என் மலர்
நீங்கள் தேடியது "liquor sales"
- வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்காக ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் ஆஃபரை வழங்கியுள்ளனர்.
- இந்த ஊழல் தொடர்பாக அமலாக்கத்துறை, சிபிஐ உடனடியாக விசாரணையைத் தொடங்கும் என்று நம்புகிறேன்"
உத்தரப் பிரதேச தலைநகர் நொய்டாவில் மதுக்கடைகளில் ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என்று அறிவிக்கப்பட்ட ஆஃபர் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் உ.பி. வாழ் மதுபிரியர்கள் ஒயின் ஷாப்களுக்கு படையெடுத்து வருகின்றனர். நீண்ட வரிசையில் அவர்கள் காத்திருக்கும் வீடியோக்கள் வைரலாகி வருகின்றன. இந்த விவகாரம் உ.பி. பாஜக அரசு மீது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தி வருகிறது.
உத்தரப் பிரதேசத்தில் கலால் துறையின் நிதியாண்டு மார்ச் 31 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. விதிகளின்படி, மதுபான ஒப்பந்ததாரர்கள் தங்கள் முழு இருப்பையும் அன்றைய தினம் நள்ளிரவு 12 மணிக்குள் காலி செய்ய வேண்டும்.
இல்லையெனில் மீதமுள்ள மதுபானங்கள் அரசாங்கக் கணக்கில் சேர்க்கப்படும் மற்றும் அதன் விற்பனை தடை செய்யப்படும். இந்தக் காரணத்திற்காக, மதுபான விற்பனையாளர்கள் வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்காக ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் ஆஃபரை வழங்கியுள்ளனர்.
இந்நிலையில் வீடியோக்கள் வைரலானதை தொடர்ந்து நோய்டாவை ஒட்டியுள்ள தலைநகர் டெல்லி அரசியலிலும் இந்த விவகாரம் எதிரொலித்துள்ளது.

இந்த வீடியோவை பகிர்ந்து பதிவிட்டுள்ள டெல்லி முன்னாள் முதல்வரும், ஆம் ஆத்மியின் முக்கிய தலைவருமான அதிஷி, "நீங்கள் ஒரு பாட்டில் இலவச மதுபானத்தைப் வழங்குகிறீரங்கள்… இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க இப்போது பாஜகவினர் வருவார்கள் என நம்புகிறேன். இந்த ஊழல் தொடர்பாக அமலாக்கத்துறை, சிபிஐ உடனடியாக விசாரணையைத் தொடங்கும் என்று நம்புகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.
டெல்லி மதுபான கொள்கை வழக்கில் ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு 6 மாதம் வரை சிறையில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
- சமீபகாலமாக அனைத்து பண்டிகை கால கொண்டாட்டங்களில் மதுபானம் முக்கிய இடம் பிடித்து வருகிறது.
- அதற்கு ஏற்றாற்போல், அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் கூடுதலாக மதுபான பாட்டில்கள் இருப்பு வைக்கப்படுகிறது.
நாமக்கல்:
சமீபகாலமாக அனைத்து பண்டிகை கால கொண்டாட்டங்களில் மதுபானம் முக்கிய இடம் பிடித்து வருகிறது. அதன் காரணமாக பண்டிகை, விடுமுறை நாட்களில், மதுபான விற்பனை அதிகரிப்பது வழக்கமாகி உள்ளது. அதற்கு ஏற்றாற்போல், அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் கூடுதலாக மதுபான பாட்டில்கள் இருப்பு வைக்கப்படுகிறது.
நாமக்கல் மாவட்டத்தில் மொத்தம் 188 டாஸ்மாக் மதுபான கடைகள் இயங்கி வருகின்றன. இந்த கடைகளில் கடந்த 14-ம் தேதி மற்றும் 15-ம் தேதி ஆகிய 2 நாட்கள் மதுபான விற்பனை அமோகமாக நடந்தது. பெரும்பாலான கடைகளில் மது பிரியர்கள் வரிசையில் காத்திருந்து மதுபானங்களை வாங்கிச் சென்றனர். இந்த 2 நாட்களில் மட்டும் ரூ.12 கோடிக்கு மதுபான வகைகள் விற்பனையாகி உள்ளன.
