என் மலர்
நீங்கள் தேடியது "List"
- கோரிக்கைகளை ஏற்க வேண்டிய கட்டாயத்தில் மத்திய அரசு உள்ளது.
- சந்திரபாபு நாயுடு பா.ஜ.க கூட்டணியில் சக்தி வாய்ந்த தலைவராக உள்ளார்.
திருப்பதி:
ஆந்திர மாநிலத்தில் அமராவதியை தலைநகராக்கும் திட்டத்தை சந்திரபாபு நாயுடு தொடங்கியுள்ளார். தற்போது ஆந்திர மாநிலம் நிதிச்சுமையால் திண்டாடி வருகிறது.
இந்த நிலையில் ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு நேற்று டெல்லி சென்றார். அவர் இன்று பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்பு சுமார் அரை மணி நேரம் நடந்தது. ஆந்திரா தொடர்பான பல முக்கிய பிரச்சனைகள் குறித்து இருவரும் விவாதித்ததாக தெரிகிறது.

போலாவரம், அமராவதி தலைநகர் கட்டமைப்பு பணி குறித்து சந்திரபாபு நாயுடு தெளிவாக எடுத்துக் கூறியுள்ளார். மேலும் ஆந்திராவுக்கு வரிச் சலுகை கூடுதல் நிதி தேவை என சந்திரபாபு நாயுடு கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக, வர்த்தகத்துறை மந்திரி பியூஷ் கோயலை சந்திரபாபு நாயுடு சந்தித்துப் பேசினார்.
இதனைத் தொடர்ந்து மத்திய மந்திரிகள் நிதின் கட்கரி, சிவராஜ் சிங் சவுகான், அமித் ஷா ஆகியோரை இன்று சந்திரபாபு நாயுடு சந்தித்து பேசுகிறார்.
நாளை நிதி மந்திரி நிர்மலா சீதாராமனை சந்திரபாபு நாயுடு சந்தித்து பேசுகிறார்.
ஆந்திர மாநிலத்தில் நிலுவையில் உள்ள போலவரம் உள்ளிட்ட நீர்ப்பாசன திட்டங்கள், அமராவதி தலைநகர் திட்டம், மாநில நெடுஞ்சாலைகள், சாலைகள் உள்ளிட்ட உள் கட்டமைப்புகளின் நிலை குறித்து டெல்லி செல்வதற்கு முன்பாக அதிகாரியுடன் கலந்து ஆலோசித்து அறிக்கை ஒன்றை சந்திரபாபு நாயுடு தயார் செய்தார்.
மேலும் ஆந்திர மாநிலத்திற்கு தேவையான நிதி குறித்தும் திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளன. இந்த நீண்ட பட்டியலுடன் அவர் டெல்லியில் சந்திரபாபு நாயுடு முகாமிட்டுள்ளார்.
பிரதமர் மோடி மற்றும் மத்திய மத்திரிகளுடன் சந்திப்பின்போது ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து ,ஆந்திர மாநிலத்திற்கு கூடுதல் நிதி சலுகைகள் மற்றும் வரி சலுகைகளை சந்திரபாபு நாயுடு கேட்டதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.
அரசியல் அனுபவம் வாய்ந்த சந்திரபாபு நாயுடு தற்போது பா.ஜ.க கூட்டணியில் சக்தி வாய்ந்த தலைவராக உள்ளார்.
இந்த சந்தர்ப்பத்தை அவர் ஒருபோதும் நழுவ விட மாட்டார். ஆந்திராவிற்கான அனைத்து திட்டங்களையும் கேட்டு பெறுவதில் தனி கவனம் செலுத்தி வருகிறார்.
மேலும் பல தொழில் நிறுவனங்களையும் ஆந்திராவுக்கு கொண்டு செல்வதில் கில்லாடியாக செயல்படுவார்.
அவருடைய கோரிக்கைகளை ஏற்க வேண்டிய கட்டாயத்தில் மத்திய அரசு உள்ளது என அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.
