search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Lamp"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் பங்கேற்றபின் செய்தியாளர்களை சந்தித்தார் அகிலேஷ் யாதவ்
    • கடைகளில் உரிமையாளர் பெயர் குறிப்பிடுவதற்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளதை வரவேற்றார்.

     இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் நடந்துமுடிந்த நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று எம்.பி ஆனவர் ஆவார். இந்த தேர்தலில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் அதிக வெற்றியை பதிவு செய்து பாஜகவுக்கு பேரதிர்ச்சியை கொடுத்தது சமாஜ்வாதி கட்சி.

     

    அகிலேஷ் யாதவின் குடும்பத்திலிருந்து அவரது மனைவி மற்றும் உறவினர்கள் மூவர் என 5 பேர் எம்.பியாகியுள்ளனர். இந்த நிலையில் நேற்று தொடங்கிய நாடாளுமன்ற பட்ஜெட்  கூட்டத்தொடரில் பங்கேற்றபின் செய்தியாளர்களை சந்தித்த அகிலேஷ் யாதவ் பாஜகவின் செயல்பாடுகளை கடுமையாக சாடியுள்ளார்.

     

    நீட் தேர்வு முறைகேடு, வினாத்தாள் கசிவு, உத்தரப் பிரதேசத்தில் கன்வர் யாத்திரை வழித்தடத்தில் உள்ள கடைகளில் உரிமையாளர்களின் பெயர்களை குறிப்பிட பாஜக அரசு இட்ட உத்தரவு, ஆர்எஸ்எஸ் அமைப்பில் அரசு ஊழியர்கள் சேர இருந்த தடையை நீக்கியது உள்ளிட்டவற்றை சாடிய அகிலேஷ் யாதவ், கடைகளில் உரிமையாளர் பெயர் குறிப்பிடுவதற்கு  உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளதை வரவேற்றார்.

    தொடர்ந்து பேசிய அவர், பாஜகவின் பிரிவினை அரசியலை மக்கள் ஏற்கனவே புறக்கணித்து விட்டனர். விரைவில் அணைந்துபோவதற்கு முன் விளக்கு விட்டு விட்டு எரிந்து மினுங்குவதுபோல், இப்போது அவர்கள் [பாஜக] விட்டுவிட்டு  மினுங்கியபடி எரிந்துகொண்டிருக்கின்றனர். எனவேதான் அதுபோன்ற உத்தரவுகளை  பிறப்பித்து வருகின்றனர் என்று விமர்சித்துள்ளார்.

    • நாக தீபம் - உயர் பதவி விருட்ச தீபம் - அரசு பதவி கிடைக்கும்
    • கொடி தீபம் - செல்வ மேன்மை மயூர தீபம் - மக்கட் பேறு

    கோவில்களில் இறைவனுக்கு ஷோடச தீபாராதனை என்னும் 16 வகையான தீப- தூப ஆராதனைகளைச் செய்வார்கள். அந்த ஆராதனைகளையும், அவற்றால் கிடைக்கும் பலன்களையும் இங்கே பார்க்கலாம்.

    1. தூபம் - உற்சாகத்தை அளிக்கும்

    2. தீபம் - விழிப்பு தரும்

    3. மகா தீபம் - அரச போகம்

    4. நாக தீபம் - உயர் பதவி

    5. விருட்ச தீபம் - அரசு பதவி கிடைக்கும்

    6. புருஷாமிருக தீபம் - நோய் நீங்கும்

    7. சூல தீபம் - ரோக நிவர்த்தி

    8. ஆமை தீபம் - தண்ணீர் பயம் நீங்குதல்

    9. கஜ தீபம் - செல்வம் கிடைக்கும்

    10. வியாக்ர புயி தீபம் - துஷ்ட நிவர்த்தி

    11. சிம்ம தீபம் - ஆயுள் விருத்தி

    12. கொடி தீபம் - செல்வ மேன்மை

    13. மயூர தீபம் - மக்கட் பேறு

    14. பூரணகும்ப தீபம் - சாந்தி, மங்களம் உண்டாகும்

    15. நட்சத்திர தீபம் - உலகாளும் திறமை

    16. மேரு தீபம் - மேலான நிலையை அடையலாம்.