இதுகுறித்து, டாஸ்மாக் அதிகாரிகள் கூறியதாவது:-
நாமக்கல் மாவட்டத்தில் சாதாரண நாட்களில், ரூ.3 கோடி முதல் ரூ.3.5 கோடிக்கு மதுபான வகைகள் விற்பனையாகும். ஆனால், கடந்த 14-ம் தேதி ரூ.6.5 கோடிக்கும், 15-ம் தேதி ரூ.5.5 கோடிக்கும் மதுபான வகைகள் விற்பனையாகி உள்ளன. காணும் பொங்கலை முன்னிட்டு நேற்றும் அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் மதுவிற்பனை சூடுபிடித்தது. கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி 2 நாட்கள் ரூ.11.5 கோடிக்கு மதுபான விற்பனையானது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
- மதுவிற்பனையில் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக உள்ளது என்று நீதிபதிகளே குற்றம் கூறும் அளவிற்கு தமிழ்நாட்டில் நாள்தோறும் மிகப்பெரிய சமூக அவலம் நிகழ்கிறது.
- தமிழ்நாட்டில் நடைபெறும் அனைத்து சமூகக் குற்றங்களுக்கும் அடிப்படையாக இருப்பது அரசு நடத்துகின்ற மதுக்கடைகள்தான்.
சென்னை:
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
அரசு நடத்துகின்ற மதுக்கடைகள் 24 மணி நேரமும் இயங்குவதாக உயர்நீதிமன்றமே கண்டிக்கும் அளவிற்கு தமிழ்நாட்டின் நிலைமை மோசமாகியுள்ளது மிகுந்த மனவேதனை அளிக்கிறது. ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கை கொண்டுவருவோம் என்று கடந்த காலங்களில் கூறிய திமுக, தற்போது 24 மணி நேரமும் மதுவிற்பனையில் ஈடுபட்டு வருவது வெட்கக்கேடானது.
மதுரை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொதுநல வழக்கொன்றில் மதுக்கடைகள் மதியம் 12 மணி முதல் இரவு 10 மணிவரை மட்டுமே திறந்திருக்கும் என்று அரசு அறிவித்திருந்த போதிலும் உண்மையில் தமிழ்நாட்டில் 24 மணிநேரமும் மதுவிற்பனை
நடைபெறுவதாக கூறப்பட்ட குற்றச்சாட்டை தமிழ்நாடு அரசு மறுக்காதது அதிர்ச்சியளிக்கிறது.
அதுமட்டுமின்றி டாஸ்மாக் பார்கள் இரவு 10 மணிக்கே மூடப்படுவதால், நள்ளிரவில் குடிப்பவர்கள் பொது இடங்களிலும், சாலையோரங்களிலும் அமர்ந்து குடிப்பதாகவும் அதனை தடுத்து பொதுமக்கள் நலன்காக்க பார்களை 24 மணிநேரமும் திறந்து வைக்க வேண்டுமென்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள மற்றுமொரு வழக்கில், பார்களை 24 மணிநேரமும் திறக்க பரிசீலிப்பதாக டாஸ்மாக் நிர்வாகம் கூறியுள்ளது மேலும் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது.
மதுவிற்பனையில் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக உள்ளது என்று நீதிபதிகளே குற்றம் கூறும் அளவிற்கு தமிழ்நாட்டில் நாள்தோறும் மிகப்பெரிய சமூக அவலம் நிகழ்கிறது. மாணவர்களுக்கு மது விற்பனை செய்யப்படாமல் தடுப்பதற்கு அரசு என்ன நடவடிக்கைகள் எடுத்துள்ளது என்ற நீதியரசர்களின் கேள்விக்கும் தமிழ்நாடு அரசிடம் உரிய பதில் இல்லை என்பதுதான் பெருங்கொடுமை. அதிகாலை 6 மணிக்கே மதுக்கடைகளில் அலைமோதும் மக்கள் கூட்டத்தை காண்பது, சாதாரண காட்சியாக கடந்துபோக முடியவில்லை. பள்ளிக் கல்லூரி மாணவர்களும், மாணவியர்களும் குடித்துவிட்டு சீருடையுடன் போதையில் தள்ளாடும் காணொளிகள் தமிழ்நாடு எந்த அளவுக்கு சீரழிந்துக்கொண்டிருக்கிறது என்பதை வெளிப்படுத்துகிறது.
