என் மலர்
நீங்கள் தேடியது "license"
- தொழிற்சாலை சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டு உள்ள அனைத்து தொழிற்–சாலைகளும் தொழிற்சாலை உரிமத்தை ஆன்லைன் மூலம் மட்டுமே புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.
- http://dish.tn.gov.in என்ற இணையதள முகவரி வழியாக வருகிற 31-ந் தேதிக்குள்
சேலம்:
தொழிற்சாலை சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டு உள்ள அனைத்து தொழிற்–சாலைகளும் 2023-ம் ஆண்டிற்கான தொழிற்சாலை உரிமத்தை ஆன்லைன் மூலம் மட்டுமே புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.
தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம் ஆகிய மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலை சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டு உள்ள தொழிற்சாலைகள் http://dish.tn.gov.in என்ற இணையதள முகவரி வழியாக வருகிற 31-ந் தேதிக்குள் உரிய உரிமத் தொகையை ஆன்லைன் மூலம் செலுத்தி விண்ணப்பத்தை சமர்பித்து, புதுப்பிக்கப்பட்ட உரிமத்தை தரவிறக்கம் செய்து கொள்ள–லாம் என ஓசூர் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குனர் சபீனா தெரிவித்துள்ளார்.
- நெல்லை மாநகர பகுதியில் 4,052 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
- விதிமுறைகளை மீறிய 563 வாகன ஓட்டிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
நெல்லை:
நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் பதவியேற்றது முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்.
சாலை விதிகளை பின்பற்றாமல் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு கடுமையான அபராதம் விதிப்பதுடன் அந்த வாகன ஓட்டுனர்களின் உரிமத்தையும் ரத்து செய்து வருகிறார்.
இதுதொடர்பாக கமிஷனர் ராஜேந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
உரிமம் ரத்து
கடந்த ஆண்டு அதிவேகமாக வாகனத்தை ஓட்டுதல், மதுபோதையில் வாகனம் ஓட்டுதல், செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டுதல், சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றிச்செல்லுதல், அதிக அளவில் சரக்குகள் ஏற்றிச்செல்லுதல் ஆகிய குற்றங்களின் கீழ் நெல்லை மாநகர பகுதியில் 4,052 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் அவர்களது ஓட்டுனர் உரிமம் ரத்து செய்ய வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு பரிந்துரை செய்தேன். அதன்பேரில் அவர்களது உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு பிப்ரவரி 10-ந் தேதி வரை விதிமுறைகளை மீறிய வாகன ஓட்டிகள் 563 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதேபோல் இருசக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணியாமல் சென்ற 1,665 பேர் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்களது ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்ய வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- தட்டைபயறு, கொள்ளு, சூரியகாந்தி மற்றும் காய்கறி விதைகள் விவசாயிகளுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
- ஈரோடு விதை ஆய்வு துணை இயக்குனர் அலுவலகத்தில் சமர்பிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
தாராபுரம்:
தாராபுரம், மூலனூர், குண்டடம் பகுதிகளில் உரிமம் பெறாமல் பயிறு வகைகள் மற்றும் காய்கறி விதைகள் விற்றால் விதை விற்பனை செய்த உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என விதை ஆய்வு துணை இயக்குனர் பெ.சுமதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