    • தினமும் அதிகாலை பிரம்ம கூர்த்த வேளையில் காலை 4.30 மணி முதல் 6 மணி வரை விளக்கேற்றினால் புண்ணியம் சேரும்.
    • 5 நூல் கொண்ட நூல் திரி போட்டு திரியின் நுனியில் சிறிது கற்பூரம் வைத்து விளக்கு ஏற்ற வேண்டும்.

    கார்த்திகை மாதம் மற்ற தமிழ் மாதங்களைவிட மிக, மிக புனிதமானது. முறைப்படி மனதை ஒரு முகப்படுத்தி வழிபட்டால் அளவிடற்குரிய பலன்களை கார்த்திகை மாதத்தில் பெறலாம். கார்த்திகை மாதம் முழுவதும் தீபம் ஏற்றி வழிபட்டால் நினைத்த காரியம் வெற்றி பெறும். தினமும் அதிகாலை பிரம்ம கூர்த்த வேளையில் காலை 4.30 மணி முதல் 6 மணி வரை விளக்கேற்றினால் புண்ணியம் சேரும். மாலை பிரதோஷ வேளையில் 4.30 மணி முதல் 6 மணி வரை தீபம் ஏற்றினால் கல்வி அபிவிருத்தியாகும். திருமண தடை விலகும்.

    வீட்டில் மாலை 6.30 மணிக்கு அனைவரும் அவசியம் விளக்கேற்ற வேண்டும். விளக்கை குளிர்விக்கும் போது கையால் அணைக்கக் கூடாது. பூவினால் குளிர்விக்கலாம்.

    அகல் விளக்கில் நெய் அல்லது நல்லெண்ணைய் ஊற்றி அதன்பின்பு 5 நூல் கொண்ட நூல் திரி போட்டு திரியின் நுனியில் சிறிது கற்பூரம் வைத்து விளக்கு ஏற்ற வேண்டும்.

    விளக்கு தீபம் ஏற்றி வழிபட்டால் செல்வ செழிப்பு உண்டாகும். மகிழ்ச்சி நிலவும், நல்ல வேலை கிடைக்கும். குழந்தைபாக்கியம், மனதுக்கு ஏற்ற வரன் அமையும் மற்றும் சகலவித செல்வங்களும் கிடைத்து வாழ்வில் வளம் பெருகும்.

    விளக்கில் எண்ணை விட்டு எத்தனை திரிகளைப் போட்டிருந்தாலும் அத்தனையும் ஏற்றிட வேண்டும். குறைந்த பட்சம் இரண்டு திரிகளாவது ஏற்ற வேண்டும். தீபம் ஏற்ற தூய்மையான புதிய அகல்விளக்கை பயன்படுத்த வேண்டும். ஏற்றிய பழைய அகல் விளக்கில் தீபம் கோவில்களில் மறுபடியும் ஏற்றக் கூடாது. அகல் விளக்கில் நெய் அல்லது நல்லெண்ணை ஊற்றி அதன் பின்பு 5 நூல் கொண்ட நூல் திரி போட்டு திரியின் நுனியில் சிறிது கற்பூரம் வைத்து அதன் பின்பு விளக்கு ஏற்ற வேண்டும்.

    விநாயக பெருமானுக்கு7 தீபம், முருகருக்கு 6 தீபம், பெருமாளுக்கு 6 தீபம், நாக அம்மனுக்கு 4 தீபம், சிவனுக்கு 3 அல்லது 9 தீபம், அம்மனுக்கு 2 தீபம், மகாலட்சுமிக்கு 8 தீபம் ஏற்றி வழிபட வேண்டும்.

    சிவன் கோவிலில் நந்திக்கு முன்பாகவும், அம்மன்- சிங்கம்- நந்தி முன்பாக, பிள்ளையார்-பெருச்சாளி முன்பாக, பெருமாள்- கருடன் முன்பாக, முருகர்-மயில் முன்பாக ஏற்ற வேண்டும். தீராத நோய்கள் தீர ஞாயிறு மாலை ராகு காலத்திலும், குடும்ப பிரச்சினைகள் தீர செவ்வாய் ராகு காலத்திலும், குடும்பம் மட்டும் தனிப்பட்ட வேண்டுதலுக்கு வெள்ளிக்கிழமை ராகு காலத்திலும், ஏற்றி மனமுருகி வழிபட வேண்டும்.