இலக்கு வைத்து 24 மணி நேரமும் முழுவீச்சில் மதுவிற்பனை நடைபெறும் மாநிலத்தில் பெண்கள் எப்படி பாதுகாப்பாக வாழ முடியும்? தமிழ்நாட்டில் நடைபெறும் அனைத்து சமூகக் குற்றங்களுக்கும் அடிப்படையாக இருப்பது அரசு நடத்துகின்ற மதுக்கடைகள்தான். குடும்பங்கள் சீரழியவும், குழந்தைகளின் கல்வி தடைபடவும், இளம்விதவைகள் உருவாகவும் மதுக்கடைகள்தான் காரணமாகவுள்ளது.
ஆனால், இளைய தலைமுறை அழிந்தாலும் பரவாயில்லை, தமிழ்க் குடும்பங்கள் சிதைந்தாலும் பரவாயில்லை அரசின் வருவாய் மட்டுமே முக்கியம் என்று திமுக அரசு நினைப்பது, அண்ணா அவர்கள் கூறியதுபோல் தொழுநோயாளியின் கையில் வழியும் வெண்ணெயே அன்றி வேறில்லை.
கடந்த 2016 ஆம் ஆண்டு தேர்தலின்போது ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவோம் என்று அறிவித்த திமுக, தற்போது அதுகுறித்து வாய்திறவாமல் இருப்பது ஏன்?. கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் குட்கா விற்பனை நடைபெறுவது குறித்து சட்டப்பேரவைவரை போராடிய திமுக, தமது ஆட்சிக்காலத்தில் நடைபெறும் பல்லாயிரக்கணக்கான கிலோ கஞ்சா விற்பனையை இதுவரை தடுக்காதது ஏன்? திமுக ஆட்சிக்கு வந்த பிறகு கஞ்சா விற்பனையின் தலைநகரமாக தமிழ்நாடு மாறி நிற்கிறது. குட்கா, கஞ்சா போன்றவை போதைப்பொருட்கள் என்று தெரிந்த திமுக அரசுக்கு, டாஸ்மாக்கில் விற்கப்படுவது போதைப்பொருளாக தெரியாமல் புனித தீர்த்தமாக தெரிவது ஏன்? என்ற கேள்விக்கும் இன்றுவரை பதிலில்லை.
ஆகவே, திமுக அரசு இனியாவது மக்கள் நலத்தில் அக்கறைகொண்டு மதுக்கடைகளையும், பார்களையும் 24 மணிநேரமும் இயங்கச்செய்யும் முயற்சியை கைவிட்டு, உடனடியாக மதுக்கடைகளை நிரந்தரமாக மூட வேண்டுமென்று நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.
- தமிழகத்தில் பண்டிகை காலங்களில் டாஸ்மாக் மதுபான விற்பனை அதிகளவு இருந்து வருகிறது.
- சேலம் மண்டலத்தில் 11ம் தேதி ரூ.39.78 கோடிக்கும், தீபாவளி நாளான 12ம் தேதியில்மிக அதிகபட்சமாக ரூ.46.62 கோடிக்கும் மதுபானங்கள் விற்பனையானது.
சேலம்:
தமிழகத்தில் பண்டிகை காலங்களில் டாஸ்மாக் மதுபான விற்பனை அதிகளவு இருந்து வருகிறது. நடப்பாண்டு தீபாவளியையொட்டி கூடுதல் மதுபானங்களை கொள்முதல் செய்து, டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்பட்டது. தீபாவளிக்கு முந்தைய நாளான 11ம் தேதியும், தீபாவளி நாளான 12ம் தேதியும் மனுபானங்கள் அதிகளவு விற்பனையாகியுள்ளது. தமிழகம் முழுவதும் ஒட்டு மொத்தமாக 2 நாளில் ரூ.467 கோடிக்கு மதுபானம் விற்பனையாகியுள்ளது. சேலம் மண்டலத்தை பொறுத்தமட்டில் சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய 7 மாவட்டங்களில் சுமார் 900 டாஸ்மாக் மது பான கடைகள் உள்ளன. இந்த கடைகளில் தீபாவளியையொட்டிய 2 நாட்களிலும் பிராந்தி வகைகள், பீர் வகைகளை மதுபிரியர்கள் அதிகளவு வாங்கிச் சென்றனர். இதனால், சேலம் மண்டலத்தில் 11ம் தேதி ரூ.39.78 கோடிக்கும், தீபாவளி நாளான 12ம் தேதியில்மிக அதிகபட்சமாக ரூ.46.62 கோடிக்கும் மதுபானங்கள் விற்பனையானது. 2நாளிலும் சேர்த்து, ரூ.86.40 கோடிக்கு மது பானங்கள் விற்பனையாகியுள்ளது. இது முந்தைய ஆண்டை விட அதிகம் என டாஸ்மாக் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
- 4 நாட்கள் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டது.