திருப்பூர் மாவட்டம், தாராபு–ரம், மூலனூர், குண்டடம் வட்டாரத்தில் விதை விற்பனை உரிமம் பெற்ற 198 அரசு மற்றும் தனியார் விதை விற்பனை நிலையங்கள் உள்ளது. உரிமம் பெற்ற விற்பனை நிலையங்கள் மூலம் நெல், சோளம், மக்காச்சோளம், கம்பு, நிலக்கடலை, உளுந்து, பாசிபயறு, தட்டைபயறு, கொள்ளு, சூரியகாந்தி மற்றும் காய்கறி விதைகள் விவசாயிகளுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
விவசாயிகள் விதைகளை விதை விற்பனை உரிமம் பெற்ற விற்பனை நிலையங்களில் வாங்கும்போது தவறாமல் அதற்கான விற்பனை பட்டியலை உரிய பட்டியலில் நாள், ரகம், குவியல் எண், காலாவதி நாள் குறிப்பிட்டு தருமாறு கோரி விதை வாங்குபவரின் கையொப்பம் இட்ட விற்பனை பட்டியல் பெறப்படவேண்டும். மேலும் விதை விற்பனை உரிமம் பெறாத தானிய மண்டிகளில் விதைகளை வாங்க வேண்டாம்.மேலும் விதை உரிமம் பெறாமல் விதைகள் மற்றும் காய்கறி நாற்றுக்கள் விற்பனை செய்வது சட்டபடி குற்றமாகும். அவ்வாறு உரிமம் இல்லாமல் விதைகளை விற்ற நிறுவனத்தின் மீது விதைகள் சட்டத்தின் படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
விதை உரிமம் விதை கட்டுப்பாட்டு ஆணை 1983-ன் கீழ் தகுதி உடைய விண்ணப்பதாரர்களுக்கு உரிமம் வழங்கப்பட்டு வருகிறது. விதை விற்பனை செய்ய விரும்பு–வர்கள் படிவம் அ, உரிய கட்டணமாக ரூ.1000-க்கான சலான், ஆதார் நகல். வாடகை கட்டிடம் எனில் வாடகை ஒப்பந்த பத்திரம், இடத்தின் வரைபடம், 2 பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் மற்றும் சுயவிவரங்களுடன் ஈரோடு விதை ஆய்வு துணை இயக்குனர் அலுவலகத்தில் சமர்பிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
- வாகன ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
- வாகனத்தின் உரிமத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
சுவாமிமலை:
கும்பகோணம் உட்கோட்ட போலீசார் சார்பில் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-
தஞ்சை மாவட்டத்தில் தற்போது விவசாய அறுவடை பணிகள் நடைபெற்று வருகிறது.
சிலர் விதிகளை மீறி அளவுக்கு அதிகமாகவும், அதிக உயரமாகவும் வைக்கோலை ஏற்றிச்செல்கின்றனர்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு திருப்புறம்பியம் பகுதியில் அதிக உயரத்தில் வைக்கோல் ஏற்றிச்சென்ற லாரி மின்கம்பியில் உரசி தீப்பற்றி எரிந்து சேதமானது. இதற்கு வாகனத்தில் அதிக உயரத்தில் வைக்கோலை ஏற்றிச்சென்றதே காரணம் ஆகும்.
எனவே, இது போன்று அதிக பாரம் மற்றும் உயரத்தில் வைக்கோல் ஏற்றிச்செல்லும் வாகனங்கள் பிடிபட்டால் வாகனங்களை பறிமுதல் செய்வதோடு மட்டுமல்லாமல் சம்மந்தப்பட்ட வாகன ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
மேலும் வாகனத்தின் உரிமத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- விதை விவர அட்டை இல்லாமல் விற்பனை செய்யப்படும் விதைகளை விவசாயிகள் வாங்க வேண்டாம்.
- உரிமம் பெறாமல் விதைகளை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சுஜாதாபாய் தெரிவித்துள்ளார்.
நெல்லை:
நெல்லை விதை ஆய்வு துணை இயக்குனர் சுஜாதாபாய் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-
நெல்லை, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் உரிமம் பெறாமலும், விற்பனை பட்டியல் இல்லாமலும். விதை விவர அட்டை இல்லாமலும் விற்பனை செய்யப்படும் விதைகளை விவசாயிகள் வாங்க வேண்டாம். ஒவ்வொரு அரசு மற்றும் தனியார் விதை உற்பத்தியாளர் தாங்கள் விற்கும் புதிய ரக விதை களுக்கு சான்று பெற்றிருக்க வேண்டும். மேலும், பதிவு எண் மற்றும் முளைப்புத் திறன் அறிக்கை இல்லாமல் விற்பனை செய்தால் விதைச் சட்டம் 1966 மற்றும் விதைகள் கட்டுப்பாட்டு ஆணை 1983-ன்படி நடவடிக்கை எடுக்கப்படும். விவசாயிகள் தாங்கள் விதைகளை வாங்கும்போது விதைச் சட்டம் 1966-ல் குறிப்பிட்ட 14 காரணிகளும் விவர அட்டையில் குறிப்பிடப்ப ட்டுள்ளதா? என்பதை உறுதி செய்த பின்னரே வாங்க வேண்டும்.