    காலையில் உஷத் காலத்திலும், மாலையில் சூரிய அஸ்தமனத்துக்கு முன்பும் வீட்டில் தீபம் ஏற்ற வேண்டும். இரண்டு திரி சேர்த்து முறுக்கி ஏற்றுவது நலம். ஒரு திரி ஏற்றும் போது கிழக்கு திசை நோக்கி ஏற்றவும். நாம் திரியை பொறுத்து அதற்கு உண்டான பலன்களை அடையலாம்.

    முதலில் கிழக்கு நோக்கி ஒரு திரியும், 2-வது வடக்கு நோக்கி ஒரு திரியும், 3-வது மேற்கு நோக்கி இரு திரியும் ஏற்ற வேண்டும். தெற்கு நோக்கி தீபம் ஏற்றக்கூடாது. குளிர்விக்கும்போது, முதலில் மேற்கே உள்ள திரிகளையும், 2-வது வடக்கே உள்ள திரியையும், 3-வது கிழக்கே உள்ள திரியையும் குளிர்விக்க வேண்டும். ஊதி அணைக்க கூடாது. மேற்கூறிய முறைப்படி, 8 நாட்களுக்கு தினமும் 1 மணி நேரம் வீதம் நெய்யில் - தாமரை நூல் திரியில் தீபம் ஏற்றி - எரிய விடுவது நமது வீட்டில் உள்ள வாஸ்து குற்றங்களை சரி செய்யும். பிரிந்த தம்பதிகள் ஒன்று சேருவார்கள்.

    -சிவசங்கர்

    • திருவிழா நடைபெற இருப்பதால் கழிவுநீரை அப்புறப்படுத்தி தண்ணீர் நிரப்ப வேண்டும்.
    • திங்கட்கிழமைக்கு மேல் ஒவ்வொரு வார்டுக்கும் 5 விளக்குகள் வழங்கப்படும்.

    பட்டுக்கோட்டை:

    பட்டுக்கோட்டை நகர்மன்ற கூட்டம் அதன் தலைவர் சண்முகப்பிரியா தலைமை யில், ஆணையர் குமரன் மற்றும் நகராட்சி அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற்றது.

    இதில் கவுன்சிலர்கள் பேசிய விவரம் வருமாறு :-

    நாடிமுத்து: எனது பட்டா மாறுதல் தொடர்பான கோரிக்கைகளை ஏற்று பட்டா மாறுதல் 150 நபருக்கு மேல் ஒரே நாளில் ஆன்லைனில் ஏற்றப்பட்டு ள்ளதற்கு நன்றி.

    ராயல்குமார் : நீண்ட கோரிக்கைக்கு பிறகு எனது வார்டில் உள்ள கழிவு நீர் வாய்க்கால்கள் தூர்வாரும் பணி தொடங்கபட்டுள்ளது.

    ஆனால் அதற்கு ஆட்களை கூடுதலாக நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தேவா தியேட்டர் சிமெண்ட் சாலை மிகவும் சேதமடைந்துள்ளது. புதிய சாலை அமைக்க வேண்டும்.

    ரவிக்குமார் : பெருமாள் கோவில்குளம் தூர்வாரி சுத்தப்படுத்தப்பட்ட நிலையில் அங்கு தேங்கிய கழிவுநிறையால் சாக்கடை யாகி துர்நாற்றம் வீசுகிறது. திருவிழா நடைபெற இருப்பதால் அதனை அப்புறப்படுத்தி தண்ணீர் நிரப்பி பராமரிக்க வேண்டும்.

    மகாலட்சுமி : எனது வார்டில் நகராட்சி வாகனம் ஏற்பாடு செய்ய வேண்டும். தெருவிளக்கு பராமரிப்பு மிகவும் மோசமாக உள்ளது. துப்புரவு பணி மிக மோசம்.

    ஆணையர் : பட்டுக்கோட்டை நகராட்சிக்கு கழிவுநீர் எடுப்பதற்கு இரண்டு வாகனம் ஒப்புதல் அளிக்கப்ப ட்டுள்ளது. விரைவில் அதற்கான விலை நிர்ணயம் செய்யப்பட்டு அறிவிக்கப்படும்.

    சரவணன் : எனது வார்டில் உள்ள நகராட்சிக்கு பள்ளிக்கு எதிரே உள்ள ஆற்றங்கரையில் சிறிய வகை பாலம் அமைக்க வேண்டும். குடிநீர் இணைப்பு அனுமதி பெறாமல் வைத்துள்ள வர்களின் இணைப்புகள் துண்டிக்க ப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். நகராட்சி நலத்திட்ட பணியாளர்கள் எந்த அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளர் என்ற வெள்ளை அறிக்கை வேண்டும்.