- ரூ.50 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது.
புதுச்சேரி:
தீபாவளி, புத்தாண்டு, பொங்கல் போன்ற பண்டிகை காலங்களில் பொதுமக்கள் புத்தாடை அணிந்து, நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடுவது வழக்கமாகும்.
இதேபோல் மது பிரியர் கள் பண்டிகை காலங்கள் என்றாலே விதவிதமான மதுபானங்களை வாங்கி நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் சேர்ந்து மதுகுடித்து கொண்டாடு வார்கள்.
புதுச்சேரி என்றாலே மதுவுக்கு பெயர் பெற்றதாகும். பிரெஞ்சு கலாசாரம் இங்கு காணப்படுவதால் பலவிதமான வெளிநாட்டு மதுபானங்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
இதற்காக வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான மது பிரியர்கள் தொடர் விடுமுறை நாட்களில் புதுவைக்கு வந்து நண்பர்களோடு மது குடித்து கும்மாளம் போடுவது வழக்கம்.
இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை புதுச்சேரி, காரைக்காலில் 5 நாட்கள் விடுமுறை விடப்பட்டது. அதாவது தீபாவளி பண்டிகைக்கு முந்தைய நாளான கடந்த 30-ந் தேதி முதல் நேற்று 3-ந் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டது.
அதுபோல் தமிழகம், ஆந்திரா, கர்நாடகம், கேரளா மற்றும் மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களிலும் 4 நாட்கள் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டது.
இந்த விடுமுறையை கொண்டாட வெளி மாநிலத்தை சேர்ந்த இளைஞர்கள், இளம் பெண்கள் அதிகளவில் புதுவையில் குவிந்தனர். இதன்காரணமாக மது விற்பனையும் படுஜோராக நடந்தது.
புதுவை, காரைக்காலில், வழக்கமான நாட்களில் நாள் ஒன்றுக்கு ரூ.4½ கோடிக்கு மது விற்பனை நடைபெறும். வார இறுதி நாட்களில் இது சற்று உயரும்.
தற்போது தொடர் விடுமுறை என்பதால் கடந்த 5 நாட்களில் புதுவை மற்றும் காரைக்காலில் மது விற்பனை 3 மடங்குக்கு மேல் உயர்ந்தது. ரூ.50 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது.
- தமிழ்நாட்டு இளைஞர்களை நிரந்தர குடிகாரர்களாக்கியது மட்டும் தான் திராவிட மாடல் அரசின் சாதனை ஆகும்.
- தமிழ்நாட்டில் மூலைக்கு மூளை கஞ்சாவும், மதுவும் தான் தாராளமாக கிடைக்கின்றன.
பொங்கல் பண்டிகையையொட்டி 3 நாட்களில் ரூ.725 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் கூறியிப்பதாவது:-
தமிழ்நாட்டில் பொங்கல் திருநாளையொட்டி, கடந்த 13, 14, 16 ஆகிய தேதிகளில் டாஸ்மாக் கடைகள் வாயிலாக மட்டும் ரூ.725 கோடிக்கு மது விற்பனையாகியிருப்பதாகவும், இது கடந்த ஆண்டின் விற்பனை அளவான ரூ.678.65 கோடியை விட ரூ.47 கோடி அதிகம் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.
இது நிச்சயம் மகிழ்ச்சியளிக்கும் செய்தி அல்ல. கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் இன்னும் அதிக குடும்பங்கள் கண்ணீர் வடித்திருக்கின்றன என்பதையே இந்த செய்தி காட்டுகிறது. ஒரு சொட்டு மது இல்லாத தமிழ்நாட்டை உருவாக்க வேண்டும் என்பது தான் மருத்துவர் அய்யா அவர்களின் நோக்கம் அதற்காகத் தான் அவர் கடந்த 45 ஆண்டுகளாக போராடி வருகிறார்.
ஆனால், தமிழ்நாட்டை ஆள்பவர்களோ, தமிழ்நாட்டில் ஒருவர் கூட மது குடிக்காதவர்களாக இருக்கக் கூடாது என்ற எண்ணத்தில், அனைவரையும் மதுவுக்கு அடிமையாக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் விளைவு தான் கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் மது வணிகம் கடுமையாக அதிகரித்திருக்கிறது.