மேலும். உரிமம் பெறாமல் விதைகளை விற்பனை செய்தாலோ, விற்பனை பட்டியல் இல்லாமல் விற்பனை செய்தாலோ சம்மந்தப்பட்ட விற்பனையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதனால் தகுந்த உரிமம் பெறாமல் அல்லது உரிமம் புதுப்பிக்கா மல் விற்பனை செய்து வரும் நிறுவனங்கள் தங்கள் பகுதியில் உள்ள விதை ஆய்வாளர்களை அணுகி seedcertificationtn.gov.in என்ற வலைதள முகவரியில் முறையாக விண்ணப்பித்து பதிவு கட்டணம் செலுத்தி, உரிமம் பெற்று விற்பனை செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
இதற்கிைடயே நெல்லை விதை ஆய்வு துணை இயக்குனர் சுஜாதாபாய் வெளி யிட்டுள்ள மற்றொரு செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-
நெல்லை மாவட்டத்தில் பாப்பாக்குடி வட்டாரத்தி லும், தென்காசி மாவ ட்டத்தில் கடையம் மற்றும் கடையநல்லூர் வட்டாரத்திலும் கோடை நெல் சாகுபடியும், மாவட்டத்தின் பிற பகுதிகளில் உளுந்து, பருத்தி மற்றும் காய்கறி பயிர்கள் சாகுபடியும் மேற்கொள்ள விவசாயிகள் தற்போது தயாராகி வருகின்றனர். தரமான விதைகளை பயன்படுத்துவதால் 15 முதல் 20 சதவீதம் மகசூல் அதிகரிக்கும். எனவே விதை வாங்கும் விவசாயிகள் கீழ்கண்ட அறிவுரைகளை தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும்.
விதைச்சான்றுத்துறை மூலம் விதை விற்பனை உரிமம் பெற்ற விற்பனை யாளரிடம் இருந்து மட்டுமே விதைகள் வாங்க வேண்டும். விதைக்குரிய விற்பனை பட்டியலை விற்பனையாளரிடம் கேட்டு வாங்க வேண்டும். விற்பனை ரசீதில் விற்பனையாளர் மற்றும் வாங்கும் விவசாயி கையொப்பம் இட வேண்டும்.
ஒன்றுக்கு மேற்பட்ட ரகங்களை பயிர் செய்யு ம்போது விதை சிப்பங்களை தனித்தனியே ஊற வைக்க வேண்டும். வேளாண் விரிவாக்க மையங்கள் மற்றும் உரிமம் பெற்ற தனியார் விற்பனை நிலையங்களில் ஏற்கனவே விநியோகி க்கப்பட்ட மற்றும் தற்சமயம் இருப்பில் உள்ள விதைகளின் மாதிரிகள் எடுக்கப்பட்டு அவற்றின் தரம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. எனவே விவசா யிகள் தரமான விதைகளை பயன்படுத்தி அதிக மகசூல் பெற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டுவது, போதையில் வாகனம் ஓட்டுவது போன்ற செயல்களில் ஈடுபடுவோருக்கு 6 மாதம் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படுகிறது.
- போதையில் வாகனம் ஓட்டியவர்களுக்கு ரூ.10 ஆயிரமும், ெஹல்மெட் அணியாத வாகன ஓட்டிகளுக்கு ரூ.1000 அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது.
சேலம்:
தமிழகத்தில் வாகன விபத்துக்களை குறைக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டுவது, போதையில் வாகனம் ஓட்டுவது போன்ற செயல்களில் ஈடுபடுவோருக்கு 6 மாதம் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படுகிறது. போதையில் வாகனம் ஓட்டியவர்களுக்கு ரூ.10 ஆயிரமும், ெஹல்மெட் அணியாத வாகன ஓட்டிகளுக்கு ரூ.1000 அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது.
சேலம் சரகத்தில் கடந்த மாதத்தில் அதிவேகமாக வாகனம் ஓட்டிய 49 பேர், அதிகபாரம் ஏற்றி வந்த 9 டிரைவர்கள், சரக்கு வாகனத்தில் ஆட்களை ஏற்றி வந்த 19 டிரைவர்கள், சிக்னலை மீறிய 57 பேர், செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டிய 45 பேர் உள்ளிட்ட 216 பேரின் லைசென்சை ரத்து செய்ய, வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்கு போலீசார் பரிந்துரை செய்தனர்.