    சுரேஷ் : எனது வார்டில் ஒப்புதல் அளிக்கப்பட்ட சாலை வேறு பகுதியில் போடப்பட்டது ஏன்?

    பொறியாளர் நகராட்சி தீர்மானத்தில் அறிவிக்க ப்பட்டுள்ள பகுதியில் தான் சாலை போடப்பட்டுள்ளது. உங்களின் கோரிக்கை ஒரு வாரத்தில் சரி செய்யப்படும்.

    ராமலிங்கம் : மழைக்காலத்திற்கு முன்னதாக எனது வார்டில் போஸ்ட் ஆபீஸ் பகுதியில் கழிவுநீர் வாய்க்கால்கள் தூர்வாரப்பட வேண்டும்.

    கலையரசி : நாடிஅம்மன் கோவில் சாலையில் மாடுகள், நாய்கள் தொல்லை அதிக அளவில் இருக்கிறது. நாடியம்மன் கோவில் குளத்தினில் குடியிருப்பு வாசிகள் கழிவுநீர் பைப்பு இணைத்துள்ளார்கள். அதனை உடனடியாக அகற்ற வேண்டும்.

    சதாசிவகுமார் : ஏழை எளிய மாணவ -மாணவிகள் போட்டி தேர்வினை எதிர்கொள்ளும் வகையில் எனது வார்டில் ஒரு பயிற்சி மையத்தை நகராட்சி சார்பில் ஏற்படுத்த வேண்டும். பட்டுக்கோட்டையில் பல்வேறு பகுதிகளில் இன்னும் சாலை வசதி இல்லா மலும், தெருவிளக்குகள் இல்லாமலும் உள்ளதை அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும்.

    ஆணையர் : ஒரு கோடியே 16 லட்சம் செலவில் ஆர்.வி நகர் பகுதியில் அறிவுசார் நிலையம் அமைக்கப்ப ட்டுள்ளது. போட்டித் தேர்வுகளை எதிர் கொள்ளும் இளைஞர்களுக்கு ஓய்வு பெற்ற பேராசிரியர்கள் மூலம் பாடம் சொல்லிக் கொடுக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விரைவில் அந்தப் பணி முடிந்து திறப்பு விழா காணப்படும்.

    பிரபாகணி : எனது வார்டில் சாலை அமைத்ததற்கு நன்றி. கழிவுநீர் வாய்க்கால் என்னவாயிற்று. தெரு விளக்கு பராமரிப்பு மிக மோசம்.

    பொறியாளர் : பழைய ஒப்பந்ததாரர் நீக்கப்பட்டு ஐந்து உள்ளூர் நபர்கள் புதிதாக நியமிக்கப்பட்டு ள்ளனர். அவர்களுக்கு ஒவ்வொரு பகுதியின் அடிப்படையும் புரியவில்லை. விரைவில் அதுவும் சரி செய்யப்படும்.

    புதிதாக தெரு விளக்கு வந்துள்ளதாக கூறுகின்றனர். எனது வார்டுக்கு எப்பொழுது எவ்வளவு விளக்கு ஒதுக்குவீர்கள்.

    பொறியாளர் : கட்டாயம் திங்கட்கிழமைக்கு மேல் ஒவ்வொரு வார்டுக்கும் 5 விளக்குகள் வழங்கப்படும்.

    நளினி : எனது வார்டில் உள்ள ரேஷன் கடைக்கு இடையூறாக வைக்கப்ப ட்டுள்ள மின்கம்பத்தை நீக்க வேண்டும்.

    முடிவில் நகரமன்ற கூட்டத்திற்கு வந்திருந்த அனைத்து ஒட்டுமொத்த உறுப்பினர்களும் ஒற்றை கோரிக்கையாக தங்கள் வார்டுகளில் சுற்றி திரியும் நாய்களால் பொதுமக்கள், பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள் மற்றும் சிறு குழந்தைகளுக்கு ஏற்படும் பிரச்சனைகள் முன்வைத்து பேசி கோரிக்கை மனுவினை வழங்கினர் .

