்டு தொகை ரூ.30 லட்சத்துக்கான காசோலையை கலெக்டர் மகாபாரதி வழங்கினார்.
அருகில் பாரத ஸ்டேட் வங்கி நாகை மண்டல மேலாளர் ராதாகிருஷ்ணன், மயிலாடுதுறை முதன்மை மேலாளர் ராமநாதன், புதுப்பட்டினம் கிளை மேலாளர் ஹேம்நாத் மற்றும் பலர் உள்ளனர்.
- நேற்றிரவு வழக்கம்போல் இருவரும் வீட்டில் தனியாக தூங்கிக் கொண்டிருந்தனர்.
- ரூ. 3 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது.
அதிராம்பட்டினம்:
பட்டுக்கோட்டை அருகே அதிராம்பட்டினம் கரையூர் தெருவை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 40).
இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார்.
இவரது மனைவி மற்றும் தாய் இருவரும் கூரை வீட்டில் வசித்து வருகின்றனர்.
இதேபோல் அருகில் உள்ள வீட்டில் வீரையன் (44) என்பவரும் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார்.
இவரது மனைவியும், மகளும் வீட்டில் தனியாக வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், நேற்றிரவு வழக்கம்போல் இருவரும் வீட்டில் தனியாக தூங்கிக் கொண்டிருந்தனர்.
அப்போது, திடீரென நள்ளிரவில் வெடிக்கும் சத்தம் கேட்டு இருவரும் கண் விழித்து பார்த்தபோது வீடு முழுவதும் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது.
இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் இருவரும் கத்தி கூச்சலிட்டனர்.
அதற்குள்ளாக, அருகில் இருந்த மாரிமுத்து என்பவரின் வீட்டிலும் தீ பரவியது. அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வந்து தண்ணீர் ஊற்றி போராடி தீயை அணைத்தனர்.
இதில் வீட்டில் இருந்த ரூ. 3 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது.
அதிர்ஷ்டசவமாக வீட்டில் இருந்தவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை.
- பாபநாசம் ஊராட்சி ஒன்றிய ஆணையர் காந்திமதி தலைமை தாங்கினார்.
- 2 மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு தலா 9 லட்சம் வீதம் 18 லட்சம் வங்கி கடனுதவி வழங்கப்பட்டது.
பாபநாசம்:
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தமிழ்நாடு மாநில ஊரக நகர்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் அனைத்து வங்கிகள் ஒருங்கிணைந்து வட்டார அளவில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் கடன் வழங்கும் விழா நடைபெற்றது.
விழாவிற்கு பாபநாசம் ஊராட்சி ஒன்றிய ஆணையர் காந்திமதி தலைமை தாங்கினார். விழாவில் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் பிரதீப் கண்ணன், மாவட்ட உதவி திட்ட அலுவலர் ஆசிர்வாதம், வங்கி மேலாளர் அண்ணாமலை ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள்.
மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு கடனுதவிமகளிர் சுயஉதவி குழுக்களுக்கு கடனுதவிபாபநாசம் இந்தியன் வங்கி கிளை சார்பில் 2 மகளிர் சுய உதவி குழுவினருக்கு தலா 9 லட்சம் வீதம் 18 லட்சம் வங்கி கடனுதவி வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் அனைத்து தேசிய உடமையாக்கப்பட்ட வங்கி மேலாளர்கள், வட்டார இயக்க மேலாளர் சரண்யா, வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் ராஜலட்சுமி, கவிதா, சசிகலா, உமாராணி, கீதா, சரஸ்வதி மற்றும் மகளிர் சுய உதவி குழுவினர் கலந்து கொண்டனர்.
- 5 மகளிர் குழுக்களுக்கு ரூ.10 லட்சத்திற்கான கடனுதவிகளை வழங்கினார்.
- நபார்டு வங்கியில் திட்ட பணிகள் குறித்து விரிவாக பேசினார்.
பூதலூர்:
திருக்காட்டுப்பள்ளி -கண்டியூர் சாலையில் அமைந்துள்ள கருப்பூர் கவ்டசி தொண்டு நிறுவன பயிற்சி மையத்தில் நபார்டு வங்கியின் திட்டப்பணிகள் குறித்த கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு தஞ்சை நபார்டு வங்கியின் உதவி பொது மேலாளர் அனீஸ் குமார் தலைமை தாங்கி 5மகளிர் குழுக்களுக்கு ரூ 10 லட்சத்திற்கான கடன் உதவிகளை வழங்கி நபார்டு வங்கியில் திட்டப் பணிகள் குறித்து விரிவாக பேசினார்.