அதன்படி போதையில் வாகனம் ஓட்டிய 216 பேரின் லைசென்ஸ் 3 மாதங்களுக்கு தற்காலிமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
- மேலூர் நகராட்சி பகுதியில் உரிமம் பெறாத கழிவு நீர் அகற்றும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என ஆணையாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
- வாகனங்களை பறிமுதல் செய்வதோடு அவர்கள் மீது வழக்கு தொடரப்படும்
மேலூர்
மேலூர் நகராட்சி பகுதிகளில் உள்ள வீடுகள் மற்றும் தனியார் கட்டிடங்களில் உள்ள மனித கழிவு நீர் தொட்டிகளில் இருந்து கழிவுகளை அகற்றும் வாகனங்கள் உடனடியாக உரிமம் பெற வேண்டும் என்று நகராட்சி ஆணையாளர் ஆறுமுகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளார்.
கழிவுநீர் அகற்றும் வாகனங்களில் அரசு விதிப்படி போதிய பாதுகாப்பு அமைப்புகள் செய்திருக்க வேண்டும்.தகுந்த ஆவணங்களுடன் வாகன உரிமையாளர்கள் ரூ.2 ஆயிரம் கட்டணத்துடன் நகராட்சியில் விண்ணப்பித்து 2 ஆண்டுகள் செல்லத்தக்க உரிமத்தை பெற்றுக் கொள்ளலாம்.
அவ்வாறு உரிமம் பெறாத கழிவுநீர் அகற்றும் வாகனங்களை பறிமுதல் செய்வதோடு அவர்கள் மீது வழக்கும் தொடரப்படும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
- விதை விற்பனை உரிமம் பெறாத தானிய மண்டிகளில் விதைகளை வாங்க வேண்டாம்.
- உரிமம் பெறாமல் விதைகள் மற்றும் காய்கறி நாற்றுகள் விற்பனை செய்வது சட்டப்படி குற்றமாகும்.
காங்கயம்:
காங்கயம் பகுதிகளில் உரிமம் பெறாமல் பயிறு வகைகள், சோளம் விதைகள், காய்கறி விதைகளை விற்றால் விற்பனை செய்தவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து விதை ஆய்வு துணை இயக்குநா் பெ.சுமதி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-
திருப்பூா் மாவட்டம், வெள்ளகோவில் மற்றும் காங்கயம் வட்டாரங்களில் விதை விற்பனை உரிமம் பெற்ற 34 அரசு மற்றும் தனியாா் விதை விற்பனை நிலையங்கள் உள்ளன. உரிமம் பெற்ற விற்பனை நிலையங்கள் மூலம் நெல், சோளம், மக்காச்சோளம், பயிறு வகைகள், நிலக்கடலை, எள், சூரிய காந்தி மற்றும் காய்கறி விதைகள் விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
விவசாயிகள் உரிமம் பெற்ற விற்பனை நிலையங்களில் விதைகளை வாங்கும்போது தவறாமல் அதற்கான விற்பனைப் பட்டியலை கேட்டு வாங்க வேண்டும். அதில் விதை குவியல் எண், காலாவதி நாள், விற்பனை செய்த நாள், வாங்குபவா் மற்றும் விற்பனை செய்பவரின் கையொப்பம் போன்ற விவரங்கள் உள்ளதா என சரி பாா்த்து வாங்க வேண்டும்.
விதை விற்பனை உரிமம் பெறாத தானிய மண்டிகளில் விதைகளை வாங்க வேண்டாம். திறந்த நிலையில் சாக்குகளில் வைத்து விற்பனை செய்யும் விதைகளை வாங்கக்கூடாது. உரிமம் பெறாமல் விதைகள் மற்றும் காய்கறி நாற்றுகள் விற்பனை செய்வது சட்டப்படி குற்றமாகும். அவ்வாறு உரிமம் இல்லாமல் விதைகள் மற்றும் நாற்றுகள் விற்றால் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் மீது விதைகள் சட்டம் 1966இன் படி சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளாா்.
- கட–லூ–ரில், வாகன நிறுத்–தம், கழி–வ–றைக்கு கூடு–தல் கட்–ட–ணம் வசூ–லித்–தால் உரி–மம் ரத்து செய்–யப்–படும் என்று மாந–க–ராட்சி மேயர் சுந்–தரி ராஜா எச்–ச–ரிக்கை விடுத்–துள்–ளார்.