சந்திரபாபு நாயுடு முகாமிட்டிருப்பது டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- தி.மு.க. ஆட்சிக்கு வந்த 3 ஆண்டுகளில் எவ்வளவு டெண்டர்கள் விடப்பட்டது.
- தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளுக்கும் என்ன தொடர்பு.
சென்னை:
தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கடந்த 2023-ம் ஆண்டு முதல் அவ்வப்போது தி.மு.க. அரசில் நடைபெறும் முறைகேடுகளை கண்டறிந்து தி.மு.க. பைல்ஸ் என்ற பெயரில் வெளியிட்டு வருகிறார்.
இந்த பைல்ஸ் வெளியாகும் போது அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலை கிளப்பும்.
முதல் முதலில் 2023 ஏப்ரல் 14-ல் தி.மு.க. பைல்ஸ் முதல் பாகத்தை வெளியிட்டார். அதில் தி.மு.க. எம்.பி.ஜெகத்ரட்சகன், அமைச்சர் துரைமுருகன் மற்றும் முதல்வரின் குடும்பத்தினர் உள்ளிட்ட சிலரது சொத்துப் பட்டியல் இடம் பெற்று இருந்தது.
அதே ஆண்டு ஜூலை மாதம் இரண்டாம் பாகத்தை வெளியிட்டார். அதில் அரசு துறைகளில் ஒப்பந்த பணிகளில் நடந்த முறைகேடுகள் பற்றி குறிப்பிட்டிருந்தார்.
அதைத் தொடர்ந்து டி.ஆர்.பாலு எம்.பி., முன்னாள் டி.ஜி.பி. ஜாபர் சேட் பேசிய தொலை பேசி உரையாடல் மற்றும் ஜாபர் சேட்டும், ஆ.ராசாவும் பேசிய தொலைபேசி உரையாடல்கள் பற்றிய ஆடியோக்களை வெளியிட்டார்.
இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 4-வது ஆடியோவை வெளியிட்டார். அதில் ஆ.ராசாவும் ஜாபர்சேட்டும் பேசிய உரையாடல் இடம் பெற்று இருந்தது.
ரெய்டு பற்றியும் தகவல் முன்கூட்டியே பகிரப்பட்டதால் 2 ஜி வழக்கின் அனைத்து முக்கிய ஆதாரங்களும் அழிக்கப்பட்டதாக அண்ணாமலை குறிப்பிட்டு இருந்தார்.
சொத்து பட்டியல் வெளியிட்டதை தொடர்ந்து அவர் மீது டி.ஆர்.பாலு அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் சைதாப்பேட்டை கோர்ட்டில் ஆஜரானார்.
இதற்கிடையில் 3 மாதங்கள் வெளிநாட்டுக்கு மேல்படிப்புக்கு சென்றிருந்த அண்ணாமலை திரும்பி வந்த பிறகு மீண்டும் தனது அதிரடி அரசியலை தொடங்கியிருக்கிறார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு அதானி விவகாரத்தில் ரூ.568 கோடி லாபம் ஈட்ட அதானி நிறுவனத்துக்கு ஆதரவாக கொள்கை முடிவையே மாற்றிவிட்டதாக குற்றம் சாட்டினார்.
இந்த நிலையில் தி.மு.க.வின் 3-வது பைலை வெளியிட அண்ணாமலை தயாராகி வருகிறார். குறிப்பிட்ட சில துறைகளில் நடந்துள்ள முறைகேடுகள் பற்றிய ஆதாரங்களை அண்ணாமலை திரட்டி வருவதாக கூறப்படுகிறது.
அவைகளை மையமாக வைத்து தி.மு.க. பைல்ஸ் -4ஐ தயாரிக்கும் பணியில் அவர் ஈடுபட்டுள்ளார்.
பனையூரில் இதுபற்றி அவர் கூறும்போது, தி.மு.க. பைல்ஸ்-1 மற்றும் 2ஐ வெளியிட்டோம். இப்போது 3-வது பகுதி பெரிய அளவில் தயாராகி வருகிறது.