    குறிப்பாக பட்டுக்கோட்டை 19-வது வார்டு, அ.தி.மு.க கூட்டணி கட்சியில் உள்ள த.மா.கா கட்சியின் நகரமன்ற உறுப்பினர் நாடிமுத்து நாய் முகமூடி அணிந்தும், நாய் படங்கள் அடங்கிய பதாகையை கழுத்தில் மாட்டிய படியும் நகர் மன்ற கூட்டத்தில் கலந்து கொண்டு பரபரப்பினை ஏற்படுத்தி னார்.

    நாடிமுத்து நகர்மன்ற கூட்டத்தில் பேசும் பொழுது , பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் ஒவ்வொரு நாளும் குவியும் பொதுமக்கள், நாயால் கடிக்கப்பட்டு, நாயின் மீது மோதி விபத்து ஏற்பட்டு சிகிச்சைக்காக காத்திருக்கின்றனர்.

    பட்டுக்கோட்டையில் எந்த ஒரு பகுதிக்கும் பொதுமக்கள் இயல்பாக சென்று வர முடியாத அளவிற்கு கூட்டம் கூட்டமாக தெருநாய்கள் திரிவதால் பொதுமக்கள் மிகுந்த இன்னலுக்கு ஆளாவதாக கூறினார்.

    தான் நகர்மன்ற உறுப்பி னராக தேர்ந்தெடுக்கப்பட்ட கடந்த இரண்டு ஆண்டுகளில் பலமுறை கோரிக்கை வைம் இந்த நகராட்சி நிர்வாக அதிகாரிகள் அதற்கான உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், ஒருவேளை நாயை பிடிப்பதற்கு யாரேனும் தடை விதித்தால் அவர்களிடம் அனுமதி வாங்கி தெருநாய்களை பிடித்துக் கொண்டு அவர்கள் இல்லத்தில் விட்டு பராமரிக்க சொல்வதற்கு ஆகும் மொத்த செலவையும் தான் ஏற்று கொள்வதாகவும் கூறினார் .

    • பெரிய மினோரா வண்ண விளக்குகளால் ஜொலிக்கிறது.
    • பொதுமக்கள் பலர் ஆர்வத்துடன் கண்டு ரசித்து செல்கின்றனர்.

    நாகப்பட்டினம்:

    சுதந்திர தின விழாவை முன்னிட்டு, வீடுகள், கடைகள், அரசு அலுவலகங்கள் என தேசிய கொடிகளை பறக்கவிட மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

    அதன்படி நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள உலக புகழ்பெற்ற நாகூர் தர்காவின் பெரிய மினோரா வண்ண விளக்குகளால் ஜொலிக்கிறது. நாகூர் தர்கா நிர்வாகத்தின் சார்பாக தர்காவின் பெரிய மினோராவில் மூவர்ண நிறத்தில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, ஜொலிப்பதை பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டுகளித்து செல்கின்றனர்.

    இதேபோல நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகம் மற்றும் நாகை நகராட்சி அலுவலகமும் கண்கவர் வண்ண விளக்குகளால் ஜொலிக்கிறது. முகப்பு பகுதியில் 3 நாட்கள் வண்ண விளக்குகளால் ஜொலிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில் இதனை பொதுமக்கள் பலரும் ஆர்வத்துடன் பார்த்து ரசித்து செல்கின்றனர்.

    • இரவு நேரங்களில் செல்லும் வாகனங்கள் தட்டு தடுமாறி செல்கின்றன.
    • மின் கோபுர விளக்கை உடனடியாக சரி செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    குனியமுத்தூர்,

    கோவை போத்தனூர் கடைவீதியில் இருந்து மேம்பாலம் செல்லும் வழியில் உயர் கோபுர மின்விளக்கு உள்ளது. இது இரவு நேரங்களில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருந்தது. ஆனால் தற்போது அங்கு உயர் கோபுர மின்விளக்கு எரியவில்லை. இதனால் அந்த வழியாக இரவு நேரங்களில் செல்லும் வாகனங்கள் தட்டு தடுமாறி செல்கின்றன.

    உயர் கோபுர மின் விளக்கின் கீழ்ப்பகுதியில் 2 வேகத்தடைகள் உள்ளன. சாலையின் இடதுபுறம் பெரிய குழி தோண்டி, மூடப்படாமல் உள்ளது. வலது பக்கம் டிவைடர் உள்ளது. எனவே போத்தனூர் கடைவீதியில் இருந்து வேகமாக செல்லும் வாகனங்கள் உயர்கோபுர விளக்கு ஏரியாததால், வேகத்தடையில் சிக்கி நிலைதடுமாறி குழிக்குள் விழும் அபாயம் உள்ளது. வலது பக்கம் உள்ள டிவைடரில் முட்டி நிற்கும் சூழலும் நிலவுகிறது.