- குத்–த–கை–தா–ரர் அதிக கட்–ட–ணம் செலுத்த கேட்–டால், மாந–க–ராட்–சிக்கு உட–ன–டி–யாக புகார் தெரி–விக்–க–லாம். இதை மீறி யாரே–னும் கூடு–தல் கட்–ட–ணம் வசூ–லித்–தால், குத்–தகை உரி–மம் ரத்து செய்–யப்–படும்.
கட–லூர்:
கட–லூ–ரில், வாகன நிறுத்–தம், கழி–வ–றைக்கு கூடு–தல் கட்–ட–ணம் வசூ–லித்–தால் உரி–மம் ரத்து செய்–யப்–படும் என்று மாந–க–ராட்சி மேயர் சுந்–தரி ராஜா எச்–ச–ரிக்கை விடுத்–துள்–ளார்.
கட–லூர் மாந–க–ராட்–சிக்–குட்–பட்ட பகு–தி–களில் செயல்–படும் கட்–டண கழி–வறை, வாகன நிறுத்–து–மி–டங்–கள், பூங்கா நுழைவு கட்–ட–ணம், வாக–னங்–களில் கொண்டு வந்து பொருட்–களை விற்–பனை செய்–தல், சாலையோரங்–களில் தரைக்–கடை வைத்து விற்–பனை செய்–வ–தற்கு குத்–தகை தொடர்–பான கட்–ட–ணங்–கள் ஏற்–க–னவே நிர்–ண–யம் செய்–யப்–பட்–டுள்ளது. இருப்–பி–னும் இதை மீறி சில இடங்–களில் குத்–த–கை–தாரர்–கள் பொது–மக்–க–ளி–டம் அதிக கட்–ட–ணம் வசூ–லிப்–பதாக பல்–வேறு புகார்–கள் வந்த வண்–ணம் உள்–ளது. இது பற்றி மாந–க–ராட்சி மேயர் சுந்–தரி ராஜா, ஆணை–யா–ளர் கிருஷ்–ண–மூர்த்தி ஆகி–யோர் வெளி–யிட்–டுள்ள செய்–திக்கு–றிப்–பில் கூறி–யி–ருப்–ப–தா–வது:-
கட–லூர் மாந–க–ராட்சி பகு–தி–யில் கட்–டண கழி–வ–றை–யில் சிறு–நீர் கழிக்க ஒரு நப–ருக்கு 1 தடவை ரூ.2, மல அறையை பயன்–ப–டுத்த ரூ.3, குளி–யல் அறையை உபயோ–கிக்க ரூ.5, கட–லூர் சில்–வர் பீச்–சில் இரு சக்–கர வாக–னத்தை நிறுத்த ரூ.3, ஆட்டோ, கார், ஜீப் போன்ற இலகு ரக வாக–னங்–க–ளுக்கு ரூ.5, வேன், பஸ்–க–ளுக்கு ரூ.10, சுப்–பு–ரா–ய–லு–ந–கர் பூங்கா நுழைவு கட்–ட–ணம் ரூ.5, விளை–யாட்டு உப–க–ரணங்–களை பயன்–ப–டுத்த 7 வயது வரை உள்ள சிறு–வர், சிறு–மி–க–ளுக்கு 15 நிமி–டங்–க–ளுக்கு நபர் ஒரு–வ–ருக்கு ரூ.5 கட்–ட–ணம் நிர்–ண–யம் செய்–யப்–பட்–டுள்–ளது.
கட–லூர் மாந–க–ராட்சி எல்லைபகு–திக்–குள் வாக–னங்–கள் மூலம் பொருட்–கள் கொண்டு வந்து விற்–பனை செய்–வ–தற்கு, லாரி மற்–றும் வேன்–களில் கொண்டு வந்து விற்–பனை செய்–வ–தற்கு நாள் 1-க்கு 30, மூன்று சக்–கர ரிக்ஷா, இரு சக்–கர வாக–னத்–தில் பொருட்–கள் விற்–பனை செய்ய ரூ.10, நான்கு சக்–கர வாக–னத்–தில் பொருட்–கள் விற்–பனை செய்ய ரூ.10, சைக்–கி–ளில் கொண்டு வந்து விற்–பனைசெய்ய ரூ.10 கட்–ட–ணம் நிர்–ண–யம் செய்–யப்–பட்–டுள்–ளது.