இந்த முறை கூட்டணி கட்சிகளையும் தப்பிக்க விட மாட்டோம். ஏனெனில் பல டெண்டர்களை கூட்டணி கட்சியினரே எடுத்துள்ளார்கள்.
தி.மு.க. ஆட்சிக்கு வந்த 3 ஆண்டுகளில் எவ்வளவு டெண்டர்கள் விடப்பட்டது? அது யார் யாருக்கு போய் உள்ளது. அதை எடுத்த நிறுவனங்கள் எது? அந்த நிறுவனங்களுக்கும் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளுக்கும் என்ன தொடர்பு...?
அதாவது அந்த நிறுவனங்களை நடத்துவதே அவர்களின் மாமன், மச்சான் என்று ஏதாவது ஒரு உறவினராகத்தான் இருப்பார். இவ்வளவு கோடி டெண்டர்கள் கடைசியாக உள்ளூர் அமைச்சரின் உறவினருக்குத் தான் போய் இருக்கிறது.
எனவே முழு அளவில் ஆதாரங்களை திரட்டி தயார் செய்கிறோம். இதுவரை வெளியிட்ட பைல்களை விட மக்கள் மத்தியில் இனி வெளிவரும் 'பைல்' பெரிய அளவில் பேசப்படும். இந்த புதிய பைல் 2025-ம் ஆண்டு தொடக்கத்தில் வெளிவரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- கரூர்- செந்தில்நாதன், சேலம் தெற்கு- ஹரி ராமன், தருமபுரி- சரவணன் உள்ளிட்டோர் நியமனம்.
- திருப்பூர் தெற்கு- மோகனப்பிரியா, ஈரோடு வடக்கு- எஸ்எம் செந்தில் நியமனம்..
தமிழக பாஜகவில் புதிய மாவட்ட தலைவர்களின் இரண்டாம் கட்ட பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, கரூர்- செந்தில்நாதன், சேலம் தெற்கு- ஹரி ராமன், தருமபுரி- சரவணன், திருப்பூர் வடக்கு- கேசிஎம்பி சீனிவாசன் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
திண்டுக்கல் மேற்கு- ஜெயராமன், திருவண்ணாமலை வடக்கு- கவிதா, ராணிப்பேட்டை- நெமிலி ஆனந்தன், கிருஷ்ணகிரி மேற்கு- நாராயணன் உள்ளிட்டோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
புதுக்கோட்டை மேற்கு- ராமச்சந்திரன், திருப்பூர் தெற்கு- மோகனப்பிரியா, ஈரோடு வடக்கு- எஸ்எம் செந்தில் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
- போராட்ட குழுவினர் நீக்கப்பட்ட 4 தொழிலாளர்களை உடனடியாக பட்டியலில் சேர்க்க வேண்டும்.
- இச்சம்பவம் குறித்து கிராம முக்கியஸ்தர்கள் கோட்ட மேலாளரை நேரில் சந்திக்குமாறு தெரிவித்தனர்.
மெலட்டூர்:
தேவராயன்பேட்டை அருகே உள்ள பொன்மா ன்மேய்ந்த நல்லூர் கிராமத்தில் இயங்கி வரும் அரசு கொள்முதல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த சுமை தூக்கும் தொழிலாளர்கள் குமார், காமராஜ், உள்பட 4 தொழிலாளர்கள் திடீரென பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டதாக தெரிகிறது.
மேலும் ஊழியர்கள் வேலை பார்த்த கூலியும் நிறுத்தப்ப ட்டுள்ளது.
இதனை கண்டித்து பாதிக்கப்பட்ட தொழிலா ளர்கள் சார்பில் தி.மு.க. ஒன்றிய பிரதிநிதி மனோகர் தலைமையில் தேவராய ன்பேட்டை ஊராட்சி மன்ற துணைத்தலைவர் பாரதி, தி.மு.க ஒன்றிய பிரதிநிதி குமார் உள்பட கிராமமக்கள் பலர் அரசு கொள்முதல் நிலையத்தை முற்றுகையிட்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
தகவல் அறிந்த நுகர்பொருள் வாணிப கழக கொள்முதல் அலுவலர் சுரேஷ்குமார், பாபநாசம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து போராட்ட குழுவினருடன் பேச்சு வார்த்தை நடத்தினர்.