    இதுதவிர சாலைஓரத்தில் நிற்கும் மர்ம நபர்கள் இருளை பயன்படுத்தி இரு சக்கர வாகனத்தில் செல்ப வர்களிடம் வழிப்பறி செய்யும் சம்பவங்களும் நடக்கிறது. எனவே போத்தனூரில் நீண்ட நாளாக எரியாமல் உள்ள மின் கோபுர விளக்கை உடனடியாக சரி செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • இரவு நேரங்களில் பஸ்சுக்காக காத்திருக்கும் பெண்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
    • வாகனங்களில் செல்பவர்கள் போதுமான மின் வெளிச்சமின்றி விபத்து ஏற்படுகிறது.

    திருவோணம்:

    தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள திருவோணம் மூவர் ரோடு பகுதியில் தஞ்சை பட்டுக்கோட்டை ஒரத்தநாடு புதுக்கோட்டை கரம்பக்குடி ஆகிய பிரிவு சாலைகளை இணைக்கும் நெடுஞ்சாலையாக உள்ளது சாலையின் ஓரமாக நிறுவப்பட்டுள்ள உயர்மின் மின்விளக்கு பல நாட்களாக எரியாமல் கிடப்பதை சீரமைக்காமல் உள்ளதால் இரவு நேரங்களில் பேருந்துக்காக காத்திருக்கும் பெண்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

    இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் போதுமான மின் வெளிச்சமின்றி அடிக்கடி விபத்து ஏற்படுகிறது . மிகப்பெரிய விபத்தை தடுப்பதற்கு முன்பு திருவோணம் ஊராட்சி ஒன்றியம் நிர்வாகம் உடனடியாக தலையிட்டு உயர் மின் விளக்கை சீரமைக்க வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • சாலை விரிவாக்க பணி முடிந்தும் அந்த இடத்தில் விளக்கு பொருத்தப்படாமல் இருக்கிறது.
    • சென்டர் மீடியன் இடையே தெரு விளக்கு அமைத்து தர வேண்டும்.

    பேராவூரணி:

    தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி பேரூராட்சி, 11 வது வார்டு கவுன்சிலர், மகாலட்சுமி சதீஷ்குமார் பேராவூரணி பேரூராட்சி பெருந்தலைவர் சாந்தி சேகருக்கு கோரிக்கை மனு ஒன்றை அளித்துள்ளார்.

    அதில் அவர் கூறியிருப்பதாவது, பேராவூரணி மெயின்ரோடு, ஆவணம் ரோடு இணைப்பில் தந்தை பெரியார் சிலை எதிரே ஆவணம் சாலையில் உயர் மின் கோபுர விளக்கு அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு பயனுள்ளதாக எரிந்து கொண்டிருந்தது.

    இந்நிலையில் சாலை விரிவாக்கம் மற்றும் தடுப்பு சுவர் அமைக்கும் பணி காரணமாக உயர் மின் கோபுர விளக்கு அகற்றப்பட்டது.

    சாலை விரிவாக்க பணி முடிந்து 8 மாத காலங்கள் ஆகியும் அந்த விளக்கு அவ்விடத்தில் பொருத்தப்படாமல் இருக்கிறது.

    இதனால் வாகன ஓட்டிகள், பாதசாரிகள், மாணவ - மாணவியர்கள், பெண்கள் என அனைவரும் அந்த இடத்தை கடக்கும் பொழுது விபத்துக்கள் ஏற்படும் நிலை உள்ளது.

    ஆகவே பொதுமக்களுக்கு பயனுள்ளதாக இருந்த உயர் மின் கோபுர விளக்கை அதே இடத்தில் போர்க்கால அடிப்படையில் அமைத்து தரும்படி கேட்டுக்கொள்கிறேன் எனவும், சென்டர் மீடியன் இடையே தெரு விளக்கு அமைத்து தர வேண்டும் எனவும் மனுவில் கூறியுள்ளார்.