உரி–மம் ரத்து
சாலையோரங்–களில் கடை வைத்து தயிர், மோர், கீரை கூடை–களில் வைத்து வியா–பா–ரம் செய்ய கூடை ஒன்–றுக்கு ரூ.5, குறைந்–த–பட்ச இடத்–தில் வைத்து வியா–பா–ரம் செய்யரூ.10, ரூ.15 கட்–ட–ணம் வசூ–லிக்–கப்–ப–டு–கிறது.
ஆகவே மாந–க–ராட்–சி–யால் நிர்–ண–யிக்–கப்–பட்ட கட்–ட–ணங்–களை செலுத்–து–மாறு பொது–மக்–கள் கேட்–டுக் கொள்–ளப்–படுகிறார்கள். குத்–த–கை–தா–ரர் அதிக கட்–ட–ணம் செலுத்த கேட்–டால், மாந–க–ராட்–சிக்கு உட–ன–டி–யாக புகார் தெரி–விக்–க–லாம். இதை மீறி யாரே–னும் கூடு–தல் கட்–ட–ணம் வசூ–லித்–தால், குத்–தகை உரி–மம் ரத்து செய்–யப்–படும். இவ்–வாறு அவர்– தெரிவித்துள்ளார்.
- செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டுவது, போதையில் வாகனம் ஓட்டுவது உள்ளிட்ட விதிகளை மீறுவோருக்கு 3 மாதங்கள் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்டு வருகிறது.
- சாலை விபத்தில் உயிரிழப்பை ஏற்படுத்திய 112 பேரின் லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டுள்ளது.
சேலம்:
வாகன விபத்துக்களை குறைப்பதற்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. சாலை விபத்துக்களை தடுக்கும் வகையில் அதிவேகமாக வாகனம் ஓட்டுவது, சிவப்பு விளக்கு மீறுவது, அதிக பாரம் ஏற்றுவது, சரக்கு வாகனத்தில் பொதுமக்களை ஏற்றுவது போன்ற சாலை விதிமீறல்களில் ஈடுபடுவோருக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.
மேலும் செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டுவது, போதையில் வாகனம் ஓட்டுவது உள்ளிட்ட விதிகளை மீறுவோருக்கு 3 மாதங்கள் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் சேலம், தருமபுரியில் கடந்த 4 மாதத்தில் மட்டும் சாலை விபத்தில் உயிரிழப்பை ஏற்படுத்திய 112 பேரின் லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர்.
- மாற்றுத்திறனாளி ஆப்ரேட்டர்கள் 12 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- விண்ணப்பிக்கும் மாற்றுத்திறனாளிக்கு உரிமம் வழங்கப்பட்டு பயிற்சி அளிக்கப்படும்.
திருவாரூர்:
திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிப்பதாவது:-
தமிழ்நாடு அரசு கிராமந்தோறும் தனியார் இ சேவை மையம் அமைக்க உரிமம் வழங்கும் திட்டத்தின்கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கு முனனுரிமை வழங்கி அவர்களின் வாழ்வாதாரம் பெருக்கி கொள்ள உதவிடும் வகையில் மாற்றுத்திறனாளிகளுக்கு தனியார் இ-சேவை மையம் உரிமம் இயக்குவதற்கு வழங்கப்படவுள்ளது.
அரசு விதிகளின்படி திருவாரூர் மாவட்டத்திலுள்ள மாற்றுத்திறனாளிகள் ; https://tnesevai.in.gov.in மற்றும் http://tnega.tn.gov.in. என்ற இணையதளங்களில் விண்ணப்பிக்குமாறு கோரப்படுகிறது.
விண்ணப்பிக்க விரும்பும் மாற்றுத்திற னாளி ஆப்ரேட்டர்கள் 12 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், கணிணியில் நல்ல அறிவும் தமிழ் மற்றும் ஆங்கிலம் மொழியை படிக்கவும் எழுதவும் தெரிந்திருக்கவேண்டும்.
இ-சேவை மைய கட்டிடம் 100 சதுர மீட்டருக்குள் இருக்கவும், மையத்தில் கணிணி, பிரிண்டர், ஸ்கேனர் மற்றும் பயோமெட்ரிக் உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகள் இருத்தல் அவசியமாகும்.