அப்போது போராட்ட குழுவினர் நீக்கப்பட்ட 4 தொழிலாளர்களை உடனடியாக பட்டியலில் மீண்டும் சேர்க்க வேண்டு மெனவும், அவர்களுக்கு வழங்க வேண்டி கூலி நிலுவை தொகையயையும் வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.
அதிகாரிகள் தரப்பில் இருந்து பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட தொழிலாளர்களை மீண்டும் சேர்ப்பது குறித்து கோட்ட மேலாளர் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் எனவும் இச்சம்பவும் குறித்து கிராம முக்கியஸ்தர்கள் கோட்ட மேலாளரை நேரில் சந்திக்குமாறு தெரிவித்ததை போராட்ட குழுவினர் ஏற்றுகொண்டு காத்திருப்பு போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
- 10 முக்கிய திட்டங்கள் குறித்த பட்டியலை அந்தந்த மாவட்ட கலெக்டர்களிடம் அளிக்கலாம்.
- செயல்படுத்த இயலாத திட்டங்களை முன்னுரிமை அடிப்படையில் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
நாகப்பட்டினம்:
உங்கள் தொகுதியில் முதல-அமைச்சர் திட்டத்தின் கீழ் தொகுதி மக்களின் பல்வேறு தேவைகளை அறிந்து, அவற்றில் மிக முக்கியமானது என்று எம்.எல்.ஏ. கருதும் 10 முக்கியத் திட்டங்கள் குறித்த பட்டியலை அந்தந்த மாவட்ட கலெக்டர்களிடம் அளிக்கலாம்.
மிக முக்கியமான திட்டங்கள் அடையாளம் காணப்பட்டு, தற்போது நடைமுறையில் உள்ள அரசுத் திட்டங்களின் கீழ் செயல்படுத்த இயலாத திட்டங்களை முன்னுரிமை அடிப்படையில் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருந்தார்.
அதன்படி, நாகப்பட்டினம் சட்டமன்ற தொகுதியில் நிறைவேற்றப்பட வேண்டிய திட்டப்பணிகள் குறித்து, அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமையில் ஷா நவாஸ் எம்.எல்.ஏ. முன்னிலையில் நடைபெற்றது. அதில், நாகப்பட்டினம் தொகுதியின் முக்கிய கோரிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டன.
இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- மறுசீரமைக்கப்பட்ட வாக்குசாவடிகளின் பட்டியலை ராமநாதபுரம் கலெக்டர் வெளியிட்டார்.
- வருகிற 14-ந் தேதிக்குள் அந்தந்த வாக்காளர் பதிவு அலுவலர்களிடம் வழங்கலாம்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம், மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரக் கிடங்கில் மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில் ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள 4 சட்டமன்றத் தொகுதிகளுக்கான மறு சீரமைக்கப்பட்ட வாக்குச் சாவடிகளின் பட்டியலை வெளியிட்டார்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சட்டமன்றத் தொகுதியில் 303 வாக்குச் வாக்குச்சாவடிகளும், திருவாடானை சட்டமன்றத் தொகுதியில் 346 வாக்குச் வாக்குச்சாவடிகளும், ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதியில் 336 வாக்குச் வாக்குச்சாவடிகளும், முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் 385 வாக்குச் வாக்குச்சாவடிகளும் என மொத்தம் 1370 வாக்குச்சாவடிகள் உள்ளன.
நேற்று வெளியிடப்பட்டுள்ள வரைவு வாக்குச்சாவடிகள் பட்டியல் கலெக்டர் அலுவலகம், அனைத்து வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்கள், அனைத்து நகராட்சி அலுவலகங்கள் மற்றும் அனைத்து வருவாய் வட்டாட்சியர் அலுவலகங்களில் பொது மக்களின் பார்வைக்கு வைக்கப்பட உள்ளது.