    • திருச்செங்கோடு நகருக்கு மத்தியில் மிகப் பழமையான சுகுந்த குந்தலாம்பிகை சமேத கைலாசநாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலை சுற்று வட்டார பகுதியில் வசிப்ப–வர்கள் இறக்குத்தி கோவில் என்று அழைப்பார்கள்.
    • சுமார் 52 ஆண்டுகளாக தைப்பூச தேரோட்டம் நடைபெற வில்லை. இதற்காக கடந்த 8 ஆண்டுகளாக தேசிய சிந்தனை பேரவை சார்பில் தைப்பூச தினத்தில் கைலாசநாதர் கோவிலில் தீப வழிபாடு நிகழ்ச்சி நடைபெற்று பிரார்த்தனை வைக்கப்பட்டு வந்தது.

    திருச்செங்கோடு:

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நகருக்கு மத்தியில் மிகப் பழமையான சுகுந்த குந்தலாம்பிகை சமேத கைலாசநாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலை சுற்று வட்டார பகுதியில் வசிப்ப–வர்கள் இறக்குத்தி கோவில் என்று அழைப்பார்கள். இந்த கோவில் தைப்பூச தேரோட்டம் 1971-ம் ஆண்டு திருமுருக கிருபானந்த வாரியார் தலைமையில் நடைபெற்றது.

    அதன் பிறகு சுமார் 52 ஆண்டுகளாக தைப்பூச தேரோட்டம் நடைபெற வில்லை. இதற்காக கடந்த 8 ஆண்டுகளாக தேசிய சிந்தனை பேரவை சார்பில் தைப்பூச தினத்தில் கைலாசநாதர் கோவிலில் தீப வழிபாடு நிகழ்ச்சி நடைபெற்று பிரார்த்தனை வைக்கப்பட்டு வந்தது.

    இந்த ஆண்டு கடந்த சனிக்கிழமை கொடி–யேற்றத்துடன் தைப்பூச தேரோட்ட விழா தொடங்கியது. நேற்று தை வெள்ளிக்கிழமை மற்றும் பிரதோஷ தினத்தில் மாலை சுகுந்த குந்தலாம்பிகை சன்னதியில் தேசிய சிந்தனை பேரவை சார்பில் 108 நெய் தீபம் ஏற்றி வைக்கப்பட்டு கைலாசநாதர் சுவாமிக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

    இது குறித்து தேசிய சிந்தனை பேரவை தலைவர் திருநாவுக்கரசு கூறுகையில்,

    தைப்பூச தேரோட்ட விழா நடைபெறுவதற்கு காரணமாக இருந்த நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் மதுரா செந்தில் மற்றும் தேவஸ்தான உதவி ஆணையர் ஆகியோருக்கு பக்தர்கள் சார்பில் பாராட்டுக்களை தெரிவிக்கிறோம் என்றார்.

    நிகழ்ச்சியில் பேரவை துணைச் செயலாளர் பார்த்திபன், பத்மினி, ராஜம்மாள், ஸ்ரீநிதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • சிவன் கோவிலில் அய்யப்பன் சுவாமிக்கு ஆண்டுதோறும் திருவிளக்கு பூஜை நடை பெற்று வருகிறது.
    • இதில் 108 திருவிளக்குகள் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு குங்கு மாட்சனை, மலராட்சனை செய்யப்பட்டது.

    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் ஆத்தூர் கோட்டை காய நிர்மலேஈஸ்வரர் சிவன் கோவிலில் அய்யப்பன் சுவாமிக்கு ஆண்டுதோறும் திருவிளக்கு பூஜை நடை பெற்று வருகிறது. அதன் படி 34 -ம் ஆண்டு திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் 108 திருவிளக்குகள் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு குங்கு மாட்சனை, மலராட்சனை செய்யப்பட்டது.முன்னதாக அய்யப்பன்

    சுவாமி பல வண்ண மலர்க ளால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது. பக்தர்கள் பஜனைப்பாடியும், 18 படிக்கட்டுகளை கற்பூர தீபம் ஏற்றியும் வழிபாடுகளை நடத்தியும் வழிப்பட்டனர்.

    • அவினாசிலிங்கேசுவரர் கோவிலில் தீபம் ஏற்றும் திருவிழா நடந்தது.
    • கடந்த ஒருவாரமாக கோவில் வளாகம் முழுவதும் தூய்மைபடுத்தும் பணி நடந்தது.