கலந்தாய்வு கூட்டத்தில் தஞ்சை மாவட்ட இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் முன்னோடி வங்கி மேலாளர் பிரதீப் கண்ணன், தஞ்சை கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மைய தலைவர் ஜெகதீசன், உதவி பேராசிரியர் ஜெயகாந்தன், நடுக்காவேரி யூனியன் வங்கி மேலாளர் ஜெகன், திருப்பூந்துருத்தி கால்நடை மருத்துவர் பிரீத்தி, மற்றும் பலரும் கலந்து கொண்டனர்.
கவ்டெசி தொண்டு நிறுவன செயலாளர் கருணாமூர்த்தி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நபார்டு வங்கியோடு இணைந்துகவ்டசி தொண்டு நிறுவன பணியாளர்கள் சுபாஷினி, கோமதி, கணேஷ் வரி, ஆர்த்தி, ராஜா, ரூபன் செய்திருந்தனர்.
தொடக்கத்தில் கவ்டெசி தொண்டு நிறுவன தலைவர் மாவடி யான் வரவேற்றார்.
வினோபாஜி உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலர் பாஸ்கர் நன்றி கூறினார்.
- சென்னிமலை முருகன் கோவிலில் உள்ள உண்டியல்கள் திறந்து எண்ணும் பணி நடைபெற்றது.
- உண்டியல்கள் எண்ணும் பணியில் ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி பணியாளர்கள் கூட்டுறவு சங்கப் பணியாளர்கள், கோவில் பணியாளர்கள் மற்றும் நந்தா கல்லூரி, மாணவ, மாணவிகள் தன்னார்வலர்கள் ஈடுபட்ட–னர்.
சென்னிமலை:
சென்னிமலை முருகன் கோவிலில் உள்ள உண்டியல்கள் திறந்து எண்ணும் பணி நடைபெற்றது. திருச்செ–ங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில் உதவி ஆணையர் ரமணி காந்தன் தலைமையில், கோவில் தக்கார் பிரதிநிதி குகன், கோவில் செயல் அலுவலர் அருள்குமார், பெருந்துறை சரக ஆய்வாளர் ரவிக்குமார் முன்னிலையில் உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டது.
இதில், நிரந்தர உண்டியலில் 20 லட்சத்து 72 ஆயிரத்து 546 ரூபாய் பணமும், 34 கிராம் தங்கம் மற்றும் ஆயிரத்து 953 கிராம் வெள்ளியும் பக்தர்களின் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.
அதேபோல் திருப்பணி உண்டியலில் ஒரு லட்சத்து 60 ஆயிரத்து 627 ரூபாய் பணம் காணிக்கையாக இருந்தது. இரு உண்டியல் களிலும் சேர்த்து மொத்தம் ரூ.22 லட்சத்து 33 ஆயிரத்து 173 ரூபாயினை பக்தர்களின் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.
உண்டியல்கள் எண்ணும் பணியில் ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி பணியாளர்கள் கூட்டுறவு சங்கப் பணியாளர்கள், கோவில் பணியாளர்கள் மற்றும் நந்தா கல்லூரி, மாணவ, மாணவிகள் தன்னார்வலர்கள் ஈடுபட்ட–னர்.
- சென்னிமலை அருகே வெப்பிலி துணை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய்கள் ஏலம் நடைபெற்றது.
- ஏலத்தில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 42 ஆயிரத்து 708 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.
சென்னிமலை:
சென்னிமலை அருகே வெப்பிலி துணை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய்கள் ஏலம் நடைபெற்றது. ஏலத்தில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 42 ஆயிரத்து 708 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.
இதில் கிலோ ஒன்றுக்கு குறைந்தபட்ச விலையாக 20 ரூபாய் 20 காசுக்கும், அதிகபட்ச விலையாக 26 ரூபாய் 39 காசுக்கும், சராசரி விலையாக 21 ரூபாய் 31 காசுக்கும் ஏலம் போனது. மொத்தம் 13 ஆயிரத்து 189 கிலோ எடையுள்ள தேங்காய்கள் 2 லட்சத்து 94 ஆயிரத்து 605 ரூபாய்க்கு விற்பனை ஆனது.
அதேபோல் கொப்பரை தேங்காய்கள் 5 மூட்டைகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். இதில் கிலோ ஒன்றுக்கு குறைந்தபட்ச விலையாக 76 ரூபாய் 99 காசுக்கும், அதிகபட்ச விலையாக 77 ரூபாய் 99 காசுக்கும், சராசரி விலையாக 77 ரூபாய் 49 காசுக்கு ஏலம் போனது.
மொத்தம் 98 கிலோ எடையுள்ள கொப்பரை தேங்காய்கள் 7 ஆயிரத்து 590 ரூபாய்க்கு விற்பனை ஆனது. தேங்காய் மற்றும் கொப்பரை தேங்காய்கள் இரண்டும் சேர்த்து மூன்று லட்சத்து இரண்டாயிரத்து 195 ரூபாய்க்கு விற்பனை நடைபெற்றது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்