1500 வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்குச் சாவடிகளை பிரிக்கவும், வாக்குச்சாவடிகளின் பெயர் மாற்றம், இடமாற்றம் தொடர்பான கோரிக்கைகளை வருகிற 14-ந் தேதிக்குள் அந்தந்த வாக்காளர் பதிவு அலுவலர்களிடம் வழங்கலாம்.
மேலும் பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிகளிடமிருந்து வரப்பெறும் கருத்துகள், கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபணைகள் இந்தியத் தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி உரிய முறையில் பரிசீலனை செய்து மேல்நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் ராமநாதபுரம் கோட்டாட்சியர் சேக்மன்சூர், வட்டாட்சியர்கள் கார்த்திகேயன் (தேர்தல்), முருகேசன (ராமநாதபுரம்) உள்ளிட்ட அரசு அலுவலர்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
- அகில இந்திய அளவில் 251 - 300 போர்டு இடம்பெற்று இரண்டாவது முறையாக சாதனை புரிந்துள்ளது.
- பட்டியலில் கல்லூரி இடம் பெற அயராது பாடுபட்ட அனைத்து ஆசிரியர்களுக்கும், பணியாளர்களுக்கும் வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்தார்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் இ.ஜி.எஸ். பிள்ளை பொறியியல் கல்லூரி தன்னாட்சி - மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தால் வெளியிடப்பட்டுள்ள பொறியியல் கல்வி நிறுவனங்களுக்கான தேசிய தர மதிப்பீட்டு பட்டியலில் அகில இந்திய அளவில் 251 - 300 போர்டு இடம்பெற்று இரண்டாவது முறையாக சாதனை புரிந்துள்ளது. இது தொடர்பாக நடைபெற்ற சான்றிதழ் வெளியீட்டு விழாவில் இ.ஜி.எஸ். பிள்ளை கல்வி குழுமத்தின் தலைவர் ஜோதிமணி அம்மாள் தலைமை வகித்தார். கல்லூரியின் செயலர் செந்தில்குமார் மற்றும் இணைச் செயலர் சங்கர் கணேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கல்வி குழுமத்தின் ஆலோசகர் பரமேஸ்வரன் மற்றும் கல்லூரி முதல்வர்கள் வாழ்த்துரை வழங்கினர். கல்வி குழுமத்தில் இணை செயலர் தரவரிசை பட்டியல் நகலை கல்லூரி முதல்வரிடம் வழங்கினார். கல்லூரியின் தேர்வு துறை நெறியாளர் சின்னதுரை தேசிய தர மதிப்பீடு பட்டியல் பற்றி விளக்க உரை வழங்கினார். கல்வி குழுமத்தின் செயலர் தேசிய தரவரிசை பட்டியலில் கல்லூரி இடம் பெற அயராது பாடுபட்ட அனைத்து ஆசிரியர்களுக்கும் மற்றும் பணியாளர்களுக்கும் வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் அனைத்து கல்லூரியை சேர்ந்த ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாட்டினை மாணவர் சேர்க்கை குழு தலைவர் மணிகண்ட குமரன் மற்றும் ஊடகம் மக்கள் தொடர்பு இயக்குனர் ஆனந்தராஜ் ஆகியோர் செய்திருந்தனர்.
- இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டதை தொடர்ந்து தற்போதைய தொடர் திருத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
- வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர், முகவரி இவற்றில் ஏதேனும் பிழை இருப்பின் படிவம் எண் 8 பெற்று பூர்த்தி செய்து வழங்கலாம்.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிரு ப்பதாவது:-
இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியபடி தஞ்சை மாவட்டத்திற்கான இறுதி வாக்காளர் பட்டியல் அனைத்து அங்கீகரி க்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் கலெக்டரால் வெளியிடப்பட்டது. இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டதை தொடர்ந்து தற்போதைய தொடர் திருத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
எனவே 1-1-2004 அன்றோ அல்லது அதற்கு முன்போ பிறந்த தகுதியுடைய மற்றும் வாக்காளர் பட்டியலில் இடம் பெறாமல் உள்ளவர்கள் தங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்த்திட படிவம் எண் 6-ஐ அந்தந்த வட்ட அலுவலகங்களில் பெற்று பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். அதனுடன் வயது மற்றும் இருப்பிடத்திற்கான ஆதார ஆவண நகல்களை இணைத்து தங்கள் பாஸ்போர்ட் சைஸ்புகைப்ப டத்தை படிவத்தில் ஒட்டி அந்தந்த தாசில்தார் அலுவ லகங்களில் வழங்கலாம்.
வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர், முகவரி இவற்றில் ஏதேனும் பிழை இருப்பின் படிவம் எண் 8 பெற்று பூர்த்தி செய்து வழங்கலாம்.இறந்த மற்றும் வாக்காளர் பட்டியலில் ஒன்றுக்கு மேற்பட்ட இடத்தில் பெயர் இடம் பெற்றுள்ள வாக்காளர்கள் குறித்து படிவம் எண் 7 அளிக்கலாம்.
ஒரே சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் குடி பெயர்ந்த வாக்காளர்கள் படிவம் எண் 8ஏ பெற்று பூர்த்தி செய்து முகவரி மாற்றம் செய்து கொள்ளலாம்.
வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படும் புதிய வாக்காளர்களுக்கு அஞ்சல் துறை மூலம் விரைவு தபால் மூலமாக வாக்காளர் அடையாள அட்டை கட்டணம் இன்றி நேரடியாக வழங்கப்பட்டு வருகிறது. மேலும் www.nvsb.in என்ற இணையதளம் மற்றும் voters help line என்ற மொபைல் ஆப் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.
மேலும் விவரங்கள் அறிய 1950 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
தொலைந்த , காணாமல் போன வாக்காளர் அட்டைக்கு மாற்று அட்டையினை படிவம் 1-ஐ பூர்த்தி செய்து தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தானியங்கி எந்திரத்தின் வாயிலாக கட்டணம் இன்றி பெற்றுக்கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டு சட்டப் போராட்டத்திற்கு பிறகு சமீபத்தில் உச்சநீதிமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. ஆனால் அந்த அமைப்பின் பெயர் காவிரி மேலாண்மை ஆணையம் என மத்திய அரசு தெரிவித்து, அதனை உச்ச நீதிமன்றமும் ஏற்றுக்கொண்டுள்ளது. பின்னர், காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்து அதற்கான அரசாணையையும் சமீபத்தில் வெளியிட்டது.
இதையடுத்து, காவிரி மேலாண்மை ஆணையத்துக்கான மாநில உறுப்பினர்களை மாநில அரசு தேர்வு செய்து பட்டியல் அனுப்புமாறு மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்பியது. இதுதொடர்பாக தமிழக அரசும் உறுப்பினர் பட்டியலை தயார் செய்து நீர்வளத்துறைக்கு அனுப்பியது. மேலும், இதர மாநிலங்களான கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களும் தங்களது உறுப்பினர் பட்டியலை அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் கர்நாடக அரசு உறுப்பினர் பட்டியலை அனுப்பவில்லை.
சமீபத்தில் காவிரி மேலாண்மை ஆணையத்துக்கான தலைவராக மத்திய நீர்வளத்துறை ஆணைய தலைவர் மசூத் உசேன் நியமிக்கப்பட்டார்.

மேலும், வரும் 12-ம் தேதிக்குள் கர்நாடக மாநிலத்துக்கான காவிரி மேலாண்மை ஆணைய உறுப்பினர்களை தேர்வு செய்து, அந்த பட்டியலை மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்திடம் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் கர்நாடக அரசுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
மத்திய அரசின் இந்த அதிரடி உத்தரவால் கர்நாடக அரசு விரைவில் உறுப்பினர் பட்டியலை தாக்கல் செய்யும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. #CauveryManagementAuthority