கடந்த ஆண்டு பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.1000 வழங்கப்பட்டது. ஆனால், நடப்பாண்டில் பொங்கல் பரிசுத் தொகுப்பில் பணம் வழங்கப்படவில்லை. ஆனாலும், மது வணிகம் ரூ.47 கோடி அதிகரித்திருக்கிறது என்பதன் மூலம் மது குடிக்காமல் இருக்க முடியாது என்ற நிலையில் இருப்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்திருப்பதை புரிந்து கொள்ள முடிகிறது.
தமிழ்நாட்டு இளைஞர்களை நிரந்தர குடிகாரர்களாக்கியது மட்டும் தான் திராவிட மாடல் அரசின் சாதனை ஆகும். ஒரு புறம் போதையின் பாதையில் யாரும் போகக் கூடாது, தீமை என்று தெரிந்தும் அதை விலை கொடுத்து வாங்கலாமா? என்று ஒரு புறம் தொலைக்காட்சி விளம்பரங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் முழங்கிக் கொண்டிருக்கிறார்.
இன்னொருபுறம் பொங்கல் திருநாளில் கூட மதுக்கடைகளை திறந்து வைத்து இளைஞர்களையும், மாணவர்களையும் மதுவுக்கு அடிமையாக்கி வருகிறார். இத்தகைய இரட்டை வேடத்தை மு.க.ஸ்டாலின் அவர்களைத் தவிர வேறு எவராலும் நடிக்க முடியாது.
கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் தான் மது விற்பனை மிக அதிகமாக உயர்ந்திருக்கிறது என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன. பத்தாம் வகுப்பு. 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளின் தேர்ச்சி விகிதத்தில் இந்த மாவட்டங்கள் தான் கடைசி இடத்தில் இருக்கின்றன. அந்த மாவட்டங்களை கல்வியில் உயர்த்துவதற்கு எந்த நடவடிக்கையையும் எடுக்காத திமுக அரசு, அந்த மாவட்டங்களை மதுவில் மூழ்கடிப்பதில் தான் அதிக ஆர்வம் காட்டி வருகிறது. இதற்காக தமிழக ஆட்சியாளர்கள் வெட்கப்பட வேண்டும்.
தமிழ்நாட்டில் மூலைக்கு மூளை கஞ்சாவும், மதுவும் தான் தாராளமாக கிடைக்கின்றன. அதனால் தமிழ்நாடு சீரழிவை நோக்கி வேகமாக பயணித்துக் கொண்டிருக்கிறது. இந்த நிலையை மாற்ற தமிழ்நாட்டில் உள்ள மதுக்கடைகளை படிப்படியாக மூடி மதுவிலக்கை ஏற்படுத்த வேண்டும். கஞ்சா புழக்கத்தை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும்.
குமரி மாவட்டத்தில் அனுமதியின்றி மது விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து மது விற்பவர்களை போலீசார் கண்காணித்து வந்தனர்.
இரணியல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஞானசிகாமணி மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே வரும்போது அங்கு சந்தேகப்படும்படியாக மூதாட்டி ஒருவர் நின்று கொண்டிருந்தார்.
போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தியதில் அவர் அதே பகுதியைச் சேர்ந்த கஸ்தூரி (வயது 63) என்பதும், அந்த பகுதியில் அனுமதியின்றி மது விற்றதும், அவரிடமிருந்து 5 மதுபாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் அவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். இதேபோல் ஈத்தாமொழி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் தலைமையில் போலீசார் ரோந்து சென்றனர். அவர்கள் சம்பக்குளம் அருகே வரும்போது அங்கு அனுமதியின்றி மதுவிற்றதாக சுரேந்திரன் (39) என்பவரை கைது செய்து அவரிடமிருந்த 3 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். புதுக்கடை பகுதியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுரேந்திரன் மற்றும் போலீசார் ரோந்து வந்தனர். அவர்கள் காப்பிக்காடு சந்திப்பில் வரும்போது வாலிபர் ஒருவர் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்தார். போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தியதில் அவர், அதே பகுதியைச் சேர்ந்த ஜோஸ் (40) என்பதும், அவர் அனுமதியின்றி மது விற்றதும் தெரிய வந்தது.
இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து அவரிடமிருந்து 5 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். #tamilnews