குறைந்த பட்சம் 2 எம்பிபிஎஸ் அலைவரி சையுடன் தொடர்ச்சியான மற்றும் தடையற்ற இணைய இணைப்பை உறுதி செய்யவேண்டும், தமிழ்நாடு மின்ஆளுமை முகமையால் ஏற்றுக்கொள்ளப்பட்ட இடத்தில் மையம் அமைக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் மாற்றுத்திறனாளிகள் தமிழ்நாடு மின் ஆளுமை முகமை வருவாய் பகிர்வு முறையின் விதிகளின்படி இயக்குதல் வேண்டும் என தகுதிகளாக தெரிவிக்கப்ப டுகிறது.
தேர்வு செய்யப்பட்டு உரிமம் வழங்கப்படும் மாற்று த்திறனாளி ஆபரேட்டர்க ளுக்கு ஐனு எண் வழங்கப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டு மையம் அமைக்க உரிமம் வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
படித்த கணிணி பயிற்சி பெற்றுள்ள மாற்றுத்திறனாளிகள் தனியார் இ-சேவை மையம் வைத்து வருமானம் ஈட்டிக்கொள்ள https://tnesevai.in.gov.in மற்றும் http://tnega.tn.gov.in என்ற இணையதளங்களில் விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- லைசென்ஸ் பெறுவதற்கு தினமும் ஆயிரக்கணக்கானோர் குவிந்து வருகின்றனர்.
- சென்னையில் அண்ணாநகர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லைசென்சுக்கு வரும் பொதுமக்களின் எண்ணிக்கை அதிகம்.
சென்னை:
தமிழகம் முழுவதும் 145 வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் உள்ளன. இதில் சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 14 போக்குவரத்து அலுவலகங்கள் உள்ளன.
இங்கு கார் மற்றும் கனரக வாகனங்கள், இரு சக்கர வாகனங்களுக்கு லைசென்ஸ் பெறுவதற்கு தினமும் ஆயிரக்கணக்கானோர் குவிந்து வருகின்றனர்.
தினமும் ஒவ்வொரு அலுவலகத்திலும் சுமார் 100 பேர் லைசென்ஸ் பெற விண்ணப்பம் செய்து வந்தனர். இந்த நிலையில் ஆன்லைன் முறை கொண்டு வரப்பட்டு இதற்கான ஒதுக்கீடு நாள் ஒன்றுக்கு 50 ஆக குறைக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகின்றன.
இதற்கான பணியினை நிக் என்ற நிறுவனம் எழிலகத்தில் உள்ள கன்ட்ரோல் அறையில் இருந்து செய்து வருகிறது. ஒரு நாளைக்கு காருக்கு 15 நபர்களும், இருசக்கர வாகனங்களில் கியர் வாகனங்களுக்கு 20 நபர்களும் கியர் இல்லாத வாகனங்களுக்கு 15 நபர்களும் ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது.
இதற்காக ஆன்லைனில் விண்ணப்பிக்க செல்லும் போது ரெயில் டிக்கெட் போல் காலை 6 மணிக்கே முடிந்துவிடும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் ஏற்பட்ட இந்த பாதிப்பில் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
இதுகுறித்து புகார் அதிகமாவதால் பூந்தமல்லி 80, மீனம்பாக்கம் 70 ஆகிய இடங்களில் ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டு வழங்கப்பட்டதாக தெரிகிறது. சென்னையில் அண்ணாநகர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லைசென்சுக்கு வரும் பொதுமக்களின் எண்ணிக்கை அதிகம்.
இந்த அலுவலகத்துக்குட்பட்டு 35 டிரைவிங் பயிற்சி பல்ளிகள் உள்ளன. இங்கு ஒரு நாளைக்கு 50 நபர்களுக்கே விண்ணப்பம் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் லைசென்ஸ் அப்பாயின்மெண்ட் கிடைக்காமல் ஏராளமான பொதுமக்கள் தினமும் ஏமாந்து செல்வது வாடிக்கையாகி வருகிறது.
நான் டிரைவிங் பயிற்சி பெற்று எல்.எல்.ஆருக்கு விண்ணப்பித்து அதனுடைய கால அவகாசம் வரும் செவ்வாய் கிழமையுடன் முடிகிறது. பலமுறை ஆன்லைனில் விண்ணப்பித்தும் எனக்கு கிடைக்கவில்லை. என்னைப்போல் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சுற்றுவட்டார பகுதிகளில் சிலர் அதிக பணத்தை பெற்றுக்கொண்டு ஆன்லைனில் ஒதுக்கீடு பெற்று கொடுக்கின்றனர். இப்பிரச்சினைக்கு அரசு தீர்வு காண வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.