    அவினாசி :

    அவினாசி அவினாசிலிங்கேசுவரர் கோவிலில் கடந்த 2015ம் ஆண்டு லட்சத்து எட்டு தீபம் ஏற்றும் திருவிழா நடந்தது.இதையடுத்து இந்த ஆண்டு கார்த்திகை மாதத்தில் அறநிலையத்துறை ஒத்துழைப்புடன். இரண்டாம் முறையாக லட்சத்து எட்டு தீபத் திருவிழா நடத்த முடிவு செய்யப்பட்டது.

    இதற்காக கடந்த ஒருவாரமாக கோவில் வளாகம் முழுவதும் தூய்மைபடுத்தும் பணி நடந்தது. இதில் பக்தர்கள் ,சமூக ஆர்வலர்கள், வழிபாட்டு குழுவினர் திரளானோர் ஆர்வமுடன் கோவில் பணிகளில் ஈடுபட்டனர். விருந்தாச்சலத்திலிருந்து லட்சத்து எட்டு அகல்விளக்குகள் கொண்டுவரப்பட்டது. தீபத்திருவிழாவிற்காக ஏராளமானோர் எண்ணை, திரி ஆசியவற்றை வழங்கினர். லட்சத்து எட்டு விளக்குகளில் பெண்கள் உள்ளிட்ட பலர் எண்ணை ஊற்றினர்.

    இதையடுத்து கோவில் சபா மண்டபம், திருக்கல்யாண உற்சவம் மண்டபம், கனகசபை கோயில்பிரகாரங்கள், தீபஸ்தம்பம், நடராசர் சன்னதி, அம்மன் சன்னதி. உள்பிரகார வழிநெடுகிலும் மற்றும் தெப்பக்குளம் உள்ளிட்ட கோவில் வளாகம் முழுவதும், லிங்க வடிவம், நந்தி வடிவம் விளக்கு , வேல் உள்ளிட்ட பலவடிவங்களில் தீபம் பிரகாசித்து ஒளிர்ந்தது பக்தர்களை மிகவும் கவர்ந்தது.

    லட்சத்து எட்டு தீப திருவிழாவை காண அவினாசி,தெக்கலூர், கருவலூர், பழங்கரை, சேவூர், அன்னூர், திருமுருகன்பூண்டி, திருப்பூர், உள்ளிட்ட பகுதிகளிலிருந்து திரளான பக்தர்கள் திரண்டனர்.முன்னதாக கோவை கவுமார மடாலய ஆதினம் குமரகுருபர சுவாமிகள் தீபம் ஏற்றும் நிகழ்ச்சியை தொடங்கிவைத்தார்.இதையடுத்து கோவில் முன் | உள்ள தீபஸ்தம்பத்தில் கோவில் அர்ச்சகர் தீபம் ஏற்றிவைத்தார்.

    • குமாரபாளையத்தில் நவராத்திரி விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
    • நவராத்திரி விழாவின் 5-வது நாள் மற்றும் வெள்ளிகிழமையை யொட்டி காளியம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனை நடைபெற்றது.

    குமாரபாளையம்:

    குமாரபாளையத்தில் நவராத்திரி விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது.முதலியார் தெரு பெரிய மாரியம்மன் கோவிலில் நவராத்திரி கொலு பொம்மைகள் வைக்கப்பட்டுள்ளன. நவராத்திரி விழாவின் 5-வது நாள் மற்றும் வெள்ளிகிழமையை யொட்டி குமாரபாளையம் காளியம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனை நடைபெற்றது.

    இதே போல் அம்மன் நகர் எல்லை மாரியம்மன் கோவில், சேலம் சாலை மற்றும் ராஜா வீதி சவுண்டம்மன் கோவில்கள், அங்காளம்மன் கோவில்கள், மாரியம்மன் கோவில்கள், திருவள்ளுவர் நகர் மங்களாம்பிகை கோவில், அக்ரஹாரம் காசி விஸ்வேஸ்வரர் கோவில், பட்டத்தரசியம்மன் கோவில், கள்ளிப்பாளையம் மாரியம்மன், காளியம்மன் கோவில், பண்ணாரி மற்றும் சமயபுரம் மாரியம்மன் கோவில்களில் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடத்தப்பட்டன.

    குமாரபாளையம் காசி விஸ்வேஸ்வரர் கோவில், பட்டத்தரசியம்மன் கோவில், முதலியார் தெரு பெரிய மாரியம்மன் கோவில் ஆகிய கோவில்களில் திருவிளக்கு வழிபாடு நடைபெற்றது. இந்த பூஜையில் பெண்கள் பெருமளவில் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    ×